12.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைத்திலும் சிறந்த அலங்காரமான தூய்மையால் உங்களை அலங்கரிப்பதற்குத் தந்தை வந்துவிட்டார்.
பாடல்:
முழுமையாக 84 பிறவிகளை எடுப்பவர்களின் பிரதானமான அடையாளங்கள் எவை?பதில்:
1)அவர்கள் தந்தையை நினைவுசெய்வதுடன் ஆசிரியரையும் சத்குருவையும் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் மூவரையும் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் தந்தையை நினைவுசெய்து, ஆசிரியரை மறக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் மூவரையும் நினைவுசெய்யும்பொழுது மட்டுமே அவர்களால் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல முடியும், அதாவது, ஆரம்பத்திலிருந்து ஒரு பாகத்தை நடிக்க முடியும்.ஓம் சாந்தி.
எல்லாவற்றுக்கும் முதலில், தந்தை குழந்தைகளாகிய உங்களை வினவுகிறார்: நீங்கள் தந்தைக்கும், ஆசிரியருக்கும், சத்குருவுக்கும் முன்னிலையில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் மறப்பதில்லை, இல்லையா? இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் அனைவருமே இவ்விழிப்புணர்வைக் கொண்டிருப்பதில்லை என்று பாபா எண்ணுகிறார். எவ்வாறாயினும், உங்களுக்கு விளங்கப்படுத்துவது தந்தையின் கடமையாக உள்ளது. இதுவே அவரைப் புரிந்துணர்வுடன் நினைவுசெய்வது என்பதன் அர்த்தம்: எங்களுடைய பாபாவே எல்லையற்ற தந்தையும் ஆசிரியரும் அத்துடன் நிச்சயமாகக் குழந்தைகளாகிய எங்களை அவருடன் திரும்பவும் அழைத்துச் செல்லும் சத்குருவும் ஆவார். குழந்தைகளாகிய உங்களை அலங்கரிப்பதற்கு இங்கு தந்தை வந்துவிட்டார். அவர் தொடர்ந்தும் உங்களைத் தூய்மையால் அலங்கரித்து, உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும் கொடுக்கிறார். நீங்கள் செல்லவுள்ள புதிய உலகத்துக்காக, அவர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். இதை மறக்கின்ற தவறைச் சில குழந்தைகள் செய்வதால், அவர்கள் கொண்டிருக்க வேண்டிய, முழுமையான சந்தோஷமானது குறைந்து விடுகிறது. நீங்கள் வேறெங்கும் அத்தகையதொரு தந்தையை ஒருபொழுதும் காணமாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதும் அவர் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதனாலேயே அவர் ஆசிரியரும் ஆவார். உங்களுடைய கல்வி அமரத்துவப்பூமியான புதிய உலகத்துக்கு உரியதாகும். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இதை உறுதியாக நினைவுசெய்ய வேண்டும். இவ்வேளையில், நீங்கள் கம்சனின் பூமியில், அசுர உலகில் இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிலருக்கு ஒரு காட்சி கிடைத்தாலும், அதனூடாக அவர்களால் கிருஷ்ணரின் பூமிக்கு அல்லது அவருடைய வம்சத்துக்குச் செல்ல இயலும் என்பதல்ல. அவர்கள் தொடர்ந்தும் தந்தை, ஆசிரியர், சத்குரு - மூவரையும் நினைவுசெய்யும்பொழுதே, அவர்களால் அங்கு செல்ல இயலும். பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்கு இதைக் கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: ஆம் பாபா! பாபா, நீங்கள் எங்களுக்கு உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே தந்தையும் எங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரும் ஆவீர்கள். பரமாத்மா உங்களுக்குக் கற்பித்துக் கொண்ருக்கிறார். லௌகீகக் கல்வியும் ஒரு சரீரத்தினூடாக, ஓர் ஆத்மாவினால் கற்பிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த ஆத்மா, அவருடைய சரீரம் இரண்டும் தூய்மையற்றவையாகும். உலகிலுள்ள மக்களுக்கு தாங்கள் நரகவாசிகள் என்பது தெரியாது. இப்பொழுது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்களுடைய வீடல்ல. இதுவே இராவணனின் அந்நிய வீடாகும். உங்களுடைய உலகில் அளவற்ற சந்தோஷம் உள்ளது. இங்குள்ள மக்கள் தாம் அந்நிய உலகில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள். முன்னர், நீங்கள் முஸ்லிம்களின் இராச்சியத்திலும் பின்னர் கிறிஸ்தவர்களின் இராச்சியத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த இராச்சியத்துக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர், நீங்கள் இராவண இராச்சியத்தை உங்களுடைய இராச்சியமாகக் கருதுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் நீங்கள் இராம (கடவுள்) இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறந்தீர்கள். பின்னர், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகையில், நீங்கள் இராவணனின் துன்ப இராச்சியத்துக்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் ஓர் அந்நிய இராச்சியத்தில் இருக்கும்பொழுது, துன்பம் மட்டும் உள்ளது. இந்த ஞானம் அனைத்தும் உங்களினுள் வெளிப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள், ஆனால் நிச்சயமாக நீங்கள் மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். மனிதர்கள் மட்டும் இந்த ஞானத்தைப் பெற முடியும், மிருகங்கள் கற்க மாட்டாது. சத்தியயுகத்தில், சட்டநிபுணர்கள் போன்றோர்கள் ஆகுவதற்கான கல்வி கிடையாது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இங்கு உங்களைப் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிரப்பிக் கொண்டிருக்கிறார், ஆனால் உங்களில் அனைவருமே அரசர்கள் ஆக மாட்டீர்கள். அங்கும் வியாபாரம் இருந்தாலும், உங்களிடம் ஏராளமான செல்வம் இருக்கும். அங்கு எந்த இழப்பையும் அனுபவம் செய்வதற்கான நியதி கிடையாது. அங்கு கொள்ளையடித்தல் அல்லது அடித்தல் போன்றவை இருக்காது. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் மறுபிறவி எடுக்கையில் கீழே வந்தீர்கள் என்பதையும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நினைவுகூருகிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கதையைக் கூறுகிறார். 84 பிறவிகளை எடுத்திராத ஆத்மாக்களை மாயை தோற்கடிக்கிறாள். மாயையின் பெரும் புயல்கள் உள்ளன என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். மாயை பலரைத் தோற்கடிப்பதற்கு முயற்சிக்கிறாள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நீங்கள் இதைப் பற்றி அதிகளவில் பார்க்கவும் செவிமடுக்கவும் செய்வீர்கள். தந்தையிடம் அனைவருடைய புகைப்படங்களும் இருந்திருந்தால், பல நாட்களாக வந்தவர்களின் அற்புதத்தைப் பற்றி, அவர்கள் எவ்வாறு தந்தைக்கு உரியவர்களாக இருந்தார்கள், பின்னர் எவ்வாறு மாயை அவர்களை உண்டாள் என்பதை அவர் காண்பிப்பார். அவர்கள் மரணித்து மாயையின் பக்கத்துக்குச் சென்றார்கள். இங்கு, ஒருவர் பௌதீகமாக மரணிக்கும்பொழுது, அவர் இன்னுமொரு பிறவியை இவ்வுலகில் எடுப்பார். உங்களுடைய சரீரத்தை நீங்கள் நீக்கும்பொழுது, நீங்கள் சென்று, பாபாவுடன் எல்லையற்ற வீட்டில் வசிப்பீர்கள். பாபாவும், மம்மாவும், குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு குடும்பம் இவர்களையே கொண்டிருக்கும். பரந்தாமத்தில் தந்தையும் சகோதரர்களும் மட்டும் இருக்கிறார்கள்; அங்கு வேறெந்த உறவுமுறையும் இருக்காது. இங்கு, தந்தையும், சகோதரர்களும், சகோதரிகளும் இருக்கிறார்கள். அதன்பின்னர், தொடர்ந்தும் வளர்ச்சி ஏற்படுகையில், உறவுமுறைகள் அதிகரிக்கின்றன, தாய்வழி, தந்தைவழி மாமன்கள் போன்றோர்கள் இருக்கிறார்கள். இச்சங்கமயுகத்தில், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவுக்கு உரியவர்கள். ஆதலால், நீங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் சகோதரர்கள் ஆவீர்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாக நினைவுசெய்ய வேண்டும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களில் பலர் மறக்கிறீர்கள். தனது குழந்தைகளைத் தன் தலைமீது வைப்பது தந்தையின் கடமையாகும் (தனது குழந்தைகளைத் தன்னை விடவும் மேலும் உயர்வாக ஆக்குவதாகும்). இதனாலே அவர் தொடர்ந்தும் உங்களுக்கு நமஸ்தே கூறுகிறார். அவர் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகிறார். பக்திமார்க்கத்துக்குரிய சாதுக்களாலும் புனிதர்களாலும் உங்களுக்கு ஜீவன்முக்திக்கான வழியைக் காண்பிக்க முடியாது. அவர்கள் முக்தியடைவதற்குத் தொடர்ந்தும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் துறவறப் பாதைக்கு உரியவர்கள் ஆவர். அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? இராஜயோகம் இல்லறப் பாதைக்குரியதாகும். பக்தியில், பிரஜாபிதா பிரம்மாவுக்கு நான்கு கரங்கள் இருப்பதாகச் சித்தரித்துள்ளார்கள். இப்பாதை இல்லறப் பாதைக்குரியது என்பதையே அதுவும் குறிக்கின்றது. தந்தை இவரைத் தத்தெடுத்துள்ளார். ஆகவே, பிரம்மா, சரஸ்வதி என்னும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! மக்கள் தங்களுடைய ஓய்வுபெறும் வயதாகிய 60 வயதை அடைந்து ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். இவருக்கு 60 வயதாகியபொழுது, தந்தை இவரில் பிரவேசித்து, இவருடைய தந்தையாகவும் ஆசிரியராகவும் குருவாகவும் ஆகினார். இந்நாட்களில், சம்பிரதாயங்கள் முன்னரிலும் பார்க்கச் சீரழிந்துள்ளன. சிறு குழந்தைகள்கூட ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செய்யப்படுகின்றனர். அவரே ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆகுகின்ற அசரீரியானவர் ஆவார். அசரீரி உலகம் ஆத்மாக்களின் உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த உலகம் இருப்பதில்லை என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அது ஆத்மாக்கள் வசிக்கின்ற அமைதிதாமம் எனவும் அழைக்கப்படுகிறது. பரமாத்மாவுக்கு ஒரு பெயர், ரூபம், காலநேரம் கிடையாது என்று அவர்கள் கூறினால், அவருடைய குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள்? எவ்வாறு உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைnறுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வரலாறு, வாழ்ந்தவர்களைப் பற்றியதாகவும் புவியியல், உயிரற்ற விடயங்களைப் பற்றியதாகவும் உள்ளது. உங்களுடைய இராச்சியத்தை எவ்வளவு காலம் ஆட்சிசெய்தீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். கதையாக வரலாறு நினைவுகூரப்படுகிறது. சாதாரணமாக, புவியியல் ஒரு நாட்டைப் பற்றியதாகும். உயிருள்ளவர்களே ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்கிறார்கள், உயிரற்றது எதுவும் ஆட்சிசெய்ய முடியாது. ஒருவருடைய இராச்சியம் எவ்வளவு காலத்துக்கு இருந்தது, எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை பாரதம் கிறிஸ்தவர்களால் ஆட்சிசெய்யப்பட்டது என்பதைப் பற்றியதே வரலாறு ஆகும். எவருக்கும் இவ்வுலகின் வரலாறும் புவியியலும் தெரியாது. சத்தியயுகம் நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் பின்னர் யார் ஆட்சிசெய்தார்கள் அல்லது எவ்வளவு காலத்துக்கு அவர்கள் ஆட்சிசெய்தார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. அது வரலாறு என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா உயிருள்ளவரும் சரீரம் உயிரற்றதும் ஆகும். முழு நாடகமும் உயிருள்ளவர்களையும் உயிரற்றவையையும் பற்றியதாகும். மனிதப்பிறவி அதி மேன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிய குடிசனத்தொகை மதிப்பீடு உள்ளது. எவராலும் எவ்வளவு மிருகங்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுவது சாத்தியமல்ல. முழு நாடகமும் உங்களைப் பற்றியதாகும். நீங்களே இந்த வரலாற்றையும் புவியியலையும் செவிமடுப்பவர்கள் ஆவீர்கள். தந்தை இவரில் பிரவேசித்து, அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இது எல்லையற்ற வரலாறும் புவியியலும் என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இந்த ஞானம் இருக்காததாலேயே நீங்கள் மிகவும் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள்! உலகின் வரலாறும் புவியியலும் மனிதர்களுக்குத் தெரியாது என்றால், அத்தகைய மனிதர்களால் என்ன பயன்? தந்தையிடமிருந்து உலகின் வரலாற்றையும் புவியியலையும் நீங்கள் இப்பொழுது செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இக்கல்வி மிகவும் சிறந்ததாகும். இதைக் கற்பித்துக் கொண்டிருப்பவர் யார்? தந்தையே ஆவார். தந்தையே உங்களை அதியுயர் அந்தஸ்தைக் கோரச் செய்பவர் ஆவார். இலக்ஷ்மி நாராயணனுடையதும் சுவர்க்கத்தில் அவர்களுடன் வாழ்ந்தவர்களுடையதுமே, அதியுயர் அந்தஸ்து ஆகும். அங்கு சட்டநிபுணர்கள் போன்றோர்கள் இல்லை. அங்கு மக்கள் கலைகளை மட்டும் கற்கிறார்கள். அவர்கள் பல்வேறு ஆற்றல்களைக் கற்றிருக்காது விட்டால், அவர்கள் எவ்வாறு கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுவார்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அந்த ஆற்றல்களைக் கற்பிக்கிறார்கள். இல்லாதுவிட்டால், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை யார் கட்டுவார்கள்? அவை தானாகவே இயல்பாகவே கட்டப்பட்ட மாட்டாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இந்த இரகசியங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இருக்கும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அவ்வளவு காலம் ஆட்சிசெய்து, பின்னர் இராவண இராச்சியத்துக்குள் வந்தீர்கள். அவர்கள் இராவண இராச்சியத்தில் உள்ளார்கள் என்பது உலகில் வேறு எவருக்கும் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இராவண இராச்சியத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்! பாரத மக்கள் கிறிஸ்தவர்களின் ஆட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள். இப்பொழுது அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையாகிய கடவுளே, எங்களை விடுவியுங்கள்! உங்களுக்கு இவை அனைத்தும் நினைவிருக்கிறதா? அவர்கள் ஏன் இதைக் கூறுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தங்களுக்கு இராம இராச்சியமே வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள், ஆனால் யார் அவர்களை விடுவிப்பார்கள்? தந்தையாகிய கடவுள் தங்களை விடுவித்து, தங்களுக்கு வழிகாட்டியாகி, திரும்பவும் தங்களை அவருடன் அழைத்துச் செல்வார் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பாரத மக்களுக்கு அதிகளவு விவேகம் கிடையாது! அவர்கள் முழுமையாகவே தமோபிரதானாக இருக்கிறார்கள். அம்மக்கள் (கிறிஸ்தவர்கள்) பாரதமக்கள் பெறுவதுபோல், அதிகளவு துன்பத்தையோ அல்லது அதிகளவு சந்தோஷத்தையோ பெறுவது கிடையாது. பாரதமக்கள் அதிகூடிய சந்தோஷத்தை அடைகிறார்கள், பின்னர் அவர்கள் அதிகூடிய துன்பத்தையும் அடைகிறார்கள். இந்தக் கணக்கு உள்ளது. இப்பொழுது அதிகளவு துன்பம் உள்ளது! ஆன்மீகப் பற்றுள்ளவர்கள் கடவுளை நினைவுசெய்து கூறுகிறார்கள்: ஓ! தந்தையாகிய கடவுளே! விடுதலை அளிப்பவரே! உங்களின் இதயமும் கூறுகிறது: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றுங்கள், எங்களைச் சந்தோஷதாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்! அவர்கள் கூறுகிறார்கள்: எங்களை அமைதிதாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்! நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களை அமைதிதாமத்துக்கும் சந்தோஷதாமத்துக்கும் அழைத்துச் செல்லுங்கள்! இப்பொழுது தந்தை வந்துவிட்டார், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் செவிகளுக்கு அதிகளவு இனிமை இருக்கிறது. ஒரு மூடை மாவில் ஒரு சிட்டிகை உப்பு உள்ளதைப் போன்று, அங்கு உண்மை உள்ளது. சண்டிகா தேவிக்காக (சுடலைத்தேவி) அவர்கள் ஒரு மேளாவை நடத்துகிறார்கள். இப்பொழுது ஏன் தகனம் செய்பவர்களுக்காக அங்கு ஒரு மேளா உள்ளது? யார் தகனம் செய்பவர் என்று அழைக்கப்படுகிறார்கள்? இங்கிருப்பவர்களே அங்கு தகனம் செய்பவர்களாக பிறவி எடுக்கிறார்கள் என்று பாபா கூறியுள்ளார். அவர்கள் இங்கு வசித்து, இங்கு உணவுண்டு, பானம் அருந்தி, சிலவற்றைக் கொடுத்துவிட்டுப் பின்னர் கூறுகிறார்கள்: நாங்கள் கொடுத்துள்ளவை அனைத்தையும் திரும்பவும் எங்களுக்குக் கொடுங்கள்! நாங்கள் இதை நம்பவில்லை, சந்தேகங்கள் உள்ளன. அவர்களுக்குச் சந்தேகங்கள் இருப்பின், அத்தகைய ஆத்மாக்கள் என்னவாக ஆகுவார்கள்? அத்தகையதொரு சண்டிகாதேவிக்காக ஒரு மேளா உள்ளது. குறைந்தபட்சம் அவர்கள் சத்தியயுகத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் சிறிது காலத்திற்கேனும் உதவியாளர்களாக ஆகினால்கூட, அவர்களால் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும். அப்பக்தர்களுக்கு இதில் எதுவும் தெரியாது. அவர்களில் எவருக்கும் ஞானம் கிடையாது. படங்களைக் கொண்ட கீதையிலிருந்து மக்கள் அதிகளவு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்நாட்களில், அனைவரும் படங்களை விரும்புகிறார்கள். அதை ஒரு கலையாக அவர்கள் கருதுகிறார்கள். தேவர்களின் படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் எப்படி அறியவார்கள்? நீங்கள் ஆதியில் முதற் தரமானவர்களாக இருந்தீர்கள். நீங்கள் பின்னர் என்னவாக ஆகினீர்கள்? அங்கே எவரும் மாற்றுத் திறனாளிகளாக இருப்பது இல்லை. தேவர்களுக்கு இயற்கை அழகு உள்ளது. அங்கு இயற்கையழகு உள்ளது. தந்தை அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தி, கூறுகிறார்: குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள்! தந்தையே, தந்தையும் ஆசிரியரும் சத்குருவும் ஆவார். அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்யுங்கள், நீங்கள் மூன்று ஆஸ்திகளையும் பெறுவீர்கள். இறுதியில் வருபவர்களால் அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்ய இயலாதிருக்கும். பின்னர் அவர்கள் முக்திக்குள் செல்வார்கள். சூட்சும வதனம் காட்சிகளுக்கு மட்டும் உரியது, முழு வரலாறும் புவியியலும் இங்குள்ளவற்றைப் பற்றியது என்று பாபா கூறியுள்ளார். அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறியுள்ளதால், நீங்கள் எவரிடமும் கூற முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவரே பரமாகிய (அதிமேலான) எல்லையற்ற தந்தை ஆவார். ஒருபொழுதும் ஒரு லௌகீகத் தந்தையை, பரமதந்தை அல்லது பரமாத்மா என்று அழைப்பதில்லை. ஒருவர் மட்டுமே பரம் (அதிமேலானவர்) ஆவார். அவர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஞானம் நிறைந்தவர் ஆதலால், அவர் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கிறார். இந்த இறை ஞானம் உங்களின் வருமானத்துக்குரிய மூலாதாரம் ஆகும். ஞானமும்; மேன்மையான நிலை, இடைநிலை, தாழ்ந்த நிலையை உடையதாகும். தந்தையே அதிமேன்மையானவர் ஆதலால், கல்வியும் அதிமேன்மையானது. அந்தஸ்தும் உயர்ந்தது. நீங்கள் விரைவிலேயே வரலாற்றையும் புவியியலையும் பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். ஆனால் நினைவு யாத்திரையிலேயே நீங்கள் போராட வேண்டியுள்ளது. நீங்கள் இதில் தோற்கடிக்கப்பட்டால், நீங்கள் ஞானத்திலும் தோற்கடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு, இங்கிருந்து ஓடிச் சென்றால், இந்த ஞானத்திலிருந்தும் நீங்கள் ஓடிவிடுகிறீர்கள். பின்னர், நீங்கள் முன்பிருந்ததைப் போன்று ஆகமுடியாது, ஆனால் அதை விடவும் மேலும் சீரழிந்து விடுகிறீர்கள். தந்தைக்கு உங்களின் நடத்தையினூடாக, உங்களின் சரீர உணர்வானது மிகவும் விரைவிலேயே புலப்படுகிறது. பிராமணர்களின் மாலையும் உள்ளது, ஆனால் அவர்கள் எவ்வாறு வரிசைக்கிரமமாக இங்கு அமரக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. சரீர உணர்வு உள்ளது. நிச்சயமாக நம்பிக்கை உடையோர்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். உங்களின் சரீரத்தை விட்டு நீங்கிச் செல்லும் பொழுது, ஓர் இளவரசர் ஆகுவீர்கள் என்னும் நம்பிக்கை யாருக்கு உள்ளது? (அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்). குழந்தைகள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார்கள்! நீங்கள் அனைவரும் இந்நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், நீங்கள் அனைவரும் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பது என்றால், வெற்றிமாலையில் ஒருவர் ஆகுவதென்று அர்த்தம், அது ஒரு சக்கரவர்த்தி ஆகுவதென்றும் அர்த்தமாகும். வெளிநாட்டவர்கள் அபுமலைக்கு வந்து, ஏனைய அனைத்து யாத்திரைத் தலங்களுக்கும் செல்வதை நிறுத்தும், அந்த நாள் வரும். அவர்கள் பாரதத்தின் இராஜயோகத்தைக் கற்க விரும்புகிறார்கள். அந்த வைகுந்தத்தை உருவாக்கியவர் யார்? முயற்சி செய்யப்படுகிறது. முன்னைய கல்பத்தில் அது நடந்திருந்தால், நிச்சயமாக அருங்காட்சியகம் உருவாக்கப்படும். அதைப் போன்று, ஒரு நிரந்தரமான கண்காட்சியை நீங்கள் நடத்த விரும்புகிறீர்கள் என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆகவே கட்டடத்தை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குக் குத்தகைக்குப் பெற முடியுமா என்று வினவுங்கள். பாரதத்தைச் சந்தோஷதாமமாக ஆக்குவதற்கு நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதன் மூலம் பலர் நன்மை பெறுவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பதற்குத் தந்தையே உங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார், அவர் உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்னும் உணர்வை எப்பொழுதும் பேணுங்கள். நீங்கள் அமரத்துவப் பூமிக்காக, புதிய உலகத்துக்காகக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.2. வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்கு, உங்களுடைய புத்தியை நம்பிக்கை மிக்கதாக ஆக்கி, தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். ஒருபொழுதுமே நீங்கள் கொடுத்துள்ளவற்றைத் திரும்பவும் பெறுவதைப் பற்றி எண்ண வேண்டாம். ஒருபொழுதும் உங்களுடைய புத்தியில் சந்தேகத்தைக் கொண்டிருந்து, அதனால் உங்களுடைய அந்தஸ்தை இழக்க வேண்டாம்.
ஆசீர்வாதம்:
தங்களுக்குள் கோபத்தை வைத்திருக்கும் ஆத்மாக்களுக்குக் கருணை என்ற குளிர்ந்த நீருடன் நற்குணங்களைத் தானம் செய்து, ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா ஆகுவீர்களாக.கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஒருவர் உங்களின் முன்னால் வந்து, உங்களை அவமதித்து, இகழும்போது, உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் உங்களின் மனோபாவத்தாலும் ஸ்திதியாலும் அந்த ஆத்மாவை சகிப்புத்தன்மை என்ற நற்குணத்தாலும் சக்தியாலும் ஆசீர்வதியுங்கள். கோபப்படுகின்ற ஆத்மாக்கள், புற ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார்கள். எனவே, கருணை என்ற குளிர்ந்த நீரால், இத்தகைய ஆத்மாக்களை அமைதி நிறைந்தவர்கள் ஆக்குங்கள். இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களான உங்களின் கடமை ஆகும். உயிர்வாழும் ரூபத்தில் நீங்கள் இத்தகைய சம்ஸ்காரங்களால் நிறைந்திருப்பதனாலேயே, உங்களின் பக்தர்கள், உங்களின் உயிரற்ற விக்கிரகங்களிடமிருந்து இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.
சுலோகம்:
நினைவின் மூலம் சகல சக்திகள் என்ற பொக்கிஷத்தை அனுபவம் செய்பவர்கள், சகல சக்திகளாலும் நிரம்பியவர்கள் ஆகுகிறார்கள்.