14.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே‚ உங்களுடைய பார்வை எவருடைய சரீரத்தின் மீதும் விழக்கூடாது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். எவருடைய சரீரத்தையும் பார்க்காதீர்கள்.
கேள்வி:
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய இரு விசேட விடயங்கள் யாவை?பதில்:
கல்வியும் தெய்வீகக் குணங்களும் ஆகும். சில குழந்தைகளுக்குச் சிறிதளவு கோபம்கூட வருவதில்லை. ஆனால் சிலரோ அதிகளவில் கோபப்பட்டு‚ பெருமளவில் சண்டை போடுகிறார்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகித்து தேவர்கள் ஆகுவதிலேயே குழந்தைகளாகிய நீங்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். எவருடனும் கோபமாகப் பேசாதீர்கள். பாபா கூறுகிறார்: தங்களுக்குள் கோபத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகள் தீய ஆவிகளின் பிரபுக்களும் பெண்மணிகளும் போன்றவர்கள் ஆவார்கள். நீங்கள் அத்தகைய தீய ஆவிகளைக் கொண்ட எவருடனும் பேசக்கூடாது.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறு வந்துள்ளேன்….ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். வேறெந்த ஒன்றுகூடலிலும் அத்தகைய ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களின் அர்த்தங்கள் விளங்கப்படுத்தப்படுவது இல்லை. அங்கு அவர்கள் வெறுமனே சமய நூல்களை வாசிக்கிறார்கள். சீக்கியரின் ஆலயங்களில் கிரந்தத்தைப் படிப்பவர்கள் அதிலிருந்து இரண்டு வரிகளை எடுத்துப் பின்னர் அதை விரிவாக்குகிறார்கள். வேறெங்கும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களை அவர்கள் விளங்கப்படுத்துவதில்லை. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: அப்பாடல்கள் யாவும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. ஞானம் பக்தியிலிருந்து வேறுபட்டதும் அது அசரீரியான சிவனால் மட்டுமே கொடுக்கப்படக்கூடியதும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டு வருகிறது. இந்த ஞானம் ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான அறிவுகள் உள்ளன. இந்தத் தரைக் கம்பளம் எப்படித் தயாரிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா என்று சிலர் உங்களைக் கேட்கலாம். அனைத்தினதும் அறிவு உள்ளது. அவை அனைத்தும் பௌதீக விடயங்கள் ஆகும். ஆத்மாக்களாகிய எங்களுக்கு ஒரேயொரு ஆன்மீகத் தந்தை மட்டுமே உள்ளார் என்பதும் அவருடைய உருவத்தைக் காண்பது சாத்தியமல்ல என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்த அசரீரியானவரின் வடிவம் ஒரு சாலிகிராம் போன்றது. அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் அசரீரியானவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு மனித உருவத்தைக் கொண்டிருப்பதில்லை. அனைத்துக்கும் நிச்சயமாக ஒரு உருவம் உள்ளது. மிகவும் சின்னஞ் சிறிய ரூபம் ஆத்மாவுக்கே உள்ளது. அது இயற்கையின் அற்புதம் என்று அழைக்கப்படுகிறது. ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ் சிறியவர்‚ அவர் இக்கண்கள் மூலம் காணப்பட முடியாதவர் ஆவார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தெய்வீகப் பார்வை மூலம் நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் காண்கிறீர்கள். தெய்வீகப் பார்வையினூடாக நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களைக் காணமுடியும். அனைவருக்கும் முதலில் அவர் கடந்த காலத்தில் இருந்த ஒருவர் ஆகிவிட்டார். இப்பொழுது அவர் மீண்டும் வந்துள்ளதால் நீங்கள் அவருடைய காட்சியையும் காண்கிறீர்கள். அவர் மிகவும் சூட்சுமமானவர். அதிலிருந்து பரமாத்மா பரம தந்தையைத் தவிர வேறு எவராலும் ஆத்மாக்களின் ஞானத்தைக் கொடுக்க முடியாது என்பது புரிந்துகொள்ளப்பட முடியும். மக்கள் மிகச்சரியாக ஆத்மாக்களை அறிந்து கொள்ளவில்லை. அதேபோன்று அவர்களுக்குப் பரமாத்மாவையும் மிகச்சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. உலகிலுள்ள மக்களுக்கு எண்ணற்ற அபிப்பிராயங்கள் உள்ளன. ஆத்மாக்கள் பரமாத்மாவினுள் இரண்டறக் கலக்கிறார்கள் எனச் சிலர் கூறுகிறார்கள். ஏனையோர் வேறொன்றைக் கூறுகிறார்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்து கொள்கிறீர்கள். இது அனைவருடைய புத்தியிலும் ஒரேயளவில் இருக்க முடியாது. நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை உங்கள் புத்தியில் இருக்குமாறு செய்ய வேண்டும். நாங்கள் ஆத்மாக்கள்‚ நாங்கள் எங்களுடைய 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கிறோம். இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி‚ பரமாத்மா பரமதந்தையான என்னை அறிந்து‚ என்னை நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதாததால் உங்கள் பார்வை இச்சரீரத்தை நோக்கிச் செல்கிறது. உண்மையில் இவருடன் உங்களுக்கு எதுவும் செய்வதற்கில்லை. சிவபாபாவே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவருடைய வழிகாட்டல்களுக்கு ஏற்ப‚ நாங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறோம். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதையிட்டு இவர் அகங்காரத்தைக் கொண்டிருப்பதில்லை. தந்தையை மிகச்சரியாக நினைவு செய்யாதவர்களால் தங்கள் குறைபாடுகளை அகற்ற முடியாது. தாங்கள் ஆத்மாக்கள் எனும் நம்பிக்கையை அவர்கள் கொண்டிருப்பதில்லை. ஆத்மாக்களைப் பற்றியோ அல்லது பரமாத்மாவைப் பற்றியோ மக்களுக்குத் தெரியாது. பாரத மக்களே சர்வவியாபகம் எனும் கருத்தை எங்கும் பரப்பியவர்கள். உங்கள் மத்தியில் உள்ள சேவாதாரிக் குழந்தைகள் இதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உங்களில் ஏனையோர் அந்தளவுக்குப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மிகச்சரியாகவும் முழுமையாகவும் அவரை இனங்கண்டு கொண்டிருப்பின் நீங்கள் அவரை நினைவுசெய்து‚ தெய்வீகக் குணங்களையும் கிரகிப்பீர்கள். சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகிறார். இது ஒரு புதிய விடயம். பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் வாழ்கின்ற காலம் உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. லௌகீக பிராமணர்கள் பலர் உள்ளனர். ஆனால் அந்த வம்சம் ஒரு கருப்பையினூடாகவே பிறப்பெடுக்கிறது. அவர்கள் பிரம்மாவின் குழந்தைகளான வாய்வழித் தோன்றல்கள் அல்லர். தந்தையாகிய கடவுளிடமிருந்து பிரம்மாவின் குழந்தைகள் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது அந்த ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் அந்த பிராமணர்களில் இருந்து வேறுபட்டவர்கள். பிராமணர்களாகிய நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். அந்த பிராமணர்களோ துவாபர‚ கலியுகங்களில் இருக்கிறார்கள். சங்கம யுகத்து பிராமணர்களாகிய நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். பிரஜாபிதா பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். ஒரு லௌகீகத் தந்தையும் குழந்தைகளைப் படைப்பதால் பிரம்மா என்றே அழைக்கப்படுகிறார். ஆனால் அது சரீரத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். இந்தத் தந்தை (சிவன்) கூறுவார்: ஆத்மாக்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள். நீங்கள் இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் ஆவீர்கள். இதை எவருக்கும் விளங்கப்படுத்துவது இலகுவானது. சிவபாபாவுக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் கிடையாது. மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்கள் அவரைப் பார்க்கக்கூடியதாக அவருக்கு ஒரு சரீரம் இல்லை. அனைவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர்களுக்கெனச் சொந்தமான சரீரங்கள் உள்ளன. சரீரத்துக்கே ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. பரமாத்மாவுக்குத் தனக்கெனச் சொந்தமான ஒரு சரீரம் இல்லை இதனாலேயே அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஆத்மா சிவன் என்று அழைக்கப்படுகிறார். இப்பெயர் ஒருபொழுதும் மாறுவதில்லை. ஒருவர் தனது சரீரத்தை மாற்றும்போது பெயரும் மாற்றமடைகிறது. சிவபாபா கூறுகிறார்: நான் எப்பொழுதும் அசரீரியான பரமாத்மா ஆவேன். நாடகத் திட்டத்துக்கேற்ப நான் இப்பொழுது இச்சரீரத்தைப் பெற்றுள்ளேன். சந்நியாசிகளின் பெயர்களும் மாற்றம் அடைகின்றன. ஒருவர் குரு ஒருவரை ஏற்றுக் கொள்ளும்போது அவருடைய பெயர் மாற்றப்படுகிறது. நீங்களும் உங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டீர்கள். ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் தொடர்ந்தும் பாபா அனைவருடைய பெயரையும் மாற்றுவார்? பலர் ஓடிவிட்டார்கள். அந்நேரத்தில் இங்கு இருந்தவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டார்கள். இப்பொழுது எவருடைய பெயரையும் மாற்றுவதில்லை. நீங்கள் எவரையும் நம்ப முடியாது. பலரையும் மாயை தோற்கடிப்பதால் அவர்கள் ஓடிவிடுகிறார்கள். இதனாலேயே பாபா எவருக்கும் ஒரு புதிய பெயரைக் கொடுப்பதில்லை. அவர் ஒருவருக்குப் பெயரைக் கொடுத்து இன்னொருவருக்குக் கொடுக்காவிட்டால் அது நல்லதல்ல. நீங்கள் அனைவருமே “பாபா நாங்கள் இப்பொழுது உங்களுக்கு உரியவர்கள்” என்று கூறினாலும் நீங்கள் பாபாவுக்கு மிகச்சரியான விதத்தில் உரியவர்கள் ஆகுவதில்லை. உங்களிற் பலர் ஒரு வாரிசாக ஆகுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பாபாவைச் சந்திப்பதற்குப் பலர் வருகிறார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்லர். அவர்களால் வெற்றிமாலையில் இடம்பெற முடியாது. சில சிறந்த குழந்தைகள் தங்களை வாரிசுகளாகக் கருதுகிறார்கள்‚ ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்லர் என்பதை பாபா அறிவார். ஒரு வாரிசு ஆகுவதற்கு நீங்கள் முதலில் கடவுளை உங்கள் வாரிசாக ஆக்கவேண்டும். இந்த இரகசியங்கள் விளங்கப்படுத்துவதற்குச் சிரமமானவை. குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு வாரிசாக இருத்தல் என்பதன் அர்த்தத்தை பாபா விளங்கப்படுத்துகிறார். நீங்கள் கடவுளை உங்கள் வாரிசாக்கும் பொழுது நீங்கள் அவருக்கு உங்கள் சொத்து அனைத்தையும் கொடுக்க வேண்டும். பின்னர் தந்தை உங்களைத் தனது வாரிசாக்குவார். ஏழைகளால் மட்டுமே இதைச் செய்யமுடியும். பணக்காரர்களுக்குத் தங்கள் சொத்தைக் கொடுக்க இயலாதுள்ளது. மிகச் சொற்ப குழந்தைகளை வைத்தே மாலை உருவாக்கப்படுகிறது. நீங்கள் பாபாவைக் கேட்டால் உங்களுக்கு ஒரு வாரிசாக ஆகும் உரிமை உள்ளதா இல்லையா என்று பாபா உங்களுக்குக் கூறக்கூடும். அந்த பாபாவும் இந்த பாபாவும் உங்களுக்குக் கூறக்கூடும். இது புரிந்து கொள்வதற்கான ஒரு பொதுவான விடயமாகும். ஒரு வாரிசு ஆகுவதற்கு உங்களுக்கு விவேகம் தேவை. அந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உலகின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும் ஆனால் அத் தலைமைத்துவத்தை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது உங்கள் முன்னிலையில் உங்கள் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. அவ்வாறே நீங்கள் ஆகவேண்டும். நீங்கள் சந்திர வம்சத்து இராமராக அல்லது சீதையாக ஆகாமல் சூரிய வம்சத்து இலக்ஷ்மி அல்லது நாராயணனாகவே ஆகுவீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். சமய நூல்களில் இராமரும் சீதையும் அவதூறு செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் ஒருபொழுதுமே இலக்ஷ்மி நாராயணனைப் பற்றிய எந்த அவதூறையும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சிவபாபா பற்றிய அவதூறும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய அவதூறும் உள்ளன. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களை அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆக்குகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் என்னை விடவும் மேலும் உயர்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். எப்பொழுதும் இலக்ஷ்மியை அல்லது நாராயணனை எவருமே அவதூறு செய்யமாட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவே நாராயணனின் ஆத்மாவாக இருப்பினும் இதை மக்கள் அறியாத காரணத்தினால் அவர்கள் அவரை அவதூறு செய்துள்ளார்கள். அவர்கள் அதிக சந்தோஷத்துடன் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் கட்டும் ஆலயம் இராதைக்கும் கிருஷ்ணருக்குமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள். இவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) தமது முதிர்ச்சிப் பருவத்தில் இருப்பதால் சதோ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் (இராதையும் கிருஷ்ணரும்) இளமைப் பருவத்தில் இருப்பதால் சதோபிரதான் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு சிறு குழந்தை ஒரு மகாத்மாவுக்குச் சமமானவர். சிறு குழந்தைகள் விகாரம் என்றால் என்ன என்பதை அறியாததைப் போன்றே அங்கு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும் விகாரத்தைப் பற்றிய ஞானம் இருக்காது. இந்த ஐந்து தீய ஆவிகளும் அங்கே இருக்காது. அவர்கள் விகாரங்களைப் பற்றி எதையும் அறிய மாட்டார்கள். தற்பொழுது இரவு ஆகும். இரவில் மட்டுமே காமத்துக்கான விருப்பம் உள்ளது. தேவர்கள் பகலில் இருப்பதால் காமத்துக்கான விருப்பம் எதுவுமே அங்கு இருக்காது. அங்கு விகாரங்கள் கிடையாது. இப்பொழுது இரவு என்பதால் அனைவரும் விகாரத்தில் ஈடுபடுகிறார்கள். காலை வந்தவுடனேயே உங்கள் விகாரங்கள் அனைத்தும் முடிவடையும் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் உங்களுக்கு விகாரம் என்றால் என்ன என்பதே தெரியாதிருக்கும். அவை இராவணனின் விகாரமான சுவடுகள் ஆகும். இது விகார உலகம். விகாரமற்ற உலகில் விகாரம் பற்றிய கேள்வியே இருக்காது. அது கடவுளின் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது அசுர இராச்சியமே உள்ளது‚ ஆனால் அது எவருக்கும் தெரியாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களிற் பலர் இருக்கின்றீர்கள். பிரம்மாகுமாரர்களும் குமாரிகளுமாகிய நீங்கள் யாருடைய குழந்தைகள் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. அவர்கள் அனைவரும் சிவபாபாவை நினைவு செய்கிறார்கள். அவர்கள் பிரம்மாவை நினைவு செய்வதில்லை. இவரும் கூறுகிறார்: சிவபாபாவை நினைவு செய்வதன் மூலமாகவே உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். வேறு எவரையும் நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. கீதையில் எழுதப்பட்டுள்ளது: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! இதை ஸ்ரீகிருஷ்ணர் கூறவில்லை. நீங்கள் அசரீரியான தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதும்போதே அசரீரியான தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியும். அனைத்துக்கும் முதலில் நீங்கள் ஓர் ஆத்மா என்றும் உங்கள் தந்தை பரமாத்மா என்றும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்‚ நான் உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பேன். நானே அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர். நான் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் சாந்தி தாமத்துக்கு அழைத்துச் செல்கிறேன். கடந்த கல்பத்தில் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்கள் வந்து பிராமணர்களாகி மீண்டும் தங்கள் ஆஸ்தியைக் கோருவார்கள். பிராமணர்களின் மத்தியிலும் சிலர் மிகவும் உறுதியான குழந்தைகள் ஆவார்கள். நிஜக் குழந்தைகளும் மாற்றாந்தாய்க் குழந்தைகளும் உள்ளார்கள். நாங்களே அசரீரியான சிவனின் குழந்தைகள் ஆவோம். வழ்சாவழி விருட்சம் எவ்வாறு வளர்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது பிராமணர்களாகிய பின்னர் நாங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரங்களை நீக்கி வீடு திரும்ப வேண்டும். பாண்டவர்கள்‚ கௌரவர்கள் இரு சாராரும் தங்கள் சரீரங்களை நீக்க வேண்டும். நீங்கள் ஞானத்தின் சம்ஸ்காரங்களைப் பெறுகிறீர்கள். அதற்கேற்பவே நீங்கள் பெறும் வெகுமதியும் உள்ளது. நாடகத்தில் அதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாடகத்தில் ஞானத்தின் பாகம் ஒரு முடிவுக்கு வருகிறது. இப்பொழுது 84 பிறவிகளை எடுத்த பின்னர்‚ நீங்கள் மீண்டும் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் இந்த ஞானம் மறைந்துவிடும்‚ நீங்கள் உங்கள் வெகுமதியை அனுபவம் செய்வீர்கள். அங்கு வேறெந்தச் சமயங்களினதும்; படங்கள் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் படங்களை வைத்திருக்கிறீர்கள். சத்திய யுகத்தில் எவருடைய படங்களும் இருக்காது. உங்கள் படங்கள் பக்தி மார்க்கம் நிலவும் காலம் பூராகவும் இருக்கின்றன. உங்கள் இராச்சியத்தில் வேறெந்தப் படங்களும் இருக்கவில்லை. அப்பொழுது தேவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேவர்களே உண்மையானவர்களும் அநாதியானவர்களும் என்பதை நீங்கள் இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அதற்குப் பின்னரும் உலகம் தொடர்ந்தும் வளர்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கடைந்து அதீந்திரிய சுகத்தில் இருக்கவேண்டும். கடைவதற்குப் பல கருத்துக்கள் உள்ளன. எவ்வாறாயினும் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள் என்பது பாபாவுக்குத் தெரியும். சிவபாபா உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அவரே அதிமேன்மையானவர் ஆவார். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இவ்விடயங்கள் மிக இலகுவானவை! அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. நாங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துத் தேவர்களாக வேண்டும். ஐந்து விகாரங்களே தீய ஆவிகள் ஆகும். காமம்‚ கோபம்‚ சரீர உணர்வு ஆகிய தீய ஆவிகள் உள்ளன. ஆம்‚ சிலருக்கு ஏனையோரை விடவும் அதிக தீய ஆவிகள் உள்ளன. இந்த ஐந்து விகாரங்களே பெரும் தீய ஆவிகள் என்பது பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். காமமே முதல் இலக்கத் தீய ஆவி ஆகும். இரண்டாவது இலக்கம் கோபம் ஆகும். ஒருவர் கடுமையாகப் பேசும்பொழுது‚ அவர் தனக்குள் கோபத்தைக் கொண்டுள்ளார் என்று தந்தை கூறுகிறார். அத்தீய ஆவி அகற்றப்பட வேண்டும். ஒரு தீய ஆவியை அகற்றுவது மிகவும் சிரமமாகும். கோபம் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கிறது. பற்றினூடாக அவ்வளவு பேர் துன்பத்தை அனுபவிப்பதில்லை. பற்று உள்ளவர்கள் மட்டுமே துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: அத் தீய ஆவிகளை விரட்டிவிடுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கல்வியிலும் தெய்வீகக் குணங்களிலும் விசேட கவனம் செலுத்தவேண்டும். சில குழந்தைகளிடம் கோபத்தின் சுவடு சற்றேனும் இருப்பதில்லை. ஏனையோரோ கோபத்தினால் அதிகளவு சண்டை சச்சரவு செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பது பற்றியும் தேவர்கள் ஆகுவதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஒருபொழுதும் கோபத்தில் பேசாதீர்கள். ஒருவர் கோபமடையும் பொழுது அந்நபர் தனக்குள் கோபம் எனும் தீய ஆவியைக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது அவர்கள் தீய ஆவிகளின் பிரபுக்களாகவும் பெண்மணிகளாகவும் ஆகுவதைப் போன்றுள்ளது. ஒருபொழுதுமே அத்தகைய தீய ஆவிகளைக் கொண்டிருப்பவர்களுடன் பேசாதீர்கள். ஒருவர் கோபத்தில் பேசும்பொழுது அத்தீய ஆவி மற்றவரிலும் பிரவேசிக்கிறது. பின்னர் இரண்டு தீய ஆவிகளும் ஒன்றுடனொன்று சண்டை சச்சரவு செய்கின்றன. “தீய ஆவிகளின் பெண்மணி” (பூத்நாத்னி) எனும் வார்த்தை மிகத் தீயதாகும். அத்தகைய நபரிடமிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டும். அதனால் அத்தீய ஆவியானது உங்களில் பிரவேசிக்காது. ஒரு தீய ஆவியின் முன்னிலையில் நிற்காதீர்கள் அல்லது அது உங்களில் பிரவேசித்துவிடும். உங்கள் அசுரக் குணங்களை அகற்றவும் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கச் செய்வதற்கும் தந்தை வருகிறார். தந்தை கூறுகிறார்: உங்களைத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கச் செய்வதற்கும் உங்களை தேவர்களாக ஆக்குவதற்கும் நான் வந்துள்ளேன். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தேவர்களின் விக்கிரகங்கள் உங்கள் முன்னிலையில் உள்ளன. கோபம் உடையவர்களிடம் இருந்து முழுமையாக விலகி இருக்குமாறு பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உங்களுக்கு விவேகம் தேவை. உங்களுக்குள்ளே கோபம் எதையும் கொண்டிருக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு நூறு மடங்கு தண்டனை கொடுக்கப்படும். தந்தை மிகத் தெளிவாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபா உங்களுக்கு மிகச்சரியாக அவர் முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப‚ வரிசைக்கிரமமாக குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் புரிந்து கொள்வீர்கள். உங்கள் மீதும் ஏனையோர் மீதும் கருணை கொண்டிருங்கள். சிலர் ஏனையோர் மீது கருணை கொள்கிறார்கள்‚ ஆனால் தங்கள் மீது எவரும் கருணை கொள்வதில்லை. பின்னர் அவர்கள் பின்தங்கி இருக்கையில் ஏனையோர் உயர்ந்து செல்கிறார்கள். அவர்கள் தாங்களே விகாரங்களை வெல்வதில்லை‚ ஆனால் ஏனையோருக்கு விளங்கப்படுத்துகிறார்கள். ஆகவே ஏனையோரே பின்னர் விகாரங்களை வெற்றி கொள்கிறார்கள். அத்தகைய அற்புதங்கள் உள்ளன! அச்சா.இனிமையிலும் இனிமையான‚ அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்‚ தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1.ஞானக்கடலைக் கடைந்து அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருங்கள். எவருடனும் கடுமையாகப்
பேசாதீர்கள். உங்களுடன் கோபத்துடன் பேசும் எவரிடமிருந்தும் விலகியே இருங்கள்.2. கடவுளின் வாரிசு ஆகுவதற்கு முதலில் அவரை உங்களுடைய வாரிசு ஆக்குங்கள். விவேகியாகி உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தந்தைக்குக் கொடுப்பதன் மூலம் உங்களுடைய பற்றுக்கள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். உங்கள்மீது கருணை கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியில் இருந்தவண்ணம் ஒரு பற்றற்ற பார்வையாளராக ஆத்மாக்கள் எல்லோருக்கும் சகாஷ் வழங்குவதன் மூலம் தந்தையைப் போல் ஓர் அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.சதா உங்களை ஓர் அசரீரி ஆத்மாவாகக் கருதுங்கள். நடக்கும்போதும் அசையும்போதும் செயல்களைச் செய்யும்போதும் உங்களை ஓர் அவ்யக்த தேவதையாகக் கருதுங்கள். நீங்கள் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருப்பீர்கள். தேவதை என்பவர் அதியுயர்ந்த ஸ்திதியில் இருப்பவர். இந்தப் பௌதீக உலகில் தொடர்ந்து என்னதான் நடந்தாலும் ஒரு பற்றற்ற பார்வையாளராகித் தொடர்ந்து ஒவ்வொருவரின் பாகத்தையும் அவதானித்துத் தொடர்ந்து அவர்களுக்கு சகாஷ் கொடுங்கள். உங்களின் ஆசனத்தில் இருந்து கீழே இறங்குவதன் மூலம் உங்களால் சகாஷ் வழங்க முடியாது. அதியுயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். உங்களின் மனோபாவம் மற்றும் திருஷ்டியின் உதவியால் நன்மை செய்யும் சகாஷைக் கொடுங்கள். கலப்படமான மனதின் நிலையில் இருந்தல்ல. அப்போது மட்டுமே எந்த வகையான சூழலில் இருந்தும் உங்களால் பாதுகாப்பாக இருக்க முடிவதுடன் தந்தையைப் போல் அவ்யக்த தேவதை ஆகுவதற்கான ஆசீர்வாதத்தையும் பெற முடியும்.
சுலோகம்:
நினைவு சக்தியால் துன்பத்தைச் சந்தோஷமாகவும் அமைதியின்மையை அமைதியாகவும் மாற்றுங்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால் சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
எந்தவோர் இடத்தில் இருந்தாலும் உங்களின் தூய உணர்வுகள்‚ மேன்மையான ஆசிகள்‚ மேன்மையான மனோபாவம்‚ மேன்மையான அதிர்வலைகளால் ஆத்மாக்கள் பலருக்கும் உங்களால் சேவை செய்ய முடியும். கலங்கரை விளக்கமாகவும் சக்திவீடாகவும் இருப்பதே இதற்கான வழிமுறையாகும். இதில் பௌதீக வசதிகளைக் கொண்டிருத்தல்‚ ஒரு வாய்ப்பைப் பெறுதல் அல்லது நேரம் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் ஒளியாலும் சக்தியாலும் நிரம்பியிருக்க வேண்டும்‚ அவ்வளவுதான்.