13.09.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.11.2011     Om Shanti     Madhuban


தடைகளில் இருந்து விடுபட்டவராகவும் என்றும் தயாராகவும் ஆகி, 108 மணிமாலையைத் தயார் செய்யுங்கள். தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுங்கள்.


இன்று, சகல சக்திகளையும் கொண்ட ஒரேயொருவரான சர்வசக்திவான் தந்தை, தனது மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கு சகல சக்திகள் என்ற பொக்கிஷத்தை வழங்குவதற்காக வந்துள்ளார். சகல சக்திகள் என்ற பொக்கிஷம் மிக இலகுவாகப் பெறப்படுகிறது. ஒரு விநாடியில், நீங்கள் ‘மேரா பாபா’ (எனது பாபா) என்று இனங்கண்டு கொள்கிறீர்கள். பாபாவும் ‘எனது குழந்தையே’ என்று கூறுகிறார். அதன் மூலம் நீங்கள் பொக்கிஷங்களின் அதிபதி ஆகுகிறீர்கள். எனவே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் சதா சகல பொக்கிஷங்களையும் உங்களிடம் கொண்டுள்ளீர்கள், அல்லவா? தந்தையின் பொக்கிஷங்கள், உங்களின் பொக்கிஷங்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறது. இப்போது சோதித்துப் பாருங்கள்: தந்தை குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் சகல பொக்கிஷங்களையும் வழங்கி உள்ளார். ஒரு பொக்கிஷமேனும் தவறவிடப்படவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடன் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் எல்லா வேளையும் வைத்திருக்கிறீர்களா? அல்லது, உங்களிடம் சில பொக்கிஷங்களே இருக்க, ஏனையவை இல்லாமல் போகின்றனவா? பாப்தாதா அவற்றைக் கொடுத்துள்ளார். ஆனால் நீங்கள் அனைவரும் சகல பொக்கிஷங்களையும் உங்களுடன் எல்லா வேளையும் வைத்திருந்து, இந்தப் பொக்கிஷங்களை எல்லா வேளையும் பயன்படுத்துகிறீர்களா? அவற்றின் அதிபதியாக அவற்றுக்கு நீங்கள் கட்டளை இட்டதும், அவை உரிய நேரத்தில் வந்துவிடுகின்றனவா? எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சேவைக்காக உள்ள உற்சாகத்தைப் பற்றி பாப்தாதா பார்த்தார், அத்துடன் அறிந்து கொண்டார். எங்கும், மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நீங்கள் 75 ஆவது ஆண்டு விழாவை (இந்த வருடம் 90 ஆவது ஆண்டுவிழா) கொண்டாடுகிறீர்கள். இப்போது மாற்றம் நிகழப் போகிறது என்றும் நீங்கள் சவால் விடுக்கிறீர்கள். நீங்கள் மிக நல்லதொரு சவாலை விடுக்கிறீர்கள். குழந்தைகளின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மிக்க மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் அவர் என்ன பாடலைப் பாடுகிறார்? ஆஹா குழந்தைகளே! ஆஹா! குழந்தைகள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் மிக நல்லதொரு சவாலை விடுப்பதைப் பார்ப்பதுடன், குழந்தைகளின் தாரணை ரூபத்தையும் வெற்றியின் பெறுபேற்றையும் பாப்தாதா பார்த்தார். உங்கள் அனைவருக்கும் உங்களின் வெற்றிநிறைந்த சம்பூரணமான, முழுமையான ரூபத்தைத் தெரியும். கருவிகள் ஆகியுள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் எல்லா வேளையும் சம்பூரணமாகவும் வெற்றி ரூபங்களாகவும் ஆகியுள்ளீர்களா? அல்லது இனிமேல்தான் அப்படி ஆகவேண்டுமா? ஏனென்றால் குழந்தைகளான நீங்களே சந்தோஷ உலகின் ஆதாரமூர்த்திகள் ஆவீர்கள். எனவே, குழந்தைகள் அனைவரின் பெறுபேறுகளையும் பாப்தாதா பார்த்தார். நீங்கள் அனைவரும் ஆதாரமூர்த்திகள் ஆவீர்கள். இது உங்களின் ஒரு சில குழந்தைகளுக்கு உரியது மட்டுமல்ல. சந்தோஷ உலகைக் கொண்டு வருவதற்கு நீங்களே கருவிகள் என்பது குழந்தைகளான உங்கள் அனைவருக்குமான சவால் ஆகும்.

எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரிடமும் கேட்கிறார்: சந்தோஷ உலகைக் கொண்டு வருவதற்குக் கருவிகளாக ஆகியுள்ள குழந்தைகளே, நீங்கள் சம்பூரணமும் முழுமையும் உள்ள ஆதார மூர்த்திகள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகள் அனைவர்மீதும் பாப்தாதாவிற்கு இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் அனைவரும் தந்தையின் சகபாடிகள் ஆவீர்கள். உங்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது, பின்னர் மிகுந்த சந்தோஷத்துடன் நீங்கள் சவால் விடுத்தீர்கள். அதனால் மாற்றம் ஏறத்தாழ நடந்தே விட்டது. எனவே, உலக மாற்றத்திற்குக் கருவிகளாக இருக்கும் குழந்தைகளான நீங்கள் உங்களையே கேட்க வேண்டும்: எந்தளவிற்கு நான் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகியுள்ளேன்? ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட உள்ளதால், இராச்சியத்திற்குக் கருவிகள் ஆகப் போகும் ஆத்மாக்கள் முதலில் கருவிகள் ஆகவேண்டும். அப்போது மட்டுமே மற்றவர்களால் கருவிகள் ஆகமுடியும். நீங்கள் சம்பூரணம் ஆகுவதில் ஓர் எல்லை காணப்படுவதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் சேவை செய்தீர்கள். ஆனால், அந்தச் சேவை செய்ததன் விளைவாக எத்தனை பேர் உங்களின் சகபாடிகள் ஆகினார்கள்? நீங்கள் சொல்வதைக் கேட்பவர்களில் எத்தனை பேர் நெருக்கமாக வந்துள்ளார்கள் என்று பாருங்கள். குழந்தைகளான உங்களின் தைரியத்தைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். ஆனால் இப்போது நீங்கள் செய்யும் சேவையின் பெறுபேறுகளில் அதிக தீவிரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். எல்லா வேளையும் ஆத்மாக்களை உறவுமுறையில் மிகவும் நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். பிரம்மாகுமாரிகளின் பணியைப் பற்றி அறிந்து கொள்வதில் தாம் இப்போது மிகவும் நெருக்கமாக வந்துள்ளோம் என்று அவர்களும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்: தந்தையிடம் இருந்தே ஆஸ்தி பெறப்பட வேண்டும் என்பதனால், அவர்கள் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் தமது சொந்த சுயமரியாதையை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அவர்களால் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். தந்தை இப்போது வந்து, உங்களுக்கு ஆஸ்தியை வழங்குகிறார். இது அவர்களின் புத்திகளில் பிரவேசிக்கும்போது மட்டுமே அவர்கள் தமது ஆஸ்தியையும் இராச்சியத்திற்கான உரிமையையும் கோருவார்கள்.

நீங்கள் பாடும், ‘எமது பாபா வந்துவிட்டார்!’ என்ற பாடலே எங்கும் பரவ வேண்டிய ஒலியாகும். பாப்தாதா இப்போது இந்தப் பெறுபேற்றைக் காண விரும்புகிறார். மாற்றம் இடம்பெற வேண்டும். சேவையில் இருந்து நன்மை ஏற்படுகிறது. உங்களின் கடின உழைப்பின் பலனை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆயினும், இன்னமும் அவர்கள் தந்தையிடம் வரவில்லை. எனவே, இப்போது அதற்கான திட்டங்கள் சிலவற்றைச் செய்யுங்கள். எப்படித் தந்தையின் வெளிப்படுத்துதல் இடம்பெறும்? இராச்சியத்தை ஆளப் போகின்றவர்கள், தடைகளில் இருந்து விடுபட்டு விட்டார்களா? நாடகம் இப்போது மாற்றத்திற்கான பட்டனை அழுத்த முடியுமா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் என்றும் தயாரா? பட்டனை அழுத்த முடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பட்டனை அழுத்தலாமா? நீங்கள் என்றும் தயாரா? அனைவரும் தயாராக வேண்டும் - இராச்சியத்திற்கான உரிமை உடையவர்கள், அரச குடும்பத்தினர், இராஜ பிரஜைகள், சாதாரண பிரஜைகள் - அப்போது அது பெரியதொரு விடயமாக இருக்காது. பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் உங்களின் பெறுபேறுகளைக் கேட்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாப்தாதாவிற்கு பட்டனை அழுத்துவதற்கு அதிக நேரம் எடுக்காது. முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்? சக்திகள் என்ன நினைக்கிறீர்கள்? பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பதில் சொல்லுங்கள்! பாண்டவர்களே, பதில் சொல்லுங்கள்! பட்டனை அழுத்தலாமா? நீங்கள் என்றும் தயாரா? (பாபா, நீங்கள்தான் தலைவர், பட்டனை அழுத்தும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை அழுத்துங்கள்) ஆனால் பாப்தாதா குழந்தைகளான உங்களிடம்தான் கேட்கிறார். ஏன்? ஏனென்றால், தந்தை இராச்சியத்திற்குச் செல்லப் போவதில்லை. தந்தை பிரம்மா இராச்சியத்திற்குச் செல்ல வேண்டும். (நாங்கள் பாப்தாதாவைச் சந்திப்பதை தொடர்ந்து நீண்டகாலம் அனுபவிக்க விரும்புகிறோம்). அது நல்லது, ஆனால் நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதுடன் தந்தையுடன் வாழ்க்கையை அனுபவம் செய்ய வேண்டும் அல்லவா? உங்களிடம் அது இருக்கிறதா? நீங்கள் தயாரா? நீங்கள் மட்டுமல்ல, அது ஓர் இராச்சியம் ஆகும். நீங்கள் யாரை ஆட்சி செய்வீர்கள்? ஓர் இராச்சியம் தேவைப்படுகிறது, அல்லவா? (நாங்கள் அனைவரும் சகபாடிகள்) அனைவரும் தயாரா? (அவர்கள் முற்றிலும் தயாராக இருக்கிறார்கள்) நீங்கள் சம்பூரணம் ஆகுவதற்குத் தயாரா? அச்சா, நீங்கள் அனைவரும் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், ஆனால் அது பெரிய விடயம் அல்ல.

நீங்கள் அனைவரும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். ஆனால் நீங்கள் என்றும் தயார் ஆகவேண்டும். பாப்தாதா உங்களிடம் இரண்டு விடயங்களைக் கேட்டார்: ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். வீணான எண்ணங்களின் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. நீங்கள் யாருக்குச் செய்தியைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் தங்களை மாற்றுவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே இப்போது பாப்தாதா விரும்புகின்ற பெறுபேறு ஆகும். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு இதைப் பற்றி அறிவுரை கூறுவதுடன் இதை உங்களிடம் கோருகிறார்: நீங்கள் சேவை செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவர்களுக்கு ஒரே வேளையில் மூன்று ரூபங்களில் மூன்று வழிமுறைகளில் சேவை செய்யுங்கள். மூன்று ரூபங்களாவன: ஞானம் நிறைந்தவராக இருத்தல், சக்திசாலியாக இருத்தல், அன்பு நிறைந்தவராக இருத்தல். இந்த மூன்று ரூபங்களாலும் மூன்;று வழிமுறைகளாலும் சேவை செய்யுங்கள். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் ஒரே வேளையில் சேவை செய்வதே இந்த மூன்று வழிமுறைகள் ஆகும். வார்த்தைகளால் மட்டும் சேவை செய்யாதீர்கள். ஆனால் வார்த்தைகளுடன்கூடவே, உங்களின் எண்ணங்களாலும் சேவை செய்யுங்கள். உங்களின் மனம் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். எனவே, இப்போது உங்களின் மனங்கள் சக்திவாய்ந்தவையாக இருப்பதுடன் அதேவேளை ஏனைய ஆத்மாக்களின் மனங்கள் மாற்றப்படக்கூடிய பெறுபேற்றைக் கொடுக்கும் வகையில் இருக்கும் தேவை உள்ளது. உங்களின் வார்த்தைகளால், உங்களின் ஞானம் அனைத்தையும் தெளிவாக ஆகவேண்டும். உங்களின் செயல்களால் சேவை செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் தமது குடும்பத்தை வந்து சேர்ந்திருப்பதை உணர வேண்டும். ஒரு குடும்ப உணர்வை அனுபவம் செய்வதன் மூலம், அவர்கள் நெருங்கிய சகபாடிகள் ஆகுவார்கள். எனவே இப்போது, ஒரே வேளையில் மூன்று வகையான சேவையும் இடம்பெற வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இது சாத்தியமா? இது சாத்தியமா? இது சாத்தியம் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் வார்த்தைகளில் நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுவதையும் ஆயினும் அவர்கள் குடும்பத்தின் சகபாடிகள் ஆகுவதற்கு நேரம் எடுப்பதையும் பெறுபேற்றிலே பாப்தாதா பார்த்தார். காலத்தின் சவாலுடன் கூடவே, அவர்கள் பேற்றினை அனுபவம் செய்யத் தக்க வகையில் நீங்கள் ஒரே வேளையில் மூன்று வழிமுறைகளிலும் சேவை செய்ய வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார். அனைவரும் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பாப்தாதாவைச் சந்திப்பதற்காக இங்கே வந்துள்ளார்கள். எனவே, குழந்தைகளின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கையில் பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் இப்போது சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், குறைந்தபட்சம் உங்களால் 108 மணிமாலையைத் தயார் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களால் இதைச் செய்ய முடியுமா? 108 மணிமாலை தயாராகி விட்டதா? அது தயாரா? ஏனென்றால், இராச்சியத்தில் உள்ள நீங்களே, இராச்சிய உரிமையைக் கொண்டிருக்கப் போகின்றீர்கள். உங்களால் 108 இரத்தினங்களின் பட்டியலைத் தயார் செய்ய முடியுமா? நீங்கள் ‘ஹா ஜி’ என்று சொல்கிறீர்கள் இல்லை. இராச்சியத்திற்கு உரிமையுள்ள 108 பேர் இருக்கிறார்கள். அதன்பின்னர் இராச்சியத்திற்கு உரிமையுள்ளவர்களின் சகபாடிகளாக 16108 பேர் இருப்பார்கள். அதன்பின்னர், அது வரிசைக்கிரமமாக இருக்கும். எனவே இப்போது, இந்த நேரத்திற்கு ஏற்ப, 108 மணிமாலை என்றும் தயாராக இருப்பதற்கும் அவர்கள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுவதற்கும் காலத்தை நெருக்கமாகக் கொண்டு வரப்போகின்ற குழந்தைகளை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். முதல் வரிசையில் இருப்பவர்களால் 108 இன் பட்டியலைத் தயார் செய்ய முடியுமா? ஆம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்! தந்தை பிரம்மா சாகார் ரூபத்தில் இருந்தபோது, அவர் பல தடவைகள் மாலையை உருவாக்க முயற்சி செய்தார். ஆனாலும் அவரால் இதுதான் இறுதியானது என முடிவு செய்ய முடியவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் இப்போது 75 வருடங்களைப் (இப்போது 90) பூர்த்தி செய்கிறீர்கள். எனவே, நீங்கள் 75 ஆண்டு விழாவின்போது ஏதாவது புதியதாகச் செய்வீர்கள்தானே? ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் 108 மணிமாலையை நீங்களே செய்யும் வகையில் புதுமையை ஏற்படுத்துங்கள். எனவே, அதை எண்ணிப் பார்க்கும்போது, 108 மணிமாலை தயார் என்று உங்களால் சொல்ல முடியும். ஏனென்றால், இராச்சியத்திற்கு உரிமை உள்ளவர்கள் முதலில் தயார் ஆகும்போது, இராச்சியத்துடன் தொடர்பு உடையவர்களும் தயார் ஆகுவார்கள். அவர்களுக்கும் அவர்களின் இடங்கள் தேவை, அல்லவா? எனவே, பாப்தாதா சாராம்சமாக என்ன சொல்கிறார் என்றால், இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் தீவிர முயற்சி செய்வதுடன் திடசங்கற்பமான எண்ணத்தையும் கொண்டிருக்க வேண்டும்: நான் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆக வேண்டும். ஏனென்றால், மாற்றம் சடுதியாக நடக்கும் என்று பாப்தாதா எங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். எவ்வாறாயினும், அதற்கு முன்னர், குறைந்தபட்சம் சேவைக்குக் கருவிகளாக இருப்பவர்கள், பிராந்தியத் தலைவர்கள், நிலையங்களுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள், அவர்களுடன்கூடவே அவர்களின் நெருங்கிய சகபாடிகளான பாண்டவர்கள் - இவர்கள் நிலையங்களுக்குத் தலைவர்கள் ஆகாவிட்டாலும் ஏதாவதொரு விசேடமான பணியில் கருவிகள் ஆகி, விசேடமான ஆத்மாக்களாகக் கருதப்படுபவர்கள் - அந்தப் பாண்டவர்களும் இப்போது தீவிர முயற்சி செய்து, தமது சுய மாற்றத்தின் பிரகாசத்தை வெளி மேடையில் கொண்டு வர வேண்டும். இதற்காக நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? இந்தப் பணியைச் செய்ய வேண்டும், உங்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்கவேண்டும், நீங்கள் நிச்சயமாகத் தந்தை பிரம்மாவைப் போல் தந்தையைப் பின்பற்ற வேண்டும், நீங்கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அனவைரும் உங்களின் கைகளை உயரே உயர்த்துகிறீர்கள், அதனால் தந்தையை மகிழ்விக்கிறீர்கள். நீங்கள் அதை நன்றாகச் செய்கிறீர்கள்! எவ்வாறாயினும், உங்களின் கைகளை உயர்த்துவதுடன்கூடவே, திடசங்கற்பத்தையும் கொண்டிருங்கள். திடசங்கற்பத்தின் சக்தியானது உங்களுக்குப் பெருமளவில் உதவி செய்யும்.

பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்துவதில் கெட்டிக்காரர்கள். ஆனால் இப்போது நீங்கள் திடசங்கற்பத்தை நடைமுறை வடிவத்தில் கொண்டு வரவேண்டும். குழந்தைகளான நீங்கள் புத்திசாலிகள். உங்களுக்கு திடசங்கற்பம் உள்ளது. ஆனால் அந்தத் திடசங்கற்பம் பின்னர் வெவ்வேறு வடிவங்களாக மாறுகிறது. ‘இது நடந்தது, அதனால் அது நடந்தது. இது நடக்காவிட்டால், அது நடந்திராது’. சாக்குப்போக்குகள் சொல்வதில் நீங்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகவேண்டும். யார் உங்களைப் பார்த்தாலும், யாரை நீங்கள் சந்தித்தாலும் ‘ஆஹா மாற்றமே! ஆஹா!’ என்று சொல்ல வேண்டும். பாப்தாதாவும் இதை விரும்புகிறார். கருவிகள் ஆகியுள்ள குழந்தைகளைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அவர்களைச் சந்திப்பதிலும் மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. எனவே, இன்று உங்களுக்கு என்ன எண்ணம் ஏற்பட்டது? ‘நான் நிச்சயமாக இவ்வாறு ஆகவேண்டும். நான் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும். நான் ஆகுவேன் என்பதல்ல, ஆனால் நான் நிச்சயமாக இவ்வாறு ஆகவேண்டும்’. உங்களுக்கு முன்னால் என்ன சூழ்நிலைகள் வந்தாலும் அந்தச் சூழ்நிலைகளுக்குப் பதிலாகத் தந்தையை உங்களுக்கு முன்னால் வையுங்கள். வெகு தொலைவில் அமர்ந்துள்ள குழந்தைகளைப் பார்க்கும்போதும் அத்துடன் அவருக்கு நெருக்கமாக இருக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போதும் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அமிர்த வேளையில் மிக, மிக இனிமையான உரையாடல்களை மேற்கொள்கிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் எப்படிப்பட்ட இனிமையான விடயங்களைப் பேசுகிறீர்கள் என்றால், இவற்றைக் கேட்கும் தந்தை தன்னை அர்ப்பணித்து விடுகிறார். எவ்வாறாயினும், அப்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் செயல் களத்திற்குள் செல்லும்போது, ஓர் உறவுமுறைக்குள் பிரவேசிக்கும்போது, சேவை செய்யச் செல்லும்போது, அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் சிறிது மாறுகிறீர்கள். அமிர்த வேளையில் உங்களுக்கு இருந்த ஊக்கமும் உற்சாகமும் உறவுமுறைகளை உருவாக்க ஆரம்பிக்கும்போது சிறிது மாறிவிடுகிறது.

பாப்தாதா இப்போது உங்களுக்கு ஒரு பணியைக் கொடுக்கிறார். நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்கள்தானே? ஆமோதியுங்கள்! உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஒரு மாதத்திற்கு திடசங்கற்பத்தின் அடிப்படையில் உங்களால் தந்தைக்குச் சமமானவராக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக முடியுமா என்ற எண்ணத்தை பாப்தாதா கொண்டிருந்தார். அதை உங்களால் ஒரு மாதத்திற்குச் செய்ய முடியுமா? அல்லது அதை விட நீண்ட காலத்திற்கு? ஒரு மாதத்திற்குத் திடசங்கற்பத்துடன் - திடசங்கற்பத்தை உங்களின் சகபாடி ஆக்கி, சதா தந்தையை உங்களின் முன்னால் வைத்திருங்கள். தந்தை பிரம்மாவை உங்களின் கண்களில் அமிழ்த்தி வைத்திருங்கள். தந்தை பிரம்மா என்ன செய்தாரோ, அதை உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் செய்யுங்கள். நீங்கள் அதை நடைமுறையில் பார்த்திருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு இந்த ஞானம் இருக்கிறதல்லவா? நீங்கள் எதைச் செய்ய முன்னரும் அனைத்திற்கும் முதலில், சோதித்துப் பாருங்கள்: இது தந்தை பிரம்மாவின் எண்ணமாக இருந்ததா? இவை அவரின் வார்த்தைகளாக இருந்தனவா? இவை அவரின் செயல்களாக இருந்தனவா? இவை அவரின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளாக இருந்தனவா? அனைத்திற்கும் முதலில், அதைப் பற்றிச் சிந்தித்து அதன்பின்னர் அதைச் செய்யுங்கள். இது சாத்தியமா? இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள். இது சாத்தியமா? உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள். தாய்மார்களே, உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! நீங்கள் தேகாப்பியாசங்கள் செய்கிறீர்கள், அதனால் உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! முன்னால் அமர்ந்திருப்பவர்களும் அவற்றை உயர்த்துவீர்கள், அல்லவா? மதுவனத்தைச் சேர்ந்த அனைவரும் இதில் முதலாம் இலக்கத்தைப் பெற வேண்டும். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள், அல்லவா? மதுவனம் என்றால் சாந்திவான் மட்டும் என்பதல்ல. ஒரு மாதத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டு இருக்கக்கூடியவர்கள் - ஒவ்வொரு நிலையமும் தடைகளில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும். குஜராத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது சாத்தியம் என்று நம்பும் குஜராத் ஆசிரியர்களே, இதற்காக உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! அவற்றைச் சிறிது உயர்த்தாதீர்கள், உயரே உயர்த்துங்கள்! இது சாத்தியமா? அச்சா. சாந்திவான் வாசிகளே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! வெகு சிலரே இருக்கிறார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், பின்னாலும் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். மதுவனத்தின் நான்கு, ஐந்து இடங்களும் இதைச் செய்வார்களா? இதைச் செய்வோம் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! குஜராத்தின் மாணவர்கள், கருவி ஆசிரியர்கள், கருவி சகோதரர்கள் - நீங்கள் அனைவரும் இதைச் செய்வீர்கள் என்பதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! பின்னால் அமர்ந்திருப்பவர்களின் கைகள் தெரியவில்லை. அச்சா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! குஜராத்தில் இருந்து பலர் வந்துள்ளார்கள். மண்டபத்தில் அரைவாசிப் பேர் குஜராத்தில் இருந்தே வந்துள்ளார்கள். (குஜராத்தில் இருந்து 15000 பேரும் ஏனைய இடங்களில் இருந்து 3000 பேரும் வந்துள்ளார்கள்) குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாப்தாதாவிடம் இருந்தும் குடும்பத்திடம் இருந்தும் பற்பல பாராட்டுக்கள். நீங்கள் அனைவரும் கைதட்டுவதைப் போல், ஒரு மாதத்தின் பின்னர், குஜராத் பெறுபேற்றிலே முதலாம் இலக்கத்தைப் பெறும். இது நல்லது. இது மிக நல்லதொரு எண்ணிக்கை. குழந்தைகளுக்குத் தமது இதயங்களில் தந்தையின் மீதும் மதுவனத்தின் மீதும் அன்பு இருப்பதைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் மிகவும் நல்லவர்கள். இப்போது, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள். ஒரு மாதப் பெறுபேற்றிலே, முதலாம் இலக்கம் ஆகுவதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள். உண்மையில், அனைவரும் முதலாம் இலக்கத்தைப் பெற வேண்டும். மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, நீங்கள் முதலாம் இலக்கத்தைப் பெறுவீர்கள்தானே? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! என்னதான் நடந்தாலும் என்ன சூழ்நிலைகள் வந்தாலும் - மாயை இப்போது கேட்டுக் கொண்டிருப்பதனால் சூழ்நிலைகள் வரும் - மாயை தனது ரூபத்தைக் காட்டுவாள். மாயையின் கடமை வருவது, உங்களின் கடமை வெற்றியாளர் ஆகுவதே ஆகும். அந்த வேளையில், இப்படிச் சொல்லாதீர்கள்: ‘இது நடந்தது, அது நடந்தது’. இவ்வாறு செய்யாதீர்கள். அவை வரும், விடயங்கள் நடக்கும். பாப்தாதா உங்களுக்கு இதைப்பற்றி முன்கூட்டியே கூறுகிறார். ஏனென்றால், மாயை கேட்டுக் கொண்டிருக்கிறாள், அவள் மிகவும் கெட்டிக்காரி. ஆனால், மாயை எவ்வளவுதான் கெட்டிக்காரியாக இருந்தாலும் நீங்கள் சர்வசக்திவானின் சகபாடிகள் ஆவீர்கள், அதனால் மாயையால் என்ன செய்ய முடியும்? பாப்தாதா அனைத்தையும் பார்க்கிறார், பாபா அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்க்கிறார். எனவே, நீங்கள் அனைவரும் முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும். எவருமே இரண்டாம் இலக்கத்தைப் பெறக்கூடாது, முதலாம் இலக்கத்தை மட்டுமே பெற வேண்டும். அச்சா.

பாப்தாதா இப்போது குழந்தைகள் அனைவருக்கும் ஒரு மேன்மையான எண்ணத்தைக் கூற விரும்புகிறார்: இப்போது, நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டு, உங்களின் சகபாடிகளையும் உங்களுடன் உறவுமுறையில் இருப்பவர்களையும் தடைகளில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும். காலத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். பாப்தாதாவால் குழந்தைகளைத் துன்பம் மற்றும் அமைதியின்மையில் இருப்பதைக் காணச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இப்போது, உங்களின் இராச்சியத்தை இந்த பூமியில் எவ்வளவிற்கு விரைவாக முடியுமோ கொண்டு வாருங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார். கடைசி இலக்கக் குழந்தையும் மிகவும் நேசிக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் பலவீனமானவர். எனவே, பலவீனமானவர்களுக்கு அதிகளவு கருணை காட்டப்படுகிறது. உங்களின் ஸ்திதி அல்லது சுபாவம் எத்தகையதாக இருந்தாலும் நீங்கள் என்னுடையவர்களே. தந்தை உங்களுடையவராக இருப்பதைப் போல், குடும்பமும் உங்களுடையதே. எனவே, அந்த நபரின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களைப் பார்க்காதீர்கள், ஆனால் அதற்குப் பதிலாக மேலதிக ஒத்துழைப்பைக் கொடுங்கள். நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருங்கள். அச்சா. முன்னால் இருக்கும் குழந்தைகளையும் வெகுதொலைவில் இருந்து பாபா கூறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் பார்க்கும்போது, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தனக்கு முன்னால் பார்த்து, திருஷ்டி வழங்குவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராகி, உங்களின் வார்த்தைகளால் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்வீர்களாக.

தமது வார்த்தைகளால் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்பவர்கள், மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையைக் கேட்பதற்குப் பல ஆத்மாக்கள் தாகத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் விவேகம் நிறைந்தது. அத்துடன் அவர்கள் விசேடமான சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. இதனாலேயே, அவர்கள் எப்போதும் திருப்தியாவும் மலர்ச்சியானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வார்த்தைகளைத் தானம் செய்வதன் மூலம், நீங்கள் உங்களின் பேச்சில் பல நற்குணங்களை விருத்தி செய்கிறீர்கள்.

சுலோகம்:
ஒரு மாஸ்ரர் சுய இராச்சிய அதிகாரி ஆகுங்கள், நீங்கள் முழுமையான ஆஸ்திக்கான உரிமையைக் கோரிக் கொள்வீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

சகல பேறுகளின் சொரூபங்களான, மாஸ்ரர் அருள்பவரான குழந்தைகளான நீங்கள், உலகிலுள்ள ஆத்மாக்களின் மீது கருணையையும் கனிவையும் கொண்டிருக்க வேண்டும். எமது சகோதரர்கள் தமது தற்காலிகமான ஆசைகளால் அதிகளவு அலைந்து திரிகிறார்கள். அருள்பவரின் குழந்தைகளே, உங்களின் சகோதரர்களைக் கருணையுடனும் கனிவுடனும் பாருங்கள்! மகாதானிகளாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகுங்கள். ஜொலிக்கும் திருப்தியின் இரத்தினங்களாகி, அனைவருக்கும் திருப்தியைக் கொடுங்கள்.