13.10.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 11.03.2002 Om Shanti Madhuban
சிறப்பியல்புகள் இறைவனின் பரிசுகள். அவற்றை உலக சேவைக்காக ஒப்படையுங்கள்.
இன்று, முப்பாட்டனாரான தந்தை பிரம்மாவும் சிவத்தந்தையும் உலகெங்கும் உள்ள முழுமையான மேன்மையான, பாக்கியசாலி பிராமணக் குலத்திற்குத் தெய்வீக, அலௌகீகப் பிறந்தநாளுக்காகப் பற்பல, பல மில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். இத்துடன்கூடவே, அவர்கள் ஆழ்ந்த அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்களையும், தமது இதயபூர்வமான அன்புடன் ஆன்மீக மலர்களையும் வழங்குகிறார்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவினதும் சிறப்பியல்பைப் பார்த்து அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகிறார்கள். அவர்களின் இதயத்திலே, ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற பாடலை அவர்கள் பாடுகிறார்கள். இன்று, அமிர்தவேளையிலிருந்து, ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் சந்தோஷ அலைகள் வெளிப்பட்டன: ‘ஆஹா! எமது தந்தையினதும். எங்களினதும் அலௌகீகப் பிறந்தநாள்!’ அமிர்த வேளையிலிருந்து குழந்தைகள் எல்லோருடைய வாழ்த்துக்களின் மாலைகளைப் பார்க்கும்போது தந்தையும் சந்தோஷப்படுகிறார். கல்பம் முழுவதிலும், இந்தப் பிறந்தநாள் சங்கமயுகத்தில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. சத்தியயுகத்திலும், இத்தகைய அலௌகீகப் பிறந்தநாளை நீங்கள் கொண்டாட மாட்டீர்கள். அங்கே, தந்தையும் குழந்தைகளும் ஒரே நாளில் பிறப்பெடுத்த இத்தகைய தனித்துவமான பிறந்தநாள் இருக்காது. இதுவரை, தந்தைக்கும் அவரின் குழந்தைகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் இருப்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? எவ்வாறாயினும், இன்று நீங்கள் கொண்டாடும் இந்தப் பிறந்தநாள், ஒரேநாளில் குழந்தைகளான உங்களுடையதும், பாப்தாதாவுடையதும் ஆகும். எனவே, நீங்கள் ‘ஆஹா, ஆஹா (அற்புதம்)’ என்ற பாடல்களைப் பாடுகிறீர்கள்தானே?
இன்று, அமிர்தவேளையில், பாப்தாதா ஒரு மாலையை உருவாக்கினார். எந்த மாலையை அவர் உருவாக்கினார்? அதில் உங்களின் பெயர் இருந்ததா, இல்லையா என நீங்கள் நினைக்கக்கூடிய, இறுதியான 108 மாலையை அவர் உருவாக்கவில்லை. ஆனால், ஸ்தாபனையின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை, அதாவது, விநாசத்திற்கு நெருக்கமான நேரம்வரை, அமரராக இருக்கும் ஆசீர்வாதத்துடன், அமரர்களாக இருக்கும் குழந்தைகளின் மாலையை இன்று அவர் செய்தார். நாடகத்திற்கேற்ப, அதிமேலானவரான இறைவனின் தெய்வீகச் செயல்களைப் பார்ப்பதற்கும், கேட்பதற்குமான மேன்மையான பாகங்கள் அந்த ஆத்மாக்களிடம் இருந்தன. எவ்வாறாயினும், அவர்களில் வெகு சிலரே இருந்தார்கள். உங்கள் எல்லோர் உங்களின் பாகங்களிலும்; இது உள்ளதா? பாப்தாதா உங்களைப் பிராமண சந்ததியினராக ஆக்குகிறார். இதனாலேயே, உலகைப் பொறுத்தவரை, பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் மிக, மிக, மிகப் பாக்கியசாலிகள். ஏன்? நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடியளவினரின் வரிசையில், அந்தக் கைப்பிடியளவினரிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுசிலரின் வரிசையில் இருக்கிறீர்கள். ஒருபுறம், உலகில் பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் இருக்கிறார்கள். மறுபுறம், ஒற்றுமையாக இருக்கும் பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். எனவே, இந்தப் பிறந்த நாளில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தையும் பார்த்தார் - உங்களில் சிலருடையதை மட்டுமன்றி, ஒவ்வொரு குழந்தையினதையும் பார்த்தார். அத்துடன் சிறப்பியல்புகளின் மாலைகளை உங்கள் மீது அணிவிக்கிறார். நீங்கள் புதிய ஆத்மாக்களோ அல்லது ஆரம்பத்திலிருந்து வந்த ஆத்மாக்களோ அல்லது மத்திய காலப்பகுதியில் வந்த ஆத்மாக்களோ, யாராக இருந்தாலும் நீங்கள் விசேடமானவர்கள். நீங்கள் விசேடமானவர்களாகவே இருப்பீர்கள். நீங்கள் கல்பம் முழுவதும் விசேடமாகவே இருப்பீர்கள். கல்பம் முழுவதிலும் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரும், மேன்மையான ஆத்மாக்களான உங்களை மகத்துவத்தின் பார்வையுடனேயே பார்ப்பார்கள். எனவே, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் சிறப்பியல்புகள் என்னவென்று தெரியுமா? அவற்றை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சிறப்பியல்பை அறிவீர்களா? ஆம் என்றால், ஒரு கையை உயர்த்துங்கள். மிகவும் நல்லது! அந்தச் சிறப்பியல்புகளால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவை மிகவும் நல்லவை என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை மிகவும் நல்லவை என நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தச் சிறப்பியல்புகளால் நீங்கள் என்ன செய்வீர்கள்? (அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்துவோம்). நீங்கள் அவற்றை வேறு எதற்காகவும் பயன்படுத்துவதில்லைத்தானே? சிறப்பியல்புகள் இறைவனின் பரிசாகும். இறைவனின் பரிசை சதா உலக சேவைக்காக ஒப்படைக்க வேண்டும். சிறப்பியல்புகளை எதிர்மறையான முறையில் பயன்படுத்தினால், அவை அகம்பாவத்தின் வடிவத்தை எடுத்து விடுகின்றன. இது ஏனென்றால், இந்த ஞானப் பாதைக்குள் வந்த பின்னர், பிராமண வாழ்க்கைக்குள் வந்த பின்னர், நீங்கள் தந்தையிடமிருந்து பல சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளீர்கள். தந்தைக்குச் சொந்தமாகுவதன் மூலம், நீங்கள் சிறப்பியல்புகளின் பொக்கிஷங்களின் உரிமையைப் பெறுகிறீர்கள். உங்களிடம் ஒன்றோ அல்லது இரண்டோ சிறப்பியல்புகள் கிடையாது. உங்களிடம் பல சிறப்பியல்புகள் உள்ளன. ஞாபகார்த்தத்திலும், உங்களின் சிறப்பியல்புகள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராக இருத்தல் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, வெறுமனே 16 அல்ல, ஆனால் 16 என்றால் நிரம்பியிருத்தல் எனப்படுகிறது. இதற்கு, சகல நற்குணங்களும் நிறைந்தவர் என்று அர்த்தம். நிரம்பியிருத்தல் என்பது சம்பூரணமாக விகாரமற்றவராக இருப்பதன் விவரங்களில் உள்ளது. வார்த்தைகளில், அது ‘முற்றிலும் விகாரமற்றது’ எனப்படுகிறது. ஆனால், நிரம்பியிருப்பதில், அதிகளவு விவரங்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு பிராமணரும் தந்தையிடமிருந்து சிறப்பியல்புகளை ஓர் ஆஸ்தியாகப் பெறுகிறார். எவ்வாறாயினும், நீங்கள் அந்தச் சிறப்பியல்புகளைக் கிரகித்து, அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும். இது எனது சிறப்பியல்பு அல்ல, ஆனால் இது இறைவனிடமிருந்து கிடைத்த பரிசு. நீங்கள் அதை இறைவனிடமிருந்து பெற்ற பரிசாகக் கருதினால், அந்தச் சிறப்பியல்பு இறைவனின் சக்திகளால் நிறைந்திருக்கும். அது உங்களுடையது எனக் கூறுவதன் மூலம், நீங்கள் அகம்பாவத்திற்கும், அவமதிப்பிற்கும் முகங்கொடுக்க நேரிடும். ஞானம், யோகம், சேவை, உங்களின் புத்தி அல்லது எந்தவொரு நற்குணம் என்பவற்றின் எந்தவிதமான அகம்பாவத்தையும் கொண்டிருப்பதன் அடையாளம், இத்தகையதோர் ஆத்மா மிக விரைவாக அவமதிக்கப்பட்டதாக உணர்வார். எனவே, நீங்கள் விசேடமான ஆத்மாக்கள். அதாவது, உங்களுக்கு இறைவனிடமிருந்து அந்தப் பரிசுகளைப் பெறுகின்ற உரிமை உள்ளது.
எனவே, இன்று நீங்கள் எல்லோரும் பாப்தாதாவின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள், அப்படித்தானே? பாப்தாதாவும் உங்கள் எல்லோருடைய பிறந்தநாளையும் கொண்டாட வந்துள்ளார். நீங்கள் பாப்தாதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவீர்கள். ஆனால் பாப்தாதாவோ பிராமணக் குலம் முழுவதினதும் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளார். நீங்கள் இந்த நாட்டில் வெகு தொலைவில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெளிநாட்டில் ஏதோவொரு மூலையில் வெகு தொலைவில் இருந்தாலென்ன, பிராமணராகி, பிராமணக் குலத்திற்குச் சொந்தமான எந்தவோர் ஆத்மாவாக இருந்தாலும், பாப்தாதா உங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நீங்களும் அதைக் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் எல்லோருடைய பிறந்தநாளையும் கொண்டாடுகிறீர்கள்தானே? அல்லது, இங்கே அமர்ந்திருப்பவர்களின் பிறந்தநாள் மட்டுமா? நீங்கள் எல்லோரையும் நினைக்கிறீர்கள்தானே? பாருங்கள், நீங்கள் தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்களா இல்லையா என எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நீங்கள் எல்லோருடைய பிறந்தநாளையும் கொண்டாடுகிறீர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! கொண்டாடுவது என்றால், அந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். எனவே, உங்களின் இதயங்களில் அந்த உற்சாகம் இருக்கிறதல்லவா? ஆஹா! எமது அலௌகீகப் பிறந்தநாளே! ஆஹா!
எனவே, இன்று, அமிர்த வேளையிலிருந்து, உங்கள் எல்லோருக்கும் உங்களின் பிறந்தநாளையொட்டி உங்களின் இதயங்களில் அதிகளவு ஊக்கமும், உற்சாகமும் காணப்பட்டன. பாப்தாதா வாழ்த்து மடல்களையும் பார்த்தார். நீங்கள் அந்தக் கண்களால் அவற்றைப் பார்க்கிறீர்கள். ஆனால், பாப்தாதா நீங்கள் எவரும் அவற்றைப் பார்க்க முன்னரே சூட்சும ரூபத்தில் அவற்றைப் பார்க்கிறார். உங்களின் இதயங்களில் உள்ள உற்சாகத்தைக் காட்டுவதற்கு உங்கள் எல்லோரிடமும் எவ்வளவு ஊக்கமும், உற்சாகமும் உள்ளன என்பதை பாப்தாதா கண்டார். தற்காலத்தில், ஈமெயில்கள் மிகவும் மலிவானவை. அதனால், எல்லோரும் அதிகளவு ஈமெயில்களை அனுப்புகிறார்கள். அது ஈமெயில், வாழ்த்து மடல், கடிதம் அல்லது உங்களின் இதயபூர்வமான எண்ணம் என எதுவாக இருந்தாலும், அவை எல்லாமே பாப்தாதாவை வந்தடைகின்றன. நீங்கள் அமிர்தவேளையிலிருந்து, எல்லா இடங்களிலும் இருந்தும் வந்த சகல வாழ்த்துமடல்கள், கடிதங்கள், ஈமெயில்கள், எண்ணங்கள் என்பவற்றைக் சேகரித்தால், அவற்றைப் பார்க்கும்போதே உங்களுக்குள் அதிகளவு மகிழ்ச்சி ஏற்படும். இது ஒரு தனித்துவமான கண்காட்சியாக உள்ளது. ஒரு பிறந்தநாளில், எதிர்காலத்தில் இது இடம்பெற வேண்டும் என ஒரு விருப்பத்தை நீங்கள் நினைப்பீர்கள். உங்களின் பிறந்தநாளில், உங்களின் வயதின் இலக்கம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் இப்போது ஒரு வருடம் முன்னேறி விட்டீர்கள். அதேபோல், உங்களின் முயற்சிகளிலும், உங்களின் விலைமதிப்பற்ற வாழ்க்கைகளிலும், உங்களின் மனங்களிலும், அதாவது, உங்களின் எண்ணங்களிலும் உங்களின் புத்திகளால் எடுக்கும் தீர்மானிக்கும் சக்தியிலும் உங்களின் வார்த்தைகளிலும் ஒரு விநாடியில் மற்றவர்களை வெற்றி சொரூபங்கள் ஆக்கும் சக்தியைக் கொண்டிருப்பதிலும், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளைப் பொறுத்தவரையிலும், உங்களுடன் தொடர்பில் வருகின்ற எல்லோருமே ஒவ்வொரு கணமும் ஏதாவதொரு பேற்றினை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இனிவரும் வருடத்திற்காக இத்தகைய திடசங்கற்பமான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? சிவஜெயந்தி தினத்தில், பிராமண ஆத்மாக்கள் எல்லோருக்கும் இரண்டு இலட்சியங்கள் உள்ளன: ஒன்று, தங்களுக்குள் செய்து கொள்ளும் சத்தியம். மற்றையது, தந்தையின் வெளிப்படுத்துகைக்கான கொடியை ஏற்றுவது. உங்கள் எல்லோருக்கும் உங்களின் இதயங்களில் இந்த இரண்டு குறிப்பிட்ட இலட்சியங்கள் உள்ளன. எனவே, நீங்கள் கடந்த காலத்தில் செய்த சத்தியங்கள் அனைத்தினதும் பதிவேட்டை பாப்தாதா பார்த்தார். ஒவ்வொரு வருடமும், நீங்கள் ஒவ்வொருவரும் சரியான முறையில் உங்களின் எண்ணங்களிலும், வார்த்தைகளாலும் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். நீங்கள் மிக நன்றாகவே அதைச் செய்தீர்கள். எவ்வாறாயினும், இன்றிலிருந்து, அதாவது, இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடியதன் பின்னர், குறிப்பாக ஒரு கூற்றைக் கீழ்க்கோடிடுங்கள். இது ஒரு பொதுவான கூற்று. இது புதியதொரு கூற்று கிடையாது. அந்தக் கூற்றானது, ‘சதா திடசங்கற்பம்’ என்பதாகும். சிலவேளைகளில் திடசங்கற்பமும், சிலவேளைகளில் திடசங்கற்பத்தில் கவனயீனமும் என்பதல்ல. உங்களிடம் சதா திடசங்கற்பம் இருக்கும்போது, அதன் அடையாளம் என்னவென்றால், சுயம், சேவை, உங்களின் உறவுமுறைகளைப் பொறுத்தவரை, உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் எப்போதும் 100 சதவீதம் வெற்றி ஏற்படுவதேயாகும். இவை அனைத்திலும் பிராமணர்களுக்குச் சதா வெற்றி ஏற்படாதவரை, நாடகத்தின்படி, வெளிப்படுத்துதலும் தாமதம் ஆகிவிடும். வெற்றியே வெளிப்படுத்துகையின் அடிப்படையாகும். ஒவ்வொரு வார்த்தையும் வெற்றி நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணமும் வெற்றி நிறைந்ததாக இருக்க வேண்டும். இதனாலேயே, இன்றுள்ள ஞாபகார்த்தங்களில், தங்களைக் குருமார் என்று அழைப்பவர்கள், ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்காகக் கொண்ட குருமார் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் பொய் சொன்னாலும் கூட, அது சத்திய வாக்கு என்றே அவர்களின் பக்தர்கள் சொல்வார்கள். எனவே, இது உங்களின் சத்தியத்தின் ஞாபகார்த்தம் ஆகும். நீங்களே சக்கரவர்த்திகளாகவும் மகான்களாகவும் ஆகப் போகின்றவர்கள். இதனாலேயே, ‘குருவின் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்கு’ என்று சொல்லும்போது, அவர்கள் மகாத்மாக்களையே குறிப்பிடுகிறார்கள். ‘அது எனது நோக்கமல்ல, ஆனால் நான் அதைச் சும்மாதான் சொன்னேன்’ அல்லது ‘அது வெறுமனே வெளிப்பட்டுவிட்டது’ என்றோ ஒருபோதும் நினைக்காதீர்கள். எந்தவொரு நோக்கமும் இல்லாமல் வார்த்தைகளோ அல்லது உணர்வுகளோ வெறுமனே வெளிவராது. இது உங்களை நீங்களே ஏமாற்றுவதாகும். வார்த்தைகள் வெறுமனே வந்து விட்டன என நீங்கள் சிலவேளைகளில் சொல்கிறீர்கள். அவை ஏன் அப்படி வெளிப்பட்டன? ஏன்? அவை வெறுமனே வெளிவரும் வகையில் உங்களிடம் எந்தவொரு கட்டுப்படுத்தும் சக்தியும் இல்லையா? அது வெறுமனே நடந்து விட்டது... அப்படியென்றால், நீங்கள் அரசன் இல்லையா? நீங்கள் உங்களின் ஏதாவது பௌதீகப் புலன்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம், அப்படித்தானே? இதனாலேயே, வார்த்தைகள் வெறுமனே வெளிப்பட்டன அல்லது ஏதோவொன்று வெறுமனே நடந்தது.
எனவே, இந்த வருடம், வாழ்த்துக்களுடன் கூடவே, இதையும் கீழ்க்கோடிடுங்கள்: எல்லாவற்றிலும் சதா திடசங்கற்பம். இன்று, இது உங்களின் பிறந்தநாள். எனவே, பாப்தாதா இன்று உங்களுக்கு எதையும் சொல்லப் போவதில்லை. ஆனால், பாப்தாதா எல்லோருடைய அட்டவணையிலும் அதை அவதானித்தார். அதனால் கடைசிச் சந்திப்பின்போது, அவர் உங்களுக்கு அதைப் பற்றிக் கூறுவார். இன்று, பாபா கொண்டாடப் போகிறார், உங்களுக்கு எதையும் சொல்லப் போவதில்லை. 15 நாட்களுக்குப் பின்னர் அவர் உங்களுக்குக் கூறுவார். (பாப்தாதா எங்களுக்குச் சொன்னால், அதை நாங்கள் 15 நாட்களில் சரிசெய்து விடுவோம்) ஓகே, நீங்கள் அந்தத் திருத்தத்தை 15 நாட்களுக்குள் செய்வீர்கள் என முதலில் சொல்வீர்களாயின், உங்களுக்கு அதைப் பற்றிச் சொல்வதில் பாபாவிற்கும் ஓகேதான். அந்த மாற்றம் 15 நாட்களுக்குள் இடம்பெறுமாயின், பாப்தாதா என்ன செய்வார் என உங்களால் சொல்ல முடியாது. பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் 15 நாட்களில் மாறுவீர்களா? இந்த எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? நல்லது. பாண்டவர்கள் இதைச் செய்வீர்களா? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அதைக் கேட்பது இலகுவானது, ஆனால் நீங்கள் அதைச் செய்வீர்களா? அப்படியென்றால் நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும். (பின்னால் அமர்ந்திருப்போர், தாய்மார்கள், ஆசிரியர்கள், இரட்டை வெளிநாட்டவர்கள் என எல்லோரிடமும் பாப்தாதா கேட்டார். எல்லோரும் தமது கைகளை அசைத்தார்கள்.) நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை மிக நன்றாக உயர்த்தினீர்கள்.
இரட்டை வெளிநாட்டவர்களின் மூன்று குழுக்கள் இருக்கிறார்கள்தானே? (அகநோக்கு, மஸ்தானா (போதையுடையவர்கள்) மற்றும் சக்தி (சக்திசாலிகள்) என்ற மூன்று குழுவினர்) அகநோக்குக் குழுவினர், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அகநோக்குக் குழுவில் மிகச் சிலரே இருக்கிறார்கள். இரண்டாவது குழு, போதையுடையவர்கள் (மஸ்தானா). ஓகே, மஸ்தானா குழுவில் இருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! நீங்கள் சதா போதையைக் கொண்டிருப்பவர்கள், அப்படித்தானே? மஸ்தானா என்பதன் அர்த்தம் என்ன? சதா போதையுடன் இருப்பவர்கள். மூன்றாவது குழு, சக்தி. சக்திக் குழுவினர் சக்திசாலிகள்தானே? நீங்கள் மிக நல்ல பெயர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆரம்பத்தில், பத்தி இடம்பெற்றபோது, உங்களின் குழுக்களின் பெயர்கள் என்ன? (தெய்வீக ஒற்றுமை, மனோகர் கட்சி, பரம் கட்சி). பெயர்கள் மிகவும் அழகானவை, அப்படித்தானே? எனவே, இவையும் மிக நல்ல குழுக்கள். நீங்கள் பெயரை நினைக்கும்போது, அந்தப் பெயருடன் கூடவே, நீங்கள் உங்களின் பணியையும் நினைவு செய்வீர்கள். அச்சா, இரட்டை வெளிநாட்டுக் குமார்களே, எழுந்து நில்லுங்கள்! அச்சா, இது குமார்களின் குழுவாகும். நீங்கள் மிக நன்றாகச் செய்துள்ளீர்கள். இரட்டை வெளிநாட்டவர்களின் புத்துணர்ச்சி பற்றிய மிக நல்ல செய்திகளை பாப்தாதா பெற்றுள்ளார். பாப்தாதா இதயபூர்வமாக உங்களைப் பாராட்டுகிறார். அத்துடன், இன்று பாபா எதைக் கீழ்க்கோடிட்டுள்ளார் என்பதையும் சகல குழுக்களுக்கும் நினைவூட்டுகிறார்.
பல இரட்டை வெளிநாட்டு ஆசிரியர்கள் உள்ளார்கள். ஓர் ஆசிரியர் ஆகுவது, மிக, மிக மேன்மையான பாக்கியத்தின் அடையாளமாகும். ஏனென்றால், பாப்தாதா ஆசிரியர்களைக் குரு-பாய்களாக (குருவின் ஆசனத்தைப் பெறுவதற்காகப் பயிற்றுவிக்கப்பட்ட சீடர்) பார்க்கிறார். அவர் உங்களைச் சமமானவர்கள் என்ற பார்வையுடனேயே பார்க்கிறார். ஏனென்றால், நீங்கள் தந்தையின் ஆசனத்தில் அமர்கிறீர்கள். ஆசிரியர்கள் இந்த உரிமையைப் பெறுகிறார்கள்தானே? எப்படி ஒரு குருவிடம் அவரின் சிம்மாசனம் இருக்கிறதோ, அதேபோல், இந்த முரளியின் சிம்மாசனமும் மற்றவர்கள் முரளியைக் கிரகிக்கச் செய்வதுடன், முரளியைக் கேட்கவும் வைக்கிறது. நீங்கள் வெறுமனே முரளி மட்டும் வாசிப்பதில்லை. ஆனால், அவர்கள் அதைக் கிரகிக்கவும் தூண்டுகிறீர்கள். பாப்தாதா ஆசிரியர்களான உங்களுக்குக் குரு-பாய் என்ற சிம்மாசனத்தையும் வழங்கியுள்ளார். வெளிநாடுகளில் நீங்கள் எல்லோரும் மிக விரைவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பொறுப்புக் கிரீடத்தை அணிதல், தைரியத்தைப் பேணுதல் என்பவை சிறியதொரு விடயமல்ல. ஆனால், குரு- பாய் ஆகுதல் என்றால் தந்தைக்குச் சமமாகுதல் என்பதாகும். உண்மையில், எல்லோரும் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகவேண்டும். ஆனால், ஆசிரியர்களிடம் குறிப்பாகப் பொறுப்புக் கிரீடம் உள்ளது. பாப்தாதாவும் ஆசிரியர்களின் ஒன்றுகூடலை மிகவும் விரும்புகிறார். எவ்வாறாயினும், இன்றைய விசேடமான கூற்று, ‘சதா கவனம் செலுத்துதல்’ என்பதாகும்.
அச்சா, பாரதத்தின் ஆசிரியர்களே, எழுந்து நில்லுங்கள்! பாரதத்தின் ஆசிரியர்களும் சளைத்தவர்கள் இல்லை. எனவே, பாபா ஆசிரியர்களை எந்தப் பார்வையுடன் பார்க்கிறார் எனக் கேட்டீர்களா? வகுப்பு நடத்துகின்ற மற்றும் முரளி வாசிக்கின்ற ஆசனம் மிகவும் பாக்கியமானது. நீங்கள் மிக, மிக, மிக அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், பௌதீக ரூபத்தில் கருவிகளாக இருப்பவர்கள் யார்? அச்சா. தாதிகளில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார், ஒருவர் மதுவனத்தில் இருக்கிறார். ஆனால், ஒவ்வோர் இடத்திலும், பௌதீக ரூபத்தில் ஆசிரியர்களே கருவிகளாக இருக்கிறார்கள். அல்லது, பாண்டவர்களும் கருவிகளாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமன்றி, மூத்த சகோதரர்கள் என்று அழைக்கப்படும் பாண்டவர்களும் இருக்கிறார்கள். பாண்டவர்கள் மிகவும் அவசியம். சக்திகள் மற்றும் பாண்டவர்கள் இருவரின் சகவாசத்தினாலேயே ஆரம்பத்திலிருந்து பணி தொடர்ந்தது. வெகுசில பாண்டவர்களே இருந்தாலும், விஷ்வகிஷோர் இருந்தார். ஆரம்பத்தில் ஆனந்த் கிஷோரும், விஷ்வ கிஷோரும் இருந்தார்கள். எனவே, உங்களுக்குப் பாண்டவர்களின் சகவாசம் இருந்ததல்லவா? எவ்வாறாயினும், பெரும்பாலானோர் கருவிகள் ஆகுகின்ற, ஆசிரியர்கள் ஆவார்கள். நீங்கள் முதுகெலும்பாக இருக்கிறீர்கள். நீங்கள் ஆசிரியர்களுக்கும் முதுகெலும்பாக இருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவருக்கேயுரிய சொந்தப் பாகம் உள்ளது. எவ்வாறாயினும், வெளிநாடுகளில், பாண்டவர்களும் ஆசிரியர்களாக இருக்கும் சிறப்பியல்பு உள்ளது. பாரதத்தில் வெகுசில பாண்டவர்களே ஆசிரியர்கள் ஆகியுள்ளார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள், தமது முகச்சாயல்களில் தந்தையின் காட்சியைக் கொடுப்பவர்கள், தமது முகச்சாயல்களினூடாகத் தெளிவான எதிர்காலத்தைக் காட்டுபவர்கள் என பாப்தாதா எப்போதும் கூறுகிறார். எனவே, நீங்கள் அத்தகைய ஆசிரியர்கள் தானே? உங்களைப் பார்க்கும் எவரும் பாப்தாதாவின் பராமரிப்பை அனுபவம் செய்ய வேண்டும். இறைவனின் நற்குணங்களும், இறை சக்திகளும் உங்களின் முகங்களில் தென்பட வேண்டும். அவர் உங்களின் வார்த்தைகளினூடாகப் புலப்பட வேண்டும். இன்ன ஆசிரியர் இதைச் சொன்னார் என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. பாப்தாதா இந்த அனுபவத்தை ஆசிரியர்களின் முகச்சாயல்களினூடாக வழங்கினார். எல்லோருடைய தொடர்பையும் தந்தையுடன் இணைப்பதே, ஆசிரியர்களின் கடமையாகும். ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் ‘பாபா’ என்ற வார்த்தை வெளிப்பட வேண்டும்.
மிக நல்ல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், அவர்கள் தனிப்பட்ட புத்துணர்ச்சியைப் பெறும்போது, அவர்களுக்கு நல்ல அனுபவங்கள் ஏற்படுகின்றன. குழுக்களின் பெறுபேறு நன்றாக இருந்தது. அது நல்லது.
தமது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் சகல மேன்மையான பிராமண ஆத்மாக்களுக்கும், தமது அலௌகீகப் பிறந்தநாளில் அலௌகீக தெய்வீகப் பணியைச் சதா செய்கின்ற மேன்மையான ஆத்மாக்களுக்கும் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சதா சொந்தமாக இருப்பதுடன், சதா ஒரேயொருவரை நினைவுசெய்வதுடன் (ஏக்நாமி) சகல பொக்கிஷங்களினதும் சிக்கனத்தின் அவதாரங்களாக இருப்பவர்களுக்கும், தமது ஒவ்வோர் ஆசீர்வாதத்தையும், ஆஸ்தியையும் தமது வாழ்க்கையின் மூலம் வெளிப்படுத்துவதுடன், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பேணுபவர்களுக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு, அலௌகீகப் பிறந்த நாளுக்காக பாப்தாதாவின் வாழ்த்துக்களும், அன்பும், நினைவுகளும், நமஸ்தேயும்.
தாதிகளிடம்: (தாதிஜி பாப்தாதாவிற்கு அவரின் பிறந்த நாளுக்காகப் பற்பல வாழ்த்துக்களைத் தெரிவித்தார்) இன்று, நீங்கள் எல்லோரும் மாலையில் கோர்க்கப்பட்டிருந்தீர்கள். பாபா மாலையை நினைவு செய்தார். ஸ்தாபனையின் ஆதி இரத்தினங்களான நீங்கள் அந்த மாலையின் மணிகளாக இருந்தீர்கள். நீங்கள் ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருந்தது நல்லதே. நீங்கள் பராமரிப்பதற்குக் கருவிகள் ஆகினீர்கள். இப்போது நீங்கள் தந்தையுடன் செல்வதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். பாப்தாதா மட்டுமே வாயில்களைத் திறப்பாரா? (இல்லை). அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். வாருங்கள், எங்களால் வாயில்களைத் திறக்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் சேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்களே பௌதீக ரூபத்தில் கருவிகள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். அதனால், நீங்கள் பௌதீக ரூபத்தில் உங்களின் பணியைப் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லோரும் தற்காலத்தில் யாரைப் பார்க்கிறார்கள்? எல்லோருடைய பார்வையும் யார் மீது வீழ்கிறது? அது உங்கள் எல்லோரின் மீதே வீழ்கிறது. கருவிகள் ஆகியுள்ள உங்கள் எல்லோரின் மீதும் எல்லோருடைய பார்வையும் வீழ்கிறது. பாபா எல்லோரையும் தனது கண்களில் இருத்தியுள்ளார். தந்தையின் பார்வை குறுகியதல்ல. அவரிடம் எல்லையற்ற பார்வை உள்ளது. அதனால், நீங்கள் எல்லோரும் அவரின் பார்வையில் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் கண்ணின் மணிகள். மிகவும் நல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பாகத்தை நடிக்கிறீர்கள். நீங்கள் அதை நடிக்க வேண்டியுள்ளது. நீங்கள் நாடகத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? மிகவும் நல்லது.
ஆசீர்வாதம்:
நீங்கள் தற்காலிக ஆதாரங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, மிகச்சரியான முயற்சியாளராக ஒரேயொரு தந்தையை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்வீர்களாக.முயற்சி செய்வதென்றால், உங்களின் முயற்சியை உங்களின் ஆதாரமாக்கி, ஒரே தவறைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் உங்களால் செய்ய முடியும் என்பதல்ல. மிகச்சரியான முயற்சியாளர் என்றால், உண்மையான மனிதராகி, தனது இரதத்தைச் செயற்பட வைப்பவர். இப்போது, தற்காலிகமான ஆதாரங்களைக் கைவிடுங்கள்! சில குழந்தைகள், தந்தையைத் தமது ஆதாரம் ஆக்குவதற்குப் பதிலாக, எல்லைக்குட்பட்ட விடயங்களைத் தமது ஆதாரம் ஆக்கிக் கொள்கிறார்கள். உங்களின் சுபாவம் அல்லது சம்ஸ்காரங்கள், இக்கட்டான சூழ்நிலைகள் எவையாக இருந்தாலும், அந்தத் தற்காலிக ஆதாரங்கள் அனைத்தும் பகட்டுக்காக மட்டுமே. அவை ஏமாற்றக்கூடியவை. ஒரேயொரு தந்தையின் ஆதாரமே, உங்களின் பாதுகாப்புக் குடை ஆகும்.
சுலோகம்:
ஞானம் நிறைந்த ஒருவர், தொலைவிலிருந்தே மாயையை இனங்கண்டு, தன்னைச் சக்திசாலி ஆக்கிக் கொள்கின்றார்.