14.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கும், தந்தையை நினைவு செய்வதற்கும் நீங்கள் ஸ்ரீமத்தைப் (மேன்மையான அறிவுறுத்தல்கள்) பெற்றுள்ளீர்கள். நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருடனும் வாக்குவாதம் செய்யக்கூடாது.
கேள்வி:
உங்கள் புத்தியின் யோகம், தந்தையுடன் இணைக்கப்பட்டு, சுத்தமாகுவதற்கு என்ன வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது?பதில்:
ஏழு நாள் பத்தி. புதிதாக எவரேனும் வந்தால், அவர்களை ஏழு நாட்களுக்குப் பத்தியில் அமர்த்துங்கள். அவர்களது புத்தியிலிருந்து அசுத்தங்கள் அகற்றப்பட்டு, அவர்களினால் மறைமுகமான தந்தையையும், இந்த மறைமுகமான கல்வியையும், அவர்களின் மறைமுகமான ஆஸ்தியையும் இனங்காண முடியும். அவர்கள் வந்தவுடனேயே (வகுப்பில்) அமர்ந்தால், அவர்கள் குழப்பம் அடைந்து, எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.பாடல்:
விழித்திருங்கள், ஓ மணவாட்டிகளே, விழித்திருங்கள்! புதிய நாள் வரப்போகின்றது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களை ஞானம் உள்ளவர்கள் ஆக்குவதற்கு, அத்தகைய பாடல்கள் இசைக்கப்பட்டு, அவற்றின் கருத்துக்களும் விளங்கப்படுத்தப்படுகின்றன. அப்போதே உங்களால் மற்றவர்களின் முன் பேச முடியும். நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உங்கள் புத்தியில் எந்தளவிற்கு உள்ளது என்பதைக் கண்டறிவீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில், மேலிருந்து அனைத்தினதும் இரகசியங்களும் அசரீரி உலகினதும், சூட்சும உலகினதும், பௌதீக உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியும் பிரகாசிப்பது போலுள்ளது. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற இந்த ஞானம் அவரிடம் உள்ளது. இந்த ஞானம் முற்றிலும் புதிய ஞானம் ஆகும். சமயநூல்கள் போன்றவற்றில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நீங்கள் அப்பெயர்களைக் குறிப்பிட்டால், அவர்கள் குழப்பம் அடைந்து வாக்குவாதம் செய்யத் தொடங்குவார்கள். இங்கே அவர் முற்றிலும் எளிமையான முறையில் விளங்கப்படுத்துகின்றார்: கடவுள் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மா, விஷ்ணு, சங்கரர் போன்றவர்கள் தூய்மை ஆக்குபவர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். நீங்கள் சூட்சும உலகில் வசிப்பவர்களைத் தூய்மை ஆக்குபவர்கள் என அழைப்பதில்லை. அப்பொழுது இந்தப் பௌதீக உலக மனிதர்கள் எவ்வாறு தூய்மை ஆக்குபவர்கள் ஆக முடியும்? இந்த ஞானம் நிச்சயமாக உங்கள் புத்தியில் உள்ளது. சமயநூல்களைப் பற்றி அதிகம் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல. அதிகளவு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அவர்கள் ஒருவரையொருவர் தடிகளினாலும் அடிக்கத் தொடங்குகின்றார்கள். இந்த விடயங்கள் மிக இலகுவாக உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் சமயநூல்களில் உள்ள விடயங்களில் அதிகளவுக்குச் செல்வதில்லை. நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதும் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவுசெய்வதுமே பிரதான விடயமாகும். இந்தச் ஸ்ரீமத் பிரதானமான ஒன்றாகும். ஏனையவை விபரங்களாகும். விதை மிகவும் சிறியது, ஆனால் மற்றவை விருட்சத்தின் விரிவாக்கமே. விருட்சத்தின் முழு ஞானமும் அதன் விதையில் அடங்கியிருப்பதைப் போன்று இந்த அனைத்து ஞானமும் விதையானவரில் அடங்கியுள்ளது. உங்கள் புத்தியில் விதையும் விருட்சமும் உள்ளன. உங்களைப் போன்று வேறு எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விருட்சத்தின் கால எல்லையை மிகவும் நீண்டதாக எழுதியுள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விதையினதும், விருட்சத்தினதும், நாடகச் சக்கரத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுபவர்கள். புதியவர்கள் வரும்போது, பாபா குழந்தைகளைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் எனப் புகழ்ந்து பாடினால், புதியவர்களில் எவராலும் புரிந்து கொள்ள இயலாதிருக்கும். அவர்கள் தங்களைக் குழந்தைகள் என்றுகூடக் கருதமாட்டார்கள். இந்தத் தந்தை மறைமுகமானவர், இந்த ஞானமும் மறைமுகமானது, ஆஸ்தியும் மறைமுகமானதே. புதிதாக வந்தவர்கள் இவ்விடயங்களைச் செவிமடுக்கும் போது குழப்பம் அடைவார்கள். இதனாலேயே அவர்கள் ஏழு நாட்களுக்குப் பத்தியில் அமர்த்தப்படுகின்றார்கள். அவர்கள் பாகவதம், இராமாயணம் போன்றவற்றை ஏழு நாட்களுக்குக் கூறுவது, இந்த நேரத்தின் ஞாபகார்த்தமே. அவர்களின் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் புத்தியில் உள்ள அசுத்தங்கள் அகற்றப்படும் வகையில் அவர்கள் ஏழு நாட்களுக்குப் இங்கே பத்தியில் இருக்க வைக்கப்படுகிறார்கள். இங்கு அனைவரும் நோயாளிகள். இந்த நோய்கள் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. இது அரைக் கல்பத்திற்குரிய நோய் ஆகும். ஐந்து விகாரங்களின் நோய் மிகப் பெரியது. நீங்கள் அங்கு ஆத்ம உணர்வில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தை நீக்கி வேறொரு சரீரத்தை எடுக்கிறீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முன்னதாகவே ஒரு காட்சியைக் காண்கிறீர்கள். அங்கு ஒருபொழுதும் அகாலமரணம் இடம் பெறுவதில்லை. நீங்கள் மரணத்தை வெற்றி கொள்வீர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: மரணம், மரணம், அத்துடன் மகாமரணம். மகாகாளேஸ்வர் ஆலயமும் உள்ளது. சீக்கிய மக்களுக்கு அமரத்துவ சிம்மாசனம் இருக்கின்றது. உண்மையில் ஒவ்வோர் ஆத்மாவும் அமர்ந்துள்ள நெற்றியின் மத்தியே அமரத்துவ சிம்மாசனம் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும் இந்த அமரத்துவ சிம்மாசனங்களில் அமர்ந்துள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகின்றார். தந்தைக்கெனச் சொந்தமாகச் சிம்மாசனம் இல்லை. அவர் வந்து, இவருடைய சிம்மாசனத்தை எடுக்கின்றார். அவர் இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களை மயில் சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும்; அமர்ந்திருக்கும் அந்த மயில் சிம்மாசனம் எதனைப் போன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். மயில் சிம்மாசனம் நினைவுகூரப்படுகிறது. நீங்கள் இதனைக் கடைய வேண்டும்: ஏன் அவர் கள்ளங்கபடமற்ற பிரபுவான, கடவுள் என அழைக்கப்படுகின்றார்? கள்ளங்கபடமற்ற பிரபு எனக் கூறும்போது, புத்தி மேலே செல்கின்றது. சாதுக்கள், புனிதர்கள் போன்றவர்களும் நீங்கள் அவரை நினைவு செய்வதற்காகத் தங்கள் விரலை மேலே சுட்டிக் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும் எவராலும் எதனையும் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. தூய்மையாக்குபவரான தந்தை, நேரடியாக உங்கள் முன் இப்போது வந்து கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், அப்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது ஓர் உத்தரவாதம். இதுவும் கீதையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கீதையில் இருந்து ஓர் உதாரணத்தை எடுத்தால், அவர்கள் பத்து உதாரணங்களை எடுப்பார்கள். இதனாலேயே அதற்கு எந்தத் தேவையும் இல்லை. சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளவர்கள், தாங்கள் மற்றவர்களுக்குச் சவால் விடமுடியும் என நினைக்கின்றார்கள். இந்தச் சமயநூல்களைப் பற்றி அறியாத குழந்தைகளாகிய நீங்கள் அவற்றின் பெயர்களைக் கூட குறிப்பிடக்கூடாது. கடவுள் கூறுகின்றார்: “உங்கள் தந்தையாகிய, என்னை நினைவு செய்யுங்கள்” எனக் கூறுங்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் பாடலையும் பாடுகின்றார்கள். “தூய்மையாக்குபவரே, சீதையின் இராமரே....” சந்நியாசிகளும் இங்கும் அங்கும் தொடர்ந்தும் உச்சாடனம் செய்கின்றார்கள். இதைப் போன்று பல அபிப்பிராயங்கள் உள்ளன. இந்தப் பாடலும் மிகவும் அழகானது! நாடகத் திட்டத்திற்கேற்ப இவ்வாறான பாடல்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இயற்றப்படுகின்றன. அது அவர்கள் குழந்தைகளான உங்களுக்காக மாத்திரமே இதனை இயற்றுகின்றார்கள் போன்றுள்ளது. அத்தகைய நல்ல பாடல்கள் உள்ளன. உதாரணமாக: “குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள் பிரபுவே!” (இந்த உலகத்துக்கு அப்பால் வசிப்பவர்). ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரபு என அழைப்பதில்லை. அசரீரியானவரை மாத்திரமே பிரபு அல்லது ஈஸ்வரர் என அழைக்க முடியும். (அனைவரினதும் விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்). இங்கே நீங்கள் பாபாவை பரமாத்மாவான பரமதந்தை எனக் கூறுகின்றீர்கள். அவரும் ஓர் ஆத்மா, இல்லையா? அவர்கள் பக்திப் பாதையில் மிக ஆழமாகச் சென்று விட்டார்கள். இது முற்றிலும் எளிமையான விடயம் - அல்ஃபாவும், பீற்றாவும். அல்ஃபா என்றால் அல்லாவும், பீற்றா என்றால் இராச்சியமும் ஆகும். இது அத்தகைய எளிமையான விடயம். தந்தையை நினைவு செய்யுங்கள், அப்போது நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் நிச்சயமாகச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள்; அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள். எனவே தந்தையை நினைவு செய்வதினால் மாத்திரமே நீங்கள் நிச்சயமாக அவர்களைப் போல முழுமை அடைவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நினைவைக் கொண்டிருப்பதுடன் சேவையும் செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இதுவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையில் மாணவர்கள் மிகச்சிறிதே கற்கும்போது, அதனை அவர்கள் உணரமாட்டார்களா? முழுக் கவனத்தையும் செலுத்தாதவர்கள் தொடர்ந்தும் பின்னாலேயே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நிச்சயமாகச் சித்தி அடைய மாட்டார்கள். உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இயற்றப்பட்டுள்ள இந்தச் சிறந்த ஞானப் பாடல்களை நீங்கள் செவிமடுக்க வேண்டும். அத்தகைய பாடல்களை உங்கள் வீடுகளிலும் வைத்திருங்கள். அவற்றை உங்களால் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். மீண்டும் மாயையின் நிழல் எவ்வாறு வீழ்கின்றது எனப் பாருங்கள். ஒவ்வொரு சக்கரத்தினதும் கால எல்லை 5000 வருடங்கள் எனச் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் அரைக்கு அரைவாசியாகும். இப்பாடல்களை எவரோ ஒருவர் இயற்றியிருக்க வேண்டும். தந்தையே விவேகிகளின் புத்தி என்பதால், அவற்றை அமர்ந்திருந்து இயற்றியவரின் புத்தியில் அது புகுந்திருக்க வேண்டும். உங்களிடம் வந்த பலர் இப்பாடல்கள் போன்றவற்றைச் செவிமடுத்ததும் திரான்ஸ்சில் சென்று விட்டனர். இந்த ஞானப் பாடல்களைப் பாடுகின்றவர்களும் உங்களிடம் வருகின்ற அந்த நாளும் வரும். உங்கள் இதயத்தைத் தொடும் வகையில், தந்தையின் புகழைப் பாடுகின்ற அத்தகைய பாடல்களை அவர்கள் பாடுவார்கள். அத்தகைய பாடகர்கள் வருவார்கள். இசையிலேயே அதுவும் தங்கியுள்ளது. பாடுகின்ற கலையும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நேரத்தில், அவ்வாறு எவருமே இல்லை. ஒரு பாடல் மாத்திரம் இயற்றப்பட்டுள்ளது: “மிகவும் இனிமையானவர், அப்பாவியான, மிகவும் அன்பானவர், கடவுள் சிவனே!” நிச்சயமாகத் தந்தை மிகவும் இனிமையானவரும், மிகவும் அன்பானவரும் ஆவார். அதனாலேயே அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். தேவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள் என்றில்லை. படங்களில் அவர்கள் சிவனுக்கு முன்னால் இராமர் இருப்பதாகக் காட்டியுள்ளார்கள்; அவரை இராமர் வழிபடுகிறார்! இதுவும் பிழையே. தேவர்கள் எவரையும் நினைவு செய்ய மாட்டார்கள். மனிதர்களே நினைவு செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் மனிதர்கள், பின்னர் நீங்களும் தேவர்கள் ஆகுவீர்கள். தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் பகலுக்கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது. அதே தேவர்களே பின்னர் மனிதர்கள் ஆகுகிறார்கள். எவ்வாறு இச்சக்கரம் தொடர்ந்தும் சுற்றுகின்றது என முற்றிலும் எவருக்கும் தெரியாது. உண்மையில் நாங்கள் தேவர்களாக ஆகுகின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது கணடறிந்துள்ளீர்கள். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள். புதிய உலகில், நாங்கள் தேவர்கள் என அழைக்கப்படுவோம். இப்பொழுது நீங்கள் அற்புதத்தால் நிறைந்துள்ளீர்கள்! இப் பிறவியிலே, முன்பு வழிபடுபவராக இருந்த இந்தப் பிரம்மா ஸ்ரீ நாராயணனின் புகழ்பாடி, நாராயணன் மீது பெருமளவு அன்பு கொண்டிருந்தார். இப்பொழுது அவர் மீண்டும் அவ்வாறு ஆகுகின்றார் என்பது ஓர் அற்புதம் போல் தோன்றுகிறது. ஆகவே சந்தோஷப் பாதரசம் அதிகளவு உயரவேண்டும். நீங்கள் எவரும் அறியாத போர்வீரர்கள். நீங்கள் அகிம்சாவாதிகள். உண்மையில் நீங்களே இரட்டை அகிம்சாவாதிகள். நீங்கள் காமவாளைக் கொண்டிருப்பதோ, நீங்கள் யுத்தத்தில் ஈடுபடுவதோ இல்லை. காமம் வேறானது; கோபம் வேறானது. ஆகவே அப்பொழுது நீங்கள் அகிம்சா சேனையான, இரட்டை அகிம்சாவாதிகள். “சேனை” என்ற வார்த்தையினால், அவர்கள் இராணுவங்களை உருவாக்கி உள்ளார்கள். மகாபாரத யுத்தத்தில் அவர்கள் ஆண்களைக் காட்டியுள்ளார்கள், அதில் பெண்கள் இல்லை. உண்மையில் நீங்களே சிவசக்திகள். நீங்கள் பெரும்பான்மையாக இருப்பதால், நீங்கள் சிவசக்திசேனை என அழைக்கப்படுகிறீர்கள். தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து, இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய யுகத்தை நினைவு செய்கிறீர்கள். புதிய யுகத்தைப் பற்றி உலகிலுள்ள எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் புதிய யுகம் 40,000 வருடங்களின் பின்னரே வரும் என நினைக்கிறார்கள். சத்தியயுகமே புதிய யுகம் என்பது மிகவும் தெளிவாகி விட்டது. எனவே பாபா உங்களுக்குப் புத்திமதி கூறுகின்றார்: நீங்கள் அத்தகைய பாடல்களைச் செவிமடுப்பதாலும், பிறருக்கு விளங்கப்படுத்துவதாலும் புத்துணர்ச்சி அடைவீர்கள். இவை யாவும் திறமையான வழிமுறைகள். நீங்கள் மாத்திரமே இவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு மிகச்சிறந்த பல பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் பெருமளவில் உதவுகின்றன. அவற்றின் கருத்துக்களைப் பிரித்தெடுப்பதால், உங்கள் வாய் திறக்கப்படுவதுடன், சந்தோஷமும் உள்ளது. நன்றாகக் கிரகிக்க முடியாதவர்களுக்குத் தந்தை கூறுகிறார்: வீட்டில் அமர்ந்திருக்கும் போதும் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் இல்லறத்தில் வாழும் போதும் இந்த மந்திரத்தை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள். முன்னர் ஒருவர் தனது மனைவிக்குக் கூறுவார்: “நீங்கள் வீட்டிலேயும் கடவுளை நினைவு செய்யலாம், ஆகவே ஆலயங்கள் போன்றவற்றிக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் என்ன? வீட்டில் நான் உங்களுக்கு ஒரு சிலையைக் கொடுக்கிறேன். இங்கமர்ந்திருந்து நினைவு செய்யுங்கள். நீங்கள் ஏன் தடுமாறித் திரிய வேண்டும்?” இவ்வாறாகப் பல ஆண்கள் தங்கள் மனைவிமாரைச் செல்ல அனுமதிப்பதில்லை. வழிபடுவதும் நினைவுசெய்வது போன்றதே. நீங்கள் ஒரு சிலையைப் பார்த்ததும், அதனை எவ்வாறாயினும் நினைவுசெய்ய முடியும். மயில் இறகுடனும், கிரீடத்துடனும் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை பொதுவானது. குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்சிகளும் கிடைத்தன. அவர் எவ்வாறு அங்கு பிறப்பு எடுக்கின்றார் என்ற காட்சிகளும் உங்களுக்குக் கிடைத்தன. ஆனால், எவ்வாறு அவற்றின் புகைப்படத்தை உங்களால் எடுக்க முடியும்? எவராலும் மிகச்சரியானதை எடுக்க முடியாது. அதனைத் தெய்வீகக் காட்சியினால் மாத்திரம் பார்க்க முடியுமே தவிர, அதனை உருவாக்க முடியாது. ஆம், அதனைப் பார்த்த பின் உங்களால் அதனை விபரிக்க முடியும். எவ்வாறாயினும் அதனை ஓவியம் தீட்டுவது போன்றவற்றைச் செய்ய முடியாது. ஓவியர் திறமைசாலியாக இருந்து, ஒரு காட்சியைக் கண்டாலும் அவரால் மிகச்சரியாக முகச்சாயல்களை வரைய முடியாது. எனவே பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: எவருடனும் அதிக விவாதம் செய்யாதீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: “உங்கள் ஆர்வம் தூய்மை ஆகுவதிலேயே உள்ளது”. நீங்கள் அமைதியையே வேண்டுகிறீர்கள். எனவே தந்தையை நினைவுசெய்து தூய்மை ஆகுங்கள். தூய ஆத்மாக்கள் இங்கே வாழ முடியாது. அவர்கள் திரும்பிச் செல்வார்கள். தந்தைக்கு மாத்திரமே ஆத்மாக்களைத் தூய்மையாக்கும் சக்தி உள்ளது. வேறு எவராலும் ஆத்மாக்களைத் தூய்மையாக்க முடியாது. இவை அனைத்தும் இந்த நாடகம் நடிக்கப்படுவதற்கான மேடை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்நேரத்தில் முழு மேடையும் இராவண இராச்சியம் ஆகும். முழுச் சமுத்திரத்திலும் உலகம் உள்ளது. இது ஓர் எல்லையற்ற தீவாகும். அவை எல்லைக்கு உட்பட்டவை. இது ஓர் எல்லையற்ற விடயம் (தீவு) ஆகும். தெய்வீக இராச்சியம் அரைக் கல்பத்திற்கும், அசுர இராச்சியம் அரைக் கல்பத்திற்கும் இருக்கின்றன. உண்மையில் கண்டங்கள் வெவ்வேறானவை. ஆனால் இவை அனைத்தும் எல்லையற்ற விடயங்கள். நிச்சயமாக நாங்கள் இனிய நீராலான கங்கை, ஜமுனை நதிக்கரை ஓரத்தில் வசிப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடல் போன்றவற்றிக்குச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. துவாரகையைப் பற்றி அவர்கள் பேசும்போது, அது கடலின் மத்தியில் இல்லை. துவாரகை ஒரு வேறான இடம் அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளைக் கண்டிருந்தீர்கள். ஆரம்பத்தில், சந்தேசியும் குல்சாரும் பல காட்சிகளைக் காண்பது வழக்கம். அவர்கள் பெரிய பாகங்களை நடித்துள்ளார்கள், ஏனெனில் அவர்கள் பத்தியில் இருக்கும் ஏனையோரைக் களிப்பூட்ட வேண்டி இருந்தது. ஆதலால் அவர்கள் காட்சிகளினால் அதிகளவு களிப்பூட்டப்பட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இறுதியில் நீங்கள் பெருமளவு களிப்பூட்டப்படுவீர்கள். அந்தப் பாகம் வேறு விடயம். ஒரு பாடலும் உள்ளது. நாங்கள் பார்த்தவற்றை, நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சிகளைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, பரீட்சை நாட்கள் நெருங்கி வரும்போது நீங்கள் எத்தனை புள்ளிகளுடன் சித்தி எய்துவீர்கள் என்பதைக் கண்டுபிடித்து விடுவீர்கள். இதுவும் உங்கள் கல்வியாகும். இப்பொழுது நீங்கள் இங்கு ஞானம் நிறைந்தவராகவே இருப்பது போலுள்ளது. எனினும், அனைவரும் நிறைந்தவர்கள் என்றில்லை. ஒரு பாடசாலையில் எப்பொழுதும் அனைவரும் வரிசைக்கிரமம் ஆனவர்கள். இதுவும் ஞானம் ஆகும். அசரீரி உலகம், சூட்சும உலகம் -- நீங்கள் மூன்று உலகங்களினதும் ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். இந்த உலகச் சக்கரத்தை நீங்கள் அறிவீர்கள், இது தொடர்ந்தும் சுற்றுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஞானத்தை வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. உங்கள் மீது எல்லையற்ற சகுனங்கள் உள்ளன. சிலருக்கு வியாழ சகுனங்களும், மற்றவர்களுக்கு இராகுவின் கிரகணத்தின் சகுனங்களும் உள்ளன. எனவே, அவர்கள் சென்று சுடலையாண்டி போன்றோர் ஆகுவார்கள். இவை எல்லையற்ற சகுனங்கள். அவை எல்லைக்குட்பட்ட சகுனங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற விடயங்களைக் கூறி உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியை அருள்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தைக் கோரி அதனை இழந்து விட்டீர்கள். இது முற்றிலும் உண்மை. எதுவுமே புதியதல்ல! பின்னர் நீங்கள் அநாதியான சந்தோஷத்துடன் இருக்க முடியும். இல்லையேல் மாயை உங்களை மூச்சுத் திணற வைக்கிறாள். ஆகவே, நீங்கள் அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலர்கள். காதலர்களாகிய நீங்கள் அனைவரும் அந்த ஒரேயொரு அன்பிற்;கினியவரை மாத்திரமே நினைவு செய்கிறீர்கள். அவர் வந்து, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அரைச் சக்கரமாக நீங்கள் அவரை நினைவுசெய்து வருகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அவரைக் கண்டு கொண்டதால், உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு “எதுவும் புதியதல்ல” என்ற பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.2. இந்த சிறந்த ஞானப் பாடல்களைச் செவிமடுத்து உங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிறருக்கும் அவற்றை விளங்கப்படுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையையும் அவளின் சகல உறவுமுறைகளையும் உங்களிடமிருந்து விவாகரத்து செய்து, தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் மூலம் மாயையை வென்றவராகவும் பற்றை வென்றவராகவும் ஆகுவீர்களாக.இப்போது, உங்களின் விழிப்புணர்வில் உள்ள பழைய பேரங்கள் எதையும் ரத்து செய்து, தனியானவர் ஆகுங்கள். நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க முடியும். ஆனால் சகபாடிகளாக அல்ல. ஒரேயொருவரை உங்களின் சகபாடி ஆக்கி, மாயையையும் அவளின் சகல உறவுமுறைகளையும் விவாகரத்துச் செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றி பெற்ற மாயையை வென்றவராகவும் பற்றை வென்றவராகவும் ஆகுவீர்கள். யாரிடமாவது சிறிதளவு பற்றேனும் இருக்குமாயின், தீவிர முயற்சியாளர் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் முயற்சியாளராக மட்டுமே ஆகுவீர்கள். ஆகவே, என்னதான் நடந்தாலும் தொடர்ந்து சந்தோஷத்தில் நடனம் ஆடுங்கள். “இரைக்கு மரணம், வேட்டைக்காரனுக்கு சந்தோஷம்”. இதுவே பற்றை அழித்தவராக இருத்தல் என அறியப்படுகிறது. இத்தகைய பற்றை அழித்தவர்கள் வெற்றி மாலையின் மணிகள் ஆககிறார்கள்.
சுலோகம்:
சத்தியத்தின் சிறப்பியல்பால் வைரத்தின் ஜொலிப்பை அதிகரியுங்கள்.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் ஸ்திரமான, மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும், ஏகாந்தத்தில் இருக்க வேண்டும், சரீரமற்றவர் ஆகவேண்டும், ஒற்றுமையை ஸ்தாபிப்பவராகவும் ஒரேயொருவருக்குச் சொந்தமானவராகவும் சிக்கனத்தின் அவதாரமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்பு அளியுங்கள். ஒருவருக்கொருவர் சமிக்கை கொடுத்தவண்ணம், உங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்து, உங்களின் ஒன்றுகூடலில் சக்தியின் வடிவத்தை வெளிப்படுத்துங்கள். ஏனென்றால், உங்களின் ஒன்றுகூடலில் உள்ள ஒற்றுமையின் சக்தியானது, ஒன்றுகூடலில் பிராமணக் குடும்பம் முழுவதையும் ஒன்றாக்குவதற்குக் கருவியாக இருக்கும்.