12.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் படகுகள் அனைத்தையும் நச்சுக் கடலிலிருந்து அகற்றி, பாற்கடலுக்கு உங்களை அழைத்துச் செல்வதற்காகத் தந்தை படகோட்டியாக இங்கு வந்துள்ளார். இப்பொழுது நீங்கள் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

பாடல்:
ஒவ்வொருவரின் பாகத்தையும் அவதானிக்கும்போது, குழந்தைகளாகிய நீங்கள் ஏன் எவரையும் அவதூறு செய்ய முடியாது?

பதில்:
இந்நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதாலாகும். இதில் ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தையே நடிக்கின்றார். எவரையும் எதற்காகவும் குற்றஞ் சாட்ட முடியாது. இந்தப் பக்தி மார்க்கம் மீண்டும் கடந்து செல்ல வேண்டும். அதில் சிறிதளவு மாற்றமும் இருக்க முடியாது.

கேள்வி:
முழுச் சக்கரத்தின் ஞானமும் எந்த இரு வார்த்தைகளுக்குள் அடங்கியுள்ளது?

பதில்:
இன்றும் நாளையும் எனும் வார்த்தைகள் ஆகும். நேற்று, நாங்கள் சத்திய யுகத்தில் இருந்தோம். இன்று, நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து, நரகத்தை அடைந்து விட்டோம். நாளை, மீண்டும் நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வோம்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் எவ்விடத்திலிருந்தும் எந்த நிலையங்களிலிருந்து இங்கு வந்திருந்தாலும் அந்த நிலையங்களில் இருக்கும் போது அதிமேலான பாபாவின் முன்னிலையில் நீங்கள் நேரடியாக அமர்ந்திருப்பதாக நினைப்பதில்லை. அவர் எங்கள் ஆசிரியர். அவர் ஒருவரே எங்கள் படகுகளையும் அக்கரைக்குக் கொண்டு செல்வார். அவர் குரு என்றும் அழைக்கப்படுகின்றார். இங்கு நீங்கள் அவர் முன்னிலையில் நேரடியாகவே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அவர் எங்களை இந்த நச்சுக் கடலிலிருந்து அகற்றி, பாற்கடலுக்கு அழைத்துச் செல்கின்றார். உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்ற தந்தை உங்கள் முன்னிலையில் நேரடியாகவே அமர்ந்திருக்கின்றார். தந்தை சிவனின் ஆத்மாவே பரமன் எனவும் அதிமேலான கடவுள் எனவும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது அதிமேலான கடவுளாகிய சிவபாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் இவரில் அமர்ந்திருக்கின்றார் (பிரம்மாவின் சரீரத்தில்). அவர் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். அவருக்கும் நிச்சயமாக ஓர் இரதம் தேவைப்படுகின்றது. வேறு எவ்வாறு அவரால் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்க முடியும்? பாபாவே உங்கள் தந்தையும் ஆசிரியரும் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்பவரும் என்ற நம்பிக்கை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது அமைதி தாமமாகிய எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்கின்றோம். அந்த பாபா எங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். அங்கு நிலையத்தில் அமர்ந்திருப்பதற்கும் இங்கு நேரடியாக பாபாவின் முன்னால் அமர்ந்திருப்பதற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. அங்குஇ நீங்கள் பாபாவின் முன்னால் நேரடியாக அமர்ந்திருப்பதாக நினைக்க மாட்டீர்கள். இந்த உணர்வு இங்கே உங்களுக்கு ஏற்படுகின்றது. இப்பொழுது நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். உங்களை முயற்சி செய்யத் தூண்டும் ஒரேயொருவர் பூரிப்படைவார். நாங்கள் இப்பொழுது தூய்மையாகி, வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றோம். ஓரு நாடகத்தின் நடிகர்கள் எப்பொழுது நாடகம் முடிவடைந்தது என்பதைப் புரிந்துகொள்வார்கள். தந்தை ஆத்மாக்களாகிய எங்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். நீங்கள் எவ்வாறு வீடு திரும்ப முடியும் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். எங்கள் படகை அக்கரைக்குக் கொண்டு செல்கின்ற அவரே தந்தையும் படகோட்டியும் ஆவார். மக்கள் இதனைப் பாடுகின்றார்கள் ஆயினும், 'படகு" எனக் கூறும்போது எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவர் சரீரத்தை எடுத்துச் செல்வாரா? அவர் ஆத்மாக்களாகிய எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆத்மா இச்சரீரத்துடன் இப்பொழுது நச்சாறாகிய விலைமாதர் இல்லத்தில் இருக்கின்றார். நாங்கள் ஆதியில் அமைதி தாமத்தில் வசிப்பவர்களாக இருந்தோம். எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்ற, அதாவது, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்ற தந்தையைக் கண்டுகொண்டோம். அது உங்கள் இராச்சியமாக இருந்தது. பின்னர், இராவணனாகிய மாயை அதனை அபகரித்து விட்டாள். அந்த இராச்சியம் நிச்சயமாக மீண்டும் மீட்கப்பட வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது உங்கள் வீட்டை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அங்கு சென்று, பின்னர் பாற்கடலுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கு, இது நச்சுக் கடலாகும். அங்கு, அது பாற்கடலாகும். அசரீரி உலகே அமைதிக் கடலாகும். மூன்று உலகங்கள் உள்ளன. இது துன்ப உலகமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களுக்கு இதனைக் கூறுபவர் யார்? அவர் யார் மூலம் உங்களுக்குக் கூறுகின்றார்? நாள் முழுவதும் அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இனிய குழந்தைகளே! ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மையற்;றுள்ளனர். அவர்கள் அதற்கேற்பவே சரீரங்களைப் பெறுகின்றார்கள். நீங்கள் நிஜமான தங்க ஆபரணங்களாக இருந்தீர்கள். பின்னர் உங்களுக்குள் கலப்படம் கலக்கப்பட்டு விட்டதால், நீங்கள் பொய்யானவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது அந்தப் பொய்மை எவ்வாறு அகற்றப்பட முடியும்? இது நினைவு யாத்திரையின் சூளை எனப்படுகின்றது. அது நெருப்பினால் நிஜத் தங்கமாகுகின்றது. தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கொடுத்து வந்த விளக்கத்தையே இப்பொழுதும் கொடுக்கின்றேன். 5000 வருடங்களுக்குப் பின்னர் வந்து 'குழந்தைகளே, தூய்மையாகுங்கள்!" என உங்களுக்குக் கூறுவதே எனது பாகமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் சத்திய யுகத்தில் தூய்மையாக இருந்தீர்கள். அமைதி தாமத்தில் ஆத்மாக்கள் தூய்மையாக இருந்தார்கள். அது எங்கள் வீடாகும். அது அத்தகையதோர் இனிய வீடாகும். அங்கு செல்வதற்காக மக்கள் பெரும் பாடுபடுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக மீண்டும் இங்கு வர வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள், சந்தோஷமற்றிருக்கும்போது “ஓ கடவுளே, எங்களை உங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள்! எங்களை ஏன் இங்கு துன்பத்தில் விட்டுச் சென்றீர்கள்?” எனக் கூறுவதைப் புரிந்துகொண்டீர்கள். தந்தை பரந்தாமத்தில் வசிப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் கூறுகின்றீர்கள்: ஓ கடவுளே, எங்களைப் பரந்தாமத்திற்கு அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் இதனைச் சத்திய யுகத்தில் கூற மாட்டீர்கள். அங்கு, சந்தோஷத்தைத் தவிர, வேறெதுவும் கிடையாது. இங்கு, பல வகையான துன்பம் உள்ளது. இதனாலேயே மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ கடவுளே! ஆத்மாக்கள் நினைவைக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும், அவர்களுக்குக் கடவுளைத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் அறிமுகத்தைப் பெற்று விட்டீர்கள். தந்தை பரந்தாமத்தில் வசிக்கின்றார். மக்கள் வீட்டை நினைவுசெய்கின்றார்கள். 'எங்களை இராச்சியத்திற்கு அழையுங்கள்" என அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. அவர்கள் ஒருபோதும் இராச்சியத்தைக் கேட்பதில்லை. தந்தை இராச்சியத்தில் வசிப்பதும் இல்லை. அவர் அமைதி தாமத்திலேயே வசிக்கின்றார். அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். பரந்தாமத்தில் நிச்சயமாகக் கடவுளுடன் இருக்கும்போது, அமைதி இருக்கும். அது முக்தி தாமம் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவே ஆத்மாக்களின் இருப்பிடமாகும். ஆத்மாக்கள் அங்கிருந்தே வருகின்றார்கள். சத்திய யுகம் வீடு என அழைக்கப்படுவதில்லை. அது இராச்சியம் ஆகும். நீங்கள் இப்பொழுது பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்து, இங்கு நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை 'குழந்தைகளே, குழந்தைகளே!" எனக் கூறியவாறு உங்களுடன் பேசுகின்றார். தந்தையாக அவர் உங்களுடன் உரையாடி, 'குழந்தைகளே, குழந்தைகளே!" என உங்களை அழைக்கின்றார். ஆசிரியராக, அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை, அதாவது, வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்துகிறார். இவ் விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. அசரீரி உலகமே ஆத்மாக்களாகிய உங்களின் வீடு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சூட்சும உலகம் தெய்வீகக் காட்சிகளுக்கானதாகும். எவ்வாறாயினும், சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் இங்கேயே உள்ளன. இங்கேயே நீங்கள் ஒரு பாகத்தை நடிக்கிறீர்கள். சூட்சும உலகில் எந்தப் பாகமும் நடிக்கப்படுவதில்லை. அது காட்சிகளுக்கான விடயமாகும். இன்று, நாளை என்பதை நீங்கள் உங்களுடைய புத்தியில் தெளிவாக வைத்திருக்க வேண்டும். நேற்று, நாங்கள் சத்திய யுகத்தில் இருந்தோம். பின்னர் 84 பிறவிகளை எடுத்து, இன்று நரகத்திற்கு வந்து விட்டோம். நீங்கள் தந்தையை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள். சத்திய யுகத்தில் அளப்பரிய சந்தோஷம் இருக்கும். எனவே எவரும் அவரை அங்கு அழைப்பதில்லை. இங்கு, நீங்கள் சரீரத்தில் இருப்பதால் உங்களால் அவருடன் பேச முடிகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஜனிஜனன்ஹார் (அனைத்தையும் அறிந்தவர்) ஆவேன். அதாவது, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவேன். ஆனால், நான் எவ்வாறு அதனை உங்களுக்குக் கூறுவது? இது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். இதனாலேயே தந்தை ஓர் இரதத்தைத் தத்தெடுக்கிறார் என எழுதப்பட்டுள்ளது. அவர் கூறுகிறார்: எனது பிறப்பு உங்களுடையது போன்றதல்ல. நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர் இரதத்தைப் பற்றிய அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். பல பெயர்களையும் உருவங்களையும் எடுத்த பின்னர், இந்த ஆத்மா தமோபிரதானாகி விட்டார். இந்த நேரத்தில் அனைவரும் அநாதைகளே. ஏனெனில் அவர்கள் தந்தையை அறியாததனால் அநாதைகள் ஆவர். குழந்தைகள் தங்களுக்கிடையில் சண்டையிடும்போது, கூறப்படுகிறது: சிறுவர் சிறுமியரே, நீங்கள் ஏன் உங்களுக்கிடையில் சண்டையிடுகின்றீர்கள்? தந்தை கூறுகின்றார்: அனைவரும் என்னை மறந்து விட்டார்கள். ஆத்மாவே 'சிறுவர் சிறுமியரே!" எனக் கூறுகின்றார். லௌகீகத் தந்தை இவ்வாறு கூறுகின்றார், எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார்: அநாதைகளே, உங்களின் நிலை ஏன் இப்படியாகி விட்டது? உங்களுக்குரியவர் என எவருமே இல்லையா? உங்களைச் சுவர்க்க அதிபதிகளாக்குபவரும் அரைக் கல்பமாக நீங்கள் அழைத்தவருமான எல்லையற்ற தந்தையை, நீங்கள் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இப்பொழுது தந்தை இங்கு நேரடியாகவே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பாபாவிடம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அந்த ஒரேயொரு பாபாவே எங்களுக்குக் கற்பித்து, படகுகளை அக்கரைக்கு எடுத்துச் செல்பவரும் ஆவார். ஏனெனில் இப்படகு மிகவும் பழையதாகி விட்டது. மக்கள் கூறுகிறார்கள்: இப்படகை அக்கரைக்குக் கொண்டு சென்றுஇ எங்களுக்கு ஒரு புதிய படகைக் கொடுங்கள். பழைய படகு அபாயகரமானது. அது வழியில் பழுதடையக்கூடும் அல்லது விபத்துக்கு உள்ளாகக்கூடும். எனவே, உங்கள் படகு பழையதாகி விட்டது எனக் கூறி, நீங்கள் புதியதொன்றைக் கேட்கின்றீர்கள். இதுவே (சரீரம்) ஓர் ஆடை அல்லது ஒரு படகு என அழைக்கப்படுகிறது. குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, எங்களுக்கு அத்தகைய (இலக்ஷ்மி நாராயணனுடையது போன்ற) ஆடை வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் சுவர்க்கத்தில் வசிப்பவர்களாக விரும்புகிறீர்களா? ஒவ்வொரு 5000 வருடங்களும் உங்களுடைய இந்த ஆடை பழையதாகுகின்றது. பின்னர் நான் உங்களுக்குப் புதியதொன்றைக் கொடுக்கின்றேன். இவை அசுர ஆடைகளாகும். ஆத்மாக்களும் அசுரத்தனமானவர்களே. மக்கள் ஏழைகளாக இருக்கும்போது, அவர்கள் விலை குறைந்த ஆடைகளையே அணிகின்றார்கள். அவர்கள் செல்வந்தர்களாயின், மிகவும் விலையுயர்;ந்த ஆடைகளை அணிகின்றார்கள். இந்த நேரத்தில் நீங்கள் இவற்றை அறிந்து கொள்கின்றீர்கள். இங்கு, நீங்கள் யார் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதனால் போதை கொள்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய நிலையங்களில் அமர்ந்திருக்கும்போது, இத்தகைய உணர்வைக் கொண்டிருப்பதில்லை. இங்கு நீங்கள் தந்தையிடம் நேரடியாகச் செவிமடுக்கும்போது, சந்தோஷத்தை உணர்கின்றீர்கள். ஏனெனில் தந்தை உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகின்றார். அங்கு எவரேனும் உங்களுக்கு விளங்கப்படுத்தும்போது, உங்களுடைய புத்தியின் யோகம் தொடர்ந்தும் அலைபாய்கின்றது. 'மக்கள் நாளாந்த காரியங்களில் சிக்கியிருக்கிறார்கள், அவர்களுக்கு நேரமே இல்லை" எனக் கூறப்படுகிறது. நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். பாபா இந்த வாய் மூலமாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். இந்த வாய்க்குப் பெருமளவு புகழ் உள்ளது. மக்கள் கௌமுக்கிடமிருந்து (பசுவின் வாய்) அமிர்தத்தைப் பருகுவதற்காக வெகுதொலைவிலிருந்து வருகிறார்கள். அவர்கள் பெரும் சிரமங்களுடன் வருகிறார்கள். இந்த கௌமுக் என்பதன் அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்வதில்லை. விவேகமான மக்கள் பலர் அங்கு சென்றபோதிலும் அதில் என்ன நன்மை கிடைக்கின்றது? அதிகமான நேரம் வீணாகின்றது. பாபா கூறுகின்றார்: சூரியன் அஸ்தமிக்கும் போது, நீங்கள் எதனைக் காண்கின்றீர்கள்? அதில் எந்த நன்மையும் கிடையாது. கற்பதிலேயே நன்மை இருக்கின்றது. கீதையில் கல்வி உண்டு. கீதையில் ஹத்தயோகம் குறிப்பிடப்படவில்லை. இராஜயோகம் மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காகவே இங்கு வருகிறீர்கள். இந்த அசுர உலகில் எவ்வளவு சண்டை சச்சரவு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா எங்களை யோக சக்தி மூலம் தூய்மையாக்கி, உலக அதிபதிகள் ஆக்குகின்றார். மக்கள் தேவியரை ஆயுதங்களுடன் காண்பித்திருக்கின்றார்கள். எனினும், உண்மையில் இதில் ஆயுதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் காளியின் உருவத்தை எவ்வளவு பயங்கரமானதாக உருவாக்கி இருக்கின்றார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் தங்களின் சொந்தக் கற்பனையிலிருந்தே அந்த ரூபங்கள் அனைத்தையும் செய்துள்ளார்கள். நான்கு அல்லது எட்டுக் கரங்களையுடைய அத்தகைய தேவியர்கள் இருக்க முடியாது. அவையனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். இதில் எவரையும் அவதூறு செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. ஞானம் என அழைக்கப்படுவது எது, பக்தி என அழைக்கப்படுவது எது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இன்னமும் பக்தி மார்க்கத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிவரும்போது, நீங்கள் கீழிறங்குகின்றீர்கள். இதுவே தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற, மிகச் சிறந்த, அநாதியாக உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். இந்த நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்துகொள்வதனால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது ஓர் அற்புதமே! பக்தி எவ்வாறு தொடர்கின்றது, ஞானம் எவ்வாறு தொடர்கின்றது என்ற அனைத்தும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித மாற்றமும் இருக்க முடியாது. இன்னார் இன்னார் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்து விட்டார் என்றும் ஒளியுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்றும் இது எண்ணங்கள் நிறைந்த உலகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மக்கள் தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் தொடர்ந்தும் கூறுகின்றனர். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. மக்கள் திரைப்படங்கள் பார்க்கச் செல்கின்றனர். அதனை எண்ணங்களின் நாடகம் என நீங்கள் அழைப்பீர்களா? தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இந்த நாடகம் எல்லையற்றது. இது மீண்டும் அவ்வாறே இடம்பெறும். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர் என்பதால், அவர் மாத்திரமே வந்து, இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் உயிருள்ளவர். அவரிடம் முழு ஞானமும் உள்ளது. சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக் கணக்கான வருடங்கள் என மக்கள் காட்டியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: கால எல்லை அவ்வளவு நீண்டதாக இருக்க முடியாது. ஒரு திரைப்படம் நூறாயிரக் கணக்கான வருடங்கள் நீண்டதாக இருந்தால், அது எவருடைய புத்தியிலும் பதியாது. நீங்கள் அனைத்தையும் பற்றிப் பேசுகின்றீர்கள். நூறாயிரக் கணக்கான வருடங்கள் நீண்டதாக உள்ள ஒன்றைப் பற்றி உங்களால் எவ்வாறு பேச முடியும்? எனவே, அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. நீங்களே பக்தி மார்க்கத்தில் ஒரு பாகத்தை நடித்தவர்கள். அவ்வாறாகத் துன்பத்தை அனுபவம் செய்த பின்னரே, அனைவரும் முடிவை அடைகிறார்கள். முழு விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டது. நீங்கள் இப்பொழுது மீண்டும் அங்கு திரும்பிச் செல்ல வேண்டும். உங்களை இலேசாக்கிக் கொள்ளுங்கள். இவரும் தன்னை இலேசாக்கிக் கொண்டார். அப்பொழுதே பந்தனங்கள் அனைத்தும் துண்டிக்கப்படும். இல்லாவிடில், நீங்கள் உங்களுடைய குழந்தைகள், செல்வம், தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், அரசர்கள், அவர்களுடைய சொத்துக்கள் போன்றவற்றையே நினைவுசெய்வீர்கள். நீங்கள் உங்களுடைய வியாபாரத்தைக் கைவிட்ட பின், ஏன் அவற்றையெல்லாம் நினைவுசெய்கின்றீர்கள்? இங்கு, நீங்கள் அனைத்தையும் மறந்து விட வேண்டும். அவை அனத்தையும் மறந்து, உங்கள் வீட்டையும் இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். நாங்கள் பின்னர் அமைதி தாமத்திலிருந்து கீழிறங்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். இதுவே யோக அக்கினி எனப்படுகின்றது. இது இராஜயோகம் ஆகும். நீங்கள் இராஜரிஷிகள். தூய்மையானவர்களே ரிஷிகள் எனப்படுகின்றார்கள். நீங்கள் ஓர் இராச்சியத்தை அடைவதற்காகத் தூய்மை ஆகுகின்றீர்கள். தந்தையே உங்களிடம் அனைத்து உண்மையையும் கூறுகின்றார். இது ஒரு நாடகம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நடிகர்கள் அனைவரும் நிச்சயமாக இங்கிருக்க வேண்டும். அப்பொழுதே தந்தை அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வார். இது கடவுளின் திருமண ஊர்வலம் ஆகும். தந்தையும் குழந்தைகளும் அங்கு வசிக்கிறார்கள். பின்னர் குழந்தைகள் தங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக இங்கு கீழிறங்கி வருகின்றார்கள். தந்தை எப்பொழுதும் அங்கேயே இருக்கின்றார். மக்கள் துன்பத்தின்போது மாத்திரமே என்னை நினைவு செய்கிறார்கள். நான் அங்கு என்ன செய்வேன்? (சத்திய யுகத்தில்) நான் உங்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அனுப்பினேன், எனவே வேறு என்னதான் வேண்டும்? நீங்கள் சந்தோஷ தாமத்தில் இருந்தபோது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். பின்னர் அவர்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றார்கள். இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது கவனயீனமாக இருக்காதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: இந்தப் பாகம் அந்த நாடகத்திற்கு ஏற்ப நடிக்கப்படுகின்றது. நாடகத்திற்கேற்பவே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்காக வருகின்றேன். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த விருட்சம் இப்பொழுது பழையதாகி, உக்கி விட்டது. ஆத்மாக்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, உங்களைச் சகல பந்தனங்களிலிருந்தும் விடுவித்து இலேசாக்கிக் கொள்ளுங்கள். இங்குள்ள அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றி விடுங்கள்.

2. அநாதியான நாடகத்தை உங்கள் புத்தியில் வைத்திருப்பதன் மூலம், எந்த நடிகரையும் அவதூறு செய்யாதீhகள். நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்துகொண்டு, உலக அதிபதிகளாகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் மௌன சக்தியின் மூலம், ஆத்ம விமானத்தின் வேகத்தை அதிகரித்து, உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.

விஞ்ஞானக் கருவிகளின் வேகத்தை விஞ்ஞானத்தால் குறைக்க முடியும். அத்துடன் விஞ்ஞானத்தால் அதை அதிகரிக்கவும் முடியும். எவ்வாறாயினும், இதுவரை எவராலும் ஆத்மாக்களின் வேகத்திற்கு ஈடுசெய்ய முடியவில்லை. அவர்களால் அப்படிச் செய்யவும் முடியாது. விஞ்ஞானம் இதில் தோல்வி அடைந்ததாகவே தன்னைக் கருதுகிறது. விஞ்ஞானம் தோற்றிருந்தாலும் மௌன சக்தியால் உங்களால் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியும். அதனால், மௌன சக்தியால் ஆத்ம விமானத்தின் வேகத்தை அதிகரியுங்கள். இந்தச் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் உங்களை மாற்ற முடியும். எவருடைய மனோபாவத்தையும் மாற்ற முடியும். அத்துடன், சூழலையும் மாற்ற முடியும். அத்துடன் உலகை மாற்றுபவராகவும் ஆகமுடியும். துரித கதியின் அடையாளம், நீங்கள் நினைத்தவுடனேயே, அது நடப்பதாகும்.

சுலோகம்:
கருணைநிறைந்தவராகி, கற்பித்தல்களை அருள்பவருடன் ஒத்துழைப்பவர் ஆகுங்கள்.