13.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகள் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள, உலகின் ஆரம்பம் மத்தி, இறுதியினது இந்த ஞானத்தை உங்கள் புத்திகளில் வைத்திருப்பதால், நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள்.
கேள்வி:
ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு என்ன ஊசி போடுகின்றார்?பதில்:
‘மன்மனாபவ’ ஆகும். வேறு எவருமன்றி ஆன்மீகத் தந்தையே இந்த ஊசியைப் போட முடியும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! அவ்வளவுதான்! இந்த நினைவின் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். இதற்கு சமஸ்கிருதம் போன்றவற்றைக் கற்கவேண்டிய தேவையில்லை. தந்தை உங்களுடன் எளிய ஹிந்தியிலேயே பேசுகின்றார். ஆன்மீகத்தந்தையே தூய்மை ஆகுவதற்கான வழிமுறையை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்ற நம்பிக்கையை ஆத்மாக்களாகிய நீங்கள் கொண்டிருக்கும்போதே, நீங்கள் தொடர்ந்தும் விகாரங்களைத் துறப்பீர்கள்.ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ யினது அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாவே தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். எனது ரூபம் அமைதியும், எனது இருப்பிடம் சத்தத்திற்கு அப்பாலுள்ள (நிர்வாணா), பரந்தாமம் எனப்படுகின்ற அமைதி தாமமும் ஆகும். தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவராகி தந்தையை நினைவு செய்யுங்கள். அவரே தூய்மையாக்குபவர். தாங்கள் ஆத்மாக்கள் என்றும், தங்களுடைய பாகத்தை நடிக்கவே இங்கே வந்துள்ளார்கள் எனவும் எவருமே புரிந்து கொள்வதில்லை. நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழக்கப்படும். சமஸ்கிருத மொழியில் இதுவே ‘மன்மனாபவ’ எனப்படுகின்றது. தந்தை உங்களுக்கு எதையும் சமஸ்கிருதத்தில் கூறுவதில்லை. அவர் ஹிந்தி மொழியிலேயே விளங்கப்படுத்துகின்றார். அரசாங்கமும் ஹிந்தி என்ற ஒரு மொழியே இருக்க வேண்டுமென விரும்புகின்றது. உண்மையில் தந்தையும் ஹிந்தியிலேயே விளங்கப்படுத்துகின்றார். ஆயினும், இந்நேரத்தில் பல சமயங்களும், மதப்பிரிவுகளும், கொள்கைகளும் இருப்பதால் பல்வேறு மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சத்தியயுகத்தில் இங்கே இருப்பது போன்று பல்வேறு மொழிகள் இருக்கமாட்டாது. குஐராத்தில் வசிப்பவர்கள் வேறுபட்ட மொழியைக் கொண்டுள்ளார்கள். எந்த மாநிலத்தில் மக்கள் வசிக்கின்றார்களோ அவர்கள் தங்களது சொந்த மொழியைக் கொண்டுள்ளார்கள். எண்ணிக்கையற்ற மனிதர்களும் எண்ணிக்கையற்ற மொழிகளும் உள்ளன. சத்தியயுகத்தில் ஒரு தர்மமும், ஒரு மொழியுமே இருந்தது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியினது இந்த ஞானத்தை உங்களது புத்திகளில் கொண்டுள்ளீர்கள். இது வேறு எந்த சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஞானத்தைக் கொண்ட சமயநூல்கள் எதுவுமில்லை. அவற்றில் சக்கரத்தின் கால வரையறையைச் சரியாக எழுதவும் இல்லை, இந்த ஞானத்தைப் பற்றிய எதுவும் இல்லை. உலகம் ஒன்றே உள்ளது. உலகச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. புதிய உலகம் பழையதாகவும் பழைய உலகம் புதியதாகவும் ஆகுகின்றது. இதுவே சுயதரிசனச் சக்கரம் என அழைக்கப்படுகின்றது. இந்தச் சக்கரம் பற்றிய இந்த ஞானத்தைக் கொண்டவர்களே, சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றனர். எவ்வாறு இந்த உலகச்சக்கரம் சுழல்கின்றது என்ற ஞானத்தை ஆத்மாவே கொண்டுள்ளார். அவர்கள் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரையும், விஷ்ணுவையும் சுயதரிசனச் சக்கரத்துடன் சித்தரித்துள்ளார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. தந்தையே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இதுவே சுயதரிசனச் சக்கரமாகும். சக்கரம் என்பது கழுத்தை வெட்டுகின்ற வன்முறையான ஒன்றல்ல. அவர்கள் எழுதியுள்ளவை அனைத்தும் பொய்யானவை. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட தேவர்கள் என அழைக்கப்படுவதால், மனிதர்கள் கடவுளாக இருக்க முடியாது. தந்தையின் புகழ் தேவர்களின் புகழ்போன்று இருக்க முடியாது. தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். தந்தையின் அதே புகழ்ச்சியைக் குழந்தைகளும் கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் கூறமுடியாது. குழந்தைகள் மறுபிறவி எடுப்பவர்கள். தந்தை மறுபிறவி எடுப்பதில்லை. குழந்தைகள் அவர்களுடைய தந்தையை நினைவு செய்கின்றார்கள். கடவுளே அதிமேலானவர். அவர் என்றென்றும் தூய்மையானவர். குழந்தைகளே தூய்மையாகிப் பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். தந்தை என்றென்றும் தூய்மையானவர். குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தந்தையின் ஆஸ்தி தேவையாகும். முதலில் உங்களுக்கு முக்தியும் பின்னர் ஜீவன் முக்தியும் தேவையாகும். அமைதிதாமம், முக்தி என்றும் சந்தோஷதாமம், ஜீவன்முக்தி என்றும் அழைக்கப்படுகின்றது. அனைவரும் முக்தி பெறுகின்றனர், ஆனால் இந்த ஞானத்தைக் கற்பவர்களே ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். உண்மையில் பாரதத்திலேயே ஜீவன்முக்தி இருந்தது. மீதி அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள். சத்தியயுகத்தில் பாரததேசம் மாத்திரமே இருந்தது. அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. பாபா விளங்கப்படுத்துகின்றார்: இலக்ஷ்மி, நாராயணனுக்கே அதிகளவு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆலயங்களைக் கட்டிய பிர்லாவுக்கோ, ஏனையோருக்கோ எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் அவர்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள் என்றோ, அல்லது அந்த இராச்சியத்தை அவர்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்கள் என்றோ, அதன் பின்னர் அவர்கள் எங்கே சென்றார்கள் என்றோ தெரியாது. அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அது பொம்மைகளை வழிபடுவது போன்றதாகும். அது பக்தி என்று அழைக்கப்படுகின்றது. பூஜிக்கத்தக்கவராக இருந்தவர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகின்றனர். பூஜிக்கத்தக்கவராகவும், பூஜிப்பவராகவும் இருப்பதற்கிடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. இதற்கு சில அர்த்தங்கள் இருக்க வேண்டும். விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மை அற்றவர்கள் எனப்படுகின்றனர். கோபப்படுபவர்கள் தூய்மை அற்றவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. விகாரத்தில் ஈடுபடுபவர்களே தூய்மை அற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்கள் இந்நேரத்தில் இந்த ஞானமிர்தத்தைப் பெறுகின்றீர்கள். ஒரு தந்தையே ஞானக்கடல் ஆவார். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: இந்த பாரதம் சதோபிரதானாகவும் அதிமேன்மையான தேசமாகவும் இருந்தது, ஆனால் இப்போது தமோபிரதானாகி உள்ளது. இது இப்போது உங்கள் புத்திகளில் உள்ளது. இங்கே எந்த இராச்சியமும் இல்லை. மக்களே மக்களை ஆட்சி செய்கின்றனர். சத்தியயுகத்தில் வெகுசில மக்களே இருக்கின்றார்கள். இப்பொழுது அதிகளவு மக்கள் உள்ளனர்! விநாசத்துக்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. டெல்கியே தேவதைகளின் பூமியாக வேண்டும், ஆனால் எவருமே இதை அறியமாட்டார்கள். அவர்கள் இதுவே புதுடெல்கி என நினைக்கிறார்கள். யார் இந்தப் பழைய உலகை மாற்றுவார்கள்? எவருக்குமே இது தெரியாது. இது எந்தச் சமயநூல்களிலுமே எழுதப்படவில்லை. ஒரு தந்தையே அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்கள் ஆகுகின்றீர்கள். பாரதம் அதி செல்வந்தமாக இருந்தது. அங்கே வேறு எந்த மதங்களும் இருக்கவில்லை. இங்கே இப்பொழுது எண்ணிக்கையற்ற மதங்கள் உள்ளன. இப்பொழுது அனைவரும் கருணைநிறைந்த தந்தையையே நினைவு செய்கின்றனர். அவர்கள் பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது என்பதை மறந்து விட்டார்கள். இப்பொழுது பாரதத்தின் நிலைமையைப் பாருங்கள்! அது சுவர்க்கமாக இருந்தது. அதுவே தந்தையின் பிறப்பிடமாகும். எனவே நாடகத்திற்கேற்ப அவர் அதன் மீது கருணை கொள்கின்றார். பாரதமே புராதன தேசமாகும். கூறப்பட்டுள்ளது: உண்மையில் கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அங்கே வேறு எந்த மதங்களும் இருக்கவில்லை. இந்த பாரதம் இப்பொழுது அடிமட்டத்திற்கு வீழ்ந்துவிட்டது. மக்கள் பாடுகின்றார்கள்: எங்களுடைய பாரததேசமே அதிமேன்மையானது. அதன் உண்மையான பெயர் சுவர்க்கமாகும். எவருமே பாரதத்தின் புகழ்ச்சியை அறியமாட்டார்கள். தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு பாரதத்தின் கதையைக் கூறுகின்றார். பாரதத்தின் கதை என்றால், உலகின் கதை என்று அர்த்தமாகும். இதுவே சத்திய நாராயணனின் கதை என அழைக்கப்படுகின்றது. தந்தை மாத்திரமே இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: சரியாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அவர்களுடைய விக்கிரகங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எவ்வாறு அவர்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள்? சத்தியயுகத்திற்கு முன்னர் என்ன இருந்தது? சங்கமயுகத்தின் முன்னர் என்ன இருந்தது? கலியுகம். தந்தை வரவேண்டிய சங்கமயுகம் இதுவே ஆகும். பழைய உலகம் புதியதாக்கப்பட உள்ளபோதே நான் வரவேண்டும். நான் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்க வருகின்றேன். நான் சர்வவியாபி என்றும், ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதனாலேயே அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். நீங்கள் மாத்திரமே இந்த சங்கமயுகத்தை அறிவீர்கள். நீங்கள் யார்? பிரஜாபிதா பிரம்மாகுமாரர்கள், பிரம்மாகுமாரிகள் எனப் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ளது. பிரம்மாவின் தந்தை யார்? அதிமேலான சிவனே ஆவார். அவருக்குப் பின் பிரம்மா இருக்கின்றார், பின்னர் அவரின் மூலம் படைப்பு உருவாக்கப்படுகின்றது. நிச்சயமாக பிரம்மாவே மக்களின் தந்தை என அழைக்கப்படுகின்றார். சிவன் மக்களின் தந்தை என அழைக்கப்படுவதில்லை. சிவன் சகல ஆத்மாக்களினதும் அசரீரியான தந்தை ஆவார். அவர் இங்கு வந்து பிரஐhபிதா பிரம்மாவின் மூலம் உங்களைத் தத்தெடுக்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். நீங்கள் அவரின் மூலம் வாய்வழித் தோன்றல் பிராமணர்கள் ஆகின்றீர்கள். நான் உங்களை பிரம்மாவின் மூலம் பிராமணர்களாக்கி, பின்னர் தேவர்கள் ஆக்குகின்றேன். நீங்கள் இப்போது பிரம்மாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். பிரம்மா யாருடைய குழந்தை? பிரம்மாவின் தந்தைக்கு ஒரு பெயர் உள்ளதா? அவர் அசரீரியான தந்தையான சிவன் ஆவார். அவர் வந்து இவரினுள் பிரவேசித்து, உங்களைத் தத்தெடுத்து, உங்களை வாய்வழித் தோன்றல்கள் ஆக்கியுள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் அவரது பல பிறவிகளின் கடைசிப்பிறவியில் அவரினுள் பிரவேசிக்கின்றேன். இவர் எனக்குச் சொந்தமாகி, துறவை ஏற்றுக் கொண்டார். என்ன துறவு? ஐந்து விகாரங்களின் துறவாகும். உங்களுடைய குடும்பத்தையோ, வீட்டையோ துறக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களிலிருந்து கலப்படம் அகற்றப்பட்டு நீங்கள் சதோபிரதான் ஆகுகின்ற யோகம் இதுவேயாகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வளவுதான் கங்கையில் மூழ்கி, யாகங்கள் செய்து, தவம் செய்தாலும் நிச்சயமாக கீழே வந்தாக வேண்டும். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். எனவே எவ்வாறு நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகமுடியும்? தந்தையைத்தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்தப் பாதையைக் காட்ட முடியாது. தந்தை மிக இலகுவாக அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். சதா என்னையே நினைவு செய்யுங்கள். அவர் ஆத்மாக்களாகிய உங்களுடனேயே பேசுகின்றார். அவர் குஜராத்திகளுடன் அல்லது சிந்திகளுடன் பேசுவதில்லை. இது ஆன்மீக ஞானமாகும். சமயநூல்களில் அவர்கள் பௌதீக ஞானத்தைக் கொண்டுள்ளனர். ஆத்மாவுக்கே இந்த ஞானம் தேவை. ஏனெனில் ஆத்மாவே தூய்மை அற்றவர் ஆகின்றார். ஆத்மாவுக்கே ஆன்மீக ஊசி தேவையாகும். தந்தை அனாதியான ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் வந்து அவரது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நான் உங்களின் ஆன்மீக சத்திர சிகிச்சையாளர். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆதலால், உங்கள் சரீரங்களும் நோய்வாய்ப்படுகின்றன. இந்நேரத்தில் பாரதமக்கள் அதாவது, முழு உலகமும் நரகவாசிகள் ஆவார்கள். எவ்வாறு நீங்கள் சுவர்க்க வாசிகளாக முடியுமென தந்தை பின்னர் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றேன். நீங்கள் உண்மையில் நரகவாசிகளாக இருந்தீர்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். கலியுகமே நரகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது நரகத்தின் முடிவாகும். இந்நேரத்தில் பாரதமக்கள் நரகத்தின் ஆழத்தில் உள்ளனர். இதை இராச்சியம் என அழைக்க முடியாது. அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். தந்தை இப்பொழுது உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார். எனவே நீங்கள் அவர் கூறுவதற்குக் கீழ்ப்படிய வேண்டும். மக்கள் அவர்களுடைய சொந்த சமயநூல்களையோ அல்லது தந்தையையோ அறிய மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: ஸ்ரீகிருஷ்ணர் அன்றி, நானே உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக்கினேன். ஸ்ரீகிருஷ்ணர் முதல் இலக்கத் தூய்மையான ஆத்மாவாக இருந்தார். அவர் அவலட்சணமானவரும், அழகானவரும் என அழைக்கப்படுகின்றார். ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா மறுபிறவி எடுத்ததனால், இப்பொழுது அவலட்சணமாகி விட்டார். காமச்சிதையில் அமர்ந்ததனால் ஆத்மாக்கள் அவலட்சணமாகி விட்டார்கள். அவர்கள் ஏன் ஜெகதாம்பாளின் கரிய ரூபத்தைக் காட்டுகின்றார்கள்? எவருமே இதை அறிய மாட்டார்கள். எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் கருநீலநிறமாகக் காட்டப்பட்டாரோ அதேபோன்று, அவர்கள் ஜெகதாம்பாவையும் கரியநிறமாகச் சித்தரித்துள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அவலட்சணமாகி உள்ளீர்கள், பின்னர் அழகானவர்கள் ஆகுவீர்கள். பாரதம் மிக அழகாக இருந்தது என நீங்கள் விளங்கப்படுத்தலாம். நீங்கள் சுவர்க்கத்தின் அழகைப் பார்க்க விரும்பினால் அதன் மாதிரியை அஜ்மீரில் பார்க்கலாம். சுவர்க்கத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கமாளிகைகள் இருந்தன. இப்பொழுது கற்களாலான மாளிகைகளே உள்ளன. அனைவருமே தமோபிரதானானவர்கள். சிவபாபாவும், பிரம்ம தாதாவும் ஒன்றாக உள்ளனர் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே அவர்கள் பாப்தாதா என அழைக்கப்படுகின்றனர். சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. நீங்கள் அதை தாதாவிடமிருந்து பெறுவதாகக் கூறினால், அப்பொழுது சிவபாபாவிடம் என்ன உள்ளது? பிரம்மா மூலமாக சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. விஷ்ணுபூமி பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். உங்களைத்தவிர ஏனையவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மை ஆகுகின்றீர்கள். நீங்கள் பின்னர் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இவை அனைத்தையும் உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல. உங்களுக்கு முரளியைப் பேசுபவர் யார்? சிவபாபா. அவர் பரந்தாமத்தில் இருந்து இந்தப் பழைய உலகில், பழைய சரீரத்தில் வருகின்றார். ஒருவருக்கு இந்த நம்பிக்கை இருந்தால், அவர் தந்தையைச் சந்திக்க வருவதிலிருந்து தன்னை நிறுத்தமாட்டார். முதலில் எல்லையற்ற தந்தையைச் சந்திக்க என்னை அனுமதியுங்கள் என அவர் கூறுவார். அவரால் காத்திருக்க முடியாது. எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற எல்லையற்ற தந்தையிடம் உடனடியாக என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றே அவர் கூறுவார்! சிவபாபாவின் இந்த இரதம் யார் என்றாவது சென்று பார்ப்போம். அந்த மக்கள் ஓர் குதிரையை அலங்கரிக்கின்றனர். அவர்கள் அடையாளமாக ஓர் சால்வையைக் காட்டுகின்றார்கள். அது ஒரு மதத்தை ஸ்தாபித்த முஹமதுவின் இரதமாகும். பாரதமக்கள் கல்லால் ஆன காளை மாட்டின் மீது திலகமிட்டு ஆலயங்களில் வைக்கின்றனர். அவர்கள் சிவன் காளை மாட்டில் சவாரி செய்ததாக நம்புகின்றனர். சிவனோ அல்லது சங்கரரோ காளை மாட்டில் சவாரி செய்யவில்லை. மக்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை! சிவபாபா அசரீரியானவர். எனவே அவர் எவ்வாறு ஒரு காளை மாட்டில் சவாரி செய்யமுடியும்? அவர் காளை மாட்டில் அமர்வதற்கு அவருக்குக் கால்கள் தேவை. அது குருட்டு நம்பிக்கை ஆகும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து பெறுகின்ற இந்த ஞானாமிர்தத்தை, நீங்களும் அருந்தி, மற்றவர்களும் அருந்தச் செய்யுங்கள். பூஜிப்பவரிலிருந்து, பூஜிக்கத்தகுதியானவர் ஆகுவதற்கு, விகாரங்களைத் துறவுங்கள்.2. உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதியானவர்கள் ஆக்குகின்ற தந்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் உங்களுக்குக் கூறுபவை அனைத்தையும் செய்யுங்கள். புத்தியில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனுபவத்தின் சொரூபமாகி, உங்களின் அனுபவத்தின் அக சக்தியால் (வில்பவர்) மாயையின் சக்தியை எதிர்கொள்வீர்களாக.உங்களின் அதி சக்திவாய்ந்த ஸ்திதியானது, உங்களின் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஓர் அனுபவசாலி ஆத்மா, தனது அனுபவத்தின் அக சக்தியால் இலகுவாக மாயையின் சக்திகள் எதையும் அத்துடன் கூடவே சகல சூழ்நிலைகளையும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியும். அத்துடன் அவரால் ஆத்மாக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தவும் முடியும். எதிர்கொள்ளும் சக்தியால், உங்களின் அனுபவத்தின் அகசக்தியின் அடிப்படையில் உங்களால் இலகுவாக அனைவரையும் திருப்திப்படுத்தும் சக்தியைப் பெற முடியும். ஆகவே, ஒவ்வொரு பொக்கிஷத்தையும் அனுபவம் செய்து, அனுபவத்தின் சொரூபம் ஆகுங்கள்.
சுலோகம்:
மற்றவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்களைப் பார்த்து, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு சக்தியை, ஒவ்வொரு பெறுபேற்றை, ஒவ்வொரு நற்குணத்தை அனுபவம் செய்கிறீர்களா என்று சோதித்துப் பாருங்கள். நீங்கள் அனுபவத்தின் அதிகாரிகள். எனவே, எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையாலும் அனுபவத்தின் அதிகாரிகளான உங்களின் மீது எந்தவிதமான ஆதிக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அனுபவ ரூபங்களான இருப்பவர்கள், எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையிலும் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தளம்பல் அடைவதில்லை. ஏனென்றால், அனைத்திலும் மகத்தான அதிகாரம், அனுபவமே ஆகும். எந்தவொரு வேளையிலும் நீங்கள் எந்த சக்தியை அழைக்கிறீர்களோ, அந்த வினாடியில் அது உங்களுடன் ஒத்துழைக்கும்.