12.01.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.11.2003 Om Shanti Madhuban
உங்களின் மனதை ஸ்திரப்படுத்தி, தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துங்கள்.
இன்று, சகல பொக்கிஷங்களின் அதிபதியானவர், எங்கும் உள்ள பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். அவர் ஒவ்வொரு குழந்தையையும் சகல பொக்கிஷங்களினதும் மாஸ்ரர் ஆக்கியுள்ளார். எவருமே உங்களுக்குக் கொடுக்க முடியாத அத்தகைய பொக்கிஷங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவராக அனுபவம் செய்கிறீர்களா? அதிமேன்மையான பொக்கிஷங்களே, இந்த ஞானத்தின் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம், நற்குணங்களின் பொக்கிஷம் ஆகும். அவற்றுடன்கூடவே, உங்களிடம் தந்தையிடமிருந்தும் பிராமணக் குடும்பம் முழுவதிடம் இருந்தும் ஆசீர்வாதங்களின் பொக்கிஷமும் உள்ளது. எனவே, சோதித்துப் பாருங்கள்: நான் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்றுள்ளேனா? சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கும் ஆத்மாவின் அடையாளம், மற்றவர்களும் அந்த ஆத்மாவின் கண்கள், முகம், நடத்தையில் இருந்து சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். இத்தகையதோர் ஆத்மாவுடன் தொடர்பில் வருகின்ற எந்தவோர் ஆத்மாவும் அந்த ஆத்மாவின் அலௌகீக சந்தோஷத்தால் ஆன்மீகமாகவும் வேறுபட்டவராகவும் இருப்பதை அனுபவம் செய்வார். உங்களின் சந்தோஷத்தைப் பார்க்கும்போது, ஏனைய ஆத்மாக்களும் குறுகிய காலத்திற்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். பிராமண ஆத்மாக்களான உங்களின் வெள்ளை ஆடை மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் இருப்பதை எல்லோரும் உணர்கிறார்கள், அதை விரும்புகிறார்கள். அதனூடாக அவர்கள் சுத்தத்தையும் எளிமையையும் தூய்மையையும் அனுபவம் செய்கிறார்கள். தொலைவில் இருந்தே அவர்களால் அவர் ஒரு பிரம்மாகுமாரா அல்லது பிரம்மாகுமாரியா எனக் கூறிவிட முடியும். அதேபோல், பாக்கியசாலியாக இருப்பதன் சந்தோஷமும் போதையின் பிரகாசமும் சதா பிராமண ஆத்மாக்களான உங்களின் நடத்தையிலும் முகங்களிலும் புலப்படுகின்றன. இன்று, ஆத்மாக்கள் எல்லோரும் சந்தோஷம் அற்றிருக்கிறார்கள். உங்களின் சந்தோஷமான முகங்களையும் நடத்தையையும் பார்க்கும்போது இத்தகைய ஆத்மாக்கள் ஒரு கணத்திற்கேனும் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். தாகமுள்ள ஆத்மா ஒருவருக்கு ஒரு துளி நீர் கிடைத்தாலும் அவர் மிகவும் சந்தோஷம் அடைவதைப் போல், ஒரு துளி சந்தோஷமேனும் ஆத்மாக்களுக்கு அதிகபட்சம் அவசியமாகும். அதேபோல், நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கிறீர்களா? பிராமண ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சதா சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்களாகக் கருதுகிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? பொக்கிஷங்கள் அழியாதவை. அவற்றை உங்களுக்குக் கொடுக்கும் அருள்பவரும் அழியாதவர். எனவே, அவை அழியாதவையாகவே இருக்க வேண்டும். ஏனென்றால், பிராமண ஆத்மாக்களான உங்களைத் தவிர கல்பம் முழுவதிலும் எவருமே, நீங்கள் பெறுகின்ற அலௌகீக சந்தோஷத்தைப் பெறுவதில்லை. இந்த வேளையின் அலௌகீக சந்தோஷம், வெகுமதியின் வடிவில் அரைக்கல்பத்திற்குத் தொடரும். எனவே, நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் இதற்காக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். நல்லது. நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா? உங்களின் சந்தோஷம் எப்போதாவது மறைந்து விடுகிறதா? அது சிலவேளைகளில் இல்லாமல் போய்விடுகிறதா? நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஆனால், சதா சந்தோஷமாக இருப்பதில் ஒரு வேறுபாடு உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஆனால் சதவீதத்தில் வேறுபாடு காணப்படுகிறது.
பாப்தாதா தனது தானியங்கித் தொலைக்காட்சியில் குழந்தைகள் எல்லோருடைய முகங்களையும் பார்க்கிறார். அவர் எதைக் கண்டார்? ஒரு நாள், நீங்களும் உங்களின் சந்தோஷ அட்டவணையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நாள் முழுவதும், அமிர்த வேளையில் இருந்து இரவுவரை, உங்களின் சந்தோஷம் அதே சதவீதத்தில் இருக்கிறதா? அல்லது, அது மாறுகிறதா? இதை எப்படிச் சோதிப்பது என உங்களுக்குத் தெரியும்தானே? தற்காலத்தில், விஞ்ஞானம் சோதிப்பதற்காக மிகச்சரியான இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. எனவே, சோதித்து, அதை அழியாதது ஆக்கிக் கொள்ளுங்கள். தற்சமயம், குழந்தைகள் எல்லோருடைய முயற்சிகளையும் பாப்தாதா சோதித்தார். நீங்கள் எல்லோரும் முயற்சி செய்கிறீர்கள். ஆனால் உங்களில் சிலர், உங்களின் கொள்ளளவிற்கேற்ப அதைச் செய்கிறீர்கள். சிலர் சக்திவாய்ந்த முறையில் முயற்சி செய்கிறார்கள். எனவே, இன்று, பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய மனங்களின் ஸ்திதியைச் சோதித்தார். ஏனென்றால், பிரதானமான விடயமே, ‘மன்மனாபவ’ என்பதாகும். சேவையைப் பொறுத்தவரையில், மனதின் சேவையே அதிமேன்மையான சேவையாகும். நீங்கள் கூறுகிறீர்கள்: தமது மனங்களை வென்றவர்கள், உலகையே வென்றவர்கள் ஆவார்கள். எனவே, பாபா உங்களின் மன நிலையைச் சோதித்தார். அவர் எதைக் கண்டார்? நீங்கள் மனதின் அதிபதிகளாகி, அவற்றை வேலை செய்ய வைக்கிறீர்கள். ஆனால் சிலவேளைகளில், உங்களின் மனங்கள் உங்களை வேலை செய்ய வைக்கின்றன. உங்களின் மனங்கள் உங்களைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, உங்களின் மனங்களின் மீது நீங்கள் ஆழ்ந்த அன்பு வைத்திருப்பதை பாப்தாதா கண்டார். ஆனால் உங்களின் மனங்களோ ஒருமுகப்பட்டும் ஸ்திரமாகவும் இருப்பதில்லை.
தற்சமயம், ஸ்திரமான, ஒருமுகப்பட்ட மனம், நீங்கள் ஒரு நிலையான ஸ்திதியை அனுபவம் பெறச் செய்யும். இப்போது, உங்களின் மனதை நீங்கள் ஒருமுகப்படுத்த விரும்புகிறீர்கள், ஆனால் அது இடையிடையே அலைபாய்கிறது என்பதை பாபா பெறுபேற்றிலே கண்டார். ஒருமுகப்படுத்தும் சக்தியானது இலகுவாக நீங்கள் அவ்யக்த, தேவதை ஸ்திதியை அனுபவம் பெறச் செய்யும். உங்களின் மனமானது வீணான சூழ்நிலைகள், வீணான எண்ணங்கள், வீணான தொடர்பாடல்களில் அலைந்து திரிகிறது. உதாரணமாக, சிலருக்கு பௌதீகமாகவேனும் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பழக்கம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு அந்தப் பழக்கம் இருக்கும். அதனால், நீங்கள் விரும்பும் இடத்தில், விரும்பியபடி, விரும்பிய நேரத்திற்கு உங்களின் மனதை ஸ்திரப்படுத்தக் கூடியதாக இருப்பதையே உங்களின் மனம் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது எனப்படுகிறது. ஒருமுகப்படுத்தும் சக்தியும் அதிபதியாக இருக்கும் சக்தியும் இலகுவாக உங்களைத் தடைகளில் இருந்து விடுபடச் செய்யும். அப்போது நீங்கள் போராட வேண்டியதில்லை. ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் இலகுவாக வேறு எவரும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதை அனுபவம் செய்ய முடியும். நீங்கள் இதை இயல்பாகவே அனுபவம் செய்வீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே எப்போதும் தேவதை ரூபத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் தந்தை பிரம்மாவின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். அதனால், தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதென்றால், ஒரு தேவதை ஆகுதல் என்று அர்த்தம். ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே எல்லோரின் மீதும் அன்பும் நன்மை செய்கின்ற உணர்வும் மரியாதைக்கான மனோபாவத்தையும் கொண்டிருப்பீர்கள். ஏனென்றால், ஸ்திரத்தன்மையைக் கொண்டிருத்தல் என்றால் சுயமரியாதைக்குரிய ஸ்திதியைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். தேவதை ஸ்திதியே உங்களின் சுயமரியாதை. நீங்கள் இதைத் தந்தை பிரம்மாவில் கண்டீர்கள். நீங்கள் அதைப் பற்றியும் பேசுகிறீர்கள். அவரின் சம்பூரண நிலை தொடர்ந்து நெருங்கி வருகின்ற வேளையில் நீங்கள் எதைக் கண்டீர்கள்? நடக்கின்ற, அசைகின்ற தேவதை ரூபம். அவர் தனது சரீர உணர்வு எதற்கும் அப்பாலேயே இருந்தார். உங்களுக்கு சரீரத்தின் உணர்வு ஏதாவது இருந்ததா? அவர் உங்களுக்கு முன்னால் நடந்தபோது, உங்களால் சரீரத்தைப் பார்க்க முடிந்ததா அல்லது தேவதை ரூபத்தை அனுபவம் செய்யக்கூடியதாக இருந்ததா? அவர் செயல்களைச் செய்தபோது, பேசும்போது, மற்றவர்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுத்தபோது அல்லது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தபோது, தனது சரீரத்தில் இருந்து பற்றற்றே இருந்தார். நீங்கள் சூட்சுமமான ஒளி ரூபத்தையே அனுபவம் செய்தீர்கள். பிரம்மாபாபா பேசும்போது, அவர் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அங்கே இல்லாதிருந்ததைப் போல் இருந்தது என நீங்கள் சொல்வீர்கள்தானே? அவர் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரின் பார்வை அலௌகீகமாக இருந்தது. இந்தப் பௌதீகப் பார்வையாக அது இருக்கவில்லை. அவர் தனது சரீரத்தினதும் எந்தவிதமான உணர்விற்கும் அப்பாற்பட்டிருந்தார். மற்றவர்களும் சரீரங்களின் எந்தவிதமான உணர்வையும் உணராதபோது, அவர்கள் உங்களின் ஆன்மீக ரூபத்தைப் பார்க்கும்போது, அது உடலில் இருந்தாலும் தேவதை ரூபத்துடன் இருத்தல் எனப்படுகிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களின் மனோபாவம், பார்வை, செயல்களில் தனித்துவத்தின் அனுபவம் இருக்க வேண்டும். அவர் பேசும்போது, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. ஆத்ம உணர்வு முறையிலான அன்பு. அதேபோல், நீங்களும் தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வதுடன், மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், தேவதை ஆகாமல் உங்களால் ஒரு தேவர் ஆகமுடியாது. தேவதைகள், தேவதேவியர் ஆவார்கள். எனவே, முதலாம் இலக்க ஆத்மாவான பிரம்மா, தனது நடைமுறை வாழ்க்கையால் தேவதை வாழ்க்கையின் அனுபவத்தை வழங்கினார். அத்துடன் அவர் அந்த தேவதை ரூபம் ஆகினார். அந்த தேவதை ரூபத்துடன்கூடவே, நீங்கள் எல்லோரும் தேவதைகளாகி பரந்தாமத்திற்குச் செல்ல வேண்டும். இதற்கு, உங்களின் மனங்களை ஸ்திரமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் மனங்களை உங்களின் கட்டளைகளின்படி செயல்பட வையுங்கள். நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அந்தச் செயல்களை உங்களின் மனதால் செய்யுங்கள். நீங்கள் எதையாவது செய்ய விரும்பாமல், அப்போதும் உங்களின் மனம் அதைச் செய்ய வேண்டும் எனக் கூறினால், அது அதிபதியாக இருப்பதல்ல. அந்தக் கணத்தில், சில குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. நான் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை, ஆனால் அது நடந்துவிட்டது. நான் அதைச் செய்திருக்கக்கூடாது, ஆனால் அது நடந்துவிட்டது’. இதுவே உங்களின் மனதால் கட்டுப்படுத்தப்படும் ஸ்திதி ஆகும். நீங்கள் இத்தகைய ஸ்திதியை விரும்பவில்லை, அல்லவா? தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டுள்ளீர்கள். அவர் உங்களுக்கு முன்னால் நிற்கும்போது, உங்களின் அனுபவம் என்னவாக இருந்தது? அங்கே ஒரு தேவதை நிற்பதைப் போன்றிருந்தது, ஒரு தேவதை உங்களுக்கு திருஷ்டி கொடுப்பதைப் போன்றிருந்தது. எனவே, உங்களின் மனதின் ஒருமுகப்பட்ட நிலையின் சக்தி, இலகுவாக உங்களை ஒரு தேவதை ஆக்கும். தந்தை பிரம்மாவும் குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: சமமானவர் ஆகுங்கள். தந்தை சிவன் கூறுகிறார்: அசரீரியானவர் ஆகுங்கள். தந்தை பிரம்மா கூறுகிறார்: தேவதை ஆகுங்கள். எனவே, நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? பாபா பெறுபேற்றில் எதைக் கண்டார்? உங்களின் மனதின் ஒருமுகப்படுத்தல் குறைவாக உள்ளது. உங்களின் மனங்கள் இடையில் அதிகளவு சுற்றுலா செல்கிறது. அவை அலைந்து திரிகின்றன. அது போகக்கூடாத இடத்திற்குச் சென்றால், நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்கள்? அதை அலைந்து திரிதல் என்றே நீங்கள் அழைப்பீர்கள், அப்படித்தானே? எனவே, ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள். அதிபதி என்ற ஸ்திதியின் ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். நீங்கள் நிலையாக இருக்கும்போது, குழப்பம் அடைய மாட்டீர்கள். நிலையாக அமராவிட்டால், குழப்பத்திற்கு உள்ளாகுவீர்கள். ஆகவே, பல்வகை மேன்மையான ஸ்திதிகள் என்ற ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். இதுவே ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஒருமுகப்படுத்தும் சக்தி எனப்படுகிறது. இது ஓகேயா?
நீங்கள் பிரம்மாபாபாவின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்தானே? எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவு? அதிகளவு. உங்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. எனவே, அந்த அன்பிற்குப் பதிலாக நீங்கள் தந்தைக்கு எதைக் கொடுத்துள்ளீர்கள்? தந்தைக்கும் உங்களின் மீது அன்புள்ளது. இதனாலேயே, நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள். எனவே, அதற்குப் பதிலாக நீங்கள் எதைக் கொடுத்தீர்கள்? அதற்குப் பிரதிபலன், சமமாக ஆகுவதே. அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் வந்துள்ளீர்கள். இது நல்லது. இரட்டை வெளிநாட்டவர்களான உங்களால் மதுவனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது சர்வதேசம் ஆகியுள்ளது. பாருங்கள், வெவ்வேறு பிரிவுகளின் சேவை மதுவனத்தில் இடம்பெறும்போது, அதன் ஒலி எங்கும் பரவுகிறது. வெவ்வேறு தொழில்துறைகளின் சேவை ஆரம்பித்ததில் இருந்து, ஐபி தரமுள்ள ஆத்மாக்களிடம் இந்த ஒலி அதிகளவில் பரவியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. விவிஐபி களை ஒருபுறம் வையுங்கள். அவர்களுக்கு நேரம் இல்லை. அத்துடன் நீங்கள் ஏனைய பல பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தினீர்கள். அவற்றில் இருந்தும் ஒலி பரவுகிறது. இப்போது, டெல்லியும் கல்கத்தாவும் இதைச் செய்யப் போகிறார்கள்தானே? அவர்கள் நல்ல திட்டங்களைச் செய்கிறார்கள். அவர்கள் நல்ல முயற்சியையும் செய்கிறார்கள். செய்திகள் தொடர்ந்து பாப்தாதாவை வந்தடைகின்றன. டெல்லியில் இருந்து ஒலியானது வெளிநாடுகளுக்கும் பரவ வேண்டும். ஊடகத்துறையினர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் பாரதத்தில் மட்டுமே ஒலி பரவச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டெல்லியில் இடம்பெற்றது, இந்த நிகழ்ச்சி கல்கத்தாவில் இடம்பெற்றது என்ற ஒலி வெளிநாடுகளில் இருந்து வரவேண்டும். இந்த ஒலியானது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டும். வெளிநாடுகளில் இருப்பவர்களால் இந்தியாவில் உள்ள கும்பகர்ணர்கள் விழித்தெழப் போகிறார்கள்தானே? வெளிநாடுகளில் இருந்து வருகின்ற செய்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. பாரதத்தில் ஒரு நிகழ்ச்சி இடம்பெறும்போது, வெளிநாடுகளில் உள்ள பத்திரிகைகளில் அவர்கள் அந்தச் செய்திகளைப் பெற்றால், அந்த ஒலியானது பரவும். பாரதத்தின் ஒலியானது வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும், வெளிநாடுகளின் ஒலியானது பாரதத்திற்கு வரவேண்டும். அப்போது அது ஒரு தாக்கத்தை உருவாக்கும். அது நல்லது. நீங்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்ச்சிகள் நல்லவை. டெல்லியைச் சேர்ந்தவர்களை, அவர்களின் அன்பினால் செய்த முயற்சிகளுக்காக பாப்தாதா பாராட்டுகிறார். கல்கத்தாவைச் சேர்ந்தவர்களும் முன்கூட்டியே பாராட்டுக்களைப் பெறுகிறார்கள். ஏனென்றால், ஒத்துழைப்பு, அன்பு, தைரியம் என்ற மூன்றும் ஒன்றுசேர்ந்திருக்கும் போது, ஒலியானது உரத்துக் கேட்கும். அந்த ஒலியானது பரவும். அது ஏன் பரவக்கூடாது? இப்போது, ஊடகத்துறையினர் இந்த அற்புதத்தைச் செய்ய வேண்டும். எல்லோரும் அதைத் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். இது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இது மட்டும் இருக்கக்கூடாது. அது பாரதத்தில் இடம்பெறுகிறது. இப்போது, நீங்கள் வெளிநாடுகளையும் சென்றடைய வேண்டும். இப்போது, இந்த வருடம், எங்கும் இந்த ஒலியைப் பரப்புவதற்காக நீங்கள் எவ்வளவு தைரியத்துடனும் மிகுந்த விசையுடனும் கொண்டாடுகிறீர்கள் எனப் பார்ப்போம். இரட்டை வெளிநாட்டவர்களிடம் அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் உள்ளன என்ற செய்திகளை பாப்தாதா பெற்றுள்ளார். இது நல்லது. நீங்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது, உங்களுக்குள் மகத்தான உற்சாகம் ஏற்படுகிறது. முதலடி எடுத்து வைப்பவர்கள், பிரம்மாவிற்குச் சமமானவர்கள். இது நல்லது. எனவே, தாதிக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டது. உங்களை மும்முரமாக வைத்திருப்பதற்கு இது நல்லதொரு வழிமுறை. இது நல்லது. தாதி ஒரு கருவியே. அச்சா.
நீங்கள் எல்லோரும் பறக்கும் ஸ்திதியில் இருக்கிறீர்களா? பறக்கும் ஸ்திதியே, வேகமான ஸ்திதியாகும். நடக்கின்ற ஸ்திதி அல்லது ஏறுகின்ற ஸ்திதி வேகமான ஸ்திதி இல்லை. பறக்கும் ஸ்திதியே வேகமானது. அத்துடன் அது உங்களை முதலாவதாக வரச் செய்கிறது. அச்சா.
தாய்மார்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? தாய்மார்களே, உங்களுக்குச் சமமானவர்களை விழித்தெழச் செய்யுங்கள். குறைந்தபட்சம், எந்தவொரு தாயும் பின்னர் முறைப்பாடு செய்யக்கூடாது. தாய்மார்களின் எண்ணிக்கையே எப்போதும் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி. இந்தக் குழுவில், சகல குழுக்களைச் சேர்ந்தவர்களும் நல்ல எண்ணிக்கையில் இருக்கிறார்கள். குமார்களும் நல்லதொரு எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இப்போது, குமார்களே, உங்களுக்குச் சமமானவர்களை விழித்தெழச் செய்யுங்கள். இது நல்லது. குமார்கள், அவர்களின் கனவுகளிலேனும் தமது தூய்மையில் மிகவும் உறுதியானவர்கள் என்ற அற்புதங்களைச் செய்து காட்ட வேண்டும். பாப்தாதாவால் உலகிற்கே சவால் விடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்: பிரம்மா குமார்களான நீங்கள், இளைஞர் குமார்கள். நீங்கள் இரட்டைக் குமார்கள்தானே? நீங்கள் பிரம்மாகுமார்கள். பௌதீகமாகவும் நீங்கள் குமார்கள். அதனால், நடைமுறையில் தூய்மையின் வரைவிலக்கணம் இருக்க வேண்டும். ஆகவே, உங்களின் தூய்மையைச் சோதிப்பதற்கு பாபா உங்களுக்குக் கட்டளை இடட்டுமா? பாபா கட்டளை இடட்டுமா? அவர் இதைச் செய்யட்டுமா? நீங்கள் இதற்கு உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. இதைச் சோதிப்பதற்கு இயந்திரங்கள் உள்ளன. உங்களின் கனவுகளிலேனும் வருவதற்கான தைரியம் தூய்மையின்மைக்கு இல்லை. குமாரிகளுக்கும் அப்படியே. ஒரு குமாரி என்றால், ஒரு பூஜிக்கத் தகுதிவாய்ந்த, தூய குமாரி என்று அர்த்தம். குமார்களும் குமாரிகளும் பாப்தாதாவிற்கு சத்தியம் செய்ய வேண்டும்: நாம் அனைவரும் மிகத் தூய்மையானவர்கள், எமது கனவுகளிலேனும் எந்தவிதமான தூய்மையற்ற எண்ணங்களும் இருக்க முடியாது. அப்போது மட்டுமே, குமார்களினதும் குமாரிகளினதும் தூய்மை விழா கொண்டாடப்படும். இப்போது, சிறிதளவு தூய்மையின்மை காணப்படுகிறது. பாப்தாதாவிற்கு அதைப் பற்றித் தெரியும். நீங்கள் ஒரு புதிய பிறவி எடுத்திருப்பதனால், தூய்மையின்மையைப் பற்றிய அறியாத நிலை இருக்க வேண்டும், அப்படித்தானே? தூய்மையின்மை என்பது உங்களின் கடந்தகாலப் பிறவிக்குரியது. இது நீங்கள் மரணித்து வாழ்கின்ற உங்களின் பிறப்பாகும். இந்த உங்களின் பிறப்பு, பிரம்மாவின் வாய் மூலம் பிறந்த தூய பிறப்பாகும். எனவே, தூய பிறப்பின் கோட்பாடுகள் அவசியமானவை. குமார்களும் குமாரிகளும் இந்தக் கொடியை ஏற்ற வேண்டும்: நாங்கள் தூய்மையானவர்கள், நாங்கள் உலகில் தூய சம்ஸ்காரங்களைப் பரப்புவோம். இந்த சுலோகம் உச்சரிக்கப்பட வேண்டும். குமாரிகளான நீங்கள் இதைக் கேட்டீர்களா? எத்தனை குமாரிகள் இருக்கிறார்கள் எனப் பாருங்கள்! இப்போது, குமாரிகளா அல்லது குமார்களா இந்த ஒலியைப் பரப்புகிறார்கள் எனப் பார்ப்போம். தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. பிராமண வாழ்க்கை என்றால் அர்த்தம் இதுதான். தாய்மார்களும் பற்று இருக்கும்போது, தூய்மையின்மையைக் கொண்டிருக்கிறார்கள். தாய்மார்களான நீங்களும் பிராமணர்கள்தானே? எனவே, இது தாய்மார்களில், குமாரிகளில், குமார்களில், அரைக்குமார்கள் மற்றும் அரைக்குமாரிகளிலும் இருக்கக்கூடாது. பிராமணர் என்றால் தூய ஆத்மா என்று அர்த்தம். ஏதாவது தூய்மையற்ற செயல் இருக்குமாயின், அது மகாபாவமாகக் கருதப்படும். அந்தப் பாவத்திற்கான தண்டனை மிகவும் கடுமையானது. அது ஓகே, அது எல்லா வேளையும் நடக்கிறது, இந்த மாதிரிச் சிறிதளவு எப்போதும் இருக்கும் என நினைக்காதீர்கள். இல்லை. இதுவே முதல் பாடமாகும். தூய்மையே புதுமையாகும். பிரம்மா பாபாவிற்கு வந்த அவமானங்கள் எல்லாமே தூய்மையால்தான். அது நடந்துவிட்டது எனக் கூறி உங்களால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. இதில் கவனயீனம் ஆகாதீர்கள். ஒரு பிராமணர் அர்ப்பணித்தவரோ, சேவையாளரோ அல்லது இல்லறத்தவரோ யாராக இருந்தாலும் தர்மராஜ் இதில் எவரையும் விடமாட்டார். பிரம்மாபாபாவும் தர்மராஜின் பக்கத்தையே எடுப்பார். ஆகவே, குமார்களே, குமாரிகளே, நீங்கள் எங்கே இருந்தாலும், மதுவனத்திலோ அல்லது நிலையங்களிலோ எங்கே இருந்தாலும், உங்களின் எண்ணங்களிலேனும் இதனால் வருந்துவது, மிகப் பெரிய வேதனையாகவும் வலியாகவும் இருக்கும். நீங்கள் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள்: ‘உங்களின் மனதைத் தூய்மையாக வைத்திருங்கள், உங்களின் சரீரத்தைத் தூய்மையாக வைத்திருங்கள்’. இது உங்களின் பாடல்தானே? எனவே, உங்களின் மனம் தூய்மையாக இருக்கும்போது, உங்களின் வாழ்க்கையும் தூய்மையாக இருக்கும். இதில் இலேசாக இருந்து, நாங்கள் சிறிது செய்தால், என்ன? எனக் கூறாதீர்கள். அது சிறிதளவல்ல, அது அதிகம். பாப்தாதா உங்களுக்கு உத்தியோக பூர்வமான எச்சரிக்கை வழங்குகிறார். உங்களால் இதில் உங்களைப் பாதுகாக்க முடியாது. யாராக இருந்தாலும், அவர் இதை மிகத் தெளிவாகக் கணக்கெடுப்பார். ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள். கவனம் செலுத்துங்கள்! நீங்கள் எல்லோரும் கவனமாகக் கேட்டீர்களா? இரண்டு காதுகளையும் திறந்து வைத்துக் கேளுங்கள்! உங்களின் மனோபாவத்தினூடாகவும் எந்தவொரு தொடுகையும் இருக்கக்கூடாது. உங்களின் பார்வையினூடாகவும் எந்தவிதமான தொடுகையும் இருக்கக்கூடாது. அது உங்களின் எண்ணங்களில் இல்லாவிட்டால், எப்படி அது உங்களின் மனோபாவத்தில் அல்லது பார்வையில் இருக்க முடியும்? இது ஏனென்றால், சம்பூரணம் ஆகுவதற்கான நேரம், சம்பூரணமாகத் தூய்மை ஆகுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது. தூய்மையின்மை இருக்குமாயின், அது ஒரு வெள்ளைக் கடதாசியில் ஒரு கறுப்புப் புள்ளியைப் போன்றது. அச்சா. நீங்கள் எல்லோரும் எங்கிருந்து வந்திருந்தாலும், எங்கும் இருந்து வந்துள்ள குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அச்சா, உங்களின் மனங்களை உங்களின் கட்டளைகளின்படி செயல்படச் செய்யுங்கள். உங்களால் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களின் மனதை இணைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவை அங்கேயே நிலைத்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். அச்சா. பல இடங்களில் இருந்தும் குழந்தைகள் பாபா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாபாவை நினைவு செய்கிறார்கள், அத்துடன் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். உண்மையில், விஞ்ஞானத்தின் வசதிகள், குழந்தைகளான உங்களுக்கே சந்தோஷத்தை அருள்பவர்களாக உள்ளன.
சதா சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சந்தோஷமான முகங்களுடன் தமது நடத்தையால் ஒரு துளி சந்தோஷத்தைக் கொடுக்கும் சதா பாக்கியசாலி உலக உபகாரிக் குழந்தைகளுக்கும் சதா தமது மனதின் அதிபதிகளாக இருந்து தமது மனங்களைக் கட்டுப்படுத்த ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கும் தமது மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகை வென்றவர்களுக்கும் தமது தூய்மையின் ஆளுமையால் சதா பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பை அனுபவம் செய்யும் தூய பிராமண ஆத்மாக்களுக்கும் சதா டபிள் லைற்றாக இருந்து, தேவதை வாழ்க்கையில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுபவர்களுக்கும் பிரம்மாபாபாவிற்குச் சமமான இத்தகைய குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும். எங்கும் இருந்து பாபா கூறுவதைக் கேட்பதுடன் பாபாவை நினைவு செய்யும் குழந்தைகள் எல்லோருக்கும் அதிக, அதிக அன்பும் நினைவுகளும், இதயபூர்வமான ஆசீர்வாதங்களுடன் உங்கள் அனைவருக்கும் நமஸ்தே.
ஆசீர்வாதம்:
நீங்கள் சாகார் பாபாவைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு சம்பூரணமான தேவதையாகி, முதலாம் இலக்கத்தைக் கோருவீர்களாக.முதலாம் இலக்கத்தைக் கோருவதற்கான இலகுவான வழிமுறை, முதலாம் இலக்க ஆத்மாவான பிரம்மாபாபாவைப் பார்ப்பதேயாகும். ஏனைய பலரைப் பார்ப்பதற்குப் பதிலாக, அந்த ஒருவரைப் பார்த்து, அந்த ஒருவரை மட்டும் பின்பற்றுங்கள். ‘நான் ஒரு தேவதை’ என்ற மந்திரத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். வேறுபாடுகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். விஞ்ஞானத்தின் கருவிகள் தமது பணியை ஆரம்பிக்கும். நீங்கள் சம்பூரண தேவதைகளாகி, பின்னர் தேவதேவியர்களாகி, புதிய உலகில் அவதரிப்பீர்கள். எனவே, ஒரு சம்பூரண தேவதை ஆகுவதென்றால், சாகார் பாபாவைப் பின்பற்றுதல் என்று அர்த்தம்.
சுலோகம்:
அனைவராலும் மதிக்கப்பட்டவராக இருக்கும் பாக்கியம், மரியாதையைத் துறத்தலில் அடங்கியுள்ளது.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
பாப்தாதா கருணை கொள்வதைப் போல், குழந்தைகளான நீங்களும் மாஸ்ரர் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். உங்களின் மனப்பாங்கினாலும் சூழலினூடாகவும் ஆத்மாக்களுக்கு நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற சக்திகளை வழங்குங்கள். நீங்கள் குறுகிய காலத்தில் உலக சேவையை நிறைவேற்ற வேண்டியிருப்பதாலும் பஞ்சபூதங்கள் உட்பட எல்லோரையும் நீங்கள் தூய்மையாக்க வேண்டியிருப்பதாலும், இந்தச் சேவையைத் துரித கதியில் செய்யுங்கள்.