13.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, முதலில், இந்த அக்கறையை கொண்டிருங்கள்: ஆத்மாவான நான் துருவினால் மூடப்பட்டிருக்கிறேன், ஆத்மாவிலுள்ள அந்தத் துருவை எவ்வாறு அகற்றுவது என நான் சிந்திக்க வேண்டும். ஊசி துருப்பிடித்து இருக்கும் வரையில், காந்தத்தால் அதைக் கவர முடியாது.
கேள்வி:
அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு, அதிமேன்மையான சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி என்ன?பதில்:
கர்மாதீதம் ஆகுவதற்கான முயற்சி. உங்கள் புத்தி எந்தக் கர்ம உறவுமுறைகளை நோக்கியும் ஈர்க்கப்படக் கூடாது. எந்தவொரு கர்ம பந்தனமும் உங்களை ஈர்க்கக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். உங்களுடைய முழுத் தொடர்பும் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே இருக்க வேண்டும். உங்கள் இதயம் எவரிலும் பற்றிக் கொண்டிருக்கக் கூடாது. அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். வம்பளத்தலில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.பாடல்:
விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே! விழித்தெழுங்கள்! புதிய யுகம் வரப்போகின்றது!ஓம் சாந்தி.
ஆத்மாக்களாகிய ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள், உங்களுடைய சரீரங்களின் மூலம் பாடலைக் கேட்டீர்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் ஆத்மாக்களை பற்றிய இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உலகிலுள்ள எந்த ஒரு மனிதருக்கும் ஆத்மாக்களைப் பற்றிய உண்மையான ஞானம் இல்லை. எனவே, எவ்வாறு அவர்கள் பரமாத்மா பற்றிய ஞானத்தை கொண்டிருக்க முடியும்? தந்தை மாத்திரமே இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகிறார். ஒரு சரீரத்தின் மூலமே உங்களுக்கு இது விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஓர் ஆத்மாவால் சரீரமில்லாது எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் எனவும், நீங்கள் யாருடைய குழந்தைகள் எனவும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மிகச்சரியாக இதை அறிவீர்கள். சகல நடிகர்களுக்கும் ஒரு பாகமுண்டு. வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் எப்பொழுது இங்கே வருகின்றார்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. தந்தை உங்களுக்கு விபரங்களை விளங்கப்படுத்தவில்லை. அவர் அனைத்தையும் மொத்தமாக விளங்கப்படுத்துகிறார். “மொத்தமாக” என்றால், எவ்வாறு உங்கள் பாகங்கள் சத்தியயுக ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பதியப்பட்டுள்ளன என நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு விநாடியில் அவ்வாறான விளக்கத்தை அவர் கொடுக்கின்றார் என்பதாகும். தந்தை யார் என்றும், இந்த நாடகத்தில் அவரது பாகம் என்ன என்றும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தையே அதிமேலானவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். சிவனின் பிறந்தநாள் நினைவு கூரப்படுகின்றது. சிவனின் பிறந்தநாளே அனைத்திலும் மேலானது என நிச்சயமாகக் கூறலாம். பாரதத்திலேயே மக்கள் குறிப்பாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஒரு நாட்டிலே நல்லதொரு கடந்தகால வரலாற்றைக் கொண்ட மேன்மையான மனிதர்களுக்கே முத்திரைகள் உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். யாருடைய பிறப்பு அதிமேலானது என விளங்கப்படுத்தப்பட வேண்டும். யாருடைய முத்திரை உருவாக்கப்பட வேண்டும்? அவர்கள் அரசர் ராணா பிரதாபுக்கு முத்திரை வெளியிட்டது போன்று, சாதுக்கள், புனிதர்களுக்கும் சீக்கியர்கள், முஸ்லீம்கள், ஆங்கில தத்துவஞானிகள் போன்றோருக்கும் முத்திரை வெளியிடுகின்றார்கள். உண்மையில் அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற தந்தையின் முத்திரையே இருக்க வேண்டும். தந்தை இந்நேரத்தில் வரவில்லையானால், எவ்வாறு சற்கதி இருக்க முடியும்? அனைவரும் ஆழ்நரகத்தில் தடுமாறுகின்றார்கள். தூய்மையாக்குகின்ற, சிவபாபாவே அதிமேலானவர். சிவனுக்குப் பல ஆலயங்கள் உயரமான இடங்களிலே கட்டப்பட்டுள்ளன, ஏனெனில் அவரே அதிமேலானவர். தந்தையே வந்து பாரத மக்களாகிய உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் வரும்பொழுது, சற்கதி அருள்கின்றார். ஆகையினால் அந்தத் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். சிவபாபாவுக்கு எவ்வகையான முத்திரை உருவாக்கலாம் என நீங்கள் சிந்திக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவரது ரூபமாக ஒரு லிங்கத்தை உருவாக்குகிறார்கள். அவரே அதிமேலான ஆத்மா. சிவனின் ஆலயமே அதிமேலான ஆலயமாகக் கருதப்படுகின்றது. சோமநாதர் (அமிர்தத்தின் பிரபு) ஆலயம் சிவனுக்குரிய ஆலயமாகும். பாரத மக்கள் தமோபிரதான் ஆகியுள்ளதால் அவர்கள் சிவன் யார் என அறிய மாட்டார்கள். அவர்கள் பூஜிக்கின்ற ஒருவரின் தொழிலை அறியாமல் இருக்கிறார்கள். அரசர் ராணா பிரதாப் யுத்தங்கள் புரிந்தார். ஆனால் அது வன்முறையாகும். இந்த நேரத்தில் அனைவரும் இரட்டை வன்முறையாளர்கள். விகாரத்தில் ஈடுபடுவதும், காமவாளைப் பயன்படுத்துவதும் வன்முறையாகும். இலக்ஷ்மி, நாராயணனே இரட்டை அகிம்சாவாதிகள். மக்களிடம் முழுமையான இந்த ஞானம் இருந்திருந்தால், அவர்கள் அர்த்தமுள்ள முத்திரைகளை வெளியிட்டிருப்பார்கள். சத்திய யுகத்தில் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனின் முத்திரையை மாத்திரம் வைத்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு சிவபாபாவைப் பற்றிய ஞானம் எதுவும் இருக்க மாட்டாது. ஆகையினால் முத்திரைகள் நிச்சயமாக அதிமேன்மையான இலக்ஷ்மி, நாராயணனுடையதாகவே இருந்திருக்கும். இப்பொழுதும் பாரதத்தில் அதே முத்திரைகள் இருக்க வேண்டும். திரிமூர்த்தி சிவனே அதிமேலானவர். அவர் பாரதத்திற்கு அழியாத இராச்சிய சிம்மாசனத்தைக் கொடுப்பதால், அவரது முத்திரை அநாதியாகவே இருக்க வேண்டும். பரமாத்மா பரமதந்தை, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறார். உங்கள் மத்தியிலும் கூட, பலர் பாபா எங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை மறக்கின்றீர்கள். மாயை உங்களை இதை மறக்கச் செய்கிறாள். தந்தையை அறியாததால், பாரத மக்கள் பல தவறுகளைச் செய்கின்றார்கள். சிவபாபா என்ன செய்கிறார் என எவருமே அறியார். அவர்கள் சிவஜெயந்தியின் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்வதில்லை. தந்தையைத் தவிர வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: மற்றவர்கள் மீது கருணை கொள்வதுடன், உங்கள் மீதும் கருணை கொள்ளுங்கள். ஆசிரியர் உங்களுக்கு கற்பிக்கின்றார். இதுவே உங்களுக்கான அவரது கருணையாகும். அவர் கூறுகின்றார்: நான் ஆசிரியர், நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். உண்மையில் இந்த இடம் பாடசாலை (கல்விக்கான இடம்) என அழைக்கப்பட முடியாது, ஏனெனில் இது ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். ஏனையவை அனைத்தும் பொய்யான பெயர்கள். அந்தக் கல்லூரிகள் எதுவும் முழுப் பிரபஞ்சத்துக்கும் உரியவையல்ல. இந்தப் பல்கலைக்கழகம் மாத்திரமே தந்தை முழு உலகிற்கும் சற்கதி அருள்வதற்கு உரியதாகும். உண்மையில் ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே உள்ளது. இதன்மூலம் அனைவரும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அடைகின்றார்கள். அதாவது, அவர்கள் அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுகின்றார்கள். இதுவே பிரபஞ்சம். இதனாலேயே பாபா கூறுகின்றார்: பயப்படாதீர்கள். இது விளங்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. அவசர காலத்தில் எவருமே யார் கூறுவதையும் செவிமடுக்காமல் இருப்பது பொதுவானது: இது மக்களாட்சி. வேறெந்த மதத்திலும் ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு இராச்சியம் இருக்கவில்லை. அம்மக்கள் தமது மதங்களை ஸ்தாபிப்பதற்கு வருகின்றார்கள். அவர்களுடைய சொந்த மதத்திலே நூறாயிரக்கணக்கானோர் இருக்கும் பொழுது, அவர்கள் இராச்சியத்தை ஆளுகின்றார்கள். இங்கு தந்தை முழுப் பிரபஞ்சத்திற்குமான இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். இது விளங்கப்படுத்த வேண்டிய ஒரு விடயம். அவர் தேவ இராச்சியத்தை இந்த அதிமேன்மையான சங்கமயுகத்தில் ஸ்தாபிக்கின்றார். கருநீல நிறமான ஸ்ரீகிருஷ்ணரினதும், ஸ்ரீநாராயணனினதும், ஸ்ரீஇராமரினதும் படங்களை உங்களுடைய கரங்களில் எடுத்துச் சென்று, ஸ்ரீகிருஷ்ணர் ஏன் சியாம்சுந்தர் என அழைக்கப்படுகின்றார் என விளங்கப்படுத்துமாறு பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அவர் அழகானவராக இருந்தார். எவ்வாறு அவர் அவலட்சணமானவர் ஆகினார்? பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாக உள்ளது. நரகம் என்றால் அவலட்சணமும், சுவர்க்கம் என்றால் அழகும் ஆகும். இராம இராச்சியம் பகல் என்றும், இராவண இராச்சியம் இரவு என்றும் அழைக்கப்படுகின்றது. எனவே தேவர்கள் ஏன் கருநீல நிறமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். நீங்கள் இப்பொழுது அதி மங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள் என்றும், ஏனையோர் அவ்வாறில்லை என்றும் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்திலிருந்து அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். உங்களுக்கு விகாரமான, தூய்மையற்ற மனிதர்களுடன் தொடர்பில்லை. நீங்கள் இன்னமும் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை, இதனாலேயே உங்கள் இதயங்கள் கர்ம உறவுமுறைகளில் பற்றைக் கொண்டிருக்கின்றன. கர்மாதீதம் அடைவதற்கு, உங்களுக்கு நினைவு யாத்திரை தேவை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள், நீங்கள் பரமாத்மா மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். ஓகோ! பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார்! எவரும் அந்த உற்சாகத்தைக் கொண்டிருப்பதில்லை. மாயை மீண்டும், மீண்டும் உங்களைச் சரீர உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றாள். சிவபாபாவே ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார் எனப் புரிந்து கொண்டதனால், உங்களுக்கு அந்தக் கவர்ச்சியும், சந்தோஷமும் இருக்க வேண்டும். ஓர் ஊசியில் சிறிதளவு துரு இல்லாமல் இருந்தாலேயே, அது மிக விரைவாகக் காந்தத்தால் கவரப்படும். சிறிதளவு துரு இருந்தாலும், ஊசி கவரப்பட மாட்டாது; அந்தக் கவர்ச்சியும் இருக்க மாட்டாது. எந்தக் கறையும் இல்லாத பொழுதே காந்தம் ஊசியைக் கவரும். நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கும் பொழுதே குழந்தைகளாகிய நீங்கள் அந்தக் கவர்ச்சியைக் கொண்டிருக்க முடியும். துரு ஏதும் இருந்தால் ஊசியால் கவரப்பட முடியாது. ஊசிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் தூய்மையாகும் பொழுதே கவரப்படுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் துருவினால் மூடப்பட்டுள்ளதால் அந்த ஈர்ப்பு இருப்பதில்லை. நீங்கள் பெருமளவில் நினைவில் நிலைத்திருக்கும் பொழுதே, உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். அச்சா. இப்பொழுது எவராவது பாவம் செய்தால் அவர் 100 மடங்கு தண்டனையைச் சேர்த்துக் கொள்கின்றார், அந்த ஆத்மா துருப்பிடித்தவர் ஆகுகின்றார். அந்த ஆத்மாவினால் பின்னர் தந்தையை நினைவுசெய்ய இயலாது. உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் நினைவு செய்வதை மறக்கும் பொழுது, துரு பிடித்தவர்கள் ஆகுகின்றனர். இதனாலேயே அந்த ஈர்ப்போ அல்லது அன்போ இருப்பதில்லை. அந்தத் துரு அகற்றப்பட்டதும், அன்பும், சந்தோஷமும் நிலைத்திருக்கும். உங்கள் முகங்கள் மிகவும் மலர்ச்சியாகவும் இருக்கும். நீங்கள் எதிர்காலத்தில் அவர்களைப் போல் ஆகவேண்டும். நீங்கள் சேவை செய்யாது இருந்தால், தொடர்ந்தும் கடந்த கால, பழைய, பயனற்ற விடயங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். இது உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையிடமிருந்து துண்டிக்கின்றது. அதுவரையில் இருந்த பிரகாசமும் மறைந்துவிடும். தந்தையின் மீது சிறிதளவு அன்பும் இருக்க மாட்டாது. தந்தையின் மிக நல்ல நினைவைக் கொண்டிருப்பவர்களே அவர் மீது அன்பைக் கொண்டிருப்பார்கள். தந்தையும் அத்தகைய குழந்தையினால் கவரப்படுகின்றார். இந்தக் குழந்தை மிக நல்ல சேவை செய்வதுடன், யோகத்திலும் இருக்கின்றார். எனவே தந்தை அந்தக் குழந்தை மீது அன்பைப் பொழிகின்றார். அவ்வாறான குழந்தை தான் எந்தப் பாவமும் செய்யாதிருப்பதை நிச்சயப்படுத்துவதற்குத் தன்னில் கவனம் செலுத்துவார். நீங்கள் தந்தையை நினைவு செய்யாது விட்டால், எவ்வாறு துரு அகற்றப்பட முடியும்? தந்தை கூறுகின்றார்: உங்கள் அட்டவணைகளை வைத்திருங்கள், அப்பொழுது துரு அகற்றப்பட முடியும். நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆக விரும்பினால் துருவை அகற்ற வேண்டும். சில துருக்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் ஆத்மாக்களில் பின்னர் மீண்டும் துரு பிடித்து விடுகிறது. 100 மடங்கு தண்டனை உள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்யாது விட்டால், ஏதோவொரு பாவத்தைச் செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: துரு அகற்றப்படும்வரை உங்களால் என்னிடம் வரமுடியாது. பின்னர் தண்டனை இருக்கும். ஆத்மாக்கள் செருப்படியை அனுபவம் செய்து, அவர்களது அந்தஸ்தும் அழிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் என்ன ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற முடியும்? ஆத்மாவை மேலும் துரு பிடிக்கும் வகையில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். முதலில் உங்களிடம் உள்ள துருவை அகற்றுவதில் அக்கறை கொள்ளுங்கள். நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்கவில்லை எனில், அது உங்கள் பாக்கியத்தில் இல்லை எனத் தந்தை புரிந்து கொள்கிறார். நீங்கள் அந்தத் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் நல்ல குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். இலக்ஷ்மி, நாராயணனின் குணாதிசயங்கள் நினைவு கூரப்படுகின்றன. இன்றைய மக்கள் இலக்ஷ்மி, நாராயணனின் முன்னால் தங்களது சொந்தக் குணாதிசயங்கள் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் சிவபாபாவை அறிய மாட்டார்கள். அவர் மாத்திரமே சற்கதி அருள்பவர். அவர்கள் சந்நியாசிகளிடம் செல்கின்றார்கள். ஆனால், அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே. தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார், பின்னர் நீங்கள் கீழிறங்க வேண்டும். வேறு எவருமன்றி தந்தையாலேயே உங்களைத் தூய்மையாக்க முடியும். சந்நியாசிகள் சிறிய அரண் அமைத்து அதில் அமர்கின்றார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் கங்கைக்குச் சென்றிருந்தால், சுத்தம் ஆக்கப்பட்டிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் கங்கையைத் தூய்மையாக்குபவர் எனக் கருதுகின்றார்கள். மக்கள் அமைதியை வேண்டுகிறார்கள், ஆனால் அவர்களின் பாகங்கள் இறுதியில் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் பொழுதே முடிவடையும். ஆத்மாக்களாகிய எங்கள் வீடு சத்தத்திற்கு அப்பாற்பட்ட இடமாகும் (நிர்வாண தாமம்). இங்கு எவ்வாறு அமைதி இருக்க முடியும்? மக்கள் தபஸ்யா செய்கின்றார்கள். அவர்கள் செயல்களைச் செய்யவும் வேண்டும், இல்லையா? அவர்கள் அதைச் செய்து மௌனமாக இருக்கின்றார்கள். அவர்கள் சிவபாபாவை அறியார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை இங்கு வரும்பொழுது மாத்திரமே, இந்த ஒரு மேன்மையான சங்கமயுகம் இருக்கின்றது. ஆத்மாக்கள் சுத்தமாகி, பின்னர் முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் செல்கிறார்கள். முயற்சி செய்பவர்கள் பின்னர் ஆட்சி செய்வார்கள். எவ்வாறாயினும் எந்த முயற்சியும் செய்யாதவர்கள் தண்டனையை அனுபவம் செய்வார்கள். ஆரம்பத்தில் உங்களுக்குத் தண்டனை பற்றிய காட்சிகள் கொடுக்கப்பட்டன. இறுதியிலும் நீங்கள் காட்சிகளைக் காண்பீர்கள். எவ்வாறு ஸ்ரீமத்தை நீங்கள் பின்பற்றவில்லை எனவும், உங்கள் நிலை என்னவாகி உள்ளது எனவும் காண்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உபகாரிகள் ஆகவேண்டும். தந்தையினதும், படைப்பினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். ஓர் ஊசி பரஃபினில் ஊறவிடப்படும் பொழுது துரு அகற்றப்படுகின்றது. எனவே தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, ஆத்மாவில் இருந்தும் துரு அகற்றப்படுகின்றது. இல்லையெனில் தந்தையின்மீது கவர்ச்சியோ, அன்போ இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். அனைத்து அன்பும் நண்பர்கள், உறவினர்களை நோக்கித் திரும்பி விடுகின்றது. மக்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் சென்று தங்குகின்றார்கள். துரு பிடித்திருப்பவர்களின் சகவாசத்துக்கும், நீங்கள் இங்கே கொண்டுள்ள சகவாசத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. துரு படிந்தவர்களின் சகவாசத்தை வைத்திருப்பதனால், நீங்களும் துரு பிடித்தவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை துருவை அகற்றுவதற்காகவே வருகின்றார். அவரின் நினைவு மூலமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். அரைக்கல்பமாக ஆத்மாக்களாகிய நீங்கள் அதிகளவு துருவினால் மூடப்பட்டிருந்தீர்கள். காந்தமாகிய தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! எந்தளவிற்கு உங்கள் புத்தியின் யோகம் என்னுடன் இருக்கின்றதோ, அதற்கேற்ப ஆத்மாவிலுள்ள துரு அதிகளவு அகற்றப்படும். புதிய உலகம் உருவாக்கப்பட வேண்டும். முதலில், சத்தியுகத்தில் தேவர்களின் மிகச்சிறிய விருட்சம் இருக்கின்றது. பின்னர் அது பெரிதாக வளர்கின்றது. அவர்கள் உங்களிடம் இங்கே வந்து தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். உங்கள் இராச்சியம் எதுவும் மேலிருந்து வர மாட்டாது. மற்றைய மதத்தவர்கள் மேலிருந்து வருகிறார்கள். உங்களுடைய இராச்சியம் இங்கேயே தயார் ஆக்கப்படுகின்றது. எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. எந்தளவிற்கு நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. உங்கள் புத்தியின் யோகம் வெளியே திசை திரும்பும் பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் துருப்பிடித்தவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்கள் இங்கே வருவதற்கு முன்னர், தங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்த்து, மரணித்து வாழ்ந்து, அனைத்துக் கணக்குகளையும் தீர்த்து விடுகின்றார்கள். சந்நியாசிகள் அனைத்தையும் துறக்கின்றார்கள். இருந்தும், பின்னர் அவர்கள் அனைத்தையும் நீண்டகாலத்திற்கு நினைவு செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது சத்தியமானவரின் சகவாசத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எங்களுடைய தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றோம் என அவர்களிடம் கூறுங்கள். எங்கள் நண்பர்கள், உறவினர்களையும் நாங்கள் அறிவோம் (தொடர்பு). நாங்கள் எங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து செயல்களைச் செய்வதுடன், தந்தையையும் நினைவு செய்கின்றோம். நீங்கள் தூய்மை ஆகுவதுடன், பிறருக்கும் கற்பிக்க வேண்டும். பின்னர் அது அவர்களது பாக்கியத்தில் இருந்தால், அவர்கள் தொடர்ந்தும் இந்தப் பாதையைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பிராமணக் குலத்திற்குச் சொந்தம் ஆகவில்லை எனில், எவ்வாறு அவர்கள் தேவ குலத்திற்குள் செல்ல முடியும்? எவரது புத்தியிலும் உடனடியாகப் பதியக்கூடிய, மிக இலகுவான கருத்துக்களே உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. விநாச காலத்தில் அன்பில்லாத புத்தியுள்ளவர்களின் படமும் மிகவும் தெளிவானது. உங்களிடம் இப்பொழுது இராச்சியம் இல்லை. தேவர்களின் இராச்சியம் இருந்த பொழுது, அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இப்பொழுது மக்களாட்சியே உள்ளது. இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. எவ்வாறாயினும், உங்கள் துரு அகற்றப்படும் பொழுதே உங்கள் அம்பு எவரையாவது தைக்க முடியும். முதலில், துருவை அகற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் குணாதிசயங்களைச் சோதித்து இரவுபகலாக என்ன செய்கின்றீர்கள் எனப் பாருங்கள். சமையலறையில் சமைக்கும் பொழுதும், சப்பாத்தி செய்யும் பொழுதும் இயன்றளவிற்கு நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் சுற்றுலா செல்லும் பொழுதும் நினைவில் நிலைத்திருங்கள். தந்தை ஒவ்வொருவரின் ஸ்திதியையும் அறிவார். ஆத்மாக்களாகிய நீங்கள் வம்பளக்கும் பொழுது, மென்மேலும் துருப்பிடித்தவர்கள் ஆகுகின்றீர்கள். வம்பளத்தலைச் செவிமடுக்காதீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை எவ்வாறு ஆசிரியர் என்ற ரூபத்தில் உங்களுக்குக் கற்பித்து, அனைவர் மீதும் கருணை கொள்கின்றாரோ, அவ்வாறே உங்கள் மீதும், பிறர் மீதும் கருணை கொள்ளுங்கள். கற்பதிலும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதிலும் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள்.2. கடந்த கால, பழைய பயனற்ற, விடயங்களைப் பற்றி உங்கள் மத்தியில் வம்பளப்பதால், உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையிடம் இருந்து துண்டிக்காதீர்கள். பாவச்செயல்கள் எதையும் செய்யாதீர்கள். நினைவில் நிலைத்திருந்து துருவை அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் வளமற்ற மண்ணிலும் பலனை அறுவடை செய்கின்ற திடசங்கற்பத்தைக் கொண்டிருந்து, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.எந்தவொரு சந்தர்ப்பத்திலும், வெற்றி சொரூபம் ஆகுவதற்கு, உங்களிடம் திடசங்கற்பம் மற்றும் அன்பின் ஒன்றுகூடல் இருக்க வேண்டும். இந்தத் திடசங்கற்பம் வளமற்ற மண்ணிலும் விளைச்சலை அறுவடை செய்ய வைக்கிறது. எப்படி விஞ்ஞானிகள் மணலிலும் பழக்கன்றை வளர்க்கிறார்களோ, அதேபோல், உங்களின் மௌன சக்தியால் நீங்கள் அன்பெனும் நீரை ஊற்றி, பலனைப் பெறுகிறீர்கள். திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களால் மனச் சோர்வுடன் இருப்பவர்களிலும் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைக்க முடியும். ஏனென்றால், உங்களிடம் தைரியம் இருக்கும்போது, நீங்கள் தந்தையின் உதவியைப் பெறுகிறீர்கள்.
சுலோகம்:
உங்களை கடவுளின் பெறுமதிமிக்க சொத்தாகக் கருதியவண்ணம் எப்போதும் தொடர்ந்து முன்னேறும் பொழுது, உங்களின் செயல்களில் ஆன்மீகம் தென்படும்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
இரதசாரதியாக இருப்பது என்றால், ஆத்ம உணர்வில் இருத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு சாரதியே. பிரம்மாபாபா இதைப் பயிற்சி செய்து, வெற்றி பெற்றதன் மூலம் முதல் இலக்கத்தவர் ஆகினார். ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை ஒரு சரீரத்தில் பிரவேசித்து அதைக் கட்டுப்படுத்துகிறார். அதாவது, அவர் ஒரு சாரதி ஆகுகிறார். அவர் சரீரத்தில் தங்கியிருப்பதில்லை. இதனாலேயே, அவர் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருக்கிறார். அதேபோல், பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் தந்தையைப் போன்ற சாரதி ஸ்திதியைப் பேண வேண்டும். நீங்கள் உங்களின் சரீரத்தின் சாரதியாக இருக்கும்போது, இயல்பாகவே ஒரு பற்றற்ற பார்வையாளர் ஆகுகிறீர்கள். அத்துடன் நீங்கள் செய்கின்ற, பார்க்கின்ற அல்லது கேட்கின்ற எவற்றிலும் மாயையின் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கிறீர்கள்.