13.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இலக்கையும், உங்கள் இலக்கை உங்களுக்குக் கொடுக்கின்ற தந்தையையும் நினைவுசெய்தால், உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க இயலும். எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதும், எவரையேனும் இகழ்வதும் அசுரத் தன்மைகளாகும்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் மீது, தந்தை அதியுயர்ந்த அன்பைக் கொண்டிருப்பதைக் குறிப்பது என்ன?பதில்:
நீங்கள் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற இனிமையான கற்பித்தல்களே அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் அதியுயர்ந்த அன்பின் அடையாளமாகும். தந்தையின் முதற் கற்பித்தல்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதன் மூலம் தவறான எதனையும் செய்யாதீர்கள். நீங்கள் மாணவர்கள் என்பதால் சட்டத்தை நீங்கள் உங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. உங்கள் உதடுகளில் இருந்து, கற்கள் அன்றி, இரத்தினங்கள் மாத்திரமே எப்பொழுதும் வெளிப்படட்டும்.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களால் இப்பொழுது அவர்களை (இலக்ஷ்மி நாராயணனை) மிகவும் தெளிவாகப் பார்க்க முடிகின்றது. அதுவே உங்களது இலக்கும், இலட்சியமும் ஆகும். அதாவது, நீங்கள் அவர்களின் குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. இதனாலேயே நீங்கள் தொடர்ந்தும் அவர்களையே பார்த்து, சிந்திக்க வேண்டும்: நாங்கள் அவர்களைப் போன்று ஆக வேண்டும். அவர்களின் புகழை நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள். உங்கள் சட்டைப்பைகளில் அவர்களின் படத்தை வைத்திருப்பதனால், நீங்கள் அதிகளவு சந்தோஷம் அடைவீர்கள். உங்களுக்குள் குழப்பங்கள் இருக்கக்கூடாது. அதுவும் சரீர உணர்வு என்றே அழைக்கப்படுகின்றது. நீங்கள் இலக்ஷ்மியையும் நாராயணனையும் ஆத்ம உணர்வில் பார்த்தால், நீங்கள் அவர்களைப் போன்றவர் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆகையால், நீங்கள் நிச்சயமாக அவர்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் அவர்களைப் போன்றவர்களாக வேண்டும் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். “மத்தியாஜிபவ” ஆகுங்கள். அவர்களைப் பார்த்து நினைவுசெய்யுங்கள். உதாரணமாக ஒருவரிடம் ‘நீங்கள் ஓர் எருமை’ என்று எண்ணுமாறு கூறப்பட்டது. அதன் பின்னர் அவன் தான் உண்மையிலேயே ஓர் எருமை என நம்பத் தொடங்கினான். நீங்கள் அவ்வாறு (இலக்ஷ்மி நாராயணன்) ஆக வேண்டும் என்பதே உங்கள் இலக்கும், இலட்சியமும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் எப்படி அவ்வாறு ஆகுவீர்கள்? தந்தையை நினைவுசெய்வதன் மூலமாகும். நீங்கள் ஒவ்வொருவருமே உங்களிடம் வினவ வேண்டும்: நான் உண்மையிலேயே அவர்களைப் பார்த்து, தந்தையை நினைவுசெய்கின்றேனா? பாபா உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இயன்றவரை, தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களால் சதா நினைவில் நிலைத்திருக்க முடியாது, எனினும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். உங்கள் வீட்டுவேலைகளைச் செய்யும்போது இலக்ஷ்மி நாராயணனை நினைவுசெய்தீர்களாயின், நிச்சயமாகத் தந்தையையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்களாயின் அவர்களையும் நிச்சயமாக நினைவுசெய்து, அவர்களைப் போன்றாக வேண்டும் என்றும் நினைப்பீர்கள். நாள் முழுவதும் இந்த அக்கறையைக் கொண்டிருக்க வேண்டும், அப்பொழுது நீங்கள் ஒருவரையொருவர் இகழ மாட்டீர்கள். ‘இவர் இவ்வாறானவர், இன்னார் அவ்வாறானவர்’. அந்த விடயங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. ஆகையால் அவர்கள் முன்னர் இருந்தவாறே, எப்பொழுதும் இருக்கின்றார்கள். அவர்களை நினைவுசெய்யுங்கள் என உங்களுக்கு மிகவும் இலகுவான வழிகளில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவீர்கள். இங்கே, நீங்கள் அவர் (பாபா) முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நிச்சயமாக ஒவ்வொருவரின் வீட்டிலும் இலக்ஷ்மி நாராயணனின் இந்தப் படம் இருக்க வேண்டும். அது அத்தகைய மிகச்சரியானதொரு படமாகும். நீங்கள் அவர்களை நினைவுசெய்யும்போது, பாபாவை நினைவுசெய்வீர்கள். ஏனைய விடயங்கள் பற்றி பேசுவதற்குப் பதிலாக. நாள் முழுவதும் தொடர்ந்தும் இவ்விடயங்களைப் பற்றியே பேசுங்கள். ஒருவரை இகழ்வதும், இன்னார் இவ்வாறானவர் என்று கூறுவதும் முரண்பாடுகளை விளைவிப்பதாகும். உங்கள் புத்தியை நீங்கள் தெய்வீகமாக்க வேண்டும். நீங்கள் பிறரைப் புண்படுத்துகின்ற, பிறரை இகழ்கின்ற அல்லது தீய நடத்தை உடைய சுபாவத்தைக் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் அரைக்கல்பமாக அதனையே செய்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அத்தகைய இனிமையான கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். இதனை விட உயர்ந்ததோர் அன்பு இருக்க முடியாது. ஸ்ரீமத்தை மீறுவதன் மூலம் நீங்கள் எந்தத் தீய செயற்பாடுகளையும் செய்யக்கூடாது. தந்தை திரான்ஸ் என்ற பாடத்திற்கான வழிகாட்டல்களையும் கொடுக்கின்றார்: ‘போக்கைப்’ படைத்து விட்டுத் திரும்பி வாருங்கள். வைகுந்தத்திற்குச் சென்று அங்கு நடனம் ஆடுமாறு பாபா கூறுவதில்லை. நீங்கள் வேறு எங்கு சென்றாலும், மாயை உங்களுக்குள் பிரவேசித்து விட்டாள் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாயையின் முதன்மையான பணி உங்களைத் தூய்மையற்றவர் ஆக்குதல் ஆகும். சட்டத்திற்கு மாறாகச் செயல்படுதல் பெருமளவு பாதிப்பை விளைவிக்கின்றது. நீங்கள் அவதானமாக இல்லாது விட்டால், தீவிரமான தண்டனையைப் பெற நேரிடும். தந்தையுடன் தர்மராஜும் இருக்கின்றார். இராவணனது சிறையில் நீங்கள் எத்தனை வருடங்கள் தண்டனையை அனுபவம் செய்து வருகின்றீர்கள் என்ற எல்லையற்ற கணக்குகள் அவரிடம் உள்ளன. இந்த உலகில் அதிகளவு துன்பம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஏனைய அனைத்தையும் மறந்து விட்டு, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களுக்குள் இருக்கின்ற குழப்பங்கள் அனைத்தையும் அகற்றி விடுங்கள். உங்களை விகாரத்திற்குள் அழைத்துச் சென்றவர் யார்? மாயையின் தீய ஆவியாகும். இது இராஜயோகம். இது உங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். தந்தையை நினைவுசெய்வதன் மூலம், உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஆகவே, நீங்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். உங்களுக்குள் இருக்கின்ற குப்பைகள் அனைத்தையும் அகற்றி விடுங்கள். மாயையின் செல்வாக்கு மிகவும் பலம் வாய்ந்தது. எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் அவளைத் துரத்தியடிக்க வேண்டும். இயன்றவரை, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். உங்கள் நினைவு இப்பொழுது நிலையானதாக இருக்க முடியாது. நீங்கள் சதா நினைவு செய்கின்ற ஸ்திதியை அடையும்போதே, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இனியும் உங்களுக்குள் குழப்பங்களுடன் இருந்து, தீய எண்ணங்களைக் கொண்டிருந்தால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் மாயையின் செல்வாக்கிற்கு உட்படும்போதே தோற்கடிக்கப்படுகின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, தீய செயல்களில் ஈடுபடுவதனால், நீங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது. பிறரை இகழ்ந்ததாலேயே, நீங்கள் இப்பொழுது இத்தகைய தீய நிலையை அடைந்தீர்கள். இப்பொழுது நீங்கள் சற்கதியை பெறுவதால், எந்தத் தீய செயலையும் செய்யக்கூடாது. மாயை உங்களைக் கழுத்துவரை விழுங்கி விட்டாள், அதனை நீங்கள் உணராமலும் இருக்கின்றீர்கள் என்பதை பாபா பார்க்கின்றார். நீங்கள் மிகவும் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் முன்னேறவில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்படட்டும். தீய விடயங்களைப் பற்றிப் பேசுதல், கற்களை எறிவதைப் போன்றதாகும். நீங்கள் இப்பொழுது கற்களிலிருந்து, தெய்வீகமானவர் ஆகுகின்றீர்கள். ஆகவே எந்தக் கற்களும் உங்கள் உதடுகளிலிருந்து வெளிப்படக்கூடாது. பாபா உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களுக்கு விளங்கப்படுத்தும் உரிமை தந்தைக்கு உண்டு. ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு எச்சரிக்கை செய்வார் என்றில்லை. உங்களுக்குக் கற்பிக்க வேண்டியது ஓர் ஆசிரியரின் பணியாகும். அவர் உங்களுக்கு எதனையும் கூறமுடியும். மாணவர்கள் சட்டத்தைத் தமது சொந்தக் கைகளில் எடுக்கக் கூடாது. நீங்கள் மாணவர்கள். தந்தையால் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் “ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்” என்ற தந்தையின் வழிகாட்டல்களைப் பெற்றிருக்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் பாக்கியம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், உங்கள் பாக்கியத்தை வீணாக்கிக் கொள்வதுடன், நீங்கள் பெருமளவு மனவருத்தப்பட வேண்டி ஏற்படும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், முதலில் நீங்கள் தண்டனையை அனுபவம் செய்கின்றீர்கள், இரண்டாவதாக, உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. இது கல்பம் கல்பமாக, பிறவி பிறவியாக உள்ள பேரமாகும். தந்தை வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே பாபா உங்களுக்கு இந்தப் புதிய ஞானத்தைக் கொடுக்கின்ற உங்கள் ஆசிரியர் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்கின்றது என்று கூறப்படுகின்றது. நாங்கள் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் சந்திப்போம். இங்கே நீங்கள் விரும்பியளவு ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். தவறினால், நீங்கள் பெருமளவு மனவருத்தப்பட வேண்டி வரும். நீங்கள் அழுவீர்கள். நீங்கள் அனைத்திற்குமான காட்சிகளைக் காண்பீர்கள். குழந்தைகள் ஒரு பாடசாலையில் தரம் உயர்த்தப்படும்போது, பின்னால் இருப்பவர்களையே அனைவரும் பார்க்கின்றார்கள். இங்கும், நீங்கள் தரம் உயர்த்தப்படுகின்றீர்கள். நீங்கள் இங்கே சரீரங்களை நீங்கிச் சென்ற பின்னர், சத்திய யுகத்தில் இளவரசர்களுக்கான கல்லூரியில் சேர்ந்து, அந்த மொழியைக் கற்பீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கே அனைவரும் தமது தாய் மொழியைக் கற்க வேண்டும். இந்த ஞானத்தை முழுதாகப் புரிந்துகொள்ளாத பலரும் உள்ளனர். எனவே அவர்கள் நாளாந்தம் ஒழுங்காகக் கற்பதில்லை. நீங்கள் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தவற விட்டால், பின்னர் நீங்கள் அதனைத் தவற விடுகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதன்பின்னர் நீங்கள் மாயைக்கு அடிமையாக உள்ளவர்களின் சகவாசத்திலேயே இருப்பீர்கள். சிவபாபாவைப் பின்பற்றுபவர்கள் வெகு சிலரே உள்ளனர். ஏனைய அனைவரும் மாயையைப் பின்பற்றுபவர்களே. நீங்கள் சிவபாபாவைப் பின்பற்றுபவர்கள் ஆகும்போது, மாயையினால் அதனைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. எனவே நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தீய மனிதர்களையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அன்னங்களும் நாரைகளும் உள்ளனர். பாபா உங்களுக்கு நேற்று இரவு கற்பித்தார்: நாள் முழுவதும் எவரையேனும் இகழ்வதோ, அல்லது பிறரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதோ தெய்வீகக் குணம் அல்ல. தேவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் இன்னமும் தொடர்ந்தும் பிறரை இகழ்கின்றீர்கள். நீங்கள் பிறவி பிறவியாகப் பிறரை இகழ்ந்து வருகின்றீர்கள். உங்களுக்குள் குழப்பம் இருக்கின்றது. இதுவும் உங்களுக்குள் போராடுதல் போலாகும். நீங்கள் காரணமே இல்லாமல் உங்களை அழித்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் பலருக்கும் இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள். ‘இன்ன இன்னார், இவ்வாறானர்’. அதனால் உங்களுக்கு என்ன? ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் ஆதாரமானவர். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். மனித கட்டளைகள் உங்களை மிகவும் அழுக்கடையச் செய்கின்றன. அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் இகழ்கின்றார்கள். ஒருவரை இகழ்தல் என்றால் அது மாயையின் தீய ஆவியாகும். இந்த உலகம் தூய்மையற்றது. நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவை மிகவும் தீய குறைபாடுகள். இன்றிலிருந்து, நீங்கள் அத்தகைய செயல்களை மீண்டும் எப்பொழுதும் செய்யாதிருப்பதற்கு, உங்கள் சொந்தக் காதுகளையே நீங்கள் திருக வேண்டும் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எவரேனும் எப் பிழையையேனும் விடுவதைக் கண்டால், பாபாவிடம் அதனை அறிவிக்க வேண்டும். அதனைப் பற்றி நீங்கள் செய்வதற்கு என்ன உள்ளது? நீங்கள் ஏன் ஒருவரையொருவர் இகழ்கின்றீர்கள்? தந்தை அனைத்தைப் பற்றியும் கேள்விப்படுகின்றார். தந்தை இக் காதுகளையும், கண்களையும் கடனாகப் பெற்றுள்ளார். தந்தை பார்க்கின்றார், எனவே இந்தத் தாதாவும் பார்க்கின்றார். சிலரின் நடத்தையும், அவர்கள் உருவாக்குகின்ற சூழலும் முற்றிலும் சட்டத்திற்கு முரணாக உள்ளன. தந்தை இல்லாதவர்கள் அநாதைகள் என அழைக்கப்படுகின்றார்கள். சிலருக்குத் தந்தையையும் தெரியாது, தந்தையை அவர்கள் நினைவு செய்வதும் இல்லை. தம்மை சீராக்கிக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் மேலும் மோசமானவர் ஆகுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் தமது அந்தஸ்தை இழக்கின்றார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், அநாதைகள் ஆகுவீர்கள். அவர்கள் தாயும், தந்தையுமானவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்று கூறப்படுகின்றது. அவர் நண்பராகவும் ஆகுகின்றார். எவ்வாறாயினும், கொள்ளுப் பாட்டனார் இல்லாதிருந்தால், ஒரு தாய் எவ்வாறு இருக்க முடியும்? அவர்களுக்கு அந்தளவேனும் விவேகம் இல்லாதுள்ளது! மாயை உங்கள் புத்தியை முற்றாகத் திசை திருப்புகின்றாள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதபோது, தண்டனை கிடைக்கப் போவதேயன்றி, சற்கதி கிடைப்பதில்லை. அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதைத் தந்தை பார்க்கும்போது, அவர் கூறுகின்றார்: அந்த ஆத்மாக்கள் என்னவாக ஆகப் போகின்றார்கள்? இவர் ஒரு காட்டு மலர். இவர் எவரும் விரும்பாத ‘எருக்கலம்’ மலர். ஆகவே உங்களைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! தவறினால், உங்கள் அந்தஸ்;து அழிந்து விடும். பிறவிபிறவியாக ஓர் இழப்பு ஏற்படும். எவ்வாறாயினும், சரீர உணர்வுடையவர்களின் புத்தியில் இது இருப்பதில்லை. ஆத்ம உணர்வுடையவர்களால் மாத்திரமே தந்தையின் மீது அன்பு செலுத்த முடியும். தந்தையிடம் அர்ப்பணித்தல் என்றால் உங்கள் மாமியாரின் வீட்டிற்குப் போவதைப் போன்றதல்ல. முக்கியஸ்தர்களால் தம்மை அர்ப்பணிக்க முடிவதில்லை. அவர்கள் “அர்ப்பணித்தல்” என்பதன் அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய இதயங்கள் சுருங்குகின்றன. பந்தனமற்ற பலரும் உள்ளனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நீங்களே எங்களுக்கு அனைத்தும் ஆவீர்கள்! அவர்கள் இவ்வாறு தமது உதடுகளினால் கூறினாலும், அது உண்மையல்ல. அவர்கள் தந்தையிடம் பொய்யையும் கூறுகின்றார்கள். உங்களை அர்ப்பணித்தல் என்றால், உங்கள் பற்றை அகற்றுதலாகும். இப்பொழுது இது இறுதியாகும். எனவே நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் சொத்துப் போன்றவற்றின் மீதுள்ள பற்றை நீங்கள் அகற்ற வேண்டும். அத்தகைய பந்தனம் அற்ற பலரும் உள்ளனர். நீங்கள் சிவபாபாவை உங்களுக்கு உரியவர் ஆக்கியிருக்கின்றீர்கள். நீங்கள் அவரைத் தத்தெடுக்கின்றீர்கள். இவர் உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்காகவே நீங்கள் அவரை உங்களுக்கு உரியவர் ஆக்கியுள்ளீர்கள். பாபாவின் குழந்தைகள் ஆகுகின்றவர்கள் நிச்சயமாகத் தேவ குலத்திரியவர்கள் ஆகுவார்கள். எவ்வாறாயினும், பல வித்தியாசமான அந்தஸ்து தரங்கள் உள்ளன. பல பணிப்பெண்களும், வேலையாட்களும் இருப்பார்கள். சிலர் ஒருவருக்கொருவர் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பணிப்பெண்களும், வேலையாட்களும் கூட வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். வெளியே உள்ள பணிப்பெண்களும், வேலையாட்களும் இராஜ குடும்பத்தின் மாளிகைக்குள் பிரவேசிக்க மாட்டார்கள். தந்தைக்கு உரியவர்கள் ஆகுபவர்களே, அவ்வாறானவர் ஆகுகின்றார்கள். சில குழந்தைகள் ஒரு சதப் பெறுமதியான விவேகமும் அற்றவர்களாக உள்ளார்கள். ‘மம்மாவை நினைவுசெய்யுங்கள் என்றோ அல்லது எனது இரதத்தை நினைவுசெய்யுங்கள்’ என்றோ பாபா கூறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். சரீரதாரிகளான உங்கள் உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் யார் மீதாவது அன்பு செலுத்த விரும்பினால், ஒரேயொருவர் மீது மாத்திரம் அன்பு கொண்டிருந்தால், உங்கள் படகு கரையேறும் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள். பற்றை வென்ற ஓர் அரசரைப் பற்றிய கதையுண்டு. குழந்தைகளே முதலில் கருத்திற் கொள்ளப்படுகின்றார்கள். எனவே அவரது மகன் அவரது சொத்திற்கு வாரிசு ஆகுகின்றான். மனைவி அரைப் பங்காளியாவார். ஆனால் மகன் முழுமையான அதிபதி ஆகுகின்றான். எனவே புத்தி அத் திசை நோக்கியே போகின்றது. பாபாவை உங்களது முழு அதிபதி ஆக்கினால், அவர் உங்களுக்கு இவை அனைத்தையும் கொடுப்பார். இதில் கொடுக்கல் வாங்கல் என்ற கேள்விக்கு இடமில்லை. இது புரிந்துகொள்ளுதல் எனும் விடயமாகும். நீங்கள் அனைத்தையும் செவிமடுத்தபோதிலும், அடுத்த நாளே நீங்கள் அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். அது உங்கள் புத்தியில் நிலைத்திருந்தால் உங்களாலும் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். தந்தையை நினைவுசெய்வதால் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது. தொடர்ந்தும் உங்கள் வாயைப் பயன்படுத்தி, பிறருக்கு உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் கூறுங்கள். ஆழமானதும், சூட்சுமமானதுமான புத்தியைக் கொண்டவர்கள் மிகவும் விரைவில் புரிந்துகொள்வார்கள். இறுதியில் இந்தப் படங்கள் மிகவும் பயனுள்ளவையாகும். அவற்றினுள் இந்த ஞானம் முழுவதும் அடக்கப்பட்டுள்ளது. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும், இராதை கிருஷ்ணருக்கும் இடையில் உள்ள உறவுமுறை யாது? இதனை எவரும் அறியார். இலக்ஷ்மியும் நாராயணனும் முதலில் நிச்சயமாக ஓர் இளவரசியும் இளவரசருமாகவே இருந்தார்கள். ‘ஆண்டியிலிருந்து இளவரசர்’ என்றே உள்ளது, ‘ஆண்டியிலிருந்து அரசர்’ என்று கூறப்படுவதில்லை. ஓர் இளவரசர் ஆகிய பின்னரே அவர் ஓர் அரசர் ஆகுகின்றார். இது மிகவும் இலகுவாகும். எவ்வாறாயினும், மாயை சிலரைப் பிடித்து விடுகின்றாள். பிறரை இகழ்தல் அல்லது வம்பளத்தல் போன்ற பழக்கங்களைப் பலர் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அதனைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. அவர்கள் தந்தையை என்றுமே நினைவு செய்வதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வதையே தொடர்ந்தும் தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். அது அவர்களுக்கு மாயை கற்பிக்கின்ற ஒரு பாடமாகும். தந்தை கற்பிக்கின்ற பாடம் மிகவும் நேரடியானது. இறுதியில், அந்தச் சந்நியாசிகள் போன்றவர்கள், விழித்தெழுந்து, பிரம்மா குமாரிகளிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது என்று கூறுவார்கள். எவ்வாறாயினும், குமார்களும் குமாரிகளும் தூய்மையானவர்களே. நீங்களே, மனிதகுல தந்தையின் குழந்தைகள். நீங்கள் எந்தத் தீய எண்ணங்களையும் கொண்டிருக்கக்கூடாது. பலர் இன்னமும் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர். அதற்கான தண்டனை மிகவும் கடுமையானது. தந்தை உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். இங்கே, நீங்கள் தீய நடத்தை கொண்டிருப்பதைக் கவனித்தால், நீங்கள் தொடர்ந்தும் இங்கே இருக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களுக்குச் சில தண்டனையும் வழங்கப்படும். நீங்கள் தகுதியற்றவர் ஆகுவதுடன், தந்தையையும் ஏமாற்றுகின்றீர்கள். உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது. உங்கள் ஸ்திதி முற்றாக விழுந்து விடுகின்றது. விழுந்த ஸ்திதியே உங்களுக்கான தண்டனையாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், உங்கள் சொந்த அந்தஸ்தை அழித்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதபோது, தீய ஆவி உங்களுக்குள் மேலும் அதிகளவு பிரவேசிக்கின்றாள். உங்களுக்கான கடுமையான தண்டனை இப்பொழுதும் ஆரம்பிக்கலாம் என்று பாபா சிலவேளைகளில் நினைக்கின்றார். தண்டனையும் மிகவும் மறைமுகமானதாகும். கடுமையான வேதனை இருக்க வேண்டும் என்றில்லை. பலரும் வீழ்ந்;து தண்டனையை அனுபவம் செய்கின்றார்கள். தந்தை அனைத்தையும் ஒரு சமிக்ஞையைக் கொடுத்தே விளங்கப்படுத்துகின்றார். பலரும் தங்கள் பாக்கியத்தை அதிகளவு தவற விடுகின்றார்கள். இதனாலேயே தந்தை உங்களை எச்சரிக்கின்றார். இது இப்பொழுது தவறு செய்வதற்கான நேரமல்ல. உங்களைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். இறுதி மணித்தியாலத்திற்கு இன்னமும் அதிகக் காலம் இல்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஸ்ரீமத்திற்கு எதிராக, எந்த வகையிலும் சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்ளக்கூடாது. நீஙகள் உங்களைச் சீர்திருத்த வேண்டும். தீய மனிதர்களையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.2. நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருந்தால், உங்களை முற்றாக அர்ப்பணியுங்கள். உங்கள் பற்றுக்கள் அனைத்தையும் அகற்றுங்கள். எவரையும் இகழவோ அல்லது எவரைப் பற்றியும் வம்பளக்கவோ கூடாது. அசுத்த எண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திமிக்க ஸ்திதி என்ற ஆளியைப் போடுவதன் மூலம் வீணானவை என்ற இருளை அகற்றுகின்ற, ஓர் அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.பௌதீகமான ஒரு விளக்கின் ஆளியைப் போட்டவுடன், இருள் அகன்று விடுகின்றது. அதேபோன்று, சக்திமிக்க ஸ்திதி ஓர் ஆளியாகும். இந்த ஆளியை இயக்கினால், வீணானவை என்ற இருள் அகன்று விடும். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வீணான எண்ணத்தையும் தனித்தனியாக முடிக்கின்ற சிரமத்திலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் ஸ்திதி சக்திமிக்கதாக இருக்கும்போது, நீங்கள் ஒரு மகாதானியாகவும், ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுவீர்கள். ஏனெனில், அருள்பவர் என்பதன் அர்த்தம் சக்திமிக்கவராக இருப்பதாகும். சக்திமிக்கவர்களால் மாத்திரமே கொடுக்க முடியும். சக்தி இருக்குமிடத்தில் வீணானவை அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. ஆகவே, இதுவே ஓர் அவ்யக்த தேவதையின் மேன்மையான பணியாகும்.
சுலோகம்:
சத்தியத்தின் அடிப்படையில் ஆத்மாக்கள் அனைவரது இதயங்களிலிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களே பாக்கியசாலி ஆத்மாக்கள் ஆவர்.