12.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது இப்போது இராவண இராச்சியம் ஆகும். பழைய உலகம் முடிவடைந்து, புதிய உலகம் வருகின்றது. ஆகையால், ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மை ஆகினால், நீங்கள் மேன்மையான தேவர்கள் ஆகுவீர்கள்.
கேள்வி:
தந்தை தனது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்ற சத்திய நாராயணனின் கதையின் அர்த்தம் என்ன?பதில்:
இராச்சியத்தைப் பெறுவதும் இழப்பதுமே அக்கதையின் அர்த்தமாகும். முதலாமவர் (அல்ஃபா) அல்லாவை கண்டு கொண்டதால், தன் ‘கழுதைத்தனத்தை’ துறந்தார். உலகின் அதிபதியாக இருந்தவர் 84 பிறவிகளை எடுத்துத் தன் இராச்சியத்தை இழந்தார். பின்னர் தந்தை வந்து, அவருக்கு மீண்டும் ஒருமுறை அந்த இராச்சியத்தைக் கொடுத்தார். தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாகி “கழுதைத்தனத்தை” துறந்து, இராச்சியத்தைப் பெற்ற உண்மையான கதையே, தந்தை உங்களுக்குக் கூறுகின்ற சத்திய நாராயணனின் கதையாகும்.பாடல்:
நாங்கள் காத்திருந்த அந்த நாள் இறுதியில் வந்துவிட்டது.ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ என்பதன் அர்த்தத்தை ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ‘நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம்’ என்பதே ஓம் என்பதன் அர்த்தமாகும். ஆத்மா கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நீங்கள் ஓர் ஆத்மா என்பதையும், அது உங்கள் சரீரம் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனமும், புத்தியும் ஒவ்வோர் ஆத்மாவிலும் உள்ளன. புத்தி சரீரத்தில் இருப்பதில்லை. நல்ல, தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மாவே பிரதானமானவர். எவராலும் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆத்மா சரீரத்தைப் பார்க்கிறார். ஆனால் சரீரத்தினால் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆத்மா சரீரத்தை விட்டுச் சென்றதும், சரீரம் உயிரற்றதாகி விடுகிறது. ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆனால் சரீரத்தைக் காண முடியும். அவ்வாறே, மக்கள் ‘ஓ தந்தையான கடவுளே’ என அழைக்கும் ஆத்மாக்களின் தந்தையைக் காண்பதும் சாத்தியம் இல்லை. அவரை உணர்ந்தும், புரிந்து கொள்ளவும் முடியும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. அவர்கள் சரீரங்களில் இருக்கும் போது சகோதரர்கள் அல்லது சகோதர, சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பரமாத்மாவான பரம தந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். லௌகீக சகோதர சகோதரிகளால் ஒருவரையொருவர் பார்க்க முடியும். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஒருவரே. ஆனால் அவரைப் பார்க்க முடியாது. பழைய உலகைப் புதியதாக ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். புதிய உலகம் சத்தியயுகம் ஆகும், ஆனால் இந்தப் பழைய உலகம் கலியுகமாகும். அது இப்பொழுது மாற்றமடைய வேண்டும். ஒரு பழைய வீடு எவ்வாறு அழிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்படுகிறதோ, அவ்வாறே இப்பழைய உலகும் அழிக்கப்படுகிறது. சத்திய யுகத்தின் பின்னர், திரேதா, துவாபர, கலியுகங்கள் இருக்கும். அதன் பின்னர் நிச்சயமாக மீண்டும் சத்தியயுகம் வரும். உலக வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும். சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. சூரிய சந்திர வம்சங்கள் அரைக்கல்பத்திற்குத் தொடரும். அவர்கள் அதனை இலக்ஷ்மி நாராயணனினதும் இராமர் சீதையினதும் வம்சங்கள் எனவும் அழைப்பார்கள். எனவே இது இலகுவானது. பின்னர் ஏனைய சமயங்கள் அனைத்தும் துவாபர, கலியுகங்களிலேயே வருகின்றன. தூய்மையாக இருந்த தேவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். இது இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மக்கள் இராவணனின் கொடும்பாவி ஒன்றை எரிக்கிறார்கள். ஆனால் அவனோ ஒருபோதும் எரிவதில்லை. அவனே அனைவரதும் கொடிய எதிரி என்பதனாலேயே அவனின் கொடும்பாவியை எரிக்கும் வழக்கம் உள்ளது. பாரதத்தின் முதலாவது எதிரி இராவணன் ஆவான். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் குதாவே பாரதத்தின் முதலாவது நண்பன் ஆவார். குதா நண்பன் எனப்படுகிறார். குதாவை நண்பனாகவும், இராவணனை எதிரியாகவும் அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று உள்ளது. குதாவான நண்பனின் கொடும்பாவியை நீங்கள் ஒருபோதும் எரிக்க மாட்டீர்கள். இராவணன் எதிரி என்பதாலேயே ஒவ்வொரு வருடமும் 10 தலை இராவணனின் கொடும்பாவி ஒன்றைச் செய்து எரிக்கிறார்கள். இராம இராச்சியம் தேவை எனக் காந்திஜியும் கூறினார். இராம இராச்சியத்தில் சந்தோஷமும் இராவண இராச்சியத்தில் துன்பமும் உள்ளது. இவை அனைத்தையும் விளங்கப்படுத்துபவர் யார்? தூய்மையாக்கும் தந்தையான சிவபாபாவும் பிரம்மா தாதாவும் ஆகும். பாபா எப்பொழுதும் பிரஜாபிதாவான “பாப்தாதா” என்றே கையொப்பம் இடுவார். ஆதாம் என்று அழைக்கப்படுகின்ற பிரஜாபிதா பிரம்மாவே அனைவரினதும் தந்தை ஆவார். அவரே முப்பாட்டனார் ஆவார். அவரே மனிதவர்க்கத்தின் தந்தை ஆவார். பிரஜாபிதா மூலம் பிராமணர்கள் உருவாக்கப்பட்டு, பின்னர் அவர்கள் தேவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் தேவர்களாகிப் பின்னர் சத்திரியர்களாகவும் வைசிகர்களாகவும் பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுகின்றனர். இவர் பிரஜாபிதா பிரம்மா என்று அழைக்கப்படுகின்றார். மனித உலகின் தலைவரான பிரஜாபிதா பிரம்மாவுக்கு பல குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவரை “பாபா, பாபா” என்று அழைக்கிறார்கள். இவரே சரீரத் தந்தையும், சிவபாபா அசரீரியான தந்தையும் ஆவார். பிரஜாபிதா பிரம்மா மூலமே புதிய உலகம் உருவாக்கப்படுகிறது என நினைவு கூரப்படுகிறது. இது தூய்மையற்ற உலகமாகிய இராவண இராச்சியம் ஆகும். இராவணனின் அசுரத்தனமான உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. அதற்காக, மகாபாரத யுத்தம் இடம்பெற உள்ளது. பின்னர் சத்தியயுகத்தில், எதிரியான இராவணனின் கொடும்பாவியை எவருமே எரிக்கமாட்டார்கள். அங்கே இராவணன் இருக்க மாட்டான். இராவணனே இந்தத் துன்ப உலகை உருவாக்கினான். அதிகளவு செல்வமும், மாட மாளிகைகளும் உள்ளவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒருவரிடம் பல மில்லியன்கள் செல்வம் இருந்தாலும் அவரிடம் அமைதி இல்லை. அவரின் பணம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது. புதிய உலகில் புதிய சுரங்கங்கள் தோன்றும். அதன் மூலம் புதிய உலகின் மாளிகைகள் போன்றன கட்டப்படும். இப்பழைய உலகம் இப்பொழுது அழியப் போகிறது. சத்தியயுகத்தில் உள்ளவர்கள் விகாரம் அற்றவர்கள், அதாவது முற்றிலும் விகாரம் அற்றவர்கள். யோகசக்தியினாலேயே அங்கே குழந்தைகள் பிறக்கின்றனர். அங்கே விகாரங்கள் இருப்பதில்லை. அங்கே சரீர உணர்வோ அல்லது காமமோ அல்லது கோபமோ இருப்பதில்லை. ஐந்து விகாரங்களுமே அங்கே இல்லை. ஆகையாலேயே அவர்கள் அங்கே இராவணனை ஒருபோதும் எரிப்பதில்லை. இங்கே இது இராவண இராச்சியம் என்பதனாலேயே அனைவரும் அழைக்கிறார்கள்: தூய்மையாக்குபவரே வாருங்கள்! அவரே முக்தியளிப்பவரும், அனைவரின் துன்பத்தை நீக்குபவரும் ஆவார். அனைவரும் இப்பொழுது இராவண இராச்சியத்திலேயே இருக்கின்றனர். உங்களுக்கு முக்தியை அளிக்கவே தந்தை வரவேண்டும். தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட உள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் மேன்மையான தேவர்கள் ஆகுவார்கள். விநாசம் இடம்பெற்று அனைத்துமே அழிக்கப்படும். யார் பாதுகாக்கப்படுவார்கள்? ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மை ஆகுபவர்கள். அவர்களே தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி உலக இராச்சிய உரிமையெனும் ஆஸ்தியைப் பெறுவார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. இது இப்பொழுது அழிக்கப்படவுள்ள இராவண இராச்சியம் ஆகும். இராம இராச்சியமான சத்தியயுகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட வேண்டும். இது சீதையின் இராமர் அல்ல. அவர்கள் சமய நூல்களில் வீணான பல விடயங்களை எழுதியுள்ளார்கள். முழு உலகமுமே இலங்கை ஆகும். அதில் உள்ள அனைத்தும் இராவண இராச்சியமே. சத்தியயுகத்தில் பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தபோது வேறு எந்த இராச்சியங்களும் அங்கே இருக்கவில்லை. தந்தை வந்து பாரதத்தை மீண்டும் ஒருமுறை தங்கச் சிட்டுக்குருவியான சுவர்க்கம் ஆக்குகிறார். ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். சமுத்திரம் முழுவதுமே நிரம்பிவழியும். பம்பாய் முன்னர் என்னவாக இருந்தது? அது ஒரு சிறிய கிராமமாகவே இருந்தது. சத்தியயுகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுவதால் பம்பாய் முதலியவை எஞ்சியிருக்கப் போவதில்லை. சத்தியயுகத்தில் வெகுசில மனிதரே இருப்பார்கள். டெல்லியே அதன் தலைநகரமாக இருக்கும். அங்கே இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருக்கும். சத்திய யுகத்தில் தேவதைகளின் இடமாக டெல்லியே இருக்கும். இராச்சியம் டெல்லியிலேயே இருந்தது. இராம இராச்சியத்திலும் டெல்லியே தலைநகரமாக இருந்தது. எவ்வாறாயினும் இராம இராச்சியத்தில் வைரமும், தங்கமும் பதித்த மாளிகைகள் இருந்தன. அங்கே பெருமளவு சந்தோஷமும் இருந்தது. தந்தை கூறுகிறார்: நீங்கள் உலக இராச்சியத்தை இழந்து விட்டீர்கள். நான் அதனை மீண்டும் ஒருமுறை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றேன். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் மேன்மையானவர்கள் ஆக விரும்பினால் என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். சரீரதாரிகள் எவரையும் நினைவு செய்யாதீர்கள். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி உங்களின் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதானாக மாறுவீர்கள். பின்னர் நீங்கள் என்னிடம் வருவீர்கள். நீங்கள் என் கழுத்தின் மாலையாகிய பின்னர், விஷ்ணுவின் கழுத்தில் மாலை ஆகுவீர்கள். நானே மாலையின் உச்சியில் இருக்கிறேன். எனக்குப் பின்னர் பிரம்மா சரஸ்வதி தம்பதியினர் உள்ளனர். அவர்களே சத்தியயுக சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் ஆகுகிறார்கள். முழு மாலையிலும் உள்ளவர்கள் வரிசைக்கிரமமாகவே சிம்மாசனத்தில் அமருவார்கள். பிரம்மா, சரஸ்வதி மற்றும் பிராமணர்களின் மூலம் நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறேன். முயற்சி செய்பவர்களின் ஞாபகார்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆத்மாக்களின் வசிப்பிடம் பரந்தாமமே ஆகும். அது பிரம்மலோகம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் அங்கே தந்தையுடன் இனிய வீட்டிலே வசிக்கிறோம். அதுவே அமைதி தாமம் ஆகும். மக்கள் முக்தி தாமத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் எவராலும் வீடு திரும்ப முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது பாகத்தை நடிக்க வரவே வேண்டும். அது வரையில், தந்தை தொடர்ந்தும் உங்களைத் தயாராக்குகிறார். நீங்கள் தயாரானதும் மேலே உள்ள ஆத்மாக்கள் அனைவரும் இங்கே கீழே வந்தபின்னர், அனைத்துமே ஒரு முடிவிற்கு வரும். பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் சென்று வரிசைக்கிரமமாக ஆட்சி செய்வீர்கள். சக்கரம் தொடரும். நீங்கள் பாடலையும் கேட்டீர்கள். நாங்கள் காத்திருந்த அந்த நாள் இறுதியில் வந்துவிட்டது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அலைந்து திரிந்தீர்கள். தந்தையே ஞான சூரியன் ஆவார். ஞான சூரியன் உதிக்கும் பொழுது அறியாமை எனும் இருள் அகற்றப்படும். உலகின் ஆரம்பம், நடு இறுதியின் இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நரகவாசிகளாக உள்ள பாரத மக்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள் என்பதும் மற்ற ஆத்மாக்கள் அனைவருமே சாந்திதாமத்திற்குச் செல்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு சிறிதளவையே விளங்கப்படுத்த வேண்டும். அல்பா என்பது பாபா, பீற்றா என்பது இராச்சியம். நீங்கள் உங்கள் இராச்சியத்தை அல்பாவிடம் இருந்து பெற்றதும் கழுதைத்தனம் முடிவடைகிறது. தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு அந்தக் கதையைக் கூறுகிறார். இதுவே சத்தியநாராயணனின் உண்மைக் கதையாகும். மற்றவை அனைத்தும் கட்டுக்கதைகளே. உங்களை சாதாரண மனிதனிலிருந்து நாரயணன் ஆக்குவதற்காகவே பாபா இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எப்போது தொடங்கி எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்தது எனும் வரலாறும், புவியியலும் உள்ளன. ஆகையால், இது ஒரு கதையாகும். அல்லவா? உலகை ஆட்சி செய்தவர்கள் 84 பிறவிகளை எடுத்து முற்றிலும் தமோபிரதான் ஆகினார்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது அதே இராச்சியத்தை மீண்டும் ஒரு முறை ஸ்தாபிக்கிறேன். நீங்கள் தூய்மையற்றவராக இருந்து எவ்வாறு தூய்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாக இருந்து எவ்வாறு தூய்மை அற்றவர்களாகவும் ஆகினீர்கள் எனும் முழு வரலாற்றையும் புவியியலையும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் முதலில் சூரிய வம்சம் இருந்தது. அதன் பின் சந்திர வம்சம் போன்றன இருந்தன. அவர்களின் பின்னர் பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். முன்னர் இருந்த தேவதர்மம் மறைந்து, பின்னர் உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றது. சமயநூல்களில், அவர்கள் பிரம்மாவிற்கு 100 வயதைக் காட்டியுள்ளார்கள். தந்தை உங்கள் ஆஸ்தியை கொடுப்பதற்காக அமர்ந்திருக்கும் இந்த பிரம்மாவும் தனது சரீரத்தை நீக்குவார். ஆத்மாக்களின் தந்தையே ஆத்மாக்களுடன் பேசுகிறார். அவரே தூய்மையாக்குபவர். மனிதரால் மனிதரைத் தூய்மையாக்க முடியாது. முக்தி அடைய முடியாதவர்களால் எவ்வாறு முக்தியளிக்க முடியும்? அந்த எண்ணிக்கையற்ற குருமார்கள் அனைவரும் பக்தியையே கற்பிக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்: இன்னாருக்காக பக்தி செய்யுங்கள். வேறு சிலர் சமய நூல்களைச் செவிமடுக்கும்படி கூறுகிறார்கள். பல கருத்துக்களும், அபிப்பிராயங்களும் உள்ளன! இதனாலேயே அனைவரும் மென்மேலும் விவேகம் அற்றவர்கள் ஆகியுள்ளனர். தந்தை இப்பொழுது வந்து உங்களை விவேகிகள் ஆக்குகிறார். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமான உலக அதிபதிகளாக இருந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்! நரகவாசிகளான உங்களை சுவர்க்கவாசிகளாக மாற்றுவதற்காகச் சிவபாபா இப்பொழுது வந்துள்ளார். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துவதால், உங்கள் பாக்கியம் விழிப்படைகிறது. மனிதர்கள் அனைவரினதும் பாக்கியத்தை விழித்தெழச் செய்வதற்காகவே தந்தை வருகிறார். அனைவருமே தூய்மையற்றும் சந்தோஷமற்றும் இருக்கிறார்கள். அனைவரும் விரக்திக் கூக்குரல் எழுப்புவார்கள். அத்துடன் அழிக்கப்படுவார்கள். இதனாலேயே பாபா கூறுகிறார்: விரக்திக் கூக்குரல் எழுப்புவதற்கு முன்னர் உங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலகில் காண்பவை எல்லாம் அழிக்கப்பட உள்ளன. பாரதத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் உள்ளன. இது பாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகமே. அதன் எழுச்சி சத்தியயுகத்திலேயே உள்ளது. ஆனால் இப்பொழுது கலியுகத்தில் அதன் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளது. இவை அனைத்தும் இராவண இராச்சியத்தின் பகட்டே ஆகும். விநாசம் இப்பொழுது இடம்பெற உள்ளது. உலகின் வீழ்ச்சியும், உலகின் எழுச்சியும் இடம்பெறும். யார் சத்திய யுகத்தை ஆட்சி செய்வார்கள் என்பதைத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். தேவர்களின் இராச்சியமே பாரதத்தின் எழுச்சியும், இராவண இராச்சியமே பாரதத்தின் வீழ்ச்சியும் ஆகும். புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டு பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. அதன் முன்னர் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே நீங்கள் கற்கிறீர்கள். இது மிகவும் இலகுவானது. மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வி இதுவேயாகும். சந்நியாசிகள் துறவுப்பாதையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சமயம் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் இல்லறப்பாதையைத் துறந்து சென்று விடுகிறார்கள். அவர்களின் துறவு எல்லைக்கு உட்பட்டது. நீங்கள் இப்பழைய உலகைத் துறந்ததும், இங்கே திரும்பி வரமாட்டீர்கள். எந்தச் சமயம் எந்தக் காலத்தில் வருகிறது என்பது மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். துவாபரயுகம் ஆரம்பித்த பின்னரே ஏனைய சமயங்கள் அனைத்தும் வருகின்றன. நீங்கள் முதலில் சந்தோஷத்தை அனுபவம் செய்து, பின்னர் துன்பத்தை அனுபவம் செய்கிறீர்கள். முழுச்சக்கரமுமே உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் சக்கரத்தினுள் வந்த காலம் முதல், நீங்கள் சக்கரவர்த்திகள் சக்கரவர்த்தினிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அல்பாவையும் பீற்றாவையும் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். எவரும் வெளிநாடு செல்வதை பாபா தடுப்பதில்லை. அனைவரும் தமது தாய்நாட்டில் மரணிப்பதையே விரும்புகிறார்கள். விநாசம் நிச்சயமாக இடம்பெற உள்ளது. அதிகளவு குழப்பங்கள் இருக்கும் என்பதால் உங்களால் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்ய இயலாதிருக்கும். இதனாலேயே பாரததேசமே மிக மேன்மையான நாடு எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இங்கேயே தந்தை வந்து அவதரிக்கின்றார். சிவனின் பிறந்த தினமும் இங்கேயே கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரின் பெயரைப் பயன்படுத்தியதால் சிவனின் புகழ் அனைத்துமே அற்றுப் போய்விட்டது. மனிதர்கள் அனைவருக்கும் முக்தியளிப்பவர் வந்து இங்கேயே அவதரிக்கிறார். தந்தையாகிய கடவுளே வந்து அனைவருக்கும் முக்தியை அளிக்கிறார். அத்தகைய தந்தைக்கு நீங்கள் தலைவணங்க வேண்டும். நீங்கள் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடவும் வேண்டும். எவ்வாறாயினும் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவரின் மதிப்பு அனைத்துமே இழக்கப்பட்டு விட்டது. உண்மையில் பாரதமே மிக மேன்மையான யாத்திரை ஸ்தலமாகும். அதே தந்தையே இங்கே வந்து அனைவரையும் தூய்மை ஆக்குகிறார். ஆதலால் இதுவே எல்லாவற்றிலும் மிக மேன்மையான யாத்திரைத்தலம் ஆகும். சீரழிந்திருக்கும் அனைவருக்கும் அவர் முக்தியளித்து அவர்களுக்கு சற்கதியை அருள்கின்றார். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. எங்கள் பாபா இந்த இரகசியங்களை அவரின் இந்தச் சரீரத்தின் மூலம் எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரத்தின் ஊடாகச் செவிமடுக்கிறோம். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்தால், துரு தொடர்ந்தும் அகற்றப்பட்டு நீங்கள் தூய்மையாகி தந்தையிடம் செல்வீர்கள். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவு செய்யும் போது, அதிகளவிற்குத் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் மேலும் பலரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கும் பொழுது பலரின் ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெற்று, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதனாலேயே ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்பது நினைவு கூரப்படுகிறது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் கழுத்து மாலையாகவும், பின்னர் விஷ்ணுவின் கழுத்து மாலையாகவும் ஆகுவதற்கு முழுமையாக சதோபிரதான் ஆகுங்கள். ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களையே பின்பற்றுங்கள்.2. ஆத்மாக்கள் பலரிடம் இருந்து ஆசீர்வாதங்களைத் தொடர்ந்தும் பெறக்கூடிய வகையில் சேவை செய்யுங்கள். விரக்திக் கூக்குரல்கள் ஆரம்பமாகும் முன்னர் தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
அன்பாக இருத்தல் என்பதன் ஆழமான அர்த்தத்தை அறிந்திருப்பதன் மூலம் நீங்கள் ராஸ்யுக்தாகவும், யோக்யுத்தாகவும் இருந்து அனைவரையும் திருப்திபடுத்துவீர்களாக.சர்வசக்திவான் மீது அன்பாக இருக்கின்ற குழந்தைகள் இயல்பாகவே அனைவரின் மீதும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். இதன் ஆழமான அர்த்தத்தை புரிந்திருப்பவர்கள் தெய்வீகக் குணங்களினால் ராஸ்யுக்தாகவும், யோக்யுக்தாகவும், யுக்தியுக்தாகவும் ஆகுகிறார்கள். அத்தகைய ராஸ்யுக்த் ஆத்மாக்கள் இலகுவாக ஆத்மாக்கள் அனைவரையும் திருப்திபடுத்துகிறார்கள். இந்த இரகசியத்தை அறியாதவர்கள் சிலவேளைகளில் பிற ஆத்மாக்களை குழப்பம் அடையச் செய்வதுடன் சிலவேளைகளில் தாமும் குழப்பம் அடைகின்றார்கள். ஆகையால், சதா அன்பாக இருக்கின்ற இரகசியத்தை அறிந்து ராஸ்யுக்த் ஆகுங்கள்.
சுலோகம்:
கருவிகளாக இருப்பவர்கள் தமது பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற போதிலும், சதா இலேசாக இருக்கிறார்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
பாப்தாதாவிற்கு எப்பொழுதும் பெரிய, எல்லையற்ற இதயம் உள்ளது என்பதால் அவர் அனைவரதும் இதயத்தை வெல்கின்ற, இதயத்திற்கு சௌகரியம் அளிப்பவர் ஆவார். அவ்வாறே, குழந்தைகளாகிய உங்களுக்கும் எல்லையற்ற இதயங்கள் உள்ளதுடன் நீங்கள் பரோபகார இதயம் கொண்டவர்கள். நீங்கள் அருள்கின்ற இதயத்தை கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சந்தோஷ இதயங்களினால், நீங்கள் உலகைச் சந்தோஷம் ஆக்குகின்ற சந்தோஷ ஆத்மாக்கள் ஆவீர்கள். மேன்மையான ஆத்மாக்களாகிய நீங்களே உலகின் ஆதாரங்கள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் ஏற்றப்பட்ட, வாழ்கின்ற விளக்குகள் என்பதால் உலகம் ஞானோதயம் பெறுகின்றது. நீங்கள் அனைவரும் ஏறுகின்ற ஸ்திதியை அடையும் போது, ஆத்மாக்கள் அனைவருமே நன்மை அடைகிறார்கள்.