14.07.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.11.20     Om Shanti     Madhuban


தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு, இரண்டு விடயங்களில் திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள்: உங்களின் சுயமரியாதையைப் பேணுதல் மற்றும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தல்.


இன்று, பாப்தாதா தனது எல்லோரிலும் மிக அழகான, எல்லோரிலும் மிக இனிமையான, சிறிய பிராமணக் குடும்பத்தையும் சிறிய பிராமண உலகையும் பார்க்கிறார். இந்தச் சிறிய உலகம் மிகவும் தனித்துவமானதும் அத்துடன் அழகானதும் ஆகும்! ஏன் அது அழகானது? ஏனென்றால், இந்த பிராமண உலகில் ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு விசேடமான ஆத்மா ஆவார். புறத்தே ஆத்மாக்களான நீங்கள் பார்ப்பதற்கு சாதாரணமானவர்கள் போல் தோன்றினாலும், பிராமண ஆத்மாக்களான உங்களின் மகத்தான சிறப்பியல்பு என்னவென்றால், நீங்கள் உங்களின் தெய்வீகப் புத்திகளால் பரமாத்மாவை இனங்கண்டுள்ளீர்கள். அது 90 வயதான ஒருவராக, நோய்வாய்ப்பட்டவராக இருந்தாலும், விவிஐபி களாக இருந்தாலும், பிராமணர்களான உங்களைத் தவிர வேறு எவரிடமும் பரமாத்மாவை இனங்காண்பதற்கான தெய்வீகப் புத்தியும் தெய்வீகக் கண்ணும் இல்லை. தாய்மார்களான நீங்கள் எல்லோரும் ஏன் இங்கே வந்துள்ளீர்கள்? உங்களின் கால்கள் வேலை செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன, நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் அவரை இனங்கண்டதால் மட்டுமே, இங்கே வந்துள்ளீர்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இனங்காணும் கண்ணை அல்லது புத்தியைப் பெற முடியாது. தாய்மார்களான நீங்கள் எல்லோரும் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள்தானே? ‘நாங்கள் கண்டோம்! நாம் அடைந்துவிட்டோம்!’ தாய்மார்களான உங்களுக்கு இந்தப் போதை உள்ளதா? நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். மிகவும் நல்லது! பாண்டவர்களான உங்களுக்கு இந்தப் போதை உள்ளதா? நீங்கள் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருக்கிறீர்கள். சக்திகளில் எதுவும் குறைவில்லை. பாண்டவர்களிலும் எதுவும் குறைவில்லை. எவ்வாறாயினும், இந்தச் சிறிய உலகம் எத்தனை அழகானது என்பதைப் பார்ப்பதில் பாப்தாதாவிற்கு சந்தோஷம் உள்ளது! நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, ஆத்மாக்களான நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்!

இன்று, பாப்தாதா உள்நாட்டினதும் வெளிநாடுகளிலும் உள்ள ஆத்மாக்கள் எல்லோருடைய இதயங்களின் பாடலைக் கேட்டார்: ‘பாபா, இனிய பாபா! நாம் அறிவோம், நாம் கண்டோம்!’ சகல திசைகளையும் சேர்ந்த குழந்தைகள் இந்தப் பாடலைப் பாடியவண்ணம் சந்தோஷத்தில் அமிழ்ந்திருந்தார்கள். அத்துடன் அன்புக்கடலில் மூழ்கியிருந்தார்கள். இங்கே பௌதீக ரூபத்தில் இல்லாமல் இருந்தபோதும், எங்கும் உள்ள குழந்தைகள் தமது இதயங்களாலும் தமது திருஷ்டியாலும் பாப்தாதாவின் முன்னால் இருந்தார்கள். தொலைவில் உள்ள குழந்தைகளையும் பாப்தாதா தனக்கு முன்னால் பௌதீக ரூபங்களில் அமர்ந்திருப்பவர்களைப் போன்றே பார்க்கிறார். இந்த நாடோ அல்லது வெளிநாடுகளோ, அங்கே சென்று அவற்றைச் சுற்றிவர பாப்தாதாவிற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? அதற்குப் பதிலாக, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் பல-பல-பல மில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் இதயத்திலும் ஓர் எண்ணத்தை மட்டுமே பாபா பார்க்கிறார். எல்லோரும் தமது கண்களால் கூறுகிறார்கள்: நாம் இறைவன் எமக்குக் கொடுத்த ஆறு மாதங்கள் வீட்டுவேலையை நினைவு செய்கிறோம். நீங்கள் எல்லோருமே இதை நினைவு செய்கிறீர்கள்தானே? நீங்கள் அதை மறக்கவில்லைத்தானே? பாண்டவர்களான நீங்கள் இதை நினைக்கிறீர்களா? நீங்கள் அதை மிக நன்றாக நினைவு செய்கிறீர்களா? ஏன் பாப்தாதா இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறார்? இதற்கான காரணம் என்ன? நீங்கள் நேரத்தைப் பார்க்கிறீர்கள். பிராமண ஆத்மாக்களான நீங்களும் உங்களைப் பார்க்கிறீர்கள். உங்களின் மனங்கள் இளமையாகின்றன. உங்களின் சரீரங்களுக்கு வயதாகின்றன! உங்களால் காலத்தின் அழைப்பையும் ஆத்மாக்களின் அழைப்பையும் மிகத் தெளிவாகக் கேட்க முடிகிறது. ஆகவே, ஆத்மாக்களின் இதயங்களின் அழைப்பானது அதிகரிப்பதை பாப்தாதா பார்த்தார்: ‘ஓ சந்தோஷத்தை அருள்பவரே! ஓ அமைதியை அருள்பவரே! ஓ உண்மையான சந்தோஷத்தினை அருள்பவரே! அத்துடன் அதில் ஒரு துளியை எங்களுக்கு வழங்குங்கள்!’

இவ்வாறு அழைப்பவர்களின் வரிசை எத்தனை நீண்டதாக இருக்கும் என நினைத்துப் பாருங்கள். தந்தையின் வெளிப்படுத்துகை மிக விரைவில் இடம்பெற வேண்டும் என நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் இந்த எண்ணம் இருப்பதனால், இந்த வெளிப்படுத்துகை ஏன் தாமதம் ஆகுகிறது? உங்களின் இதயங்களில் இந்த ஆசை உள்ளது. நீங்கள் அதைப் பற்றியும் பேசுகிறீர்கள்: நான் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். நீங்கள் இவ்வாறு ஆகவிரும்புகிறீர்கள்தானே? நீங்கள் இப்படி ஆகவிரும்புகிறீர்களா? அச்சா, நீங்கள் ஏன் அப்படி ஆகுவதில்லை? நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். என்னவாக வேண்டும் என்றும் எப்படி ஆகவேண்டும் என்றும் இரண்டு கேள்விகள் எழுவதில்லை. ஏனென்றால், இவை இரண்டும் சமமானவர் ஆகுதல் (சமான்) என்ற கூற்றில் அடங்கியுள்ளது. நீங்கள் என்னவாக வேண்டும் என்பதன் விடை உங்களிடம் உள்ளது. நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். நீங்கள் எப்படி அவ்வாறு ஆகப் போகின்றீர்கள்?

தந்தையைப் பின்பற்றுங்கள்: தந்தையினதும் தாயினதும் அடிச்சுவடுகள்! அசரீரியான தந்தையும் பௌதீகத்தாயான பிரம்மாவும். அவர்களை எப்படிப் பின்பற்றுவது என்றுகூட உங்களுக்குத் தெரியாதா? இன்றைய உலகில், குருடர்களால்கூடக் குருடர்களைப் பின்பற்ற முடிகிறது. ஒரு தடியின் சத்தத்தைத் தமது சொந்தத் தடியால் பின்பற்றுவதன் மூலம், அவர்களால் தொலைவிற்கே செல்ல முடியும் என்பதைக் காண முடிகிறது. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்களே மூன்றாம் கண்ணை உடையவர்கள். அத்துடன் முக்காலங்களையும் அறிந்தவர்கள். பின்பற்றுவது என்பது உங்களுக்குப் பெரிய விடயம் அல்ல. இது உங்களுக்குக் கஷ்டமான விடயமா? பேசுங்கள்! இது கஷ்டமான ஒன்றா? அது அப்படியல்ல. ஆனால் அது அப்படி ஆகுகிறது. பாப்தாதா எங்கும் சுற்றுலா சென்று, நிலையத்திலோ அல்லது வீட்டிலோ, ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பிரம்மாபாபாவின் பல படங்களை வைத்திருப்பதைக் காண்கிறார். நீங்கள் எங்கே பார்த்தாலும், படங்கள் மட்டுமே உள்ளன. அவை அவ்யக்த தந்தையினதோ அல்லது பிரம்மாபாபாவினதோ ஆகும். இது நல்லது. எவ்வாறாயினும். ஒரு படத்தைப் (சித்திர) பார்ப்பதன் மூலம் உங்களால் நடத்தையை (சரித்திர) நினைவு செய்ய முடிகிறதா அல்லது உங்களால் அதை நினைவு செய்ய முடியவில்லையா என பாப்தாதா வியப்படைகிறார். நீங்கள் படத்தை வெறுமனே பார்க்கிறீர்களா? ஒரு படத்தைப் பார்ப்பதன் மூலம், நீங்கள் தூண்டுதல்களைப் பெற வேண்டும். பாப்தாதா ஒரு வார்த்தையைத் தவிர வேறு எதையும் உங்களுக்குச் சொல்லவில்லை. அதைப் பின்பற்றுங்கள், அவ்வளவுதான்! அதிகம் சிந்திக்காதீர்கள் அல்லது பல திட்டங்களைச் செய்யாதீர்கள். ‘இதுவல்ல! நான் அதைச் செய்ய வேண்டும். நான் அதை இப்படிச் செய்யக்கூடாது! நான் அப்படிச் செய்ய வேண்டும்!’ இல்லை, தந்தை என்ன செய்தாரோ, நீங்கள் அதைப் பிரதி செய்ய வேண்டும். எப்படிப் பிரதி செய்வது என உங்களுக்குத் தெரியுமா? தற்காலத்தில், விஞ்ஞானம் போட்டோபிரதி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளார்கள்தானே? உங்களிடம் ஒரு போட்டோபிரதி இயந்திரம் உள்ளதல்லவா? எனவே, இங்கே தந்தை பிரம்மாவின் படங்கள் உங்களிடம் உள்ளன. அவற்றை மிக நன்றாக வைத்திருங்கள்! மிகப் பெரிய படங்களை வைத்திருங்கள். நீங்கள் அவற்றை வைத்திருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு போட்டோபிரதியைச் செய்யுங்கள்!

எனவே, எங்கும் சுற்றி வரும்போது பாப்தாதா இதைக் கண்டார். நீங்கள் படத்தை விரும்புகிறீர்களா அல்லது நடத்தையை விரும்புகிறீர்களா? உங்களிடம் எண்ணம் உள்ளது, உற்சாகம் உள்ளது, அத்துடன் இலட்சியமும் உள்ளது. இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? எதையாவது பாதுகாப்பாகப் பொருத்துவதற்கு, அது நான்கு மூலைகளிலும் உறுதியாகப் பொருத்தப்பட வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். எனவே, மூன்று மூலைகள் மிக உறுதியாக இருப்பதையும் ஒரு மூலை இப்போது உறுதியாக்கப்பட வேண்டும் என்பதையும் பாப்தாதா கண்டார். உங்களிடம் எண்ணம் உள்ளது. உற்சாகம் உள்ளது. உங்களுக்கு இலட்சியமும் உள்ளது. அவர்களில் எவரிடமாவது அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் எனக் கேட்டால், தாம் தந்தைக்குச் சமமாக வேண்டும் என்றே அவர்கள் சொல்வார்கள். அவர்களில் எவரும் தந்தையை விடக் குறைவாக வேண்டும் எனச் சொல்ல மாட்டார்கள், என்றுமே இல்லை! அவர்கள் சமமாகவே ஆகவிரும்புகிறார்கள். இது மிகவும் நல்லது. நீங்கள் இந்த ஒரு மூலையை உறுதியாக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து முன்னேறும்போது, அது தளர்வடைகிறது. அந்த மூலை திடசங்கற்பம் ஆகும். உங்களுக்கு எண்ணமும் உள்ளது. உங்களிடம் இலட்சியமும் உள்ளது. ஆனால், இக்கட்டான சூழ்நிலை தோன்றும்போது, சாதாரணமான வார்த்தைகளில் நீங்கள் ஒரு பிரச்சனை என்று குறிப்பிடுகிறீர்கள், அது உங்களின் திடசங்கற்பத்தைப் பலவீனம் ஆக்குகிறது. திடசங்கற்பம் என்றால், நீங்கள் இறக்க வேண்டியிருந்தாலும் உங்களின் எண்ணத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். நீங்கள் தலைவணங்க வேண்டியிருக்கும். நீங்கள் இறக்க வேண்டியிருக்கும். நீங்கள் வாழ்க்கையில் உங்களை வளைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் ஒருபோதும் உங்களின் எண்ணத்தைக் கைவிட மாட்டீர்கள். இது திடசங்கற்பம் எனப்படுகிறது. சிறுவர்கள் ஓம் நிவாசில் தங்கியிருக்க வந்தபோது, பிரம்மாபாபா அவர்களைக் கேலி செய்வதுண்டு. அவர்களைப் பலசாலிகள் ஆக்குவதற்கு, அவர்களிடம் அவர் கேட்பார்: நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பீர்களா? அதிகளவு மிளகாய் சாப்பிடுவீர்களா? நீங்கள் பயப்பட மாட்டீர்கள்தானே? அதன்பின்னர், அவர்களின் கண்களின் முன்னால் அவர் தனது கைகளைத் தட்டுவார். (அவர்கள் தமது கண்களைச் சிமிட்டினால், தோல்வி அடைந்துவிடுவார்கள்) எனவே, இந்த முறையில் பிரம்மாபாபா சிறுவர்களைப் பலசாலிகள் ஆக்கினார். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், உங்களின் எண்ணத்தின் கண் ஒருபோதும் அசையக்கூடாது! நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது, சிவப்பு மிளகாய்களும் ஒரு பாத்திரம் தண்ணீரும். நீங்கள் எல்லோரும் இப்போது வளர்ந்துவிட்டீர்கள்தானே? ஆகவே, இன்றும், பாப்தாதா உங்களிடம் கேட்கிறார்: உங்களுக்குள் திடசங்கற்பமான எண்ணம் இருக்கிறதா? தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பம் உங்களின் எண்ணத்தில் காணப்படுகிறதா? நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்பதல்ல, ஆனால், நீங்கள் நிச்சயமாக அப்படி ஆகப் போகின்றீர்கள். அச்சா! நீங்கள் இப்போது உங்களின் கைகளை அசைக்கலாம்! தொலைக்காட்சியுடன் இருப்பவர்கள், அவர்களின் புகைப்படங்களை எடுங்கள்! தொலைக்காட்சி பயனுள்ளதாக இருக்க வேண்டும்தானே? உங்களின் கைகளை உயரத் தூக்குங்கள்! அச்சா, தாய்மார்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்களே, உங்களின் கைகளை மேலும் உயரே தூக்குங்கள்! அச்சா. மிகவும் நல்லது. கபின்களில் அமர்ந்திருப்பவர்கள், தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. கபின்களில் அமர்ந்திருப்பவர்கள் கருவிகளாக இருக்கிறார்கள். அச்சா. நீங்கள் குறுகிய நேரத்திற்கு உங்களின் கைகளை உயர்த்தி, பாப்தாதாவை மகிழ்வித்தீர்கள்.

இப்போது, குழந்தைகளை ஒரு விடயத்தைச் செய்ய வைக்க வேண்டுமென்று பாப்தாதா விரும்புகிறார். அவர் உங்களுக்கு அதைப் பற்றிக் கூற விரும்பவில்லை. எனினும். நீங்கள் அதைச் செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார். உங்களின் மனங்களில் திடசங்கற்பத்தை வைத்திருங்கள். அற்ப விடயங்களுக்காக உங்களின் எண்ணங்களைப் பலவீனம் ஆக்காதீர்கள். யாராவது உங்களை இகழ்ந்தாலும், உங்களை வெறுத்தாலும், உங்களை அவமதித்தாலும் அல்லது தூற்றினாலும் அல்லது உங்களுக்குத் துன்பம் விளைவித்தாலும், உங்களின் நல்லாசிகள் ஒருபோதும் நிற்கக்கூடாது. நீங்கள் ஒரு சவால் விடுத்து, நீங்கள் மாயை மற்றும் சடப்பொருளை மாற்றுகின்ற உலகை மாற்றுபவர்கள் எனச் சொல்கிறீர்கள். உங்களின் தொழில் உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? நீங்கள் உலகை மாற்றுபவர்கள்தானே? ஒருவர் தனது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தினால், உங்களுக்குத் துன்பம் கொடுத்தாலும், உங்களைப் புண்படுத்தினாலும் அல்லது உங்களைத் தளம்பல் அடையச் செய்தாலும், உங்களால் துயரமான எதையும் சந்தோஷமானதாக மாற்ற முடியாதா? உங்களாhல் அவமானங்களைச் சகித்துக்கொள்ள முடியாதா? ஓர் அவதூறை உங்களால் ஒரு ரோஜாவாக மாற்ற முடியாதா? அந்தப் பிரச்சனையை உங்களால் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற எண்ணமாக மாற்ற முடியாதா? நீங்கள் உங்களின் பிராமணப் பிறவி எடுத்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதும், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களின் இதயபூர்வமான நம்பிக்கையுடன், ‘நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர்!’ எனச் சொல்வதற்கு உங்களுக்கு ஒரு விநாடியோ ஒரு மாத காலமோ எடுத்திருந்தாலும், உங்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டதல்லவா? நீங்கள் இதை அனுபவம் செய்திருக்கிறீர்கள்தானே? அந்த வேளையில், நீங்கள் மாயைக்கு ஒரு சவால் விடுத்து, நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவீர்கள் எனச் சொன்னீர்கள். நீங்கள் இந்தச் சவாலை மாயைக்கு விடுத்தீரகளா? நீங்கள் மாயையை வென்றவர் ஆகவிரும்புகிறீர்களா இல்லையா? நீங்கள் மாயையை வென்றவர்கள்தானே? அல்லது, அவ்வாறு ஆகுவதற்கென வேறு யாராவது வருவார்களா? நீங்கள் மாயைக்குச் சவால் விடுத்ததால், இந்தப் பிரச்சனைகள், இந்தச் சூழ்நிலைகள், இந்தக் குழப்பங்கள் எல்லாமே மாயையின் இராஜரீக வடிவங்களாகும். சூழ்நிலைகள் மாறமாட்டாது, நிலையம் மாற மாட்டாது, இடம் மாறமாட்டாது, ஆத்மாக்கள் மாற மாட்டார்கள், ஆனால் நான் மாற வேண்டும். எல்லோருக்கும் உங்களின் சுலோகங்கள் மிகவும் பிடிக்கும். நாம் எவரையும் பழிவாங்க விரும்பவில்லை, ஆனால் நாம் நிச்சயமாக மாறுவோம். இது பழையதொரு சுலோகமாகும். மாயை மேலும் புதிய மற்றும் இராஜரீகமான வடிவங்களில் வருவாள். பயப்படாதீர்கள்! மாயை இன்ன ரூபங்களில் வருவாள் என பாப்தாதா உங்களுக்குக் கீழ்க்கோடிட்டுக் காட்டுகிறார். அவள் வருகிறாள். அது மாயை என நீங்கள் உணராதவகையில் அவள் வருவாள். ‘தாதி, உங்களுக்குப் புரியவில்லை! இது மாயை இல்லை! இது நிஜம்!’ என நீங்கள் சொல்வீர்கள். அவள் மேலும் இராஜரீகமான வடிவத்தில் வருவாள். பயப்படாதீர்கள்! ஏன்? எதிரி ஒருவர், வெற்றி பெற்றாலென்ன அல்லது தோற்றாலென்ன, தன்னிடம் உள்ள சிறிய அல்லது பெரிய ஆயுதங்களில் எதையாவது பயன்படுத்த மாட்டாரா? அல்லது, அவர் அவற்றைப் பயன்படுத்த மாட்டாரா? அவர் அவற்றைப் பயன்படுத்துவார். ஆகவே, மாயையும் முடிவிற்கு வரப் போகிறாள். எவ்வாறாயினும், அவளின் முடிவு நெருங்கி வருகின்ற அளவிற்கு, அதற்கேற்ப அவள் தனது ஆயுதங்களைப் பல புதிய வழிமுறைகளில் பயன்படுத்துகிறாள், அத்துடன் பயன்படுத்துவாள். அதன்பின்னர், அவள் உங்களின் காலடிகளில் தலைவணங்குவாள்! முதலில், அவள் உங்களைத் தலைவணங்கச் செய்வாள். பின்னர், அவளே தலைவணங்குவாள். இதில் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் பாபா உங்களைக் கீழ்க்கோடிடும்படி செய்கிறார். தந்தைக்குச் சமமானவர் ஆகுவது உங்களின் இலட்சியமாகும். இதற்கு, உங்களின் சுய மரியாதையைப் பேணுங்கள். மரியாதை கொடுத்தல் என்றால் மரியாதையைப் பெறுதல் என்று அர்த்தம். அதை எடுப்பதன் மூலம் நீங்கள் அதைப் பெற மாட்டீர்கள். ஆனால், அதைக் கொடுத்தல் என்றால் அதைப் பெறுதல் என்று அர்த்தம். யாராவது உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனச் சொல்வது சரியானதல்ல. மரியாதை கொடுத்தல் என்றால் அதைப் பெறுதல் என்று அர்த்தம். எனவே, சுய மரியாதை என்றால் அது சரீர உணர்வின் அடிப்படையில் உள்ள சுயமரியாதை அல்ல. ஆனால், அது பிராமண வாழ்க்கையின் சுயமரியாதை, மேன்மையான ஆத்மாவின் சுயமரியாதை, சம்பூரணம் ஆகுவதன் சுயமரியாதை. ஆகவே, உங்களின் சுயமரியாதையைப் பேணுங்கள். மரியாதையை எடுத்துக் கொள்ளாதீர்கள். மரியாதை கொடுத்தல் என்றால் அதைப் பெறுதல் என்று அர்த்தம். இந்த இரண்டு விடயங்களில் திடசங்கற்பத்தைப் பேணுங்கள். ஒருவர் எந்தளவிற்கு உங்களின் திடசங்கற்பத்தை அசைக்க முயற்சி செய்தாலும், உங்களின் திடசங்கற்பம் பலவீனமாக அனுமதிக்காதீர்கள். அதைப் பலமானது ஆக்குங்கள். அசைக்க முடியாதவர் ஆகுங்கள்! அப்போது மட்டுமே உங்களால் நீங்கள் பாப்தாதாவிற்குச் செய்த ஆறு மாதங்களுக்கான சத்தியத்தை நிறைவேற்ற முடியும். உங்களின் சத்தியம் உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? தொடர்ந்து நாட்களை எண்ணி, 15 தினங்கள் முடிவடைந்துவிட்டன, மேலும் ஐந்தரை மாதங்களே உள்ளன! எனச் சொல்லாதீர்கள். நீங்கள் இதயபூர்வமாக உரையாடும்போது - நீங்கள் அமிர்தவேளையில் இதயபூர்வமாக உரையாடுகிறீர்கள் - பாப்தாதாவிற்கு மிக நல்ல விடயங்களைக் கூறுகிறீர்கள். நீங்கள் அவருக்கு என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே? திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள்! பிழையான விடயங்களில் திடசங்கற்பத்துடன் இருக்காதீர்கள்: எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது, நான் கோபப்பட வேண்டும். அப்படிச் செய்யாதீர்கள்! ஏன்? தற்காலத்தில், பெரும்பாலானோரின் பதிவேட்டிலே, வெவ்வேறு வகையான கோபங்களின் பதிவுகளை பாப்தாதா பெறுகிறார். கோபம் அதன் புற வடிவிலே மிகச் சிறிதளவே காணப்படுகிறது. ஆனால், வெவ்வேறு வகையான கோபத்தின் சுவடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. எத்தனை வகையான கோபங்கள் உள்ளன என்பதில் ஒரு வகுப்பு எடுங்கள். அப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அது எனது நோக்கமோ அல்லது உணர்வோ கிடையாது. நான் வெறுமனே அதைச் சொல்லிவிட்டேன்! இதில் ஒரு வகுப்பு எடுங்கள்!

ஆசிரியர்கள் பலர் வந்துள்ளார்கள்! (1200 ஆசிரியர்கள் வந்துள்ளார்கள்!) 1200 பேருக்கும் திடசங்கற்பமான எண்ணம் இருக்குமாக இருந்தால், நாளையே மாற்றம் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது. அப்போது பல விபத்துக்கள் இடம்பெற மாட்டாது. எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களில் பலர் இருக்கிறீர்கள்! ஆசிரியர்களாக இருத்தல் என்றால், அத்திவாரமான கருவிகளாக இருத்தல் என்று அர்த்தம். அத்திவாரம் பலமாக இருந்தால், அதாவது, அது திடசங்கற்பத்துடன் இருந்தால், மரத்தின் எஞ்சிய பகுதியும் தானாகவே சரியாகிவிடும். தற்காலத்தில், எல்லோரும், வெளியுலகிலும் பிராமண உலகிலும் இருப்பவர்கள் இருவருக்குமே தைரியமும் உண்மையான அன்பும் தேவைப்படுகின்றன. நிபந்தனைகளுடன் கூடிய அன்போ அல்லது சுயநலமான அன்போ இல்லை. ஒன்று, உண்மையான அன்பு. மற்றையது, தைரியம். உதாரணத்திற்கு, ஒருவர் தனது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தினால் 95 சதவீதத் தளம்பலை ஏற்படுத்தக்கூடிய எதையாவது செய்திருக்கக்கூடும். ஆனால், அவர் ஐந்து சதவீதம் நன்றாகச் செய்திருப்பார். நீங்கள் அந்த ஐந்து சதவீதம் நல்லதன்மையைப் பார்த்து, அவர் மிக நன்றாகச் செய்தார் எனக் கூறி அவரை ஊக்குவியுங்கள். அதன்பின்னர், எஞ்சியவற்றையும் அவர் சரிசெய்ய வேண்டும் எனக் கூறினால், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட மாட்டார். ‘நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? இதை இப்படிச் செய்யக்கூடாது! நீங்கள் அதை அப்படிச் செய்யக்கூடாது!’ எனச் சொன்னால், அவர் ஏற்கனவே தனது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுப் பலவீனமாக இருப்பதனால், அவர் பதட்டம் அடைவார். அவரால் முன்னேற முடியாதிருக்கும். அனைத்திற்கும் முதலில், அவரின் ஐந்து சதவீதத்திற்காக அவரை ஊக்கப்படுத்துங்கள். ‘அதை நீங்கள் மிக நன்றாகச் செய்கிறீர்கள்! உங்களால் அதை மிக நன்றாகச் செய்ய முடியும்!’ அதன்பின்னர், காலத்தையும் அவரின் ஸ்திதியையும் கருத்தில் கொண்டு அவருக்கு விளங்கப்படுத்தினால், அவர் மாறுவார். அவரை ஊக்கப்படுத்துங்கள். ஏனென்றால், ஆதிக்கத்தின் கீழுள்ள ஆத்மாக்களுக்குத் தைரியம் கிடையாது. தந்தை எப்படி உங்களை மாற்றினார்? நீங்கள் விகாரமானவர், நீங்கள் அழுக்கானவர் எனக் கூறி உங்களின் பலவீனங்களைப் பற்றி அவர் சொன்னாரா? அவர் அப்படிச் சொன்னாரா? அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நினைவூட்டினார். இந்த மேன்மையான விழிப்புணர்வானது, உங்களுக்குள் சக்தியை ஏற்படுத்தி, உங்களை மாற்றியது. அவர்களுக்கும் நினைவூட்டி, அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இந்த விழிப்புணர்வானது இயல்பாகவே சக்தியை ஏற்படுத்தும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, நீங்கள் இப்போது சமமானவர்கள் ஆகுவீர்கள்தானே? தந்தையையும் தாயையும் பின்பற்றுங்கள் என்ற ஒரு கூற்றை நினைவில் வைத்திருங்கள். தந்தை என்ன செய்தாரோ, அதை நீங்கள் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அவரின் பாதச்சுவடுகளில் உங்களின் பாதச்சுவடுகளை வையுங்கள். அப்போது, சமமானவர் ஆகுவது எவ்வளவு இலகுவானது என்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நாடகம் தொடர்ந்து உங்களுக்குச் சிறிய விளையாட்டுக்களைக் காட்டுகிறது. நீங்கள் வியப்புக்குறிகளைப் போடுவதில்லைத்தானே? அச்சா.

பல குழந்தைகளின் வாழ்த்து மடல்கள், கடிதங்கள், இதயத்தின் பாடல்கள் அனைத்தும் பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. எனது நினைவையும் கொடுங்கள், எனது அன்பைத் தெரிவியுங்கள் என நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள். அதனால், தந்தையும் கூறுகிறார்: அதேபோல், எனது அன்பையும் நினைவுகளையும் வழங்குங்கள். தந்தை உங்களை நினைக்கிறார். குழந்தைகளான நீங்களும் அவரை நினைக்கிறீர்கள். ஏனென்றால், இந்தச் சிறிய உலகில், பாப்தாதாவும் குழந்தைகளான நீங்களும் மட்டுமே இருக்கிறீர்கள். வேறெந்த விரிவாக்கமும் கிடையாது. ஆகவே, நீங்கள் யாரை நினைப்பீர்கள்? குழந்தைகள் தந்தையை நினைப்பார்கள். தந்தையும் குழந்தைகளையே நினைக்கிறார். எனவே, இந்த நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதா அதிக, அதிக, அதிகளவு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.

எங்கும் உள்ள பிராமண உலகின் விசேடமான ஆத்மாக்கள் எல்லோருக்கும், திடசங்கற்பத்தின் மூலம் சதா வெற்றி பெறும் வெற்றி நட்சத்திரங்களுக்கும், தங்களைச் சம்பூரணம் ஆக்குவதன் மூலம் காலத்தின் அழைப்பையும் ஆத்மாக்களின் அழைப்பையும் நிறைவேற்றும் சம்பூரணமான ஆத்மாக்களுக்கும், ஏதாவதோர் ஆதிக்கத்தின் கீழுள்ள பலவீனமான ஆத்மாக்களுக்கு தைரியத்தின் ஆசீர்வாதத்தைக் கொடுத்து ஊக்குவிப்பவர்களுக்கும், தந்தையின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், தமது சொந்த மாற்றத்தின் மூலம், மாயையையும் சடப்பொருளையும் பலவீனமான ஆத்மாக்களையும் மாற்றுகின்ற, உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களுக்கும் எங்கும் உள்ள இந்தச் சிறிய பிராமண உலகின் ஆத்மாக்கள் எல்லோருக்கும் அத்துடன் இங்கே தனிப்பட்ட முறையில் வந்திருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் பலப்பல மில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகுக.

ஆசீர்வாதம்:
நீங்கள் மௌனத்தின் வசதிகளைப் பயன்படுத்தி, தொலைவில் இருந்தே மாயையை இனங்கண்டு, அவளைத் துரத்தி, மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.

மாயை இறுதிக் கணம் வரை வருவாள். மாயையின் கடமை வருவது. அவளைத் தொலைவில் இருந்து விரட்டி அடிப்பது உங்களின் கடமை. மாயை வந்து உங்களை அசைத்து, பின்னர் நீங்கள் அவளைத் துரத்தினால், அதுவும் நேரத்தை வீணாக்குவதேயாகும். ஆகவே, மௌனத்தின் வசதிகளால், தொலைவில் இருந்தே அது மாயை என்பதை இனங்கண்டு கொள்ளுங்கள். அவள் உங்களை நெருங்கி வர அனுமதிக்காதீர்கள். ‘நான் என்ன செய்வது? நான் எப்படி இதைச் செய்வது? நான் இன்னமும் ஒரு முயற்சியாளனே’ என நீங்கள் நினைத்தால், அது மாயைக்கு விருந்துபசாரம் செய்வதைப் போன்றதாகும். அதன்பின்னர் நீங்கள் விரக்தி அடைகிறீர்கள். ஆகவே, அவளைத் தொலைவில் இருந்தே இனங்கண்டு, துரத்தி விடுங்கள். நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
மேன்மையான பாக்கிய ரேகைகள் வெளிப்படட்டும். அப்போது பழைய சம்ஸ்காரங்களின் ரேகைகள் அமிழ்ந்துவிடும்.