12.04.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.11.2009     Om Shanti     Madhuban


தந்தையாலும் உலகத்தாலும் நேசிக்கப்படுவதற்கு, ஒரு திருப்தி இரத்தினமாகி, எந்தவொரு சூழ்நிலையின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு இருங்கள்.


இன்று, பாபா எங்கும் உள்ள திருப்தி ஆத்மாக்களைப் பார்த்தார். திருப்தி இரத்தினங்கள், எங்கும் தமது இரத்தினங்களின் பிரகாசத்தைப் பரப்புகிறார்கள். அனைத்திலும் மகத்தான ஸ்திதி, திருப்தியே ஆகும். சதா திருப்தியாக இருப்பவர்கள், அனைவராலும் நேசிக்கப்படுகிறார்கள். நீங்கள் எப்படியும் தந்தையால் நேசிக்கப்படுகிறீர்கள். சகல பேறுகளையும் கொண்டிருப்பவர்கள், சதா திருப்தியாக இருப்பார்கள். திருப்திக்கான அடிப்படை, சகல பேறுகளையும் கொண்டிருப்பதாகும். இதனாலேயே, இத்தகைய ஆத்மாக்கள் சகல பிராமண ஆத்மாக்களாலும் நேசிக்கப்படுகிறார்கள். சகல பேறுகளையும் கொண்டிருத்தல் என்றால் சதா திருப்தியாக இருத்தல் என்று அர்த்தம். ஒரு திருப்தியான ஆத்மா, சூழலில் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறார். சகல பேறுகளும் இறைவனிடம் இருந்து பெறப்படும் ஒரு பரிசு ஆகும். இறைவனிடம் இருந்து சகல சக்திகள், சகல நற்குணங்கள், சகல பொக்கிஷங்களைப் பெற்ற ஆத்மாக்கள், சதா திருப்தியாக இருக்கிறார்கள். ஒரு திருப்தி ஆத்மாவின் ஸ்திதி சதா முன்னேறுகிறது. ஒரு திருப்தியான ஆத்மாவை சூழ்நிலைகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏனென்றால், எங்கே திருப்தி உள்ளதோ, அங்கே இயல்பாகவே சகல சக்திகளும் சகல நற்குணங்களும் இருக்கும். திருப்தி என்ற ஒரு நற்குணத்தால், ஏனைய பல நற்குணங்களைக் கவர முடியும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்க வேண்டும்: நான் சதா திருப்தியாக இருக்கும் ஓர் ஆத்மாவா? திருப்தியான ஆத்மா, எப்போதும் அனைவருக்கும் நெருக்கமாக இருப்பதுடன், தந்தைக்குச் சமமான ஸ்திதியையும் கொண்டிருப்பார். எவ்வாறாயினும், இந்த ஸ்திதியில் இருப்பதற்கு, நீங்கள் மிகவும் பற்றற்ற, திரிகாலதரிசி ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகையதோர் ஆத்மா, அவர் செய்யும் அனைத்திலும் திரிகாலதரிசி ஆவார். அதாவது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் அதன் மூன்று காலங்களையும் வேறுபிரித்தறிந்து, பின்னர் செயல்படுவார். இதற்கு, இரண்டு விடயங்கள் அவசியமாகும். உறவுமுறைகள் மற்றும் செல்வம் என்பவையே அந்த இரண்டு விடயங்கள். உறவுமுறைகள் அழியாதவை, செல்வம் அழியாதது. அவை அழியாத தந்தையிடம் இருந்து பெறப்படுகின்றன. ஆத்மாக்களான நீங்கள் அழியாத செல்வத்தையும் உறவுமுறைகளையும் பெற்றிருக்கும்போது, நீங்கள் சதா திருப்தியாக இருப்பதுடன், தந்தையாலும் சகல ஆத்மாக்களாலும் ஆழமாக நேசிக்கப்படுவீர்கள். பின்னர், மாயை எந்த வடிவத்தில் வந்தாலும், நீங்கள் பயப்பட மாட்டீர்கள். அதன்பின்னர், மிக்கி மௌஸ் படம் எல்லையற்ற திரையில் காட்டப்படுவதைப் போல் நீங்கள் உணர்வீர்கள். அப்போது நீங்கள் துயரப்பட மாட்டீர்கள். மிக்கி மௌஸ் படத்தைப் பார்க்கும்போது, நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். எல்லையற்ற திரையில் உள்ள மிக்கி மௌஸின் விளையாட்டுக்களை, நீங்கள் மாயையின் வெவ்வேறு வடிவங்களாக அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இத்தகைய ஸ்திதியைத் தந்தையின் மூலம் அனுபவம் செய்துள்ளீர்கள், நீங்கள் அனைவரும் இதைச் செய்துள்ளீர்கள்.

நீங்கள் பயமற்றவராக இருப்பதுடன் ஸ்திரமான, ஒருமுகப்படும் புத்திகளைக் கொண்டிருப்பதையும் எந்தவொரு சூழ்நிலையிலும் தளம்பல் அடையாமல் இருப்பதையும் பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் சதா இத்தகைய வெற்றியாளர் ஆத்மாக்கள் ஆவீர்கள். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தந்தைக்குத் தூய ஆசை உள்ளது: ஒவ்வொரு குழந்தையும் சதா வெற்றியாளர் ஆகி, உங்களின் வெற்றி ரூபத்தைத் தந்தைக்குக் காட்ட வேண்டும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் யார்? பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், அதாவது, இப்போது இந்தக் காலத்திற்கேற்ப, நீங்கள் பிராமண அகராதியில் ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும். நீங்கள் எல்லா வேளையும் தந்தையிடம் இருந்து உங்களின் ஆஸ்தியைக் கோர இருப்பதனால், எல்லா வேளையும் சகல பேறுகளையும் நீங்கள் கொண்டிருப்பது அவசியம். ஏனென்றால், நீங்களே தந்தையின் இதயத்தின் நம்பிக்கைகளை நிறைவேற்றப் போகும் நம்பிக்கை தீபங்கள் ஆவீர்கள். உங்களின் எண்ணங்களிலேனும் ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தை இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால், நீங்கள் சதா தந்தையுடன் இருக்கிறீர்கள், அத்துடன் நீங்கள் தந்தையின் சகபாடிகள் ஆவீர்கள். நீங்களே தந்தையுடன் இருப்பவர்கள். அத்துடன் அவரின் சகபாடிகளாக, நீங்கள் உலக மாற்றம் என்ற பணியைச் செய்கிறீர்கள்.

எனவே, பேசுங்கள்! நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து ‘சதா’ (எப்போதும்) என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? உண்மையில், ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே, பாப்தாதா எப்போதும் இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் சதா யோகியாகவும் தூய்மையாகவும் ஆகுவீர்களாக. அந்த ஆசீர்வாதத்தினூடாக நீங்கள் பெற்ற பேறுகள் எவையாயினும், அவை எல்லா நேரத்திற்கும் ஆனவை, சில நேரத்திற்கு மட்டும் உரியவை அல்ல. எனவே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் எல்லா வேளைக்குமான உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், அது கடைசிக் குழந்தையாக இருந்தாலும், தந்தை சகல குழந்தைகளிலும் தனது இதயபூர்வமான அன்பைக் கொண்டிருக்கிறார். தங்களை விவேகிகள் எனக் கருதும் மகத்தான, பிரபல்யமான மனிதர்களாலும் தந்தையை இனங்காண முடியவில்லை. ஆனால் பாப்தாதாவின் கடைசிக் குழந்தையும் தந்தையை இனங்கண்டுள்ளார். நீங்கள் அனைவரும் உங்களின் இதயபூர்வமாகக் கூறுகிறீர்கள்: எனது பாபா. இதனாலேயே, தந்தை ஒவ்வொரு குழந்தையின் மீதும் அநாதியான அன்பு வைத்திருக்கிறார். இதனாலேயே, ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு நாளும் பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், நீங்கள் வரிசைக்கிரமமாக இருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரே ஆசீர்வாதத்தையே வழங்குகிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் குழந்தை, ‘எனது பாபா’ எனச் சொன்ன உடனேயே, அவர் ஆசீர்வாதத்திற்கான உரிமையைப் பெற்றுக் கொள்கிறார். குழந்தைகளான நீங்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ வசித்தாலும், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் பாப்தாதாவிடம் இருந்து அதே ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்கள். அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றதும், நீங்கள் சந்தோஷம் அடைகிறீர்கள். எவ்வாறாயினும், இரண்டு வகையான குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு வகையினர், தாம் ஆசீர்வாதத்தைப் பெற்று விட்டோம் என்று நிச்சயமாகச் சந்தோஷம் அடையும் குழந்தைகள். ஆனால், முன்னணியில் ஓர் இலக்கத்தைப் பெறுபவர்கள், அந்த ஆசீர்வாதத்தைப் பார்த்து, இது தமது ஆசீர்வாதம் என்று அதைப் பற்றிப் பேசுவதனால் மட்டும் சந்தோஷம் அடைவதில்லை. ஆனால், அந்த ஆசீர்வாதத்தைப் பலனுள்ளதாக ஆக்குபவர்கள். அவர்கள் அந்த ஆசீர்வாதத்தின் நன்மையைப் பெற்று, அந்த ஆசீர்வாதத்தில் இருந்து பலனையும் பெற்றுக் கொள்கிறார்கள். உங்களிடம் விதை இருக்கிறது. ஆனால், நீங்கள் அந்த விதையில் இருந்து பழம் வரச் செய்யாவிட்டால், அதாவது, நீங்கள் அதைப் பலனுடையது ஆக்காவிட்டால், வெறுமனே சந்தோஷம் மட்டுமே இருக்கும். அந்த ஆசீர்வாதத்தில் இருந்து பலனைப் பெறுவதற்கு, எந்தவொரு விதைக்கும் அது பழத்தைத் தருவதற்கு, நீரும் சூரிய ஒளியும் தேவையாக உள்ளன. அதேபோல், இங்கும், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஆசீர்வாதத்தில் இருந்து பலனைப் பெற வேண்டும் என்றால், அதன் மூலம் விரிவாக்கம் இடம்பெற வேண்டும் என்றால், ஆசீர்வாதத்தின் பலனால் உங்களின் சொந்த மனதின் வளர்ச்சி இடம்பெற வேண்டும் என்றால், இங்கும் தந்தை கூறுகிறார்: ஆசீர்வாதத்தில் இருந்து பலனைப் பெற்றுக் கொள்வதற்கு, மீண்டும் மீண்டும் அந்த ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். விழிப்புணர்வின் சொரூபம் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். அதை மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும் (சிம்ரன்) என்பது இதன் அர்த்தம் அல்ல. அந்த விழிப்புணர்வைக் (ஸ்மிருத்தி) கொண்டிருத்தல் என்றால், அதற்கு நீரைக் கொடுத்தல் என்று அர்த்தம். அத்துடன் அந்த ரூபத்தில் ஸ்திரமாக இருத்தல் என்றால், அதற்கு சூரிய ஒளியை வழங்குதல் என்று அர்த்தம். எனவே, அது பலனுள்ளதாக ஆகுவதன் மூலம், நீங்கள் உங்களை அதிகளவு சக்தியால் நிரப்பிக் கொள்கிறீர்கள். அத்துடன் அந்தப் பலனின் மூலம் உங்களால் மற்றவர்களுக்கும் சக்தியின் அனுபவத்தையும் வழங்க முடியும்.

எனவே, இப்போது பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்? சிறிது காலமாகவே, பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு காலத்தைப் பற்றி எச்சரித்து வருகிறார். ஒவ்வொரு குழந்தையின் பெறுபேற்றிற்கான நேரம் சடுதியாக வரப் போகிறது. இதற்கு, சதா என்றும் தயாராக இருங்கள். அத்துடன் கூடவே, பறக்கும் ஸ்திதிக்காகத் தீவிர முயற்சி செய்வதற்கான நேரம் இதுவே என்று பாப்தாதாவும் சமிக்கை வழங்குகிறார். நீங்கள் வெறுமனே முன்னேறுவது என்று இல்லாமல் நீங்கள் பறக்கிறீர்கள். பொதுவான முயற்சி செய்வதற்கான நேரம் - உங்களின் நேரத்தைச் சாதாரணமான வழியில் செலவிடுதல் - இப்போது கடந்து விட்டது. இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இந்த சமிக்கையை வழங்குகிறார்: ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் சோதித்துப் பாருங்கள். உதாரணமாக, நீங்கள் தீவிர முயற்சி செய்யாவிட்டால், நீங்கள் ஒரு மணிநேரத்திற்காக சாதாரணமான முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்களின் இறுதிப் பரீட்சைக்கான நேரம் சடுதியாக அந்த ஒரு மணிநேரத்திற்குள் வந்தால், அந்த இறுதிக்கணம் உங்களின் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும். அப்போது அந்த ஒரு மணிநேரத்திற்கான சாதாரணமான முயற்சி, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதனாலேயே, அவ்வப்போது, பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் எண்ணம், ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு கணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய சமிக்கையை வழங்குகிறார். தீவிர முயற்சியாளரால் மட்டுமே, குழப்பமான நேரத்தில் அசைக்க முடியாதவராக இருக்கும் முயற்சியைச் செய்ய முடியும். சாதாரணமான முயற்சியாளர் ஒருவர், என்றும் தயாராக ஆகுவதற்கு நேரம் எடுப்பார். ஆனால், நீங்கள் ஒரு விநாடியில் புள்ளி, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் தீவிர முயற்சி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் இதில் அனுபவசாலி ஆகியுள்ளீர்கள். ஒரு முற்றுப்புள்ளிக்குப் பதிலாக, அது ஒரு கேள்விக்குறி ஆகாதுதானே? ஒரு முற்றுப்புள்ளி மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு கேள்விக்குறி கோணலாக இருக்கும். நீங்கள் முற்றுப்புள்ளி என்று சொன்னவுடனேயே, ஒரு முற்றுப்புள்ளி பிரயோகிக்கப்பட வேண்டும். ஒரு கொமாவோ அல்லது வியப்புக்குறியோ அல்ல. நான் என்ன செய்வது? என்று சிந்திப்பதற்குக் கூட உங்களுக்கு நேரம் இருக்காது. இத்தகைய வேகமான முயற்சியைச் செய்வது என்றால், பரீட்சையில் சித்தி அடைதல் என்று அர்த்தம் என்பதை இன்னமும் எந்தக் குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இப்போதும், ஏதாவதொரு காரணத்தால் ‘ஏன்? என்ன? எப்படி? இப்படி’ என்ற கேள்விகள் சில குழந்தைகளின் நாளாந்த அட்டவணைகளில் புலப்படுவதை பாப்தாதா பார்த்தார். பலருடைய அட்டவணைகளில், வீணான எண்ணங்களின் அலைகள் அதிகளவு நேரத்தை எடுப்பதையும் அந்த வீணானவற்றின் வேகம் துரிதமாக இருப்பதையும் பாப்தாதா பார்த்தார். ஒரு மணிநேர சாதாரணமான எண்ணங்கள், ஒரு நிமிடத்தின் வேகமான எண்ணங்களுக்கும் சமம். ஆகவே, இன்று, அனைவராலும் பாப்தாதாவாலும் நேசிக்கப்படும் திருப்தியான ஆத்மாக்களை பாப்தாதா பார்த்தார். ‘ஏன்? என்ன?’ போன்ற மொழி, ஒரு திருப்தியான ஆத்மாவின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ பிரவேசிக்காது. ஏனென்றால், அந்த ஆத்மாவால் சரியான நேரத்தில் மூன்று விசேடமான விடயங்களை, ஆத்மா, பரமாத்மா, நாடகம் என்ற மூன்று புள்ளிகளை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இது ஏனென்றால், இத்தகைய வேளையில், உங்களின் சக்திகளின் பொக்கிஷக் களஞ்சியம் அத்தியாவசியமானது. ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்பவர், எந்த வேளையிலும் குறிப்பிட்ட சக்திக்குக் கட்டளை இடக் கூடியவர், அதனால் அந்த வேளையில் அந்த சக்தி பிரசன்னமாகி விடும். உங்களுக்கு சகித்துக் கொள்ளும் சக்தி தேவையாக இருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக, முகங்கொடுக்கும் சக்தி வந்தால், அது ஒரு சக்தியாக இருந்தாலும், அந்த வேளையில் அந்தச் சக்தியால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே, சகல பொக்கிஷங்களின் சாவி, மூன்று புள்ளிகள்: சுயம், தந்தை, நாடகம்.

பாப்தாதாவிற்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது: அவர் உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்குத் தயாராக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துவதனால், நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். நீங்கள் உங்களின் மனதின் கையை உயர்த்துகிறீர்களா அல்லது உங்களின் பௌதீகமான சரீரத்தின் கையை உயர்த்துகிறீர்களா? உங்களின் மனதின் கை பலம்வாய்ந்தது. இந்தக் காலத்திற்கேற்ப, பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் மீதும் இந்தத் தூய விருப்பம் உள்ளது: நீங்கள் தந்தையை மீண்டும் 15 நாட்களின் பின்னர் சந்திக்கப் போகின்றீர்கள். எனவே, அடுத்து வரும் 15 நாட்களுக்கு, பரீட்சார்த்தமாக இந்த விசேடமான பயிற்சியைச் செய்யுங்கள். உண்மையில், நீங்கள் எல்லா வேளையும் இதைப் போன்றே இருக்க வேண்டும். ஆனால், 15 நாட்களுக்கு ஒத்திகை பாருங்கள். அத்துடன் உங்களுடன் தொடர்பில் இருக்கும் நிலையங்களையும் அதைச் செய்ய வையுங்கள். அங்கே செல்லுங்கள் அல்லது அவர்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி நினைவூட்டுங்கள்: நீங்கள் உங்களின் வீட்டுவேலையைச் செய்கிறீர்களா? உங்களின் வீட்டுவேலை என்ன? இது இலகுவானது! நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு ஊடாகக் கடந்து செல்கிறீர்கள். ஆனால் இந்தப் பதினைந்து நாட்களுக்கு, நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் 80 சதவீதம் மதிப்பெண்களைக் கோர வேண்டும். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்கு 20 சதவீத வாய்ப்பை வழங்குகிறார். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? பாபா இதை உங்களுக்குத் தரட்டுமா? பாபா உங்களுக்கு இந்த வேலையைக் கொடுக்கட்டுமா? ஓகே, 15 நாட்கள். மாயையும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். சந்தர்ப்பங்கள் வரும். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் பாருங்கள். நீங்கள் சித்தி அடைய வேண்டும். இதை நினைத்துப் பாருங்கள். பதினைந்து நாட்கள் பெரிய விடயம் அல்ல. ஆனால், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் நேர்மையான, சுத்தமான இதயத்துடன் நீங்கள் உங்களின் கனவுகள், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் சித்தி அடைவீர்கள் என்று பாப்தாதாவிற்குக் காட்ட வேண்டும். இது சாத்தியமா? இது சாத்தியமா? ஆசிரியர்களே, பேசுங்கள்! இது சாத்தியமா? பதினைந்து நாட்கள் எதுவுமே இல்லை. ஆனால், பாப்தாதா உங்களிடம் இதை ஓர் ஒத்திகையாகச் செய்யும்படி கூறுகிறார். எண்ணங்கள் எவையும் வீணாக்கப்படக் கூடாது. போராட்டம் இருக்கக் கூடாது, ஆனால் வெற்றியாளர்: பதினைந்து நாட்களில் முழுமையாக வெற்றியாளர் ஆகவேண்டும். இது சிரமமா அல்லது இலகுவாக இருக்கிறதா? இது இலகுவாக இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது இலகுவாக உள்ளதா? பின்னர், இந்தப் பதினைந்து நாட்களுக்கு உரிய பெறுபேற்றை பாப்தாதா பார்ப்பார். அதன்பின்னர் அவர் அதை மேலும் அதிகரிப்பார். உங்களில் எவராலும் அதை 15 நாட்களுக்குச் செய்ய முடியும், அல்லவா? உங்களால் அதைச் செய்ய முடியும்தானே? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! முன்னால் அமர்ந்திருப்பவர்கள் மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், அல்லவா? நீங்கள் மிகவும் நல்லவர்கள். இரட்டை வெளிநாட்டவர்கள், இந்தியாவில் இருப்பவர்கள் அனைவராலும் இதைச் செய்ய முடியும். கிராமங்களில் இருப்பவர்கள், பெரிய நகரங்களில் இருப்பவர்கள், நீங்கள் அனைவரும் 15 நாட்களுக்கு உங்களின் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். ‘ஏன்? என்ன? சூழ்நிலை அப்படி இருந்தது, அதனால்.....’ என்று கூறி, சாக்குப் போக்குகள் சொல்லாதீர்கள். நீங்கள் 80 சதவீதத்தைக் கோர வேண்டும். அப்படி இருந்தும், பாப்தாதா அதை இலேசாக்குகிறார். அவர் உங்களுக்கு 20 சதவீத வாய்ப்பைத் தருகிறார். ஏனென்றால், சிலருக்கு, நீங்கள் முன்னேறும்போது, மாயை உங்களைக் கவனக் குறைவாகவும் சோம்பேறிகளாகவும் ஆக்குவதை பாப்தாதா பார்த்தார். இது இப்படி இருந்தது, அது அப்படி இருந்தது என்பது இராஜரீகமான சோம்பேறித்தனத்தின் வடிவம் ஆகும். இந்த இராஜரீகமான சோம்பேறித்தனமும் கவனயீனமும் உங்களின் தீவிர முயற்சியைப் பலவீனம் ஆக்குகிறது. ஏனென்றால், இப்போது மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் 15 நாட்களுக்கு ஒத்திகை செய்ய வேண்டும் என்றும் இதைச் சில காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பாப்தாதா விரும்புகிறார். இதனாலேயே, அவர் உங்கள் அனைவரையும் உங்களின் கைகளை உயர்த்தச் செய்தார். என்றும் தயாராக இருத்தல். உங்கள் ஒவ்வொருவராலும் உங்களின் கைகளை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் இதைச் சிறிது காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டும். இதனாலேயே, பாபா இதை நீங்கள் குறுகிய காலத்திற்குப் பயிற்சி செய்ய வைக்கிறார். அச்சா.

எத்தனை பேர் முதல் தடவை வந்திருக்கிறார்கள்? எழுந்து நில்லுங்கள்! நல்லது. நீங்கள் பாப்தாதாவின் முன்னால் வந்திருக்கும் இந்த நாளுக்காகப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தந்தையின் பார்வை குழந்தைகளான உங்களின் மீது விழுந்தது. குழந்தைகளான உங்களின் பார்வையும் தந்தையின் மீது விழுந்தது. பற்பல பாராட்டுக்கள். அச்சா. வேறேந்த கேக்கும் இல்லை, ஆனால் நீங்கள் சந்தோஷக் கேக்கை உண்ண முடியும். இது நல்லது. நீங்கள் பிந்தி வந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் வேகமாகச் சென்று, முன்னால் ஓர் இலக்கத்தைக் கோர முடியும். இதனாலேயே, பாப்தாதாவாலும் உங்களின் சகபாடி சகோதர, சகோதரிகள் அனைவராலும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. வாழ்த்துக்கள். கடைசியாக வந்திருந்தாலும் வேகமாகச் செல்ல முடியும், அத்துடன் முதல் வரிசையில் வர முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணங்கள் ஆகுவீர்கள். அச்சா.

பாப்தாதாவின் நம்பிக்கைகளை நிறைவேற்றுகின்ற, எங்கும் உள்ள நம்பிக்கைத் தீபங்களான உங்கள் அனைவருக்கும், ஏன்? என்ன? என்ற மொழிக்கு அப்பால் இருப்பதுடன் சதா ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், சதா வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு பாபாவிற்குச் சொந்தமாக இருப்பவர்களுக்கும், ஒரேயொரு தந்தையில் தந்தை, ஆசிரியர், சற்குரு என்ற வாழ்க்கையில் மூன்று விசேடமான உறவுமுறைகளையும் அனுபவம் செய்பவர்களுக்கும், உங்களின் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்தும், இந்தக் கல்வியின் ஆஸ்தியை ஆசிரியரிடம் இருந்தும், உங்களின் ஆசீர்வாதங்களின் ஆஸ்தியை சற்குருவிடம் இருந்தும் பெறுகின்ற கோடானுகோடி மடங்கு பாக்கியசாலிக் குழந்தைகள் அனைவருக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

தாதிகளிடம் பேசுகிறார்: (இந்தத் தடவை, எங்கும் மிக நல்ல சேவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன) நீங்கள் அனைவரும் மிக நன்றாக அனைவருக்கும் உதவி செய்துள்ளீர்கள். எப்படி அதைச் செய்வது என்று யாரும் சிந்திக்கவில்லை. நாம் அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். ஒருவர் மற்றவரின் உதவியால், சகல நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக நடந்தன. சத்தமும் பரவியது. அனைவரும் செய்தியைப் பெற்றார்கள். இப்போது, முன்னேறுங்கள் (அனைவரும் யோகத்திலும் மிக நல்ல அனுபவங்களைப் பெற்றார்கள்.) தலைப்பே, ஆசீர்வாதங்களை வழங்குதல் என்பதாகும். எனவே, யோகா நிகழ்ச்சிகளால் அவர்கள் அனைவரும் அதை அனுபவம் செய்வார்கள்.

பஞ்சாப் பிராந்தியத்தின் சேவாதாரிகள்: எனவே, நாடகத்தின்படி, சந்நியாசிகளுக்கும் மகாத்மாக்களுக்கும் சேவை செய்வதற்கான நல்லதொரு வாய்ப்பை பஞ்சாப் பெற்றுள்ளது, நீங்கள் அதைச் செய்து வருகிறீர்கள். பஞ்சாபில் சேவை ஸ்தாபனை செய்யப்பட்ட போது, நீங்கள் நல்ல, ஒத்துழைக்கும், வாரிசு தரமுள்ள ஆத்மாக்களைக் கண்டுபிடித்தீர்கள், அவர்கள் கருவிகள் ஆகினார்கள். எந்தளவிற்குக் குழப்பம் விளைவித்தவர்கள் அங்கே இருந்தார்களோ, அந்தளவிற்கு, சிங்கத்தின் தரம் கொண்ட ஆத்மாக்களும் வெளிப்பட்டார்கள். இப்போது பஞ்சாப் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு இந்தச் சிறப்பியல்பு உள்ளது. இப்போது, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரபல்யமான சிங்கத்தைத் தயார் செய்ய வேண்டும். அவர் ஓர் ஒன்றுகூடலில் ஒரு மைக் ஆகித் தனது அனுபவத்தைக் கூற வேண்டும். அவர் ஒரு சிறிய மைக்காக அன்றி, ஒரு பெரிய மைக்காக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் விஐபிகள் வேறு விடயம். ஆனால், மகாத்மாக்களுக்கு இடையேயும் விஐபிகள் இருக்கிறார்கள். அதனால், தனது அனுபவத்தால் மற்றவர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு பெரிய மைக்கைத் தயார் செய்யுங்கள். அவ்வாறான ஒருவரைத் தயார் செய்யுங்கள். அவரைத் தயார் செய்யுங்கள். இது சாத்தியமே. ஏனென்றால், சாதுக்கள், சந்நியாசிகளின் சேவை துவாபர யுகத்தில் இருந்து ஆரம்பித்ததாக மக்கள் நம்பினாலும், ஏனையோரை அல்லது தமது சீடர்களைத் தங்களைப் போன்று ஆக்கக் கூடிய மகா குருமார்களின் உதாரணங்கள் எவையும் இல்லை. எவ்வாறாயினும், பொதுமக்களின் முன்னால் செல்லக்கூடிய, தன்னை விடப் புத்திசாலிகளான சில குழந்தைகளை பாப்தாதா தயார் செய்துள்ளார். ஆகவே, இப்போது பஞ்சாப் ஏதாவது புதுமையைக் காட்ட வேண்டும். விஐபிகள் சகல திசைகளில் இருந்தும் வந்துள்ளார்கள். ஆனால், நீங்கள் எத்தகையவர்களை இங்கே அழைத்து வரவேண்டும் என்றால், அவர்கள் கூறுவதைக் கேட்கும் அனைவரும் விழித்தெழுந்து, செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது சாத்தியமா? நாங்கள் பார்ப்போம். அதற்குச் சிறிது காலம் எடுக்கும், ஆனால் உங்களால் அதைப் போன்ற ஒருவரைத் தயார் செய்து அனைவருக்கும் காட்ட முடியும். ஆம், விரிவாக்கம் இடம்பெறுகிறது.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் கரத்தையும் அவரின் சகவாசத்தையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம், கவலைகளில் இருந்து விடுபட்டு, கஷ்டமான எதையும் இலகுவானது ஆக்குவீர்களாக.

உங்களின் கை வயதான ஒருவரின் கையில் இருக்கும்போது, உங்களின் ஸ்திதியானது அக்கறை மற்றும் கவலையில் இருந்து விடுபட்டிருக்கும். அதேபோல், அனைத்தையும் செய்யும்போதும், சதா பாப்தாதா உங்களுடன் இருக்கிறார் எனக் கருதுங்கள். அத்துடன் இந்த அலௌகீக வாழ்க்கையில் உங்களின் கரம் அவரின் கரங்களில் இருப்பதாகக் கருதுங்கள். இதன் அர்த்தம், உங்களின் வாழ்க்கை அவரின் கைகளில் உள்ளது என்பதும் அவரே பொறுப்பு என்பதும் ஆகும். உங்களின் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு, இலேசாக இருங்கள். ஒரு சுமையை நீக்கி, கஷ்டமான எதையும் இலகுவாக்குவது என்றால், தந்தையின் கரத்தையும் அவரின் சகவாசத்தையும் எடுத்துக் கொள்வதாகும்.

சுலோகம்:
உங்களின் முயற்சிகளில் நேர்மை இருக்கும்போது, நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து மேலதிக உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள்.

அவ்யக்த சமிக்கை: இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகித்து மகான் ஆகுங்கள்.

யாராவது உங்களுடன் முரண்பட்டால், அந்த நபருக்கும் உங்களின் அன்பு என்ற நீரை வழங்குங்கள். இனிமை மற்றும் பணிவு என்ற உங்களின் நற்குணங்களைக் கைவிடாதீர்கள். சதா உங்களின் பணிவு என்ற ஆடையை அணிந்து கொள்ளுங்கள். இந்தப் பணிவே உங்களின் கவசம் ஆகும். இது உங்களின் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகும். சம்ஸ்காரங்களை ஒத்திசையச் செய்வதற்கான இலகுவான வழிமுறை, உங்களை பணிவாலும் இனிமையாலும் நிரப்பிக் கொள்வதே ஆகும். மற்றவர்களுக்கு மேன்மையான ஆசனத்தை வழங்குங்கள்.