12.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்களாகி, அதன்பின்னர், இளவரசர்கள், இளவரசிகளாக வேண்டும். எனவே, நினைவு யாத்திரை மூலம் உங்கள் பாவங்களை அழியுங்கள்.

பாடல்:
எந்தவொரு வழிமுறையைப் பயன்படுத்துவதால், உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படுகிறது?

பதில்:
நீங்கள் தந்தையின் கண்களுக்குள் பார்த்து உங்கள் கண்கள் அவர் கண்களைச் சந்திக்கும்பொழுது, உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படுகிறது, ஏனெனில் உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இதுவே உங்கள் நினைவு யாத்திரையாகும். நீங்கள் சரீர மதங்கள் அனைத்தையும் துறந்து, தந்தையை நினைவுசெய்கிறீர்கள். இதைச் செய்வதால், ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாகி, பின்னர் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்;கள்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகிறார்: இங்கே உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறு அமர்ந்திருங்கள். தந்தை உங்களிடம் இந்த வேண்டுகோளை விடுக்கிறார். ‘கடவுள் சிவன் பேசுகிறார்’ என்றால் சிவபாபா விளங்கப்படுத்துகிறார் என அர்த்தமாகும்;: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதிக் கொண்டு இங்கே அமர்ந்திருங்கள், ஏனெனில், நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் அனைவருமே ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். 5000 வருடங்களுக்கு முன்னர் மிகச்சரியாகத் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றதைப் போலவே, ஒரேயொரு தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் ஆதி சனாதன தேவதேவியர்களின் இராச்சியத்தில் இருந்தீர்கள். எவ்வாறு நீங்கள் சூரிய வம்சத்தவர்கள் ஆகலாம், அதாவது, எவ்வாறு நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அதிமேலானவராகிய கடவுள் ஒரேயொருவரே. பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவர்களான குழந்தைகளான நீங்களே அந்த உண்மையான பிரபுவின் குழந்தைகள். தந்தை இங்கமர்ந்திருந்து, இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். உங்கள் புத்தியின் யோகத்தை அவரது ஸ்ரீமத்துக்கு ஏற்ப இணைத்துக் கொள்வீர்களானால், உங்கள் பாவங்கள் அனைத்தும்; அழிக்கப்படுவதுடன், உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படும். உங்கள் கண்கள் தந்தையின் கண்களைச் சந்திக்கும்பொழுது, உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படுகின்றது. ‘கண்களின் சந்திப்பு" என்பதன் அர்த்தத்தையும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்: இதுவே நினைவு யாத்திரையாகும். இது யோக அக்கினி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோக அக்கினியில், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இது துன்ப பூமியாகும். அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறார்கள். நீங்கள் பெருமளவு பாவங்களைச் செய்திருக்கிறீர்கள். இது இராவண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. சத்திய யுகம் இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகையில் நீங்கள் விளங்கப்படுத்தலாம். எவ்வளவு பெரியதோர் ஒன்றுகூடல் இருந்தாலும், அவர்களுக்குச் சொற்பொழிவாற்றுவதில் எவ்விதத் தயக்கமும் இருக்கக்கூடாது. இவை கடவுளின் வாசகங்கள் என்றே நீங்கள் தொடர்ந்தும் கூறுங்கள். கடவுள் சிவன் பேசுகிறார்: ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் அவரது குழந்தைகள்;; நாங்கள் சகோதரர்கள். எவ்வாறாயினும், ஸ்ரீ கிருஷ்ணருக்குக் குழந்தைகள் இருந்ததாகவோ அல்லது பல அரசியர் இருந்தனர் என்றோ நாங்கள் கூற மாட்டோம். ஸ்ரீ கிருஷ்ணருக்குத் திருமணமாகும்பொழுது, அவரது பெயர் மாற்றமடைகிறது. ஆம், இலக்ஷ்மிக்கும் நாராயணருக்கும் குழந்தைகள் இருந்தார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். இராதைக்கும் கிருஷ்ணருக்கும் திருமணமாகிய பின்னர், அவர்கள் இலக்ஷ்மி, நாராயணர் ஆகுகிறார்கள், அதன்பின்னர் அவர்களுக்கு ஒரு புதல்வர் இருக்கிறார். பின்னர் அவர்களது வம்சம் தொடர்கின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சதா தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். சகல சரீர மதங்களையும் துறந்து, சதா தந்தையையே நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் சதோபிரதானாகி, சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். சுவர்க்கத்தில் துன்பமேயில்லை. நரகத்தில், எல்லையற்ற துன்பம் இருக்கிறது; சந்தோஷத்தின் பெயரோ அல்லது சுவடோ கிடையாது. இவ்வகையில், சாதுரியமாக நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் சிவன் பேசுகிறார்: ஓ குழந்தைகளே, இந்நேரத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள், எனவே, எவ்வாறு நீங்கள் தூய்மையாக முடியும்? “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என்று நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள். சத்திய யுகத்தில் தூய்மையானவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள், கலியுகத்திலோ தூய்மையற்றவர்களே இருக்கிறார்கள். கலியுகத்தின் பின், அது நிச்சயமாகச் சத்திய யுகமாக வேண்டும். புதிய உலக ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் இருக்கின்றன. பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெற்றதென நினைவுகூரப்படுகிறது. பிரம்மாகுமார்கள், குமாரிகளாகிய நாங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். நாங்கள் உச்சிக்குடுமிகளாகிய, பிராமணர்கள்; பல்வகை ரூபமும் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் முதல், நீங்கள் நிச்சயமாகப் பிராமணர்களாக வேண்டும். பிரம்மாவும் ஒரு பிராமணரே ஆவார். தேவதேவியர்கள் சத்திய யுகத்தில் மாத்திரமே இருக்கிறார்கள். சத்திய யுகத்திலே, சதா சந்தோஷம் இருக்கிறது; துன்பத்தின் குறிப்பே இல்லை. கலியுகத்தில், எல்லையற்ற துன்பம் இருக்கின்றது, அனைவரும் சந்தோஷமற்று இருக்கிறார்கள்; துன்பத்தை அனுபவம் செய்யாதவர்கள் என்று எவருமேயில்லை. இது இராவண இராச்சியம். இராவணனே பாரதத்தின் முதல்தர எதிரியாவான். ஒவ்வொருவருக்குள்ளேயும் ஐந்து விகாரங்கள் இருக்கின்றன. சத்திய யுகத்தில், விகாரங்கள் இல்லை. அதுவே தூய இல்லற தர்மம் ஆகும். இப்பொழுது துன்ப மலைகள் வீழ்ந்துள்ளன. அவை தொடர்ந்தும் மேலும் அதிகமாக வீழும். அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு குண்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள், ஆனால் அவை வெறுமனே சேகரித்து வைக்கப்படுவதற்காக அல்ல் அவர்கள் அனைத்தையும் மேலும் சீர்ப்படுத்துகிறார்கள். பின்னர், ஒத்திகைகள் இடம்பெற்று, இறுதியில் அது இடம்பெறும். இப்பொழுது மிகச்சொற்ப காலமே எஞ்சியிருக்கிறது. நாடகம் அதற்குரிய நேரத்தில் முடிவடையும். எல்லாவற்றுக்கும் முதல், உங்களுக்கு சிவபாபாவின் ஞானம் இருக்க வேண்டும். எப்பொழுதேனும் ஒரு சொற்பொழிவை ஆரம்பிக்கும்பொழுது, நீங்கள்; முதன்முதலில் எப்பொழுதும் ‘நம சிவாய’ என்று கூற வேண்டும், ஏனெனில், சிவபாபாவின் புகழ் வேறு எவருக்கும் உரியதாக இருக்க முடியாது. சிவஜெயந்தி வைரங்களின் பெறுமதி வாய்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகள் கிடையாது. சத்திய யுகத்தில் சிறு குழந்தைகள் சதோபிரதானானவர்கள். குழந்தைகளில் விஷமத்;தனம் போன்ற எதுவும் இருக்காது. ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெயை உண்டார் எனவும், இதையும் அதையும் செய்தார் எனவும் அவரைப் பற்றிக் கூறுகிறார்கள். அவரைப் போற்றுவதற்குப் பதிலாக மேலும்; அதிகமாக அவரை அவதூறு செய்கிறார்கள். கடவுள் சர்வவியாபி எனவும், அவர் என்னிலும் இருக்கிறார், உங்களிலும் இருக்கிறார் எனவும் அவர்கள் மிகவும் சந்தோஷமாகக் கூறுகிறார்கள். இது மிகப் பாரதூரமான அவதூறு ஆகும். எவ்வாறாயினும், தமோபிரதான் மக்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே, முதன்முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர் அசரீரியான தந்தை, அவரது பெயர் அனைவருக்கும் சற்கதி அருள்பவராகிய, நன்மையளிக்கும் சிவன் என்பதாகும். அந்த அசரீரியான தந்தையே சந்தோஷக் கடலும், அமைதிக் கடலும் ஆவார். இப்பொழுது ஏன் அதிகளவு துன்பம் இருக்கின்றது? காரணம், இது இராவண இராச்சியம். இராவணன் அனைவரதும் எதிரியாவான். அவர்கள் அவனைக் கொல்கிறார்களாயினும், அவன் மரணிப்பதில்லை. இங்கே உங்களுக்கு ஏதோ ஒருவகையான துன்பம் தான் இருக்கிறதென்று இல்லை; எல்லையற்ற துன்பம் இருக்கின்றது. சத்திய யுகத்தில், எல்லையற்ற சந்தோஷம் இருக்கின்றது. 5000 வருடங்களுக்கு முன், நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாகி, தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியையும் பெற்றீர்கள். சிவபாபா நிச்சயமாக வருகிறார், அவர் வரும்பொழுது, நிச்சயமாக எதையோ செய்கின்றார். அவர் அனைத்தையும் மிகச்சரியாகவே செய்கிறார். அதனாலேயே அவர் போற்றப்படுகிறார். மக்கள் சிவராத்திரியைப் (சிவனின் இரவு) பற்றிப் பேசுகிறார்கள், அதனையடுத்து, ஸ்ரீ கிருஷ்ணரின் இரவு இருக்கின்றது. இப்பொழுது, நீங்கள் சிவராத்திரியைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணரின் இராத்திரியைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். சிவன் இங்கே எல்லையற்ற இரவிலே வருகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அமிர்த வேளையில் பிறப்பெடுக்கிறாரே தவிர, இரவில் அல்ல. சிவராத்திரியை மக்கள் கொண்டாடுகின்றபொழுதிலும், அதற்கென்று திகதியோ அல்லது நேரமோ இல்லை. ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறப்பு அமிர்தவேளையின்பொழுது இடம்பெறுகிறது. அமிர்த வேளை அதி மங்களகரமான நேரம் என்று கருதப்படுகிறது. அம்மக்களோ ஸ்ரீ கிருஷ்ணரது பிறப்பை நள்ளிரவில் கொண்டாடுகிறார்கள், ஆனால், அது விடியற்காலைப் பொழுதல்ல. விடியற்காலைப் பொழுது எனப்படுவது, நீங்கள் கடவுளை நினைவு செய்யக்கூடியதாக இருக்கின்ற, அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரமேயாகும். விகாரத்தில் ஈடுபட்ட பின் ஒருவர் நள்ளிரவில் எழுந்திருந்து கடவுளை நினைவுசெய்வார் என்பதல்ல் முற்றிலும் இல்லை! அமிர்தவேளை நள்ளிரவில் வருவதில்லை. அந்த நேரத்தில் மனிதர்கள் தூய்மையற்றும், அழுக்கடைந்தும் இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் சூழல் மிகவும் தீங்காக உள்ளது. எவருமே 2.30 மணிக்கு விழித்தெழுவதில்லை. அமிர்தவேளை 3.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடைப்பட்டதாகும். மக்கள் அந்த நேரத்தில் விழித்தெழுந்து, பக்தி செய்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே அந்த நேரத்தை நிர்ணயித்துள்ளார்கள், ஆனால் உண்மையில், அவ்வாறு நிரணயிக்கப்பட்ட நேரம் எதுவுமேயில்லை. ஆகவே, ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நேரத்தை நீங்கள் கண்டறியலாம். ஆனால், சிவன் வந்த நேரத்தை நீங்கள் கண்டறிய முடியாது. அவரே வந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். எனவே, முதன்முதலில் நீங்கள் சிவபாபாவின் புகழைப் பற்றி மக்களுக்குக் கூற வேண்டும். ஆரம்பத்தில் பாடல் ஒன்று இசைக்கப்பட வேண்டும், முடிவில் அல்ல. சிவபாபாவே அனைவரிலும் அதி இனிமையான பாபா, நீங்கள் அவரிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். 5000 வருடங்களுக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர் சத்திய யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. இப்பொழுதும் மக்கள் தொடர்ந்தும் சுவர்க்கத்தைப் போற்றுகின்றார்கள். எவராவது மரணிக்கும்பொழுது, இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆ! இப்பொழுது இன்னும் நரகமாகவே இருக்கிறது. அது சுவர்க்கமாக இருக்குமானால், மக்கள் சுவர்க்கத்திலேயே மறுபிறவி எடுப்பார்கள். எங்களிடம் பல வருட அனுபவங்கள் இருக்கிறதென்றும், அதனை வெறும் 15 நிமிடங்களில் விளங்கப்படுத்தி விட முடியாது என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதற்குக் காலம் தேவைப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் முதல், இது ஒரு விநாடிக்குரிய விடயம் என அவர்களுக்குக் கூறுங்கள். துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராகிய, எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்குக் கொடுங்கள். அவரே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தையாவார். பிரம்மாகுமார்கள், குமாரிகளாகிய நாங்கள் அனைவரும் சிவபாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் சகோதரர்கள், நானே உங்கள் தந்தை. நான் 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்தேன், இதனாலேயே மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். சுவர்க்கத்தில் எதுவுமே கொண்டாடப்படுவதில்லை. சிவஜெயந்தி இடம்பெறுகிறது, இதன் ஞாபகார்த்தம் பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதுவே நடைபெறுகின்ற கீதை அத்தியாயம் ஆகும். பிரம்மாவின் மூலம் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது, பழைய உலகம் சங்கரரின் மூலம் அழிக்கப்படவுள்ளது. இப் பழைய உலகத்தின் சூழலை உங்களால் பார்க்க முடியும்; இத் தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. இதனாலேயே, “எங்களைத் தூய உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். சண்டைகள், மரணம், விதவையாகுதல், தற்கொலை என எல்லையற்ற துன்பம் உள்ளது. சத்திய யுகம் எல்லையற்ற சந்தோஷ இராச்சியமாக இருந்தது. நிச்சயமாக நீங்கள்; உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் காட்டுகின்ற இந்தப் படத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த இலக்ஷ்மியும் நாராயணருமே உலக அதிபதிகளாக இருந்தார்கள். எவ்வாறு அவர்கள் அப்பிறவிகளை எடுத்தார்கள் என்ற 5000 வருடங்கள் சம்பந்தப்பட்ட ஒன்றை உங்களுக்கு நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஆகும்வகையில், அவர்கள் எப்படியான செயல்களைச் செய்தார்கள்? செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் தத்துவத்தைத் தந்தை மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சத்திய யுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. இங்கே இது இராவண இராச்சியம் என்பதால், செயல்கள் பாவகரமானவையாக இருக்கின்றன, இதனாலேயே இது பாவாத்மாக்களின் உலகம் என அழைக்கப்படுகிறது. உங்கள் கொடுக்கல் வாங்கல்களும் பாவாத்மாக்களுடனேயே உள்ளன. ஒரு குழந்தை கருப்பையில் இருக்கும்பொழுதே அதற்கு நிச்சயதார்த்தம் செய்து விடுகிறார்கள். அவர்கள் அத்தகைய குற்றப் பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்கே, அவர்கள் குற்றக் கண்கள் கொண்டவர்கள். சத்திய யுகம் குற்றமற்ற (நாகரிகமான) பார்வை கொண்டதென்று அழைக்கப்படுகிறது. இங்கே, கண்கள் பெருமளவு பாவம் செய்கின்றன. அங்கே எவரும் பாவம் செய்வதில்லை. சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன அவை ஏன் சந்தோஷ பூமியென்றும், துன்ப பூமியென்றும் அழைக்கப்படுகின்றன என்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அனைத்தும் தூய்மையாக இருப்பதிலும், தூய்மையற்று இருப்பதிலுமே தங்கியிருக்கிறது. ஆகவே, தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. அதை வெல்வதன் மூலம் நீங்கள் உலகத்தை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். அரைச் சக்கர காலமாக உலகம் தூய்மையாக இருந்தது, அங்கே மேன்மையான தேவர்கள் இருந்தார்கள். அது இப்பொழுது சீரழிந்துள்ளது. ஒருபுறம் இது சீரழிந்த உலகம் என அவர்கள் கூறுகிறார்கள், இன்னொரு புறம், அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்று அழைக்கிறார்கள். தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் அவர்கள் கூறுகிறார்கள். இவை அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பொழுது மரணம் முன்னிலையில் நிற்கிறது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆகுவீர்கள். இப்பொழுதோ துன்பத்தைத் தவிர, வேறு எதுவுமேயில்லை. அம்மக்;கள் எத்தனை மாநாடுகள் போன்றவற்றை நடத்தினாலும், எத்தனை ஒன்றுகூடல்;களை நடத்தினாலும், அவற்றின் மூலம் எதுவுமே நடைபெறப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வருகிறார்கள். தந்தையோ தனது குழந்தைகள் மூலம் தனது பணியை மேற்கொள்கிறார். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என நீங்கள் கூவியழைத்தீர்கள். எனவே, எனக்குரிய நேரத்தில் நான் வந்துள்ளேன். அதர்மம் தலைவிரித்தாடும்பொழுதெல்லாம் நான் வருகிறேன். அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கூவி அழைப்பதால், அவர்கள் நிச்சயமாகத் தூய்மையற்றவர்களாகவே இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இராவணன் உங்களைத் தூய்மையற்றவர்களாக்கி இருக்கிறான், நான் இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். அது தூய உலகமாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்ற உலகமாக இருக்கிறது. அனைவரிலும் ஐந்து விகாரங்கள் இருக்கின்றன, எல்லையற்ற துன்பம் இருக்கிறது. எங்கும் அமைதியின்மையைத் தவிர, வேறெதுவும் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் தமோபிரதானாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகும்பொழுது, நான் வருகிறேன். என்னை அவதூறு செய்து, என்னைச் சர்வவியாபி என்று கூறுபவர்களையும் ஈடேற்றுவதற்கே நான் வருகிறேன். இராவணனின் இந்தத் தூய்மையற்ற உலகத்திற்குள், இந்தத் தூய்மையற்ற சரீரத்தில் வருமாறு என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். எனக்கும் ஓர் இரதம் தேவை. எனக்கு ஒரு தூய இரதம் தேவையில்லை. இராவண இராச்சியத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள்;; எவருமே தூய்மையானவர்கள் இல்லை, அனைவரும் விகாரத்தினால் பிறந்தவர்களே. இது விகாரமான உலகம், அதுவோ விகாரமற்ற உலகமாகும். இப்பொழுது, எவ்வாறு நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள்? நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னுடன் யோகம் செய்யுங்கள்! இதுவே பாரதத்தின் புராதன இராஜயோகமாகும். நிச்சயமாக அவர் இல்லறப் பாதையிலேயே வருகிறார். அவர் அத்தகையதோர் அற்புதமான முறையில் வருகிறார்! அவரே தாயும், தந்தையும் ஆவார், ஏனெனில், அமிர்தம் வெளிப்படுகின்ற, பசுவின் வாய் தேவைப்படுகிறது. எனவே, அவரே தாயும் தந்தையுமாவார், பின்னர் தாய்மார்களைக் கவனித்துக் கொள்வதற்காக சரஸ்வதி தலைவி ஆக்கப்பட்டார். அவர் ஜெகதாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். காளி மாதாவைப் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள். அவர் அதைப் போன்று அவலட்சணமானவர் அல்ல. ஸ்ரீ கிருஷ்ணர் காமச்சிதையில் அமர்ந்து, அவலட்சணமாகினார் என அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைக் கருநீல நிறத்தவராகக் காட்டியிருக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவலட்சணமாகி, பின்னர் அழகானவர் ஆகுகின்றார். இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்குக்; காலம் பிடிக்கின்றது. பல்கோடிக் கணக்கானவர்களில் ஒரு கைப்படியளவினருடைய புத்தியிலும், அந்தக் கைப்பிடியளவானவர்களில் ஒரு சிலரது புத்தியிலுமே இவை இருக்கும், ஏனெனில், அனைவரிலும் ஐந்து விகாரங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் ஒன்றைக் கூறுவதற்கான உரிமை இருப்பதால், இதை நீங்கள் ஓர் ஒன்றுகூடலிலும் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஓர் உத்தியோகபூர்வமான ஒன்றுகூடலிலும் எவருமே உங்களை இடைநடுவில் கேள்விகள் கேட்க மாட்டார்கள். நீங்கள் அதைச் செவிமடுப்பதற்கு விரும்பவில்லை என்றால், அப்பொழுது அமைதியாக வெளியேறி விடுங்கள்;; சத்தமிட வேண்டாம். இவ்வாறு விளங்கப்படுத்துங்கள்: இப்பொழுது எல்லையற்ற துன்பம் இருக்கின்றது. இன்னும் துன்ப மலைகள் விழப் போகின்றன. எங்களுக்குத் தந்தையையும், படைப்பையும் பற்றித் தெரியும். நீங்கள் எவரது பணியைப் பற்றியும் அறியாதிருக்கிறீர்கள். தந்தை எப்பொழுது, எவ்வாறு பாரதத்தை வைகுந்தம் ஆக்கினார்? நீங்கள் இவற்றைப் பற்றி அறியாதுள்ளீர்கள், ஆகவே, வாருங்கள், நாங்கள் விளங்கப்படுத்துவோம். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள்? ஏழு நாட் பாடநெறியைப் பெறுங்கள், நாங்கள் உங்களை 21 பிறவிகளுக்குப் பாவாத்மாக்களிலிருந்து புண்ணியாத்மாக்கள் ஆக்குவோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை விளங்கப்படுத்தியுள்ள செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் ஆழமான தத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள், பாவாத்மாக்களுடன், எவ்விதமான கொடுக்கல் வாங்கல்களையும் வைத்துக் கொள்ளாதீர்;கள்.

2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, ஒரேயொரு தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தை இணைத்துக் கொள்ளுங்கள். சதோபிரதானாகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்தத் துன்ப பூமியைச் சந்தோஷ பூமி ஆக்குவதற்கு, தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய குற்றப் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாகி, உங்கள் வீணான கேள்விகள் அனைத்தையும் இந்த யாகத்தில் அர்ப்பணிப்பதால், தடைகளிலிருந்து விடுபடுவீர்களாக.

தடைகள் ஏதும் வரும்பொழுது, ஏன்?, என்ன? போன்ற பல கேள்விகளுக்குள் நீங்கள் செல்கின்றீர்கள். கேள்விகளால் நிறைந்திருப்பது எனில், விரக்தியடைந்திருத்தல் ஆகும். ஞானம் நிறைந்தவர்களாகி, உங்கள் வீணான கேள்விகள் அனைத்தையும் இந்த யாகத்தில் அர்ப்பணியுங்கள், அப்பொழுது உங்கள் நேரமும். பிறரின் நேரமும் சேமிக்கப்படும். இதனைச் செய்வதனால், நீங்கள் இலகுவில் தடைகளிலிருந்து விடுபடுவீர்கள். நம்பிக்கையும், வெற்றியும் உங்கள் பிறபபுரிமை: இந்தப் பெருமையைப் பேணுங்கள், நீங்கள் என்றுமே விரக்தியடைய மாட்டீர்கள்.

சுலோகம்:
சதா உற்சாகத்தைப் பேணி. பிறருக்கும் அந்த உற்சாகத்தைக் கொடுப்பதே, உங்கள்