14.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையில் ஒருபொழுதும் களைப்படையாதீர்கள். சரீர உணர்வு என்னும் புயல்களே உங்களைக் களைப்படையச் செய்கின்றன. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள், உங்கள் களைப்பு அகன்றுவிடும்.

கேள்வி:
21 பிறவிகளுக்கான உங்கள் மேன்மையான பாக்கியத்தைப் பாழாக்குகின்ற சம்ஸ்;காரம் எது?

பதில்:
முரண்படுகின்ற சம்ஸ்காரத்தை எவராவது கொண்டிருந்து, தந்தையுடனோ அல்லது கல்வியுடனோ முரண்பட்டால், அப்பொழுது அவருடைய பாக்கியம் 21 பிறவிகளுக்குப் பாழாகுகிறது. இதனாலேயே பாபா கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, எவ்வாறு நீங்கள் பலருக்கும் விளங்கப்படுத்தினீர்கள் அல்லது எவ்வாறு நீங்கள் பல்வேறு மக்களுக்கு உதவினீர்கள் என்னும் சரீர உணர்வின் காரணமாக, ஒருபொழுதும் எவ்விதமான தவறான போதையையும் கொண்டிருக்க வேண்டாம். பாபா எவ்வளவு மகத்தான அதிகாரி எனப் பாருங்கள், இருப்பினும் அவர் மிகவும் ஆணவமற்றவர் ஆவார். ஆகவே, தந்தையைப் பாருங்கள்!

பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்! உங்கள் சந்தோஷ நாட்கள் வரவுள்ளன!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். சேவாதாரிக் குழந்தைகளும், யோகத்தில் மூழ்கியிருப்பவர்களும் மிகவும் விரைவாக அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இரவுப் பயணிகளாகிய எங்களின் இரவு, அதாவது, பிராமணர்களாகிய எங்களின் இரவு, இப்பொழுது முடிவுக்கு வருகிறது. பக்தி மார்க்கம் இரவு என்று அழைக்கப்படுகிறது. இரவு என அர்த்தப்படுகின்ற அரைக்கல்பம், முடிவுக்கு வருகிறது. எல்லைக்கு உட்பட்ட பகலும், இரவும் உள்ளன. பிராமணர்களின் பகலாகிய அரைக்கல்பமும், பிராமணர்களின் இரவாகிய மற்றைய அரைக்கல்பமும் உள்னன. இந்நேரத்தில், தந்தை வரும்பொழுது, இருளே உள்ளது. இதுவே அதிகாலைப் பொழுது என்னும் முதல் ஒளியின் நேரம்; காலை வரவுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், தந்தை இப்பொழுது கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நினைவு யாத்திரையில் களைப்படைய வேண்டாம். மக்கள் கால்நடையாகச் செல்கின்ற, பௌதீக யாத்திரைகள் உள்ளன. அவர்கள் மிகவும் மெதுவாகப் பயணித்து வழியெங்கும் கட்டப்பட்டுள்ள ஓய்வுவிடுதிகளில் பல தடவைகள் பயணத்தை நிறுத்துகிறார்கள். குறித்த தங்குமிடங்களில் தாங்கள் நிறுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். முன்னர், அவர்கள் பெருமளவு அன்புடனும், பக்தியுடனும் கால்நடையாகச் செல்வது வழக்கம், அதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படும். இது மிகவும் இலகுவானது. இது இலகு நினைவு அல்லது யோகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். களைப்படைவது என்றால் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவது என்று அர்த்தமாகும். ஆம், மாயையின் தடைகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் இதில் களைப்படைந்தவர்கள் ஆகக்கூடாது. நீங்கள் களைப்படையும் பொழுது, சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் சரீரங்களின் வாழ்வாதாரத்துக்காக நீங்கள் வேலை செய்ய வேண்டும். அதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளது. உங்கள் வாழ்வாதாரத்துக்கு எட்டு மணித்தியாலங்களையும், ஓய்வுக்கு எட்டு மணித்தியாலங்களையும், இதற்கு எட்டு மணித்தியாலங்களையும் கொடுங்கள். எவ்வாறாயினும், எவரும் முழு எட்டு மணித்தியாலங்களையும் கொடுப்பதில்லை. இறுதியில் உங்களால் இந்த நினைவில் எட்டு மணித்தியாலங்கள் நிலைத்திருக்க இயலும். தொடர்ந்தும் உங்கள் அட்டவணையை அதிகரியுங்கள். நீங்கள் வந்து, இங்கே அமர்ந்திருக்கும்பொழுது, பாபாவை நினைவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது, இது தியானத்தை வழிநடத்துதல் என அழைக்கப்படுகிறது. நீங்கள் வந்து பாபாவின் நினைவில் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்து இங்கே அமர்ந்திருக்கும்பொழுது மாத்திரமே நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மாத்திரமே யோகத்தில் அமர்ந்திருக்க எண்ணுகின்ற பலர் இருக்கிறார்கள். ஆனால், தந்தை கூறுகிறார்: உங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளும் பொழுதும், இங்குமங்கும் செல்லும் பொழுதும் யோகத்தில் நிலைத்திருங்கள். மக்கள் கங்கையில் நீராடச் செல்லும் பொழுது, தொடர்ந்தும் இராம நாமத்தைச் செபிக்கிறார்கள். இங்கு, நீங்கள் எதனையும் செபிக்கத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அந்தத் தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் மாத்திரமே பேசுகிறார். நினைவு யாத்திரையிலேயே உங்கள் நன்மை உள்ளது. நீங்கள் இதில் களைப்படைந்தவர்கள் ஆகாதீர்கள். இதில் பல புயல்கள் வரும்; அவை புழுதிப் புயல்கள் போன்றவை அல்ல. மாயையின் புயல்கள் வரும்பொழுது, புத்தியின் யோகம் துண்டிக்கப்படுகிறது. பின்னர், நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, உங்களுடைய வியாபாரத்தையும், குழந்தைகளையும் நினைவு செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: அவ்வியாபாரம் போன்ற அனைத்தும் முடிவடையப் போகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களால் வாரிசுகளாக ஆக இயலாதிருக்கும், ஏனெனில் அனைத்தும் அழிவடையப் போகிறது. இப்பொழுது, எல்லையற்ற தந்தையின் வாரிசுகளே இங்கு உள்ளார்கள். எல்லைக்கு உட்பட்ட ஆஸ்திகள் அழிவடைய உள்ளன. தங்கள் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்யும்பொழுது, அவர்கள் இவ்வாறு அல்லது அவ்வாறு ஆகுவார்கள் எனச் செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது அந்தளவு நேரம் எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, உலகத்துக்கான பற்று அனைத்தையும் முழுமையாகவே அகற்றுங்கள். இது ஒரு சுடுகாடாகும். நீங்கள் உங்கள் வியாபாரத்தை அல்லது குழந்தைகள் போன்றோரைப் பற்றிக் கவலைப்படும் பொழுது மரணித்தால், உங்களையே தேவையின்றி அழித்துக் கொள்வீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்தால், பெரும் செழிப்பு இருக்கும். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனால், அனைத்தும் பாழாகுகிறது. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதனால், செழிப்பு ஏற்படுகிறது. நீங்கள் அதிகளவு நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெருமளவு பெறுகிறீர்கள். நினைவில் நிலைத்திருக்காததனால், பெரும் இழப்பு இருக்கும். பின்னர் அது கல்பம் கல்பமான ஓர் இழப்பாக இருக்கும். இது அத்தகைய பெரும் இழப்புக்கான ஒரு விடயமாகும்! எவ்வாறு உங்கள் முழு ஆஸ்தியையும் கோருவது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். செல்வத்துக்கான அதிகளவு பேராசை இருக்கக்கூடாது. நீங்கள் எதிலும் அதிகளவில் ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. ஒருவர் கடனாளி ஆகும் பொழுது, அவர் முழுமையாகவே சிவபாபாவை மறந்து விடுகின்ற வகையில், அதிகளவு கவலை இருக்கின்றது. தாங்கள் இப்பாதைக்கு வந்த காரணத்தினால், தாங்கள் கடனாளி ஆகினார்கள் அல்லது தாங்கள் நோய்வாய்ப்பட்டார்கள் என அவர்கள் இந்த ஞானத்தை அப்பொழுது குறை சொல்கிறார்கள். நீங்கள் ஒருபொழுதும் அவ்விதமாகச் சிந்திக்கக்கூடாது. ஏதாவது நோய் போன்றன உள்ளபொழுது, அது கர்மவேதனை ஆகும், உங்களின் கர்மக் கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்படுவதும் சிறந்ததாகும். தர்மராஜின் தடியை விட, நோய் மேலானது. கர்மவேதனை தீர்க்கப்பட வேண்டும். இச்சரீரங்கள் பெருமளவு நோய்வாய்ப்பட்டுள்ளன. அவை அதிகளவு பராமரிக்கப்பட வேண்டும்! முன்னேறும் பொழுது, அவர்கள் சிலசமயங்களில் நிறுத்தத்திற்கு வருகின்றார்கள். சிலருக்கு இதய வழுவலும் ஏற்படுகிறது. அத்தகையதொரு பழைய உலகம் முழுமையாகவே புத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். தங்கள் தந்தை தங்களுக்காக ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொண்டிருப்பதைக் குழந்தைகள் பார்க்கும்பொழுது, அவர்களுடைய இதயங்கள் பழையதில் இருந்து அகன்று விடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, விரைவாகப் புதிய வீட்டைக் கட்டி முடியுங்கள்! இந்தப் பழைய வீட்டில் பெருமளவு பிரச்சனைகள் உள்ளன. இந்தப்பழைய உலகம் மிகவும் தீயது என்பதை நீங்களும் அறிவீர்கள். இது உங்களுடைய எல்லையற்ற துறவறமாகும். அம்மக்கள் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறக்கிறார்கள். அது எல்லைக்கு உட்பட்ட துறவறம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் விகாரங்களைத் துறக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: சரீரத்துடனும், சரீர உறவினர்களினதும் உறவுமுறைகள் அனைத்தும் துண்டித்து விட்டு, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் கண்கள் மூலமாக நீங்கள் பார்க்கின்ற இவ்வுலகத்தை மறந்து விடுங்கள். சுவர்க்க இராச்சியத்துக்காக நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. நீங்கள் இந்த ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்று விட்டீர்கள். இவை அனைத்தும் சுடுகாடாக மாறப் போகிறது. அதற்கான அன்பைக் கொண்டிருக்க வேண்டாம். இன்றைய நாட்களில், மக்களிடம் பெருமளவு பணம் உள்ளதனால், விகாரங்கள் மேலும் அதிகளவுக்கு வலிமை மிக்கவையாகி விட்டன. காம விகாரம் மிகவும் உறுதியாகி விட்டது; அவர்களால் காம விகாரமின்றி இருக்க முடியாதுள்ளது. அவர்கள் நான்கு முதல் ஐந்து வருடங்கள் தூய்மையாக இருந்த பின்னர் எழுதுகிறார்கள்: பாபா, இன்று, அவன் தீய ஆவியால் செல்வாக்குக்கு உட்பட்டுத் தனது முகத்தை அழுக்காக்கினான். அவன் அத்தகையதோர் அறையினால் வருந்துகிறான்! அவன் ஐந்தாம் மாடியிலிருந்து நேராகக் கீழே வீழ்ந்தான். முதலாவது சரீர உணர்வாகும். நீங்கள் உச்சியிலிருந்து கீழே விழுந்தவுடன், முழுமையாக நொருக்கப்படுவதுடன், அனைத்தும் முடிவடைகிறது; உங்கள் எலும்புகள் அனைத்தும் முழுமையாகவே உடைகின்றன. பின்னர் முயற்சி செய்வதற்கு நேரம் எடுகிறது. இதுவே பெரிய அறையாகும். இதனாலேயே பாபா கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. விகாரத்தில் ஈடுபடுவது தூய்மையின்மை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் முழுமையாக விகாரமற்று இருந்தார்கள். பாரதம் முழுமையாகவே விகாரமற்று இருந்தது. இப்பொழுது பாரதம் விகாரம் உடையதாக உள்ளது. சூரிய வம்சத்தவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இராம இராச்சியத்தில் விகாரங்களின் குறிப்பே இல்லாத பொழுதிலும், தொடர்ந்தும் கலைகள் குறைவடைகின்றன. 1250 வருடங்கள் கடந்து விட்டதனால், அந்தளவுக்கு உலகின் வலிமை குறைவடைந்துள்ளது. இதனாலேயே அது முதலில் சதோபிரதானாக உள்ளது, பின்னர் அது சதோ ஆகுகிறது. நீங்கள் மம்மாவையும், பாபாவையும் பின்பற்றி, சூரிய-வம்சத்துச் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியுமாக விரும்புகிறீர்கள். இதில் சிரமத்துக்கான அல்லது செலவுக்கான கேள்வியே கிடையாது. நீங்கள் எதனையும் கூறவும் தேவையில்லை, ஆனால் நினைவில் நிலைத்திருங்கள்! இது இலகு யோகம் என்று அழைக்கப்படுகிறது; இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. பாபாவின் முன்னிலையில் உள்ள நீங்கள் அனைவரும் மகாராத்திகள் ஆவீர்கள். இதில் முழுமையான யோகம் இருக்க வேண்டும், அப்பொழுதே அம்பு இலக்கைத் தாக்க முடியும். இதுவே யோகசக்தி ஆகும். யோகம் பெருமளவுக்குப் பின்னடைவாக உள்ளது. யோகத்தில் பல தடைகள் ஏற்படுகின்றன. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற தந்தை கூறுகிறார். ஒருபொழுதும் தந்தையுடனோ அல்லது கல்வியுடனோ முரண்பட வேண்டாம். நீங்கள் முரண்பட்டால், 21 பிறவிகளுக்கான உங்கள் பாக்கியத்துடன் முரண்படுகிறீர்கள். மிகச்சிறந்த குழந்தைகளும் முரண்பட ஆரம்பிக்கிறார்கள். தாங்கள் எவ்வாறு பலருக்கும் விளங்கப்படுத்தினார்கள் எனும் சரீர உணர்வின் போதை அவர்களுக்கு உள்ளது. சரீரத்தின் அகங்காரம் உள்ளபொழுது, அவர்கள் வீழ்கிறார்கள். இதில் அகங்காரம் இருக்கக்கூடாது. சிவபாபாவுக்கு ஏதாவது அகங்காரம் உள்ளதா? அவர் மிகவும் ஆணவமற்றவர், இருப்பினும் அவர் அத்தகையதொரு மகத்தான அதிகாரி ஆவார்! அவர் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண வீட்டில், சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் ஒரு செல்வந்த நபரின் வீட்டுக்கு வருவதில்லை. ஆகவே, குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது விழித்தெழ வேண்டும்! பாபா உங்களுக்கு மிகச்சிறந்த யுக்திகளைக் கொடுக்கிறார். குழந்தைகளாகிய உங்களின் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. நாடகத்துக்கேற்ப, இன்னமும் உங்கள் ஸ்திதி அந்தளவு வலிமை உடையதாகவில்லை. நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, உறுதியானவர்கள் ஆகுவீர்கள். இத்தனை வருடங்களில் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு விடும் என்று நாங்கள் அரசாங்கத்துக்குக் கூறுகிறோம். மக்கள் இதனைச் செய்தித்தாள்களில் வாசிக்கும் பொழுது, அவர்கள் வந்து உங்களிடம் இதனைப் பற்றி வினவுவார்கள். சில வருடங்களில் ஸ்தாபனை நடைபெற வேண்டும், ஆகவே நிச்சயமாக விநாசமும் நடைபெறும். பலர் வருவார்கள். இந்தச்சொத்து போன்றதும் ஒரு குறுகிய காலத்துக்கு மாத்திரமே உள்ளது. நீங்கள் இந்தச் சொத்தை உங்கள் சொத்தாகக் கருதுவதில்லை. மேலும் குறுகிய காலத்துக்கு மாத்திரமே இவை அனைத்தும் எஞ்சியிருக்கப் போகின்றது என நீங்கள் அறிவீர்கள். இக்கட்டடங்கள் போன்றவை நீங்கள் தங்கியிருப்பதற்கே கட்டப்பட்டு வருகின்றன, ஏனெனில் பல குழந்தைகள் புத்துணர்ச்சி ஊட்டப்படுவதற்காக மதுவனத்துக்கு வருகிறார்கள். மதுவனமே தலைமை நிலையம் ஆகும். நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள், நீங்கள் நாளை என்ன செய்வீர்கள்? நீங்கள் இன்று தபஸ்யா செய்கிறீர்கள், பின்னர் நீங்கள் டெல்லிக்கும், பிருந்தாவனத்துக்கும் சென்று இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். எவ்வாறு உங்கள் ஞாபகார்த்தம் இங்கு இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் செய்வது அனைத்தையும், நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் செய்தோம். எல்லாவற்றுக்கும் முதலில், சிவனுக்கு ஆலயங்கள் கட்டப்படுகின்றன. பின்னரே தில்வாலா ஆலயம் போன்றன கட்டப்பட்டன. அனைத்தும் புத்தியின் மூலமே செய்யப்பட வேண்டும். எப்பொழுது தில்வாலா ஆலயம் கட்டப்பட்டது என்பதை நீங்கள் கணக்கிட விரும்பினால், நீங்கள் அதனைச் செய்யலாம். இது எங்களுடைய மிகச்சரியான ஞாபகார்த்தம் ஆகும். அது ஸ்தாபனையின் ஞாபகார்த்தம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். சேவையை அதிகரிப்பதற்கான இவ்வழிமுறைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். “இராமர் சென்றபொழுது, இராவணனும் சென்றான், அவனுடன் அவனுடைய பெரிய குடும்பமும் சென்றது” என்னும் கூற்றும் உள்ளது. இராவணனுடைய குடும்பம் எவ்வளவு பெரியது எனப் பாருங்கள்! இராமருடைய குடும்பம் எவ்வளவு சிறியது எனப் பாருங்கள்! அந்தப் புகழ் சரியானதே, ஆனால் எவராலும் அதனைப் புரிந்துகொள்ள முடியாது, தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார், இருப்பினும், அந்த நம்பிக்கை இருப்பதில்லை. நீங்கள் நிச்சயமாக உங்கள் சரீரங்களின் வாழ்வாதாரத்துக்காகச் செயல்களைச் செய்ய வேண்டும். பாண்டவர்களாகிய சேவாதாரிக் குழந்தைகளால் இந்த அரசாங்கத்திடம் இருந்து பராமரிப்பைப் பெற முடியும். நாங்கள் அவர்களுக்குப் பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கேற்ப குழந்தைகளின் ஸ்திதி இருக்க வேண்டும். பாபாவின் நினைவில் இவ்வுலகின் அனைத்தும் மறக்கப்பட வேண்டும். நினைவு யாத்திரையில் உறுதியான போதையில் இருப்பவர்களே, மிகவும் உறுதியானதொரு ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்கள் சரீரங்களை விட்டு நீங்கும்பொழுது, அது சிவபாபாவின் நினைவிலேயே நீக்கப்பட வேண்டும். அதேபோன்று, சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தின் நினைவில் தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகிறார்கள், அந்நேரத்தில், சூழலில் மயான அமைதி நிலவுகிறது. ஒருவர் மரணிக்கும் பொழுது, குடும்பத்தில் மயான அமைதி நிலவுகிறது என்பதை பாபா அனுபவம் செய்துள்ளார். இங்கும் அதுவே பொருந்துகின்றது. இறுதியில், நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டாற் போன்று இருக்கும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தொடர்ந்தும் சரீர உணர்வு துறக்கப்பட வேண்டும். இறுதியில், நாங்கள் எங்கே செல்கிறோம் என்ற சந்தோஷத்திலும், மலர்ச்சியிலும் நீங்கள் உங்களின் சரீரங்களை விட்டு நீங்க வேண்டும்; அவ்வளவுதான்! நாங்கள் எங்கே செல்கிறோம்? உங்களுக்கு அத்தகையதொரு ஸ்திதி இருக்கும்பொழுது, நீங்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்படத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். உங்களிடம் அமைதியாகிய மின்சாரம் உள்ளது. எவராவது வரும்பொழுது, அவர் கூறுகிறார்: இங்கு பெருமளவு அமைதி உள்ளது. இது உண்மையான அமைதியாகும். ஆத்மா சரீரத்திலிருந்து பற்றற்றவர் ஆகுகிறார். நீங்கள் அமைதி சொரூபங்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எங்களுடைய ஆதிதர்மத்தில் அமர்ந்திருக்கிறோம். எம் மனிதராலும் செயல்களைச் செய்யாமல் இருக்க முடியாது. ஹத்தயோகாவினால் அம்மக்களால் எதைத்தான் செய்ய முடியாது? அமைதியே உங்கள் ஆதிதர்மம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இங்கு எங்கள் பாகங்களை நடிப்பதற்கே வருகிறோம், நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதுடன், உங்கள் வீட்டையும் நினைவு செய்யுங்கள்! தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை வீட்டில் நினைவு செய்யுங்கள்! நான் இங்கே தற்காலிகமாக மாத்திரமே வருகிறேன். உங்கள் புத்தி அமைதிதாமத்தில் பாபாவில் நினைவில் ஸ்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் வீடாகிய உங்கள் ஆஸ்தியையும் கோர வேண்டும். அது ஆத்மாக்களின் வீடும், இது உயிருள்ளவர்களின் வீடும் ஆகும். உங்கள் வீட்டை மறக்க வேண்டாம், உங்கள் தந்தையையும் மறக்க வேண்டாம்! தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே, நீங்கள் தூய்மையாகி வீடு திரும்புவீர்கள். இந்த ஞானத்தைக் கிரகிப்பதனால், நீங்கள் புதிய உலகிற்குச் சென்று, இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். இயலுமானவரையில், தொடர்ந்தும் ஏனைய பலருக்கும் பாதையைக் காண்பியுங்கள். எப்பொழுதும் தந்தையைப் பாருங்கள். தந்தை என்ன செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்; இவர் அனைத்தையும் தாய்மார்களிடம் கொடுத்தார். அந்த ஒரேயொருவர் தாய்மார்களுக்குச் சேவை செய்வதற்காக அனைத்தையும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்தார். ஏனையோர் இவரைப் பார்த்தபொழுது, அவர்களும் இவரைப் பின்பற்றித் தங்களை அர்ப்பணித்தார்கள். எவ்வாறாயினும், அவர்களால் இங்கு தங்கியிருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்! நாடகத்துக்கேற்ப, பத்தியும் உருவாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கும், ஹிந்துஸ்தானுக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. உங்கள் பத்தி முதலில் பாகிஸ்தானிலேயே ஆரம்பித்தது. நீங்கள் ஆற்றைக் கடந்தீர்கள். அவர்கள் சமயநூல்களில் என்ன எழுதியுள்ளார்கள் எனப் பாருங்கள்! இப்பொழுது நீங்கள் இவை அனைத்தையும் நடைமுறைரீதியில் செவிமடுக்கிறீர்கள், பின்னர் ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் அதனைக் கேட்பீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது, தீயவற்றைக் கேளாதீர்கள்! நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளலாம், ஆனால் தீயவற்றைக் கேளாதீர்கள்! தந்தை கூறுகிறார்: அனைத்துக்கும் ஸ்ரீமத்தைப் பெறுங்கள். “பாபா, இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?” அப்பொழுது பாபா உங்களுக்கு அனைத்தையும் கூறுவார். நீங்கள் எதனையாவது கேட்க விரும்பினால், பாபாவிடம் வாருங்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பாபாவைக் கேட்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், ஒவ்வோர் அடியிலும் நீங்கள் பல மில்லியன்களைச் சம்பாதிக்கிறீர்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியிலும் நீங்கள் பல மில்லியன்களைச் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் அதிகளவு செல்வத்தைச் சம்பாதிக்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்கு, உங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவர் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். தொடர்ந்தும் சரீர உணர்வைத் துறவுங்கள். உங்கள் புத்தியிலிருந்து இவ்வுலகை அகற்றுங்கள்.

2. செல்வத்துக்காக அதிகளவு பேராசைப்பட வேண்டாம். தந்தையின் நினைவைத் தவிர, வேறு எதனையும் பற்றிச் சிந்திக்க வேண்டாம். தந்தையுடனோ அல்லது கல்வியுடனோ ஒருபோதும் முரண்பட வேண்டாம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒன்றிணைந்த ரூபத்தைக் கொண்டிருந்து, ஓர் அதிபதியாக இருக்கும் விழிப்புணர்வுடன் அதியுயர்ந்த அதிகாரத்தைக் கொண்டவராக இருப்பதை அனுபவம் செய்வீர்களாக.

அனைத்திற்கும் முதலில், சரீரம் மற்றும் ஆத்மா ஒன்றிணைந்து இருக்கும் உங்களின் ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். சரீரம் படைப்பு ஆகும், ஆத்மாவே படைப்பவர் ஆவார். இதைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் இயல்பாகவே அதிபதியாக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பீர்கள். அதிபதியாக இருக்கும் விழிப்புணர்வுடன் நீங்கள் உங்களை அதியுயர்ந்த அதிகாரியாக அனுபவம் செய்வீர்கள்: நீங்களே சரீரத்தை இயக்குபவர். இரண்டாவதாக, தந்தையும் குழந்தையும் (சிவசக்தி) என்ற ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் உங்களால் உங்களின் அதிகாரத்துடன் மாயையின் எந்தவிதமான தடைகளையும் வெற்றி கொள்ள முடியும்.

சுலோகம்:
விரிவாக்கங்கள் அனைத்தையும் ஒரு விநாடியில் அமிழ்த்தி, இந்த ஞானத்தின் சாரத்தை அனுபவம் செய்து, அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள். உங்களின் நினைவானது எரிமலையாக இருக்கும்போது, உங்களால் பாவங்களை அழித்து, பாவங்களை வென்றவர் ஆகமுடியும். ஆத்மாக்கள் அனைவரினதும் சக்தியற்ற நிலை இந்த நினைவால் முடிவடைந்து விடும். இதற்கு, நீங்கள் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு மூச்சிலும் தந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பது அவசியம். எந்தவொரு கணத்திலும் நீங்கள் சாதாரணமான நினைவைக் கொண்டிருக்க முடியாது. உங்களின் அன்பு ரூபத்தை சக்தியுடன் ஒன்றிணைந்தது ஆக்குங்கள்.