13.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது உங்களது இறைபணி ஆகும். நீங்கள் அனைவரையும் கடவுளுக்கு உரியவர்களாக்கி, அவர்கள் தமது எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்கு வழி செய்யவேண்டும்.
கேள்வி:
புலன்களினால் ஏற்படுத்தப்படும் விஷமத்தனம் எப்போது முடிவடையும்?பதில்:
ஆத்மாவானது திரேதாயுக ஸ்திதியை அடையும்போது புலன்களின் விஷமத்தனம் முடிவடையும். அதாவது நீங்கள் சதோ ஸ்திதியை அடையும்போது ஆகும். இப்போது இது உங்கள் திரும்பிச் செல்லும் பயணம் ஆகையால், உங்கள் புலன்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். ஆத்மாவைத் தூய்மை அற்றதாக்கும் எச்செயல்களையும் இரகசியமாகச் செய்யாதீர்கள். அழிவில்லாத சத்திர சிகிச்சை நிபுணர் கொடுக்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள்.பாடல்:
ஓ மனிதனே! உன் இதயக் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்!ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். இங்கு அமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் அவர் விளங்கப்படுத்தவில்லை. தந்தை பிராமணர்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதை பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர் நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களுக்கு வேறுபட்ட குலங்களின் கணக்கை விளங்கப்படுத்தி உள்ளார். இக்குலங்களைப்பற்றி உலகம் புரிந்து கொள்வதில்லை. அவற்றின் புகழே பேசப்படுகின்றது. பிராமண குலத்தில் ஒருவராக இருக்கும் நீங்கள் பின்னர் தேவ குலத்தில் ஒருவர் ஆகுவீர்கள். இந்த விடயங்கள் சரிதானா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்களே தீர்மானியுங்கள். நான் கூறுவதைச் செவிமடுத்த பின்னரே ஒப்பிடுங்கள். பிறவி பிறவியாக நீங்கள் கேட்டு வந்த சமயநூல்களையும், ஞானக்கடலான தந்தை கூறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எது சரி என்பதைத் தீர்மானியுங்கள். நீங்கள் பிராமண தர்மத்தையும் குலத்தையும் முற்றாகவே மறந்து விட்டீர்கள். பல்ரூப உருவம் துல்லியமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உருவத்தைப் பயன்படுத்தி நீங்கள் விளங்கப்படுத்தலாம். எவ்வாறாயினும் எத்தனையோ கரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள படங்கள், ஆயுதங்கள் ஏந்திய பெண்தெய்வங்களின் ரூபங்கள் ஆகியவை தவறானவையாகும். அந்தப்படங்கள் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தங்கள் கண்களினால் அனைத்தையும் பார்த்தும் கூட அவர்கள் இன்னும் புரிந்து கொள்வதில்லை. எவரது தொழிலைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாவைப் பற்றி இப்போது அறிந்துள்ளீர்கள். அத்துடன் உங்கள் 84 பிறவிகளைப் பற்றியும் அறிந்துள்ளீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவது போலவே நீங்களும் ஏனையோருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். சிவபாபா எல்லோரிடமும் செல்ல மாட்டார். தந்தைக்கு நிச்சயமாக உதவியாளர்கள் தேவை. ஆகவே இதுவே உங்கள் இறைபணி ஆகும். அனைவரையும் கடவுளுக்கு உரியவர்கள் ஆக்குகிறீர்கள். அவரே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருடைய எல்லையற்ற தந்தை என்பதை விளங்கப்படுத்துகிறீர்கள். நாங்கள் அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறோம். நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தையை நினைவு செய்வதுபோல இவ்வுலகத்திற்கு அப்பாலுள்ள தந்தையை இன்னும் அதிகமாக நினைவு செய்யவேண்டும். ஒரு லௌகீகத் தந்தை தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கிறார். ஆனால் எல்லையற்ற தந்தை, எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறார். ஆத்மாக்கள் அனைவருமே இப்போது இந்த ஞானத்தைப் பெறுகிறார்கள். உங்களுக்கு மூன்று தந்தையர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் இப்போது அறிந்து கொண்டீர்கள். லௌகீகத் தந்தை, அலௌகீகத் தந்தை, பரலோகத்தந்தை. எல்லையற்ற தந்தை, அலௌகீகத் தந்தை மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எவருக்கும் இந்தத் தந்தையைத் தெரியாது. பிரம்மாவின் சரிதையை எவருக்கும் தெரியாது. அவருடைய தொழிலும் தெரிந்திருந்தல் வேண்டும். அவர்கள் சிவனையும், ஸ்ரீகிருஷ்ணரையும் புகழ்ந்து பாடுகிறார்கள். ஆனால் பிரம்மாவின் புகழ் என்ன? அசரீரியான தந்தைக்கு, அமிர்தம் வழங்குவதற்கென ஒரு வாய் நிச்சயம் தேவை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தந்தையைத் துல்லியமாக நினைவு செய்ய முடிவதில்லை. இதுவே சிவபாபாவின் இரதம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இரதங்களும் அலங்கரிக்கப்படுகின்றன. ஹுசேனின் குதிரையும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களுக்கு நன்கு விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் அனைவரையும் போற்றுகிறீர்கள். நாங்கள் அந்தத் தேவர்களாக இருந்தோம் என்றும், 84 பிறவிகள் எடுத்த பின்னர் தமோபிரதானாகி விட்டோம் என்றும், அவர்களுக்குக் கூறுகிறீர்கள். நீங்கள் இப்போது சதோபிரதான் ஆகவேண்டுமாயின் நீங்கள் யோகம் செய்ய வேண்டும். எனினும் இதை யாரும் புரிந்து கொள்வது அரிதாகவே உள்ளது. இதை அவர்கள் புரிந்து கொண்டால் அவர்களது சந்தோஷ பாதரசம் உயரும். விளங்கப்படுத்துபவரின் சந்தோஷ பாதரசம் இன்னும் மேலாக உயரும். எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது சிறிய விடயமல்ல, அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கேட்கிறார்கள்: “இது எவ்வாறு சாத்தியமாகும்?” நீங்கள் எல்லையற்ற தந்தையின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே இப்போது தூய்மை ஆகுங்கள்! நீங்கள் அழைத்ததுண்டு: “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!”. ‘மன்மனாபவ’ என்ற பதமும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை, ஆத்மா பற்றிய ஞானத்தை எவ்வளவு தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இந்த விடயங்கள் எதுவும் எந்தச் சமய நூல்களிலேனும் குறிப்பிடப்படவில்லை. ஆத்மா ஒரு புள்ளி என்றும், நெற்றியின் மத்தியில் ஒளிருகின்ற நட்சத்திரம் என்றும் கூறப்பட்டாலும், இது எவரது புத்தியிலும் தெளிவாக இல்லை. இந்த விடயமும் அறிந்து கொள்ளப்பட வேண்டும். கலியுகத்தில் அனைவரும் அதர்மத்தைப் பேணுபவர்கள். சத்திய யுகத்தில் அனைவரும் தர்மத்தைப் பேணுவார்கள். பக்தி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், அவை எல்லாம் கடவுளைச் சந்திப்பதற்கான வழிகள் என நம்புகிறார்கள். இதனாலேயே மக்கள் இங்கு வருவதன் நோக்கம் பற்றிப் படிவங்களில் பூர்த்தி செய்யுமாறு நீங்கள் கேட்கின்றீர்கள். இவ்வாறாக நீங்கள் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் வினவுங்கள்: ஆத்மாக்களின் தந்தை யார்? நீங்கள் அவரைச் சர்வவியாபி என்று கூறுவீர்களாயின் அதில் அர்த்தம் இல்லை. முக்கியமான விடயம்: அனைவரதும் தந்தை யார்? நீங்கள் உங்கள் வீட்டு அங்கத்தவருக்கும்கூட விளங்கப்படுத்தலாம். விருட்சம், ஏணி, திரிமூர்த்தி போன்ற ஓரிரு முக்கியமான படங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். விருட்சப் படத்திலிருந்து ஏனைய சமயத்தவர்கள் தங்கள் சமயம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதன் அடிப்படையில் நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். பின்னர் வருபவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது, ஆனால் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். விருட்சத்தின் படத்தைப் பயன்படுத்தி பல விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். தாமதமாகத் தோன்றும் சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் நிச்சயமாக மேலே சென்று அங்கு தங்குவார்கள். அத்திவாரம் முழுவதுமே உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகிறார்: ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நாட்டப்படுகின்றது. ஆனால் நீங்களும் இலைகளை உருவாக்க வேண்டும். இலைகள் இல்லையேல் விருட்சமே இல்லை. ஆகையாலேயே ஏனையோரையும் எங்களைப்போல் ஆக்க, முயற்சி செய்வதற்கு, பாபா எங்களைத் தூண்டுகின்றார். ஏனைய சமயத்தவர்கள் இலைகளை உருவாக்க வேண்டியதில்லை. அவர்கள் மேலே இருந்து வந்து அத்திவாரத்தை இடுகிறார்கள். அதைத் தொடர்ந்து இலைகள் (ஆத்மாக்கள்) மேலேயிருந்து தொடர்ந்து வருகிறார்கள். இந்த விருட்சத்தை வளரச் செய்வதற்காகவே நீங்கள் கண்காட்சிகளை நடத்துகின்றீர்கள். இவ்வாறாக இலைகள் தோன்றுகின்றன. பின்னர் ஒரு புயல் வரும்போது அவை உதிர்ந்து போகின்றன. அல்லது வாடிவிடுகின்றன. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இதில் சண்டையிடுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்துகொண்டு ஏனையோரையும் அவரை நினைவு செய்யும்படி தூண்ட வேண்டும். படைப்பைப் பற்றி அனைத்தையும் மறக்கும்படி நீங்கள் அனைவருக்கும் கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் படைப்பிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரமுடியாது. படைப்பவரான தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும், வேறு எவரையும் அல்ல. இந்த ஞானத்தையும் பெற்று, தந்தைக்கும் உரியவரான பின்னர் நீங்கள் பாவச்செயல்கள் புரிந்தால், உங்கள் தலை மீது பெருமளவு சுமை சேகரிக்கப்படுகிறது. உங்களைத் தூய்மையாக்கவே தந்தை வந்துள்ளார். எவ்வாறாயினும் நீங்கள் அத்தகைய செயல்கள் எதையேனும் புரிந்தால், இன்னும் அதிகமாகத் தூய்மை அற்றவர் ஆகிவிடுவீர்கள். அதனாலேயே பாபா கூறுகிறார்: நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தச் செயலையும் செய்யாதீர்கள். அதனால் தந்தையும் அவமதிக்கப்படுகின்றார். உங்கள் பாவக்கணக்கு அதிகரிக்கும் வகையில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும். மருந்தை உட்கொள்ளும் போதும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். புளிப்பான பண்டங்கள் எதையும் நீங்கள் உட்கொள்ளக் கூடாது என உங்கள் வைத்தியர் கூறினால், நீங்கள் அதனைக் கருத்தில் கொள்ளவே வேண்டும். உங்கள் புலனங்கங்களை உங்கள் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவே வேண்டும். நீங்கள் இரகசியமாக எதனையும் உண்டால், மருந்தின் பயன்பாடு இல்லாமல் போய்விடும். இதுவே சலனம் எனப்படுகின்றது. இவ்வாறு செய்யக்கூடாது என பாபா கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அவரே சத்திரசிகிச்சை நிபுணர். அவர்கள் பாபாவிற்கு எழுதுகிறார்கள்: எனக்குப் பல எண்ணங்கள் தோன்றுகின்றன. நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல தீய எண்ணங்கள் உங்கள் மனதிலும், கனவிலும் தோன்றும். ஆனால் அவற்றினால் அச்சம் கொள்ளாதீர்கள். இந்த விடயங்கள் சத்திய யுகத்தித்திலும், திரேதா யுகத்திலும் இருப்பதில்லை. நீங்கள் திரேதா யுகத்தை அண்மிக்கும்போது உங்கள் புலனங்கங்கள் குறும்புத்தனத்தை நிறுத்திவிடும். புலனங்கங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சத்திய யுகத்திலும், திரேதா யுகத்திலும் அவை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. திரேதா யுக ஸ்திதியை எய்தும்போது உங்கள் புலனங்கங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பின்னர் நீங்கள் சத்திய யுக ஸ்திதியை எய்தும்போது நீங்கள் சதோபிரதான் ஆகுவதுடன் உங்கள் புலனங்கங்களும் பூரண கட்டுப்பாட்டிற்குள் வரும். புலனங்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. இது புதிய விடயமல்ல, இன்று நாங்கள் புலனங்களின் ஆதிக்கத்திற்குள் இருக்கிறோம். நாளை நாங்கள் முயற்சி செய்ததும் அவை எங்களுடைய ஆதிக்கத்திற்குள் வரும். 84 பிறவிகளாக நீங்கள் இறங்கி வந்து கொண்டிருக்கின்றீர்கள். இப்போது இது திரும்பிச் செல்லும் பயணமாகும். நீங்கள் அனைவரும் சதோபிரதான் ஸ்திதியை அடைய வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் அட்டவணையைப் பரிசீலனை செய்து எவ்வளவு புண்ணியமும் எவ்வளவு பாவமும் சேமிக்கப்பட்டுள்ளன எனப் பாருங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் கலியுகத்தவரில் இருந்து திரேதாயுகத்தவர் ஆகுவதுடன் உங்களின் புலனங்கங்களும் கட்டுப்பாட்டினுள் வரும். அப்போது புயல்கள் எதுவும் இனிமேல் இல்லை என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். அந்த ஸ்திதியும் வரும். பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்யும்போது உங்கள் சந்தோஷ பாதரசமும் உயரும். வருகின்ற எவருக்கும் அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தார்கள் என்பதை விளங்கப்படுத்துங்கள். எவ்வாறாயினும் 84 பிறவிகள் எடுத்தவர்களே இதனைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அதிபதிகள் ஆகுவீர்கள். 84 பிறவிகளைப் பற்றி அவர்களுக்குப் புரியவில்லை எனில் அவர்கள் இராச்சியத்தின் அதிபதிகளாக இருக்கவில்லை என்றே கருதவேண்டும். நாங்கள் தைரியத்தை ஏற்படுத்தி நல்ல விடயங்களை விளங்கப்படுத்துகிறோம். நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள். 84 பிறவிகள் எடுத்தவர்களுக்கு உடனேயே விழிப்புணர்வு ஏற்படும். தந்தை கூறுகிறார்: நீங்கள் அமைதி தாமத்தில் இருந்தபோது நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். நான் இப்போது உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் உள்ள தேசத்திற்கு வழி காட்டுகின்றேன். வேறு எவரும் உங்களுக்கு அந்த வழியைக் காட்ட முடியாது. தூய ஆத்மாக்களே அமைதி தாமத்திற்குச் செல்ல முடியும். உங்கள் முயற்சிக்கேற்ப நீங்கள் துருவை அகற்றி உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரின் முயற்சியையும் பார்க்கலாம். பாபாவும் பெருமளவு உதவி வழங்குவார். இவர் ஒரு முதிர்ச்சியான குழந்தை. நீங்கள் அனைவரினதும் நாடித்துடிப்பையும் உணர வேண்டும். விவேகம் உள்ளவர்கள் உடனேயே புரிந்து கொள்வார்கள். இவரே எல்லையற்ற தந்தை. நிச்சயமாக சுவர்க்க ஆஸ்தியை நீங்கள் அவரிடமிருந்து பெறுவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுத்தான் இருந்தோம். ஆனால் இப்போது அது எம்மிடம் இல்லை. இப்போது மீண்டும் ஒருமுறை அதனைப் பெறுகிறோம். இலக்கும் குறிக்கோளும் எங்கள் முன்னிலையில் உள்ளன. தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபித்த பின்னர் நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம். பின்னர் 84 பிறவிகள் எடுத்து வரும்போது தொடர்ந்தும் கீழிறங்கி வந்தோம். இப்போது இது உங்கள் இறுதிப் பிறவியாகும். சரித்திரம் மீண்டும் தொடரும். 84 பிறவிகளின் முழுச் சக்கரத்தையும் விளங்கப்படுத்துங்கள். எவ்வளவுக்கு அதிகளவு மனிதர்கள் புரிந்து கொள்கின்றார்களோ அவ்வளவிற்கு அதிக இலைகள் உருவாக்கப்படும். அத்துடன் நீங்கள் வேறு பலரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் முழு உலகையும் மாயையின் சங்கிலியில் இருந்து விடுவிப்பதற்கு வந்துள்ளோம். தந்தை கூறுகிறார்: நான் அனைவரையும் இராவணனிடம் இருந்து மீட்பதற்கு வந்துள்ளேன். தந்தையே ஞானக்கடல் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்று மாஸ்டர் ஞானக்கடல் ஆகுகின்றீர்கள். ஞானமானது பக்தியிலிருந்து வேறானது. தந்தை மட்டுமே பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். எந்த மனிதராலும் இதைக் கற்பிக்க முடியாது. எவ்வாறாயினும் நாம் இதை எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம்? இங்கு அசுரர்களினால் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவர்கள் குப்பையை வீசுகிறார்கள் என்றே நாம் முன்னர் கருதிவந்தோம். ஆனால் இப்போது அவர்கள் எவ்வாறு தடைகளை உருவாக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றோம். இது புதியதொன்று அல்ல! கடந்த கல்பத்திலும் இதுவே நடந்தது. உங்கள் புத்தியில் முழுச்சக்கரமும் சுழல்கிறது. பாபா எங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி இறுதி பற்றி விளங்கப்படுத்துகிறார். பாபா எங்கள் ஒவ்வொருவருக்கும் கலங்கரை விளக்கம் என்ற பட்டத்தையும் சூட்டியுள்ளார். ஒரு கண்ணில் முக்தி தாமத்தையும், மறு கண்ணில் ஜீவன்முக்தி தாமத்தையும் வைத்துள்ளோம். நீங்கள் முக்திதாமத்துக்கும், பின்னர், ஜீவன்முக்தி தாமத்துக்கும் செல்ல வேண்டும். இது துன்பபூமி ஆகும். தந்தை கூறுகிறார்: உங்கள் பௌதீகக் கண்களினால் காணுவது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். உங்கள் அமைதி தாமத்தையே நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவே கலப்படமற்ற யோகம் என்று கூறப்படுகின்றது. அந்த ஒருவரிடமிருந்து இந்த ஞானத்தைச் செவிமடுத்துக் கொள்ளுங்கள். இதுவே கலப்படமற்ற ஞானம் எனப்படுகிறது. நீங்கள் அந்த ஒருவரையே நினைவு செய்யவேண்டும். என்னுடையவர் அவர் ஒருவரே அன்றி வேறு எவருமல்ல, நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கை உங்களிடம் இல்லையெனில், உங்களால் அந்த ஒருவரை நினைவு செய்ய முடியாது. ஆத்மா கூறுகிறார்: நான் பாபாவிற்கு மட்டுமே உரியவன். ஆத்மாவாகிய நான் பாபாவிடமே போக விரும்புகின்றேன். இந்த சரீரம் பழையதாகி உக்கியும் விட்டது. அதன்மீது நீங்கள் எந்தப்பற்றும் வைத்திருக்கக் கூடாது. இது ஞானத்தின் ஓர் அம்சமாகும். உங்கள் சரீரத்தை நீங்கள் கவனிக்காது விடுவதல்ல. இது நீங்கள் நீக்கவேண்டிய ஒரு பழைய தோல் என்பதை நீங்கள் உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்ளவேண்டும். உங்களுடையது எல்லையற்ற துறவாகும். அவர்கள் (சந்நியாசிகள்) காட்டிற்குச் செல்வார்கள். ஆனால் நீங்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டே நினைவில் இருக்கவேண்டும். நினைவில் இருக்கும்போது நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கலாம். நீங்கள் எங்கிருந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் எங்கே வசித்தாலும், நினைவில் நிலைத்திருந்தும், சக்கரத்தைச் சுழற்றியும் உயர்ந்த ஓர் அந்தஸ்தைக் கோரலாம். தனித்தனியாக எவ்வளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோரலாம். வீட்டிலிருக்கும்போது, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இறுதி முடிவிற்கு முன் சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. புதிய உலகமும் தயாராக வேண்டும். நீங்கள் இப்போது கர்மாதீத நிலையை அடைவீர்களாயின், நீங்கள் சூட்சும வதனத்திலே தங்கியிருக்க வேண்டும். சூட்சுமவதனத்தில் தங்கியிருந்த பின்னரும் நீங்கள் பிறப்பு எடுக்கவே வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது இதைப் பற்றிய காட்சிகள் யாவும் உங்களுக்குக் கிடைக்கும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். ஒரேயொருவரின் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் சரீரத்தின்மீது பற்று வைக்காது, ஆனால் அதனைக் கவனமாகப் பராமரியுங்கள்.2. தந்தை கொடுத்துள்ள சகல முன்னெச்சரிக்கைகளையும் முற்றாகப் பின்பற்றுங்கள். தந்தையை இழிவுபடுத்துவதனால் ஒரு பாவக்கணக்கை ஏற்படுத்தக்கூடிய எச்செயலையும் செய்யாதீர்கள். உங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
ஆசீர்வாதம்:
மூவகையான சேவையிலும் ஒரு சமநிலையைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் தெய்வீகக் குணங்களின் சொரூபமாகி, சகல தெய்வீகக் குணங்களையும் அனுபவம் செய்வீர்களாக.சதா தமது ஒவ்வோர் எண்ணத்தினாலும், வார்த்தையாலும், செயலாலும் மும்முரமாக சேவை செய்கின்ற குழந்தைகள் வெற்றி சொரூபங்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் மூன்றிலும் சமமான மதிப்பெண்களைக் கொண்டிருந்து, நாள் முழுவதும் அவர்கள் மூன்றிலும் சமநிலையைக் கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறப்புச்சித்தி எய்துவதுடன், தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுகிறார்கள். சகல தெய்வீகக் குணங்களின் அழகான அலங்காரம் அவர்களிலிருந்து தெளிவாகப் புலப்படும். தந்தையின் தெய்வீகக் குணங்களாலும் நீங்கள் கிரகித்த தெய்வீகக் குணங்களாலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை கொடுப்பதே, தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுதல் எனப்படுகின்றது. ஏனெனில், தெய்வீகக் குணங்களின் தானமே மகாதானமாகும்.
சுலோகம்:
உங்களின் நம்பிக்கையின் அத்திவாரம் பலமாக இருக்கும் போது, நீங்கள் இயல்பாகவே மேன்மையான வாழ்வை அனுபவம் செய்வீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
உங்களுடைய கடந்தகால கர்மக்கணக்கின் விளைவாக, நீங்கள் சரீர நோயை அல்லது பிறரின் ஏதாவது சமஸ்காரங்களினால் ஏற்படும் சம்ஸ்கார முரண்பாட்டையோ கொண்டிருக்க முடியும். கர்மாதீத் ஆகுவதற்கு, கர்ம வேதனையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகாதீர்கள். ஆனால் ஓர் அதிபதியாக உங்கள் கணக்குகளை தீர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கர்மயோகியாக இருப்பதன் மூலம் கர்மவேதனையை தீர்ப்பது, கர்மாதீத் ஆகுவதற்கான அடையாளமாகும். ஒரு கணம் ஒரு கர்மயோகியாக இருப்பதை பயிற்சி செய்யுங்கள், மறுகணம் கர்மாதீத் ஸ்திதியைக் கொண்டிருங்கள்.