11.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் நினைவில் இருப்பதோடு, இந்த ஞானச் செல்வம் நிறைந்தவராகவும் ஆகுங்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் சுழன்று கொண்டிருந்தால் மாத்திரமே எல்லையற்ற சந்தோஷத்தை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். இவ்வுலகச் சக்கரத்தின் ஞானத்தின் மூலமே நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகின்றீர்கள்.

பாடல்:
எக் குழந்தைகளால் (மனிதர்கள்) தந்தையின் மீது அன்பு கொண்டிருக்க முடியாதுள்ளது?

பதில்:
மிகவும் ஆழ் நரகத்தில் வாழ்ந்து, விகாரங்களின் மீது அன்பு கொண்டிருப்பவர்களால் ஆகும். அத்தகைய மனிதர்களால் தந்தை மீது அன்பு கொண்டிருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் தந்தையை நேசிக்கின்றீர்கள்.

கேள்வி:
யாருக்குச் சத்திய யுகத்திற்கு வருகின்ற உரிமை இல்லை?

பதில்:
தந்தை சத்திய யுகத்திற்கு வருவதில்லை. மரணமும் அங்கே வருவதில்லை. இராவணனுக்குச் சத்திய யுகத்திற்கு வரும் உரிமையில்லை. எனவே, தந்தையும் கூறுகிறார்: குழந்தைகளே, எனக்கும் சத்திய யுகத்திற்கு வரும் உரிமை இல்லை. தந்தை உங்களைச் சந்தோஷ உலகத்திற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கி விட்டு வீடு திரும்பிச் செல்கிறார். அவருக்கும் எல்லைகள் உள்ளன.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே (தந்தையின்) நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் உள்ளார அறிவீர்கள். ‘யாத்திரை’ என்ற வார்த்தை நிச்சயமாக உங்கள் இதயத்தில்; புக வேண்டும். ஹரித்துவார் அல்லது அமர்நாத்துக்குச் செல்வதைப் பற்றியும், தங்கள் யாத்திரை முடிந்ததும் தாங்கள் வீடு திரும்புவார்கள் என்றும் அந்த யாத்திரீகர்கள் சிந்திப்பதைப் போல் நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்கிறீர்கள் என்பது இங்கு குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் பதிந்திருக்கிறது. தந்தை வந்து உங்கள் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார். உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்கு, அவர் உங்கள் கையைப் பற்றிப் பிடிக்கின்றார். நீங்கள் நச்சுக்கடலில் வாழ்வதாலேயே ‘எனது கையைப் பிடியுங்கள்’ என்று கூறப்படுகின்றது. இப்போது, சிவபாபாவையும், வீட்டையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் வீடு திரும்புகிறீர்கள் என்று உங்களுக்குள் நினைவுசெய்யுங்கள். உங்கள் உதடுகளால் நீங்கள் எதையும் கூற வேண்டியதில்லை. பாபா உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் என்பதை உள்ளார நினைவுசெய்யுங்கள். நீங்கள் கட்டாயமாக நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். இந்த நினைவு யாத்திரையின் மூலமே உங்கள் பாவங்கள் அகற்றப்படுகின்றன. அப்போது மாத்திரம் நீங்கள் அந்த அதிமேலான இலக்கை அடைவீர்கள். ஒருவர் சிறு குழந்தைகளுக்குக் கற்பிப்பதைப் போன்று, தந்தை உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்து திரும்பிச் செல்கிறீர்கள் என்பது உங்கள் புத்திகளில் எப்போதும் இருக்கட்டும். உங்களைத் தூய்மையாக்குவதும் தூய்மையான உலகத்துக்குத் திரும்பவும் அழைத்துச் செல்வதுமே தந்தையின் பணியாகும். குழந்தைகளாகிய உங்களை அவர் அங்கே அழைத்துச் செல்கிறார். ஆத்மாக்களே யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்களே தந்தையை நினைவு செய்து, வீடு திரும்ப வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டைச் சென்றடைந்ததும், தந்தையின் பணி முடிந்து விடும். தந்தை உங்களைத் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்கி, வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக வருகிறார். இங்கேயே நீங்கள் கற்கின்றீர்கள். தாராளமாக எங்கும் சுற்றுலா சென்று, வாருங்கள். ஆனால், நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். ‘யோகம்’ என்ற வார்த்தைக்கு யாத்திரை என்ற அர்த்தம் மட்டும் உள்ளது என்றில்லை. சந்நியாசிகள் ‘யோகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அவையெல்லாம் மனிதர்களின் வழிகாட்டல்களே. அரைச் சக்கரத்திற்கு, நீங்கள் தெய்வீகமான வழிகாட்டல்களைப் பின்பற்றினீர்கள். அதன்பின், மிகுதி அரைச் சக்கரத்திற்கு, நீங்கள் மனித வழிகாட்டல்களைப் பின்பற்றினீர்கள். இப்போது நீங்கள் இறைவனின் வழிகாட்டல்களைப் பெற்றிருக்கிறீர்கள். ‘யோகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள். அதனை நினைவு யாத்திரை என்றே அழையுங்கள். ஆத்மாக்களே இந்த யாத்திரையில் செல்ல வேண்டும். அது, நீங்கள் உங்களுடைய சரீரங்கள் மூலம் செல்கின்ற, பௌதீக யாத்திரையாகும். இங்கே நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அது ஆத்மாக்களாகிய எங்கள் இனிய வீடு என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களைத் தூய்மையாக்கக் கூடிய கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கிறார். நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக வேண்டும். இது ஒரு யாத்திரையாகும். நாங்கள் தந்தையின் நினைவில் இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் பாபாவிடம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்காக வருகிறார். ஏனெனில், நீங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். தந்தை உங்களைத் தூய்மையாக்குகிறார். அதன்பின், நீங்கள் செய்கின்ற, முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்கள் தூய உலகிற்குச் செல்கிறீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நாங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறோம். நாங்கள் இந்த மரண பூமிக்குத் திரும்பி வர விரும்பவில்லை. எங்களை வீட்டுக்குத் திரும்பவும் அழைத்துச் செய்வது பாபாவின் பணியாகும். பாபா உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். நீங்கள் இப்போது மரண பூமியில் இருக்கிறீர்கள். அதன் பின், நீங்கள் புதிய உலகாகிய, அமரத்துவ உலகில் இருப்பீர்கள். உங்களைத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்கும் வரை, தந்தை உங்களை விட்டு விட மாட்டார். தந்தை உங்களைச் சந்தோஷ உலகத்திற்கு அழைத்துச் செல்ல மாட்டார். உங்களை வீட்டை அடையச் செய்வதே அவரது எல்லையாகும். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதாக மட்டும் இருக்கக் கூடாது. ஏனெனில், உங்களுக்கு இந்த ஞானமும் இருக்க வேண்டும். ஞானமுள்ளவராக இருப்பதன் மூலமே நீங்கள் வருமானமொன்றைச் சம்பாதிக்கிறீர்கள். இந்த உலகச் சக்கரத்தின் ஞானம் உள்ளவராக இருப்பதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கிறீர்;கள் என்பதும், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள் என்பதும், சக்கரம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் எனும் ஞானம் உங்கள் புத்தியில் இருக்கிறது. இந்த ஞானம் முழுவதையுமே நீங்கள் உங்கள் புத்தியில் வைத்துக் கொள்ளும்போது மாத்திரமே, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர முடியும். நீங்கள் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். அத்துடன், நீங்கள் அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யவும் வேண்டும். 84 பிறவிச் சக்கரம் நினைவில்லை என்றால், எவ்வாறு நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆக முடியும்? ஒரேயொருவரை மட்டும் நினைவு செய்வது சந்நியாசிகளின் பணியாகும். அவர்களுக்கு அந்த ஒருவரைத் தெரியாது என்பதால், அவர்கள் ஒளித் தத்துவத்தை மாத்திரமே நினைவு செய்கிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். தொடர்ந்து நினைவில் இருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். முதலில், நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இது உங்கள் ஆன்மீக யாத்திரையாகும். பாடல் ஒன்று உள்ளது: “நாங்கள் நான்கு திசைகளிலும் உங்களைத் தேடித் திரிந்தோம். ஆயினும், உங்களிடம் இருந்து எப்போதும் தொலைவிலே இருந்தோம்”. அதாவது, நாங்கள் தந்தையிடமிருந்து தொலைவிலேயே இருந்தோம். உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்ற, தந்தையை நீங்கள் அறிந்திருக்கவில்லை. எத்தனை தடவைகள் நீங்கள் சக்கரத்தைச் சுற்றித் திரிந்திருக்கிறீர்கள்? மக்கள் ஒவ்வொரு வருடமும் பல யாத்திரைகள் செல்கிறார்கள். மக்களிடம் பெருமளவு பணம் இருக்கும்போது, அவர்கள் யாத்திரை செல்ல ஆர்வம் கொள்கின்றார்கள். இது உங்கள் ஆன்மீக யாத்திரையாகும். உங்களுக்காகப் புதிய உலகம் உருவாக்கப்பட்டதும், நீங்கள் அங்கு செல்வீர்கள். அது அமரத்துவ பூமி என்றும் அழைக்கப்படுகிறது. அங்கே மரணம் வந்து யாரையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. மரணத்திற்குப் புதிய உலகத்திற்குள் நுழையும் உரிமையில்லை. இது இராவணனின் பழைய உலகமாகும். இங்கேயே என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் இப் பழைய உலகில், இப் பழைய சரீரத்தில் வருகிறேன். எனக்கும் புதிய உலகிற்குள் வரும் உரிமையில்லை. நான் தூய்மையற்றதைத் தூய்மையாக்குவதற்காகவே வருகிறேன். நீங்கள் தூய்மையாகி, அதன்பின்னர், மற்றவர்களையும் தூய்மையாக்குங்கள். சந்நியாசிகள் ஓடிச் சென்று விடுகிறார்கள். அவர்கள் முழுமையாக மறைந்து விடுகிறார்கள். அவர்கள் எங்கே சென்று விட்டார்கள் என்றும் உங்களுக்குத் தெரியாது. ஏனெனில், அவர்கள் தங்கள் ஆடையையும் மாற்றி விடுகிறார்கள். அதே போல், நடிகர்கள் தங்கள் தோற்றத்தை மாற்றுகிறார்கள். சிலவேளைகளில் ஆண் நடிகர் ஒருவர் ஒரு பெண்ணுடைய பாகத்தை நடிக்கிறார். சிலவேளைகளில் ஒரு பெண் ஆணுடைய பாகத்தை நடிக்கிறார். இவ்வாறு அவர்கள் தங்கள் தோற்றத்தை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். இது போன்ற எதுவும் சத்திய யுகத்தில் இடம்பெறாது. தந்தை கூறுகிறார்: நான் புதிய உலகத்தை உருவாக்க வருகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு அரைச் சக்கரத்திற்கும் ஆட்சிபுரிகின்றீர்கள். அதன்பின், நாடகத் திட்டத்திற்கேற்ப, துவாபர யுகம் ஆரம்பமாகி, மீண்டும் ஒருமுறை தேவர்கள் பாவ மார்க்கத்தில் விழுகின்றார்கள். ஜெகந்நாதபுரியில் அவர்களின் அவலட்சணமான உருவங்கள் பல இருக்கின்றன. ஜெகந்நாதருக்கு ஒரு கோவில் இருக்கிறது. உண்மையில் அவரிடம் (கிருஷ்ணரிடம்) ஓர் இராச்சியம் இருந்ததுடன், உலக அதிபதியாகவும் இருந்தார். இருப்பினும் அவர் ஓர் ஆலயத்தினுள் அடைக்கப்பட்டு, அவலட்சணமாகக் காட்டப்பட்டுள்ளார்! ஜெகந்நாதர் ஆலயத்திலும் நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்தலாம். வேறு எவராலும் இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்த முடியாது. பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்த தேவர்களே பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அவர்களோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கடவுள் வழிபாட்டுக்குரியவரும் வழிபடுபவரும் என்றும், அவர் துன்பத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறார் என்றும் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் யாருக்கும் துன்பம் கொடுப்பதில்லை. இது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். குழந்தையொன்று பிறக்கும்போது, சந்தோஷம் உண்டாகிறது. ஆனால், குழந்தை மரணிக்கும்போது, அவர்கள் அழுகிறார்கள். கடவுளே தங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஓ! இராவண இராச்சியத்தில் நீங்கள் தற்காலிகமான சந்தோஷத்தையும், துன்பத்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள். எனது இராச்சியத்தில் துன்பம் எனற கேள்விக்கே இடமில்லை. சத்திய யுகம் அமரத்துவ உலகம் என்று அழைக்கப்படுகிறது. இது அகால மரணங்கள் இடம்பெறும் மரண பூமி என்று அழைக்கப்படுகிறது. அங்கே அவர்கள் பெரும் சந்தோஷத்தோடு கொண்டாடுகிறார்கள். அங்கே அவர்களின் ஆயுட்காலமும் நீண்டதாகவே இருக்கும். அதிகூடிய ஆயுட்காலம் 150 வருடங்களாகும். இங்கேயும் சிலர் அவ்வளவு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள். ஆனால், இது சுவர்க்கம் அல்ல. சிலர் தங்கள் சரீரங்களை மிக நன்றாகக் கவனித்துக் கொள்வதுடன், அவர்களின் ஆயுட்காலங்களும் மிக நீண்டதாகி விடும். சிலருக்குப் பல குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு மரத்தில் கிளைகளும், சிறுகிளைகளும் தோன்றுவதைப் போல், அவர்களின் குடும்பம் மிக விரைவாக வளர்ந்து, விரிவடைந்து விடுகிறது. ஏற்கனவே 50 கிளைகள் இருக்கக்கூடும். அதன் பின், அவற்றிலிருந்து மேலும் 50 கிளைகள் தோன்றும். பெருமளவு வளர்ச்சி இடம்பெறுகிறது. அதுவே இங்கேயும் இடம்பெறுகிறது. இதனாலேயே இந்த விருட்சம்; ஓர் ஆலமரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. இன்னும் மரம் முழுவதும் நிலைத்து நின்றாலும், அதன் அத்திவாரம் இல்லை. இங்கேயும், ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என்னும் அத்திவாரம் (அடிமரம்) இப்போது இல்லை. தேவதேவியர்கள் எப்போது இருந்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் நூறாயிரக் கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுகிறார்கள். ஆரம்பத்தில், நீங்களும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்ததில்லை. தந்தை வந்து, எல்லாவற்றையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தையையும், இம் முழு நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும், அத்துடன், அதன் ஆயுட்காலம் போன்றவற்றையும் அறிந்து கொள்வதற்காகவும் வந்திருக்கிறீர்கள். புதிய உலகம் எவ்வாறு பழையதாகின்றது, பழைய உலகம் எவ்வாறு புதியதாகின்றது என்று யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த யாத்திரை ஒழுங்காகத் தொடர வேண்டும். தாராளமாக நீங்கள் சுற்றுலாக்கள் செல்லலாம். ஆனால், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இது ஓர் ஆன்மீக யாத்திரையாகும். பக்தி மார்க்கத்தில் நீங்களும் அந்த யாத்திரைகள் செல்வது வழக்கம் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். உறுதியான பக்தர்களாக இருந்தவர்கள் பல யாத்திரைகள் சென்றிருக்க வேண்டும். ஒரேயொரு சிவனை வழிபடுவது கலப்படமில்லாத பக்தி என்று பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார். அதன்பினனர் தேவதேவியர்களின் வழிபாடும், அதன்பின்னர் பஞ்ச தத்துவங்களின் வழிபாடும் இடம்பெறுகின்றன. தேவதேவியர்களின் வழிபாடு இன்னும் சிறந்தது. ஏனெனில், அவர்களது சரீரங்கள் சதோபிரதானாக இருக்கின்றன. ஆனால், மனிதர்களின் சரீரங்களோ தூய்மையற்றவை. அத்தேவர்கள் தூய்மையானவர்கள். அதன்பின், துவாபர யுகத்திலிருந்து அனைவருமே தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைகிறார்கள். ஏணியின் படம் நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு மிகவும் நல்லது. ஜீனியின் கதை இருக்கிறது. அந்த உதாரணங்கள் எல்லாம் இந்த நேரத்தையே குறிப்பிடுகின்றன. உங்களைப் பற்றியே அவையெல்லாம் உருவாக்கப்பட்டிக்கின்றன. ரீங்கரிக்கும் வண்டைப் பற்றிய உதாரணமும் உங்களையே குறிக்கிறது. நீங்கள் பூச்சிகளை மாற்றி, பிராமணர்களாகிய உங்களைப் போல் ஆக்குகிறீர்கள். அந்த உதாரணங்கள் எல்லாம் இந்த இடத்தையே குறிக்கின்றன. முன்னர், குழந்தைகளாகிய நீங்கள் பௌதீக யாத்திரைகள் சென்றீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையிடம் இந்த ஆன்மீக யாத்திரையைக் கற்கின்றீர்கள். இது ஒரு கல்வியாகும். பக்தி மார்க்கத்தில் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று சற்றுப் பாருங்கள்! அவர்கள் தொடர்ந்து எல்லோருக்கு முன்னாலும் தலை வணங்குகிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு அவர்களின் தொழில் பற்றித் தெரியாது. யார் அதிகபட்ச பிறவிகள் எடுக்கிறார்கள் என்றும் பிறவிகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைகிறது என்றும் நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கலாம். இப்போது தான் நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நிச்சயமாகச் சுவர்க்கம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எப்போது சுவர்க்கம் இருந்தது என்று கேட்டால், நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் என்று கூறும் அளவுக்குப் பாரத மக்கள் மிகவும் கல்லுப்புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் பிச்சைக்காரரிலிருந்து இளவரசராக வேண்டும். உலகம் புதியதிலிருந்து பழையதாகுகின்றது. எனவே, தந்தை கூறுகிறார்: முயற்சி செய்யுங்கள்! மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள் என்றும் அவருக்குத் தெரியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் வீடு திரும்புகிறீர்கள் என்பதை எப்போதும் உங்கள் புத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பழைய உலகத்திலிருந்து உங்கள் நங்கூரம் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் படகு இப்பொழுது அக்கரையை அடையும் நிலையில் இருக்கிறது. ‘எங்கள் படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என மக்கள் பாடுகிறார்கள். ஆனால், எப்போது அது அக்கரைக்குச் செல்லப் போகின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால், தந்தையின் நினைவு யாத்திரையே பிரதானமான விடயமாகும். நீங்கள் தந்தையையும், அத்துடன் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகளுக்கு வயது வந்ததும் தங்கள் புத்தியில் தங்கள் தந்தையின் ஆஸ்தியை வைத்திருக்கின்றார்கள். இப்போது நீங்களும் வளர்ந்து (முன்னேற்றம்) விட்டீர்கள். இது மிகச் சரியானதே என்று ஆத்மாக்களாகிய நீங்கள் நேரடியாகவே புரிந்துகொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி சுவர்க்கமாகும். பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். எனவே நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மை காரணமாகவே சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. மக்கள் முழுமையாக ஆழ் நரகத்தில் இருப்பதைப் போலவும், அவர்கள் மேலும் மேலும் விகாரத்திற்குள் வீழ்வதைப் போலவும் இருக்கிறது. இதனாலேயே அவர்களால் தந்தை மீது அன்பு வைத்திருக்க முடியவில்லை. அவர்களே விநாச காலத்தில் இறைவன் மீது அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள். தந்தை உங்களை அன்புள்ள புத்தி கொண்டவர்கள் ஆக்குவதற்காக வருகிறார். தங்கள் புத்தியில் சிறிதளவேனும் அன்பற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையை நினைவு செய்வதும் இல்லை. அவர்களுக்கு சிவபாபாவைப் பற்றி எதுவும் தெரியாது. அவரில் அவர்களுக்கு நம்பிக்கையும் இ;ல்லை. அவர்கள் மாயையால் மறைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவு யாத்திரையே இ;ல்லை. தந்தை உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். இப்போது இங்கே சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். சத்திய, திரேதா யுகங்களில் எந்த மதங்களும் ஸ்தாபிக்கப்படுவதில்லை. இராமர் மதம் ஒன்றை ஸ்தாபிப்பதில்லை. தந்தை ஸ்தாபனையை மேற்கொள்வதன் மூலம் அவர் அவ்வாறு ஆகுகிறார். ஏனைய மத ஸ்தாபகர்கள் எவ்வாறு தங்கள் மதங்களை ஸ்தாபிக்கின்றார்கள் என்பதற்கும், தந்தை இந்தத் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. உலகம் மாற்றமடைய வேண்டிய நேரத்தில், சங்கம யுகத்தில் தந்தை வருகிறார். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்தினதும் சங்கமத்தில் வருகிறேன். எவ்வாறாயினும், நான் ஒவ்வொரு யுகத்திலும் வருகிறேன் என்ற வார்த்தைகளை அவர்கள் தவறாக எழுதி விட்டார்கள். பக்தி மார்க்கம் அரைச்சக்கர காலத்திற்கு நீடிக்க வேண்டும். அதனால், தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இந்த விடயங்களை மறந்து விடாதீர்கள். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் உங்களை மறந்து விடுகிறோம். ஓ! மிருகங்கள் கூடத் தமது தந்தையை மறப்பதில்லையே! எனவே, நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? உங்களை நீங்கள் ஆத்மாக்களாகக் கருதுவதில்லை. சரீர உணர்வுக்கு வருவதன் மூலம் நீங்கள் உங்களுடைய தந்தையை மறக்கின்றீர்கள். இப்போது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதைப் போல, நீங்களும் இதே முறையில் விளங்கப்படுத்தும் பழக்கத்தைக் குழந்தைகளாகிய நீங்களும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் நம்பிக்கையோடு பேச வேண்டும். முக்கிய பிரமுகர்களுக்கு முன்னால் சென்றதும் நீங்கள் தைரியத்தை இழந்து விடக்கூடாது. குமாரிகளாகிய நீங்களே பெரும் கல்விமான்கள், பண்டிதர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியவர்கள். ஆகவே, அவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது நீ;ங்கள் பயமற்றவர்களாக இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்போது நீங்கள் வீடு திரும்புகிறீர்கள் என்பதைச் சதா உங்கள் புத்தியில் வைத்திருங்கள். உங்கள் படகின் நங்கூரம் இப்பழைய உலகிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கின்றீர்கள். இந்த யாத்திரையைப் பயிற்சி செய்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள்.

2. முக்கிய பிரமுகர்களுக்கு முன்னால் பேசும்போது, பயமற்றவர்களாக இருங்கள், தைரியத்தை இழந்து விடாதீர்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, ஆத்ம உணர்வில் இருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையையும், வீணான எதனையிட்டும் அப்பாவிகளாகுவதால், தெய்வீகத்தை அனுபவம் செய்வீர்களாக.

ஒரு மகாத்மா அல்லது சாது என்பவர் மாயையையிட்டும், வீணான எதனையும் இட்டும் அப்பாவியாக இருக்கின்றார். தேவர்கள் அவ்விடயங்களில் அப்பாவிகளாக இருப்பதைப் போல், அவ்விதமாக, உங்களுடைய அந்தச் சம்ஸ்காரங்கள் வெளிப்படட்டும். வீணான அனைத்தையும் அறியாதவராக ஆகுங்கள். ஏனெனில் வீணானவற்றின் விசை அடிக்கடி சத்தியத்தையும், தர்மமான உணர்வு அனைத்தையும் முடித்து விடுகின்றது. ஆகவே, நேரத்தையும், மூச்சையும், வார்த்தைகளையும், செயல்களையும் வீணாக்குவதற்குப் பதிலாக, அனைத்திலும் அப்பாவியாக இருங்கள். நீங்கள் வீணான அனைத்தையும் அறியாதவர்களாக இருக்கும்போது, இயல்பாகவே தெய்வீகத்தை அனுபவம் செய்வதுடன், பிறருக்கும் அந்த அனுபவத்தைக் கொடுப்பீர்கள்.

சுலோகம்:
முதற் பிரிவிக்குள் செல்வதற்கு, தந்தை பிரம்மாவின் பாதச் சுவடுகளில் உங்கள் அடிகளை வைத்திருங்கள்.