13.04.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2004 Om Shanti Madhuban
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து, உங்களின் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவம் வெளிப்பட வேண்டும். இதுவே முக்திதாம வாசலின் சாவி ஆகும்.
இன்று, புதிய யுகத்தினைப் படைப்பவரான பாப்தாதா, தனது குழந்தைகளுடன் புது வருடத்தைக் கொண்டாட வந்துள்ளார். தனது குழந்தைகளின் மீதுள்ள அன்பால், அவர் தொலைதூரத்தில் இருந்து அவர்களுடன் ஓர் இறை சந்திப்பைக் கொண்டாடுவதற்காக பௌதீக உலகிற்கு வந்துள்ளார். உலகில், புது வருடத்திற்காக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். ஆனால் பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு, புது வருடத்திற்கும் புதிய யுகத்திற்கும் இரண்டுக்குமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். புதுவருடக் கொண்டாட்டம் ஒரு நாளுக்கான கொண்டாட்டமே. ஆனால் நீங்கள் புதிய யுகத்தை சங்கமயுகத்தில் சதா கொண்டாடுகிறீர்கள். இறையன்பால் கவரப்பட்டு, நீங்கள் எல்லோரும் இங்கே வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், யார் மிகத் தொலைவில் இருந்து வந்திருக்கிறார்? இரட்டை வெளிநாட்டவர்களா? அவர்கள் இந்தப் பௌதீக உலகில் இருந்தே வந்துள்ளனர். ஆனால் தொலைதூர வாசியான பாப்தாதா எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்? பாபா எத்தனை மைல்கள் கடந்து வந்துள்ளார் என உங்களால் அந்தத் தூரத்தை அளக்க முடியுமா? எனவே, தொலைதூர வாசியான பாப்தாதா, நீங்கள் எல்லோரும் - நீங்கள் டயமண்ட் மண்டபத்தில் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தால் என்ன, அல்லது மதுவனம், ஞானசரோவர், அருங்காட்சியகத்தில் இருந்தாலென்ன அல்லது இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் தூரத்தில் அமர்ந்திருந்தாலென்ன - பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் பாப்தாதாவுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டும் இருப்பதைப் பார்க்கிறார். எனவே, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் புதிய யுகத்திற்கும் புது வருடத்திற்கும் பல மில்லியன் மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். குழந்தைகளான உங்களின் கண்களின் முன்னால் புதிய யுகம் இருக்கிறதல்லவா? அவ்வளவுதான். இன்று, நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். நாளை, நீங்கள் புதிய யுகத்தில், இராச்சிய உரிமை உள்ளவர்களாக உங்களின் இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். அது மிக நெருக்கமாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? இது இன்றும் நாளையும் என்ற விடயம் மட்டுமே. நீங்கள் நேற்று (கல்) அப்படி இருந்தீர்கள். நாளை (கல்) மீண்டும் ஒருமுறை அப்படி ஆகப் போகிறீர்கள். உங்களின் புதிய யுகத்தின், தங்க யுகத்தின் தங்க ஆடையை உங்களின் முன்னால் பார்க்க முடிகிறதா? அது மிகவும் அழகாக உள்ளது. உங்களால் அதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறதல்லவா? இன்று, நீங்கள் சாதாரணமான ஆடையுடன் இருக்கிறீர்கள். நாளை, நீங்கள் புதிய யுகத்தின் அழகான, ஜொலிக்கும் ஆடையுடன் இருப்பீர்கள். புது வருடத்திற்காக, இந்த ஒரு நாள் மட்டும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளைக் கொடுப்பார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா, புதிய யுகத்தைப் படைப்பவர், உங்கள் எல்லோருக்கும் பல பிறவிகளுக்கு நிலைத்திருக்கும் பொன்னுலகம் என்ற பரிசை வழங்குகிறார். அது அழியக்கூடிய பரிசு இல்லை. தந்தை குழந்தைகளான உங்களுக்கு அழியாத பரிசை வழங்கியுள்ளார். உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? நீங்கள் அதை மறக்கவில்லைத்தானே? உங்களால் ஒரு விநாடியில் வந்து போக முடியும். ஒரு கணம், நீங்கள் சங்கமயுகத்தில் இருப்பீர்கள். அடுத்த கணம், உங்களால் உங்களின் பொன்னுலகைச் சென்று அடைய முடியும். அல்லது, அதற்கு நீண்ட நேரம் எடுக்குமா? உங்களின் இராச்சியத்தை நீங்கள் நினைவு செய்கிறீர்கள்தானே?
இன்றைய தினம், விடை பெறுகின்ற நாள் என்று அழைக்கப்படுகிறது. நள்ளிரவின் பின்னர், கொண்டாட்டத்திற்குரிய நேரம் என்று அழைக்கப்படும். அதனால், விடை பெறும் நாளில், இந்த வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, வேறு எதற்கும் நீங்கள் விடை கொடுத்துள்ளீர்கள்? நீங்கள் எல்லா வேளைக்கும் விடை கொடுத்துள்ளீர்களா அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே விடை கொடுத்துள்ளீர்களா என்பதைச் சோதித்துப் பார்த்தீர்களா? காலம் மிக வேகமாகச் செல்கிறது என பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். எனவே, உங்களின் முயற்சிகளின் வேகம் துரிதமாக உள்ளதா என நீங்கள் வருடம் முழுவதும் உங்களின் பெறுபேற்றைச் சோதித்துப் பார்த்தீர்களா? அல்லது, அது சிலவேளைளில் ஒரு வேகத்திலும் ஏனைய வேளைகளில் வெவ்வேறு வேகங்களிலும் செல்கிறதா? உலகத்தின் நிலைமைகளைப் பார்க்கும்போது, நீங்கள் இப்போது குறிப்பாக உங்களின் இரண்டு ரூபங்களை வெளிப்படுத்த வேண்டும். அந்த இரண்டு ரூபங்களாவன: எல்லோர் மீதும் கருணை நிறைந்தவராகவும் நன்மை செய்பவராகவும் இருத்தல். இரண்டாவது, ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அருள்பவரின் குழந்தையாக, மாஸ்ரர் அருள்பவராக இருத்தல். உலகிலுள்ள ஆத்மாக்கள் முற்றிலும் சக்தியற்றவர்களாக, துன்பம் நிறைந்தவர்களாக, அமைதியற்றவர்களாக இருப்பதுடன் துயரத்தில் அழுகிறார்கள். அவர்கள் தந்தையை நோக்கியும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்களை நோக்கியும் அழைக்கிறார்கள்: ‘எங்களுக்கு சந்தோஷம், அமைதி, சுகம், தைரியத்தை ஒரு சில கணங்களுக்கேனும் அருளுங்கள்’. தந்தையால் குழந்தைகளின் துன்பத்தையும் துயரத்தையும் காண அல்லது கேட்கப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்கள் எல்லோருக்கும் கருணை பிறக்கவில்லையா? அவர்கள் யாசிக்கிறார்கள்: அருளுங்கள், அருளுங்கள், அருளுங்கள்! எனவே, அருள்பவரின் குழந்தைகள் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு துளியையாவது கொடுக்க வேண்டும்! தந்தை குழந்தைகளான உங்களை, அவரின் சகபாடிகளை மாஸ்ரர் அருள்பவர்களாகத் தனது வலது கரங்களாக ஆக்கி, இந்த சமிக்கையைக் கொடுக்கிறார்: நீங்கள் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்தி அளிக்க வேண்டும். எல்லோரும் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஓ அருள்பவரின் குழந்தைகளே, இப்போது, உங்களின் மேன்மையான எண்ணங்களால், உங்களின் மனதின் சக்தியால், அது வார்த்தைகள், உறவுமுறைகள், தொடர்புகள், நல்லாசிகளும் தூய உணர்வுகளும், அதிர்வலைகள் அல்லது சூழல் என எந்தவொரு வழிமுறை ஆனாலும் அதனால் அவர்களுக்கு நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொடுங்கள். ‘எங்களை விடுவியுங்கள்!’ என அவர்கள் அழுகிறார்கள். பாப்தாதா தனது வலது கரங்களிடம் கூறுகிறார்: கருணை காட்டுங்கள்.
இதுவரை நீங்கள் பாரதத்திலும் வெளிநாடுகளில் நீங்கள் திறந்துள்ள நிலையங்களாலும் நடத்திய மெகா நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளால், உலகிலுள்ள ஆத்மாக்களின் முழுச் சனத்தொகைக்கேற்ப, எத்தனை சதவீதமான ஆத்மாக்களுக்கு முக்திக்கான பாதையை நீங்கள் காட்டியுள்ளீர்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் பாரதத்திற்கு மட்டும் நன்மை செய்பவர்களா? அல்லது ஐந்து கண்டங்களில் உள்ள வெளிநாடுகளுக்கு மட்டும் நன்மை செய்பவர்களா? நீங்கள் எங்கே நிலையத்தைத் திறந்திருந்தாலும் அந்த இடத்திற்கு மட்டும் நன்மை செய்பவர்களா அல்லது உலகிற்கே நன்மை செய்பவர்களா? உலகிற்கு நன்மை செய்வதற்காக, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையின் வலது கரமாக ஆகவேண்டும். நீங்கள் வலது கரங்கள்தானே? நீங்கள் யாராவது ஒருவருக்கு எதையாவது கொடுக்கும்போது, எப்படி அதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் அதை உங்களின் கைகளாலேயே கொடுப்பீர்கள், அப்படித்தானே? எனவே, நீங்கள் பாப்தாதாவின் கைகள்தானே? நீங்கள் அவரின் கரங்கள். எனவே, பாப்தாதா தனது வலது கரங்களிடம் கேட்கிறார் - எத்தனை சதவீதமான ஆத்மாக்களுக்கு நீங்கள் நன்மை செய்துள்ளீர்கள்? எத்தனை சதவீதத்தினருக்கு நீங்கள் நன்மை செய்துள்ளீர்கள்? பாபாவிடம் சொல்லுங்கள். இதைக் கணக்கிடுங்கள். பாண்டவர்களான நீங்கள் கணக்கிடுவதில் கெட்டிக்காரர்கள்தானே? இதனாலேயே பாப்தாதா கூறுகிறார்: இப்போது, உங்களின் முயற்சிகளையும் சேவை செய்வதில் வெவ்வேறு வழிமுறைகளுக்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்துங்கள். ஒருவரின் சொந்த ஸ்திதியைப் பொறுத்தவரையும் குறிப்பாக நான்கு விடயங்களைச் சோதித்துப் பாருங்கள். இது தீவிர முயற்சி செய்தல் எனப்படுகிறது.
முதலில், உங்களுக்கு ஒரு கருவியாக இருக்கும் உணர்வு இருக்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். ‘நான்’ என்ற இராஜரீகமான ரூபம் ஏதாவது உள்ளதா? ‘எனது’ என்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா? சாதாரணமான மக்களுக்கு ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பது சாதாரணமானது. அவர்கள் புற உணர்வில் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையில், ‘எனது’ மற்றும் ‘நான்’ என்பவை சூட்சுமமானதும் இராஜரீகமானதும் ஆகும். அதன் மொழி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ‘இது எல்லா வேளையும் நடக்கிறது. இது எல்லா வேளையும் தொடர்கிறது. இது நடக்கும். நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம், நாங்கள் பார்க்கிறோம்.....’ எனவே, ஒன்று ஒரு கருவியாக (நிமித்) இருத்தல். நீங்கள் ஒவ்வொரு வழிமுறையிலும் அது சேவையோ, உங்களின் ஸ்திதியோ, உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலுமோ அதற்குக் கருவியாக இருக்கிறீர்கள். உங்களின் முகமும் செயல்களும் ஒரு கருவியினுடையதாக இருக்க வேண்டும். இரண்டாவது சிறப்பியல்பானது, ஒரு கருவியாகவும் பணிவாகவும் (நிர்மான்) இருக்கும் உணர்வாகும். கருவியும் பணிவைக் கொண்டிருப்பதும். கருவியாக இருந்து, பணிவுடன் புதுப்பித்தலை (நிர்மாண்) செய்தல். எனவே, நீங்கள் மூன்று விடயங்களைப் பற்றிக் கேட்டீர்கள் - கருவி, பணிவு, புதுப்பித்தல். நான்காவது விடயம் சத்தத்திற்கு அப்பாற்பட்டது (நிர்வாணா). நீங்கள் விரும்பும் போதெல்லாம் சத்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்குச் செல்லுங்கள். சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். ஏனென்றால், நீங்கள் சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் இருந்தால் மட்டுமே உங்களால் ஏனைய ஆத்மாக்கள் சத்தத்திற்கு அப்பாற்பட்ட தாமத்தை அடையச் செய்ய முடியும். இப்போது, எல்லோருக்கும் முக்தியே தேவைப்படுகிறது. அவர்கள் அழுகிறார்கள்: ‘எங்களை விடுவியுங்;கள்! எங்களை விடுவியுங்கள்!’ எனவே, உங்களின் நடைமுறை வாழ்க்கையில் இந்த நான்கு விடயங்களிலும் நல்லதொரு சதவீதத்தைக் கொண்டிருத்தல் என்றால் தீவிர முயற்சியாளராக இருத்தல் என்று அர்த்தம். அப்போது பாப்தாதா கூறுவார்: ஆஹா! ஆஹா குழந்தைகளே, ஆஹா! நீங்களும் சொல்வீர்கள்: ஆஹா, பாபா ஆஹா! ஆஹா, நாடகமே ஆஹா! ஆஹா, முயற்சியே, ஆஹா! எவ்வாறாயினும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா? தெரியுமா? சிலவேளைகளில் நீங்கள் ‘ஆஹா’ என்று சொல்கிறீர்கள். சிலவேளைகளில் ‘ஏன்?’ எனச் சொல்கிறீர்கள். ‘ஏன்’ என்பதற்குப் பதிலாக, அது ‘ஐயோ’ (கவலை) என்று ஆகுகிறது. எனவே, அது ‘ஏன்?’ என்று இருக்கக்கூடாது, ஆனால் ‘ஆஹா!’ என்று இருக்க வேண்டும். உங்களுக்கு எது பிடித்திருக்கிறது? ஆஹா அல்லது ஏன்? உங்களுக்கு எது பிடிக்கும்? (ஆஹா). நீங்கள் ஒருபோதும் ‘ஏன்?’ எனச் சொல்வதில்லையா? அது தவறுதலாக வருகிறதா?
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் ‘ஏன்? ஏன்?’ எனச் சொல்கிறீர்களா? நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா? ‘ஏன்?’ எனச் சொல்கிறீர்களா? சிலவேளைகளில் அதைச் சொல்கிறீர்களா? ‘ஏன்?’ என ஒருபோதும் சொல்லாதவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். பாரதவாசிகளான உங்களில் ‘ஆஹா, ஆஹா’ என்பதற்குப் பதிலாக, ‘ஏன்? என்ன?’ எனச் சொல்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஏன்? அல்லது என்ன? எனச் சொல்கிறீர்களா? உங்களுக்கு யார் இதற்கான அனுமதி கொடுத்தது? உங்களின் சம்ஸ்காரங்களா? உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் ‘ஏன்? ஏன்?’ என உங்களுக்குச் சொல்வதற்கான அனுமதியைக் கொடுத்துள்ளன. தந்தையோ, ஆஹா, ஆஹா! எனச் சொல்லும்படி கூறுகிறார். ‘ஏன்? ஏன்?’ எனச் சொல்லாதீர்கள். எனவே இப்போது, புது வருடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆஹா, ஆஹா! எனச் சொல்வீர்களா? அல்லது, ‘ஏன்?’ என்பதற்கு, சிலவேளைகளில் ‘ஏன்?’ எனச் சொல்வதற்கு பாபா உங்களுக்கு அனுமதி கொடுக்கட்டுமா? ‘ஏன்?’ என்பது நல்லதல்ல. உங்களுக்கு வாயுத்தொல்லை (இந்தியில் வை என்றால் வாயுத்தொல்லை) இருக்கும்போது, உங்களின் வயிறு குழப்பம் அடைகிறதுதானே? எனவே, ‘ஏன்?’ என்பதும் வாயுத்தொல்லை போன்றதுதான். இதைச் செய்யாதீர்கள். ஆஹா, ஆஹா! என்பது நன்றாக உள்ளது. நீங்கள் எல்லோரும் ‘ஆஹா, ஆஹா, ஆஹா!’ என்றே சொல்கிறீர்கள்.
அச்சா. பாரதத்திலும் வெளிநாடுகளிலும் தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பவர்களே, பாபா குழந்தைகளான உங்களையும் கேட்கிறார்: நீங்கள் ‘ஆஹா, ஆஹா!’ எனச் சொல்கிறீர்களா அல்லது ‘ஏன்? ஏன்?’ எனச் சொல்கிறீர்களா? இன்று, இது விடை பெறுவதற்கான நாள் ஆகும். இன்று விடை பெறுவதற்கான நாள், இந்த வருடத்தின் கடைசி நாள். எனவே, இனிமேலும் ‘ஏன்?’ எனச் சொல்ல மாட்டீர்கள் என்ற எண்ணம் உங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவும் மாட்டீர்கள். கேள்விக்குறி இல்லை, வியப்புக்குறி இல்லை, ஒரு முற்றுப்புள்ளி மட்டுமே. நீங்கள் ஒரு கேள்விக்குறி இடும்போது, அது மிகவும் கோணலாக இருக்கும். ஆனால் ஒரு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் இலகுவாக இருக்கும். புள்ளியான தந்தையை உங்களின் கண்களில் கலந்துவிடுங்கள். நீங்கள் பார்க்கின்ற கண்மணிகள் உங்களின் கண்களில் இருப்பதைப் போல், சதா புள்ளியான தந்தையை உங்களின் கண்களில் கலந்துவிடுங்கள். அவரை எப்படிக் கலப்பது என உங்களுக்குத் தெரியுமா? அல்லது, அவர் அதற்குள் பொருந்த மாட்டாரா? அவர் மேலேயும் கீழேயும் போவாரா? எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? எதற்கு நீங்கள் விடை கொடுப்பீர்கள்? ஏன்? என்பதற்கு. ஒருபோதும் வியப்புக்குறியின் அடையாளமும் இருக்கக்கூடாது: ‘இது எப்படிச் சாத்தியமாகும்? இதுவும் நடக்கிறதா? இது நடந்திருக்கக்கூடாதே, அப்படி என்றால் ஏன் அது நடந்தது?’ கேள்விக்குறியோ அல்லது வியப்புக்குறியோ இருக்கக்கூடாது. தந்தையும் நானும். இது எல்லா வேளையும் நடக்கிறதுதானே? எனப் பல குழந்தைகள் சொல்கிறார்கள். தமது இதயபூர்வமான சம்பாஷணைகளில் அவர்கள் பாப்தாதாவிற்கு மிகவும் சுவாரசியமான விடயங்களைக் கூறுகிறார்கள். அவர்களால் பாபாவிடம் எல்லாவற்றையும் முகத்திற்கு முன்னே தனிப்பட்ட முறையில் சொல்ல முடிவதில்லை. அதனால் அவர்கள் தமது இதயபூர்வமான சம்பாஷணையில் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். ஓகே, என்னதான் நடந்திருந்தாலும் அது நல்லதே(சல்தா ஹே - நன்றாக நடக்கிறது). ஆனால் நீங்கள் நடக்கக்கூடாது (சல்னா - நடத்தல்), பறக்க வேண்டும். எனவே, நீங்கள் ஏன் நடக்கின்ற விடயங்களைப் பார்க்கிறீர்கள். பறந்து கொண்டு, மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள்! நல்லாசிகளும் தூய உணர்வுகளும் மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனால் இடையில் ‘ஏன்?’ என்பது இருக்கக்கூடாது. நல்லாசிகள், தூய உணர்வுகளைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. இவை மிகவும் சக்திவாய்ந்தவை. உங்களால் உங்களின் சொந்தத் தூய உணர்வுகளால் எவருடைய தூய்மையற்ற உணர்வுகளையும் மாற்ற முடியும். ஓகே, உங்களால் அவற்றை மாற்ற முடியாவிட்டால், இரண்டாவது தேர்வு என்னவென்றால், உங்களின் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் அழியாதவையாக இருக்கும்போது, சிலவேளைக்கு என்று மட்டும் இல்லாமல், அழியாதவையாக இருந்தால், அவர்களின் தூய்மையற்ற உணர்வுகளின் ஆதிக்கத்திற்கு உங்களால் உட்பட முடியாது. ‘இது ஏன் நடக்கிறது? எவ்வளவு காலத்திற்கு இது தொடரும்? இது எப்படித் தொடரும்?’ என நீங்கள் கேட்க ஆரம்பித்தால், உங்களின் நல்லாசிகளின் சக்தி குறைய ஆரம்பித்துவிடும். இல்லாவிட்டால், உங்களின் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் கொண்ட எண்ணங்களுக்கு அதிகளவு சக்தி உள்ளது. பாருங்கள், நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிடம் வந்துள்ளீர்கள். உங்களின் முதல் தினத்தை நினையுங்கள். பாப்தாதா என்ன செய்தார்? தூய்மையற்றவர்கள், பாவிகள், சாதாரணமானவர்கள் அல்லது வெவ்வேறு மனோபாவங்களையும் வெவ்வேறு உணர்வுகளையும் கொண்டவர்கள் யார் வந்திருந்தாலும் பாப்தாதா என்ன செய்தார்? அவருக்கு உங்களையிட்டு நல்லாசிகள் இருந்தன, அல்லவா? நீங்கள் என்னுடையவர்கள். நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அவரிடம் உங்களுக்காக நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருந்தனதானே? இவற்றுடனேயே நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆவதற்காக வந்தீர்கள். எப்போதாவது தந்தை, ‘பாவிகளான நீங்கள் ஏன் வந்தீர்கள்?’ எனக் கேட்டாரா? ‘நீங்கள் எனது குழந்தைகள். நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள்’ என்ற நல்லாசிகளையே அவர் சதா கொண்டிருந்தார். தந்தை உங்களுக்காக நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருந்த போது, உங்களின் இதயம் என்ன சொன்னது? ‘எனது பாபா’. அப்போது தந்தை என்ன சொன்னார்? ‘எனது குழந்தைகளே’. அதேபோல் நீங்களும் தொடர்ந்து நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருந்தால், உங்களால் எதைக் காண முடியும்? ‘சென்ற கல்பத்தின் எனது இனிமையான சகோதரரே, எனது நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள சகோதரியே’. அப்போது மாற்றம் நிகழும்.
எனவே, இந்த வருடம், எதையாவது செய்து இதைக் காட்டுங்கள். உங்களின் கைகளை வெறுமனே உயர்த்தாதீர்கள். உங்களின் கைகளை உயர்த்துவது மிகவும் இலகுவானது. உங்களின் மனங்களின் கைகளை உயர்த்துங்கள். ஏன்? இன்னமும் செய்வதற்கு அதிகளவு வேலை உள்ளதா? பாப்தாதா உலகிலுள்ள ஆத்மாக்களைப் பார்க்கும்போது, அவருக்கு அதிகளவு கருணை பிறக்கிறது. இப்போது, இயற்கையின் கூறுகளும் களைப்படைந்து விட்டன. இயற்கையும் இப்போது களைப்படைந்து விட்டாள், எனவே அவளால் என்ன செய்ய முடியும்? அவள் ஆத்மாக்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள். குழந்தைகளைப் பார்க்கும்போது தந்தைக்கு கருணை ஏற்படுகிறது. உங்கள் எல்லோருக்கும் கருணை ஏற்படுகிறதா? நீங்கள் செய்திகளைக் கேட்கிறீர்கள், பின்னர் மௌனமாகி விடுகிறீர்கள். அவ்வளவுதான். ஆத்மாக்கள் பலர் சென்றுவிட்டார்கள். அந்த ஆத்மாக்களுக்கு பாபாவின் செய்தி கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம், இப்போது அருள்பவர்கள் ஆகுங்கள், கருணைநிறைந்தவர்கள் ஆகுங்கள்! இது நடக்கும். உங்களின் எல்லையற்ற மனோபாவம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்குள் வெளிப்பட்டால் மட்டுமே நீங்கள் கருணை உடையவர் ஆகுவீர்கள். எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவம் - சரீரம் அல்லது சரீர உணர்வின் விழிப்புணர்வு ஏற்படுவதும் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதனாலேயே ஆகும். சிறிய விடயங்கள், அற்பமான, எல்லைக்குட்பட்ட விடயங்கள் உங்களின் ஸ்திதியைத் தளம்பல் அடையச் செய்கின்றன. இதற்கான காரணம் என்ன? எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவம் இல்லாமல் போவதே. பற்று காணப்படுகிறது. விருப்பமின்மை இல்லை, ஆனால் பற்று உள்ளது. உங்களிடம் சம்பூரணமான எல்லையற்ற விருப்பமின்மை இருக்கும்போதே - உங்களின் மனோபாவத்திலும் விருப்பமின்மை, உங்களின் பார்வையிலும் உங்களின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளிலும் சேவையிலும் எல்லையற்ற விருப்பமின்மை - அப்போது மட்டுமே முக்தி தாமத்தின் வாசல்கள் திறக்கும். இப்போது செல்கின்ற ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்து மீண்டும் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். எவ்வாறாயினும், நீங்களே முக்தி தாமத்தின் வாசல்களைத் திறப்பதற்கான கருவிகள் ஆவீர்கள், அப்படித்தானே? நீங்கள் தந்தை பிரம்மாவின் சகபாடிகள்தானே? எனவே, உங்களின் எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவமே வாசல்களைத் திறப்பதற்கான சாவி ஆகும். அந்தச் சாவி இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. தந்தை பிரம்மாவும் இன்னமும் காத்திருக்கிறார். முன்னோடிக் குழுவினரும் காத்திருக்கிறார்கள். இயற்கையின் பஞ்சபூதங்களும் காத்திருக்கின்றன. அவர்கள் மிகவும் களைப்படைந்து விட்டார்கள். மாயையும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். இப்போது பேசுங்கள், ஓ மாஸ்ரர் சர்வசக்திவான்களே, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என எனக்குச் சொல்லுங்கள்!
இந்த வருடம், நீங்கள் ஏதாவது புதுமையை ஏற்படுத்துவீர்கள்தானே? நீங்கள் அதைப் புது வருடம் என்று அழைக்கிறீர்கள். எனவே, நீங்கள் புதுமையாக எதையாவது செய்வீர்கள்தானே? எனவே, இப்போது எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தைக் கொண்டிருப்பதற்கும் முக்தி தாமத்திற்குச் செல்வதற்குமான சாவியைத் தயார் செய்யுங்கள். நீங்கள் எல்லோருமே முதலில் முக்தி தாமத்திற்கே செல்லப் போகின்றீர்கள், அப்படித்தானே? நீங்கள் தந்தை பிரம்மாவிற்கு, அவருடனேயே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் என்றும் அவருடனேயே கீழே வருவீர்கள் என்றும் அவருடனேயே இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள் என்றும் அவருடனேயே பக்தி செய்வீர்கள் என்றும் சத்தியம் செய்துள்ளீர்கள். எனவே, இப்போது ஆயத்தங்களைச் செய்யுங்கள். நீங்கள் அதை இந்த வருடம் செய்வீர்களா அல்லது உங்களுக்கு இன்னும் ஒரு வருடம் வேண்டுமா? மீண்டும் மீண்டும் ‘தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்!’ என்பதைச் செய்ய முடியும் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? அப்போது முன்னோடிக் குழுவினர் உங்களுக்குப் பல வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். அவர்கள் மிகவும் களைத்துவிட்டார்கள். அச்சா, ஆசிரியர்கள் என்ன சொல்கிறீர்கள்? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், என்ன சொல்கிறீர்கள்? அனைத்திற்கும் முதலில், முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் சக்திகளும் பாண்டவர்களும், உங்களில் யார் இதைச் செய்வீர்கள்? உங்களின் கைகளை உயர்த்துங்கள். அரைவாசி அல்ல. நீங்கள் உங்களின் கைகளை அரைவாசி உயர்த்தினால், நீங்கள் அரைவாசியே அதைச் செய்வீர்கள் என்றே சொல்லப்படும். உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள். அச்சா. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். இரட்டை வெளிநாட்டவர்களான உங்களைக் கைகளை உயர்த்தும்படி பாபா கேட்கிறார். இரட்டை வெளிநாட்டவர்களே, ஒருவரை ஒருவர் பார்த்து, யார் தனது கையை உயர்த்தவில்லை எனப் பாருங்கள். அச்சா. சிந்தி குழுவில் இருப்பவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். இது ஓர் அற்புதமே. நீங்கள் எல்லோரும் இதைச் செய்வீர்களா? சிந்திக் குழுவினர் இதைச் செய்வீர்களா? அப்படியாயின், இரட்டைப் பாராட்டுக்கள். மிகவும் நல்லது. ஒருவருக்கொருவர் சகவாசத்தைக் கொடுத்தவண்ணம், நல்லாசிகளுடன் சமிக்கை கொடுத்தவண்ணம் கைகளை இணைத்தபடி நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அச்சா. (ஒன்றுகூடலில் உள்ள யாரோ ஒருவர் கத்திச் சத்தமிட்டார்). எல்லோரும் அமருங்கள். இது எதுவும் புதியதல்ல.
இப்போது ஒரு விநாடியில் ஒரு புள்ளியாகி, புள்ளியான தந்தையை நினைவு செய்யுங்கள். சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களால் அதைச் செய்ய முடியுமா? ஒரு விநாடியில், ‘நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா என்னுடையவர்.’ அச்சா.
எங்கும் உள்ள புதிய யுகத்தின் அதிபதிகளாக இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் புது வருடத்தை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்ற எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சதா பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யும் பறக்கும் ஸ்திதியில் உள்ள குழந்தைகளுக்கும் தீவிர முயற்சி செய்வதன் மூலம் வெற்றி மாலையின் மணிகள் ஆகப் போகின்ற வெற்றி பெறுகின்ற இரத்தினங்களுக்கும் புதிய வருடத்திற்கும் புதிய யுகத்திற்கும் பாப்தாதாவின் ஆசீர்வாதங்கள் நிறைந்த, தட்டுநிறைந்த வாழ்த்துக்கள். பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு கையைத் தட்டலாம் (உங்களின் கையை அசைக்கலாம்). அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒருமுகப்படுத்தலையும் ஸ்திரத்தன்மையையும் பயிற்சி செய்வதன் மூலம் உங்களின் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆக்கி, அதனால் முழுமையான வெற்றியின் சொரூபம் ஆகுவீர்களாக.உங்களுக்குள் ஒருமுகப்படுத்தல் இருக்கும்போது, நீங்கள் இயல்பாகவே நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். ஒருமுகப்படுத்தலால், வீணான எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் அனைத்தும் முடிந்துவிடும். அத்துடன் எல்லாமே சக்தியால் நிரம்பிவிடும். ஒருமுகப்படுத்தல் என்றால் ஒரு மேன்மையான எண்ணத்தில் ஸ்திரமாக இருத்தல் என்று அர்த்தம். இதில் மரம் முழுவதன் விரிவாக்கமும் அமிழ்ந்துவிடும். உங்களின் ஒருமுகப்படுத்தலை அதிகரியுங்கள். சகல வகையான குழப்பங்களும் முடிந்துவிடும். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் அனைத்தும் இலகுவாக வெற்றி நிறைந்தவை ஆகும். இதற்கு, ஏகாந்தத்தில் இருங்கள்.
சுலோகம்:
ஒரு தடவை நீங்கள் தவறு செய்தபின்னர், அதைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைப்பது என்றால் தொடர்ந்து ஒரு கறையின் மேல் இன்னொரு கறையை ஏற்படுத்துதல் என்று அர்த்தம். ஆகவே, கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபம் என்ற விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
தற்சமயம் எப்படி ஆத்மாவும் சரீரமும் ஒன்றிணைந்து இருக்கின்றனவோ, அதேபோல், நீங்களும் தந்தையும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ‘எனது பாபா’ என்பதை நினைவு செய்யுங்கள். உங்களின் நெற்றியில் சதா உங்களின் சகவாசத்தின் திலகத்தை அணிந்திருங்கள். உங்களின் சகபாடியான, சுஹாக்கை (கணவன்) ஒருபோதும் உங்களால் மறக்க முடியாது. எனவே, எப்போதும் உங்களின் சகபாடியை உங்களுடனேயே வைத்திருங்கள். நீங்கள் அவருடன் இருந்தால், அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் அவருடனேயே இருந்து, அவருடனேயே திரும்பிச் செல்ல வேண்டும். அவர் உங்களுடன் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் இருக்கிறார்.