14.09.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2007 Om Shanti Madhuban
இப்போது உங்களை விடுதலையாக்கி, மாஸ்ரர் முக்தியை அருள்பவர் ஆகி,
எல்லோரையும் விடுவிப்பதற்குக் கருவி ஆகுங்கள்.
இன்று, அன்புக்கடலான பாப்தாதா, எங்கும் உள்ள தனது அன்பான குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். அவர் இரண்டு வகையான குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஒரு வகைக் குழந்தைகள், அன்பிலே திளைத்திருக்கும் லவ்லீன் குழந்தைகள். மற்றைய வகையினர், அன்பான குழந்தைகள். இரண்டு வகையான குழந்தைகளின் அன்பு அலைகளும் அமிர்த வேளைக்கு முன்பிருந்தே தந்தையை வந்தடைந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் ‘எனது பாபா’ என்ற பாடல் தானாகவே ஒலிக்கிறது. அதே பாடல் பாப்தாதாவின் இதயத்திலும் ஒலிக்கிறது: எனது குழந்தைகள், எனது அதியன்பிற்குரிய குழந்தைகள், பாப்தாதாவின் தலைக் கிரீடமாக உள்ள குழந்தைகள்.
இன்று, இது நினைவு தினம் ஆகையால், ஒவ்வொருவரின் மனதிலும் அன்பு அலைகள் அதிகளவில் காணப்பட்டன. பல குழந்தைகளின் அன்பு முத்துக்களின் மாலைகள் பாப்தாதாவின் கழுத்தில் மாலையாக போடப்பட்ட வண்ணம் இருந்தன. தந்தையும் தனது குழந்தைகளின் மீது தனது அன்பான கரங்களால் மாலை போட்டார். நீங்கள் எல்லோரும் எல்லையற்ற பாப்தாதாவின் எல்லையற்ற கரங்களில் அமிழ்ந்து இருந்தீர்கள். இன்று, எல்லோரும் குறிப்பாக இங்கே அன்பெனும் விமானத்தில் ஏறி வந்துள்ளார்கள். வெகு, வெகு தொலைவில் உள்ள குழந்தைகளும் இங்கே தமது அவ்யக்த (சூட்சுமம்) ரூபங்களில், தமது தேவதை ரூபங்களில் தமது மனம் என்ற விமானங்களில் இங்கே வந்துள்ளார்கள். இன்று, பாப்தாதா நினைவு தினத்திற்காகவும் அதேவேளை சக்தி தினத்திற்காகவும் குழந்தைகள் எல்லோருக்கும் பலமில்லியன் மடங்கு நினைவுகளை வழங்குகிறார். இன்றைய தினம் உங்களுக்குப் பல வகையான விழிப்புணர்வுகளை (ஞாபகங்கள்) நினைவூட்டும். ஒவ்வொரு வகையான விழிப்புணர்வும் ஒரு விநாடியில் உங்களைச் சக்திசாலிகள் ஆக்குகின்றன. ஒரு விநாடியில் இந்த ஞாபகங்களின் பட்டியல் உங்களின் விழிப்புணர்வில் வருகின்றது அல்லவா? அந்த விழிப்புணர்வு உங்களுக்கு முன்னால் வந்த உடனேயே, உங்களுக்கு சக்திசாலிகளாக இருக்கும் போதை உள்ளது. உங்களுக்கு முதலாவது விழிப்புணர்வு ரூபம் நினைவிருக்கிறதா? நீங்கள் தந்தைக்குச் சொந்தமாக வந்தபோது, அவர் உங்களுக்கு என்ன விழிப்புணர்வை நினைவூட்டினார்? நீங்கள் சென்ற கல்பத்தைச் சேர்ந்த ஒரு பாக்கியசாலி ஆத்மா. இந்த முதல் விழிப்புணர்வு வடிவத்தால் என்ன மாற்றம் நடந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதன் மூலம், நீங்கள் தந்தையான இறைவனின் அன்பில் போதை அடைந்தீர்கள். ஏன் உங்களுக்கு போதை ஏற்பட்டது? உங்களின் இதயத்தில் இருந்து வெளிப்பட்ட முதலாவது அன்பான வார்த்தைகள் என்ன? எனது இனிய பாபா. இந்தப் பொன்னான வார்த்தைகள் வெளிப்பட்டதும் உங்களுக்கு ஏற்பட்ட போதை என்ன? ‘எனது பாபா’ என்பதை அறிந்து, ஏற்றுக் கொண்டதால், சகல இறை பேறுகளும் உங்களின் பேறுகள் ஆகின. உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதல்லவா? எனது பாபா எனச் சொல்வதன் மூலம் பல பேறுகள் உங்களுடையவை ஆகின. எங்கே பேறு உள்ளதோ, நீங்கள் நினைவிற்காக முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தப் பேறு உங்களுடையது என்பதால் இயல்பாகவும் இலகுவாகவும் நினைவு ஏற்பட்டது. தந்தையின் பொக்கிஷங்கள், உங்களின் பொக்கிஷங்கள் ஆகின. ‘எனது’ என்ற உணர்வு ஏற்பட்டதும், நீங்கள் நினைவு செய்ய முயற்சி செய்ய வேண்டியதில்லை. இயல்பாகவே நினைவு இருக்கும். ‘எனது’ என்பதை மறப்பதுதான் கடினம், நினைப்பது கடினம் இல்லை. உங்களின் சரீரம் உங்களுக்குச் சொந்தம் என்பதை நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்கள். எனவே, உங்களால் அதை மறக்க முடியுமா? அதை மறப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஏன்? இது என்னுடையது. எனவே, ‘எனது’ என்ற உணர்வு இருக்கும்போது, நினைப்பது இலகுவாக இருக்கும். எனவே, உங்களின் விழிப்புணர்வு உங்களைச் சக்திவாய்ந்த ஆத்மா ஆக்கியது. ‘எனது பாபா’ என்ற இந்த ஒரு வார்த்தையே இதைச் செய்தது. நீங்கள் பாக்கியத்தை அருள்பவரை, எல்லையற்ற பொக்கிஷங்களை அருள்பவரை உங்களுக்குச் சொந்தம் ஆக்கியுள்ளீர்கள். நீங்களே இத்தகைய அற்புதங்களைச் செய்யும் குழந்தைகள், அல்லவா? நீங்கள் இறைவனின் பராமரிப்பிற்கான உரிமையைப் பெற்றுள்ளீர்கள். இறைவனிடம் இருந்து பெறப்படும் இந்த நேரடியான பராமரிப்பு, கல்பம் முழுவதிலும் ஒரேயொரு தடவையே பெறப்படுகிறது. நீங்கள் எல்லா வேளையும் ஆத்மாக்களிடம் இருந்தும் தேவாத்மாக்களிடம் இருந்தும் பராமரிப்பைப் பெறுகிறீர்கள். ஆனால் இந்த ஒரு பிறவியில் மட்டுமே இறைவனிடம் இருந்து நீங்கள் பராமரிப்பைப் பெறுகிறீர்கள்.
எனவே, இந்த நினைவு நாளிலும், அதேபோல் சக்தி நாளிலும், நீங்கள் இலகுவாக இறை பராமரிப்பின் போதையையும் சந்தோஷத்தையும் நினைவு செய்தீர்கள்தானே? ஏனென்றால், இன்றைய சூழல் இலகுவான நினைவிற்கு உரியதாக இருந்தது. எனவே, இந்தத் தினத்தில், நீங்கள் இலகு யோகியாக இருந்தீர்களா அல்லது இந்தத் தினத்திலும் நீங்கள் நினைவிற்காகப் போராட வேண்டியிருந்ததா? இன்று, அன்பு தினம் எனப்படுகிறது, அல்லவா? எனவே, நீங்கள் முயற்சி செய்வதை அன்பு முடித்து விடுகிறது. அன்பு அனைத்தையும் இலேசாக்கி விடுகிறது. எனவே, இந்தத் தினத்தில், நீங்கள் குறிப்பாக இலகு யோகியாக இருந்தீர்களா அல்லது ஏதாவது கஷ்டங்கள் இருந்தனவா? இந்தத் தினத்தில் கஷ்டங்களை எதிர்நோக்கியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எவருக்கும் எந்தவிதமான கஷ்டங்களும் இல்லை, அல்லவா? நீங்கள் எல்லோரும் இலகு யோகிகளாக இருந்தீர்களா? அச்சா, இலகு யோகிகளாக இருந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). அச்சா, நீங்கள் எல்லோரும் இலகு யோகிகளாக இருந்திருக்கிறீர்களா? இன்று, நீங்கள் மாயைக்கு விடை கொடுத்தீர்கள். இன்று மாயை வந்தாளா? நீங்கள் இன்று மாயைக்கு விடை கொடுத்தீர்களா? ஓகே, இன்று நீங்கள் அவளுக்கு விடை கொடுத்தீர்கள். அதற்குப் பாராட்டுக்கள். இதேபோல் நீங்கள் நினைவில் அமிழ்ந்திருந்தால், நீங்கள் எல்லா வேளைக்குமாக மாயைக்கு விடை கொடுத்து விடுவீர்கள். ஏனென்றால், 70 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. எனவே, பாப்தாதா இந்த வருடத்தை ஒரு தனித்துவமான வருடமாக, எல்லோருக்கும் அன்பானவராக இருக்கும் வருடமாக, முயற்சியில் இருந்து விடுபட்ட வருடமாக, பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட வருடமாகக் கொண்டாட விரும்புகிறார். உங்கள் எல்லோருக்கும் இது பிடித்திருக்கிறதா? உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நீங்கள் இந்த வருடத்தை முக்தி வருடமாகக் கொண்டாடுவீர்களா? நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். எனவே, நீங்கள் முக்தியை அருள்பவரான தந்தையின் சகபாடிகள் ஆகுவதன் மூலம் துன்பத்தை அனுபவிக்கும் அமைதியற்ற ஆத்மாக்கள் பலரும் முக்தி பெறச் செய்ய வேண்டும். மாஸ்ரர் முக்தியை அருள்பவர்களான நீங்கள் விடுதலை அடைந்தால் மட்டுமே உங்களால் முக்தி வருடத்தைக் கொண்டாட முடியும். பிராமண ஆத்மாக்களான நீங்கள் விடுதலை பெற்று, பலருக்கு விடுதலை அளிப்பதற்குக் கருவிகள் ஆகவேண்டும். உங்களை விடுவிப்பதற்குப் பதிலாக, பிரச்சனைகளில் தங்கியிருக்கச் செய்யும் ஒரு வகையான மொழி என்னவென்றால், ‘இது இப்படி இல்லை, இது அப்படி, இது அப்படி இல்லை, இது இப்படி’ என்பதாகும். பிரச்சனைகள் வரும்போது, ‘பாபா, இது அப்படி இல்லை, இது இப்படி இருந்தது. இல்லாவிட்டால், அது அப்படி இருந்திருக்காது’ என நீங்கள் சொல்கிறீர்கள். அவை சாக்குப் போக்குகள் சொல்லும் விளையாட்டுக்கள் ஆகும்.
பாப்தாதா எல்லோருடைய பைலையும் பார்த்துள்ளார். எனவே, அந்த பைல்களில் அவர் எதைக் கண்டார்? பெரும்பாலானோருக்கு, சத்தியங்கள் எழுதப்பட்ட கடதாசிகளால் பைல் நிரம்பி இருந்தது. ஒரு சத்தியம் செய்யும் வேளையில், நீங்கள் அதை உங்களின் இதயபூர்வமாகச் செய்கிறீர்கள். நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால் இதுவரை, பைல் தொடர்ந்து பெரியது ஆகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அது இறுதி ஆகவில்லை. உறுதியானதொரு சத்தியத்தைப் பற்றிக் கூறப்படுகிறது: நீங்கள் இறக்க வேண்டி வந்தாலும், உங்களின் சத்தியத்தை முறிக்கக்கூடாது. எனவே, இன்று, பாப்தாதா எல்லோருடைய பைலையும் பார்த்தார். நீங்கள் எல்லோரும் மிக நல்ல சத்தியங்களைச் செய்துள்ளீர்கள். நீங்கள் அவற்றை உங்களின் மனதில் செய்துள்ளீர்கள். அத்துடன் அவற்றை எழுதி உள்ளீர்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களின் பைலை அதிகரிப்பீர்களா அல்லது நீங்கள் இந்தச் சத்தியத்தை இறுதி ஆக்குவீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பாண்டவர்களே, பேசுங்கள்! ஆசிரியர்களே, பேசுங்கள்! இந்த வருடம் பாப்தாதாவுடன் இருக்கும், அதே வேளை பெரிதாகும் இந்த பைலை இறுதி ஆக்குவீர்களா? அல்லது, இந்த வருடமும் நீங்கள் இன்னொரு கடதாசியைச் சேர்த்துக் கொள்வீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? பாண்டவர்களே பேசுங்கள்! நீங்கள் அதை இறுதி ஆக்குவீர்களா? நீங்கள் தலை வணங்க வேண்டி வந்தாலும் நீங்கள் மாற வேண்டி வந்தாலும் நீங்கள் ஏனைய விடயங்களைச் சகித்துக் கொள்ள வேண்டி வந்தாலும் அல்லது கேட்க வேண்டியிருந்தாலும், நீங்கள் மாற வேண்டும் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாருங்கள், எல்லோரின் படங்களையும் தொலைக்காட்சியில் பதிவு செய்யுங்கள்! எல்லோருடைய புகைப்படங்களையும் எடுங்கள். 2,3,4 தொலைக்காட்சிகள் (கமெராக்கள்) உள்ளன. எல்லாப் பக்கங்களில் இருந்தும் புகைப்படங்களை எடுங்கள்! இந்தப் பதிவை வைத்திருங்கள்! இந்தப் புகைப்படங்களை எடுத்து அவற்றைத் தந்தையிடம் கொடுங்கள்! தொலைக்காட்சி நபர் எங்கே? பாப்தாதாவும் பைலில் இருந்து நன்மை பெற வேண்டும். பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! நீங்கள் உங்களுக்காக கைதட்டிக் கொள்ளலாம்.
பாருங்கள், ஒருபுறம், விஞ்ஞானம் உள்ளது. இன்னொரு புறம், ஊழல் நடக்கிறது. இன்னொரு புறம், பாவம் உள்ளது. இவை அனைத்தும் தமக்கே உரிய முறையில் தொடர்ந்து வளர்கின்றன. பல புதிய திட்டங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. ஆனால் நீங்கள் உலகைப் படைப்பவரின் குழந்தைகள் ஆவீர்கள். எனவே, இந்த வருடம், உங்களின் சத்தியம் உறுதியாகும் வகையில் புதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், எல்லோரும் வெளிப்படுத்தல் இடம்பெறுவதையே விரும்புகிறார்கள். அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய நிகழ்ச்சிகள் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொழில் பிரிவும் மிக நன்றாக செயல்படுகிறார்கள். ஆனால் இப்போது, இந்த வருடம் இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், உதாரணமாக, நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்யக்கூடும், அப்போது உங்களின் வார்த்தைகளால் மட்டும் சேவை செய்யாதீர்கள், ஆனால் அன்பும் ஒத்துழைப்பும் நிரம்பிய உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களாலும் சேவை இடம்பெற வேண்டும். ஒரே வேளையில் மூன்று வகையான சேவையும் இடம்பெற வேண்டும். அவை வெவ்வேறாக இருக்கக்கூடாது. ஒரு வகையான சேவையில் பாப்தாதா பார்க்க விரும்பும் பெறுபேறு இல்லாதிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நீங்களும் வெளிப்படுத்தல் இடம்பெற வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். இதுவரை, இந்தப் பெறுபேறு நன்றாகவே உள்ளது. இது முன்னருடன் ஒப்பிடும்போது மிக நல்லதொரு பெறுபேறே. அதில் கலந்து கொள்ளும் எல்லோருமே, ‘இது நல்லது, இது நல்லது, இது மிகவும் நல்லது’ என்று கூறியவண்ணமே செல்கிறார்கள். எவ்வாறாயினும், நல்லவர் ஆகுவது என்றால் வெளிப்படுத்தல் நடக்க வேண்டும் என்றே அர்த்தம். எனவே, இப்போது இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: அதாவது, ஒரே வேளையில், நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு சகபாடிக்கும், அவர் ஒரு பிராமண சகபாடியோ அல்லது சேவை செய்வதற்குக் கருவியாக இருக்கும் வெளி நபரோ அவர்களுக்குக் கொடுங்கள். அன்பையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதெனில், செயல்களினூடாக செய்யப்படும் சேவையில் முதலாம் இலக்கத்தைப் பெறுவதாகும். ‘இது இப்படி நடந்தது, இதனாலேயே நான் அதை அப்படிச் செய்ய வேண்டியிருந்தது’ என்ற மொழியைப் பேசாதீர்கள். அன்பைக் கொடுப்பதற்குப் பதிலாக, சிலவேளைகளில் உங்களிடம் சொல்வதற்கு வேறு விடயங்கள் உள்ளன. பாபா அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ‘நான் இதைச் செய்ய வேண்டும், நான் இதைக் கூற வேண்டும், நான் இந்த விடயங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ இப்படி அது இருக்கக்கூடாது. பல வருடங்களாக, அது நடக்க வேண்டும் என பாப்தாதா அனுமதி அளித்தார் என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ‘இது இப்படி இல்லை, அனால் அப்படி’ என்பது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? பாப்தாதாவுடனான இதயபூர்வமான சம்பாஷணைகளில் பெரும்பாலானோர், பாபா, இறுதியாக நீங்கள் எப்போது திரையைத் திறப்பீர்கள்? எவ்வளவு காலத்திற்கு இது தொடரும்? எனக் கேட்கிறார்கள். பாப்தாதா உங்களைக் கேட்கிறார்: எவ்வளவு காலத்திற்கு, இந்தப் பழைய மொழி, இந்தக் கவனயீனம் மற்றும் கசப்பு என்ற பழைய விடயங்கள் தொடரும்? பாப்தாதாவிற்கும் ஒரு கேள்வி உள்ளது: எவ்வளவு காலத்திற்கு? நீங்கள் பதில் அளித்தால், பாப்தாதாவும் எப்போது விநாசம் நடக்கும் என்று பதில் அளிப்பார். பாப்தாதாவால் இந்த விநாடியே, இப்போதே விநாசத்தின் திரையைத் திறக்க முடியும். ஆனால், முதலில், அங்கே ஆளப் போகின்றவர்கள் தயார் ஆகவேண்டும். எனவே, இப்போது நீங்கள் ஆயத்தங்களைச் செய்தால் மட்டுமே, உங்களால் நிறைவை நெருக்கமாகக் கொண்டு வரமுடியும். எந்தவொரு பலவீனங்களையும் பொறுத்தவரை, எந்தவிதமான சாக்குப்போக்குகளைச் செய்யாதீர்கள் அல்லது காரணங்களைக் கொடுக்காதீர்கள். ஆனால் தீர்வுகளைக் கண்டுபிடியுங்கள். இந்தக் காரணத்தினாலேதான்... என நீங்கள் சொல்கிறீர்கள். நாள் முழுவதும் குழந்தைகளின் விளையாட்டுக்களை பாப்தாதா அவதானிக்கிறார். அவருக்குக் குழந்தைகளான உங்களின் மீது அன்பு உள்ளது. எனவே, அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து விளையாட்டுக்களை அவதானிக்கிறார். பாப்தாதாவின் தொலைக்காட்சி மிகவும் பெரியது. ஒரே வேளையில் அதில் உலகையே பார்க்க முடியும். எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளையும் பார்க்க முடியும். அது அமெரிக்காவோ அல்லது குர்கஹானோ, எல்லாமே புலப்படும். எனவே, பாப்தாதா பல விளையாட்டுக்களைப் பார்க்கிறார். ‘இதுதான் காரணம் பாபா, அது எனது தவறு கிடையாது, அவர் அதைச் செய்தார்...’ என்ற தள்ளிப் போடும் மொழி மிகவும் நல்லது. ஓகே, அவர் அதைச் செய்தார். ஆனால், நீங்கள் அதற்கான தீர்வைக் கண்டு பிடித்தீர்களா? நீங்கள் சாக்குப்போக்கை ஒரு சாக்குப்போக்காக இருக்க அனுமதித்தீர்களா அல்லது அந்தச் சாக்குப் போக்கை ஒரு தீர்வாக மாற்றினீர்களா? பாபா, உங்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என எல்லோரும் கேட்கிறார்கள். எனவே, பாப்தாதா உங்களுக்குத் தனது எதிர்பார்ப்புக்களைக் கூறுகிறார்: பாப்தாதாவிற்கு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது - அதாவது தீர்வுகள் புலப்பட வேண்டும். காரணங்களும் சாக்குப் போக்குகளும் முடிவடைய வேண்டும். பிரச்சனைகள் முடிவடைந்து, விடயங்கள் தொடர்ந்து தீர்க்கப்பட வேண்டும். இது சாத்தியமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, இது சாத்தியமா? குறைந்தபட்சம், ஆமோதியுங்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்களே, இது சாத்தியமா? (எல்லோரும் தமது கைகளை அசைத்தார்கள்). அச்சா. எனவே, நாளை பாப்தாதா தனது தொலைக்காட்சியைப் போட்டால்.... அவர் நிச்சயமாகத் தொலைக்காட்சியைப் பார்ப்பார்தானே? எனவே, பாப்தாதா நாளை தொலைக்காட்சியைப் பார்த்தால், அது வெளிநாடோ அல்லது இந்தியாவோ, அது சிறிய கிராமமோ அல்லது பெரிய பிராந்தியமோ, எங்கேயும் எந்தவிதமான காரணங்களோ அல்லது சாக்குப் போக்குகளோ புலப்படாதல்லவா? உறுதியாகவா? இதற்கு நீங்கள் ஆம் எனச் சொல்கிறீர்கள் இல்லை. ஏதாவது காரணங்கள் அல்லது சாக்குப் போக்குகள் இருக்குமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். பாப்தாதா மகிழ்கிறார். உங்களின் கைகளை உயர்த்தச் செய்வது ஓர் அற்புதமே. குழந்தைகளான உங்களுக்கு எப்படி பாபாவை மகிழ்விப்பது என்பது தெரியும். பாப்தாதா இதைப் பார்த்து, பலமில்லியன்களில் கைப்பிடியினரும் அந்தக் கைப்பிடியில் வெகு சிலருமே கருவிகள் ஆகியிருக்கும்போது, குழந்தைகளான உங்களைத் தவிர வேறு யார் எதையாவது செய்வார்கள் என்றும் நினைக்கிறார். நீங்களே அதைச் செய்ய வேண்டும். குழந்தைகளான உங்களின் மீது பாப்தாதாவிற்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களின் ஸ்திதியைப் பார்க்கும்போது வரவிருக்கும் ஏனையோரும் சரியாகி விடுவார்கள். அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீங்கள் இப்படி ஆகுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லோரும் பிறப்பு எடுத்தவுடனேயே தந்தைக்கு இந்தச் சத்தியத்தைச் செய்தீர்கள்: நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், நீங்கள் சகபாடிகள் ஆகி, ஒன்றாக வீட்டுக்குத் திரும்புவீர்கள். பின்னர் தந்தை பிரம்மாவுடன் இராச்சியத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்கள்தானே? நீங்கள் ஒன்றாக இருந்து, ஒன்றாகத் திரும்பிச் செல்வதால், நீங்கள் ஒன்றாகவே இருக்கும் சேவை சகபாடிகள், அப்படித்தானே?
எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். பாப்தாதா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், ஒரு சூழ்நிலை வரும்போதெல்லாம், இந்த நாள், இந்தத் திகதி, இந்த நேரத்தை, நீங்கள் எதற்காக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் உதவியைப் பெறுவீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும். இப்போது, விரைவாக இப்படி ஆகுங்கள். நீங்கள் சென்ற கல்பத்திற்கு உரிய அதே நபர்கள், இந்தக் கல்பத்திற்கு உரிய அதே நபர்கள், நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அப்படியே ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள். இது உறுதியாக உள்ளதல்லவா? அல்லது, நீங்கள் இரண்டு வருடங்களுக்கு இப்படி ஆகிவிட்டு, பின்னர் மூன்றாம் வருடம் நீங்கிவிடுவீர்களா? அது அப்படி இருக்காது. நீங்கள் கருவிகள், பலமில்லியன்களில் வெகு சிலரும் அந்தச் சிலரில் ஒரு கைப்பிடி அளவினரும் என்பதை சதா நினையுங்கள். பலமில்லியன்களில் வெகு சிலர் வருவார்கள். ஆனால் நீங்கள் அந்த வெகுசிலரிலும் ஒரு கைப்பிடி அளவினர் ஆவீர்கள்.
எனவே, இன்று அன்பு தினம் ஆகும்! அன்பினால் எதையும் செய்வது கடினம் அல்ல. இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இவை அனைத்தையும் நினைவூட்டுகிறார். குழந்தைகளான உங்களுக்கு பிரம்மாபாபாவிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்பதைப் பார்க்கும்போது சிவபாபா மிகவும் சந்தோஷப்படுகிறார். எங்கேயும், ஒருவர் ஏழு நாள் மாணவராக இருந்தாலென்ன அல்லது 70 வருட மாணவராக இருந்தாலென்ன, இந்தத் தினத்தில், இங்கே 70 வருடங்கள் இருப்பவர்களும் ஏழு நாள் இருப்பவர்களும்கூட அன்பிலே திளைத்திருப்பதை பாபா கண்டார். தந்தை பிரம்மாவின் மீது குழந்தைகள் அன்பு வைத்திருப்பதைப் பார்த்து சிவத்தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
பாபா இன்றைய நாளுக்கான மேலதிக செய்திகளைக் கூறட்டுமா? இந்தத் தினத்தில், முன்னோடிக் குழுவினரும் பாப்தாதாவின் முன்னால் வெளிப்பட்டு இருக்கிறார்கள். முன்னோடிக் குழுவினர் உங்கள் எல்லோரையும் நினைக்கிறார்கள்: நீங்கள் எப்போது தந்தையுடன் சேர்ந்து முக்திக்கான வாயில்களைத் திறப்பீர்கள்? இன்று, முன்னோடிக் குழுவினர் எல்லோருமே பாப்தாதாவிற்குக் கூறினார்கள்: எமக்கு ஒரு திகதியை வழங்குங்கள்! பாபா என்ன பதிலைக் கூறட்டும்? பேசுங்கள்! பாபா என்ன பதிலைக் கூறட்டும்? பதில் சொல்வதில் யார் கெட்டிக்காரர்கள்? அது மிக விரைவில் நடக்கும் என பாப்தாதா பதில் அளிக்கிறார். ஆனால், இதற்காகக் குழந்தைகளான உங்களின் ஒத்துழைப்பு தந்தைக்குத் தேவை. நீங்கள் எல்லோரும் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள்தானே? நீங்கள் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகின்றவர்களா அல்லது நீங்கள் செல்லும்போது அவ்வப்போது நிற்பீர்களா? நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்பவர்கள்தானே? நீங்கள் ஒன்றாகவே வீடு திரும்ப விரும்புகிறீர்கள், அல்லவா? அவ்வாறாயின், நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும், அல்லவா? நீங்கள் ஒன்றாக வீடு திரும்ப வேண்டும் என்றால், சமமானவர்கள் ஆகவேண்டும். என்ன கூறப்படுகிறது? ‘கையோடு கைகோர்த்து, இருவரும் ஒன்றாக சகபாடிகளாக’. எனவே, ‘கையோடு கைகோர்த்து’ என்றால் சமமானவர் என்று அர்த்தம். எனவே, தாதிகளே, பேசுங்கள். ஆயத்தங்கள் செய்யப்பட்டு விடுமா? தாதிகளே பேசுங்கள். தாதிகளே உங்களின் கைகளை உயர்த்துங்கள். தாதாக்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் மூத்த தாதாக்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள்தானே? எனவே, தாதிகளே, தாதாக்களே, பேசுங்கள். உங்களிடம் ஒரு திகதி உள்ளதா? (இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை). இப்பொழுது இல்லையேல் எப்போதும் இல்லை என்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் இப்போதே தயாராக இருக்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் நல்லதொரு பதிலைக் கூறினீர்கள். இது பூர்த்தியாக்கப்பட வேண்டும். இளையவரோ அல்லது முதிர்ந்தவரோ, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பொறுப்பானவராகக் கருத வேண்டும். இதில் இளையவராக இருக்காதீர்கள். ஏழு நாள் குழந்தைக்குக் கூடப் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் ஒன்றாகவே வீடு திரும்பப் போகிறீர்கள், அப்படித்தானே? தந்தை வீட்டுக்குத் தனியாகச் செல்ல விரும்பினால், அவரால் அதைச் செய்ய முடியும். ஆனால், அவர் தனியாகச் செல்ல மாட்டார். நீங்கள் அவருடன் செல்ல வேண்டும். இது தந்தைக்கும் குழந்தைகளான உங்களுக்கும் இடையிலான சத்தியம் ஆகும். நீங்கள் உங்களின் சத்தியத்தை நிறைவேற்றப் போகின்றீர்கள்தானே?
பாபா எங்கும் இருந்து நினைவுக் கடிதங்கள், ஈமெயில்கள், தொலைபேசி அழைப்புக்களைப் பெற்றுள்ளார். அவை இங்கே மதுவனத்திற்கும் அத்துடன் சூட்சும வதனத்திற்கும் வந்தடைந்துள்ளன. பந்தனத்தில் உள்ள தாய்மார்களின் மனங்களின் மிக அன்பான நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. இத்தகைய அன்பான குழந்தைகளை பாப்தாதா மிகவும் நினைவு செய்கிறார். அத்துடன் அவர்களுக்கு ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார்.
எனவே, எங்கும் உள்ள அன்பான குழந்தைகள் எல்லோருக்கும் அன்பான மற்றும் லவ்லீன் குழந்தைகள் இருவருக்கும் தந்தையின் ஸ்ரீமத்துக்கேற்ப, ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்களைச் சேமிக்கும் ஞானம் நிறைந்த மற்றும் சக்திசாலிக் குழந்தைகளுக்கும் சதா அன்பானவர்களாக இருப்பதுடன் எப்போதும் தமது சுயமரியாதையைப் பேணுவதுடன் மற்றவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் குழந்தைகளுக்கும் சதா தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றும் இத்தகைய வெற்றியாளர் குழந்தைகளுக்கும் எப்போதும் ஒவ்வோர் அடியையும் பாப்தாதாவின் பாதச்சுவடுகளில் வைக்கும் இலகு யோகிக் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் என்றும் தயாராக இருப்பதுடன், தெளிவான ரேகையைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் முதல் இலக்கத்தில் சித்தி அடைவீர்களாக.சதா என்றும் தயாராக இருப்பது பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு ஆகும். தந்தையின் சமிக்கையைப் பெறும் போதெல்லாம் நீங்கள் என்றும் தயாராக இருக்கும் வகையில் உங்களின் புத்தியின் இணைப்பு மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வேளையில் எதைப் பற்றியும் சிந்திப்பதற்கான தேவை எதுவும் இல்லை. சடுதியாக, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். இங்கே அமர்ந்திருக்கும்படி உங்களுக்கு ஒரு கட்டளை கிடைக்கும். எங்கேயாவது செல்லும்படி உங்களுக்குக் கூறப்படும். அந்த வேளையில், நீங்கள் எந்தவொரு சூழ்நிலையை அல்லது உறவினரை நினைக்கக்கூடாது. அப்போது மட்டுமே நீங்கள் முதலாம் இலக்கத்தில் சித்தி அடைவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் என்றும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், அது சடுதியான பரீட்சைத்தாளாகவே இருக்கும்.
சுலோகம்:
உங்களின் மனதைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு, ஆத்மாவான உங்களுக்கு இறை விழிப்புணர்வு மற்றும் சக்தி என்ற போஷாக்கை வழங்குங்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
தாம் நினைவில் அமரும்போது, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பதிலாக, தாம் சேவையைப் பற்றி நினைப்பதாகப் பல குழந்தைகள் சொல்கிறார்கள். அது தவறானது. ஏனென்றால், இறுதிக்கணங்களில் சரீரமற்றவர் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் சேவையைப் பற்றி நினைத்தால், ஒரு விநாடிக்குரிய அந்தப் பரீட்சையில் நீங்கள் தோற்று விடுவீர்கள். அந்த வேளையில், நீங்கள் தந்தையை மட்டுமே நினைக்க வேண்டும். அத்துடன் உங்களின் அசரீரிநிலை, விகாரமற்ற நிலை, அகங்காரம் அற்ற நிலையை மட்டுமே நினைக்க வேண்டும், வேறு எதையும் அல்ல. சேவையைப் பற்றி நினைப்பதன் மூலம், நீங்கள் உங்களின் பௌதீக ரூபத்திற்குள் வருகிறீர்கள். நீங்கள் விரும்பும்போது நீங்கள் கொண்டிருக்க வேண்டிய அந்த ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாவிட்டால், நீங்கள் ஏமாற்றப்பட்டு விடுவீர்கள்.