12.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுதே, தந்தை இப்பொழுது உங்களைப் பராமரித்து, கற்பித்து, அத்துடன் ஆலோசனைகளையும் கூறுகின்றார். ஆகையால் ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்தும் ஆலோசனை பெறுங்கள். அப்பொழுது மாத்திரமே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடையமுடியும்.
கேள்வி:
தண்டனையில் இருந்து விடுதலை அடைவதற்கு, நீண்ட காலத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி என்ன?பதில்:
பற்றை வென்றவர்கள் ஆகுவதாகும். உங்களுக்கு எவர்மீதும் எந்தப் பற்றும் இல்லாதிருக்க வேண்டும். உங்கள் இதயத்தை வினவுங்கள்: எனக்கு எவர்மீதாவது பற்றுள்ளதா? உங்கள் பழைய உறவினர் எவரும் இறுதியில் நினைவு செய்யப்படக்கூடாது. யோகசக்தியினால் உங்கள் கர்மக்கணக்குகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்யும்போதே, தண்டனை அனுபவம் செய்யாது, உயர்ந்ததோர் அந்தஸ்தை உங்களால் கோர முடியும்.ஓம் சாந்தி.
நீங்கள் யார் முன்னிலையில் இப்பொழுது அமர்ந்திருக்கின்றீர்கள்? பாப்தாதாவின் முன்னிலையில் ஆகும். நீங்கள் பாப் என்றும் தாதா என்றும் கூற வேண்டும். பாபாவும் (தந்தை) உங்கள் முன்னிலையில், இந்த தாதாவில் அமர்ந்திருக்கின்றார். நீங்கள் வெளியில் வாழும் போது, நீங்கள் உங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், நீங்கள் கடிதம் எழுதவும் வேண்டும். ஆனால் இங்கிருக்கும் போது, நீங்கள் அவருக்கு நேர்முன்னிலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் யாருடன் உரையாடுகின்றீர்கள்? பாப்தாதாவுடன் ஆகும். இவர்களே அதியுயர்ந்த இரு அதிகாரிகள் ஆவார்கள். பிரம்மா சரீரதாரியும் சிவன் அசரீரியானவரும் ஆவார்கள். அதி மேலான அதிபதியான தந்தையை நீங்கள் எவ்வாறு சந்திக்கின்றீர்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாக்குபவர் என்று கூறுகின்ற, எல்லையற்ற தந்தையின் முன்னிலையில் நீங்கள் இப்பொழுது நடைமுறை ரீதியாக அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தையே குழந்தைகளாகிய உங்களைப் பராமரிப்பதுடன் கற்பிப்பவரும் ஆவார். வீட்டில் இருக்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு உங்கள் குடும்பத்தினருடன் உரையாட வேண்டும் என்பதற்கான ஆலோசனையை பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், நீங்கள் அதிமேலான மனிதராக ஆகமுடியும். அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதே மனித உலகில் அதியுயர்ந்த அந்தஸ்தாகும். அவர்கள் முன்னர் வாழ்ந்தவர்கள். மக்கள் மேன்மையானவர்களிடம் சென்று, தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றார்கள். தூய்மையே இங்கு பிரதான விடயமாகும். மனிதர்கள் மனிதர்களே, ஆனால் உலக அதிபதிகளாக இருந்த மனிதர்களுக்கும் இன்றைய மனிதர்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. பாரதம் 5000 வருடங்களுக்கு முன்னர் அவ்வாறு இருந்தது. நாங்கள் உலக அதிபதிகளாக இருந்தோம். இவ்விடயங்கள் எதுவுமே வேறு எவரது புத்தியிலும் இல்லை. இவர்கூட இதையும் அறிந்திருக்கவில்லை. அவர் காரிருளில் இருந்தார். பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகின்றார், விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகின்றார் என்பதைத் தந்தை வந்து இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார். இவை வேறு எவராலும் விளங்கிக்கொள்ள முடியாத, மிகவும் ஆழமான களிப்பூட்டும் விடயங்களாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கற்பிக்க முடியாது. அசரீரியான தந்தையே வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, உங்களை சந்தோஷப்படுத்துகின்றேன். அதன் பின்னர் நான் எனது சத்தத்திற்கு அப்பாற்பட்ட உலகிற்குச் (நிர்வாணாதாம்) செல்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுகின்றீர்கள். இதில் செலவு செய்வதற்கு எதுவும் இல்லை. உங்களை ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரு சதமும் செலவு செய்யாது நீங்கள் 21 பிறவிகளுக்கு உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இருப்பினும், நீங்கள் இங்கு சிறிதளவு பணம் அனுப்புகின்றீர்கள், ஆனால் அது உங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகும். அவர்கள் முன்னய கல்பத்தில் தமது பொக்கிஷக் களஞ்சியத்தில் எவ்வளவு இட்டார்களோ அதேயளவை அவர்கள் மீண்டும் இப்பொழுது இடுவார்கள். அவர்கள் அதைவிட அதிகளவோ அல்லது குறைந்தளவோ இடப் போவதில்லை. இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. ஆகையால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எதனையிட்டும் கவலைப்படாமலே நாங்கள் மிகவும் மறைமுகமாக எங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். உங்கள் புத்தி இவ் விடயங்களைப் பற்றிக் கடைய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன், பற்றை வென்றவர்களாகவும் ஆக வேண்டும். இங்கே பற்றை வென்றவர்கள் ஆகுவதன் மூலம், அங்கே நீங்கள் பற்றை வென்ற அரசர் அரசிகள் ஆகுவீர்கள். இந்த பழைய உலகம் இப்பொழுது அழிய உள்ளதையும், நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆகையால் இங்குள்ள எதன் மீதும் நீங்கள் ஏன் பற்று வைக்க வேண்டும்? நோயுற்ற ஒருவர் இனிப் பிழைக்க மாட்டார் என ஒரு வைத்தியர் கூறினால், அதன் பின்னர் அவர் மீதுள்ள அனைத்து பற்றும் முடிவடைகின்றது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, வேறொன்றை எடுப்பார் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆத்மாக்கள் அழியாதவர்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கிய பின்னர், அச்சரீரம் அழிக்கப்பட்ட பின்னர், அவரை நினைவு செய்வதனால் என்ன பயன்? தந்தை கூறுகின்றார்: இப்பொழுது பற்றை வென்றவர் ஆகுங்கள். உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: எனக்கு எவர் மீதாயினும் பற்று உள்ளதா? பற்று இருக்குமாயின், இறுதியில் நீங்கள் நிச்சயமாக அவரை நினைவு செய்வீர்கள். எவ்வாறாயினும், இப்பொழுது உங்கள் பற்றை வெற்றி கொண்டால், உங்களால் அந்த அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குள் பிரவேசிப்பீர்கள். அது ஒரு பெரிய விடயமல்ல. தண்டனையை அனுபவம் செய்யாது, உயர்ந்த அந்தஸ்தை அடைவதே பெரிய விடயமாகும். உங்கள் கர்மக்கணக்கை யோக சக்தியினால் தீர்ப்பீர்களாயின், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யமாட்டீர்கள். உங்கள் பழைய உறவுமுறைகளேனும் நினைவு செய்யப்படல் ஆகாது. எங்கள் உறவுமுறைகள் இப்பொழுது பிராமணர்களுடன் உள்ளது. பின்னர், அது தேவர்களுடன் இருக்கும். இப்பொழுதுள்ள உறவுமுறைகளே அனைத்திலும் அதிமேலானது. நீங்கள் இப்பொழுது ஞானக்கடலான தந்தைக்கு உரியவர்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆகையாலேயே நீங்கள் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கம் என்ற இராச்சியத்தைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். இந்த இரதம் அவருக்கென நிச்சயிக்கப்பட்டது. பகீரத் (பாக்கிய இரதம்) பாரதத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். 84 பிறவிகள் என்ற ஏணியின் ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றிவர வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். 84 பிறவிச் சக்கரத்தில் இருந்து எவருமே விடுதலை அடைய மாட்டார்கள். ஏணியில் கீழே இறங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது என்பதையும், ஆனால் ஏறுவதற்கோ உங்கள் இறுதிப் பிறவியான ஒரு பிறவி மாத்திரமே உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆகையாலேயே நீங்கள் மூவுலகிற்கும் அதிபதிகள் என்றும், முக்காலத்தையும் அறிந்தவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மூவுலகிற்கும் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பது உங்களுக்கு முன்னர் தெரியுமா? நீங்கள் இப்பொழுது தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். அவர் உங்களுக்கு இக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். ஆகையாலேயே உங்களுக்கு அனைத்தும் புரிகின்றது. ஒருவர் பாபாவிடம் வரும் போது, பாபா அவரிடம் கேட்பதுண்டு: நாம் முன்னர் இதே ஆடையில், இதே கட்டடத்தில் சந்தித்துள்ளோமா? அவர் ‘ஆம், பாபா நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சந்திக்கின்றோம்’ என்று கூறினால், ஆசிரியர் நன்றாக விளங்கப்படுத்தி உள்ளார் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் முன்னிலையில் சுவர்க்கத்தின் மரங்களைப் பார்க்கின்றீர்கள். நீங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளீர்கள். தந்தை பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அவரின் குழந்தைகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? அவர்களும் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாலே இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் முற்றிலும் தவறானவை. இதனை முன்னைய கல்பத்தில் புரிந்து கொண்டவர்களின் புத்தியிலேயே இது நிற்கும். கண்காட்சிகளுக்கு எத்தகையவர்கள் வருகின்றார்கள் எனப் பாருங்கள். பிறரிடம் செவிமடுத்த விடயங்கள் அவர்களிடம் இருப்பதால், அவர்கள் இவை அனைத்தும் உங்களது கற்பனை என்று கூறுகின்றார்கள். எனவே அவர்கள் எமது குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். பல வகையான மக்கள் உள்ளனர். விருட்சத்தினதும், நாடகத்தினதும் 84 பிறவிச் சக்கரத்தினதும் ஞானம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், அதுவும் நாடகத்திற்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்பதில் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தால் நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்றிருக்கக் கூடாது. இல்லை. இப்பொழுது, அவ்வாறு கூறுதல் பிழையாகும். நாடகத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்களால் தந்தையின் மீது அன்பு கொண்டிருக்க முடியாது. நாடகத்தின் முக்கியத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டதால், நீங்கள் வீழ்ந்து விடுகின்றீர்கள். அதன் பின்னர் அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. பல வகையான தடைகள் உருவாகும். அவற்றையிட்டு நீங்கள் அக்கறை கொள்ளக் கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்ற நல்ல விடயங்களை செவிமடுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். 84 பிறவிச் சக்கரம் முடிவடைகின்றது என்றும் நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. இவ்வாறாக உங்களுடன் உரையாடுங்கள். எவரும் தூய்மையற்றவராக வீடு திரும்ப முடியாது. முதலில், மணவாளன் தேவை, அதன் பின்னர் திருமண ஊர்வலம் உள்ளது. ‘கள்ளங்கபடமற்ற பிரபுவின் திருமண ஊர்வலம்’ என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. அனைவரும் வரிசைக்கிரமமாக வீடு திரும்புவார்கள். அத்தகைய ஆத்மாக்களின் கூட்டம் எவ்வாறு வரிசைக்கிரமமாகச் செல்ல முடியும்? மக்கள் இந்தப் பூமியில் அதிகளவு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகளவு தளபாடங்கள், சொத்துக்கள் போன்றன தேவைப்படுகின்றன. ஆனால் ஆத்மாக்களோ புள்ளிகள். ஓர் ஆத்மாவிற்கு என்ன தேவை? எதுவுமே தேவையில்லை! ஓர் ஆத்மாவிற்கு மிகச் சிறிய இடம் போதுமானது. இந்தப் பௌதீக விருட்சத்திற்கும், அசரீரி விருட்சத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. அது ஒளிப்புள்ளிகளின் மரமாகும். தந்தை இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கச் செய்கின்றார். உலகத்தில் உங்களைத் தவிர வேறு எவராலும் இவ் விடயங்களை செவிமடுக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்கள் வீட்டையும் உங்கள் இராச்சியத்தையும் ஞாபகப்படுத்துகின்றார். படைப்பவரை அறிந்து கொள்வதனால், குழந்தைகளாகிய நீங்கள் முழுச் சக்கரத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் முக்காலத்தையும் அறிந்துள்ள ஆஸ்திகர்களாகவும் ஆகியுள்ளீர்கள். முழு உலகிலும் வேறு ஆஸ்திகர் எவருமே இல்லை. ஏனைய கல்விகள் எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் இக்கல்வி எல்லையற்றது. அங்கே உங்களுக்குக் கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இங்கோ உங்களுக்குக் கற்பிப்பதற்கு ஒரேயொரு அற்புதமான ஆசிரியரே உள்ளார். அவரே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். அவர் முழு உலகிற்குமான ஆசிரியர் ஆவார். ஆனால் அனைவரும் இதனைக் கற்கின்றார்கள் என்றில்லை. அனைவரும் தந்தையை அறிந்திருப்பார்களாயின், பலரும் பாப்தாதாவை சந்திப்பதற்கு ஓடோடி வருவார்கள். தந்தை கொள்ளுப்பாட்டனாரான ஆதாமிற்குள் பிரவேசித்துள்ளார். அனைவரும் இதனைக் கேட்பார்கள் ஆயின், அனைவரும் இங்கே ஓடோடி வருவார்கள். யுத்தம் ஆரம்பமாகும் பொழுது, தந்தை வெளிப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் எவராலும் வர முடியாது. பல சமயங்கள் அனைத்துமே அழிய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதலில், பாரதம் மாத்திரமே இருந்தது, வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. பக்தி மார்க்கத்திற்கான விடயங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஏனெனில் உங்களால் அவற்றை மறக்க முடியவில்லை. அவற்றை நினைவு செய்யும் அதேவேளை, பக்திமார்க்கம் நிறைவு அடைகின்றது என்பதையும், நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நாங்கள் இவ் உலகில் நிலைத்திருக்கப் போவதில்லை. நீங்கள் வீடு திரும்ப உள்ளீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். இப்பொழுது, உங்கள் ஓய்வுக்கான ஸ்திதியில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிப்பதற்கு நீங்கள் இரு சதங்களே செலவழிக்கின்றீர்கள். அதனையும் முன்னய கல்பத்தில் செய்ததைப் போன்றே இப்பொழுதும் செய்கின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் இருந்தவர்களே. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்களும் முன்னைய கல்பத்தின் அதே அவரே. நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பாபாவுடன் கற்கின்றோம். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி மேன்மையானவர் ஆகவேண்டும். இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இருக்கமாட்டாது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், உங்கள் இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளது. தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள். நீங்கள் தூய்மை ஆகும் போது, முழு உலகமும் தூய்மை ஆகுகின்றது. அனைவரும் வீடு திரும்புவார்கள். வேறு எதனையிட்டும், அதாவது தண்டனை எவ்வாறு அனுபவம் செய்யப்படும், என்ன நடக்கும் என நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? அதனுடன் எங்களுக்கென்ன சம்பந்தம்? எங்களுக்கான முயற்சியைச் செய்வதிலேயே நாம் அக்கறை கொண்டிருக்க வேண்டும். ஏனைய சமயங்களின் விடயங்கள் பற்றி நாங்கள் ஏன் அக்கறை கொண்டிருக்க வேண்டும்? நாங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்கு உரியவர்கள். இந்தப் பூமி இந்துஸ்தான் என்று பெயரிடப்பட்டு இருந்தாலும், அதன் உண்மையான பெயர் பாரதமாகும். இந்துசமயம் என்பது ஒரு சமயம் அல்ல. நாங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என நாங்கள் எழுதிய போதிலும், அவர்கள் எம்மை இந்துக்களின் பட்டியலிலேயே சேர்க்கின்றார்கள். ஏனெனில் தேவ தர்மம் எப்பொழுது இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. எவருமே இதனை புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது பல பிரம்மாகுமாரிகளும் பிரம்மாகுமார்களும் உள்ளார்கள். எனவே நாங்கள் ஒரு குடும்பத்தினர் ஆகியுள்ளோம். பிரம்மா மக்களின் தந்தையாவார். அவர் அனைவரதும் கொள்ளுப்பாட்டனார் ஆவார். முதலில் நீங்கள் பிராமணர்கள் ஆகுகின்றீர்கள், அதன் பின்னர் ஏனைய குலங்களை கடந்து வருகின்றீர்கள். இதுவே உங்களின் கல்லூரி அல்லது பல்கலைக்கழகமும், வைத்தியசாலையும் ஆகும். சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுத்தபோது, அனைத்து அறியாமை என்ற இருளும் மறைந்தது என்று பாடப்பட்டுள்ளது. யோகசக்தி உங்களை என்றென்றும் ஆரோக்கியமாகவும், என்றென்றும் செல்வந்தராகவும் ஆக்குகிறது. மக்கள் இயற்கை வைத்தியம் செய்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சுகப்படுத்தப்படுவதால், உங்கள் சரீரமும் சுகப்படுத்தப்படும். இதுவே ஆன்மிக இயற்கை வைத்தியமாகும். நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தை பெறுகின்றீர்கள். ஆன்மீக இயற்கை வைத்தியம் என்ற பெயரை மேலே எழுதுங்கள். மனிதரை தூய்மை ஆக்குவதற்கான வழிமுறைகளை எழுதுவதில் தவறில்லை. ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள், ஆகையாலேயே அவர்கள் அழைக்கின்றார்கள். ஆத்மாக்கள் முதலில், தூய்மையாகவும் சதோபிரதானாகவும் இருந்தார்கள். பின்னரே அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு தூய்மை ஆக முடியும்? கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! என்னை நீங்கள் நினைவு செய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். பாபா இதனைச் செய்வதற்கு பல வழிகளைக் காட்டுகின்றார். அதற்கேற்ற ஒரு அறிவித்தல் பலகையை இடுங்கள். அத்தகைய ஒரு அறிவித்தல் பலகையை எவருமே இதுவரை இடவில்லை. பிரதான படங்கள் உள்ளன. ஒருவர் உள்ளே வரும் போது ‘நீங்கள் ஓர் ஆத்மாவும் பரந்தாமவாசியும்’ என அவரிடம் கூறுங்கள். உங்கள் பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் இங்கே இந்த அங்கங்களைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்கள் சரீரம் அழியக் கூடியது. தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழியும். இந்த நேரத்தில் நீங்கள் ஓர் தூய்மையற்ற ஆத்மா ஆவீர்கள். நீங்கள் தூய்மையாகினால், உங்களால் வீடு திரும்ப முடியும். இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. முன்னைய கல்பத்தில் வந்தவர்கள் மீண்டும் வந்து மலர்கள் ஆகுவார்கள். இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் நல்ல விடயங்களையே எழுதுகின்றீர்கள். அந்த குருமார்கள் மந்திரங்களைக் கூறுகின்றார்கள். தந்தையும் ‘மன்மனாபவ’ என்ற மந்திரத்தைக் கொடுத்து, படைப்பவரதும் படைப்பினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இல்லறத்தில் வாழும் போதே, தந்தையை நினைவு செய்யுங்கள். பிறருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, ஒரு கலங்கரை விளக்கம் ஆகுங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் மறைமுகமாக அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தை ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றார் என்பதை அவர் அறிவார். குழந்தைகளாகிய நீங்களும் அவரைப் போன்றே ஆத்ம உணர்வில் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ‘சிவ சிவா’ என்று ஓதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும், ஏனெனில் உங்கள் தலைமீது பெரும் பாவச் சுமை உள்ளது. இந்த நினைவின் மூலமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். முன்னைய கல்பத்தில், இந்த ஆஸ்தியைக் கோரியவர்கள், தத்தமது நேரத்தில் தமது ஆஸ்தியை மீண்டும் கோருவார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. ஆத்ம உணர்வுடையவர் ஆகித் தந்தையை நினைவு செய்வதே பிரதானமாகும். அப்பொழுது மாயையினால் உங்களை அறைய முடியாது. நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும் போது, நீங்கள் ஏதோ ஒரு பாவச் செயலை அல்லது வேறொன்றைச் செய்வதால், நீங்கள் நூறு மடங்கு பாவத்தை சேர்த்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் ஏணியில் இறங்குவதற்கு 84 பிறவிகள் எடுத்துள்ளது. உங்கள் ஸ்திதி ஏறுவதற்கு இந்த ஒரு பிறவி மாத்திரமே உள்ளது. பாபா வந்துள்ளார். உயர்த்திகளும் இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்னர், நீங்கள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறினீர்கள். இப்பொழுது இலகுவாகச் செல்லக்கூடிய உயர்த்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கும் உங்களை முக்திக்கும் ஜீவன்முக்திக்கும் ஒரு விநாடியில் எடுத்துச் செல்லக் கூடிய உயர்த்தி உள்ளது. நீங்கள் 5000 வருடங்களையும், 84 பிறவிகளையும் கடந்து பந்தன வாழ்வை அடைந்திருக்கின்றீர்கள். ஜீவன்முக்திக்கு செல்வதற்கு ஒரு பிறவியே எடுக்கின்றது. இது மிக இலகுவானது! உங்களுக்குப் பின்னர் வருகின்றவர்களால் விரைவாக ஏற முடியும். தொலைத்தவற்றை மீண்டும் கொடுப்பதற்கே தந்தை வந்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆகையால் அவர்கள் நிச்சயமாக அவரது வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எதனையிட்டும் கவலைப்படாது, ஸ்ரீமத்தின் அடிப்படையில் மறைமுகமான உங்கள் இராச்சியத்தை ஸ்தாபியுங்கள். தடைகளையிட்டு அக்கறை கொள்ளாதீர்கள். முன்னைய கல்பத்தில் உதவி செய்தவர்கள், மீண்டும் உதவி செய்வார்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும். எதனையிட்டும் கவலைப்படாதீர்கள்.2. இப்பொழுது இது எங்களின் ஓய்விற்கான ஸ்திதி என்பதையும் நாங்கள் வீடு திரும்ப உள்ளோம் என்பதையிட்டும் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு மறைமுகமாக மிகவும் நன்றாக முயற்சி செய்யுங்கள். எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் புத்திகளில் முழுமையான நம்பிக்கை வைத்து, எந்தவிதமான பயங்கரமான பிரச்சனையையும் சாந்தப்படுத்துவீர்களாக.உங்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருப்பதைப் போல், உங்களிலும் நாடகத்திலும் முழுமையான நம்பிக்கை வையுங்கள். உங்களில் ஏதாவது பலவீனமான எண்ணங்கள் தோன்றுமாயின், அவை பலவீனமான சம்ஸ்காரங்களை உருவாக்கும். ஆகவே, வீணான எண்ணங்களின் எந்தவிதமான பலவீனமான கிருமிகளும் உங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள். அதேவேளை, நீங்கள் பார்க்கும் நாடகத்தின் எந்தக் காட்சிகளிலும் அவை குழப்பமான காட்சிகளாக இருந்தாலும் நன்மையை அனுபவம் செய்யுங்கள். உங்களை அசைக்கும் சூழல் வந்தாலும் பயங்கரமான பிரச்சனைகள் வந்தாலும் உங்களின் புத்தியில் முழுமையான நம்பிக்கை வைத்து சதா வெற்றி பெறுங்கள். அப்போது பயங்கரமான பிரச்சனைகளும் சாந்தம் அடையும்.
சுலோகம்:
தந்தையையும் சேவையையும் நேசிப்பவர்கள், இயல்பாகவே குடும்பத்தின் அன்பையும் பெறுவார்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
வெவ்வேறு மதங்கள் எல்லாவற்றிலும் இறைவன் ஒருவரே என்ற நம்பிக்கை இருப்பதைப் போல், ஒரேயொரு உண்மையான ஞானத்தின் கடவுள் இருக்கிறார், அதாவது, ஒரேயொரு பாதையே இருக்கிறது என்ற சத்தம் பரவும்போது, பல வகையான சிறிய ஆதாரங்களை நோக்கி ஆத்மாக்கள் அலைபாய்வது முடிவிற்கு வந்துவிடும். இதுவும் பல பாதைகளில் ஒன்றே, இது நல்லதொரு பாதைதான் என மக்கள் இப்போது நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இறுதியில் ஒரேயொரு தந்தையின் ஒரேயொரு அறிமுகமும் ஒரேயொரு பாதையும் மட்டுமே இருக்கும். சத்தியத்தின் இந்த அறிமுகத்தின் அலையையும் இந்த உண்மையான ஞானத்தின் சக்தியையும் பரப்புங்கள். ஆத்மாக்கள் அனைவராலும் வெளிப்படுத்தலின் கொடியின் கீழ் ஆதாரத்தை எடுக்க முடியும்.