12.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மிகப் பெரிய இரத்தின வியாபாரிகள். அனைவருக்கும் அழியாத ஞான இரத்தினங்களாகிய நகைகளைக் கொடுப்பதன் மூலம், நீங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்க வேண்டும்.

கேள்வி:
உங்கள் வாழ்க்கையை வைரம் போன்று ஆக்குவதற்காக, பிரதானமாக எந்த விடயத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்

பதில்:
நீங்கள் வைத்திருக்கும் சகவாசத்தில். குழந்தைகள், ஞான மழையை மிக நன்றாகப் பொழிபவர்களின் சகவாசத்தையே வைத்திருக்க வேண்டும். மழையைப் பொழியாதவர்களின் சகவாசத்தை வைத்திருப்பதனால் என்ன பயன்? நீங்கள் வைத்திருக்கும் சகவாசம் உங்களில் அதிகளவு செல்வாக்கைச் செலுத்துகின்றது. நல்ல சகவாசத்தினால் உங்களில் சிலர் வைரம் போன்று ஆகுகின்றீர்கள். ஏனையோர் வேறு எவரோ ஒருவரின் சகவாசத்தை வைத்திருப்பதினால் கூழாங்கற்களைப் போன்று ஆகுகின்றார்கள். ஞானம் நிறைந்தவர்கள் நிச்சயமாக ஏனையோரைத் தங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவார்கள். அவர்கள் தாம் வைத்துள்ள சகவாசத்தில் மிகவும் கவனமாக இருப்பதனால் தங்களைக் கவனித்துக் கொள்வார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் முழு உலகையும் முழு நாடகத்தையும் மிக நன்றாக நினைவு செய்கின்றீர்கள். இவற்றின் வேறுபாடும் புத்தியில் உள்ளது. இவை அனைத்தும் புத்தியில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்: சத்தியயுகத்தில் அனைவரும் மேன்மையானவர்களாக, விகாரம் அற்றவர்களாக, தூய்மையாக, செழிப்பாக இருந்தார்கள். இப்பொழுது, உலகம் சீரழிந்தும் விகாரம் நிறைந்தும் தூய்மையற்றும் செழிப்பற்றும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் மறுபக்கத்திற்குக் கடந்து செல்கின்றீர்கள். ஒரு நதி கடலைச் சந்திக்கும் இடம் சங்கமம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு புறம் இனிப்பான நீரும், மறுபுறம் உவர்ப்பான நீரும் உள்ளது. எனவே இதுவும் சங்கமமே ஆகும். சத்தியயுகத்தில் நிச்சயமாக இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே இருந்தது என்பதை நீங்;கள் அறிவீர்கள். சக்கரம் இவ்வாறே சுழல்கின்றது. இது இப்பொழுது சங்கமம் ஆகும். கலியுக இறுதியில் அனைவரும் சந்தோஷமே இல்லாமல் இருக்கின்றனர். இது ஒரு காடு என்று அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது முட்களில் இருந்து மலர்கள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த உணர்வையே கொண்டிருக்க வேண்டும்: எங்கள் ஆஸ்தியை நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றோம். இது புத்தியில் வைக்கப்பட வேண்டும். 84 பிறவிகளின் கதை பொதுவானது. 84 பிறவிகள் இப்பொழுது நிறைவு பெற்றுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சத்தியயுகப் பூந்தோட்டத்திற்குச் செல்கின்றீர்கள் என்ற உண்மையால் உங்கள் புத்தி போஷாக்கு அடைகிறது. பின்னர் எங்கள் பிறப்பு இந்த மரண உலகில் இடம்பெறாது. எங்கள் பிறப்பு அமரத்துவ உலகிலேயே இருக்கும். சிவபாபாவும் அமரத்துவ பிரபு என்றே அழைக்கப்படுகின்றார். அவர் எங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். அங்கே, சரீரங்களில் இருக்கும் போதும் நாங்கள் அமரர்களாக இருப்போம். எங்கள் சரீரங்களை எங்களுக்குரிய நேரத்தில் நாங்கள் சந்தோஷமாகவே நீக்குவோம். அந்த உலகம் மரண உலகம் என்று அழைக்கப்படுவதில்லை. இதனை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் போது, உங்களிடம் முழுமையான ஞானம் உள்ளது என்று அவர்கள் நினைப்பார்கள். உலகிற்கு ஓர் ஆரம்பமும் முடிவும் உள்ளன. ஒரு குழந்தை இளைஞனாகிப் பின்னர் வளர்ந்து வயோதிபன் ஆகுகின்றார். ஒரு முடிவு ஏற்படுகின்றது. பின்னர் அவர் மீண்டும் ஒரு குழந்தை ஆகுகின்றார். உலகமும் புதியதாகிப் பின்னர் கால்வாசி பழையதாகி, அதன் பின், அரைவாசி பழையதாகிய பின்னர் முற்றிலும் பழையது ஆகுகின்றது. பின்னர் அது மீண்டும் புதியது ஆகுகின்றது. இவ் விடயங்களைப் பற்றி வேறு யாரும் ஒருவரோடொருவர் பேச முடியாது. வேறு எவராலும் அத்தகைய கலந்துரையாடல்களில் ஈடுபட முடியாது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஆன்மீக ஞானத்தைப் பெறமுடியாது. அவர்களும் பிராமண குலத்தினராக ஆகும் போதே, அவர்களால்; இதனைச் செவிமடுக்க முடியும். பிராமணர்களால் மாத்திரமே இவ்விடயங்களை அறிய முடியும். பிராமணர்கள் மத்தியிலும் நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். உங்களில் சிலரால் மிகச் சரியாக விளங்கப்படுத்த முடியும். ஏனையோரால் விளங்கப்படுத்த முடிவதில்லை. அதனால் அவர்கள் எதனையும் பெறுவதில்லை. இரத்தின வியாபாரிகள் மத்தியிலும், சிலரிடம் பல மில்லியன் பெறுமதியான கையிருப்பு இருக்கும். ஆனால் சிலரிடமோ பத்தாயிரம் பெறுமதியான கையிருப்பேனும் இருப்பதில்லை. நீங்களும் அவ்வாறே உள்ளீர்கள். உதாரணத்திற்கு ஜனக்கைப் பாருங்கள். அவர் நல்லதொரு இரத்தின வியாபாரி. அவரிடம் விலையுயர்ந்த நகைகள் உள்ளன. அவற்றைத் தானம் செய்து, அவரால் ஒருவரை மிகவும் செல்வந்தர் ஆக்க முடியும். சிலரோ சிறிய நகைவியாபாரிகள் என்பதால் அவர்களால் அதிகளவு தானம் செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களின் அந்தஸ்;தும் குறைவாகவே உள்ளது. நீங்கள் அனைவருமே நகை வியாபாரிகள். இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் நகைகள் ஆகும். நல்ல இரத்தினங்களை வைத்திருப்பவர்கள் செல்வந்தர்கள் ஆகுவதுடன் பிறரையும் செல்வந்தர்கள் ஆக்குவார்கள். அனைவருமே நல்ல இரத்தின வியாபாரிகளாக இருப்பார்கள் என்றில்லை. அனுபவம் வாய்ந்த இரத்தின வியாபாரிகள் பெரிய நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். முக்கியஸ்தர்களுக்கு நல்ல நகைகள் கொடுக்கப்படுகின்றன. நிபுணர்கள் பெரிய கடைகளில் பணியாற்றுவார்கள். பாபா தொழில் அதிபர் என்றும், இரத்தின வியாபாரி என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் இரத்தினங்களின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மந்திரவாதியும் ஆவார், ஏனெனில் அவரிடம் மாத்திரமே தெய்வீகக் காட்சிகளுக்கான திறவுகோல் உள்ளது. தீவிர பக்தி செய்கின்ற ஒருவருக்குக் காட்சிகள் கிடைக்கின்றன. இங்கே அவ்வாறான எதுவும் இல்லை. இங்கு, வீட்டில் அமர்ந்திருக்கும் போதே, பலர் திடீரெனக் காட்சிகளைப் பெறுகின்றனர். நாளுக்கு நாள் காட்சிகள் பெறுவது இலகுவாக ஆகும். பலரும் பிரம்மாவினதும், ஸ்ரீகிருஷ்ணரினதும் காட்சிகளைப் பெறுகின்றார்கள். அவர்களிடம் கூறப்படுகின்றது: பிரம்மாவிடம் செல்லுங்கள். சென்று இளவரசர் ஆகுகின்ற கல்வியைக் கற்றிடுங்கள். அங்கே தூய இளவரசர்களும் இளவரசிகளும் தொடர்ந்தும் இருந்துள்ளார்கள். இளவரசரும் தூய்மையானவர் என்றே அழைக்கப்படுகின்றார். தூய்மையின் மூலம் பிறப்பு இடம்பெறுகின்றது. தூய்மை அற்றவர்கள் சீரழிந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தூய்மையற்றவரில் இருந்து நாங்கள் தூய்மையானவர் ஆக வேண்டும். இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அப்பொழுதே உங்களாலும் எவருக்கேனும் விளங்கப்படுத்த முடியும். அப்பொழுதே மக்கள் நினைப்பார்கள்: அவர்கள் மிகவும் விவேகமானவர்கள். அவர்களிடம் கூறுங்கள்: எங்களிடம் சமயநூல்கள் போன்றவற்றின் ஞானம் எதுவும் இல்லை. இது ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகின்ற ஆன்மீக ஞானமாகும். இதுவே திரிமூர்த்தி: பிரம்மா, விஷ்ணு, சங்கரர். இதுவும் ஒரு படைப்பேயாகும். ஒரேயொரு தந்தையே படைப்பவர். அவர்களோ எல்லைக்கு உட்பட்டவற்றைப் படைப்பவர்கள். ஆனால் இவர் எல்லையற்ற படைப்பவரான, எல்லையற்ற தந்தை ஆவார். தந்தை இங்கமர்ந்திருந்து கற்பிக்கின்றார். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை உங்களை மலர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இறை குலத்திற்கு உரியவர் என்பதால் உங்களைத் தந்தை தூய்மை ஆக்குகின்றார். எனவே, நீங்கள் தூய்மையற்றவர் ஆகினால், நீங்கள் குலத்திற்கு அவதூறு விளைவிப்பவர் ஆகுவீர்கள். தந்தை அறிவார். பின்னர் தர்மராஜின் மூலம் தண்டனை கொடுக்கப்படும். தர்மராஜும் தந்தையுடன் உள்ளார். தர்மராஜின் கடமையும் முடிவிற்கு வருகின்றது. அது சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அது மீண்டும் துவாபரயுகத்தில் ஆரம்பமாகும். தந்தை இங்கமர்ந்திருந்து செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவத்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: அவரின் வேதனைக்கு அவர் முற்பிறவியில் செய்த செயல்களே காரணம். சத்தியயுகத்தில் இவ்வாறு சொல்ல மாட்டார்கள். அங்கே தீய செயல்களுக்கான வேதனை என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கேயே நல்ல, தீய செயல்கள் செய்யப்படுகின்றன. இங்கேயே இன்பமும், துன்பமும் உள்ளன. எனினும் சிறிதளவு சந்தோஷமே உள்ளது. அங்கே, துன்பம் என்ற பெயரே இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் எங்கிருந்து துன்பம் வரும்? நீங்கள் தந்தையிடமிருந்து புதிய உலகம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். துன்பம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். சக்கரத்தின் கால எல்லை மிகவும் நீண்டது என்று சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. அரைக் கல்பத்திற்கு எங்கள் துன்பம் அகற்றப்பட்டு, நாங்கள் சந்தோஷத்தை அடையவுள்ளோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. உங்களைத் தவிர இவ்விடயங்கள் வேறு எவரின் புத்தியிலும் இருக்க முடியாது. நூறாயிரம் ஆண்டுகள் என்பது குறிப்பிடப்படும் போது, ஏனைய அனைத்தும் புத்தியில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றது. இந்தச் சக்கரம் 5000 ஆண்டுகள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சூரிய சந்திர வம்சங்களின் இராச்சியம் என்பது நேற்றைய விடயங்களே. பிராமணர்களின் பகல் என்றே கூறப்படுகின்றது. சிவபாபாவின் பகல் என்று கூறப்படுவதில்லை. இது பிராமணர்களின் பகலும், பின்பு பிராமணர்களின் இரவும் ஆகும். பிராமணர்கள் பின்னர் பக்தி மார்க்கத்திற்குச் செல்கின்றார்கள். இப்பொழுது இது சங்கமம்: இது பகலும் அல்ல, இரவும் அல்ல. நீங்கள் பிராமணர்கள் ஆகிய பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அதன் பின்னர் திரேதாயுகத்தில் சத்திரியர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனை உங்கள் புத்தியில் உறுதியாக வைத்திருங்கள். இவ்விடயங்களை எவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கால எல்லை மிக நீண்டது எனச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கணக்கை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இதை எவரும் அறியார். சத்தியயுகமும், திரேதாயுகமும் அரைக்கல்பத்திற்கு நீடித்த பின்னர் இடையில் பக்தி ஆரம்பம் ஆகும் என்பதும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அதுவே திரேதாயுகத்தினதும் துவாபரயுகத்தினதும் சங்கமம் ஆகும். நாளடைவில் அந்தச் சமயநூல்கள் போன்றன துவாபரயுகத்தில் உருவாக்கப்பட்டன. பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் பல உள்ளன. விருட்சம் மிக உயரமானதும் அகன்றதும் ஆகும். அதன் விதை பாபாவே ஆவார். இது தலைகீழான விருட்சமாகும். முதலாவதும் முதன்மையானதும் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஆகும். தந்தை கூறுகின்ற இவ்விடயங்கள் முற்றிலும் புதியவை. இந்தத் தேவதர்மத்தின் நிறுவனர் யார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு குழந்தை ஆவார். ஞானத்தைக் கொடுப்பவர் ஒரேயொரு தந்தையே ஆவார். அவர்கள் தந்தையின் பெயரை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக மகனின் பெயரை இட்டுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகளை மாத்திரமே காட்டியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: தெய்வீகச் செயற்பாடுகள் ஸ்ரீகிருஷ்ணருடையது அல்ல. அவர்கள் பாடுகின்றார்கள்: ஓ பிரபுவே, உங்கள் அற்புதமான விளையாட்டுகள் தனித்துவமானவையும் எல்லையற்றதும் ஆகும். தெய்வீகச் செயற்பாடுகள் ஒரேயொருவருடையதே. சிவபாபாவின் புகழ் தனித்துவமானது. அவர் ஒரேயொருவர் மாத்திரமே சதா தூய்மையானவர். அவ்வாறிருந்தும் அவரால் ஒரு தூய சரீரத்தினுள் பிரவேசிக்க முடியாது. எவ்வாறாயினும், தூய்மையற்ற உலகிற்கு வந்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள் என அவர்கள் அவரை அழைக்கின்றனர். எனவே தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்ற உலகிற்கு வர வேண்டும். நான் வந்து அவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: பிரதான விடயம்: அல்ஃபாவை நினைவு செய்வதே! ஏனைய அனைத்தும் விபரங்களாகும். அதனை அனைவராலும் கிரகிக்க முடியும் என்றில்லை. கிரகிக்க முடிந்தவர்களுக்கு மாத்திரமே நான் விளங்கப்படுத்துகின்றேன். ஏனையோருக்கு நான் கூறுகின்றேன்: மன்மனாபவ! ஒவ்வொருவரது புத்தியும் வரிசைக்கிரமமாகவே உள்ளது, சில முகில்கள் அதிக மழையைப் பொழிகின்றன. ஆனால் சில சிறிதளவு மழையைப் பொழிந்து விட்டுச் சென்றுவிடுகின்றது. நீங்களும் முகில்களே. சிலர் மழையைப் பொழிவதே இல்லை. அவர்களுக்கு ஞானத்தைக் கிரகிப்பதற்கான சக்தி இல்லை. மம்மாவும் பாபாவும் சிறந்த முகில்கள். ஞான மழையை நன்றாகப் பொழிபவர்களின் சகவாசத்தையே குழந்தைகளாகிய நீங்கள் வைத்திருக்க வேண்டும். மழையைப் பொழியாதவர்களின் சகவாசத்தை வைத்திருப்பதன் மூலம் என்ன பயன்? சகவாசம் உங்கள் மீது அதிகளவு செல்வாக்கைச் செலுத்துகின்றது. சிலரின் சகவாசத்தில் சிலர் வைரங்கள் போன்று ஆகுகின்றார்கள். ஆனால் சிலரோ பிறரின் சகவாசத்தில் கூழாங்கற்களைப் போன்று ஆகுகின்றார்கள். நல்லவர்களுடன் சேர்ந்து வாழுங்கள். ஞானம் நிறைந்த ஒருவர், பிறரைத் தனக்குச் சமமாக மலரைப் போன்று ஆக்குவார். உண்மையான தந்தையினால் ஞானம் நிறைந்தவராகவும், யோகியாகவும் ஆக்கப்பட்ட ஒருவரின் சகவாசத்தை மாத்திரமே வைத்திருங்கள். வேறு ஒருவரின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் கடந்து செல்லலாம் என்று எண்ணாதீர்கள். பலரும் இவ்வாறு கூறுகின்றார்கள். அந்த விடயம் இங்கு பொருந்தாது. ஒரு மாணவன் வேறு ஒருவரின் வாலைப் பிடிப்பதன் மூலம் சித்தியடைய முடியுமா? அவனும் கற்க வேண்டும். தந்தையும் வந்து ஞானத்தைக் கொடுக்கின்றார். அவருக்குத் தெரியும்: இந்த நேரத்தில் நான் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவரே சென்று ஞானத்தைக் கொடுக்க வேண்டும் என்பது அவரின் புத்தியில் இல்லை. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. பாபா எதனையும் செய்வதில்லை. நாடகத்தில் தெய்வீகக் காட்சிகள் காண்பதற்குரிய பாகம் இருக்குமாயின், அவர் அக் காட்சிகளைக் காண்பார். தந்தை கூறுகின்றார்: நான் அமர்ந்திருந்து காட்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்றில்லை. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு தேவியின் காட்சியை ஒருவர் காண விரும்பினால், அந்தத் தேவியினால் காட்சியை அருள முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே, எனக்கொரு காட்சியை அருளுங்கள்! தந்தை கூறுகின்றார்: நாடகத்தில் அது நிச்சயிக்கப்பட்டிருந்தால், அது நிகழும். நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டவன் ஆவேன். பாபா கூறுகின்றார்: நான் இந்த உலகிற்குள் வந்துள்ளேன். நான் இவரின் வாயின் மூலமாகப் பேசுகின்றேன். நான் இவரின் கண்களால் உங்களைப் பார்க்கின்றேன். இந்தச் சரீரம் இங்கில்லாமல் இருந்தால், எவ்வாறு நான் உங்களைப் பார்க்க முடியும்? நான் நிச்சயமாக இந்தத் தூய்மையற்ற உலகிற்கே வரவேண்டும். இருப்பினும் நான் சுவர்க்கத்திற்கு அழைக்கப்படுவதில்லை. நான் சங்கமத்தில் மாத்திரமே அழைக்கப்படுகின்றேன். சங்கமத்தின் போது, நான் வந்து ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்கின்றேன். அப்பொழுதே நான் உங்களைப் பார்க்கின்றேன். அசரீரியாக இருக்கும் போது என்னால் எதனையும் பார்க்க முடியாது. ஓர் ஆத்மாவினால் அங்கங்கள் இல்லாது எதனையும் செய்ய முடியாது. பாபா கூறுகின்றார்: என்னால் எப்படிப் பார்க்க முடியும்? ஒரு சரீரம் இல்லாது என்னால் எப்படி நகரவோ அல்லது பேசவோ முடியும்? ‘கடவுள் அனைத்தையும் பார்க்கின்றார், அவரே அனைத்தையும் செய்கின்றார்’ என்று கூறுவது குருட்டு நம்பிக்கை ஆகும். அவரால் எப்படிப் பார்க்க முடியும்? அவர் அங்கங்களைப் பெறும் போதே அவரால் பார்க்க முடியும். தந்தை கூறுகின்றார்: அனைவரும் நாடகத்திற்கு ஏற்ப நல்ல, தீய செயல்களைச் செய்கின்றார்கள். அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் பல மில்லியன் ஆத்மாக்களின் கணக்கை வைத்துக் கொண்டிருப்பதில்லை. எனக்கொரு சரீரம் இருக்கும் போதே நான் அனைத்தையும் செய்கின்றேன். அப்பொழுதே அவர்கள் என்னை ‘கரன்கரவன்ஹார்’ என்று அழைக்கின்றார்கள். இல்லையேல் அவர்களால் என்னை அவ்வாறு அழைக்க முடியாது. நான் இவரினுள் பிரவேசிக்கும் போதே என்னால் தூய்மையாக்க முடியும். ஓர் ஆத்மாவினால் மேலிருந்தவாறே என்ன செய்ய முடியும்? ஒரு சரீரத்தின் மூலமே அவரால் ஒரு பாகத்தை நடிக்க முடியும். நானும் இங்கு வந்து ஒரு பாகத்தை நடிக்கின்றேன். எனக்கு சத்தியயுகத்தில் ஒரு பாகம் இல்லை. ஒரு பாகம் இல்லாமல், எவராலும் எதனையும் செய்ய முடியாது. ஒரு சரீரம் இல்லாமல் ஓர் ஆத்மாவினால் எதனையும் செய்ய முடியாது. ஓர் ஆத்மா வரவழைக்கப்படும் போது, அவர் ஒரு சரீரத்தில் பிரவேசித்தால் மாத்திரமே அவரால் பேச முடியும். அங்கங்கள் இல்லாது எவராலும் எதனையும் செய்ய முடியாது. இதுவே விபரமான விளக்கமாகும். இருப்பினும், உங்களுக்குக் கூறப்பட்டிருக்கும் பிரதான விடயம்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! எல்லையற்ற தந்தை மிகவும் மகத்துவமானவர்! நீங்கள் ஏதோ ஒரு நேரத்தில் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றிருக்க வேண்டும். இதனை எவரும் அறியார். அவர்கள் அழைக்கின்றார்கள்: வந்து எங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுங்கள். ஆனால் எப்பொழுது? எவரும் இதனை அறியார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அமரத்துவமானவராக ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் எத்தனை தடவைகள் அமரத்துவ உலகிற்குச் சென்றிருப்பீர்கள்? எண்ணற்ற தடவைகள். இதற்கு என்றுமே முடிவில்லை. பலரும் வினவுகின்றார்கள்: எங்களால் முழுமையான விடுதலையைப் பெற முடியாதா? அவர்களிடம் கூறுங்கள்: இல்லை. இது ஆதியான, அநாதியான நாடகம். அதனை என்றுமே அழிக்க முடியாது. இந்த அநாதியான சக்கரம் நிச்சயமாகத் தொடர்ந்து சுழல்கின்றது. இந்த நேரத்தில் மாத்திரமே உங்களுக்கு உண்மையான பிரபுவைத் தெரியும். நீங்கள் சந்நியாசிகள். அந்த பக்கிரிகள் (ஆண்டிகள்) அல்ல. சந்நியாசிகளை பக்கிரிகள் என்றும் அழைக்கலாம். நீங்கள் இராஜரிஷிகள். ரிஷிகள் சந்நியாசிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் மீண்டும் செல்வந்தர் ஆகுகின்றீர்கள். பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது. அது இப்பொழுது வறுமையான நாடாகி விட்டது! எல்லையற்ற தந்தை வந்து, எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஒரு பாடலும் உள்ளது: பாபா, நீங்கள் கொடுப்பதை வேறு எவராலும் கொடுக்க முடியாது. நீங்கள் எங்களை உலக அதிபதிகளாக ஆக்குகின்றீர்கள். எவராலும் இதனை எங்களிடம் இருந்து கொள்ளை அடிக்க முடியாது. அத்தகைய பாடல்களை இயற்றுபவர்கள் அவற்றின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அங்கே பிரிவினைகள் போன்ற எதுவும் இருக்க மாட்டாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே, அதிகளவு பிரிவினைகள் உள்ளன! அங்கே, வானம், பூமி அனைத்தும் உங்களுக்கானது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். சிவபாபாவே பேசுகின்றார் என்று எப்பொழுதும் புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவர் ஒருபோதும் விடுமுறை எடுப்பதில்லை. அவர் என்றுமே நோய்வாய்ப்படுவதும் இல்லை. சிவபாபாவின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். அவர் அகங்காரம் அற்றவர் என்று அழைக்கப்படுகின்றார். ‘நான் இதனைச் செய்கின்றேன், நான் அதனைச் செய்கின்றேன்’ உங்களுக்கு இத்தகைய அகங்காரம் இருக்கக் கூடாது. சேவை செய்வது உங்கள் கடமை. இதில் அகங்காரம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அகங்காரம் வரும் பொழுது நீங்கள் வீழ்கின்றீர்கள். தொடர்ந்தும் சேவை செய்யுங்கள். இது ஆன்மீக சேவையாகும். ஏனைய அனைத்தும் பௌதீகமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு பிரதியுபகாரமாக மலர்கள் ஆகிக் காட்டுங்கள். முயற்சி செய்யுங்கள்! இறை குலத்தின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தாதீர்கள். ஞானம் நிறைந்தவர்களினதும் யோகிகளினதும் சகவாசத்தை மாத்திரமே வைத்திருங்கள்.

2. ‘நான்’ என்ற உணர்வைத் துறந்திடுங்கள். அகங்காரமற்றவர் ஆகி ஆன்மீகச் சேவை செய்யுங்கள். சேவை செய்வதை உங்கள் கடமையாகக் கருதுங்கள். அகங்காரம் கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையாக மரணித்து வாழ்ந்து, தூய நோக்கங்களுடனும் மேன்மையான உணர்வுகளுடனும் வீணானவை அனைத்தையும் மாற்றுவீர்களாக.

பாப்தாதாவின் ஸ்ரீமத் என்னவென்றால், குழந்தைகளே, வீணானவை எதையும் கேட்காதீர்கள், அல்லது வீணானவை எதையும் பேசாதீர்கள், அல்லது வீணானவை எதையும் சிந்திக்காதீர்கள். எப்போதும் தூய உணர்வுகளுடன் சிந்தித்து, புண்ணிய வார்த்தைகளைப் பேசுங்கள். வீணானவற்றையும் தூய நோக்கங்களுடன் கேளுங்கள். மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். அவை வார்த்தைகளின் பின்னாலுள்ள நோக்கங்களை மாற்றும். சதா உங்களின் நோக்கங்களையும் உணர்வுகளையும் மேன்மையானவையாக வைத்திருங்கள். உங்களை மாற்றுங்கள், மற்றவர்களை மாற்றுவதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். தன்னையே மாற்றுவது, மற்றவர்களை மாற்றுவதாக அமையும். ‘இதில், நான் முதலில் இருக்க வேண்டும்.’ மரணித்து வாழும் இந்த வாழ்க்கையில் மட்டுமே களிப்பு உள்ளது. இது மகாபலி எனப்படுகிறது. இதில் சந்தோஷமாக மரணியுங்கள். இவ்வாறு மரணிப்பது வாழ்வதாகும். இதுவே உண்மையான வாழ்க்கைத்தானம் ஆகும்.

சுலோகம்:
உங்களின் எண்ணங்களின் ஒருமுகப்படுத்தலால், மேன்மையான மாற்றம் துரித கதியில் இடம்பெற முடியும்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

ஒன்றுகூடலின் சக்தியால் எது தேவையோ அதை அடைய முடியும். ஒன்றுகூடலின் ஒற்றுமையின் ஞாபகார்த்தம், பஞ்ச பாண்டவர்கள் ஆகும். ஒற்றுமையின் சக்தியானது, ‘ஹா ஜி, ஹா ஜி’ எனக் கூறுவதால் காட்டப்படுகிறது. அவர்கள் தமது கருத்துக்களைக் கூறினார்கள். பின்னர் ஒற்றுமையின் பந்தனத்தால் தங்களைக் கட்டிக் கொண்டார்கள். இந்த ஒற்றுமையே வெற்றிக்கான வழிமுறை.