13.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அதன் அடிப்படையிலேயே அந்தஸ்து தங்கியுள்ளது. பழைய பக்தர்களே மிக நன்றாகக் கற்று ஒரு நல்ல அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்கள்.
கேள்வி:
தந்தையின் நினைவில் இருப்பவர்களின் அடையாளங்கள் எவை?பதில்:
தந்தையின் நினைவில் இருப்பவர்கள் உன்னதமான நற்குணங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தொடர்ந்தும் தூய்மையாகவும் இராஜரீகமானவர்களாகவும் ஆகுவார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் இனிமையானவர்களாகப் பாலும் சீனியும் போன்று இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க மாட்டார்கள். ஆனால் தங்களை மாத்திரமே பார்ப்பார்கள். தாங்கள் எதைச் செய்கின்றார்களோ அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது அவர்களின் புத்தியில் இருக்கும்.ஓம் சாந்தி.
பாரதத்தின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்கான சமயநூல் கீதையென்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், யார் கீதையைக் பேசினார்கள் என்பது எவருக்குமே தெரியாது. இவை ஞானத்திற்கான விடயங்களாகும். இந்த ஹோலிப் பண்டிகை போன்றன எதுவுமே இங்கு உரியனவல்ல. அந்தப் பண்டிகைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. நாம் கொண்டாடும் ஒரேயொரு பண்டிகை திரிமூர்த்தி சிவஜெயந்தியாகும் அவ்வளவுதான். “சிவஜெயந்தி” என மாத்திரம் கூறாதீர்கள். நீங்கள் ‘திரிமூர்த்தி’ என்ற வார்த்தையைக் கூறாவிடின் மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். “தேவர்களின் இராச்சியம் உங்கள் பிறப்புரிமை” என்பது திரிமூர்த்திப் படத்தின் அடியில் எழுதப்பட வேண்டும். கடவுள் சிவனே தந்தையாவார். அவரே இங்கு நிச்சயமாக வந்து எங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் இராஜயோகத்தைக் கற்பதன் மூலம் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகினீர்கள். படங்களில் இந்த ஞானம் பெருமளவு உள்ளது. மக்கள் அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே அதிசயிக்கத்தக்க அத்தகைய படங்களை உருவாக்க வேண்டும். பெருமளவு பக்தியைச் செய்தவர்கள் ஞானத்தைக் கிரகிப்பார்கள். ஆனால் குறைந்தளவு பக்தியைச் செய்தவர்கள் குறைந்தளவு ஞானத்தையே கிரகிப்பார்கள், அத்துடன் குறைந்த அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வார்கள். பணிப்பெண்கள், பணியாட்கள் ஆகியோரும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். அனைத்தும் இக்கல்வியிலேயே தங்கியுள்ளது. இதனைப் பற்றி மிகச் சிறந்த முறையிலும் விவேகமான முறையிலும் பேசக்கூடிய ஒரு சிலரே உள்ளீர்கள். சிறந்த குழந்தைகளின் செயற்பாடு மிகச் சிறந்தாகவே இருக்கும். அவர்கள் உன்னதமான நற்குணங்களையும் கொண்டிருப்பார்கள். நீங்கள் எந்தளவிற்கு தந்தையின் நினைவில் இருக்கின்றீர்களோ, அதற்கேற்ப தொடர்ந்தும் தூய்மை ஆகுவதுடன், உங்கள் நடத்தையும் இராஜரீகமானதாக ஆகுகின்றது. சில சந்தர்ப்பங்களில் சூத்திரர்களின் நடத்தை மிகவும் சிறந்ததாக உள்ளது, ஆனால் சில பிராமணர்களின் நடத்தை பற்றிக் கேட்கவும் வேண்டாம்! “கடவுளா அவர்களுக்கு உண்மையில் கற்பிக்கிறார்?” என்று மக்கள் கேட்கும் அளவிற்கு உங்கள் நடத்தை இருக்கக் கூடாது. நீங்கள் பாலும் சீனியும் போல் இனிமையானவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதன் வெகுமதியைப் பெற்றுக் கொள்வீர்கள். எதையும் செய்யாதவர்கள் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டார்கள். தந்தை தொடர்ந்தும் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அனைத்திற்கும் முதலில் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைத் தொடர்ந்தும் கொடுங்கள். திரிமூர்த்தியின் படமானது மிகவும் சிறந்தது. சுவர்க்கம், நரகம் இரண்டும் தெளிவாகச் சக்கரப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. எந்தவொரு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்கள் சுவர்க்கத்திற்குள் செல்ல முடியாது என்பதைக் உலக நாடகச் சக்கரத்தின் அல்லது கல்ப விருட்சத்தின் படத்தைப் பயன்படுத்தி உங்களால் விளங்கப்படுத்த முடியும். அதியுயர்ந்த தர்மத்தைச் சார்ந்த செல்வந்தர்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஏழைகளாகி விட்டார்கள். ஆரம்பத்தில் இருந்தே இருந்தவர்களே அதிகளவு சனத்தொகையைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது பல இந்துக்களும் வேறு சமயங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தமது சொந்த சமயத்தைத் தெரியாததால் அவர்கள் மற்றைய சமயங்களுக்கு மாறிவிட்டார்கள். அல்லது தாம் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் தமது சொந்த சமயத்தையேனும் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். மக்கள் “ஓ அமைதியை அருள்பவரே!” எனக் கடவுளை அழைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அமைதி என்பதன் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள். மக்கள் தொடர்ந்தும் அமைதிப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் இங்கு உலக சமாதானத்தை ஏற்படுத்துகின்ற கருவிகளாகிய உங்களுக்கு பாபா உலக இராச்சியத்தையே பரிசாகக் கொடுக்கின்றார். உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்கள் இந்தப் பரிசைப் பெறுகின்றீர்கள். இந்தப் பரிசை வழங்குபவர் தந்தையாகிய கடவுளே. அந்தப் பரிசு மிகவும் பெருமை வாய்ந்தது. அது உலகத்தின் சூரிய வம்ச இராச்சியமாகும். உலகின் சரித்திரமும் புவியியலும் சகல வம்சங்கள் போன்றவையும் இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. ஆகவே, நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறவேண்டுமானால், ஏதேனும்; முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கருத்துக்கள் மிக இலகுவானவை. ஆசிரியர் உங்களுக்குக் கொடுக்கும் எந்தப் பணியையும் நீங்கள் செய்யவே வேண்டும். அப்போது, எக்குழந்தைகள் முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை பாபா பார்ப்பார். சில குழந்தைகள் முரளியில் கவனம் செலுத்துவதும் இல்லை. அவர்கள் முரளியைத் தினமும் கற்பதுவும் இல்லை. முரளியையே கற்காதவர்களால் எவ்வாறு மற்றவர்களுக்கு நன்மையைக் கொடுக்க முடியும்? மற்றவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தாத பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கோ மற்றவர்களுக்கோ நன்மை செய்வதில்லை. இதனாலேயே அவர்கள் குதிரைப் படையினரும் காலாட்படையினரும் என்று அழைக்கப்படுகின்றார்கள். சிலர் மகாராத்திகள் ஆவர். மகாராத்திகள் யார் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். சிலர் குதிரைப் படையினராக இருப்பதனால் அவர்கள் “பாபா, குல்ஸாரையோ, குமார்க்காவையோ அல்லது மனோஹரையோ அனுப்புங்கள். ஏனெனில் அவர்கள் மகாராத்திகள்” எனக் கூறுகின்றார்கள். தந்தைக்கு அனைத்துக் குழந்தைகளையும் மிக நன்றாகத் தெரியும். அவர்களுள் சிலரின் மீது தீய சகுனங்கள் நிலவுகின்றன. சிலவேளைகளில், அத்தகைய மாயையின் புயல்கள் மிகச் சிறந்த குழந்தைகளிடமும் வருவதானால் அவர்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல் ஆகி இலக்கின்றி அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் ஞானத்தில் கவனம் செலுத்தவும் மாட்டார்கள். ஒவ்வொருவரும் செய்யும் சேவையில் இருந்து பாபாவால் புரிந்துகொள்ள முடியும். சேவை செய்பவர்கள் தொடர்ந்தும் பாபாவுக்கு சகல செய்திகளையும் கொடுப்பார்கள். கீதையின் கடவுளே உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கீதையை வாசிப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கும் பலரும் இருக்கின்றார்கள் நீங்களே தெய்வீகக் குலத்தவர்களாகப் போகும் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் தம்மைத் தாமே கடவுள் எனக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் “நானே கடவுள்” என்றே கூறுகின்றார்கள். அவர்கள் தமது மனதில் தோன்றிய அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்த மக்களின் நிலை எவ்வாறாகி உள்ளது எனப் பாருங்கள்! இவ்வுலகம் கலியுகமாகவும் தூய்மையற்றும் இருக்கின்றது. இப்படத்தைப் பயன்படுத்தி உங்களால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். இந்த ஞானத்துடன், உங்களுக்கு தெய்வீகக் குணங்களும் தேவை. உள்ளும் புறமும் நேர்மை இருக்க வேண்டும். ஆத்மாக்கள் போலியானவர்கள் ஆகிவிட்டார்கள், உண்மையான தந்தையே அவர்களை உண்மையானவர்கள் ஆக்குகின்றார். தந்தை வந்தே உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் உங்களை தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கத் தூண்டுகின்றார். நீங்கள் இலக்ஷ்மி நாராயணைப் போல் நற்குணங்களைக் கொண்டவர்கள் ஆகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் ஏதாவது அசுரத்தனமான சுபாவங்கள் இருக்கின்றதா என உங்களையே நீங்கள் சோதித்துப் பாருங்கள். முன்னேறிச் செல்லும்போது, நீங்கள் மேலேயிருந்து வீழ்ந்துவிடும் அளவிற்கு மாயை உங்களை அறைகின்றாள். இந்த கியானும் விக்கியானும் உங்களுக்கு ஹோலியும் (அசுரனை எரித்தல்) தூரியாவும் (கடவுளின் சகவாசத்தினால் நிறமூட்டப்படல்) ஆகும். ஹோலியையும், தூரியாவையும் கொண்டாடும் எவருக்குமே அதன் அர்த்தம் தெரியாது. உண்மையில், இதுவே கியானும் விக்கியானும் (சத்தத்திற்கு அப்பால் செல்லுதல்) ஆகும். இதன் மூலமே நீங்கள் உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவீர்கள். அவர்கள் தொடர்ந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் எனப் பாருங்கள்! இந்த உலகம் ஆழ்நரகமாக இருப்பதனால் அவர்கள் சாயப் பொடியைத் தெளிக்கின்றார்கள். புதிய உலகின் ஸ்தாபனையும் பழைய உலகின் விநாசமும் இப்பொழுது இடம்பெறுகின்றது. அவர்கள் சாக்கடையில் வீழ்ந்து விடுமளவிற்கு மாயை கடவுளின் குழந்தைகளைக் குத்துகின்றாள். பின்னர் அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது பெரும்பாடாகி விடுகின்றது. இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தப் பாதையில் மீண்டும் நடப்பதுவும் அவர்களுக்கு மிகவும் கடினமாகி விடுகின்றது. இதனாலேயே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மாயையின் எந்தவிதமான தாக்கத்தில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பதற்கு சரீர உணர்வில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருங்கள். நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். சகோதரிகள் தமக்கு பாபா எதைக் கற்பித்தாரோ அதனையே உங்களுக்குக் கற்பிப்பார்கள். ஆகவே, இது தந்தையின் மகத்துவமேயன்றி சகோதரிகளுடையது அல்ல! இது பிரம்மாவின் மகத்துவமும் அல்ல. அவரும் முயற்சி செய்வதன் மூலமே இதனைக் கற்றுக்கொண்டார். அவரும் மிக நன்றாக முயற்சி செய்தார். அவர் தான் நன்மை அடைந்ததால் இப்பொழுது நீங்களும் நன்மை அடையலாம் என்பதற்காக உங்களுக்குக் கற்பிக்கின்றார். இன்று, ஹோலிப் பண்டிகை. ஆகவேதான் உங்களுக்கு அதனைப் பற்றிய ஞானம் கொடுக்கப்படுகின்றது. கியானும் விக்கியானும் உள்ளது. கல்வியே ஞானம் எனப்படுகின்றது. விக்கியான் என்பது என்ன? எவருக்குமே இது தெரியாது. விக்கியான் என்பது கியானிற்கும் அப்பாற்பட்டதாகும். இங்கேயே நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இதன் மூலமே நீங்கள் வெகுமதியையும் பெற்றுக் கொள்கின்றீர்கள். அது அமைதி தாமம் ஆகும். உங்கள் பாகங்களை இங்கு நடித்ததால் நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் அமைதிக்குள் செல்ல விரும்புகின்றீர்கள். உலகச் சக்கரத்தின் இந்த ஞானமானது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்லப் போகின்றீர்கள். பின்னர், நீங்கள் உங்கள் 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நரகத்திற்குள் வருவீர்கள். நீங்கள் மீண்டும் அதே ஸ்திதியையே அடைவீர்கள். இது தொடர்ந்தும் நடைபெறுகிறது. இதிலிருந்து எவராலும் விடுபட முடியாது. சிலர் கேட்கின்றார்கள்: இந்த நாடகம் ஏன் உருவாக்கப்பட்டது? ஆ! இந்த நாடகமானது பழைய உலகத்தைப் பற்றியது. புதிய உலகமானது அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. இதனை விருட்சத்தைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிக இலகுவானதாகும். தந்தையை நினைவு செய்து தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லும் பொழுது, இக்குலத்திற்கு உரியவர்கள் யார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். மற்றைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்களும் வெளிப்படுவார்கள். அவர்கள் இங்கு வரும்பொழுது மக்கள் அதிசயப்படுவார்கள். சரீர உணர்வைத் துறந்து ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுமாறு அனைவருக்கும் கூறுங்கள். இக்கல்வியானது பெரும் பண்டிகையாகும். இதன் மூலமே நீங்கள் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். அவர்கள் அப்பண்டிகைகளைக் கொண்டாடுவதில் பெருமளவு பணத்தை வீணாக்குகின்றார்கள். பெருமளவு சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன. உள்நாட்டு அரசுக்கிடையிலும் பெருமளவு சண்டைகள் இருக்கின்றன. அவர்கள் ஒருவரைக் கொல்வதற்காக இலஞ்சம்கூடக் கொடுக்க முயல்கின்றார்கள். அத்தகைய பல உதாரணங்கள் இருக்கின்றன. சத்தியயுகத்தில் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் இராவணின் இராச்சியத்திலே பெருமளவு குழப்பங்கள் இருக்கின்றன. தற்சமயத்தில் அனைவரும் தமோபிரதானாக இருக்கின்றார்கள். இங்கு கருத்து வேறுபாடுகளின் காரணமாக அதிகளவு சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பழைய உலகைத் தொடர்ந்தும் மறந்து, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து வீட்டினை நினைவு செய்யுங்கள். உங்கள் சந்தோஷ தாமத்தை நினைவு செய்யுங்கள். ஏனையவர்களுடன் பெருமளவில் பேசாதீர்கள். இல்லாவிடின் நீங்கள் பெருமளவு நஷ்டம் அடைவீர்கள். பெருமளவு அன்புடன் இனிமையாகவும் சாந்தமாகவும் பேசுவதே சாலச்சிறந்தது. அதிகம் பேசுவது சிறந்ததல்ல. மௌனத்தில் இருப்பது மிகச் சிறந்தது. மௌனத்தின் மூலமே குழந்தைகளாகிய நீங்கள் வெற்றி அடைகின்றீர்கள். நீங்கள் வேறு எவரையுமன்றி ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே அன்பு செலுத்த வேண்டும். தந்தையிடம் இருந்து உங்களுக்கு வேண்டியளவு சொத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். லௌகீகத் தந்தை ஒருவரின் சொத்திற்காக பெருமளவு சண்டை இடம்பெறுகிறது. இங்கு எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. கற்பதன் மூலம் உங்களுக்கு வேண்டிய அளவை உங்களால் பெறமுடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை உண்மையானவர்கள் ஆக்குவதற்காகவே உண்மையான தந்தை வந்துள்ளார். இதனாலேயே நீங்கள் நேர்மையுடன் முன்னேறிச் செல்லவேண்டும். “என்னுள்ளே ஏதாவது அசுர குணங்கள் இருக்கின்றனவா? நான் அதிகம் பேசுகின்றேனா?” என உங்களைச் சோதியுங்கள். மிக இனிமையானவர்களாகி அதிக அன்புடன் மென்மையாகப் பேசுங்கள்.2. முரளியில் முழுக் கவனம் செலுத்துங்கள். முரளியை நாளாந்தம் கற்றிடுங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். ஆசிரியர் உங்களுக்குக் கொடுக்கும் எப்பணியையும் செய்திடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தீவிர முயற்சியாளராகி, ‘ஹோலி’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை உங்களின் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களின் முயற்சிகளின் வேகத்தை அதிகரிப்பீர்களாக.ஹோலி என்றால் நடந்தவை, கடந்து சென்றவை எவற்றையும் முற்றிலும் முடிப்பதாகும். கடந்ததைக் கடந்தது ஆக்கிவிட்டு, முன்னேறுவது என்றால் ஹோலியைக் கொண்டாடுவதாகும். ஏற்கனவே நடந்த எதையும் மிகவும் பழையதாக, கடந்த பிறவிக்குரியதாக அனுபவம் செய்யுங்கள். உங்களிடம் இத்தகைய ஸ்திதி இருக்கும்போது, உங்களின் முயற்சிகளின் வேகம் துரிதமாகிவிடும். எனவே, உங்களின் அல்லது மற்றவர்களின் கடந்தகாலத்தைப் பற்றி ஒருபோதும் நினைக்காதீர்கள். அவற்றை உங்களின் இதயத்தில் வைத்திருக்கவோ அல்லது அவற்றைப் பற்றிப் பேசவோ வேண்டாம். அப்போது மட்டுமே உங்களால் தீவிர முயற்சியாளர் ஆகமுடியும்.
சுலோகம்:
அன்பே நினைவைக் கொண்டிருப்பதற்கான இலகுவான வழிமுறை ஆகும். ஆகவே, சதா அன்பானவர்களாக இருந்து, மற்றவர்களையும் அன்பானவர்கள் ஆக்குங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
இந்த ஞானத்தின் ஆழமான கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதற்கு உங்களிடம் மிக நல்ல வழிமுறைகளும் விளக்கங்களும் உள்ளன. ஒவ்வொரு கருத்தையும் தர்க்கரீதியாகத் தெளிவுபடுத்த முடியும். உங்களிடம் உங்களின் சொந்த அதிகாரம் உள்ளது. இவை உங்களின் சொந்த மனம் அல்லது உங்களின் கற்பனையான விடயங்கள் இல்லை. இவை உண்மையானவை. அவை உங்களின் அனுபவங்கள். நீங்களே அனுபவத்தின் அதிகாரம், இந்த ஞானத்தின் அதிகாரம், சத்தியத்தின் அதிகாரம் ஆவீர்கள். உங்களிடம் பல அதிகாரங்கள் உள்ளன. எனவே, உங்களின் அதிகாரத்தையும் உங்களின் அன்பையும் இரண்டையும் பயன்படுத்துங்கள்.
மாதேஷ்வரியின் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்பந்தனத்தில் இருக்கும் மறைமுகமான கோபிகைகளின் புகழ் உள்ளது.
பாடல்: உங்களைப் பார்க்காமலே நான் உங்களைக் காதலிக்கிறேன், வீட்டில் இருந்தபடியே நான் உங்களை நினைக்கிறேன்.
இந்தப் பாடல் பந்தனத்தில் உள்ள போதையுடன் இருக்கும் கோபி ஒருவரால் பாடப்பட்டது. இது ஒவ்வொரு கல்பமும் நிகழ்கின்ற தனித்துவமான செயல்திறன் ஆகும். அந்த ஒரேயொருவரைப் பார்க்காமலே அவர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். சென்ற கல்பத்தின் ஒவ்வொரு பாகமும் அதேபோன்று மீண்டும் நடக்கிறது என்பதைப் பற்றி இந்த அப்பாவி உலகத்திற்கு என்ன தெரியும். அந்த கோபி தனது வீட்டை அல்லது குடும்பத்தை விட்டு வராவிட்டாலும் நினைவின் மூலம் அவள் தனது கர்மக்கணக்குகளைத் தீர்க்கிறாள். எனவே, மிகுந்த சந்தோஷத்தில் ஊஞ்சலாடிய வண்ணம் அந்த போதையில் அவள் அதைப் பாடியிருக்க வேண்டும். அதனால், உண்மையில் இது உங்களின் வீட்டை அல்லது குடும்பத்தை விட்டு நீங்குகின்ற விடயம் இல்லை. வீட்டில் இருக்கும்போது, அந்த ஒரேயொருவரைப் பார்க்காமலே அந்த சந்தோஷத்துடன் நீங்கள் சேவை செய்ய வேண்டும். நீங்கள் என்ன சேவையைச் செய்ய வேண்டும்? தூய்மையானவராகி, மற்றவர்களையும் தூய்மை ஆக்குதல். நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது மூன்றாம் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் பார்வையில் விதையானவரினதும் விருட்சத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையுமான இரகசியம் உள்ளது. எனவே, இந்த ஞானத்தினால் 21 பிறவிகளுக்கு உங்களின் மகத்தான பாக்கியத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பது இந்த வாழ்க்கையின் மகத்துவம் ஆகும். விகாரங்களைப் பின்பற்றுவதில் நீங்கள் சமுதாயத்தின் அபிப்பிராயங்களை அல்லது குலத்தின் கோட்பாடுகளை வைத்திருந்தால், உங்களால் இந்தச் சேவையைச் செய்ய முடியாமல் இருக்கும். அது உங்களின் சொந்தப் பலவீனம். பிரம்மா குமாரிகள் வீடுகளைப் பிளவடையச் செய்ய வந்துள்ளார்கள் எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இதில் வீடுகளைப் பிளவுபடுத்துவது என்ற கேள்வியே இங்கே இல்லை. வீட்டில் இருக்கும்போதே, நீங்கள் தூய்மையானவராகி சேவை செய்ய வேண்டும். இதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. நீங்கள் தூய்மையாகும்போது, தூய உலகிற்குச் செல்வதற்கான உரிமையைக் கோருவீர்கள். எவ்வாறாயினும், அங்கே செல்லாதவர்கள் சென்ற கல்பத்தின் பகைக்குரிய பாகங்களையே நடிப்பார்கள். இதில் எவரையும் குறை சொல்ல முடியாது. எங்களுக்கு இறை பணியைப் பற்றித் தெரிந்திருப்பதைப் போல், ஒவ்வொருவரும் இந்த நாடகத்தில் ஒரு பாகத்தை நடிக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதனால் எந்தவித வெறுப்பும் இருக்க முடியாது. இத்தகைய தீவிர முயற்சி செய்யும் கோபிகைகளால் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, வெற்றி மாலையில் வரமுடியும். அச்சா.