12.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களின் இந்தப் பிராமண குலம் தனித்துவமானது. பிராமணர்களாகிய நீங்களே ஞானம் நிறைந்தவர்கள். உங்களுக்கு இப்பொழுது கியான் (ஞானம்), விக்கியான் (ஞானம் அல்லது யோகத்திற்கு அப்பாற்பட்டிருத்தல்), அக்கியான் (அறியாமை) பற்றித் தெரியும்.
கேள்வி:
உங்கள் இதயம் ஏனைய அனைத்தில் இருந்தும் விலகியிருப்பதற்கு குழந்தைகளாகிய நீங்கள் எந்த இலகுவான முயற்சியைச் செய்ய வேண்டும்?பதில்:
நீங்கள் ஆன்மீக வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஆன்மீகச் சேவையைச் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் இதயம் இயல்பாகவே ஏனைய அனைத்தில் இருந்தும் விலகிவிடுவதால் நீங்கள் இராச்சியத்தைக் கோருவதற்கான முயற்சி செய்வதில் மும்முரமாகி விடுவீர்கள். எனினும் இந்த ஆன்மீகச் சேவையுடன் நீங்கள் உருவாக்கியுள்ள உங்கள் படைப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்களுக்கே ஞான மழை பொழிகிறது.ஓம் சாந்தி.
தந்தையே அன்பிற்கினியவர் என அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு சந்நியாசியின் முன்னாலோ அல்லது ஒரு சாதுவின் முன்னாலோ அமர்ந்திருக்கவில்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்தத் தந்தை ஞானக்கடல் ஆவார். ஞானத்தின் மூலமே சற்கதி கிடைக்கின்றது. மக்கள் கியான், விக்கியான், அக்கியான் பற்றிப் பேசுகிறார்கள். விக்கியான் என்றால் ஆன்மீக உணர்வுடையவராகி நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதாகும். கியான் என்றால் எவ்வாறு உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதன் ஞானமாகும். மக்கள் கியான், விக்கியான், அக்கியான் என்பனவற்றின் உண்மையான அர்த்தத்ததை சற்றேனும் அறியாமல் உள்ளனர். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள். உங்களின் இந்தப் பிராமண குலம் தனித்துவமானது. எவருக்குமே இது தெரியாது. பிராமணர்கள் சங்கம யுகத்திலே இருக்கின்றார்கள் என்பது சமயநூல்களில் கூறப்படவில்லை. பிரஜாபிதா பிரம்மா கடந்த காலத்திலே இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருப்பதாலேயே அவர் ஆதிதேவ் (முதலாவது தேவர்) என்றும் அழைக்கப்படுகின்றார். அவ்வாறாயின் ஆதிதேவி ஜெகதாம்பாள் (உலகத்தாய்) யார்? இதனை உலகில் உள்ள எவருமே அறிய மாட்டார்கள். அவர் நிச்சயமாக பிரம்மாவின் வாய் வழித்தோன்றலாகவே இருக்கவேண்டும். ஜெகதாம்பாள் பிரம்மாவின் மனைவி அல்ல, அவர் தத்தெடுக்கப்பட்டவர். குழந்தைகளாகிய நீங்களும் தத்து எடுக்கப்பட்டவர்களே. பிராமணர்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. இங்கு பிரம்மாவுக்கென ஓர் ஆலயம் உண்டு. அவரும் ஒரு மனிதரே. பிரம்மாவுடன் சரஸ்வதியும் உள்ளார். பின்னர் பெண் தெய்வங்களுக்கும் ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் மனிதர்களே. அவர்கள் ஒருவருக்கே ஆலயத்தை உருவாக்கி உள்ளார்கள். பிரஜாபிதா (மக்களின் தந்தை) இருப்பதால் பலர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இப்பொழுது உருவாக்கப்படுகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குலம் இப்பொழுது அதிகரிக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். இப்பொழுது எல்லையற்ற தந்தையே உங்களைத் தத்து எடுத்துள்ளார்; பிரம்மாவும் எல்லையற்ற தந்தையின் குழந்தை ஆவார். அவரும் தனது ஆஸ்தியை அந்த ஒருவரிடமிருந்தே பெறுகின்றார். நீங்களும் அந்த ஒருவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்ற பேரன்களும் பேத்திகளும் ஆவீர்கள். எவரிடமும் இந்த ஞானம் இல்லை, ஏனெனில் தந்தை ஒருவரே ஞானக்கடல் ஆவார். தந்தை வரும் வரை எவருமே சற்கதியைப் பெற முடியாது. நீங்கள் இப்பொழுது பக்தியைக் கைவிட்டு சற்கதியைப் பெறுவதற்காக இந்த ஞானத்திற்கு வந்திருக்கின்றீர்கள். சத்தியயுகம் சற்கதி என அழைக்கப்படுகின்றது. கலியுகம் இராவண இராச்சியம் என்பதால் சீரழிவானது என அழைக்கப்படுகின்றது. சற்கதி இராமரின் இராச்சியமாகும்; அது சூரிய வம்சம் எனவும் அழைக்கப்படுகிறது. சூரிய வம்சம், சந்திர வம்சம் என்பதே மிகச்சரியான பெயர்களாகும். முதலில் நீங்கள் சூரிய வம்ச குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் எனவும் நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் எனவும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த ஞானம் எந்த சமயநூல்களிலும் இருக்க முடியாது. ஏனெனில் சமயநூல்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. அம்மக்கள் தங்களுடைய சம்ஸ்காரங்களுடன் சென்று அவ்விடயங்களை அங்கே உருவாக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் ஆட்சிபுரியும் சம்ஸ்காரங்களினால் நிரம்பி இருக்கின்றீர்கள். நீங்கள் அங்கு ஆட்சி செய்வீர்கள். அந்த விஞ்ஞானிகள் தங்களிடமுள்ள திறமைகளை அந்த இராச்சியத்தில் பயன்படுத்துவார்கள். அவர்கள் நிச்சயமாகச் சூரிய, சந்திர வம்சங்களுக்குள் செல்வார்கள். அவர்கள் விஞ்ஞானத்தின் அறிவைக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சம்ஸ்காரங்களையே அவர்கள் எடுத்துச் செல்வார்கள்; அவையும் சம்ஸ்காரங்களே. அவர்களும் முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு அந்த ஞானம் உள்ளது. உங்களிடம் வேறு எந்த ஞானமும் இல்லை. நீங்கள் தந்தையிடம் இருந்து இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் இன்னமும் அச்சம்ஸ்காரங்கள் உள்ளன. அதிகளவு முரண்பாடு உள்ளது. எனினும் நீங்கள் ஓய்வு ஸ்திதியை அடையும் வரை நீங்கள் உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் உங்கள் குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? அவர்களால் இங்கு வந்து தங்கியிருக்க முடியாது. நீங்கள் இந்த வியாபாரத்தில் மும்முரமாகும் பொழுது ஏனைய அனைத்தில் இருந்தும் விடுபட முடியும் என உங்களுக்குக் கூறப்படுகின்றது. எனினும் இவ்வியாபாரத்துடன் உங்கள் படைப்புக்களையும் நீங்கள் பராமரிக்க வேண்டும். ஆம், ஆன்மீகச் சேவையில் மும்முரமாக இருப்பவர்களின் இதயம் ஏனைய விடயங்களில் இருந்து விடுபட்டு விடும். “இந்த ஆன்மீகச் சேவைக்கு எந்தளவு அதிக நேரம் செலவிடுகிறேனோ, அந்தளவிற்கு நல்லது” என அவர்கள் நினைப்பார்கள். தந்தை தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாக மாறுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுவதற்கே வந்துள்ளார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்தச் சேவையைச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருடைய கணக்கும் கவனிக்கப்படும். எல்லையற்ற தந்தை தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாக மாறுவதற்கான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் தூய்மை ஆகுவதற்கான வழியை மாத்திரம் காட்டுகின்றார். ஆனால் இவரின் வியாபாரமோ அனைத்தையும் கவனித்துக் கொள்வதுடன் ஆலோசனை போன்றவற்றையும் கொடுப்பதாகும். சிவபாபா கூறுகின்றார்: உங்கள் வியாபாரம் போன்றவற்றைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். உங்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள், அதனை நான் இவரின் மூலமாகச் செய்கின்றேன். இவரும் உங்கள் தந்தை என்பதால் நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவரின் வழிகாட்டல்கள் ஆன்மீகமானவைஇ இவருடையது பௌதீகமானது. இவருக்கும் அதிகளவு பொறுப்புக்கள் உள்ளன. அவர் தொடர்ந்தும் கூறுகின்றார்: பாபாவை சதா நினைவுசெய்வதே அவரின் வழிகாட்டலாகும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். எனினும் குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு உங்கள் வேலைகளை மேற்கொள்வது என்பது பற்றிக் கேட்க விரும்பினால் அத்தகைய விடயங்களை பௌதீக பாபா உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துவார். இவர் அனுபவசாலி, அத்துடன் இவர் எவ்வாறு பணியாற்றுகின்றார் என்பதைப் பற்றிய அனைத்தையும் உங்களுக்குக் கூற முடியும். இவரை அவதானிப்பதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஏனெனில் இவர் அனைவரையும் விட முன்னிலையில் உள்ளார். அனைத்துப் புயல்களும் முதலில் இவருக்கே வரும். இதனாலேயே இவர் அனைவரையும் விட அதிகளவு சக்தி வாய்ந்தவர். அதனாலேயே அவர் அதி உயர்ந்த அந்தஸ்தையும் கோருகின்றார். மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள், அவள் உங்களுடன் போர் புரிகின்றாள். இவர் உடனடியாகவே அனைத்தையும் துறந்தார். அது அவரது பாகத்தில் உள்ளது. பாபா அவரைச் செய்ய வைத்தார். அவர் கரன்கரவன்ஹார். இவர் அனைத்தையும் சந்தோஷத்துடன் துறந்தார். இவர் தான் உலக அதிபதியாக ஆகுவதாக ஒரு காட்சியைக் கண்டார்; ஆகவே ஒரு சில சதங்களே பெறுமதியான விடயங்களை வைத்துக் கொண்டு இவர் என்ன செய்வார்? அவருக்கு விநாசத்தின் காட்சியும் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் இப்பழைய உலகம் அழிக்கப்படப் போகின்றதென அவர் புரிந்துகொண்டார். அவர் தான் மீண்டும் ஒருமுறை ஓர் இராச்சியத்தைப் பெறப் போவதாகப் புரிந்து கொண்டதனால் உடனடியாகவே அந்த வியாபாரம் அனைத்தையும் துறந்து விட்டார். இப்பொழுது நான் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! நாடகத்திற்கேற்ப இந்த பத்தி உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் அனைவரும் ஏன் ஓடி வந்தீர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. இவர் ஒரு சாதுவோ புனிதரோ அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர். அவர் எவரையும் பலாத்காரமாகக் கடத்திச் செல்லவில்லை. புகழ் ஒரு மனிதருக்குச் சொந்தமானதல்ல.அந்தப் புகழ் தந்தை ஒருவருக்கே உரியது; அவ்வளவு தான்! தந்தையே வந்து அனைவருக்கும் சந்தோஷத்தை அளிக்கின்றார். அவரே உங்களுடன் பேசுகின்றார். நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்கள்? உங்கள் புத்தி மேலே அங்கேயும் அத்துடன் இங்கேயும் செல்கின்றது. ஏனெனில் சிவபாபா அந்த இடத்தில் வசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அவர் இவரின் சரீரத்தில் பிரவேசித்துள்ளார். நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றோம். நிச்சயமாகக் கலியுகத்தின் பின்னர் சுவர்க்கம் வருகின்றது. கிருஷ்ணரும் அவரது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்தே பெற்று அங்கு சென்று ஆட்சிபுரிவார். அதில் தெய்வீகச் செயல்களுக்கான கேள்வி எதுவுமில்லை. அது ஓர் அரசருக்கு ஓர் இளவரசர் பிறந்தது போன்று இருக்கும். அவர் பாடசாலையில் கற்ற பின்னர் வளர்ந்ததும் சிம்மாசனத்தைப் பெறுகிறார். அதில் புகழ்ச்சி அல்லது தெய்வீகச் செயல்கள் என்ற கேள்வி எதுவுமே இல்லை. தந்தை ஒருவர் மாத்திரமே அதி மேலானவர். அந்தப் புகழும் அவருக்கு மட்டுமே உரியது. இவர் அவரது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நான் (பிரம்மா) இதனைக் கூறுகின்றேன் எனக் கூறினால் நான் என்னையே குறிப்பிடுகின்றேன் என மக்கள் நினைப்பார்கள். மனிதர் எவரையும் கடவுள் என அழைக்க முடியாது எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அசரீரியான ஒருவரே கடவுள் ஆவார். அவர் பரந்தாமத்தில் வசிக்கின்றார். உங்கள் புத்திகள் மேலே சென்று கீழே இங்கே வருகின்றன. பாபா தொலைதூரத்திலிருந்து இந்த அந்நிய தேசத்திற்குள் வருகின்றார்; அவர் எங்களுக்குக் கற்பித்த பின் மீண்டும் வீட்டிற்குச் சென்று விடுகின்றார். அவரே கூறுகின்றார்: நான் ஒரு வினாடியில் வருகின்றேன்; இதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. ஆத்மாக்களும் தங்கள் சரீரங்களை நீக்கிவிட்டு ஒரு விநாடியில் இன்னொன்றுக்குள் பிரவேசிக்கின்றார்கள். எவராலுமே இதனைப் பார்க்க முடியாது. ஆத்மாக்கள் மிகவும் விரைவாகச் செல்பவர்கள். ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ என்பது நினைவு கூரப்படுகின்றது. இராவண இராச்சியத்தைப் பந்தன பூமி என அழைக்கின்றார்கள். அங்கு ஒரு பந்தன வாழ்வே உள்ளது. ஓர் ஆண் குழந்தை பிறக்கும்பொழுது அவர் தனது தந்தையின் ஆஸ்தியைப் பெறுகின்றார். நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டதால் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனினும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப ஓர் அந்தஸ்தை வரிசைக்கிரமமாகப் பெறுகிறீர்கள். தந்தை தொடர்ந்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இரு தந்தையர் உள்ளார்கள்: ஒருவர் இவ்வுலகத்தவர், மற்றைய ஒருவர் இவ்வுலகிற்கு அப்பாற்பட்டவர். “அனைவரும் கடவுளைத் துன்ப வேளையிலே நினைவுசெய்கிறார்கள். ஆனால் அவரை எவருமே சந்தோஷத்தின் பொழுது நினைவு செய்வதில்லை” என மக்கள் பாடுகின்றார்கள். நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்தபொழுது அவரை நினைவு செய்யவில்லை என்பதை பாரத மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் 84 பிறவிகளையும் எடுத்து வரும்போது ஆத்மாக்களாகிய உங்களில் கலப்படம் கலந்து உங்கள் சுவர்க்கக் கலைகளும் குறைவடைந்தன: முழுமையான 16 சுவர்க்கக் கலைகளுடன் தூய்மையாக இருந்த நீங்கள் இரு கலைகளை இழந்து விட்டீர்கள். இராமர் குறைந்த புள்ளிகளுடன் சித்தி அடைந்ததால் அவர் அம்புடனும் வில்லுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஒரு வில்லை முறிக்கவில்லை. அவர்கள் ஓர் அடையாளத்தையே காட்டியுள்ளார்கள். அந்த விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிகளவில் அலைந்து திரிகின்றார்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே உங்கள் அலைந்து திரிதல் முடிவடைந்து விட்டது. “ஓ சிவபாபா!” எனக் கூறுவது, அழைப்பது என்றே அர்த்தப்படும். அத்தகைய வார்த்தைகளை நீங்கள் கூறக்கூடாது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அழைக்கிறீர்கள் என்றால் உங்களிடம் பக்தியின் ஒரு சிறு சுவடு உள்ளது என்றே அர்த்தமாகும். “ஓ கடவுளே” எனக் கூறுவது பக்திக்குரிய பழக்கமாகும். “ஓ கடவுளே” எனக் கூறி பாபாவை நினைவு செய்யுமாறு அவர் உங்களிடம் கூறவில்லை. அவர் கூறுகின்றார்: அகநோக்குடையவராகி என்னை நினைவுசெய்யுங்கள். தொடர்ந்தும் நீங்கள் உச்சாடனம் செய்யக்கூடாது. “ஓதுதல்” என்ற வார்த்தையும் பக்தி மார்க்கத்திற்கு உரியதாகும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஒரு பௌதீகக் குழந்தை தனது பௌதீகத் தந்தையை நினைப்பதைப் போன்று தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர் சரீர உணர்விலே தனது சரீரத் தந்தையை நினைக்கின்றார். அப்பாலே உள்ள தந்தை ஆத்ம உணர்வுடையவர். அவர் இவரில் பிரவேசிக்கும் பொழுதும் கூட அவர் சரீர உணர்வு உடையவர் ஆகுவதில்லை. அவர் கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தைக் கடனாக எடுக்கின்றேன். உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காகவே நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். நான் ஞானக்கடல். எனினும் நான் எவ்வாறு உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும்? நீங்கள் ஒரு கருப்பைக்குள் பிரவேசிக்கின்றீர்கள். நான் ஒரு கருப்பையினுள் பிவேசிப்பதில்லை. எனது வழிமுறைகள் தனித்துவமானவை. தந்தை இவரில் பிரவேசிக்கின்றார் என்பது எவருக்குமே தெரியாது. “பிரம்மா மூலம் ஸ்தாபனை” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வாறு பிரம்மா மூலம் ஸ்தாபனை மேற்கொள்ளப்படுகிறது? அவர் இவருக்குத் தூண்டுதல்களைக் கொடுப்பாரா? தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்து அவருக்கு “பிரம்மா” எனப் பெயரிடுகின்றேன், ஏனெனில் அவர் அனைத்தையும் துறந்தார். இந்நேரத்தில் பிராமணர்கள் தொடர்ந்தும் விட்டுச் செல்வதால் அவர்களின் (பிராமணர்களின்) மாலையை உருவாக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இறுதியில் பிராமணர்களாகிய நீங்கள் தயாராகியதும் உருத்திர மாலை உருவாக்கப்படுகின்றது. பின்னர் நீங்கள் விஷ்ணுவின் மாலைக்குச் செல்கின்றீர்கள். அந்த மாலைக்குச் செல்வதற்கும் உங்களுக்கு நினைவு யாத்திரை தேவையாகும். முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் சென்றீர்கள் என்பதும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ‘ஹம்சோ, சோஹம்’ என்பதன் கருத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். “ஓம்” என்பதன் அர்த்தம் அதிலிருந்து வேறுபட்டது. “ஓம்” என்றால் “ஆத்மாவான நான்” என்று அர்த்தமாகும். பின்னர் ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு தேவராக இருந்து பின்னர் சத்திரியர் போன்றவர் ஆகுகின்றேன். எவ்வாறாயினும் அந்த மக்கள் (சந்நியாசிகள்) கூறுகின்றார்கள்: ஆத்மாவாகிய நானே பரமாத்மா. “ஓம்” என்பதற்கும் “ஹம்சோ” என்பதற்கும் உள்ள அர்த்தங்கள் முற்றிலும் வித்தியாசமானவை. நான் ஓர் ஆத்மா, இந்த ஆத்மா பல வித்தியாசமான குலங்களுக்கூடாகச் செல்லுகின்றார். ஆத்மாவாகிய நான் தேவராகி பின்னர் சத்திரியர் போன்றவர் ஆகுகின்றேன். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா ஆகுவதில்லை. அவர்களுக்கு இந்த முழுமையான ஞானம் இல்லாததினாலேயே அவர்கள் அர்த்தங்களைக் குழப்பியுள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நானே பிரம்ம தத்துவம். அதுவும் கூடப் பிழையே. தந்தை கூறுகின்றார்: நான் படைப்புக்களின் அதிபதி ஆகுவதில்லை. நீங்களே இந்தப் படைப்புக்களின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பிரம்மம் என்பது ஒளித் தத்துவமேயாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்தப் படைப்பின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு வேதங்களினதும் சமயநூல்களினதும் மிகச்சரியான அர்த்தத்தைக் கொடுக்கின்றார். இப்பொழுது தொடர்ந்தும் கற்றிடுங்கள். தந்தை தொடர்ந்தும் புதிய விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பக்தி என்ன கூறுகிறது? இந்த ஞானம் என்ன கூறுகிறது? பக்தி மார்க்கத்தில் நீங்கள் ஆலயங்கள் கட்டியும் விரதங்கள் பிடித்தும் தவம் செய்தும் உங்கள் பணத்தை வீணாக்கினீர்கள். பலர் உங்கள் ஆலயங்களைக் கொள்ளை அடித்தார்கள். அதுவும் நாடகத்தின் ஒரு பாகமே. நீங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள். இப்பொழுது அவர்கள் உங்களுக்கு எவ்வளவைத் திரும்பக் கொடுக்கின்றார்கள் எனப் பாருங்கள். நாளுக்கு நாள் அவர்கள் தொடர்ந்தும் தொகையை அதிகரிக்கின்றார்கள். நீங்கள் (பாரதம்) தொடர்ந்தும் அதனை வாங்குகின்றீர்கள். அவர்கள் எடுத்தவற்றை அனைத்தையும் முழுமையாகத் திரும்பக் கொடுப்பார்கள். உங்களிடமிருந்து எடுத்துச் சென்ற செல்வத்தை அவர்களால் பயன்படுத்த (ஜீரணிக்க) முடியாது. பாரத தேசம் அழிவற்றது. அது தந்தையின் பிறப்பிடம். தந்தை இங்கே மாத்திரமே வருகின்றார். அவர்கள் தந்தையின் தேசத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். எப்படி உங்களுக்குத் தேவையான பொழுது அது எவ்வாறு திரும்பவும் கொடுக்கப்படுகின்றது எனப் பாருங்கள். இவ்விடயங்களைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். விநாசம் எப்பொழுது இடம்பெறும் என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். அரசாங்கமும் இவ்விடயங்களை நம்புவதில்லை. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் கடன்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இப்பொழுது அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படுகின்றது. உங்கள் இராச்சியத்தில் இருந்து அவர்கள் பெருமளவு செல்வத்தை எடுத்தார்கள் எனவும் இப்பொழுது அதனை மீண்டும் கொடுக்கின்றார்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதனையிட்டு அக்கறைப்பட வேண்டியதில்லை. தந்தையை நினைவுசெய்தல் என்ற ஒரேயொரு அக்கறையை மட்டும் கொண்டிருங்கள். இந்த நினைவைக் கொண்டிருப்பதனாலேயே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சியிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து வழிகாட்டல்களைப் பெற வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த நேரத்தை ஆன்மீக வியாபாரத்தைச் செய்வதில் பயன்படுத்துங்கள். ஆன்மீக வியாபாரம் செய்யும் சம்ஸ்காரத்தைக் கிரகியுங்கள். தூய்மையற்றவற்றைத் தூய்மையாக்கும் சேவையைக் செய்யுங்கள்.2. அகநோக்கில் இருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். “ஓ கடவுளே!” என்னும் வார்த்தையை உபயோகிக்காதீர்கள். தந்தை ஆணவம் அற்றிருப்பதைப் போன்று நீங்களும் ஆணவம் அற்றவர்கள் ஆக வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒன்றிணைந்த சிவசக்தி ரூபத்தைக் கொண்டிருந்து உங்களின் மனோபாவத்தாலும் உங்களின் மனதிலுள்ள எண்ணங்களாலும் மேன்மையான அதிர்வலைகளின் நறுமணத்தைப் பரப்புவீர்களாக.தற்காலத்தில் பௌதீகமான பொருட்களின் உதவியால் ரோஜா, சந்தனம் போன்ற பல வகையான நறுமணங்களைச் சூழலில் பரப்புகிறார்கள். அதேபோல் நீங்கள் எல்லோரும் சிவன் மற்றும் சக்தி என்ற ஒன்றிணைந்த ரூபத்துடன் உங்களின் மனோபாவத்தாலும் உங்களின் மனதின் எண்ணங்களாலும் சந்தோஷம், அமைதி, அன்பு, ஆனந்தம் என்ற நறுமணங்களைப் பரப்புங்கள். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் வெவ்வேறு மேன்மையான அதிர்வலைகளை பன்னீர் தெளிகருவியைப் போல் நீர்ச்சிதறல்களைப் போல் ஆத்மாக்கள் எல்லோரின் மீதும் தெளியுங்கள். உங்களின் எண்ணங்கள் என்ற தானியங்கி ஆளியைப் போட்டு இந்த உலகின் தூய்மையற்ற மனோபாவங்கள் என்ற துர்நாற்றத்தை முடித்துவிடுங்கள்.
சுலோகம்:
சந்தோஷத்தை அருள்பவரிடம் இருந்து சந்தோஷத்தின் பொக்கிஷக் களஞ்சியத்தைப் பெற்றுக் கொள்வது அவரின் அன்பின் அடையாளம் ஆகும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
சக்திகளின் சக்தி இருப்பதைப் போல் பாண்டவர்களின் எல்லையற்ற சக்தியும் உள்ளது. இதனாலேயே நான்கு கரங்களைக் கொண்ட ரூபம் காட்டப்பட்டுள்ளது. சக்திகளினதும் பாண்டவர்களின் ஒன்றிணைந்த ரூபத்தால் மட்டுமே உலகச் சேவை என்ற பணி வெற்றி அடையும். அதனால் சதா ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். அத்துடன் சதா உங்களின் பொறுப்புக் கிரீடத்தையும் அணிந்து கொள்ளுங்கள்.