13.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சங்கம யுகத்தில் ஆரம்பமாகும் இரக்ஷ பந்தன் விழாவானது, ஒரு சத்தியத்தைச் செய்யும் ஒரு விழாவாகும். இப்பொழுது நீங்கள் தூய்மையாகுவதற்கும், மற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குமான சத்தியத்தைச் செய்கிறீர்கள்.
பாடல்:
எதன் அடிப்படையில் உங்கள் பணிகள் யாவும் வெற்றிகரமானதாக இருக்க முடியும்? உங்களுடைய பெயர் எவ்வாறு புகழப்படும்?பதில்:
ஞான சக்தியுடன், நீங்கள் யோக சக்தியையும் கொண்டிருக்க வேண்டும். அப்போது அனைவரும், அனைத்துப் பணிகளைச் செய்வதற்கும், தாமாகவே தயாராக இருப்பார்கள். யோகம் மிகவும் மறைமுகமானது. இதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். யோகத்தில் இருந்தவாறு நீங்கள் விளங்கப்படுத்தும்போது, பத்திரிகையாளர்கள் தாமாகவே உங்கள் செய்தியை அச்சிடுவார்கள். பத்திரிகைகள் மூலமாகவே உங்கள் பெயர் புகழப்படும். அவர்கள் மூலம் பலர் இச்செய்தியைப் பெறுவார்கள்.ஓம் சாந்தி.
இன்று, பாபா இரக்ஷ பந்தனைப் பற்றிக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவார், ஏனெனில் அது நெருங்கிவருகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கு ராக்கி அணிவிப்பதற்காகச் செல்கிறீர்கள். இப்பொழுது கொண்டாடப்படும் வைபவங்கள் அனைத்தும் கடந்த காலத்தில் இடம்பெற்றவையே ஆகும். இவ் வாக்குறுதியைச் செய்து, ஒரு கடிதம் எழுதுமாறு 5000 வருடங்களுக்கு முன்னரும் நீங்கள் கேட்கப்பட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதற்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. இது தூய்மையின் ஒரு அடையாளமாகும். நீங்கள் தூய்மையாகுவதற்கு ஒரு ராக்கியை அணிய வேண்டுமென அனைவருக்கும் நீங்கள் கூறவேண்டும். சத்தியயுக ஆரம்பத்திலே தூய உலகம் ஆரம்பமாகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ராக்கிப் பண்டிகை இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே ஆரம்பமாகின்றது. பின்னர் அது பக்திமார்க்கம் ஆரம்பிக்கும்போது கொண்டாடப்படுகின்றது. இது அநாதியான பண்டிகை என அழைக்கப்படுகின்றது. அது எப்பொழுது ஆரம்பமாகியது? பக்தி மார்க்கத்திலாகும். ஏனெனில் சத்தியுயுகத்தில் பண்டிகை எதுவும் இல்லாததால் அவை இங்கு இடம்பெறுகின்றன. பண்டிகைகள் போன்ற அனைத்தும் சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றன. பின்னர் அவை மீண்டும் பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகின்றன. சத்தியயுகத்தில் எவ்வித பண்டிகையும் இல்லை. “சத்தியயுகத்தில் தீபாவளி இருக்குமா?” என நீங்கள் வினவலாம். இல்லை, அதுவும் இங்கேயே கொண்டாடப்படுகின்றது. அங்கு அது கொண்டாடப்படுவதில்லை. இப்பண்டிகைகள் அனைத்தும் கலியுகத்திற்கானதாகும். மக்கள் ரக்ஷ்பந்தனைக் கொண்டாடுகிறார்கள். ராக்கி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை இப்போது அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நீங்கள் சென்று அனைவருக்கும் ராக்கி அணிவிக்கிறீர்கள். நீங்கள் அவர்களிடம் கூறுகிறீர்கள்: தூய்மையாகுங்கள், ஏனெனில் தூய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. திரிமூர்த்தி படத்தில் எழுதப்பட்டுள்ளது: பிரம்மாவின் மூலம் தூய உலகின் ஸ்தாபனை இடம்பெறுகிறது. இதனாலேயே தூய்மையாகுவதற்கான ராக்கியை அணிவது கொண்டாடப்படுகின்றது. இப்பொழுது இது ஞான மார்க்கத்திற்கான காலமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: பக்தி மார்க்கத்தைப் பற்றி யாராவது உங்களிடம் கூறினால், இப்பொழுது நீங்கள் ஞான மார்க்கத்தில் உள்ளீர்களென அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கடவுளே ஞானக் கடலாவார். அவரால் மாத்திரமே முழு உலகையும் விகாரமற்றதாக ஆக்கமுடியும். பாரதம் விகாரமற்றிருந்தபோது, முழு உலகமும் விகாரமற்றிருந்தது. பாரதம் விகாரமற்றதாக ஆக்கப்படுவதால் முழு உலகமும் விகாரமற்றதாக ஆகிவிடுகின்றது. பாரதத்தை உலகம் என அழைக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள பல தேசங்களில் பாரதமும் ஒரு தேசமாகும். புதிய உலகில் பாரதம் மாத்திரமே இருக்கும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரத பூமியில் நிச்சயமாக மனிதர்களே வசித்திருப்பார்கள். பாரதமே சத்திய பூமியாக இருந்தது. சக்கரத்தின் ஆரம்பத்தில் தேவ தர்மமே இருந்தது. 5000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய அதுவே தூய, விகாரமற்ற தர்மம் என அழைக்கப்பட்டது. இப்பொழுது பழைய உலகம் குறுகிய காலத்திற்கே நீடித்திருக்கும். விகாரமற்றதாக ஆகுவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்? அதற்குக் காலம் எடுக்கும். இங்கேயும் கூட, தூய்மையாகுவதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும் இதுவே அனைத்தையும்விட மிகப்பெரிய பண்டிகையாகும். “பாபா, நாங்கள் நிச்சயமாகத் தூய்மையாகுவோம்” என்று நீங்கள் ஒரு வாக்குறுதியளிக்க வேண்டும். இந்தப் பண்டிகையே மிகப் பெரியது எனக் கருதப்படுகிறது. அனைவரும் கூவியழைக்கின்றார்கள்: ஓ பரமதந்தையே, பரமாத்மாவே! இவ்வாறு கூறிய பின்னரும், பரம தந்தை அவர்களின் புத்திக்குள் ஏறுவதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை மனித ஆத்மாக்களுக்கு ஞானத்தைக் கொடுக்கவே வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். பரமாத்மாவிடமிருந்து ஆத்மாக்கள் நீண்ட காலம் பிரிந்திருந்தனர். இந்தச் சந்திப்பு (மேலா) சங்கமயுகத்தில் மாத்திரமே இடம்பெறும். 5000 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகின்ற இந்தச் சந்திப்பு “கும்பமேலா” என அழைக்கப்படுகின்றது. தண்ணீரில் நீராடுகின்ற அந்த மேலாவை மக்கள் பல தடவைகள் தொடர்ந்தும் கொண்டாடுகிறார்கள். அது பக்தி மார்க்கத்திற்குரியதாகும். ஒரு சங்கமம் “கும்பம்” (ஒன்றுகூடல்) என அழைக்கப்படுகிறது. உண்மையில் மூன்று நதிகள் என்றில்லை. எவ்வாறு மறைமுகமானதொரு நீர் நிறைந்துள்ள ஆறு இருக்க முடியும்? தந்தை கூறுகிறார்: உங்களுடைய இந்த கீதையே மறைமுகமானது. எனவே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: நீங்கள் உங்கள் உலக இராச்சியத்தை யோக சக்தியின் மூலம் பெறுவீர்கள். இதில் ஆடல் பாடல் எதுவுமே உள்ளடக்கப்படவில்லை. பக்திமார்க்கம் அரைக்கல்பத்திற்கு நீடிக்கும், ஆனால் இந்த ஞானமார்க்கம் ஒரு பிறப்பிற்கு நீடிக்கும். அதன் பின்னர் இரு யுகங்களுக்கு ஞானத்தின் வெகுமதி இருக்கும். ஆனால் ஞானம் தொடர்வதில்லை. பக்தி மார்க்கம் துவாபர, கலியுகங்கள் முழுவதிலும் தொடரும். ஞானத்தை நீங்கள் ஒரே ஒருமுறைதான் பெறுவீர்கள். அதன் வெகுமதி 21 பிறவிகளுக்கு நீடிக்கும். இப்பொழுது உங்கள் கண்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னர் நீங்கள் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்கினீர்கள். இப்பொழுது இந்த ராக்கிப் பண்டிகையின்போது, பிராமணப் புரோகிதர்கள் ராக்கியை அணிவிக்கிறார்கள். நீங்களும் பிராமணர்களே. அவர்கள் பாவத்தின் மூலம் பிறப்பெடுத்தவர்கள். ஆனால் நீங்கள் வாய் மூலமாகப் பிறப்பெடுத்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் குருட்டு நம்பிக்கை அதிகளவில் உள்ளது. அவர்கள் புதை குழிக்குள் அகப்பட்டுவிடுகிறார்கள். புதை மணலில் உங்கள் பாதங்கள் அகப்பட்டுக்கொள்வது போன்று, மக்களும் தங்கள் கழுத்தளவு உயரத்திற்கு, பக்தி என்ற புதை மணலில் அகப்பட்டு, அதில் அமிழ்ந்துவிடுகிறார்கள். உங்கள் உச்சிக் குடுமி மாத்திரமே இருக்கும்போது, தந்தை உங்களைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை வந்து, உங்களைப் பற்றிப் பிடித்து ஈடேற்றுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துவதற்குக் கடினமாக உழைக்கின்றீர்கள். மில்லியன் கணக்கில் மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரையும் சென்றடைவதற்கு முயற்சி வேண்டும். நீங்கள் மக்களை, அவர்களது குடும்பத்தைத் துறக்கச் செய்வதுடன், அவர்களைச் சகோதர சகோதரிகளாகவும், ஆக்குகின்றீர்கள் என்று செய்தித் தாள்களில் அவதூறு செய்யப்பட்டீர்கள். ஆரம்பத்தில் இடம்பெற்ற விடயங்கள் பத்திரிகைகளினாலேயே அதிகளவு பரப்பப்பட்டன. அவை அதிக குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன. இப்பொழுது உங்களால் ஒவ்வொருவருக்கும் விளங்கப்படுத்த முடியாது. ஆதலால், பத்திரிகைகள் பின்னர் உங்களுக்கு பயன்படும். பத்திரிகைகளால் நீங்கள் பெரிதும் புகழப்படுவீர்கள். ரக்ஷ பந்தனின் உண்மையான கருத்து என்ன என்பதை எவ்வாறு மக்களைப் புரிந்துகொள்ள வைக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் இப்பொழுது சிந்திக்கவேண்டும். தந்தை உங்களைத் தூய்மையாக்க வந்துள்ளதால், தூய்மை ஆகுவோம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் வாக்குறுதியை அவர் ஏற்றுக்கொள்கிறார். தூய்மையாக்குபவரே உங்களுக்கு ராக்கியை அணிவிக்கின்றார். மக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். எனவே, அவர் நிச்சயமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், அவர்கள் ஒருபோதும் முடிசூட்டு விழாவைக் காட்டவில்லை. இலக்ஷ்மி நாராயணன் சத்திய யுக ஆரம்பத்தில் இருந்தார்கள். அவர்களுடைய முடிசூட்டு விழாவும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இளவரசனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் முடிசூட்டு விழா எங்கே? முடிசூட்டு விழா தீபாவளியின்போதே இடம்பெறுகிறது. சத்திய யுகத்தில் பெருமளவு ஆடம்பரம் உள்ளது. அங்கு சங்கம யுகத்தின் விடயங்கள் இருப்பதில்லை. இங்கேயே ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்கும். அங்கே நீங்கள் தீபாவளி போன்றவற்றைக் கொண்டாடுவதில்லை. அங்கு ஆத்மாக்களின் ஒளியேற்றப்பட்டிருக்கும். அங்கு தீபாவளியன்றி, மூடிசூட்டுவிழாவே கொண்டாடப்படும். ஆத்மாக்களின் ஒளி ஏற்றப்படும்வரை அவர்களால் வீடு திரும்ப முடியாது. இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களை எவ்வாறு தூய்மையாக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இதைப்பற்றிச் சிந்தித்து, முக்கியஸ்தர்களிடம் செல்லவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பத்திரிகைகள் மூலமாக அவதூறு செய்யப்பட்டீர்கள். அவற்றினூடாகவே உங்கள் பெருமை போற்றப்பட வேண்டும். அவர்களுக்கு சிறிதளவு தொகைப் பணத்தைக் கொடுத்தால், அவர்கள் நல்ல விடயங்களை அச்சிடுவார்கள். இப்பொழுது அவர்களுக்கு எவ்வளவு காலம் வரைக்கும் உங்களால் பணம் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்? பணம் கொடுப்பது என்பது லஞ்சம் கொடுப்பது போன்றது, அத்துடன் அது நியதிக்கும் எதிரானது. இக் காலத்தில், லஞ்சம் இல்லாது எதுவுமே இடம்பெறாது. மற்றவர்கள் லஞ்சம் கொடுக்கும்போது, நீங்களும் லஞ்சம் கொடுத்தால், இருவருக்குமிடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. உங்களுடையது யோக சக்தியாகும். நீங்கள் அதிகளவு யோக சக்தியைக் கொண்டிருந்தாலே உங்களால் எதனையும், எவரைக்கொண்டும் செய்யக்கூடியதாக இருக்கும். அவர்களுக்கு ஞானத்தைத் தொடர்ந்தும் ரீங்காரமிடுங்கள். நீங்கள் ஞான சக்தியையும் கொண்டுள்ளீர்கள். இப் படங்கள் யாவற்றிலும் ஞானம் உள்ளது. யோகம் மறைமுகமானது. உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்கு நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யவேண்டும். இது மறைமுகமானது. இதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நினைவைக் கொண்டிருக்கலாம். இங்கிருக்கின்ற வேளையிலும் நீங்கள் வெறுமனே யோகத்தைக் கொண்டிராது, ஆழமான யோகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஞானமும், யோகமும் இலகுவானவை. ஏழுநாட் பாடமுறை மாத்திரம் பெற்றால் போதும். அதற்கும் மேலாக எதுவும் தேவை என்றில்லை. பின்னர், நீங்கள் சென்று, ஏனையோரையும் உங்களைப் போன்றவராக்கலாம். தந்தை ஞானக் கடலும், அமைதிக் கடலுமாவார். இவை இரண்டுமே முக்கிய விடயங்களாகும். நீங்கள் உங்கள் ஆஸ்தியான அமைதியை அவரிடமிருந்தே பெறுகிறீர்கள். நினைவு என்பது மிகவும் சூட்சுமமானது. குழந்தைகளாகிய நீங்கள் எங்கும் சுற்றுலாச் சென்றாலும், தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். நீங்கள் உங்களுக்குள் எவ்விதக் குறைபாட்டையும் கொண்டிருக்காதீர்கள். காமமும் மிகப் பெரியதொரு குறைபாடாகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மையற்றவர் ஆகாதீர்கள். ஒரு பெண் உங்கள் முன் நின்றாலும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உஙகள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். பார்த்தும், பார்க்காதிருங்கள். நாங்கள் எங்கள் தந்தையை நினைவு செய்கின்றோம். அவர் ஞானக் கடலாவார். அவர் உங்களைத் தன்னைப்போல ஆக்குகிறார். எனவே, நீங்களும் ஞானக் கடல்கள் ஆகவேண்டும். இதனையிட்டு நீங்கள் எவ்வித குழப்பமும் அடையவேண்டியதில்லை. அவர் பரமாத்மா ஆவார். அவர் பரந்தாமத்தில் வசிக்கின்றார். இதனாலேயே அவர் பரமன் என அழைக்கப்படுகிறார். அங்கேயே நீங்களும் வசிக்கிறீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக் கிரமமாக, இப்பொழுது ஞானத்தைப் பெறுகிறீர்கள். திறமைச் சித்தி எய்துபவர்கள் ஞானம் நிறைந்த கடல்களாகிவிட்டார்கள் எனக் கூறப்படுகிறது. தந்தை ஞானக் கடலாவார். நீங்களும் ஞானக் கடல்கள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்கள் சிறியதோ, பெரியதோ அல்லர். பரமாத்மாவும் பெரியதல்லர். அவர் ஆயிரம் சூரியன்களைவிடப் பிரகாசமானவர் எனக் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கட்டுக் கதைகள். என்னென்ன வடிவங்களில் உங்கள்; புத்தி அவரை நினைவு செய்கிறதோ, அந்த வடிவத்தின் காட்சியையே நீங்கள் காண்பீர்கள். இதற்குப் புரிந்துணர்வு தேவை. ஓர் ஆத்மாவினதோ, அல்லது பரமாத்மாவினதோ காட்சியை நீங்கள் கண்டாலும் எல்லாமே ஒன்றுதான். தந்தை, தானே தூய்மையாக்குபவரும், ஞானக் கடலும் என்பதை நீங்கள் உணரும்படி செய்துள்ளார். அவர் தக்க தருணத்தில் வந்து, அனைவருக்கும் ஜீவன் முக்தி அளிக்கின்றார். அதிக பக்தியைச் செய்தவர்கள் நீங்களே என்பதால், தந்தை உங்களுக்கே கற்பிக்கின்றார். ரக்ஷ பந்தனுக்குப் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளும், அதன் பின் தசேராவும் இடம்பெறும். உண்மையில் ஸ்ரீகிருஷ்ணர் தசேராவுக்கு முன்னதாக வரமுடியாது. தசேரா ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளுக்கு முன்னதாகக் கொண்டாடப்பட வேண்டும். இதனை நீங்களே கணக்கிடலாம். முன்னர் உங்களுக்கு எதுவுமே புரிவதில்லை. இப்பொழுது தந்தை உங்களை விவேகம் மிக்கவர்கள் ஆக்கியுள்ளார். ஆசிரியரும், உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். கடவுளின் வடிவம் ஒரு புள்ளி என்பதையும், ஆனால் விருட்சம் மிகவும் பெரியது என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்;கள். ஆத்மாக்கள் மேலே புள்ளிகளைப் போல் வசிக்கிறார்கள். இது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் நீங்கள் ஒரு விநாடியில் விவேகமானவர்கள் ஆகவேண்டும். எவ்வாறாயினும், மக்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதால், எதையுமே புரிந்துகொள்வதில்லை. உண்மையில், அதற்கு ஒரு விநாடியே எடுக்கவேண்டும். நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் எல்லைக்குட்பட்ட புதியதொரு தந்தையைக் கொண்டிருந்தீர்கள். எல்லையற்ற தந்தை ஒரு தடவையே வந்து, உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய ஆயுட்காலமும் நீண்டதாகின்றது. நீங்கள் 21 பிறவிகளுக்கும் ஒரே தந்தையையே பெறுவீர்கள் என்றில்லை. உங்களுடைய ஆயுட்காலம் நீண்டதாகின்றது. நீங்கள் துன்பம் எதனையும் பார்க்க மாட்டீர்கள். பின்னர், இந்த ஞானம் உங்களுடைய புத்தியில் இருக்கும்: நீங்கள் தந்தையை நினைவு செய்து, உங்கள் ஆஸ்தியைப் பெறவேண்டும். ஒரு புத்திரன் பிறந்தவுடன், அவர் வாரிசு ஆகிவிடுவார். நீங்கள் இப்போது தந்தையை இனங்கண்டுவிட்டதால், தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். தூய்மையாகி, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தையும் ஆஸ்தியும் மிக இலகுவானது. உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் பத்திரிகைகள் மூலம் விளங்கப்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு திரிமூர்த்தி படத்தையும் கொடுக்க வேண்டும், ஏனெனில் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்பது விளங்கப்படுத்த வேண்டும். தந்தை, பிராமணர்களைத் தூய்மையாக்குவதற்காக வந்துள்ளதால், அவர்களுக்கு ராக்கி கட்டப்படுகின்றது. தூய்மையாக்குபவர் பாரதத்தைத் தூய்மையாக்குகிறார். தூய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுவதால், அவர் அனைவரையும் தூய்மையாக்குகின்றார். நீங்கள் இப்பொழுது உங்களுடைய 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். பல பிறவிகளை எடுத்தவர்கள், தொடர்ந்தும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். தாமதமாக வந்தவர்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் குறைந்தளவு பக்தியையே செய்துள்ளார்கள். தந்தை உங்களுடைய பக்தியின் பலனை உங்களுக்குத் தருவதற்காக வருகின்றார். யார் அதிகளவு பக்தி செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்களே முதல் இலக்கத்தில் வருபவர்கள். நீங்களே கலப்படமற்ற பக்தியைச் செய்தவர்கள். உங்களிடமே வினவுங்கள்: நான் அதிகளவு பக்தி செய்துள்ளேனா அல்லது இவரா செய்துள்ளார்? அதிகளவு சக்திவாய்ந்த சேவை செய்பவர்கள், நிச்சயமாக அதிகளவு பக்தி செய்திருப்பார்கள். பாபா அவர்களின் பெயர்களைப் குறிப்பிடுகின்றார்: குமார்கா, ஜனக், மனோஹர், குல்சார். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். எவ்வாறாயினும், உங்களை இங்கே வரிசைக்கிரமமாக அமரவைக்க முடியாது. எனவே, ரக்ஷ பந்தனைப் பற்றி எவ்வாறு உங்களால் பத்திரிகையில் எழுத முடியும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். அமைச்சர்கள் முதலானவர்களுக்கு ராக்கி கட்டுவதற்காகச் செல்வது நல்லது. எவ்வாறாயினும், அவர்கள் தூய்மையாகுவதில்லை. “தூய்மையாகுங்கள், புதிய உலகை ஸ்தாபிக்கலாம்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் 63 பிறவிகளாக விகாரமானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுங்கள். தந்தையை நினைவு செய்வதால், உங்கள் தலைமீதுள்ள பாவச் சுமையை அகற்ற முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. திறமைச் சித்தி எய்துவதற்கு, தந்தையைப் போன்று ஞானக் கடல் ஆகுங்கள். உங்களுக்குள் ஏதாவது குறைபாட்டை நீங்கள் கொண்டிருக்கின்றீhகளா என்று உங்களையே பரிசோதித்து, அவற்றை அகற்றுங்கள். எவருடைய சரீரத்தையும் பார்க்கின்ற வேளையிலும் அதனைப் பார்க்காதீர்கள். நீங்கள் ஒருவரோடொருவர் உரையாடுகின்ற வேளையில், நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.2. உங்களுடைய பணிகள் அனைத்தையும் இலகுவாகச் செய்யக்கூடிய வகையில், அதிகளவு யோக சக்தியைச் சேகரியுங்கள். பத்திரிகைகள் மூலம் தூய்மையாகுவதற்கான செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். மற்றவர்களை உங்களுக்குச் சமமாக ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
எந்தவொரு சரீர உணர்வையும் ஆத்ம உணர்வு ஸ்திதியாக மாற்றுவதன் மூலம் எல்லையற்ற ஆர்வமின்மை உடையவர் ஆகுவீர்களாக.நீங்கள் முன்னேறிச் செல்கையில், உங்களுக்கு ஆர்மின்மை இல்லாதிருக்குமாயின், அதற்கு பிரதான காரணம் சரீர உணர்வாகும். நீங்கள் ஆர்வமின்மை கொண்டிருக்கும் வரையில் அல்லது சரீர உணர்வு இல்லாதிருக்;கும் வரையில், உங்களால் எதனிலுமே நிரந்தரமான ஆர்வமின்மையை கொண்டிருக்க முடியாது. உறவுமுறைகளில் ஆர்வமின்மையை கொண்டிருப்பது ஒரு பெரிய விடயமில்லை. உலகில் ஆர்வமின்மை கொண்டிருக்கின்ற பல மனிதர்கள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், இங்கே, சரீர உணர்வின் பல வடிவங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவை அனைத்தையும் நீங்கள் ஆத்ம உணர்வு ஸ்திதியுடையதாக மாற்ற வேண்டும். இதுவே எல்லையற்ற ஆர்வமின்மை உடையவர் ஆகுவதற்கான வழியாகும்.
சுலோகம்:
உங்களுடைய எண்ணங்களின் பாதங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் போது, கருமுகில்கள் போன்ற சூழ்நிலைகள் மாற்றமடையும்.