14.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாபா அன்புக்கடலாக இருக்கிறார். அவர் உங்களை நேசிப்பதைப் போல் இவ்வுலகில் வேறு எவராலும் அத்தகைய அன்பைக் கொடுக்க முடியாது, ஆகவே, குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போல் ஆக வேண்டும். எவரையும் குழப்பம் அடையச் செய்ய வேண்டாம்.
கேள்வி:
எந்த வகையான எண்ணங்களால் உங்களுடைய சந்தோஷப் பாதரசத்தை உயர்வாக வைத்திருக்க முடியும்?பதில்:
1. நாங்கள் இப்பொழுது இந்த ஞான இரத்தினங்களால் எங்கள் புத்திகளை நிரப்புவதால், அந்த அனைத்து சுரங்கங்களும் நிரப்பப்படும். அங்கே, சத்தியயுகத்தில், நாங்கள் தங்க மாளிகைகளைக் கட்டுவோம். 2. எங்களுடைய இந்த பிராமண குலமே அதி மேன்மையானது. நாங்கள் அமரத்துவ கதையான சத்திய நாராயணனின் உண்மைக் கதையை செவிமடுத்து, பிறருக்கும் அதனைக் கூறுகின்றோம். அத்தகைய எண்ணங்களை நீங்கள் தொடர்ந்தும் கொண்டிருந்தால், உங்கள் சந்தோஷ பாதரசம் உயர்வாகவே இருக்கும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையின் நினைவில் இருக்கின்றீர்கள். நீங்களே இந்த ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். அதாவது இந்த மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். நினைவு யாத்திரை மிகவும் இனிமையானது. குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப, எவ்வளவு அதிகளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவிற்கு இனிமையானவராக அவரை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் அவரே சக்கரீன் ஆவார். அந்தத் தந்தை மாத்திரமே உங்களை நேசிக்கின்றார், ஏனையவர்களோ உங்களை அடிக்கின்றார்கள். முழு உலகிலும் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் ஒதுக்குகின்றார்கள். தந்தை உங்களை நேசிக்கின்றார், குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே அவரைத் தெரியும். தந்தை கூறுகின்றார்: நான் எத்தகையவனாக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், நான் மிகவும் மகத்தானவர்! உங்கள் தந்தை எத்தனை மகத்துவமானவர் எனக் கூறுங்கள் பார்ப்போம்? நீங்கள் அவர் ஒரு புள்ளி என்றும், எவருக்குமே அவரைத் தெரியாது என்றும் கூறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் கூட மீண்டும் மீண்டும் அவரை மறக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பெரிய பெரிய உருவங்களை வழிபட்டதாகக் கூறுகின்றீர்கள். இப்பொழுது, நாங்கள் எவ்வாறு ஒரு புள்ளியை நினைவு செய்ய முடியும்? ஒரு புள்ளியால் மாத்திரமே புள்ளியை நினைவு செய்ய முடியும். ஆத்மாக்களான உங்களுக்கு, நாங்கள் புள்ளிகள் என்பதும் எமது தந்தையும் அவ்வாறானவரே என்பதும் தெரியும். ஒரு ஜனாதிபதி ஆகுவதும் ஓர் ஆத்மாவே, பணியாள் ஆகுவதும் ஓர் ஆத்மாவே. எனவே, ஆத்மாவே ஒரு பாகத்தை நடிக்கின்றார். தந்தையே அனைவரிலும் அதி இனிமையானவர் ஆவார். அனைவரும் அவரையே நினைவு செய்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! நீங்கள் புள்ளியென அழைப்பவர் மிகவும் சூட்சுமமானவர், ஆயினும் அவரது புகழ் அதிகளவு மகத்துவமானது என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. ஞானக் கடலும், அமைதிக்கடலும் என மக்கள் அவரின் புகழைப் பாடிய போதிலும், அவர் வந்து எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் எந்தளவிற்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள் என்பதை உங்களாலேயே புரிந்து கொள்ள முடியும். சேவை செய்வதற்காக நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். பலரும் நோய்வாய்பட்டுள்ளார்கள். பலர் ஆரோக்கியமாகவும் உள்ளர்கள். சத்தியயுகத்தில் வாழ்கின்ற அனைவரும் சராசரியாக 125 இருந்து 150 வருடங்களின் ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பதைப் பாரத மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அனைவரும் நிறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் அசுத்தமாகிவிட்ட உலகமாகும். அது மிகவும் குறைந்த காலத்திற்கே நீடிக்கும். இப்பொழுதும், மக்கள் தொடர்ந்தும் பெரிய தர்மசாலைகளை கட்டுகின்றார்கள். இந்த உலகம் இன்னமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆலயங்கள் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கில் செலவிடுகின்றார்கள். அவை எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது? அவை அனைத்தும் உடைந்து விழும் நிலையில் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு பாபா எப்பொழுதுமே தடை செய்வதில்லை. உங்கள் சொந்த வீட்டிலேயே ஒரு அறையில் நீங்கள் வைத்தியசாலை சார்ந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கலாம். இந்த ஞானத்தினூடாக எந்தச் செலவும் இல்லாமல் உங்களால் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்றவற்றை 21 பிறவிகளுக்குப் பெற முடியும். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தமோபிரதான் ஆகும்போது நீங்கள் மேலும் துன்பத்தை அனுபவம் செய்கின்றீர்கள். மக்கள் தொடர்ந்தும் மென்மேலும் தமோபிரதான் ஆகுமளவிற்கு ஏற்ப, உலகில் அமைதியின்மையும் துன்பமும் அதிகரிக்கும். மக்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். அதன் பின்னர் வெற்றி முரசு கொட்டும். பின்னர், நீங்கள் காட்சிகளில் கண்ட விநாசத்தை நடைமுறையில் காண்பீர்கள். பலரும் ஸ்தாபனையின் காட்சிகளையும் கண்டுள்ளார்கள். சிறுமிகள் பல காட்சிகளைக் கண்பதுண்டு. அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. பழைய உலகம் நிச்சயமாக அழிய உள்ளது. தந்தை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் ஆஸ்தியான சுவர்க்கத்தைக் கொடுப்பதற்காக வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், குழந்தைகளே, அதன் பின்னர் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முயற்சிக்க வேண்டும். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்களை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இன்னமும் சொற்பகாலமே உள்ளது என்பதை அம்மக்கள் அறியாதுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அருள்பவர் என்பதால் நான் உங்களுக்கு அருள்வதற்கே வந்துள்ளேன். மக்கள் கூறுகின்றார்கள்: தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: ஆரம்பத்தில் நீங்கள் விவேகமானவராகவும் சதோபிரதானாகவும் இருந்தீர்கள்! இப்பொழுது நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். நீங்கள் உலகை ஆட்சி செய்தவர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதை முன்னர் நீங்கள் அறியாதிருந்தீர்கள். நீங்கள் மீண்டும் நிச்சயமாக அவ்வாறு ஆகுவீர்கள். வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் ஏற்படும். தந்தை 5000 வருடங்களின் முன்னரும் தான் வந்து, உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கினார் என்றும் பின்னர் நீங்கள் 84 பிறவிகள் என்ற ஏணியில் இறங்கினீர்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இவ்விவரங்கள் எந்த சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. சிவபாபா எந்தச் சமயநூலையேனும் கற்றிருக்கின்றாரா? அவர் ஞானத்தின் அதிகாரி என்று அழைக்கப்படுகின்றார். அவர்கள் சமயநூல்களைக் கற்று, அவற்றின் அதிகாரிகள் ஆகுகின்றார்கள். அவர்கள் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர்கள் கங்கையில் நீராடுவதற்காகச் செல்கின்றார்கள். உண்மையில், அந்தப் பக்தி இல்லறத்தினருக்கு உரியதாகும். சற்கதியை அருள்பவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நான் உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே இங்கு வருகின்றேன். நீங்கள் ஆசீர்வாதங்களையோ கருணையையோ கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஆசிரியர் ஆவேன். நீங்கள் கருணையையோ அல்லது ஆசீர்வாதத்தையோ ஏன் வேண்டுகின்றீர்கள்? நீங்கள் பல பிறவிகளாக ஆசீர்வாதங்களைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது தாய் தந்தையின் சொத்துக்களுக்கு அதிபதிகளாக ஆகுவதற்கு வாருங்கள். உங்களால் வேறு என்ன ஆசீர்வாதங்களைப் பெற முடியும்? ஒரு குழந்தை பிறந்தவுடன், அவர் தனது தந்தையின் சொத்திற்கு வாரிசு ஆகுகின்றார். உங்கள் லௌகீகத் தந்தையிடம் கருணை காட்டும்படி நீங்கள் வேண்டுவீர்களா? இங்கே கருணை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இங்கே தந்தையை நினைவு செய்தால் போதும். தந்தை ஒரு புள்ளி என்பதை எவரும் அறியாமல் உள்ளார்கள். தந்தையே இப்பொழுது உங்களுக்கு இதனைக் கூறியுள்ளார். அனைவரும் அழைக்கின்றார்கள்: தந்தையான கடவுளே, பரமாத்மாவான பரமதந்தையே! ஆகையால், அவர் பரமாத்மா ஆவார், அப்படித்தானே? அவர் பரமன் ஆவார். ஏனைய அனைவரும் ஆத்மாக்கள் ஆவார்கள். பரமாத்மா வந்து உங்களைத் தனக்குச் சமமானவர் ஆக்குகின்றார். வேறு எதுவும் இல்லை. சுவர்க்கத்தைப் படைப்பவரான எல்லையற்ற தந்தை உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆக்குவதற்கு வந்துள்ளார் என்பது வேறு எவரது புத்தியிலும் உள்ளதா? ஸ்ரீகிருஷ்ணர் ஏன் பூகோளத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒருவர் குழந்தையாக தனது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த கணத்திலிருந்து அவரது ஆயுட்காலம் ஆரம்பம் ஆகுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுக்கின்றார். அவர் கருப்பையில் இருந்து வெளிவந்த கணத்தில் இருந்தே அவரது 84 பிறவிகளின் கணக்கு ஆரம்பம் ஆகுகின்றது. அதன்பின்னர் அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதற்கு 30 இலிருந்து 35 வருடங்கள் வரை எடுக்கின்றது. ஆகையால், அந்த 30 அல்லது 35 வருடங்கள் 5000 வருடங்களில் இருந்து கழிக்கப்பட வேண்டும். சிவபாபாவை பொறுத்தவரையில் நீங்கள் எதனையும் கணக்கிட முடியாது. சிவபாபா வந்த கணமென எந்த ஒரு நேரமும் குறித்துக் கொடுக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே காட்சிகள் கிடைத்தன. ஒரு முஸ்லிம் நபர் கூட பூந்தோட்டம் போன்றவற்றைக் கண்டார். அந்தளவிற்கு வேறு எவரும் தீவிர பக்தி செய்யவில்லை. அவர்கள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது தாமாகவே திரான்சில் செல்வதுண்டு. ஏனையவர்கள் அதிகளவு தீவிர பக்தி செய்கின்றார்கள்! தந்தை அமர்ந்திருந்து உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகின்றார். பாபா தொலை தூரத்திலிருந்து வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் இவருக்குள் பிரவேசித்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். எவ்வாறாயினும் நீங்கள் வெளியில் சென்றவுடன், போதை குறைந்து விடுகின்றது. நீங்கள் இவ்விடயங்களை நினைவு செய்வீர்களாயின், சந்தோஷம் என்ற பாதரசம் அதிகரிப்பதுடன் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியையும் கோருவீர்கள். எவ்வாறாயினும் அதற்குக் காலம் எடுக்கும். இப்பொழுது பாருங்கள், ஸ்ரீகிருஷ்ணர் ஆத்மா தனது இறுதிப் பிறவியில் முழு ஞானத்தையும் கொண்டிருக்கின்றார். அதன் பின்னர், அவர் கருப்பையில் இருந்து வெளிவரும் போது, அவரிடம் ஒரு சதப் பெறுமதியான ஞானமும் இருக்க மாட்டாது. ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் இசைக்கவில்லை என்றும், அவரிடம் இந்த ஞானமும் இருக்கவில்லை என்றும் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். உலக அதிபதிகளான இலக்ஷ்மி நாராயணனிடம் ஞானம் இல்லாதிருக்கும் போது, எவ்வாறு சாதுக்கள், புனிதர்கள், சந்நியாசிகளிடம் இருக்க முடியும்? அவர் கடலில் ஓர் அரசமர இலையில் மிதந்து வந்தார் என்றும் அவர் இதைச் செய்தார், அதைச் செய்தார் என்றும் அவர்கள் காட்டுகின்றார்கள். அவை அனைத்தும் அவர்கள் எழுதிய கட்டுக் கதைகள் ஆகும். ‘அவர் தனது பாதத்தைக் கங்கை ஆற்றில் வைத்தபோது கங்கை கீழே சென்று விட்டது’. மக்கள் தமது கற்பனையினால் எதனை எல்லாம் உருவாக்குகின்றார்கள் எனப் பாருங்கள்! தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: மக்களால் சொல்லப்படுகின்ற பிழையான விடயங்களை நம்பாதீர்கள். பலரும் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் கற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள்! உங்கள் சரீரத்தையும் மறந்திடுங்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி, தனது பாகத்தை நடிப்பதற்கு வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும், இடங்களிலும், ஆடைகளிலும் இன்னொன்றை எடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இது அழுக்கடைந்த ஆடையாகும். ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையற்றவை. ஆத்மா அவலட்சணமாகவும், அழகாகவும் ஆகுகின்றார் எனக் கூறப்படுகின்றது. ஆத்மா தூய்மையாக இருக்கும் போது, அவர் அழகாக இருந்தார். அதன் பின்னர், காமச்சிதையில் அமர்ந்த பின்னர் அவர் அவலட்சணம் ஆகுகின்றார். அவர் இப்பொழுது தந்தையினால் ஞானச்சிதையில் அமர்த்தப்படுகின்றார். தூய்மையாக்குகின்ற தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். கலப்படம் ஆத்மாவிலேயே கலந்துள்ளது. கலியுகத்தின் இறுதியில் நீங்கள் ஏழைகள் ஆகுகின்றீர்கள். அதன் பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தங்க மாளிகைகள் கட்டுகின்றீர்கள். இங்கே வைரங்களுக்கு எவ்வளவு பெறுமதி உள்ளது என்பது அற்புதமாகும். அங்கே, அவை கற்களைப் போன்றதாகும். உங்கள் புத்தியை நீங்கள் தந்தையிடம் இருந்து பெறும் இந்த ஞானமுத்துக்களினால் இப்பொழுது நிரப்புகின்றீர்கள். தட்டு நிறைந்த முத்துக்கள் கடலில் இருந்து எடுத்து வரப்பட்டன என்று எழுதப்பட்டுள்ளது. கடலிடம் இருந்து நீங்கள் விரும்பியளவை எடுத்துக் கொள்ளுங்கள்! சுரங்கங்கள் கூட நிரம்புகின்றன. நீங்கள் காட்சிகள் கண்டீர்கள். அவர்கள் மாயையான ஜீனியைப் பற்றி ஒரு நாடகத்தைக் காட்டுகின்றார்கள். அவர் தங்கக்கட்டிகள் இருப்பதைக் (சூட்சும உலகில்) கண்டு, அவற்றில் தன்னுடன் சிலவற்றை எடுத்துவர நினைத்தார். எவ்வாறாயினும், அவர் கீழே வந்த போது, எதுவும் இருக்கவில்லை. அங்கே, நீங்கள் தங்கக் கட்டிகளினால் மாளிகைகள் கட்டுவீர்கள். உங்கள் சந்தோஷப் பாதரசம் அதிகரிக்கும் வகையில் அத்தகைய எண்ணங்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். சிவபாபா 5000 வருடங்களின் முன்னரும் வந்தார் என்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர் 5000 வருடங்களின் முன்னரும் வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் அவர் உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார். இங்கு வந்து பிராமணர்கள் ஆகுபவர்கள் மாத்திரமே பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் பல்வேறு ரூபங்களைக் கொண்ட வடிவம் ஒன்றை உருவாக்குகின்றார்கள். பிராமணர்களின் உச்சிக்குடுமியை அவர்கள் அதிலிருந்து அகற்றி விட்டார்கள். பிராமண குலமே அதி மேன்மையான குலமென்று நினைவு கூரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் பௌதீக பிராமணர்கள் ஆவார்கள். ஆனால் நீங்கள் ஆன்மீகப் பிராமணர்கள் ஆவீர்கள். நீங்கள் உண்மையான கதையைக் கூறுகின்றீர்கள். இதுவே அமரத்துவக் கதையான சத்தியநாராயணனின் கதையாகும். பாபா அமரத்துவ கதையைக் கூறி, உங்களை அமரர்கள் ஆக்குகின்றார். இந்த மரண உலகம் அழிய உள்ளது. சிவபாபா கூறுகின்றார்: நான் உங்களை மீண்டும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். பல ஆத்மாக்கள் உள்ளனர்! அங்கே சப்தம் இருக்க மாட்டாது என்பதை ஆத்மாக்கள் அறிவார்கள். தேனிக் கூட்டம் ஒன்றாக பறந்து செல்லும் போது அதிகளவு இரைச்சல் இருக்கும்! தேனிக்கள் அனைத்தும் இராணித்தேனியின் பின்னால் பறந்து செல்லும். அவற்றிடையே அதிகளவு ஒற்றுமை நிலவும். ரீங்காரமிடும் விட்டில் பூச்சிகளின் உதாரணமும் இங்கிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களுக்கு இந்த ஞானத்தை ரீங்காரமிடுகிறீர்கள், அவர்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுகிறார்கள். உங்களுடையது இல்லறப்பாதை ஆகும், இதிலும். பெரும்பான்மையினர் தாய்மார்கள் ஆவார்கள். இதனாலேயே, 'தாய்மார்களுக்கு வந்தனங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது. பிரம்மாகுமாரி என்பவர் ஏனையவர்களைத் தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கான அவர்களின் ஆஸ்தியைப் பெறச் செய்கின்றவர் ஆவார். தந்தை சதா சந்தோஷம் என்னும் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார். சேவை செய்பவர்களும் நன்றாகக் கற்பவர்களும் அதிபதிகள் ஆகுகிறார்கள். ஓர் அரசராக ஆகுவதா அல்லது ஒரு சேவகர் ஆகுவதா மேலானது? இறுதியில், நீங்கள் என்னவாக ஆகவுள்ளீர்கள் என்பதைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அப்பொழுது மனம் வருந்துதல் இருக்கும்: நான் ஏன் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை? தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நீங்கள் ஒரு நிலையத்தைத் திறப்பதற்காக ஓர் அறையை ஒருவரிடமிருந்து பெறுவதாகவும், இருந்தாலும், அவர் தொடர்ந்தும் மாமிசம் போன்றவற்றை உண்கிறார் என்பதாக இருக்கக்கூடாது. ஒருவர் ஒரு புண்ணியாத்மாவாக இருப்பார், ஆனால் மற்றவரோ ஒரு பாவாத்மாவாக இருப்பார். ஆகவே, அந்த இடமும் ஓர் ஆச்சிரமமாக முடியாது. நீங்கள் உங்கள் வீட்டில் சுவர்க்கத்தை உருவாக்கினால் நீங்களும் சுவர்க்கத்தில் இருப்பீர்கள். ஆசீர்வாதங்களில் மட்டும் தங்கியிருக்க வேண்டாம். தந்தையை நினைவு செய்யுங்கள்! அவர் உங்களைத் தூய்மையாக்கி, உங்களைத் தன்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். நீங்கள் அத்தகையதோர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்கிறீர்கள் என்னும் பெரும் சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவுசெய்தால், உங்கள் பாவங்களும் அதிகளவுக்கு அழிக்கப்படும். தந்தை உங்களிடம் அன்பு செலுத்துவதைப் போன்று, உலகில் எவராலும் உங்களிடம் அன்பு செலுத்த முடியாது. அவர் அன்புக்கடல் என அழைக்கப்படுகிறார். நீங்களும் அவரைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் எவருக்காவது துன்பத்தை விளைவித்தால், அல்லது, குழப்பத்தை ஏற்படுத்தினால், நீங்கள் துன்பத்திலேயே மரணிப்பீர்கள். இதனைக் கூறுவதனால் தந்தை உங்களைச் சபிக்கவில்லை, ஆனால் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சந்தோஷத்தைக் கொடுங்கள், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்! அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள். பாபாவும் அன்புக்கடல் ஆவார். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1.பிறரால் கூறப்படும் பிழையான விடயங்களை நம்ப வேண்டாம். நீங்கள் கற்ற பிழையான விடயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, இப்பொழுது சரீரமற்றவர்கள் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள்.2. ஆசீர்வாதங்களில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டாம். உங்களைத் தூய்மையாகவும் ஆக்குங்கள். ஒவ்வோர் அடியிலும் தந்தையைப் பின்பற்றுங்கள். எவருக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டாம். எவரையும் குழப்பமடையச் செய்யவும் வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முழுமையான நம்பிக்கை நிறைந்தவராகி, உண்மையான அன்பைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் ஒரேயொருவருடன் உங்களை இணைத்து, ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்துக் கொள்வீர்களாக.முழுமையான நம்பிக்கை நிறைந்த குழந்தைகளான உங்களுக்கு தந்தை, தந்தையின் பணி, தந்தையின் புகழ், தந்தையின் ஞானம் என்பதைத் தவிர வேறு எதுவும் உங்களின் எண்ணங்களிலும் கனவுகளிலும் கிடையாது. நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கே சொந்தம் ஆகியுள்ளீர்கள். உங்களின் புத்திகளின் அன்பானது சதா ஒரேயொருவருடன் இணைந்திருக்க வேண்டும். அப்போது நீங்கள் பலரின் சகவாசத்தால் நிறமூட்டப்பட மாட்டீர்கள். எனவே, உங்களின் முதல் சத்தியம் என்னவென்றால், நான் ஏனைய அனைத்தில் இருந்தும் என்னைத் துண்டித்து, ஒரேயொருவருடன் மட்டுமே என்னை இணைத்துக் கொள்வேன் என்பதாகும். இந்தச் சத்தியத்தை நிறைவேற்றுவது என்றால், முழுமையாக நம்பிக்கை நிறைந்தவராக இருப்பதாகும்.
சுலோகம்:
உங்களின் சத்தியத்தின் ஆதி ஸ்திதியானது, இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும் உங்களைச் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆக்கும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
நீங்கள் அதிமேலான தந்தையின் குழந்தைகள் என்பதை நினைவு செய்வதன் மூலம், உங்களின் ஸ்திதியானது நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும். ஒரேயொருவருடன் உங்களுக்கு சகல உறவுமுறைகளும் இருக்கும்போது, உங்களின் ஸ்திதியும் ஏக்ரஸ் (நிலையானது மற்றும் ஸ்திரமானது) ஆக இருக்கும். உறவுமுறையின் இழையானது யாராவது ஒருவரை நோக்கி இழுக்குமாக இருந்தால், நீங்கள் நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருக்க மாட்டீர்கள். எனவே, உங்களின் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆக்குவதற்கு, ஒரேயொருவரைத் தவிர வேறு எவரையும் பார்க்காதீர்கள்.