13.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய வாழ்க்கையை வைரம் போன்று பெறுமதி மிக்கதாக ஆக்குவதற்காக நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். தந்தையை நினைவு செய்வதால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கைகள் அவ்வாறு ஆகும்.
கேள்வி:
புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதானமான முயற்சி என்ன?பதில்:
பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, இப்போது உங்களுடைய புத்திகளை உங்களை மிகவும் துக்கத்திற்கு உள்ளாக்கிய பழைய உறவுகளின் பற்றிலிருந்து விடுவித்து, என்னை நினைவு செய்யுங்கள்! அவர்களுடன் வசிக்கும்போதே, உங்களுடைய மனதை என்னுடன் இணைத்துக் கொள்ளுங்கள். சதா ‘மன்மனாபவ!’ என்ற மந்திரத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள்.பாடல்:
நீங்கள் இரவினைத் தூங்குவதிலும் பகலை உண்பதிலும் கழித்தீர்கள்! வைரம் போன்று பெறுமதி மிக்க உங்களுடைய வாழ்க்கை சிப்பி போன்று பெறுமதி அற்றதாகி விட்டது……..ஓம் சாந்தி.
எவ்வாறு சமயநூல்களின் சாரம் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதோ, அவ்வாறே இந்தப் பாடல்களின் சாரமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டுமே அனைவருக்கும் ஆன்மீகத் தந்தை ஆவார். அவர் இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகள் அனைவருக்கும் பிரம்மாவின் சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்துகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஓ குழந்தைகளே, உங்களுடைய பிறவி வைரம் போன்று பெறுமதி மிக்கதாக ஆகுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வைரம் போன்று பெறுமதி மிக்கதாக ஆக்குவதற்கே தந்தையிடம் வந்துள்ளீர்கள். சுவர்க்க வாசிகளின் பிறப்பு வைரம் போன்றதொரு பிறப்பு எனப்படுகிறது. கலியுகவாசிகளின் பிறப்போ சிப்பிகளை ஒத்தது. நீங்கள் இப்போது சங்கமயுகத்தையும் அறிவீர்கள். நாங்கள் இப்போது சங்கமயுக வாசிகள் ஆவோம். இந்த சங்கமயுகம் அனைவருக்கும் நன்மை பயக்கும் யுகமாகும். இந்த சங்கமயுகத்திலேயே அனைவரும் முக்தியையும் சத்கதியையும் பெறுகிறார்கள். யார் இதனை அருளுவது? பரந்தாமத்தில் இருந்து வரும் பயணியே ஆவார். அவரே பயணி ஆவார். நீங்கள் பயணிகள் அல்ல. ஒரு தடவை நீங்கள் இங்கு வந்து விட்டால் பின்னர் நீங்கள் திரும்பிச் செல்வதில்லை. தந்தை கூறுகிறார்: நான் பழைய உலகத்தில் பிரவேசித்துப் பின்னர் திரும்பிச் செல்கிறேன். ஒரேயொரு பயணியே சேவை செய்கிறார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அவர் வந்து குழந்தைகளான எமக்கு மிக நன்றாகச் சேவை செய்கிறார். வேறு எவராலும் இத்தகைய சேவை செய்ய முடியாது. சேவைக்காகவே நீங்கள் அழைக்கிறீர்கள்: வந்து தூய்மையற்ற எங்களுக்குச் சேவை செய்யுங்கள்! தந்தையும் கூறுகிறார்: நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றிருந்ததனாலேயே நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளேன். ‘எமது துன்பத்தை நீக்கி எமக்கு அமைதி தாருங்கள்!’ என நீங்கள் அழைத்தீர்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷம், அமைதி எனும் இந்த இரு விடயங்களை நினைவு செய்கிறீர்கள். இங்கு, அமைதியின்மையும் துன்பமுமே உள்ளன. இதனாலேயே மக்கள் அழைக்கிறார்கள். தந்தை மட்டுமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு உலகச் சக்கரத்தின் இரகசியத்தை விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கம் இப்போது முடிவிற்கு வருகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கலியுகத்தின் இறுதி என்றால் பக்தி தொடர்ந்தும் கீழே வருகின்றது என்று அர்த்தம். உங்களுடைய மேலேறுகின்ற ஸ்திதி இந்த ஞானத்தினூடாகவே நடக்கிறது. நீங்கள் அதியுயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். பின்னர் அந்த வெகுமதியின் சந்தோஷம் குறைவடைகிறது. பாரதத்தைப் போன்று வேறு எங்கும் அவ்வளவு பக்தி கிடையாது. பக்தி அரைக்கல்பத்திற்குத் தொடர்கிறது. துவாபர யுகம் ஆரம்பமாகும் போது பக்தி ஆரம்பமாகின்றது. ஏனைய மதங்களும் ஸ்தாபிக்கப்பட ஆரம்பிக்கின்றன. சுவர்க்கம் எவ்வாறு முதலில் மிக நல்லதாக இருந்ததோ, அவ்வாறே பக்தி முதலில் மிகவும் நல்லதாக இருந்து பின்னர் அதன் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. பக்தி ஆரம்பித்தபோது, நீங்கள் முதலில் சிவனை வழிபடுபவர்கள் ஆகினீர்கள். அரைக்கல்பத்திற்கு எந்தவித வழிபாடும் இருக்காது. பின்னர், பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகியதும், ஏனைய மதங்களும் உருவாகின்றன. வேறு எவராலும் இந்தளவு பக்தி செய்ய முடியாது. பக்தி முழுமையாக அரைக்கல்பத்திற்குத் தொடர்கிறது. அனைவருக்கும், குறிப்பாக பாரதத்திற்கும் சத்கதியை அருளி அவர்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற, தொலைதேசத்தில் இருந்து வரும் பயணியான தந்தை, மீண்டும் ஒரு முறை குழந்தைகளான எமக்கு சுவர்க்க இராச்சியத்தை வழங்குவதற்காக வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். நீங்கள் இத்தகைய பாரிய ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு விடயமும் எவருடைய புத்திகளிலும் தங்குவதில்லை. பாரத மக்கள் அதிகளவு பக்தி செய்கிறார்கள். ஆலயங்கள் பல உள்ளன. பாரதத் துணைக்கண்டத்தில் ஆலயங்கள் பல காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் யாருடையவை என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். அனைத்திற்கும் முதலில், அவர்கள் சிவபாபாவிற்கு ஆலயத்தை அமைத்தார்கள். பின்னர் அவர்கள் தேவர்களுக்கு ஆலயங்கள் கட்டினார்கள். அந்த ஆலயங்கள் உங்களுக்கு முன்னால் உள்ளன. ஒருபுறம் அவர்கள் தொடர்ந்து சிவபாபாவை வழிபடுகிறார்கள். இன்னொரு புறம் சிவபாபா உங்களைப் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகிறார். நீங்கள் இங்கு பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவதற்காக வந்துள்ளீர்கள். உண்மையில், தேவர்களை வழிபடுபவர்கள் அனைவரும் இங்கு வந்து பிராமணர்கள் ஆகுவார்கள். வளர்ச்சி படிப்படியாக நிகழும். அனைவராலும் ஒரே வேளையில் கற்க முடியாது. அதற்கு நேரம் எடுக்கும். சென்ற கல்பத்தில் கற்றவர்கள் மீண்டும் கற்பார்கள். நீங்கள் தொடர்ந்து ஒருவர் மற்றவருக்குக் கற்பிக்க வேண்டும். அனைவருக்கும் தந்தையினதும் உலகத்தின் ஆதி, மத்தி, அந்தத்தினதும் இந்த ஞானத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். அதன் மூலம் மக்களால் சுவர்க்க அதிபதிகள் ஆகமுடியும். வந்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள்! இந்த நாடகம் தொடர்ந்து எவ்வாறு சுழல்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் உள்ளது. எவராலும் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்த கதையைக் கூற முடியாது. 5000 வருடங்களுக்கு முன்னர் என்ன இருந்தது என்றும் அது யாருடைய இராச்சியம் என்றும் நீங்கள் அறிவீர்கள். பாரதத்தில் பூஜிக்கத்தகுதி வாய்ந்த தேவர்களான எங்களுடைய இராச்சியம் இருந்தது. நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முன்னர், நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களான தேவர்களாக இருந்து பின்னர் 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. 84 பிறவிகளின் கதை இலக்ஷ்மி, நாராயணனின் கதையாகும். நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறீர்கள். அமர்ந்திருந்து அவர்களின் கதையை எழுதுவதற்கு அவர்களுக்கு அதிகளவு நேரம் எடுக்கிறது. உங்களுடைய 84 பிறவிகளின் கதையை உங்களால் ஒரு நிமிடத்தில் கூற முடியும். அவர்கள் தமது ஒரு பிறவிக்குரிய கதையை, தாம் குழந்தைப் பருவத்தில் இருந்து என்ன செய்தார்கள் என்பதை எழுதுகிறார்கள். இவரும் எவ்வாறு 84 பிறவிச்சக்கரத்தில் சென்று வந்தார் எனத் தனது சொந்தக் கதையைக் கூறுகிறார். இது ஒரு பிராமணருக்குரிய விடயமல்ல. பல பிராமணர்கள் உள்ளனர். உங்களுக்கு மட்டுமே இந்தச் சக்கரத்தைப் பற்றித் தெரியும். இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம், நீங்கள் அரசர்கள், அரசிகள் ஆகுவதுடன், நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குகிறீர்கள். பாரத மக்களைப் போன்று வேறு எவரும் இந்தளவு பக்தி செய்ததில்லை. ஏனைய பிரிவுகள், மதங்கள் போன்றவை எமது பக்திக்குரிய காலப்பகுதியிலேயே ஸ்தாபிக்கப்பட்டன. முதலில், எமது பூமரம் மிகவும் சிறியதாக இருந்தது. ஆன்மீகத் தோட்டம் இருந்தது. நீங்களே உயிருள்ள மலர்களாக இருந்தீர்கள். அது பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் அது தொடர்ந்து உங்களுடைய முட்தோட்டம் ஆகியது. இந்த வேளையில், அனைவரும் முட்கள் ஆகிவிட்டனர். நீங்கள் எவ்வாறு முட்களில் இருந்து மலர்களாக மாறவேண்டும் எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். ஒருவர் மற்றவருக்குத் துன்பம் விளைவிப்பது முள் போன்று குத்துவதாகும். மாணவப் பருவமே சிறந்தது எனக்கூறப்படுகிறது. அதுவே சிறந்த பருவம் ஆகும். பெண்பிள்ளைகளும், ஆண்பிள்ளைகளும் மிகவும் சந்தோஷமாகக் கற்பார்கள். பின்னர், அவர்கள் திருமணம் செய்தவுடனேயே, ஒருவர் மற்றவரை முட்கள் போன்று குத்த ஆரம்பித்து விடுவார்கள். சத்தியயுகத்தில், எவரும் எவரையும் குத்த மாட்டார்கள். நீங்கள் இப்போது மலர்கள் ஆகுகின்றீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, அங்கு எல்லையற்ற சந்தோஷம் நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்தன. அவை இப்போது வெறுமை அடைந்து விட்டன. நீங்கள் அப்போது அதிகளவு தங்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். பாரதத்தில் வைரங்கள், தங்கம், ஏனைய இரத்தினங்களின் சுரங்கங்கள் இருந்தன. அந்த வேளையில், அமெரிக்கா இருக்கவில்லை. பம்பாய் கூட அப்போது இருக்கவில்லை. கலியுக இறுதியில் எங்கும் தங்கம் புலப்படாமல் இருப்பதும், சத்திய யுக ஆரம்பத்தில் சுரங்கங்கள் நிரம்பியிருப்பதுடன் தங்க மாளிகைகள் கட்டப்படுவது அதிசயமே ஆகும். இது ஓர் அதிசயமே! அங்கு, சுரங்கங்களில் இருந்து அதிகளவு தங்கம் வெளிப்படும். இங்கு எவ்வாறு களிமண்ணாலான செங்கற்கள் உள்ளனவோ, அவ்வாறே அங்கு உங்களிடம் தங்கக் கட்டிகள் இருக்கும். முட்டாளான மாயை, திரான்ஸில் தங்கத்தைத் தவிர வேறு எதனையும் காணவில்லை என்றொரு நாடகத்தை அவர்கள் நடிக்கிறார்கள். உண்மையில் சத்தியயுகத்தில் தங்கம் மட்டுமே இருக்கும். இங்கு, உங்களால் களிமண்ணால் ஆன செங்கற்களைக் கூடப் பெற முடியாமல் உள்ளது. நீங்கள் இங்கு செங்கற்களைப் பணத்திற்கு வாங்குகிறீர்கள். ஆனால் அங்கு தங்கக்கட்டிகள் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். இது பகலிற்கும் இரவிற்கும் இடையிலுள்ள வேறுபாடாகும். எனவே, நீங்கள் ஏன் புது உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது? நீங்கள் ஏன் இந்தப் பற்றெனும் பிடிக்குள் சிக்கிக் கொள்கிறீர்கள்? தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய பழைய உறவுமுறைகளால் அதிகளவு துன்பத்தைப் பெறுகிறீர்கள். அவர்களை விட்டு நீங்கும்படி பாபா உங்களுக்குக் கூறவில்லை. உங்களுடைய புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையிடம் இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். ‘மன்மனாபவ’ என்பதன் அர்த்தம், என்னை நினைவு செய்யுங்கள், நான்கு கர ரூபமான விஷ்ணுவை, அதாவது, விஷ்ணுதாமத்தை நினைவு செய்யுங்கள் என்பதாகும். ஒரேயொரு பிரதானமான கூற்றே உள்ளது. பக்தி மார்க்கத்தில் பல சிக்கல்கள் உள்ளன. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரேயொரு அதியன்பிற்குரிய, பரமதந்தை, பரமாத்மாவின் காதலர்கள். அவர் உங்களை சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். ஆத்மாக்கள் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். ஒரேயொரு தடவை மட்டுமே நீங்கள் ஆன்மீக அதியன்பிற்கினியவரின் ஆன்மீகக் காதலிகள் ஆகுகிறீர்கள். ஏனைய அனைவரும் பௌதீகமான மனிதக் காதலிகளும் காதலர்களும் ஆவார்கள். எல்லையற்ற காதலிகள் இப்போது எல்லையற்ற அதியன்பிற்கினியவரைக் கண்டடைந்துள்ளார்கள். வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! என நீங்கள் அவருக்குக் கூறுகிறீர்கள். அவர்கள் அந்த ஒருவரை நோக்கி மட்டுமே அழைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்றும் இதனாலேயே நீங்கள் தூய்மையாக்குபவரை அழைக்கிறீர்கள் என்றும் அறிவீர்கள். கும்பமேளா நடைபெறும்போது, பலரும் சென்று கங்கையில் நீராடுவார்கள். அதில் எந்தவிதமான நன்மையும் கிடையாது. அதன் மூலம் எவரும் தூய்மை அடைவதில்லை. தந்தை இப்போது வந்து உங்கள் மீது இந்த ஞான மழையைப் பொழிகிறார். முட்காடு பூந்தோட்டம் ஆகுவதற்காக உங்கள் மீது இந்த ஞான மழை பொழியப்படுகிறது. உங்களுடைய இராச்சியம் இருந்தபோது, அங்கு எவரும் தூய்மையற்றவராக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு உலகத்தின் மீதும் இந்த ஞான மழை பொழியப்படுகிறது. அனைத்தும் புத்துணர்ச்சியும் பசுமையும் அடைகின்றன. வைரங்களினதும் இரத்தினங்களினதும் சுரங்கங்களும் மீண்டும் புதிதாகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அதிகளவு சந்தோஷத்துடன் இருக்கவேண்டும்! எல்லையற்ற தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களிடம், ‘என்னை நினைவு செய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழியும்’ எனப் பாடுவதை உங்களால் தனிப்பட்ட முறையில் காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் எங்கேயும் அமர்ந்திருக்கலாம். நீராடும்போதும், உங்களுடைய புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். அந்த வேளையில், தந்தையை நினைவு செய்வதற்கு உங்களுக்கு நேரம் உள்ளது. எவ்வளவிற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அதற்கேற்ப நீங்கள் வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். நினைவினூடாக வருமானம் சம்பாதிக்கப்படுகிறது. நினைவினூடாக வருமானம் உள்ளது என நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? இது பாரியதொரு வருமானமாகும்! நீங்கள் விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை அசரீரியானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் இவருடைய சரீரத்தை ஆதாரமாக எடுத்துள்ளார். பாக்கிய இரதத்தைப் பற்றிப் பேசப்படுகிறது. பரமாத்மா பரமதந்தை பிரவேசித்து செயற்படுத்துவது பாக்கிய இரதத்தையே ஆகும். ஆத்மாவின் இரதம் தயாராகும்போது, அந்த ஆத்மா விரைவாக வந்து அதனுள் பிரவேசிப்பார். தந்தை இந்த இரதத்தில் பிரவேசித்து இந்த ஞானத்தை வழங்க வேண்டியுள்ளது. இவருடைய பல பிறவிகளில் இறுதிப்பிறவியில், அவருடைய ஓய்வுநிலையில், தந்தை கூறுகிறார்: நான் வந்து இவருள் பிரவேசிக்கிறேன். அதாவது, நான் இந்த இரதத்தில் பிரசன்னம் ஆகுகிறேன். இது குதிரை இரதத்தைப் பற்றிய கேள்வி இல்லை. நீங்கள் இப்போது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு நேருக்கு நேர் விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். யாராவதொருவர் ICS(இந்தியன் சிவில் சேவை) இற்குப் படிக்கும்போது, அவர் மகத்தான போதையைக் கொண்டிருப்பார். அதுவே அதியுயர்ந்த பரீட்சை ஆகும். இதுவும் உங்களுக்கு ஒரு கல்வியே ஆகும். கடவுள் கற்பிக்கும் பாடசாலை இதுவே ஆகும். இப்போது, கேள்வி எழுகிறது: கடவுள் யார்? அது ஸ்ரீ கிருஷ்ணரா அல்லது சிவபாபாவா? அனைவரினதும் கடவுள் யார்? அது அசரீரியானவர் என மக்கள் நம்பினாலும், எல்லோரும் அது ஸ்ரீகிருஷ்ணர் என்று நம்புவது கிடையாது. ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை அசரீரியான பரமதந்தை பரமாத்மாவே ஆவார். அவர் சதா பரந்தாமத்திலேயே இருக்கிறார். அவர் ஒரு தடவை மட்டும் குழந்தைகளாகிய உங்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காக வருகிறார். அதே பாபா ஒவ்வொரு கல்பமும் வந்து குழந்தைகளாகிய உங்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம் இப்போது யாசித்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாகுவீர்கள் என்ற காட்சிகளை நீங்கள் கண்டீர்கள். விநாசத்தினதும் ஸ்தாபனையினதும் காட்சிகளையும் நீங்கள் கண்டீர்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். சிலர் அதிகளவில் தானம் செய்து அதிகளவில் புண்ணியக்காரியங்கள் செய்யும்போது தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் அரசர்களுக்குப் பிறந்து, பின்னர் உடனடியாக இறக்கிறார்கள். சிலர் கருப்பையிலேயே இறக்கிறார்கள். சிலர் அங்கவீனர்களாகவோ அல்லது ஒரு கண்ணுடனோ பிறக்கிறார்கள். ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே, அவர் பெறும் அந்தஸ்தும் அமைகிறது. நான் இப்போது உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். பாபா, நான் என்னை உங்களிடம் அர்ப்பணிக்கிறேன் என நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். பாரதம் மகாதானிகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு, மக்கள் அதிகளவில் தானம் செய்வதுடன், அதிகளவு புண்ணியக் காரியங்களும் செய்கிறார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திலேயே ஆரம்பமாகின. தந்தை இப்போது உங்களுக்கு 21 பிறவிகளுக்கான தானத்தை வழங்குகிறார். நீங்கள் இப்போது உங்களை பாபாவிடம் அர்ப்பணிக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரங்கள், மனங்கள், செல்வத்தை வழங்கி விட்டீர்கள். தந்தை கூறுகிறார்: இப்போது ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளரைப் போன்று வாழுங்கள். உங்களுடைய இல்லறத்தையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். அனைத்தும் சிவபாபாவுக்கே உரியது. நான் உங்களுக்கு உரியவன். நான் உங்களை மட்டுமே நினைவு செய்வேன். நீங்கள் உங்களுடைய இதயபூர்வமாக உங்களை அர்ப்பணிக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் மாளிகைகளில் வசிக்கலாம். சுற்றுலா சென்று சந்தோஷப்படலாம். ஆனால் என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்களே உலக அதிபதிகள் ஆவீர்கள். நீங்கள் இப்போது முயற்சி செய்வதன் மூலம் மீண்டும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, யோக சக்தியால் மட்டுமே நீங்கள் பாவங்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இராஜ அந்தஸ்தை அடைவதற்கு, உங்களை முழுமையாகத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். உங்களுடைய சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணித்துவிட்டு, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள். பாவங்களை வென்றவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.2. நினைவினூடாக மட்டுமே வருமானம் சம்பாதிக்கப்படும். எனவே, சதா நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் பூக்களின் உலகிற்கான உரிமையைக் கோரும் வகையில் ஆன்மீக மலர்கள் ஆகுங்கள். உங்களுக்குள் எந்தவொரு முட்களும் இருக்கக்கூடாது.
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருந்து, முழு உலகையும் ஒரேயொரு தந்தைக்குள் அனுபவம் செய்வீர்களாக.தந்தையைத் தமது உலகமாகக் கருதுபவர்களால் மட்டுமே எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்க முடியும். தந்தையைத் தமது உலகமாகக் கொண்டிருப்பவர்கள் தமது உலகில் மட்டும் இருப்பார்கள். அவர்கள் வேறு எவருடனும் ஈடுபடுவதில்லை. அதனால் அவர்கள் இயல்பாகவே விலகி இருப்பார்கள். மக்கள் மற்றும் சொத்துக்கள் இரண்டும் உலகத்தில் அடங்கியுள்ளன. தந்தையின் செல்வம் என்றால் எனது செல்வம் என்று அர்த்தம். இந்த விழிப்புணர்வைப் பேணுவதன் மூலம், நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர்கள் ஆகுவீர்கள். மற்றவர்களைப் பார்க்கும்போதும் நீங்கள் வேறு எவரையும் பார்க்க மாட்டீர்கள். அவர்கள் உங்களுக்குப் புலப்பட மாட்டார்கள்.
சுலோகம்:
சக்திவாய்ந்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ஏகாந்தத்தில் இருப்பதற்கும் களிப்பூட்டுபவராக இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுங்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே ஒரு கோட்டை கட்டப்படுகிறது. நீங்கள் அரசருக்காக ஒரு சிறிய குகையைக் கட்ட மாட்டீர்கள், ஆனால் ஒரு கோட்டையையே கட்டுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எரிமலை நினைவெனும் ஒரு கோட்டையை உங்களுக்காக, உங்களின் சகபாடிகளுக்காக, ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்காகவும் கட்ட வேண்டும். நினைவின் சக்தி ஓர் எரிமலையாக இருக்கும்போது, ஆத்மாக்கள் அனைவரும் பாதுகாப்பை அனுபவம் செய்வார்கள்.