12.07.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.12.2010     Om Shanti     Madhuban


பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதுடன்கூடவே, உங்களின் பழைய சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுங்கள். அத்துடன் தடைகளில் இருந்து விடுபட்டு இருக்கும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். கருணைநிறைந்தவராகவும் மாஸ்ரர் அருள்பவராகவும் ஆகி, உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம் சந்தோஷம் அற்ற மற்றும் அமைதியற்ற ஆத்மாக்களுக்கு ஆதாரத்தை வழங்குங்கள்.


இன்று, பாப்தாதா சூட்சும வதனத்தில் இருந்து இந்தப் பௌதீக உலகத்திற்கு எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் புது வருடத்திற்காகவும் புதிய உலகிற்காகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்குவதற்காக வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் அன்புடன் உங்களின் வீடான மதுவனத்தை வந்தடைந்துள்ளீர்கள். உலக மக்கள் புதுவருடத்தை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ சதா புது உலகின் சங்கமத்தைத் தொடர்ந்து கொண்டாடுகிறீர்கள். புதிய உலகம் சதா உங்களின் கண்களின் முன்னால் அமிழ்ந்துள்ளது. நீங்கள் இப்போது இதை நினைவு செய்து அங்கே சென்று விடுகிறீர்கள். இது உங்களின் கண்களில் அமிழ்ந்துள்ளது, அப்படித்தானே? நீங்கள் சங்கமயுகத்தில் இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். இன்று நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், நாளை நீங்கள் உங்களின் இராச்சியத்திற்குள் பிரவேசிப்பீர்கள். உங்களால் உங்களின் கண்களால் அதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உலக மக்கள் ஒரு நாளுக்கு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், பாப்தாதா உங்களுக்கு பொன்னுலகை ஒரு பரிசாக வழங்கியுள்ளார். இது நீண்ட காலத்திற்கு நிலைக்கப் போகின்றது. உங்களால் அங்கே ஒரு விநாடியில் சென்று அடையும் வகையில் உங்களின் கண்களில் அது அமிழ்ந்துள்ளது. உங்களின் அனைவரின் முன்னாலும் உங்களின் கண்களில் பொன்னுலகம் அமிழ்ந்துள்ளது. உங்களால் ஒரு விநாடியில் அங்கே சென்று அடைய முடிகிறது, அல்லவா? இன்று, நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். நாளை, நீங்கள் ஓர் உரிமையுடன் இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள்.

இப்போது, இந்தக் காலத்திற்கேற்ப, பக்தர்கள் சந்தோஷம் இல்லாமலும் அமைதியற்றும் இருப்பதனால் மூதாதையர்களான உங்களை அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எவ்வாறு துன்பத்திலும் அமைதியற்றும் அழைக்கிறார்கள் என்ற ஒலியை உங்களால் கேட்க முடிகிறதா? எங்களுக்கு அமைதியைக் கொடுங்கள்! எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள்! எங்களுக்கு சுகத்தைக் கொடுங்கள்! அவர்களின் ஒலியை உங்களால் கேட்க முடிகிறதா? கொடுங்கள்! கொடுங்கள்! இப்போது, ஆத்மாக்களான நீங்கள், கருணைநிறைந்த, உபகாரி அருள்பவரின் குழந்தைகளாக, உங்களின் மனதால் ஆத்மாக்களுக்குச் சேவை செய்து, கொடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். அந்த சந்தோஷம் அற்ற, அமைதியற்ற ஆத்மாக்களின் மீது பாப்தாதா அதிகளவு கருணை கொள்கிறார். நீங்களும் கருணை கொள்கிறீர்கள்தானே? (பாப்தாதா இருமினார். இன்று பிரம்மாபாபாவின் இருமல் மீண்டும் வந்துவிட்டது) நீங்களும் ஆத்மாக்களின் மீது கருணை கொள்கிறீர்கள், அல்லவா? இப்போது, வருகின்ற இந்த வருடத்தில், ஏனென்றால் இன்று புதிய வருடம் வருகிறது, பழைய வருடம் செல்கிறது... கடந்து செல்லும் இந்த வருடத்திற்காக நீங்கள் என்ன திட்டத்தைச் செய்தீர்கள்? வருடம் போகும். ஆனால், அந்த வருடத்துடன் கூடவே, வேறு எதற்கு நீங்கள் விடை கொடுத்தீர்கள்? எவ்வாறு நீங்கள் வருடத்திற்கு விடை கொடுத்தீர்களோ, அவ்வாறே, உங்களின் வாழ்க்கையில் எதற்கு நீங்கள் விடை கொடுப்பீர்கள்? பின்னர், அதை என்ன புதிய விடயத்தால் நீங்கள் நிரப்புவீர்கள்? நீங்கள் எல்லா வேளைக்கும் விடை கொடுப்பீர்களா அல்லது குறுகிய காலத்திற்கு விடை கொடுப்பீர்களா? இன்னமும் பழைய சம்ஸ்காரங்கள் எவை எல்லாம் எஞ்சி உள்ளனவோ, நீங்கள் அந்த சம்ஸ்காரங்களைப் பார்த்து அறிவதற்கு உங்களின் மனதைப் பயன்படுத்தி, நிச்சயமாக அவற்றை முடிக்க வேண்டும் என்ற சமிக்கையை பாப்தாதா உங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தப் பழைய சம்ஸ்காரங்கள் உங்களின் முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். ஒருபுறம், பாபாவே உங்களின் உலகம் என்று குழந்தைகளான நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, எங்கிருந்து பழைய சம்ஸ்காரங்கள் வரமுடியும்? தந்தை உங்களின் உலகமாக இருக்கும்போது, உங்களின் முயற்சிகளில் தடைகளை உருவாக்கும் பழைய சம்ஸ்காரங்கள் முடிவடைய வேண்டும், அப்படியல்லவா? அமிர்த வேளையில், நீங்கள் அனைவரும் இதயபூர்வமான உரையாடல் செய்யும்போது, இப்போதும் உங்களின் பழைய சம்ஸ்காரங்களே உங்களின் முயற்சிகளைப் பின்தங்க வைக்கின்றன என்று கூறி நீங்கள் உங்களின் அட்டவணையைக் கொடுப்பதைத் தந்தை பார்த்துள்ளார்.

எனவே, இன்று, வருடத்திற்கு விடை கொடுக்கும்போது, உங்களால் அந்த சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுக்க முடியுமா? உங்களால் விடை கொடுக்க முடியுமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அவற்றுக்கு விடை கொடுக்க வேண்டும். உங்களின் கைகளை உயர்த்துவது மிகவும் இலகுவானது. ஆனால், உங்களின் மனங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அவற்றை உயர்த்துங்கள். எல்லா வேளைக்கும் உங்களின் பழைய சம்ஸ்காரங்களுக்கு விடை கொடுப்பதற்கு உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் கைகளை மீண்டும் உயர்த்துங்கள்! அச்சா. குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோர் உங்களின் கைகளை உயர்த்தி, பாப்தாதாவை மகிழ்வித்தீர்கள். குழந்தைகளான நீங்கள் தைரியசாலிகள் என்பதில் பாப்தாதா களிப்படைகிறார். எங்கே தைரியம் இருக்கிறதோ, அங்கே பாப்தாதாவின் சதா ஒத்துழைப்பு இருக்கும். இப்போது நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தியதால், தந்தையின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய இடங்களும் தடைகளில் இருந்து விடுபட்டுள்ளன, அல்லவா? பழைய சம்ஸ்காரங்களே காரணம் என்ற பெறுபேற்றையே பாப்தாதா பெறுகிறார். எனவே இன்று, நீங்கள் எண்ணங்களில் சம்ஸ்காரங்களை முடித்துள்ளீர்கள். அதாவது, தடைகளில் இருந்து விடுபட்ட ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் உங்களின் தைரியத்திற்கான பலனைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? குழந்தைகள் தைரியமான ஓரடி எடுத்து வைக்கும்போது, நிச்சயமாகத் தந்தையின் பல அடிகளின் உதவி கிடைக்கும் என்ற பாப்தாதாவின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவே இன்றிலிருந்து, நீங்கள் பழைய சம்ஸ்காரங்களைக் கையளித்து விட்டீர்கள் என்ற எண்ணத்தை நினைவு செய்யுங்கள். அவை திரும்பி வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏற்கனவே நீங்கள் கையளித்த எதையும் உங்களால் வைத்திருக்க முடியாது. ஏனென்றால், ஒரு தடவை நீங்கள் அதைக் கொடுத்து விட்டால், அது உங்களுக்கு உரியது அல்ல. எனவே, அவை உங்களுடையது இல்லை என்றால், எப்படி அவற்றை உங்களால் வைத்திருக்க முடியும்? நீங்கள் அவற்றைத் தந்தையிடம் ஒப்படைத்தீர்கள். ஆமாம், நீங்கள் அவற்றைத் தந்தைக்கே கொடுக்க வேண்டும், அப்படித்தானே? நீங்கள் அவற்றைக் கொடுத்து விட்டீர்கள் என்பது உறுதியா? நிச்சயமாகவா? இப்போது உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! நிச்சயமாகவா? பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள்.

கலியுகத்தில் வாழ்ந்தவண்ணம், நீங்கள் இந்தச் சங்கம யுகத்தில் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள பேறுகளை அனுபவம் செய்கிறீர்கள் என்பதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உலகத்திற்கு இது கலியுகமே. ஆனால் உங்களுக்கு இது சங்கமயுகம், அதாவது, இது சகல பேறுகளையும் அடைவதற்கான யுகம் ஆகும். சகல இறை பேறுகளையும் கொண்டிருப்பதன், சகல சக்திகள், சகல நற்குணங்கள், நீங்கள் அடைந்த இந்த ஞானத்தின் சகல பொக்கிஷங்களையும் பெற்றுள்ளதன் நடைமுறை அனுபவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவே இன்று, தனிப்பட்ட முறையில் இங்கே அமர்ந்திருந்தாலென்ன அல்லது இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் தொலைவில் அமர்ந்த வண்ணம் பாபா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலென்ன தமது கைகளை உயர்த்திய குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா தனது இதயபூர்வமாக எதை வழங்குகிறார்? அவர் உங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். ஆனால் அந்தப் பாராட்டுக்களுடன் கூடவே, அவர் தனது கரத்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் வைக்கிறார். நீங்களும் பாப்தாதாவும் உங்களின் மனதில் நடனம் ஆடுகிறீர்கள்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! இப்போது உங்களின் மனதினால் நீங்களும் நடனம் ஆடுகிறீர்கள். ‘ஹா ஜி!’ எனச் சொல்லுங்கள். இப்போது ஆசிரியர்களே, கவனமாக இருங்கள்! ஆசிரியர்களான நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! வெளிநாட்டில் இருந்தும் ஆசிரியர்கள் வந்துள்ளார்கள். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் திடசங்கற்பமான எண்ணத்தைக் கேட்கும்போது, தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆக வேண்டும் என்று குழந்தைகளான நீங்கள் வைத்திருக்கும் இலட்சியத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தடைகளில் இருந்து விடுபட்டுள்ள உங்களின் திடசங்கற்பமான எண்ணம் நிறைவிற்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வரும். குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களுக்குள்ளே உள்ள எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள், உலகிலுள்ள சந்தோஷமற்ற, அமைதியற்றவர்களுக்குச் சேவை செய்வதில் உங்களின் மனதைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஏதாவதொரு ஆதாரத்தை வழங்குவீர்கள் என்பதையிட்டும் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், குழந்தைகள் கதறி அழுவதையும் துயரத்தில் அழைப்பதையும் கேட்க பாப்தாதாவால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களும் உங்களின் குடும்பத்தில் பாகமே, அப்படியல்லவா? துன்பமும் அமைதி இன்மையும் அதிகளவில் அதிகரிக்கின்றன. அதனால் இப்போது கருணைநிறைந்தவர்கள் ஆகுங்கள். அதே வேளை இந்த எண்ணத்தையும் கொண்டிருங்கள்: நடக்கும் போதும் அசையும்போதும் அமிர்த வேளையின் போதும் நீங்கள் நிச்சயமாக உங்களின் மனதால் ஆத்மாக்களுக்குச் சேவை செய்வீர்கள். உங்களால் இந்த எண்ணத்தைக் கொண்டிருக்க முடியுமா? எல்லா வேளையும் உங்களின் சம்ஸ்காரங்களை முடிக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை எல்லா வேளைக்கும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்தானே? இது குறுகிய நேரத்திற்கு மட்டும் இல்லையல்லவா? எவ்வாறு நீங்கள் உங்களின் சம்ஸ்காரங்களை முடித்து, தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்களோ, அதேபோல், அருள்பவரின் குழந்தைகளான மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகுங்கள். அத்துடன் நிச்சயமாக உங்களின் மனதால் அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதற்குத் தயாரா? உங்களின் மனதால் நீங்கள் சேவை செய்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா? ஒரே வேளையில் நீங்கள் உங்களின் மனங்களாலும் சேவை செய்யப் போகின்றீர்கள் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நாள் முழுவதும், உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில், நிச்சயமாக அந்தக் காலப்பகுதியில் உங்களின் மனங்களால் சேவை செய்யுங்கள். ஏனென்றால், குழந்தைகளான நீங்களே அந்த உலக சந்தோஷத்தைக் கொண்டு வரவேண்டும். இந்தச் சேவை செய்வதற்குத் தந்தை குழந்தைகளான உங்களைத் தனது வலது கரங்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் உங்களின் கரங்களால் கொடுக்கின்றீர்கள், அல்லவா? எனவே, நீங்களே தந்தையின் வலது கரங்கள் ஆவீர்கள். ஆகவே, பாப்தாதா தனது கரங்களால் நிச்சயமாக ஏதாவதொரு முறையில் தொடர்கின்ற இந்தச் சேவையை வலது கரங்களான உங்களிடம் கொடுக்க விரும்புகிறார். அவர்கள் அழுது அழைக்கிறார்கள்: கொடுங்கள்! கொடுங்கள்! எனவே, சந்தோஷம் அற்றிருப்பவர்களுக்கு நீங்கள் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். துயரப்படுபவர்களுக்கு சிறிது பலத்தைக் கொடுத்து, ஏதாவது புண்ணியக் காரியத்தைச் செய்யுங்கள். இப்போது, குழந்தைகளான நீங்கள் உங்களை அறிவீர்கள், தந்தையை அறிவீர்கள், உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுள்ளீர்கள். அதனால் மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குங்கள். ஏனென்றால், இப்போது அனைவருக்கும் முக்தி தேவைப்படுகிறது. நீங்கள் அனைவரையும் முக்திக்கு அனுப்புவீர்கள். தந்தையின் ஆசீர்வாதங்களால் நீங்கள் இராச்சியத்திற்கான உரிமையைப் பெற்றுக் கொள்வீர்கள். ஆகவே, தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த எண்ணத்தை வழங்குகிறார்: ‘நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டு இருப்பீர்களாக! நீங்கள் ஒரு சேவையாளர் ஆகுவீர்களாக!’ தந்தைக்குச் சொந்தமான குழந்தைகள், சங்கமயுக பிராமண வாழ்க்கையின் களிப்பினை அனுபவம் செய்வதுடன் தொடர்ந்தும் அதை அனுபவம் செய்வார்கள். உங்களைத் தந்தையின் ஆஸ்திக்கு உரிமை உள்ளவர்களாகக் கருதும் நீங்கள், புதியவர்களோ அல்லது பழையவர்களோ, தொடர்ந்தும் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவதுடன் உங்களின் சம்ஸ்காரங்களின் மீது வெற்றியாளர் ஆகுகின்ற எண்ணத்தை எதிர்காலத்திற்காகக் கொண்டிருக்கும் ஆத்மாக்களான நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர் ஆகிவிட்டீர்களா? அல்லது, அதிர்ஷ்டசாலி கைப்பிடி அளவினரில் ஒரு சிலர் ஆகிவிட்டீர்களா? புதல்வி ஜனக் கூறுகிறார்: ‘108 மாலையினதும் 16000 மாலையினதும் ஒன்றுகூடலை நடத்துங்கள்’. நீங்கள் நிச்சயமாக 16000 மணி மாலையில் அல்லது 108 மணிமாலையில் ஒருவர் ஆகுவீர்கள் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்!

புதியவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். பாராட்டுக்கள். தமது புத்திகளில் நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் வெற்றி அடைபவர்கள் இருக்கிறார்கள். புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பவர்களால் முன்னே செல்ல முடியும், அத்துடன் அவர்கள் செல்வார்கள் என்பதை பாப்தாதாவும் அறிவார். அச்சா. இங்கே முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். அனைவரின் சார்பாகவும் பாப்தாதா உங்கள் எல்லோரையும் பாராட்டுகிறார். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், சதா உங்களிடம் உள்ள நம்பிக்கையைத் தொடர்ந்து மீட்டல் செய்யுங்கள். அச்சா. குழந்தைகளான உங்களைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், ‘மிகவும் தாமதமாகி விட்டது’ என்ற காலம் வருமுன்னர் நீங்கள் உங்களின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்று விட்டீர்கள். இதனாலேயே, இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் தமது நிலையங்களில் இருக்கும் குடும்பம் முழுவதன் சார்பாகவும் பாப்தாதா உங்களைப் பாராட்டுக்கிறார். இப்போது, அற்புதத்தைச் செய்து காட்டுங்கள். உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? முன்னரே தடைகளில் இருந்து விடுபட்டவராக ஆகுங்கள். உங்களின் நம்பிக்கையிலும் போதையிலும் முதல் இலக்கத்தவர் ஆகுங்கள். பழையவர்கள் பழையவர்கள்தான், ஆனால் புதியவர்கள் குறுகிய காலத்தில் அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்று பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அச்சா.

இப்போது, பழையவர்களோ அல்லது புதியவர்களோ, உங்கள் அனைவருக்கும் பாப்தாதா ஒரு விநாடிக்குரிய பணியை வழங்குகிறார். இப்போது, உங்கள் அனைவராலும் உங்களை ஏனைய எண்ணங்கள் அனைத்தில் இருந்தும் நீக்கி, ஒரு விநாடியில் ஒரு புள்ளி வடிவத்தில் ஸ்திரம் அடைய முடியுமா? ஒரு விநாடியில், ‘நான் ஒரு புள்ளி’, வேறெந்த எண்ணங்களும் இல்லை. நான் ஒரு புள்ளி. ஒரு விநாடியில் புள்ளி என்ற ஸ்திதியில் தங்களை நிலை நிறுத்தக்கூடியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் இதை ஒரு விநாடியில் செய்தீர்களா? அச்சா. இப்போது, இதை 15 நாட்களுக்குப் பயிற்சி செய்யுங்கள்! நாள் முழுவதும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு தடவை ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். உங்களின் சொந்த இடங்களில் வாழும்போது, அந்தச் சூழலில் இருக்கும்போது, செயல்களில் ஈடுபட்டிருக்கும்போது, உங்களால் ஒரு விநாடியில் புள்ளி ரூபத்தில் உங்களை நிலை நிறுத்துவதில் வெற்றி அடைந்தீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். இங்கே, உங்களுக்குச் சூழல் உதவி செய்யும். ஆனால் ஒரு விநாடியில் ஒரு புள்ளி ரூபத்தில் உங்களால் ஸ்திரம் அடைய முடிகின்றதா எனச் சோதித்துப் பாருங்கள். இதைப் பயிற்சி செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் எந்தளவிற்கு முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்கு ஒரு விநாடியில் புள்ளி ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்துவதற்கான இந்தப் பயிற்சி உங்களுக்குத் தேவை என்று பாப்தாதா கூறியுள்ளார். ஆகவே, உங்களையே சோதித்துப் பார்த்து, உங்களின் அறிக்கையை எழுதி, அதை உங்களின் ஆசிரியரிடம் கொடுங்கள். பின்னர், ஆசிரியர்களின் மூலம் அவர்கள் இங்கே இருந்தாலென்ன அல்லது இல்லாவிட்டாலென்ன - இது அனைத்து வகுப்புக்களுக்குமான வீட்டுவேலை ஆகும் - பாப்தாதா பெறுபேறுகளைப் பெறும்போது, நீங்கள் 108 அல்லது 16000 மணிமாலையில் வரத் தகுதியானவர்களாக என்பதை அவர் பார்ப்பார். உங்களின் நாளாந்த நேர அட்டவணையில், உங்களை ஒரு விநாடியில் ஸ்திரப்படுத்துவதில் நீங்கள் எவ்வளவிற்கு வெற்றி பெற்றீர்கள் என்பது பார்க்கப்படும். இதில் இருந்து, நீங்கள் எந்த மாலைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதும் பார்க்கப்படும். இப்போது உங்களின் கைகளை உயர்த்தும்படி பாப்தாதா உங்களின் கேட்டால், உங்களின் நடைமுறை தாரணைக்கேற்ப யாரெல்லாம் 108 அல்லது 16000 மணி மாலையில் வருவீர்கள் என்று நினைக்கிறீர்களோ, உங்களின் பெறுபேற்றை எழுதுங்கள். அதன்பின்னர், அதில் இருந்து பாபா புரிந்து கொள்வார். ஏனென்றால், தாதிகள் சிலருடைய பெயர்களைக் கொடுத்தால், ‘என்னாலும் அதில் வரமுடியும்தானே?’ என்று ஏனையோர் நினைப்பார்கள். ஆகவே, அனைத்தும் இந்த அறிக்கையில் இருந்து தெரியவரும்.

பாப்தாதா கேட்கிறார்: உங்களால் எப்போதும் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பும் ரூபத்தை அனுபவம் செய்ய முடியுமா? ஒரு விநாடியில்? உங்களுக்குக் கூறப்பட்ட ஐந்து ரூபங்களும், ஒரு விநாடியில் உங்களால் அந்த ரூபத்தில் நீங்கள் விரும்பும் வேளையில் ஆகமுடியுமா? இதைப் பயிற்சி செய்து, நீங்கள் விரும்பும் ஸ்திதியில் உங்களால் ஒரு விநாடியில் இருக்க முடிகிறதா அல்லது அதற்கு நேரம் எடுக்கிறதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் கைகளை உயர்த்துவதில், பெரும்பாலானவர்கள் உங்களின் கைகளை உயர்த்தியதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இப்போது நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தி உள்ளீர்கள். ஆனால் இதைப் பயிற்சி செய்யும்போது, அது துவாபர, கலியுகங்களின் பயிற்சியைப் போன்று இருக்கும். அங்கே சரீர உணர்விற்குள் வருவது இயல்பாக இருக்கும். அதேபோல், நீங்கள் விரும்பிய ரூபத்தில் உங்களை ஸ்திரமாக்குவது உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தப் பயிற்சி உங்களுக்குத் தேவைப்படும் ஒரு நேரம் வரவுள்ளது. அதனால், உங்களின் வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போதே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அத்துடன் உங்களின் கருவி ஆசிரியர்களிடம் உங்களின் பெறுபேறுகளைத் தொடர்ந்தும் கொடுங்கள். எனவே, வருடம் நிறைவு பெறும் வரைக்கும் தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். நீங்களே அதைச் செய்யுங்கள். உங்களின் சொந்த ஆசிரியர் ஆகுங்கள்! எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்து உங்களின் பெறுபேற்றைக் காட்டுவதற்காக உங்களின் அட்டவணையைக் கொடுத்து வந்தால் உங்களின் கவனம் அதில் ஈர்க்கப்படும். உங்களின் கையை நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களால் வைக்க முடியும், அல்லவா? அதேபோல் இதையும் அனுபவம் செய்யுங்கள். அதேபோல், நீங்கள் விரும்பிய ஸ்திதியில் உங்களின் மனதை உங்களால் நிலைநிறுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ‘மன்மனாபவ’ என்ற மகாமந்திரமே இதன் ஞாபகார்த்தம் ஆகும். உங்களின் மனதின் அப்பியாசத்தைச் செய்யும்போது எவ்வளவு வெற்றி அடைந்தீர்கள் என்பதை அனுபவம் செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தையும் சங்கமயுகத்தின் சந்தோஷத்தில், சங்கமயுகத்தின் பேறுகளில், ஏனைய பேறுகள் அனைத்திலும் அனுபவசாலிகள் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் ஒவ்வொரு பேறு, ஒவ்வொரு சக்தி, இந்த ஞானத்தின் ஒவ்வோர் இரகசியம், ஒவ்வொரு யோகா வழிமுறை, ஒவ்வொரு வகையான தாரணையில் அனுபவசாலி ஆகிவிட்டேனா? தொடர்ந்து உங்களை ஒவ்வொரு முறையிலும் சோதித்துப் பார்த்து, தொடர்ந்து அனைத்திலும் முன்னேறிச் செல்லுங்கள். எனவே இன்று, உங்களின் சோதிக்கும் முறையையும் உங்களின் பேறுகளையும் சோதிக்கும்படி பாப்தாதா உங்களிடம் கேட்கிறார். ஏதாவது பேறு உங்களிடம் குறைவாக இருந்தால், நாடகத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப, அவையே உங்களுக்கு ஏற்படுகின்ற பரீட்சைகள் ஆகும். இதனாலேயே, உங்களை மாற்றிக் கொள்வதற்கும் ஒவ்வொரு பாடத்திலும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதற்கும் நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்.

இன்று, உங்களின் சாதாரணமான ரூபத்தில், பாப்தாதா உங்களின் எதிர்கால ரூபத்தையும் உங்களின் பேறுகளின் ரூபத்தையும் பார்க்கிறார். அச்சா. நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள எங்கும் உள்ள அதியன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் பாப்தாதாவிற்குக் கீழ்ப்படிவானவராகி, பாப்தாதாவின் ஒவ்வொரு வழிகாட்டலையும் பின்பற்றுபவர்களுக்கும் தீவிர முயற்சியாளர் குழந்தைகளான உங்களுக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமாக அதிக, அதிகளவு அன்பும் நினைவுகளும் உரித்தாகுக. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். குழந்தைகளான உங்களைப் பார்ப்பதில் பாப்தாதாவும் களிப்படைகிறார்: ஆஹா! ஆஹா! ஆஹா! ஆஹா! எனது குழந்தைகளே! ஆஹா!

வருடம் முழுவதும் தடைகளில் இருந்து விடுபட்டும் சந்தோஷமாகவும் இருங்கள். உங்களின் செயல்களாலும் உங்களின் முகத்தாலும் எவ்வாறு சந்தோஷமாக இருப்பது, எவ்வாறு புன்னகை செய்வது என்பதை அனைவருக்கும் கற்பியுங்கள். தொடர்ந்து நீங்களும் பறந்தவண்ணம் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். நடக்காதீர்கள், ஆனால் பறந்து கொண்டே இருங்கள். அனைவரும் பறக்கும் ஸ்திதியை விரும்புகிறார்கள். ஆகவே, பறந்தவண்ணம் செய்தியைக் கொடுங்கள். உங்களைப் பார்க்கும்போது அனைவரும் சந்தோஷ ஊஞ்சலில் ஆட ஆரம்பிக்க வேண்டும். சந்தோஷமான, சந்தோஷமான, சந்தோஷமான புதுவருடம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல பேறுகளினதும் சொரூபமாகி, உங்களின் இறை பாக்கியமாக ஒளிக்கிரீடத்தைப் பெறுவீர்களாக.

உலகில், பாக்கியத்தின் அடையாளம் இராச்சியம் ஆகும், இராச்சியத்தின் அடையாளம் ஒரு கிரீடம் ஆகும். அதேபோல், இறை பாக்கியத்தைக் கொண்டிருப்பதன் அடையாளம், ஒளிக்கிரீடம் ஆகும். இந்தக் கிரீடத்தைப் பெறுவதற்கான அடிப்படை தூய்மையே ஆகும். முற்றிலும் தூய ஆத்மாக்கள், ஒளிக்கிரீடத்தைக் கொண்டிருப்பதுடன் கூடவே, சகல பேறுகளாலும் நிறைந்திருப்பார்கள். ஏதாவது பேறு இல்லாமல் போனாலும் ஒளிக்கிரீடம் தெளிவாகப் புலப்பட மாட்டாது.

சுலோகம்:
தமது ஆன்மீக ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களால் மட்டுமே, தமது மனங்களை மகாதானிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்த முடியும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

இப்போது, இது நல்லது, ஆனால் நல்லவர்கள் ஆகுவதற்கான தூண்டுதலை தாம் பெறுவதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்கு ஒரு வழிமுறையே உள்ளது: ஒன்றுதிரட்டிய முறையில் எரிமலை ரூபம் ஆகுங்கள். ஒவ்வொருவரும் உயிர்வாழும் வெளிச்சவீடு ஆகவேண்டும். நீங்கள் சேவையாளர்களும் அன்பானவர்களும் ஆவீர்கள். உங்களிடம் ஒரே பலம், ஒரே ஆதாரம் உள்ளன. அவை அனைத்தும் நல்லதே. ஆனால் உங்களிடம் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஸ்திதி இருக்கும்போதே, அனைவரும் விட்டில் பூச்சிகளைப் போல் உங்களைச் சுற்றி வட்டமிட ஆரம்பிப்பார்கள்.