13.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தேவர்களாக வேண்டும் எனவே மாயையின் குறைபாடுகளைத் துறவுங்கள். கோபப்படுதல், எவரையேனும் அடித்தல், எவரையேனும் தொந்தரவு செய்தல், தீய நடத்தையில் ஈடுபடுதல், களவெடுத்தல் போன்றன அனைத்தும் மகா பாவங்களாகும்.

கேள்வி:
எக் குழந்தைகளால் இந்த ஞானத்தில் மிகவும் விரைவாக முன்னேறிச் செல்ல முடியும்? இழப்பை அனுபவம் செய்பவர்கள் யார் ?

பதில்:
தமது கணக்கை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதை அறிந்தவர்களால் இந்த ஞானத்தில் மிகவும் விரைவாக முன்னேறிச் செல்ல முடியும். ஆத்ம உணர்வு அற்றவர்கள் இழப்பை அனுபவம் செய்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: வியாபாரிகளிடம் கணக்கு வைத்திருக்கும் வழக்கம் உள்ளது. ஆகையால் இங்கும், அவர்களால் மிகவும் விரைவாக முன்னேறிச் செல்ல முடியும்.

பாடல்:
ஓ மனிதனே, உனது இதயக் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்!

ஓம் சாந்தி.
ஆன்மீக நடிகர்களான, குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை விளங்கப்படுத்துகின்றார், ஏனெனில் இந்த எல்லையற்ற நாடகத்தில் ஆத்மாக்களே பாகங்களை நடிக்கின்றார்கள். பாகங்கள் மனிதர்களுக்கானதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். மக்கள் வேதங்களையும், சமயநூல்களையும் கற்றுச் சிவனை வழிபட்ட போதிலும், தந்தை கூறுகின்றார்: அவற்றின் மூலம் எவராலும் என்னை அடைய முடியாது. ஏனெனில் பக்தி மார்க்கம் கீழ் இறங்கும் பாதையாகும். இந்த ஞானத்தின் மூலமே சற்கதி கிடைக்கின்றது. ஆகையால் நீங்கள் கீழிறங்குவதிலும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இது எவருமே அறியாததொரு நாடகமாகும். அவர்கள் சிவலிங்கத்தை வழிபடும் போது, அதனை அவர்கள் பிரம்ம தத்துவம் என அழைப்பதில்லை. எனவே, அவர்கள் யாரை வழிபடுகின்றார்கள்? அவர்கள் அதனைக் கடவுள் எனக் கருதி அவரை வழிபடுகின்றார்கள். நீங்கள் முதன்முதலில் வழிபட ஆரம்பித்தபோது, நீங்கள் வைரத்தினாலான சிவலிங்கங்களை உருவாக்கினீர்கள். அதன் பின்னர் நீங்கள் ஏழைகளாகியதால், நீங்கள் அவற்றைக் கற்களில் செய்தீர்கள். அந்த நேரத்தில் வைர சிவலிங்கத்தின் பெறுமதி 4000 அல்லது 5000 ரூபாய்களாகவே இருந்தன. இப்பொழுது அவற்றின் பெறுமதி 500,000 அல்லது 700,000 ரூபாய்களாக இருக்கலாம். அப்பொழுது பயன்படுத்திய வைரங்கள் இப்பொழுது கிடைப்பது மிகவும் அரிதாகும். மக்கள் கற்புத்திகளைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் இந்த ஞானம் எதுவும் இல்லாததால், அவர்கள் கற்களை வழிபடுகின்றார்கள். உங்களுக்கு இந்த ஞானம் இருக்கும் போது, நீங்கள் எவரையும் வழிபடுவதில்லை. இப்பொழுது நீங்கள் உங்கள் முன்னிலையில் உயிருள்ள ரூபத்தில் உள்ளவரை நினைவு செய்கின்றீர்கள். நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழியும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். பாடலில் கூறப்பட்டது: ஓ குழந்தைகளே! ஆத்மாக்கள் உணர்வுடையவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். உயிருள்ள ஆத்மா சரீரத்தை நீங்கிச் செல்லும் பொழுது, சடலம் மாத்திரமே எஞ்சியிருக்கும். ஆத்மாக்கள் தமது சரீரத்தை நீங்கிச் செல்கின்றார்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள். ஓர் ஆத்மா சரீரம் ஒன்றிற்குள் பிரவேசிக்கும் போது, அச்சரீரம் உயிர்ப்பிக்கப்படு;கின்றது. தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் எந்தளவிற்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்திருக்கின்றீர்கள் என உங்களுக்குள் பாருங்கள். உங்களுக்குள் ஏதாவது விகாரங்கள் உள்ளனவா? களவெடுத்தல் போன்ற அசுரத்தனம் ஏதாவது உள்ளதா? அசுரத்தனங்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் விழுவதுடன் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவும் முடியாது. உங்கள் தீய பழக்கங்கள் அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக முடித்துவிட வேண்டும். தேவர்கள் என்றுமே எவருடனும் கோபப்படுவதில்லை. இங்கே, நீங்கள் அசுரர்களிடம் இருந்து அதிகளவு துன்புறுத்தல்களை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் தேவர்களின் சமுதாயத்தில் ஒருவராக ஆகுவதனால், மாயை உங்கள் எதிரி ஆகுகின்றாள். மாயையின் குறைபாடுகள் தொடர்ந்தும் வேலை செய்கின்றன. ஒருவரை அடித்தல், ஒருவருக்குத் தொந்தரவு கொடுத்தல், தீய செயல்களில் ஈடுபடுதல் போன்றன அனைத்தும் பாவங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். களவெடுத்தல் போன்றன மகாபாவமாகும். நீங்கள் தந்தையிடம் செய்திருக்கும் சத்தியம்: பாபா, உங்களைத் தவிர வேறு எவருமே என்னுடையவர் அல்ல. நான் உங்களை மாத்திரமே நினைவு செய்வேன். அவர்கள் பக்தி மார்க்கத்தில் இவ்வாறு பாடிய போதிலும், நினைவு செய்வதனால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றார்கள். அவர்கள் தந்தையைச் சற்றேனும் அறியாதிருக்கின்றார்கள். அவர் பெயரிற்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் ஒருபுறம் கூறியபோதிலும், இன்னொருபுறமோ சிவலிங்கத்தை அவர்கள் வழிபடுகின்றார்கள். இதனை நீங்கள் முதலில் மிகவும் நன்றாகப் புரிந்து கொண்ட பின்னரே, பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, மகாத்மா என யாரை அழைக்கலாம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சிறு குழந்தையானவரும், சத்தியயுகத்தின் இளவரசருமான ஸ்ரீகிருஷ்ணர் மகாத்மாவா அல்லது இன்றைய கலியுக மனிதர் மகாத்மாவா? கிருஷ்ணர் விகாரத்தினூடாகப் பிறக்கவில்லை. அது விகாரமற்ற உலகம், இது விகாரம் நிறைந்த உலகமாகும். விகாரமற்றவர்களுக்குப் பல பட்டங்களை நீங்கள் கொடுக்கலாம். ஆனால் விகாரம் நிறைந்தவர்களுக்கு எப்பட்டத்தைக் கொடுக்க முடியும்? தந்தை ஒருவரால் மாத்திரமே உங்களை மேன்மையானவர்கள் ஆக்க முடியும். அவர் அதிமேலானவர். மனிதர்கள் அனைவரும் நடிகர்கள். ஆகையால் அவர்கள் அனைவரும் நிச்சயமாகத் தமது பாகத்தை நடிப்பதற்காக வரவேண்டும். சத்தியயுகம் மேன்மையான மனிதர்களின் உலகமாகும். அங்குள்ள மிருகங்கள்கூட மேன்மையானவை ஆகும். இராவணனான மாயை அங்கு இருப்பதில்லை. அங்கே எந்தக் கீழ்த்தரமான மிருகங்களும் இருப்பதில்லை. சத்தியயுகத்தில் விகாரம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அங்கே குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே விகாரங்கள் இருக்க மாட்டாது. அங்கே யோக சக்தி மாத்திரமே உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றேன். ஆகையால் உங்களை நன்றாகச் சோதித்துக் கொள்ளுங்கள். முயற்சி செய்யாது உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகள். அதைப் போன்று தந்தையும் புள்ளியாவார். இதனையிட்டுக் குழப்பம் அடைய வேண்டியதில்லை. உங்களில் சிலர் கூறுகின்றீர்கள்: நாங்கள் பாபாவை பார்க்க விரும்புகின்றோம். தந்தை கூறுகின்றார்: உங்களால் பார்க்க முடிந்தவர்களை நீங்கள் அதிகளவு வழிபட்டிருக்கின்றீர்கள். ஆகையால், அதனைச் செய்ததால், எந்த நன்மையும் இருக்கவில்லை. நான் இப்பொழுது உங்களுக்கு அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றேன். நான் முழுப் பாகத்தினாலும் நிரம்பப்பட்டுள்ளேன். நான் பரமாத்மாவான பரமதந்தை ஆவேன். எந்த ஒரு குழந்தையும் தனது லௌகீகத் தந்தையை இவ்வாறு அழைப்பதில்லை. இவ்வாறாக ஒரேயொருவரே இவ்வாறு அழைக்கப்படுகின்றார். சந்நியாசிகளைத் தந்தையென அழைப்பதற்கு அவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதில்லை. இவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். அவரே உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். சந்நியாசிகள் இல்லறப்பாதையைப் பின்பற்றுவதில்லை. நீங்களே 84 பிறவிகளை எடுத்தவர்களெனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், அதன்பின்னர் நீங்கள் கீழிறங்க ஆரம்பித்தீர்கள். இப்பொழுது உங்களை “அதிமேன்மையானவர்’ என நீங்கள் அழைக்க முடியாது. உங்களைச் சீரழிந்தவர்களாகவே நீங்கள் கருதுகின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: உங்களுக்குள் ஏதேனும் விகாரங்கள் உள்ளனவா எனச் சோதிக்க வேண்டியதே பிரதான விடயமாகும். ஒவ்வொரு இரவும் உங்கள் அட்டவணையை எழுதுங்கள். வியாபாரிகள் எப்பொழுதும் கணக்கு வைத்திருப்பதுண்டு. அரசாங்க உத்தியோகத்தர்களால் கணக்கு வைக்க முடியாது. அவர்களுக்கு நிலையான சம்பளமே கொடுக்கப்படுகின்றது. வியாபாரிகளினால் இந்த ஞானப்பாதையில் மிகவும் விரைவாகச் செல்ல முடியும். கல்வியறிவுள்ள உத்தியோகத்தர்களால் அந்தளவிற்கு விரைவாகச் செல்ல முடியாது. வியாபாரம் செய்பவர்கள் இன்று 50 ரூபாயைச் சம்பாதித்தால், நாளை 60 ரூபாயைச் சம்பாதிக்க முடியும். சிலவேளைகளில் நட்டமும் ஏற்படுகின்றது. அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் நிலையாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்திலும், நீங்கள் ஆத்ம உணர்வில் இல்லாத போது, நீங்கள் நட்டத்தை அனுபவம் செய்கின்றீர்கள். தாய்மார்களாகிய நீங்கள் வியாபாரம் செய்வதில்லை. உங்களுக்கு, இன்னமும் இலகுவாகும். குமாரிகளாகிய உங்களுக்கும் இது இலகுவாகும். ஏனெனில் தாய்மார்கள் ஏணியில் இறங்க வேண்டியுள்ளது. அதிகளவு முயற்சி செய்வார்களை பொறுத்தவரையில், அது அவர்களின் மகத்துவம். குமாரிகளாகிய நீங்கள் விகாரத்திற்குள் செல்லவில்லை. ஆகையால் உங்களுக்குத் துறப்பதற்கு என்ன உள்ளது? ஆண்கள் சிரமப்படுகின்றார்கள். அவர்கள் தமது குடும்பத்தையும், தமது குலத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. அவர்கள் மேலே ஏறிய ஏணியிலிருந்து கீழே இறங்க வேண்டும். மாயை அவர்களை மீண்டும் மீண்டும் அறைந்து, அவர்களை வீழ்த்துகின்றாள். நீங்கள் இப்பொழுது பிரம்மகுமார், பிரம்மகுமாரிகள் ஆகியுள்ளீர்கள். குமாரிகள் தூய்மையானவர்கள். ஒரு மனைவி தனது கணவனின் மீதே அதிகளவு அன்பு கொண்டிருக்கின்றாள். நீங்கள் கணவருக்கெல்லாம் கணவரானவரையே (பரமாத்மாவையே) நினைவு செய்ய வேண்டும். ஏனைய அனைவரையும் மறக்க வேண்டும். பெற்றோருக்குத் தமது குழந்தைகளின் மீது பற்று உள்ளது. குழந்தைகள் பற்று என்பதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்த பின்னரே பற்று ஆரம்பமாகுகின்றது. முதலில் அவர்கள் தமது மனைவியை நேசிக்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் அவளை விகாரம் என்ற ஏணியில் ஏற்றுகின்றார்கள். ஒரு குமாரி விகாரமற்றவர். ஆகையால் அவளை வழிபடுகின்றார்கள். நீங்கள் பிரம்மகுமாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் முதலில் புகழுக்குரியவர்களாகவும் பின்னர் பூஜிக்கத் தகுதியானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். தந்தை உங்கள் ஆசிரியராகவும் இருப்பதனால், நீங்கள் மாணவர்கள் என்ற போதையுடன் இருக்க வேண்டும். கடவுள் நிச்சயமாக உங்களை இறைவன், இறைவிகள் ஆக்குவார். கடவுள் ஒரேயொருவரே என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய அனைவரும் சகோதரர்கள். வேறு எந்தத் தொடர்பும் இல்லை. படைப்பு பிரஜாபிதா பிரம்மாவினூடாகவே இடம்பெறுகின்றது. அதன்பின்னர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஆத்மாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எனக் கூறமுடியாது. மனிதர்களின் எண்ணிக்கையே அதிகரிக்கின்றது. ஆத்மாக்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலரும் தொடர்ந்தும் வருகின்றார்கள். இன்னமும் மேலே இருப்பவர்கள் கீழே தொடர்ந்தும் வருவார்கள். விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. அது காய்ந்து விடப் போவதில்லை. இந்த விருட்சம் ஆலமரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அத்திவாரம் இல்;லாதிருந்தாலும் விருட்சத்தின் எஞ்சிய பகுதிகள் இன்னமும் நிற்கின்றன. உங்களைப் பொறுத்தவரையிலும் அவ்வாறே இடம்பெறுகின்றது. அத்திவாரம் இல்லாதிருந்தாலும் அதன் ஓரிரு அடையாளங்கள் உள்ளன. இப்பொழுதும் அவர்கள் தொடர்ந்தும் ஆலயங்களைக் கட்டுகிறார்கள். தேவ இராச்;சியம் எப்பொழுது இருந்தது என்பதையோ அது எங்கே சென்றது என்பதையோ மனிதர்கள் அறியாதுள்ளார்கள். பிராமணர்களாகிய உங்களிடமே இந்த ஞானம் உள்ளது. பரமாத்மாவின் வடிவம் சின்னஞ்சிறியதொரு புள்ளியே என்பதைக் கூட மனிதர்கள் அறியாதுள்ளார்கள். அவரின் வடிவம் அநாதியான, எல்லையற்ற ஒளி எனக் கீதையில் எழுதப்பட்டுள்ளது. முன்னர், பலரும் தமது பக்திக்கு ஏற்றவாறு காட்சிகளைக் கண்டனர். அவர்கள் மிகவும் சிவப்பு நிறமாக ஆகுகின்றார்கள். அவர்கள் கூறுவதுண்டு: ‘போதும்! இனியும் என்னால் தாங்க முடியாது!’ அது ஒரு காட்சி மாத்திரமேயாகும். தந்தை கூறுகின்றார்: காட்சிகள் காண்பதனால் எப்பயனும் இல்லை. இங்கே நினைவு யாத்திரையே பிரதானமாகும். பாதரசம் நழுவிச் செல்வதைப் போன்றே நினைவும் மீண்டும் மீண்டும் நழுவிச் செல்கின்றது. ஒருவர் தந்தையை எவ்வளவு நினைவு செய்ய நினைத்தாலும் ஏனைய எண்ணங்கள் ஏற்படுகின்றன. இந்த நினைவிலேயே, நீங்கள் விரைந்து செல்ல வேண்டும். உங்கள் பாவங்கள் உடனடியாக அழிய மாட்டாது. அதற்குக் காலம் எடுக்கும். இப்பொழுது நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்தால், உங்கள் சரீரம் எஞ்சியிருக்க மாட்டாது. எவ்வாறாயினும், இப்பொழுது எவராலும் கர்மாதீத நிலையை அடைய முடியாது. அவ்வாறு அடைந்தால், உங்களுக்குச் சத்தியயுக சரீரம் தேவையாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். தொடர்ந்தும் உங்களைச் சோதியுங்கள்: நான் தீய நடத்தை எதிலும் ஈடுபடுகின்றேனா? நீங்கள் நிச்சயமாக ஓர் அட்டவணை வைத்திருக்க வேண்டும். அத்தகைய வியாபாரிகள் வெகு விரைவில் மிகவும் செல்வந்தராக முடியும். தந்தையிடம் ஞானம் உள்ளதால், அவர் உங்களுக்கு அதனைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் இந்த ஆத்மாவில் (பரமாத்மா) பதிந்துள்ளது. நான் முன்னைய கல்பத்தில் உங்களுக்கு கூறிய அதே ஞானத்தையே அவ்வாறாகவே இப்பொழுதும் கூறுகிறேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துவேன். வேறு எவருக்கும் தெரியாது. உங்களுக்கு இந்த உலகச் சக்கரத்தைத் தெரியும். நடிகர்கள் அனைவரும் நடிக்கின்ற பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்விதமான மாற்றங்களும்; இருக்கவோ அல்லது நடிகர்கள் எவரேனும் தனது பாகத்தை நடிக்காது விடவோ முடியாது. ஆம், ஏனைய நேரத்தில் அவர்கள் முக்தியில் இருக்கின்றார்கள். நீங்கள் சகலகலா வல்லவர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். ஏனைய அனைவரும் வீட்டில் தங்கியிருப்பார்கள், பின்னர் கீழே இறங்கி வருகின்றார்கள். அநாதியான முக்தியை விரும்புகின்றவர்கள் இங்கே வரமாட்டார்கள். அவர்கள் இறுதியில் திரும்பிச் செல்வார்கள். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் கீழே இறங்கிய பின்னர், நுளம்புக் கூட்டத்தைப் போன்று திரும்பிச் செல்வார்கள். நீங்கள் நாடகத்திற்கு ஏற்ப கற்கின்றீர்கள். பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இதனைப் பேசுபவர் சிவபாபாவே என நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். நீங்கள் எவ்வளவு மேன்மையாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது எவ்வளவு சீரழிந்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களை மேன்மையானவர் ஆக்குகின்றார். ஆகையால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் புத்துணர்ச்சி பெறவே இங்கே வருகின்றீர்கள். இந்த இடமே மதுவனம் என அழைக்கப்படுகின்றது. பாபா உங்களின் கல்கத்தாவிலோ அல்லது பம்பாயிலோ முரளியைப் பேசுவதில்லை. முரளி மதுவனத்தில் மாத்திரமே பேசப்படுகின்றது. நீங்கள் புத்துணர்ச்சி பெற வேண்டுமாயின், முரளியைச் செவிமடுப்பதற்கு நீங்கள் தந்தையிடம் வரவேண்டும். பல புதிய கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. நீங்கள் நேரடியாக முரளியைச் செவிமடுக்கும்போது அதில் உள்ள வேறுபாட்டை உணர முடியும். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லும்போது, நீங்கள் பல பாகங்களைப் பார்ப்பீர்கள். பாபா அனைத்தையும் முன்கூட்டியே கூறுவாராயின், சுவை அனைத்தும் அற்றுப் போய்விடும். அனைத்தும் நாளடைவில் வெளிப்படும். ஒரு விநாடி அடுத்ததைப் போன்றிருப்பதில்லை. தந்தை ஆன்மீகச் சேவையைச் செய்யவே வருகின்றார். ஆகையால் ஆன்மீகச் சேவையை செய்ய வேண்டியது குழந்தைகளாகிய உங்களது கடமையும் ஆகும். குறைந்தபட்சம், அனைவரிடமும் தந்தையை நினைவுசெய்து, தூய்மையாகுங்கள் எனக் கூறுங்கள்! தூய்மையிலேயே அவர்கள் தோற்றுவிடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் நினைவு செய்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். எவருமே அறியாதிருக்கின்ற எல்லையற்ற தந்தையின் நேர்முன்னிலையில் நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள். சிவபாபா மாத்திரமே ஞானக்கடல் ஆவார். சரீரதாரிகளிடமிருந்து உங்கள் புத்தியை அகற்றுங்கள். இது சிவபாபாவின் இரதமாகும். அவர்மீது நீங்கள் மரியாதை கொண்டிருக்காது விட்டால், நீங்கள் தர்மராஜிடம் மிகப் பெரிய தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நீங்கள் மூத்தவர்களின் மீதும் மரியாதை கொண்டிருக்க வேண்டும். ஆதிதேவ்வுக்கு அதிகளவு மரியாதை உள்ளது. உயிரற்ற விக்கிரகங்களின் மீது அதிகளவு மரியாதை இருக்குமாயின், உயிருள்ளவர்களின் மீது எவ்வளவு மரியாதை இருக்க வேண்டும்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைச் சோதித்து பார்த்து, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தீய பழக்கங்கள் அனைத்தையும் அகற்றுங்கள். பாபாவிற்குச் சத்தியம் செய்யுங்கள்: பாபா, நான் எத்தீய செயலிலும் எப்பொழுதுமே ஈடுபட மாட்டேன்.

2. கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டுமாயின், நினைவில் விரைந்தோடுங்கள். ஆன்மீகச் சேவையில் பிரசன்னமாகி இருங்கள். உங்கள் மூத்தவர்களின் (சீனியர்கள்) மீது மரியாதை கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
தீவிர முயற்சியாளர் ஆகி, ~~தந்தையை பின்பற்றுங்கள்|| என்ற பாடத்தை கற்றுக் கொள்வதன் மூலம், கடினமான எதனையுமே இலகுவானதாக ஆக்குபவர் ஆகுவீர்களாக.

எந்தவொரு கடினமான ஒன்றையும் இலகுவானதாக ஆக்கி, இறுதி முயற்சியில் வெற்றியீட்டுவதற்கு, நீங்கள் கற்க வேண்டிய முதலாவது பாடம், ~~தந்தையை பின்பற்றுங்கள்|| என்பதையாகும். இந்த முதற் பாடமே, இறுதி ஸ்திதிக்கு உங்களை நெருங்கச் செய்கின்றது. இப்பாடத்;தை கற்பதன் மூலம், நீங்கள் தவறுகள் செய்வதிலிருந்தும், மறப்பதில் இருந்தும் விடுபடுவதுடன் சதா தீவிர முயற்சியாளராகவும் இருப்பீர்கள். இது ஏனெனில், தந்தையை பின்பற்றுவதற்குப் பதிலாக உங்கள் சொந்த புத்தியை நீங்கள் பயன்படுத்தினால், எந்தவொரு சூழ்நிலையும் உங்களுக்கு கடினமாகவே இருக்கும். நீங்கள் பின்பற்றாததால், உங்கள் சொந்த எண்ணங்கள் என்ற பொறிக்குள் நீங்கள் சிக்கிக் கொள்வதால், அதன் பின்னர் அது உங்கள் நேரத்தையும் சக்தியையும் எடுத்துக் கொள்கிறது. தந்தையை தொடர்ந்தும் பின்பற்றினால், உங்கள் நேரம் சக்தி இரண்டும் பாதுகாக்கப்படுவதுடன், சேமிக்கப்படுகின்றது.

சுலோகம்:
நேர்மையையும் சுத்தத்தையும் கிரகிப்பதற்கு, உங்கள் சுபாவத்தை இலகுவாக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

உங்கள் மனதினால் சேவை செய்வதில் நீங்கள் எந்தளவிற்கு மும்முரமாக இருக்;கிறீர்களோ, அந்தளவிற்கு இலகுவாக நீங்கள் மாயையை வெற்றி கொண்டவர் ஆகுவீர்கள். நீங்கள் உங்களுக்கான உணர்வை மாத்திரம் கொண்டிருக்காதீர்கள், உங்கள் நல்லாசிகளாலும், தூய உணர்வுகளாலும் பிறரை மாற்றுகின்ற சேவையையும் செய்யுங்கள். உங்களுடைய பக்தி உணர்வுகள் இந்த ஞானம், அன்பு, யோகம் ஆகியவற்றுடன் சமநிலையில் இருக்கட்;டும். நீங்கள் உபகாரிகள் ஆகியுள்ளீர்கள், எனவே இப்பொழுது எல்லையற்ற உலக உபகாரிகள் ஆகுங்கள்.