13.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையற்றவரில் இருந்து உங்களைத் தூய்மையாக்கும் தந்தை மீது அதிக அன்பு இருக்கட்டும். அதிகாலையில் எழுந்து, “சிவபாபா, காலை வந்தனம்” எனக் கூறுங்கள்.

கேள்வி:
மிகச்சரியாக நினைவு செய்வதற்கு எந்தத் தெய்வீகக் குணங்களை கிரகிக்க வேண்டும்? உங்கள் நினைவு மிகச்சரியாக இருப்பதற்குரிய அடையாளங்கள் என்ன?

பதில்:
மிகச்சரியான நினைவுக்கு, உங்களுக்குத் தேவையானவை: 1. பொறுமை, 2. முதிர்ச்சி, 3.புரிந்துணர்வு. இந்த தாரணையின் அடிப்படையில் நினைவைக் கொண்டிருப்பவர்களுக்கு நினைவு, நினைவைக் கொண்டு வருவதுடன், நீங்கள் தந்தையிடமிருந்து மின்சாரத்தைப் (சக்தி) பெறுகின்றீர்கள். அந்த மின்சாரத்தினால் (கரண்ட்) உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், நீங்கள் ஆரோக்கியம் ஆனவர்களாகவும் ஆகுவீர்கள். உங்கள் இதயம் குளிர்ச்சி அடைந்து, தொடர்ந்தும் சதோபிரதான் ஆகும்.

ஓம் சாந்தி.
தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே. இது உங்களுக்கும் பொருந்தும். அதாவது, ஆத்மாக்களாகிய நீங்களும் அமைதி சொரூபங்களே. ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் ஆதி தர்மம் அமைதியாகும். நீங்கள் அமைதிதாமத்தில் இருந்து இங்கு வந்த பின்னரே ‘சப்தத்திற்கு’ வருகின்றீர்கள். உங்கள் பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் இப்பௌதீகப் புலனங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். ஆத்மாக்கள் சிறிதாகவோ பெரிதாகவோ ஆகுவதில்லை. சரீரமே பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ ஆகுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சரீரதாரி அல்ல. நான் குழந்தைகளாகிய உங்களைத் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்திப்பதற்காக வரவேண்டி உள்ளது. உதாரணமாக, ஒரு தந்தையின் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள், தாங்கள் பரந்தாமத்திலிருந்து வந்து, பிறப்பெடுத்து, தாயையும் தந்தையையும் சந்திப்பதற்காக வந்துள்ளதாகக் கூறமாட்டார்கள். புதிய ஆத்மாக்கள் இன்னொருவரின் சரீரத்தில் பிரவேசித்தாலோ அல்லது பழைய ஆத்மா இன்னொருவரின் சரீரத்தில் பிரவேசித்தாலோ அவர் தாயையும் தந்தையையும் சந்திப்பதற்காக வந்துள்ளதாக கூறமாட்டார். ஆத்மா இயல்பாகவே ஒரு தாயையும் தந்தையையும் பெறுகிறார். இங்கே, இது புதியதொரு விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளேன். இப்பொழுது நான் குழந்தைகளாகிய உங்களின் நேர் முன்னிலையில் இருக்கின்றேன். ஞானக் கடலாகிய நான் ஞானம் நிறைந்தவர் என்பதால், குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞானத்தைக் கொடுக்கின்றேன். நான், குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வருகின்றேன். கடவுளே இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இந்த இறைபாகம் கிருஷ்ண ஆத்மாவினுடையது அல்ல. ஒவ்வொருவரின் பாகமும் அவரவருக்கு உரியதாகும். கடவுளின் பாகம் அவருக்கே உரியது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். உங்களை இவ்வாறு கருதுவது மிகவும் இனிமையாக உள்ளது. நாங்கள் எத்தகையவர்களாக இருந்தோம், நாங்கள் இப்பொழுது எத்தகையவர்கள் ஆகியுள்ளோம்? இந்த நாடகம் எவ்வளவு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இப்பொழுதுதான் நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். இது சங்கமயுகம் என்பதை நினைவு செய்தாலே போதும், நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள் என்பது உறுதியாகி விடுகிறது. நீங்கள் இப்பொழுது, சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டிற்குச் செல்ல இருப்பதால், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். உள்ளார்த்தமாக நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஓஹோ! எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு அன்பைக் கொடுக்கின்றார். அவர் ஆசிரியராக இருந்து, உங்களுக்குக் கற்பித்த பின்னர் வீடு திரும்புவார் என்றில்லை. அவர் தந்தையும் அத்துடன் ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கல்வி கற்பிப்பதுடன் நினைவு யாத்திரையையும் கற்பிக்கின்றார். தூய்மையற்றிருந்த உங்களைத் தூய்மையாக்கி, உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையின் மீது நீங்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகாலையில் விழித்தெழுந்தவுடன், முதலில் சிவபாபாவிற்கு ‘காலை வணக்கம்’ கூறவேண்டும். நீங்கள் காலை வணக்கம் கூறும் பொழுது, அதாவது நீங்கள் அவரை நினைவு செய்யும் பொழுது, மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இதயத்தைக் கேட்க வேண்டும்: நான் அதிகாலையில் எழுந்த பின்னர் எல்லையற்ற தந்தையை எவ்வளவு நினைவு செய்கின்றேன்? மக்கள் காலையிலேயே பக்தி செய்கின்றார்கள். அவர்கள் அதிகளவு அன்புடன் வழிபடுகின்றார்கள். சில குழந்தைகள் அந்தளவிற்கு இதய ஆழத்திலிருந்து தந்தையை நினைவு செய்வதில்லை என்பது பாபாவிற்குத் தெரியும். நீங்கள் அதிகாலை விழித்தெழுந்து, பாபாவிற்கு ‘காலை வணக்கம்’ எனக் கூறி, ஞானத்தைக் கடைந்தால், சந்தோஷ பாதரசம் அதிகரிக்க முடியும். நீங்கள் தந்தைக்கு ‘காலை வணக்கம்’ கூறாவிட்டால், பாவச்சுமை எவ்வாறு அகற்றப்படும்? நினைவு செய்தலே மிகவும் பிரதான விடயமாகும். இதன் மூலம், நீங்கள் எதிர்காலத்திற்கான மிகவும் முக்கியமான வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றீர்கள். இந்த வருமானம் உங்களுக்குக் கல்பம் கல்பமாகப் பயனுடையதாக இருக்கும். நீங்கள் மிகவும் பொறுமையுடனும், முதிர்ச்சியுடனும், புரிந்துணர்வுடனும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் பாபாவை அதிகளவு நினைவு செய்கின்றீர்கள் எனப் பொதுவாகக் கூறிய போதிலும், மிகச்சரியாக நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. தந்தையை அதிகளவு நினைவு செய்கின்றவர்கள், அதிகளவு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஏனெனில், நினைவு, நினைவை அதிகரிக்கச் செய்யும். இரண்டு விடயங்கள் உள்ளன: யோகமும் ஞானமும். யோகம் என்ற பாடம் வேறானது. அது மிகப் பிரதானமான பாடமாகும். யோகத்தின் மூலமே ஆத்மா சதோபிரதான் ஆகுகின்றார். நினைவு செய்யாது சதோபிரதான் ஆகுவது சாத்தியமில்லை. நீங்கள் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்தால், நீங்கள் இயல்பாகவே மின்சாரத்தைப் பெற்று, ஆரோக்கியமானவர் ஆகுவீர்கள். அந்த மின்சாரத்தினால் உங்கள் ஆயுளும் அதிகரிக்கும். குழந்தைகள் பாபாவை நினைவு செய்யும் பொழுது, அவர் அவர்களுக்கு ஒரு தேடும் விளக்கைக் கொடுக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகைய மகத்தான பொக்கிஷத்தை வழங்குகின்றார். இனிய குழந்தைகள் இதை உறுதியாக நினைவு செய்ய வேண்டும்: “சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார்.” சிவபாபாவே தூய்மை ஆக்குகின்றவரும், சற்கதியை அருள்பவரும் ஆவார். சற்கதி என்றால், அவர் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைத் தருகின்றார் என்று அர்த்தம். பாபா மிகவும் இனிமையானவர். அவர் அமர்ந்திருந்து அதிகளவு அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை எங்களுக்குத் தாதாவின் மூலம் கற்பிக்கின்றார். பாபா மிகவும் இனிமையானவர். அவர் எங்களுக்கு அதிகளவு அன்பைக் கொடுக்கின்றார். அவர் எந்தச் சிரமத்தையும் எங்களுக்குக் கொடுப்பதில்லை. அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். சக்கரத்தை நினைவு செய்யுங்கள். உங்கள் இதயம் தந்தையின் நினைவில் குளிர்ச்சியடைய வேண்டும். ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் தந்தையிடமிருந்து பெருமளவு ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்: தந்தையின் மீது நான் எவ்வளவு அன்பைக் கொண்டிருக்கின்றேன். என்னிடம் எந்தளவு தெய்வீகக் குணங்கள் உள்ளன? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முட்களில் இருந்து மலர்களாக மாறுகின்றீhகள். நீங்கள் எந்தளவிற்கு யோகத்தில் நிலைத்திருக்கின்றீர்களோ, அதற்கேற்ப நீங்கள் முட்களில் இருந்து தொடர்ந்தும் மலர்களாகி, சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் மலர்கள் ஆகிய பின்னர், உங்களால் இங்கே இருக்க முடியாது. சுவர்க்கமே பூந்தோட்டமாகும். பலரையும் முட்களில் இருந்து மலர்கள் ஆக்குகின்றவர்கள், உண்மையிலேயே நறுமணங்கமழும் மலர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் என்றுமே எவரையும் குத்த மாட்டார்கள். கோபமும் பெரியதொரு முள்ளாகும். அது பலருக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முட்களின் உலகில் இருந்து விலகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீhகள். ஒரு தோட்டக்காரன் பூக்களை வேறு ஒரு பூந்தொட்டியில் இடுவதைப் போன்று, சங்கமயுகத்தின் மலர்களாகிய நீங்கள் வேறு பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருக்கின்றீர்கள். அதன் பின்னர் மலர்களான நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல, கலியுக முட்கள் எரிக்கப்படும். இனிய குழந்தைகளாகிய நீங்கள் பரலோகத் தந்தையிடமிருந்து அழிவற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். பாப்தாதாவின் மீது முழுமையான அன்பைக் கொண்டுள்ள உண்மையான குழந்தைகள் அதிகளவு சந்தோஷத்துடன் இருப்பார்கள்: நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். ஆம், முயற்சியின் மூலமே, நீங்கள் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். வெறுமனே கூறிக் கொண்டிருப்பதன் மூலமாக அல்ல. விசேடமான, அன்பிற்கினிய குழந்தைகள் தாம் மீண்டும் ஒருமுறை தமக்காக சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களை ஸ்தாபிப்பதாகக் கருதுவார்கள். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் எந்தளவிற்குப் பலருக்கு நன்மை செய்கின்றீர்களோ, நீங்கள் அந்தளவிற்குப் பலனைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பலருக்குப் பாதையைக் காட்டினால், நீங்கள் பலரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிறைத்து, அதன்பின்னர் அவற்றைத் தானம் செய்ய வேண்டும். ஞானக் கடல், உங்களுக்குத் தட்டுக்கள் நிறைந்த இரத்தினங்களைத் தருகின்றார். அந்த இரத்தினங்களைத் தானம் செய்கின்றவர்கள், அனைவராலும் நேசிக்கப்படுகின்றார்கள். குழந்தைகள் தமக்குள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். விவேகமான குழந்தைகள் கூறுவார்கள்: நாங்கள் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வோம். அவர்கள் முழுமையாகத் தந்தையைப் பற்றிக் கொள்கின்றார்கள். அவர்கள் தந்தையின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் தமக்கு வாழ்வைக் கொடுக்கின்ற தந்தையைத் தாம் இனங்கண்டுள்ளோம் என்பது அவர்களுக்குத் தெரியும். நீங்கள் முன்னர் இருந்ததில் இருந்து முற்றாக மாறக்கூடிய வகையில் அத்தகைய ஞானம் என்ற ஆசீர்வாதத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் வளமற்றவர்களில் இருந்து செழிப்பானவர்கள் ஆகுகின்றீர்கள். அந்தளவிற்கு அவர் உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புகின்றார். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப அன்பு இருக்கும். ஓர் ஈர்ப்பு இருக்கும். ஓர் ஊசி சுத்தமாக இருக்கும் பொழுது, அது காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும். தந்தையின் நினைவினால் துரு தொடர்ந்தும் அகற்றப்படும். தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். ஒரு மனைவி தனது கணவனின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருப்பதைப் போன்றே நீங்களும் இப்பொழுது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கின்றீர்கள். நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட சந்தோஷம் சற்றேனும் குறைந்ததா? சிவபாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் என்னுடனேயே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கின்றீர்கள். பிரம்மாவுடன் அல்ல. உங்கள் நிச்சயதார்த்தம் உறுதியடைந்ததும் அவரின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, கவனயீனமானவர் ஆகித் தவறுகள் செய்யாதீர்கள். சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, கலங்கரை விளக்கங்கள் ஆகுங்கள். சுயதரிசனச் சக்கரதாரியாக இருப்பதில் உங்களுக்கு நல்ல பயிற்சி ஏற்படும்பொழுது, நீங்கள் ஞானக் கடல் ஆகிவிடுவீர்கள் போலுள்ளது. மாணவர்கள் கற்று, ஆசிரியர்கள் ஆகுவதைப் போன்று, இது உங்கள் தொழில் ஆகும். அனைவரையும் சுயதரிசன சக்கரதாரிகள் ஆக்கினாலே, நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்கின்ற ஓர் இராஜா, இராணி ஆகுவீர்கள். ஆகையாலேயே பாபா குழந்தைகளாகிய உங்களிடம் எப்பொழுதும் வினவுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகளாக இங்கு அமர்ந்திருக்கின்றீர்களா? தந்தையும் சுயதரிசனச் சக்கரதாரி ஆவார். இனிய குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். இனிய குழந்தைகளாகிய நீங்கள் இல்லாது, நானும் கூடத் தவிக்கிறேன். நேரம் வரும் பொழுது, நான் ஆயத்தம் ஆகின்றேன்: நான் இப்பொழுது செல்ல வேண்டும்! குழந்தைகள் பெருமளவு கதறி அழைக்கின்றார்கள், அவர்கள் மிகவும் சந்தோஷம் அற்றிருக்கின்றார்கள். பாபா கருணையைக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பின்னர், அங்கிருந்து நீங்கள் சந்தோஷ உலகிற்கு நீங்களாகவே செல்வீர்கள். அங்கே நான் உங்களின் சகவாசியாக இருக்க மாட்டேன். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த ஸ்திதிக்கு ஏற்பவே திரும்பிச் செல்வீர்கள். இந்த ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில் கற்கின்றீர்கள் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இறை மாணவர்கள். நாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக மாறுவதற்காக, அதாவது, உலக அதிபதிகள் ஆகுவதற்காகக் கற்கின்றோம். இதன் மூலம் நாங்கள் அனைத்து அமைச்சுக்களிலும் தேர்ச்சி பெறுகின்றோம். நாங்கள் சுகாதாரம் சம்பந்தமான, கல்வி சம்பந்தமான அனைத்துப் பட்டங்களையும் பெறுகிறோம். நாங்கள் எங்களுடைய நடத்தையைச் சீர்திருத்துவதற்;காகக் கற்கிறோம். சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, காணி அமைச்சு, கட்டட அமைச்சு என்பன அனைத்தும் இதில் உள்ளடங்குகின்றன. தந்தை அமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஓர் ஒன்றுகூடலின் மத்தியில் சொற்பொழிவை ஆற்றும் பொழுதோ அல்லது எவருக்காயினும் விளங்கப்படுத்தும் பொழுதோ, மீண்டும் மீண்டும் கூற வேண்டும்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, பரமாத்மா பரமதந்தையை நினைவு செய்யுங்கள். இந்த நினைவின் மூலமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் இதனை மீண்டும் மீண்டும் நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் நினைவில் நிலைத்திருந்தாலே உங்களால் இதனைப் பிறருக்குக் கூற முடியும். இந்த விடயத்தில் குழந்தைகள் பலவீனமாக இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார்த்தமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்து, நினைவில் நிலைத்திருந்தவாறு பிறருக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பேசக்கூடாது. நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்தவாறு, சிறிதளவு விளங்கப்படுத்தினால், அம்பு இலக்கைத் தாக்கும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, கடந்தது கடந்து விட்டது. முதலில் உங்களைச் சீர்திருத்துங்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காது, பிறருக்குத் தொடர்ந்தும் கூறினால், இந்த ஏமாற்றுதல் நீடிக்க முடியாது. உள்ளார்த்தமாக, உங்கள் மனச்சாட்சி நிச்சயமாக உறுத்தும். உங்களுக்குத் தந்தையின் மீது முழுமையான அன்பில்லாத போது, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டீர்கள். எல்லையற்ற தந்தை கொடுக்கின்ற கற்பித்தல்களை வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது இப்பழைய உலகை மறந்திடுங்கள். இறுதியில் இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் மறக்க வேண்டும். அப்பொழுது உங்கள் புத்தி அமைதி தாமத்துடனும் சந்தோஷ தாமத்துடனும் தொடர்புபட்டிருக்கும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும். தூய்மையற்ற ஆத்மாக்களால் திரும்பிச் செல்ல முடியாது, ஏனெனில், அது தூய ஆத்மாக்களின் வீடாகும். இச்சரீரம் பஞ்சபூதங்களால் ஆனது. எனவே, பஞ்ச பூதங்களும் உங்களை இங்கே தங்கியிருக்குமாறு ஈர்க்கும். ஏனெனில் ஆத்மா அச் சொத்தைத் தனதாக்கிக் கொண்டதைப் போன்று இருப்பதாலேயே சரீரத்தின் மீது பற்று உள்ளது. நீங்கள் இப்பொழுது அந்தப் பற்றை அகற்றி, வீடு திரும்ப வேண்டும். இந்தப் பஞ்சபூதங்களும் அங்கிருப்பதில்லை. சத்தியயுகத்தில் சரீரம் யோக சக்தியினால் உருவாக்கப்படுகின்றது, சடப்பொருள் சதோபிரதானாக இருக்கின்றது என்பதாலேயே எவ்வித ஈர்ப்போ அல்லது துன்பமோ இருப்பதில்லை. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய நுணுக்கமான விடயங்கள். இங்கே, பஞ்சபூதங்களின் சக்திகளும் ஆத்மாவை ஈர்க்கின்றன. இதனாலேயே ஆத்மா சரீரத்தை விட்டு நீங்க இதயபூர்வமாக விரும்புவதில்லை. இல்லாதுவிடின், இன்னமும் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தூய்மையாகிய பின்னர், வெண்ணெயில் இருந்து ஒரு தலைமுடியை எடுப்பதைப் போன்று உங்களால் சரீரத்தை விட்டு நீங்கிச் செல்ல முடியும். எனவே நீங்கள் சரீரத்தின் மீதும், ஏனைய அனைத்தின் மீதும் உள்ள பற்றை, அவற்றிற்கும் உங்களுக்கும் எத் தொடர்புமே இல்லாத வகையில், முற்றாக அகற்ற வேண்டும். “நான் இப்பொழுது பாபாவிடம் செல்கின்றேன்”. நீங்கள் உங்கள் பெட்டி படுக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே மூட்டைகட்டி, செல்வதற்குத் தயாராகுங்கள். ஏனெனில் நீங்கள் அவற்றை எடுத்துச் செல்ல முடியாது. ஏனெனில் ஆத்மாக்கள் வீடு திரும்ப வேண்டும். சரீரங்கள் இங்கே விடப்பட வேண்டும். பாபா ஏற்கனவே புதிய சரீரத்தின் காட்சியை உங்களுக்குக் காட்டியுள்ளார். நீங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். அத்தகைய சந்தோஷ உலகிற்குச் செல்வதற்கு நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் களைப்படையக் கூடாது. இரவுபகலாக அதிகளவு வருமானத்தை ஈட்டுங்கள். ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: உறக்கத்தை வெற்றி கொண்ட குழந்தைகளே, சதா என்னை மாத்திரமே நினைவு செய்து, ஞானத்தைக் கடையுங்கள். உங்கள் புத்தியில் நாடகத்தின் இரகசியங்களை வைத்திருப்பதன் மூலம், அது மிகவும் குளிர்ச்சியாகவும் சாந்தமாகவும் ஆகுகின்றது. மகாராத்திக் குழந்தைகள் ஒருபோதும் தளம்பல் அடைய மாட்டார்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்தால், அவர் உங்களைப் பராமரிப்பார். தந்தை உங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலை செய்து உங்களுக்கு அமைதியைத் தானமாக வழங்குவார். நீங்களும் அமைதியைத் தானம் செய்ய வேண்டும். உங்களின் இந்த எல்லையற்ற அமைதி, அதாவது, யோக சக்தி பிறரை முற்றிலும் நிசப்தம் அடையச் செய்யும். ஒருவர் உங்கள் குடும்பத்திற்கு உரியவரா இல்லையா என்பதை உடனடியாகவே நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஆத்மா உடனடியாகவே ஈர்க்கப்படுவார்: இவர் எங்கள் பாபா. நீங்களும் நாடித் துடிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, பின்னர் அந்த ஆத்மா உங்கள் குலத்தைச் சேர்ந்தவரா இல்லையா எனப் பாருங்கள். அவர் உங்கள் குலத்தவராக இருந்தால், அந்த ஆத்மா முற்றாக அமைதி அடைவார். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களே இவ்விடயங்களின் இனிமையை அனுபவம் செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்தால், அவர் உங்களை நேசிக்கிறார். ஆத்மாவே நேசிக்கப்படுகிறார். அதிகளவு பக்தி செய்தவர்களே, அதிகளவு கற்பார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்களின் முகத்தில் இருந்து, அவர்கள் பாபாவின் மீது கொண்டிருக்கும் அன்பை நீங்கள் தொடர்ந்தும் அறிந்து கொள்வீர்கள். ஆத்மாக்கள் தந்தையைப் பார்க்கின்றார்கள். தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தையும் புரிந்து கொள்கின்றார்: நான் அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளிகளான ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றேன். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, உங்கள் ஸ்திதியும் அவ்வாறாகும். நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குக் கற்பிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். முகம் ஒரு சகோதரியினுடையதாக இருந்தாலும், உங்கள் பார்வை ஆத்மாவின் மீதே செல்ல வேண்டும். உங்கள் பார்வை சரீரத்தின் மீது செல்லக்கூடாது. உங்கள் பார்வை சரீரத்தின் மீது செல்லாதிருக்க, அதற்கு அதிகளவு முயற்சி தேவை. இவை மிகவும் ஆழமான விடயங்கள். கல்வியும் மிகவும் மேன்மையானது. நீங்கள் அதனை நிறுத்தீர்களாயின், இக் கல்வியின் பக்கம் அதிகம் நிறையைக் கொண்டதாக இருக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்பி, பின்னர் மற்றவர்களுக்கு அவற்றைத் தானம் செய்யுங்கள். தானம் செய்பவர்கள், அனைவராலும் நேசிக்கப்படுவதுடன், எல்லையற்ற சந்தோஷத்தையும் அனுபவம் செய்கிறார்கள்.

2. உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தை அளிக்கின்ற தந்தையை அதிகளவு அன்புடன் நினைவுசெய்து, அனைவருக்கும் அமைதியைத் தானம் செய்யுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, ஒரு ஞானக் கடல் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டு, உங்களின் சூட்சும சரீரம் என்ற வாகனத்தால் சேவை செய்தவண்ணம் டபிள் லைற் ஆகுவீர்களாக.

உங்களின் பௌதீக சரீரத்தால் சேவை செய்வதில் நீங்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதைப் போல், அதேவேளை நீங்கள் உங்களின் சூட்சும சரீரத்தாலும் சூட்சுமமான சேவையைச் செய்ய வேண்டும். எப்படி ஸ்தாபனையானது பிரம்மாவினூடாக வளர்ந்ததோ, அவ்வாறே, உங்களின் சூட்சும சரீரத்தைப் பயன்படுத்துவதாலும் உங்களின் ஒன்றிணைந்த சிவசக்தி ரூபத்தின் காட்சியாலும் காட்சிகளையும் செய்திகளையும் வழங்கும் பணி இடம்பெறும். எவ்வாறாயினும், இந்தச் சேவையைச் செய்வதற்கு, நீங்கள் வேலை செய்யும்போதும் சதா கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்க வேண்டும்.

சுலோகம்:
உங்களின் கடைதல் மூலம் பிரித்தெடுக்கப்படும் சந்தோஷம் என்ற வெண்ணெய், உங்களின் வாழ்க்கையைப் பலம் வாய்ந்தது ஆக்கும்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

எவருமே தனக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை எனச் சொல்ல முடியாது. ஒருவரால் பேச முடியாவிட்டால், அவரால் மனதால் சேவை செய்து, சூழலில் சந்தோஷ மனப்பாங்கையும் சந்தோஷம் வழங்கும் ஸ்திதியையும் உருவாக்க முடியும். உங்களின் ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் இருந்தபடியே ஒத்துழைப்பை வழங்குங்கள். உங்களின் மனதில் தூய எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேகரித்து, நல்லாசிகளால் நிறைந்தவர் ஆகுங்கள்.