14.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே தீயதைக் கேட்காதீர்கள்! நீங்கள் இங்கு சத்தியத்தின் சகவாசத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் மாயையின் தீய சகவாசத்துடன் சேரக்கூடாது. தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்குட்படுவதால் நீங்கள் சந்தேகங்களினால் திணறுகிறீர்கள்.
பாடல்:
ஏன் இந்நேரத்தில் எம் மனிதரையும் ஆன்மீகமானவர் என அழைக்க முடியாதுள்ளது?பதில்:
அனைவரும் சரீர உணர்வில் இருப்பதனாலாகும். சரீர உணர்வில் இருப்பவர்களை எவ்வாறு ஆன்மீகமானவர்கள் என அழைக்க முடியும்? ஒரேயொரு அசரீரியான தந்தையே ஆன்மீகத் தந்தை. அவரே ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். ‘பரமன்' என்ற பட்டத்தை அவருக்கு மாத்திரமே கொடுக்க முடியும். தந்தையைத் தவிர வேறெவரையுமே ‘பரமன்’ என அழைக்க முடியாது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இங்கமர்ந்திருக்கும்பொழுது, பாபாவே உங்கள் பாபாவும் ஆசிரியரும் சற்குருவும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மூவரினதும் தேவை உள்ளது. முதலில் தந்தையும் பின்னர் உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரும் பின்னர் இறுதியில், குருவும் உள்ளார். இங்கே நீங்கள் இவ்வழியில் நினைவுசெய்ய வேண்டும். ஏனெனில் இது புதியதொரு விடயம். அவர் எல்லையற்ற தந்தையும் ஆவார். எல்லையற்றது என்றால் அவர் அனைவருக்கும் உரியவர் என்று அர்த்தமாகும். இங்கு வருகின்ற எவருக்கும் கூறப்படுகின்றது: இதனை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள். உங்களில் எவருக்காவது இதில் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! இது அற்புதமானதொன்று. பிறவிபிறவியாக உங்கள் தந்தையாகவும் ஆசிரியராகவும் சற்குருவாகவும் அதுவும் பரமாகவும் கருதப்படுகின்ற வேறெவரையும் நீங்கள் ஒருபொழுதும் கண்டதில்லை. அவரே எல்லையற்ற தந்தையும் எல்லையற்ற ஆசிரியரும் எல்லையற்ற சற்குருவும் ஆவார். அவ்வாறான ஒருவரை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் அன்றி, வேறு எக்காலத்திலும் அவ்வாறான எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள். இதனையிட்டு உங்களில் எவருக்கேனும் சந்தேகங்கள் இருக்குமாயின், உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்தலாம். இங்கமர்ந்திருக்கும் அனைவரினது புத்தியும் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இம் மூவரும் பிரதானமானவர்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். இந்த எல்லையற்ற ஞானம் மாத்திரமே உள்ளது. நீங்கள் பலவகையான எல்லைக்குட்பட்ட அறிவைக் கற்கின்றீர்கள். சிலர் வழக்கறிஞர்களாகவும் சிலர் சத்திரசிகிச்சை நிபுணர்களாகவும் ஆகுகின்றார்கள். ஏனெனில் அனைவரும் இங்கு தேவைப்படுகிறார்கள்: வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் போன்றோர்; அங்கே அவர்களின் தேவை இருக்க மாட்டாது. அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். பின்னர் அரைக் கல்பத்திற்கு நீங்கள் எதனையுமே கற்க வேண்டியதில்லை. நீங்கள் இந்தக் கற்பித்தல்களை ஒருமுறை மாத்திரமே பெறுகின்றீர்கள். அதாவது, அவை பலன் அளிப்பவை. அதாவது நீங்கள் 21 பிறவிகளுக்கு அவற்றின் பலனைப் பெறுகின்றீர்கள். வைத்தியர்கள், சட்டநிபுணர்கள், நீதிபதிகள் போன்றோர் அங்கிருப்பதில்லை. அது உண்மையிலேயே அவ்வாறே உள்ளது என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. அங்கே துன்பம் இல்லை. அங்கே கர்ம வேதனையும் இருக்க மாட்டாது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கர்ம தத்துவத்தை விளங்கப்படுத்துகின்றார். கீதையை உரைப்பவர்கள் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்களா? தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். அவர்கள் அதில் ‘கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகின்றார்’ என எழுதியுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர் தெய்வீகக் குணங்கள் நிறைந்த ஒரு மனிதர். எவருமே ‘சிவபாபா’ என்ற பெயரை உபயோகிப்பதில்லை. அவருக்கு வேறு எந்தப் பெயரும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெறுகின்றேன். இந்தக் கட்டடமாகிய இந்தச் சரீரம் எனக்குரியதல்ல. இது இவரின் கட்டடம். அதற்கு யன்னல்கள் போன்றன உள்ளன. எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்கள் எல்லையற்ற தந்தை. அதாவது, நான் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அவர் ஆன்மீகத் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். வேறு எவரையும் ஆன்மீகத் தந்தை என்று அழைக்க முடியாது. இங்கே, அந்த ஒரேயொருவரே எல்லையற்ற தந்தை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஓர் ஆன்மீக மாநாடு இப்பொழுது இடம்பெறுகின்றது. உண்மையில், அது ஓர் ஆன்மீக மாநாடு அல்ல. அவை உண்மையிலேயே ஆன்மீகம் அல்ல. அவை சரீர உணர்வுடையவை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவீர்களாக! சரீர அகங்காரத்தைத் துறந்து விடுங்கள். இதனை அவர்களால் எவருக்கும் கூற முடியாது. ‘ஆன்மீகம்’ என்ற வார்த்தை இப்பொழுது மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. முன்னர், அவற்றைச் சமய மாநாடுகள் என்றே அழைத்தனர். ஆன்மீகம் என்பதன் அர்த்தத்தை எவருமே புரிந்துகொள்வதில்லை. “ஆன்மீகத் தந்தை” என்றால் அசரீரியான தந்தை என்று அர்த்தமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள். ஆன்மீகத் தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். வேறெவராலுமே இந்தப் புரிந்துணர்வைக் கொண்டிருக்க முடியாது. தந்தையே இங்கமர்ந்திருந்து தான் யார் என்பதை உங்களுக்குக் கூறுகின்றார். இது கீதையில் குறிப்பிடப்படவில்லை. நான் உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுக்கின்றேன். அங்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சத்திரசிகிச்சை நிபுணர்கள் போன்றோரின் தேவை இருக்க மாட்டாது. ஏனெனில் அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அங்கே துன்பத்தின் பெயரோ, சுவடோ இருப்பதில்லை. இங்கோ, சந்தோஷத்தின் பெயரோ, சுவடோ இல்லை அது மறைந்து விட்டது எனக் கூறப்படுகின்றது. சந்தோஷம் காகத்தின் எச்சம் போன்றது என்று அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் சிறிதளவு சந்தோஷத்தையே அனுபவம் செய்வதால், அவர்களால் எவ்வாறு எல்லையற்ற சந்தோஷத்திற்கான ஞானத்தைக் கொடுக்க முடியும்? முன்னர், தேவர்களின் இராச்சியம் இருந்தபொழுது, 100 வீதம் சத்தியம் நிலவியது. ஆனால் இப்பொழுது பொய்மை மாத்திரமே உள்ளது. இது எல்லையற்ற ஞானமாகும். இது மனித உலக விருட்சம், நானே அதன் விதை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரிடம் விருட்சத்தின் முழு ஞானமும் உள்ளது. மக்களிடம் இந்த ஞானம் இல்லை. நான் உயிருள்ள விதையாவேன். என்னை ஞானக் கடல் என மக்கள் அழைக்கின்றார்கள். நீங்கள் ஞானத்தின் மூலம் முக்தியையும் சற்கதியையும் ஒரு விநாடியில் பெறுகின்றீர்கள். நான் அனைவரதும் தந்தை. என்னை இனங்காண்பதன் மூலம், குழந்தைகளாகிய நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், இராச்சியமும் உள்ளது. சுவர்க்கத்திலும் பல்வேறு வரிசைக்கிரமமான பல தரப்பட்ட அந்தஸ்துக்கள் உள்ளன. தந்தை ஒரே கல்வியையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆனால் கற்பவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளனர். இதில் வேறு எந்தக் கல்விக்குமான அவசியம் இல்லை. அங்கே எவரும் நோய்வாய்ப்பட மாட்டார்கள். அங்கே அவர்கள் சொற்ப சதப் பெறுமதியான வருமானத்திற்காகக் கற்பதில்லை. நீங்கள் இங்கிருந்து எல்லையற்ற ஆஸ்தியை உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். உங்களுக்கு அந்த அந்தஸ்தை எவ்வாறு ஒருவர் கொடுத்தார் என்பதை நீங்கள் அங்கே அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் அதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட அறிவையே கற்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு எல்லையற்ற ஞானத்தைக் கற்பிக்கின்றவர் ஒரேயொருவரே என்பதை நீங்கள் இனங்கண்டதுடன், அவரை அறிந்தும் கொண்டீர்கள். தந்தையே தந்தையும் வந்து எங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே பரம ஆசிரியரும் அவரே எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பவரும் ஆவார். அவரே உண்மையான சற்குருவும் ஆவார். இது எல்லையற்ற இராஜயோகமாகும். நீங்கள் எவ்வாறு ஒரு சட்டநிபுணராகவோ அல்லது ஒரு வைத்தியராகவோ ஆகலாம் என்பதை மாத்திரமே உங்களுக்கு அம்மக்கள் கற்பிப்பார்கள். ஏனெனில், இது துன்ப உலகமாகும். அந்தக் கல்விகள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. ஆனால் இது எல்லையற்ற கல்வி. தந்தையே இந்த எல்லையற்ற கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்றார். அந்தத் தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார் என்பதும் சத்திய, திரேதா யுகங்களுக்காக அவர் அந்த ஒரே கல்வியையே கற்பிக்கின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். அதன்பின்னர் அவர் மறைந்து விடுகின்றார். நாடகத்திற்கு ஏற்ப சந்தோஷம் என்ற உங்கள் வெகுமதி முடிவிற்கு வருகின்றது. இந்த எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் கிருஷ்ணரிடம் ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்றோ அல்லது ‘தூய்மையாக்குபவர்’ என்றோ கூறுவீர்களா? இவரது (கிருஷ்ணர்) அந்தஸ்திற்கும் அந்த ஒரேயொருவரின் (சிவபாபாவின்) அந்தஸ்திற்கும் இடையில் இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை இனங்காண்பதன் மூலம், ஒரு விநாடியில் நீங்கள் ஜீவன்முக்தியை அடைய முடியும். கிருஷ்ணர் கடவுளாக இருப்பாராயின், அவரை எவராலுமே உடனடியாக இனங்கண்டுவிட முடியும். கிருஷ்ணரின் பிறப்பு தெய்வீகமான, அலௌகீகப் பிறப்பு என்று நினைவுகூரப்படவில்லை. அவர் தூய்மையின் மூலம் பிறப்பெடுக்கின்றார். தந்தை எவரது கருப்பையில் இருந்தும் வெளிவரவில்லை. அவர் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளே! ஆத்மாக்களே கற்கின்றனர். ஒவ்வோர் ஆத்மாவிலும் நல்ல, தீய சம்ஸ்காரங்கள் அனைத்தும் உள்ளன. ஆத்மாக்களே செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் அதற்கேற்ப சரீரங்களைப் பெறுகின்றனர். சிலர் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றனர். சிலர் ஒற்றைக் கண்ணுடையவர்களாகவும் சிலர் செவிடர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் கடந்த காலத்தில் அத்தகைய செயல்களைச் செய்திருக்க வேண்டும் எனவும், அதுவே அவற்றின் பலன் எனவும் கூறப்படும். ஓர் ஆத்மா தான் செய்த செயல்களுக்கு ஏற்ப நோயுற்ற சரீரம் போன்றவற்றையும் பெறுகின்றார். தந்தையாகிய கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். கடவுள் ஆசிரியராவார். கடவுளே ஆசான். அவர் கடவுள், பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். அதாவது பரமாத்மாவான கடவுள் என்பதே அதன் அர்த்தமாகும். பிரம்மாவை ‘பரம்’ என அழைக்க முடியாது. ‘பரம்’ என்றால் அனைவரிலும் மேலானவரும் அதிதூய்மையானவரும் என்று அர்த்தமாகும். அனைவரும் வேறுபட்ட அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். வேறு எவராலும் கிருஷ்ணரின் அந்தஸ்தைப் பெற முடியாது. பிரதம மந்திரியின் அந்தஸ்தை வேறு எவருக்கும் கொடுக்க முடியாது. தந்தையின் அந்தஸ்தும் பிரம்மா, விஷ்ணு, சங்கரரது அந்தஸ்தில் இருந்து வேறுபட்டது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள். சிவனோ பரமாத்மா. அவர்கள் எவ்வாறு இருவரையும் ஒருவராக்கி, சிவசங்கரர் என்று பேச முடியும்? ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள். இதனைப் புரிந்துகொள்ளாததால், அவர்கள் சிவனும் சங்கரரும் ஒருவரெனக் கூறுகின்றார்கள். அவர்கள் அத்தகைய பெயர்களை மக்களுக்கும் கொடுக்கின்றார்கள். தந்தையே வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அந்த ஒரேயொருவரே பாபாவும் ஆசிரியரும் சற்குருவும் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதருக்குமே தந்தையும் ஆசிரியரும் குருவும் இருக்கின்றனர். அவர்கள் வயோதிபர் ஆகும்பொழுது ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்நாட்களில், சிறு குழந்தைகளையும் குருமார்களை ஏற்றுக் கொள்ளச் செய்கின்றார்கள். ஏனெனில் குழந்தைக்கு ஒரு குரு இல்லாதிருந்தால் கீழ்ப்படிவின்மை இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். முன்னர், ஓய்வுக்குரிய ஸ்திதியான, 60 வயதின் பின்னரே, குருமாரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். நிர்வாணா என்றால், சப்தத்திற்கு அப்பாற்பட்ட, இனிய மௌன வீடு என்று அர்த்தமாகும். நீங்கள் அரைக்கல்பமாக அங்கு செல்வதற்கே முயற்சி செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், அதனைப் பற்றி எவரும் அறியாதிருந்தால், எவராலும் அங்கே செல்ல முடியாது. அவர்களால் எவ்வாறு வேறு எவருக்கும் அந்தப் பாதையைக் காட்ட முடியும்? ஒரேயொருவரைத் (சிவபாபா) தவிர வேறு எவராலும் உங்களுக்கு அந்தப் பாதையைக் காட்ட முடியாது. அனைவரது புத்தியும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சிலர் சமயக்கதைகளைச் செவிமடுக்கின்றார்கள். ஆனால் அவற்றினால் எந்தப் பயனும் இல்லை; அதில் எப்பயனும் இல்லை. நீங்கள் இப்பொழுது பூந்தோட்டத்தின் மலர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் மலர்களில் இருந்து முட்கள் ஆகினீர்கள். இப்பொழுது தந்தை உங்களை முட்களில் இருந்து மலர்கள் ஆக்குகின்றார். நீங்கள் பூஜிக்கத் தகுதியுடையவராக இருந்தீர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். சதோபிரதானாக இருந்து 84 பிறவிகளையும் எடுக்கும்பொழுது நீங்கள் தமோபிரதானாகவும் தூய்மையற்றவர்களாகவும் ஆகினீர்கள். தந்தை உங்களுக்கு ஏணிப்படத்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து இப்பொழுது எவ்வாறு தூய்மையானவர் ஆகுகிறீர்கள் என்பது எவருக்கும் தெரியாது. மக்கள் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். அவ்வாறாயின், ஆற்று நீரையும் சமுத்திரத்தையும் அவர்கள் ஏன் தூய்மையாக்குபவர் எனக் கருதி அவற்றில் நீராடச் செல்கின்றார்கள்? அவர்கள் கங்கையைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றார்கள். ஆனால் ஆறுகள் எங்கிருந்து ஆரம்பமாகின? அவை அனைத்தும் சமுத்திரத்தில் இருந்தே வெளித்தோன்றுகின்றன. அவை அனைத்துமே சமுத்திரத்தின் குழந்தைகளே. எனவே, அனைத்தும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கே, குழந்தைகளாகிய நீங்கள் சத்தியத்தின் சகவாசத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வெளியே தீய சகவாசத்தினுள் செல்லும்பொழுது, அவர்கள் உங்களுக்கு பிழையான விடயங்களைக் கூறுகின்றார்கள். அப்பொழுது நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். தீய சகவாசத்தினுள் செல்வதால், நீங்கள் திணற ஆரம்பிக்கின்றீர்கள். அப்பொழுதே நீங்கள் சந்தேகங்கள் பற்றி அறிகின்றீர்கள். எவ்வாறாயினும், இவ்விடயங்கள் மறக்கப்படக்கூடாது. எங்கள் பாபா எல்லையற்ற பாபாவும் ஆசிரியரும் ஆவார். அவர் எங்களை அக்கரைக்கு அழைத்தும் செல்கின்றார். நீங்கள் இந்த நம்பிக்கையுடனேயே இங்கு வந்திருக்கின்றீர்கள். ஏனைய அனைத்துமே உலகக் கல்வியும் உலக மொழிகளும் ஆகும். இது அலௌகீகமானது. தந்தை கூறுகின்றார்: எனது பிறப்பும் அலௌகீகமானதாகும். நான் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெறுகின்றேன். நான் ஒரு பழைய சப்பாத்தைப் பெறுகின்றேன். இதுவே அனைத்திலும் அதிகளவு பழையது; இதுவே அனைத்திலும் மிகவும் பழைய சப்பாத்து. தந்தை எடுத்துள்ள சரீரம் நீண்ட சப்பாத்து என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் இலகுவான விடயம். இது மறப்பதற்குரிய ஒரு விடயமல்ல. எவ்வாறாயினும், மாயை உங்களை இலகுவான இவ்விடயத்தையும் மறந்துவிடச் செய்கின்றாள். தந்தை தந்தையே ஆவார். அவர் வேறு எவராலும் கொடுக்கப்பட முடியாத, எல்லையற்ற கற்பித்தல்களையும் கொடுக்கின்றார். பாபா கூறுகின்றார்: நீங்கள் வெளியே சென்று, வேறு எங்கேயாவது இவற்றைப் பெற முடியுமா என்று பாருங்கள். அனைவரும் மனிதர்களே. அவர்களால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. கடவுள் ‘பாக்கிய இரதம்’ என அழைக்கப்படும் ஒரேயொரு இரதத்தை மாத்திரமே பெற்றுக் கொள்கின்றார். தந்தை உங்களைப் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆக்குவதற்காக இதற்குள் பிரவேசிக்கின்றார். அவரே மிகவும் நெருக்கமான மணியாவார். பிரம்மா பின்னர் விஷ்ணு ஆகுகின்றார். சிவபாபா இவரை அவ்வாறு ஆக்குகின்றார். அத்துடன் அவர் இவரின் மூலமாக உங்களை உலக அதிபதிகளாகவும் ஆக்குகின்றார். விஷ்ணுவின் தாமம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இது ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள அனைவரும் செவிமடுக்கின்றார்கள். ஆனால் பலரின் செவிகளிலிருந்து அது வெளியேறி விடுகின்றது. சிலரால் மாத்திரமே அதனைக் கிரகித்துப் பிறருக்கும் அதனைக் கூற முடிகின்றது என்பதை பாபா அறிவார். அவர்களே மகாராத்திகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் இதனைச் செவிமடுத்து, அதனைக் கிரகித்துக் கொள்கின்றார்கள். பின்னர் அதனைப் பிறருக்கு ஆர்வத்துடன் விளங்கப்படுத்துகின்றார்கள். விளங்கப்படுத்துபவர் ஒரு மகாராத்தியாக இருப்பாராயின், பிறர் மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் குதிரைப்படையினரிடம் குறைவாகவும் காலாட்படை வீரரிடம் அதனை விடவும் குறைவாகவுமே புரிந்து கொள்வார்கள். மகாராத்திகள் யார் என்பதும் குதிரைப்படையினர் யார் என்பதும் தந்தைக்குத் தெரியும். இதினைப் பற்றிக் குழப்பமடைதல் என்ற கேள்விக்கு இடமில்லை. எவ்வாறாயினும், குழந்தைகள் தொடர்ந்தும் குழப்பம் அடைவதையும் பின்னர் தொடர்ந்தும் தூங்கி விழுவதையும் பாபா பார்க்கின்றார். அவர்கள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்கின்றார்கள். வருமானத்தை ஈட்டும்பொழுது எவராவது தூங்கி விழுவார்களா? நீங்கள் தொடர்ந்தும் தூங்கி விழுந்தால், உங்களால் எவ்வாறு இதனைக் கிரகிக்க முடியும்? ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் களைப்படைந்துள்ளார் என்பதை பாபா அறிந்து கொள்கின்றார். ஒரு வருமானத்தை ஈட்டும்பொழுது ஒருபொழுதும் களைப்படைய முடியாது. கொட்டாவி விடுதல் சந்தோஷமற்றிருப்பதன் அடையாளமாகும். உள்ளார எதனையாவது ஒன்றைப் பற்றித் தொடர்ந்தும் திணறிக் கொண்டிருப்பவர்களே பெருமளவு கொட்டாவி விடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள்; இதுவும் ஒரு குடும்பம். அவர் உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்காக ஆசிரியராகவும் குருவாகவும் ஆகுகின்றார். நீங்கள் மாஸ்டர் குருமார்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது பலருக்கு நன்மை அளிக்கும் வகையில் தந்தையின் வலது கரமாக வேண்டும். ஏனைய வியாபாரங்கள் அனைத்திலும் நட்டம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் எந்த இழப்புமே இல்லாமல் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். அனைவரது சம்பாத்தியமும் முடிவடைந்து விட்டது. தந்தை மாத்திரமே சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாறுகின்ற வியாபாரத்தைக் கற்பிக்கின்றார். எனவே எந்தக் கல்வியை நீங்கள் கற்க வேண்டும்? அதிகச் செல்வம் உள்ளவர்கள் இங்கேயே சுவர்க்கம் உள்ளது என்று எண்ணுகின்றார்கள். பாபு காந்திஜி இராம இராச்சியத்தை ஸ்தாபித்தாரா? ஆ அதே தமோபிரதான் உலகமே உள்ளது. துன்பம் மேலும் அதிகரிக்கின்றது. இதனை எவ்வாறு இராம இராச்சியம் என்று அழைக்க முடியும்? மக்கள் அதிகளவு விவேகமற்றவர்கள் ஆகியுள்ளார்கள்! விவேகமற்றவர்கள் தமோபிரதான் என அழைக்கப்படுகின்றார்கள். விவேகிகள் சதோபிரதான் என அழைக்கப்படுகின்றார்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இதில் தந்தையிடம் எதனையும் வினவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்குப் படைப்பவரதும் படைப்பினதும் ஞானத்தைக் கொடுக்க வேண்டியது தந்தையின் கடமையாகும். அதனை அவர் தொடர்ந்தும் கொடுக்கின்றார். அவர் அனைத்தையும் முரளியினூடாகத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அனைத்திற்குமான பதிலைப் பெறுகின்றீர்கள். எனவே, இதனை விட நீங்கள் வேறு எதனைக் கேட்கப் போகின்றீர்கள்? தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது என்பதால் நீங்கள் எதனைக் கேட்க முடியும்? நீங்கள் அறிவிப்புப் பலகையிலும் எழுதலாம்: உள்ளே வாருங்கள், 21 பிறவிகளுக்கு என்றும் ஆரோக்கியமாகவும் என்றும் செல்வந்தராகவும் ஆகுவது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்பொதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை கூறுவதை மிக நன்றாகச் செவிமடுத்து, அதனைக் கிரகியுங்கள். அதனைப் பிறருக்குக் கூறுவதிலும் ஆர்வம் கொண்டிருங்கள். அதனை ஒரு காதால் கேட்டு, மறு காதால் விட்டு விடாதீர்கள். வருமானத்தை ஈட்டும்பொழுது ஒருபொழுதும் கொட்டாவி விடாதீர்கள்.2. தந்தையின் வலது கரமாகி, ஏனைய பலருக்கும் நன்மையளியுங்கள். நாராயணன் ஆகி, ஏனையோரையும் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக்குகின்ற தொழிலில் ஈடுபட்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
வீணான செய்திகளைக் கேட்பதையும் அதில் உங்களுக்கான ஆர்வத்தை அதிகரிப்பதையும் நிறுத்தி, ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் இருந்து விடுபடுவீர்களாக.தொடர்ந்து முன்னேறும் போது, சில குழந்தைகள் ஸ்ரீமத்தை ஏனைய ஆத்மாக்களின் கட்டளைகளுடன் கலக்கிறார்கள். அதனால், ஒரு பிராமணர் உலகச் செய்திகளை விவரிக்கும்போது, அவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கிறார்கள். உங்களால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. அப்படியிருந்தும், நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். அதனால், அந்தச் செய்திகள் உங்களின் புத்திக்குள் செல்வதுடன் காலமும் வீணாக்கப்படுகிறது. ஆகவே, கேட்டும் கேட்காதிருங்கள் என்பதே தந்தையின் அறிவுறுத்தல்கள் ஆகும். யாராவது வந்து எதைப்பற்றியாவது உங்களிடம் சொன்னாலும், ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். யாரைப் பற்றியும் எதையாவது கேட்டாலும், உங்களின் பார்வையில் அல்லது எண்ணங்களில் அந்த நபருக்காக எந்தவிதமான வெறுப்பு உணர்வுகளைக் கொண்டிராதீர்கள். அப்போது, நீங்கள் மற்றவர்களின் கட்டளைகளில் இருந்து விடுபட்டவர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
பெரிய இதயங்களைக் கொண்டவர்களின் இதயங்களில் இருந்து எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்கள் அவர்களின் கனவுகளிலேனும் வெளிப்பட முடியாது.