13.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நடிகர்களாகிய நீங்கள் இந்த நாடகத்தில் கதாநாயக, கதாநாயகிப் பாகத்தைக் கொண்டுள்ளீர்கள். வேறு எவருமே முழுச் சக்கரத்திலும் உங்களைப் போல் கதாநாயகப் பாகத்தை கொண்டவர்கள் இல்லை.
கேள்வி:
மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்ற பரீட்சையில் யாரால் சித்தியடைய முடியும்?பதில்:
தந்தையைப் பின்பற்றி, தந்தையைப் போல் தூய்மை ஆகுபவர்களாலேயே, இந்தப் பரீட்சையில் சித்தியடைய முடியும். நீங்கள் 21 பிறவிகளுக்கான எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள், எனவே நீங்கள் நிச்சயமாகச் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், ஒவ்வொரு சக்கரத்திலும் முயற்சி செய்ய மாட்டீர்கள். அவ்வாறாயின், எவ்வாறு நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள்? நீங்கள் தூய்மை ஆகினால், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இல்லாவிட்டால் தண்டனை இருக்கும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான உங்களுடன் பாபா தனிப்பட்ட முறையில் பேசுகின்றார். எல்லையற்ற தந்தையே உங்களுடன் பேசுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவரே அனைவரிலும் இனிமையானவர். தந்தையும் இனிமையானவர், ஆசிரியரும் இனிமையானவர், ஏனென்றால் நீங்கள் இருவரிடம் இருந்தும் ஆஸ்தியொன்றைப் பெறுகின்றீர்கள். ஒரு குருவிடமிருந்து நீங்கள் பக்திக்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இங்கு நீங்கள் மூன்றையுமே ஒரேயொருவரிடம் இருந்து பெறுகின்றீர்கள். தனிப்பட்ட முறையில் அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சந்தோஷம் உங்களுக்கு உள்ளது. தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்ற, எல்லையற்ற தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த விதைகள் உயிரற்றவை, ஆனால் இந்த ஒரேயொருவரோ உயிருள்ளவர். அவர் சத்தியம், உயிருள்ளவர், பேரானந்த சொரூபம் என்று அழைக்கப்படுகின்றார். ஞானக்கடல் என்ற அவரது புகழும் உள்ளது. எவ்வாறாயினும், தாங்கள் அவரிடமிருந்து என்ன ஞானத்தைப் பெறுகிறார்கள் என எவருமே அறியார். தந்தையால் இந்த ஞானம் வழங்கப்பட்டவர்களே, பின்னர் பக்தி மார்க்கத்தில் அவருக்கு ஆலயங்களைக் கட்டியதுடன், சமயநூல்கள் போன்றவற்றையும் எழுதினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையிலேயே 5000 வருடங்களுக்கு ஒருமுறை சக்கரத்தின் சங்கமயுகம் வருகின்றது என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இது ஆன்மீகமான, அழிவற்ற, அதிமங்களகரமான சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. உண்மையில், பல மேன்மையான மனிதர்கள் இருக்கின்றார்கள், ஆனாலும், அவர்கள் ஒரு பிறவிக்கு மாத்திரம் மேன்மையானவர்களாகி, பின்னர் மத்திய தரமானவர்களாகி, அதன்பின்னர் கீழான தரத்திற்குள் வீழ்கின்றார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வளவு மேன்மையானவர்கள் எனப் பாருங்கள்! அவர்களே அதிமேன்மையானவர்கள். அவர்கள் இருவரையும் அதி மேன்மையாக்கியவர் யார்? கடவுளே அதியுயர்வானவரும், அவர் மேலே வசிக்கின்றார் என்பதுவும் நினைவு கூரப்படுகின்றது. மனித உலகில் உலகச் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியுமே அதிமேலானவர்கள். பாரதம் அதிமேலானதாக இருந்தபொழுது, அவர்கள் ஆட்சிசெய்தார்கள். எவ்வாறு அவர்கள் அந்த இராச்;சியத்தைப் பெற்றார்கள்? எவருக்குமே தெரியாது. உங்களை மிகவும் மேன்மையாக்குகின்ற தந்தையே அதி இனிமையானவர் என்பதை நீங்கள் உணர வேண்டும்! நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற அதியுயர்வான தந்தை எவ்வாறு உங்களுக்கு மிகவும் சாதாரண முறையில் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! எல்லையற்ற தந்தை பாரதத்தில் வருகின்றார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். அவர் வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பதையும், பின்னர் 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது நரகவாசிகளாகி விட்டீர்கள் என்பதையும் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். பாபா உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்கு வந்திருக்கின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், ஆத்மாக்களான நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். சதோபிரதான் ஆகாமல், எவராலுமே வீடு திரும்ப முடியாது. இல்லாவிட்டால், நீங்கள் சதோபிரதான் ஆகாமல் விட்டால், தண்டனை இருக்கும். ஆத்மாக்களே தண்டனையைப் பெறுகின்றார்கள். ஓர் ஆத்மா கருப்பையாகிய சிறையில் சரீரமொன்றை எடுத்து, தண்டனையைப் பெறுகின்றார். சிசுக்கள் பெருமளவு வருந்த வேண்டியிருக்கும். அவர்கள் விரக்தியில் கதறி அழுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் மீண்டும் பாவம் செய்ய மாட்டேன். குழந்தைகளாகிய நீங்கள் கருப்பை என்ற சிறைக்குள் செல்லப் போவதில்லை. அங்கு பாவங்கள் இல்லாத காரணத்தால், ஒரு கருப்பை மாளிகையைப் போன்றுள்ளது. இங்கு இந்த இராவண இராச்சியத்தில் பாவச் செயல்கள் செய்யப்படுவதால், அவர்கள் இராம இராச்சியத்தை விரும்புகின்றார்கள். எவ்வாறாயினும், இராவண இராச்சியம் என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிப்பதனால், அவன் அழிந்திருக்க வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அவனை எரிக்கின்றார்கள், ஆகவே அவன் மரணிக்கவில்லை என்பதே அதன் அர்த்தம். எனவே இவை அனைத்தையும் செய்வதால், என்ன நன்மை இருக்கின்றது? அம்மக்கள் சென்று, இலங்கையைக் கொள்ளை அடிக்கின்றனர். (தென் இந்தியாவில்) குறிப்பிட்டதொரு மரத்தில் மஞ்சள் நிற ஒட்டுண்ணி வளரும் பொழுது, அவர்கள் அதனைத் தங்கமெனக் கருதி, சென்று சேகரிப்பார்கள். உண்மையில், இந்த நேரத்தில் நீங்களே இராவணனை வெற்றி கொண்டு, சத்திய யுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அஜ்மீரில் அவர்கள் வைகுந்தத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பின்னர் அங்கே நாங்கள் வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளில் ஆட்சிசெய்வோம். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யோக சக்தியின் மூலம் விகாரம் அற்றவர்களாகவும், சதோபிரதானாகவும் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகி, பின்னர் அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். அங்கு துன்பம் எதுவுமே இருக்காது. இந்த நாடகத்தில் நீங்கள் பிரதான கதாநாயக, கதாநாயகிப் பாகத்தைக் கொண்டுள்ளீர்கள் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். இது இராச்சியத்தை வெற்றி கொள்வதும், அதனை இழப்பதும் பற்றிய நாடகம் ஆகும். நீங்களே கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஆவீர்கள். “கதாநாயகர்” என்றால் பிரதான நடிகர் என்று அர்த்தம். சத்திய யுகத்தில் நீங்கள் தூய இல்லற ஆச்சிரமத்தில் வசித்தீர்கள், ஆனால் இப்பொழுது கலியுகத்தில் தூய்மையற்ற இல்லறத்தின் செயற்பாடுகள் உள்ளன. பாபா இப்பொழுது உங்களைச் சத்திய யுகத்திற்கு அனுப்புவார். அங்கு இலக்ஷ்மி நாராயணனின் சூரிய-வம்ச இராச்சியம் இருக்கும். அவர்கள் மறுபிறவி எடுத்து, சந்திர வம்சத்தவர் ஆகுவார்கள். சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கும். இப்பொழுது பலமில்லியன் கணக்கான மக்கள் இருக்கின்றார்கள். இதனால் தான் குடும்பக் கட்டுபாடு இருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றார்கள். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கொண்டிருப்பவர்கள் குழந்தைகளைப் பெறுவதை நிறுத்த மாட்டார்கள். சனத்தொகையைக் குறைப்பது தந்தையின் செயல் என்று நீங்கள் மக்களுக்குக் கூற முடியும். அதிகளவு மக்கள் உள்ளபொழுது, அவர்கள் மரணிப்பார்கள் என்பது தந்தைக்கு தெரியும். நான் அனைவரையும் அழித்து, ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வந்திருக்கின்றேன். அங்கு 900,000 பேர் மாத்திரமே இருப்பார்கள். இது ஒரு மந்திர வித்தை, இல்லையா? கலியுக இரவானது முடிவடைந்து, பகல் ஆரம்பமாகும். அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றார்கள். தந்தைக்கோ எந்தச் செலவும் கிடையாது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு, அனைத்துமே முடிவடைந்து விடும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மக்கள் செய்கின்ற திட்டங்களும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. யாதவர்கள் ஐரோப்பிய வாசிகளும், பாண்டவர்களும், கௌரவர்களும் பாரத வாசிகளும் ஆவர். யாதவர்கள் ஒரு பக்கத்தில் இருக்கிறார்கள், மற்ற இரு சகோதரர்களும் இந்தப் பக்கத்தில் உள்ளார்கள். பாரதத்தில் சகோதரத்துவம் இருக்கின்றது. இந்தச் சகோதரத்துவம் கலியுகத்தினுடையது. இப்பொழுது நீங்கள் அதிலிருந்து சங்கமயுகத்திற்கு வந்து விட்டீர்கள். கௌரவர்களும், பாண்டவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தார்கள். ஆதியில், ஆத்மாக்கள் சகோதரர்கள். பாபா ஆத்மாக்களாகிய உங்களையே முதலில் சந்தித்தார். ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவர்கள் ஒரு பரிசை வெல்கின்றார்கள். உங்களுடையது நினைவிற்கான ஓட்டப் பந்தயம். இது சமயநூல்கள் எதனிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகின்றார்: என்னுடன் யோகத்தைக் கொண்டிருங்கள்! இந்த யோக யாத்திரை இப்பொழுது மாத்திரமே இடம்பெறுகிறது. வேறு எவராலும் உங்களுக்கு இந்த யாத்திரையைக் கற்பிக்க முடியாது. சத்திய யுகத்தில் ஆன்மீக யோகமோ அல்லது பௌதீக யோகமோ கிடையாது. அங்கு அதற்கான அவசியம் கிடையாது. இந்த நேரத்திலேயே இவை அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தின் ஒவ்வொரு விநாடியின் செயற்பாடும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது சுயதரிசனச் சக்கரம் என்றழைக்கப்படுகிறது. உண்மையில், இப்பொழுது நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகியுள்ளீர்கள். உங்களிடம் 84 பிறவிகளினதும், உலகச் சக்கரத்தினதும் ஞானம் உள்ளது. சுயம் என்றால் ஆத்மா ஆவார். ஆத்மாவிடம் இந்த ஞானம் உள்ளது. ஆகவே குழந்தைகளான நீங்கள் இப்பொழுது சுயதரிசனச் சக்கரதாரிகளாகி விட்டீர்கள். நான் உங்களை ஆன்மீகக் குழந்தைகள், சுயதரிசனச் சக்கரதாரிகள், பிராமணக் குல அலங்காரங்கள் என்று அழைக்கின்றேன். புதியவர்கள் எவராலும் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. உங்களில் பலர் ஓடிவிடுகின்ற காரணத்தினால், அந்த ஆபரணங்களை உங்களுக்கு வழங்க முடியாதுள்ளது. இப்பொழுது உங்களுடைய புத்தியில் 84 பிறவிச் சக்கரம் இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் முதல் இலக்கத்தைக் கோருவீர்கள். முதலில் நீங்கள் வீட்டுக்குச் சென்று, பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் சத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஆகுவீர்கள். இது புரிந்து கொள்வதற்கான விடயம். இந்தளவையேனும் நீங்கள் நினைவு செய்தால், அது உங்கள் பெரும் பாக்கியமாகும். சொற்ப நேரமே எஞ்சியுள்ளது, பின்னர் நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வோம். அவர்கள் சமயநூல்களில் பல கட்டுக்கதைகளை எழுதியுள்ளார்கள். அனைவராலும் நேசிக்கப்படுகின்ற, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிக் கூட, அவர் பாம்பால் தீண்டப்பட்டார், இன்ன இன்ன நடைபெற்றது என்றெல்லாம் அவர்கள் எழுதியுள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்ததால், அவர் இராதையை விடவும் அதிகளவு நேசிக்கப்படுகின்றார். உண்மையில் அது இந்த ஞான விடயம். இந்த நேரத்தில் நீங்கள் ஞானதேவரும், தேவியரும் ஆவீர்கள். நீங்கள் கற்று, பின்னர் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுகின்றீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் என்ன என்று உங்களிடம் எவரேனும் கேட்கும்பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதாகும். நாங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுத்து, சூத்திரர்கள் ஆகினோம். இப்பொழுது நாங்கள் பிராமணர்களாகி விட்டோம், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். எங்களுக்குக் கற்பிப்பவர் ஞானக்கடலான பரமாத்மாவே அன்றி, ஸ்ரீகிருஷ்ணர் அல்லர். வேறு எவராலும் இந்த இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் வந்து, ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களிடம் இருந்து இராச்சிய பாக்கியத்தைக் கோருவோம். நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். இந்த மகாபாரத யுத்தத்தின் மூலமாக மாத்திரமே, சுவர்க்கத்திற்கான வாயில்கள் திறக்கப்படவுள்ளன. பாபா வந்து இராஜயோகத்தைக் கற்பிப்பதனால், நிச்சயமாகச் சுவர்க்கம் தேவைப்படுகின்றது. நரகம் அழிக்கப்பட உள்ளது. சமயநூல்களில் இம்மகா யுத்தம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பாபா இருமினார்) இருமியது யார்? சிவபாபாவா அல்லது பிரம்மாபாபாவா? (பிரம்மா) இது கர்ம வேதனை. இது இவர் முழுமை அடையும் வரையில், இறுதிவரை தொடரும். பின்னர் இந்தச் சரீரம் இருக்காது. அதுவரை ஏதோவொன்று தொடர்ந்தும் இடம்பெறும். இது கர்மவேதனை என்று அழைக்கப்படுகின்றது. சத்திய யுகத்தில் கர்ம வேதனை இருக்காது; நோய்கள் போன்றனவும் இருக்காது. நாங்கள் என்றும் ஆரோக்கியமாகவும், என்றும் செல்வம் நிறைந்தவர்களாகவும் ஆகுகின்றோம். நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதனால், சதா முகமலர்ச்சியுடன் இருக்கின்றோம். அரைக் கல்பத்தின் பின்னர் துன்பம் ஆரம்பம் ஆகுகின்றது. அதிலும் பக்தி கலப்படம் ஆகும்பொழுது, அதிகத் துன்பம் ஏற்படுகிறது. அப்பொழுது மாத்திரமே அவர்கள் துன்பத்தில் கதறியழுவதுடன், விநாசமும் இடம்பெறுகிறது. இப்பொழுது நீங்கள் தனிப்பட்ட முறையில் பாபாவைச் செவிமடுப்பதனால், அதிகளவு களிப்படைகிறீர்கள். அந்த ஒரேயொருவரே உங்கள் உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும், உண்மையான சற்குருவும் என்பதை நீங்;கள் அறிவீர்கள். இந்தப் புகழ் ஒரேயொரு அசரீரியான தந்தைக்கு மாத்திரமே உரியது. அவரே அனைவரிலும் அதிமேன்மையான கடவுள். அந்தத் தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். அந்த ஒரேயொருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற, ஒரு சாதுவோ அல்லது மகாத்மாவோ அல்ல. அவர் என்றுமே உங்களைத் தனது பாதங்களில் விழுந்து வணங்குவதற்குக் கூட அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுடைய கீழ்ப்படிவான சேவகன். என்னிடம் பாதங்கள் உள்ளனவா? யாரை நீங்கள் விழுந்து வணங்குகிறீர்கள்? பல குருமார்களை விழுந்து வணங்கியதால், உங்கள் நெற்றி தேய்ந்து விட்டது. பக்தி மார்க்கத்தில், நடைபெற்றவை இந்த ஞான மார்க்கத்தில் நடைபெற முடியாது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் “ஓ இராமா!” எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: இங்கு நீங்கள் எந்தச் சத்தமும் செய்யக்கூடாது. உங்களை ஆத்மாக்களாகக் கருதி, மௌனமாகத் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் “ஓ சிவனே!” என்று கூட கூறலாகாது. நீங்கள் சப்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். குழந்தைகளான நீங்கள் உள்ளார்த்தமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். இவரே தனது பாபா என்பதை ஆத்மா அறிவார். அவரை நீங்கள் மறைமுகமான வழியில் உள்ளார நினைவு செய்ய வேண்டும். இது ஓசையற்ற ஓதுதல் எனப்படுகின்றது. நீங்கள் அவரைச் சப்தமிட்டு நினைவு செய்யக்கூடாது. நீங்கள் ஒரு மாலையின் மணிகளை (ஒரு சிறிய பையில்) இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ உருட்ட முடியும்; இதுவும் அதே விடயமாகும். மாலையின் மணிகளை இரகசியமாக உருட்டுவது மறைமுகமான விடயமல்ல. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்வதே மறைமுகமான விடயம். அவர் சிவபாபாவும், மற்றவர் பிரஜாபிதா பிரம்மாவும் ஆவார். நீங்கள் உங்களை அலங்கரிப்பதற்காக இரட்டை இயந்திரங்களைப் பெறுகின்றீர்கள். இந்த ஆத்மாவும் அலங்கரிக்கப்படுகின்றார். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் பிறந்த வீட்டிற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து விஷ்ணு தாமமான, உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வீர்கள். இது இரட்டைப் பிறந்த வீடாகும்: உலகரீதியானது அல்;ல. அது உங்கள் லௌகீக வீடு, மற்றையது இவ்வுலகிற்கு அப்பாற்பட்டது (ஆத்ம உலகம்). இந்தச் சூட்சுமத் தந்தையை எவருக்கும் தெரியாது. இதனால்தான் நீங்கள் ஏன் இந்தத் தாதாவின் படத்தை இங்கு வைத்திருக்கின்றீர்கள் என அவர்கள் வினவுகின்றார்கள். இந்தச் சரீரத்தின் மூலமாகவே பரமாத்மா கற்பிக்கின்றார் என்பதை எவருக்கும் தெரியாது. இவர் ஒரு பூஜிப்பவராக ஆகியவரும், தனது பல பிறவிகளின் இறுதியில் உள்ளவரும் ஆவார். இவர் தனது பல பிறவிகளின் இறுதியில், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரில் இருந்து பூஜிப்பவர் ஆகினார். இவர் ஓர் அரசரிலிருந்து பிச்சைக்காரர் ஆகிவிட்டார். பாபா விளங்கப்படுத்துகின்றார்: நான் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இருப்பினும், இது எவரது புத்தியிலும் புகுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் ஓர் எருதை வைத்துள்ளார்கள். எவ்வாறாயினும், சங்கரர் சூட்சும உலகில் வசிப்பவர்; சூட்சும உலகில் எருதுகள் போன்றன கிடையாது. ஒரு காளைமாடு ஆணைக் குறிக்கின்றது. அவர்கள் பாக்கிய இரதமான, பகீரதனை ஓர் ஆணாகவே காட்டுகின்றார்கள். மனிதர்கள் முற்றாகவே விவேகம் அற்றவர்கள் ஆகியுள்ளார்கள்! தந்தை கூறுகின்றார்: இராவணன் உங்களை விவேகம் அற்றவர்கள் ஆக்கினான். எங்களுக்கு இராம இராச்சியம் வேண்டும் என மக்களே கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், சத்திய யுகத்திலேயே இராம இராச்சியம் இருக்கின்றது. கலியுகத்தில் இது இராவண இராச்சியமாகும். பாரதத்திலேயே இராமரும், இராவணனும் உள்ளார்கள். சிவனின் பிறந்தநாளும் பாரதத்திலேயே கொண்டாடப்படுகின்றது. இராவணன் எதிரி எனும் காரணத்தினால், அவர்கள் அவனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. சந்தோஷத்தை வழங்குபவர்களின் பிறந்த நாட்களே கொண்டாடப்படுகின்றன. சிவபாபா இப்பொழுது வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தை வழங்கி, உங்களை இராவணனை வெற்றி கொள்ளச் செய்கின்றார். இராவணன் என்றால் என்ன என்பதையும், அவன் எப்பொழுது வருகின்றான் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மிகச்சரியான கணிப்பீடு காட்டப்பட்டுள்ளது. இவ்விடயங்களை மிக நன்றாகக் கிரகியுங்கள். அவற்றை மறந்து விடாதீர்கள்! நீங்கள் முகில்களாக ஞானக்கடலிடம் வந்துள்ளீர்கள். உங்களை நீங்கள் நிரப்பிக் கொண்டு சென்று, பின்னர் பொழிய வேண்டும். இதனை நீங்கள் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்வது அவசியம். இங்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் பாபாவுக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வீட்டில் எல்லையற்ற தந்தைக்கு முன்னால் அமர்ந்திருப்பதாக உணர்கிறீர்கள். நீங்களே பிராமணக் குலத்தின் அலங்காரங்கள் ஆவீர்கள். மம்மாவும், பாபாவும் கூட இங்கேயே இருக்கின்றார்கள். பாபா எங்கள் ஆசிரியராக எங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் சற்குருவாக அவர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அந்தக் குருமார்கள் எவரையும் தம்முடன் அழைத்துச் செல்வதில்லை. தனது சீடர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டியது ஒரு குருவினுடைய கடமை. உண்மையில், அவர்கள் சீடர்கள் கூட இல்லை. அவர்களோ சந்நியாசிகள்; ஏனையோர் இல்லறத்தவர்கள். ஆகவே எவ்வாறு அவர்கள் சீடர்களாக முடியும்? நீங்கள் சிவபாபாவையும் பிரம்மபாபாவையும் பின்பற்றுகின்றீர்கள். இவர் அவ்வாறு ஆகுவதால், நீங்களும் அதேபோல் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகி, பாபாவிடம் செல்வோம். பாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நீங்களே உண்மையாகப் பின்பற்றுபவர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். இப்பொழுது இந்த ஞானச் சிதையில் அமருங்கள், நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அந்நேரத்தில், ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானவை. பாபாவைப் பின்பற்றுபவர்கள் ஆகுங்கள்! நீங்கள் தூய்மை ஆகுகின்ற அளவிற்குச் சிறந்ததோர் அந்தஸ்தை அடைவீர்கள். இல்லாவிட்டால் தண்டனை இருக்கும். நிச்சயமாக நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுவதால், ஏன் முயற்சி செய்யக்கூடாது? இப்பொழுது நீங்கள் முயற்சி செய்யவில்லை எனில், கல்பம் கல்பமாக முயற்சி செய்ய மாட்டீர்கள். பின்னர் எவ்வாறு உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? இது ஓர் எல்லையற்ற, பெரிய வகுப்பு. மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான ஒரு பரீட்சை மாத்திரமே உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையை உண்மையாகப் பின்பற்றுபவர்களாகி, முழுமையாகத் தூய்மை ஆகுங்கள். 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கோருவதற்கு முயற்சி செய்யுங்கள்.2. உங்கள் வாயால் “ஓ சிவபாபா!” என்று கூட கூறாதீர்கள். சப்தத்திற்கு அப்பால் செல்லுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை உள்ளார்த்தமாக நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நற்குணங்களின் சொரூபமாகி, உங்களின் அரச குடும்பத்தை சதா உணர்ந்தவர்களாக இருப்பதன் மூலம் உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியில் இருப்பீர்களாக.அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒருபோதும் தமது பாதங்களை நிலத்தில் அல்லது அழுக்கில் வைக்க மாட்டார்கள். இங்கே சரீர உணர்வே அழுக்கு. அதனால் அந்த அழுக்கிற்குள் கீழே செல்லாதீர்கள். ஆனால் சதா அதற்கு மேலே உயரத்தில் இருங்கள். அதிமேலான தந்தையின் அரச குடும்பத்தில் உள்ள குழந்தைகள் நீங்கள், அதியுயர்ந்த ஸ்திதியில் இருப்பவர்கள் என்ற உணர்வை சதா கொண்டிருங்கள். உங்களின் பார்வை கீழே செல்லாது. சதா உங்களை நற்குணங்களின் சொரூபமாகப் பார்த்து உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியில் நிலைத்து இருங்கள். பலவீனங்களைப் பார்க்கும்போது, சதா அவற்றை முடித்து விடுங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்தால், அவை உங்களுடனேயே இருந்துவிடும்.
சுலோகம்:
இராஜரீகமாக இருக்கும் ஒருவர், தனது மலர்ச்சியான, சந்தோஷமான முகத்தால் தூய்மையின் இராஜரீகத்தின் அனுபவத்தைக் கொடுப்பார்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
பௌதீகத்திற்கும் சூட்சுமத்திற்கும் இடையில் உள்ள எந்தவொரு வேறுபாடும் முடிவடையும்போது, நீங்கள் உங்களின் முழுமை ஸ்திதிக்கு நெருக்கமாக வருவீர்கள். அந்த பௌதீக உலகம், அவ்யக்த உலகமாக மாறிவிடும். பாப்தாதா பௌதீக ரூபத்திற்குள் வரும்போது, அவர் அவ்யக்த உலகின் அவ்யக்த ரூபத்தின் தாக்கத்தை வைத்திருப்பதுடன், குழந்தைகளான உங்களுக்கும் அந்த அனுபவத்தை வழங்குகிறார். அதேபோல், நீங்களும் உங்களின் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும்.