14.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த அதி மேன்மையான சங்கம யுகம் நன்மை பயக்கும் யுகமாகும். இந்த யுகத்தில் மாத்திரமே மாற்றம் நிகழ்கின்றது. இந்த யுகத்திலேயே நீங்கள் அதி சீரழிந்த மனிதர்களிலிருந்து அதி மேன்மையான மனிதர்களாக மாறுகின்றீர்கள்.

கேள்வி:
இந்த ஞான மார்க்கத்தில் குறிப்பிட்ட எந்த விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதாலோ, அல்லது பேசுவதாலோ நீங்கள் என்றுமே முன்னேற முடியாது?

பதில்:
“நாடகத்தில் இருந்தால் நான் முயற்சி செய்வேன்! நாடகம் என்னைத் தூண்டினால், நான் அதனைச் செய்வேன்.” இவ்வாறு சிந்திப்பவர்கள், அல்லது பேசுபவர்களால் என்றுமே முன்னேற முடியாது. இவ்வாறு கூறுவது பிழையாகும். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்வதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும்.

பாடல்:
இது சுவாலையினதும், புயலினதும் கதை.

ஓம் சாந்தி.
கலியுகத்து மனிதர்கள் இப்பாடலை இயற்றியுள்ளனர், ஆனாலும், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அதி மேன்மையான சங்கம யுகத்தவர்கள். “சங்கம யுகம்” என்பதுடன் “அதி மேன்மையான” என்பதையும் நீங்கள் சேர்த்து எழுத வேண்டும். இந்த ஞானக் கருத்துக்களை நினைவு செய்யாததால், குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய வார்த்தைகளை எழுதுவதற்கு மறந்து விடுகின்றீர்கள். இதுவே பிரதான விடயம், நீங்கள் மாத்திரமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். அதி மேன்மையான புண்ணிய மாதம் உள்ளது. இதுவே அதி மேன்மையான சங்கம யுகமாகும். இந்தச் சங்கமமும் ஒரு பண்டிகை. இதுவே அதி மேன்மையான பண்டிகையாகும். நீங்கள் இப்பொழுது அனைவரிலும் அதியுயர்ந்த, அதிமேன்மையானவர்கள் ஆகுவதை அறிவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே அனைவரையும் விட அதியுயர்ந்தவர் எனவும், அனைவரிலும் அதிசெல்வந்தர்கள் எனவும், முதலாம் இலக்கத்தவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். முன்னர் பெரும் பிரளயம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் முதலாம் இலக்க ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் ஆலிலையில் மிதந்து வந்ததாகவும் சமயநூல்கள் கூறுகின்றன. இப்பொழுது நீங்கள் என்ன கூறுவீர்கள்? நீங்கள் “சியாம்-சுந்தர்” என அழைக்கின்ற இந்த ஸ்ரீ கிருஷ்ணரே முதலாம் இலக்கத்தவர். அவர் தனது பெருவிரலைச் சூப்பியவாறே வந்ததாகக் காட்டப்படுகின்றது. ஒரு குழந்தை கருப்பையிலேயே இருப்பதுண்டு. எனவே, அனைவரிலும் அதியுயர்ந்தவரான, ஸ்ரீ கிருஷ்ணர், ஞானக்கடலில் இருந்து தோன்றிய முதலாம் இலக்கத்தவர். ஞானக்கடலின் மூலமே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் முதலாம் இலக்க அதி மேன்மையானவர். அந்த ஒரேயொருவரே ஞானக்கடல், தண்ணீர்க் கடல் அல்ல. பிரளயம் ஒருபோதும் இடம்பெறுவதில்லை. புதிய குழந்தைகள் வரும்போது, தந்தை பழைய கருத்துக்களை மீண்டும் கூற வேண்டியுள்ளது. சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் அறியப்பட்ட போதிலும், ஐந்தாவது யுகமே இந்த அதி மேன்மையான சங்கமயுகம் ஆகும். இந்த யுகத்திலேயே மனிதர்கள் மாற்றம் அடைகின்றனர்; அவர்கள் அதி சீரழிந்தவர்களிலிருந்து அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றனர். சிவபாபாவே அனைவரிலும் அதி மேன்மையானவர் அல்லது அனைரிலும் அதியுயர்வானவர் ஒரேயொருவர் என அழைக்கப்படுகின்றார். அவரே கடவுளாகிய பரமாத்மா. பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் அதியுயர்வானவர்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். இந்நேரத்திலேயே நாங்கள் அவர்களைப் போன்று ஆகுவதற்கு முயற்சி செய்கின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இம்முயற்சியில் சிரமம் எதுவும் இல்லை; இது மிக எளிமையானது.. கள்ளங்கபடமற்றவர்களும், பலவீனமான தாய்மாரும், கூன்முதுகுடையவர்களும், கல்வியறிவற்றவர்களும் இங்கு கற்கின்றனர். அவர்களுக்கு மிக எளிமையாக விளங்கப்படுத்தப்படுகின்றது. பாருங்கள், அஹமதபாத்தில் ஒரு சாது இருந்தார். அவர் தான் எதையும் உண்பதோ, பருகுவதோ இல்லை எனக் கூறுவார். ஓ.கே. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்தால், அதில் என்ன இருக்கின்றது. அவ்வாறு செய்தாலும் அவரால் எதையுமே அடைய முடியாது. ஒரு மரம் போஷாக்கைப் பெறுகின்றது. அதற்குக் கிடைக்கும் பசளை, நீர் போன்றன இயல்பாகவே அதனை வளரச் செய்கின்றது. அந்தச் சாது ஏதாவது மந்திர சக்தியைப் பெற்றிருக்க வேண்டும். நீரிலும், நெருப்பிலும் நடக்கின்ற பலரும் உள்ளனர். அவ்வாறு செய்வதில் என்ன நன்மை உள்ளது? இந்த இலகு இராஜ யோகததைக் கற்பதனால், நீங்கள் பிறவிபிறவியாக நன்மையை அனுபவம் செய்கின்றீர்கள். சந்தோஷமற்றவரிலிருந்து, நீங்கள் பிறவிபிறவியாகச் சந்தோஷம் உடையவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நாடகத்தின்படி, நான் உங்களுக்கு ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். உதாரணமாக, அவர்கள் சிவனையும் சங்கரரையும் ஒருவராக காட்டி எவ்வாறு குழப்பி விட்டனர் என்பதை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சங்கரருக்கு இவ்வுலகில் நடிப்பதற்கென ஒரு பாகம் இல்லை. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு நடிப்பதற்குப் பாகங்கள் உள்ளன. பிரம்மாவும், விஷ்ணுவும் சகலதுறை பாகத்தைக் கொண்டுள்ளனர். சிவபாபாவிற்கு இந்நேரத்தில் மாத்திரமே ஒரு பாகம் உள்ளது. இதனாலேயே அவர் இப்பொழுது வந்து, இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். பின்னர் அவர் நிர்வாணா தாமத்திற்குத் திரும்பிச் செல்கின்றார். அவர் தனது சொத்துக்கள் முழுவதையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஓய்வு ஸ்திதிக்குச் சென்று விடுகின்றார். ஓய்வு ஸ்திதியில் இருப்பதென்றால், ஒரு குரு மூலம் சத்தத்திற்கு அப்பால் செல்ல முயற்சி செய்வதாகும். எவ்வாறாயினும், எவராலும் இன்னமும் வீடு திரும்ப முடியாது. ஏனெனில், அனைவரும் விகாரம் நிறைந்தவர்களாகவும், சீரழிந்தவர்களாகவும் உள்ளனர்; அனைவரும் விகாரத்தின் மூலமே பிறக்கின்றனர். இலக்ஷ்மியும், நாராயணனும் விகாரமற்றவர்கள்; அவர்கள் பாவத்தின் மூலம் பிறப்பதில்லை. இதனாலேயே அவர்கள் மேன்மையானவர்கள் எனப்படுகின்றனர். குமாரிகளும் விகாரமற்றவர்களே. இதனாலேயே அனைவரும் அவர்களை வணங்குகின்றார்கள். எனவே, சங்கரருக்கு இங்கு நடிப்பதற்குப் பாகம் இல்லை என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக மக்களின் தந்தையாவார். சிவபாபா ஆத்மாக்களின் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவர் அநாதியான தந்தையாவார். நீங்கள் இந்த ஆழமான விடயங்களை மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். பெரிய தத்துவஞானிகள் பெரிய பட்டங்களைப் பெறுகின்றனர். பண்டிதர்கள் ஸ்ரீ ஸ்ரீ 108 என்ற பட்டத்தைப் பெறுகின்றனர். அவர்கள் பெனாரஸில் உள்ள கல்லூரியில் சித்தியெய்தி, அப்பட்டங்களைப் பெறுகின்றனர். அவர்கள் தந்தையின் பட்டத்தைத் தங்களுக்கு எடுத்துக் கொண்டதை அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக பாபா குப்தாஜியை பெனாரஸிற்கு அனுப்பினார். தந்தையே ஸ்ரீ ஸ்ரீ 108 ஜகத்குரு என அழைக்கப்படுகின்றார். 108 மணி மாலை உள்ளது. எட்டு இரத்தினங்கள் நினைவு கூரப்படுகின்றனர். அவர்கள் திறமைச்சித்தி எய்தினார்கள்; இதனாலேயே அவர்களின் மணிமாலை உருட்டப்படுகின்றது. பின்னர், அவர்களை விடச் சற்றுக் குறைந்தளவு மேன்மையான 108 பேர் பூஜிக்கப்படுகின்றனர். மக்கள் யாகம் வளர்க்கும்போது, 1000 சாலிகிராம்களைச் செய்கின்றனர். சிலர் 10,000 ஐயும், சிலர் 50,000 ஐயும், இன்னும் சிலர் 100,000 சாலிகிராம்களையும் செய்கின்றனர். அவர்கள் அவற்றைக் களிமண்ணால் செய்து, பின்னர் யாகம் வளர்க்கின்றனர். ஒரு வியாபாரி மிகவும் செல்வந்தராக இருப்பாராயின், அவர் 100,000 சாலிகிராம்களைச் செய்விப்பார். மணிpமாலை மிக நீண்டது எனத் தந்தை விளங்கப்படுத்தியிருக்கின்றார். 16,108 மணிகள் கொண்ட மணிமாலையும் இருக்கின்றது. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அனைவரும் தந்தையுடன் சேர்ந்து பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள். தந்தை பூஜிக்கப்படுவதால், குழந்தைகளும் பூஜிக்கப்பட வேண்டும். உருத்திரர் ஏன் பூஜிக்கப்படுகின்றார் என்பதை மக்கள் அறியமாட்டார்கள். அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள். இந்நேரத்தில், உலகச் சனத்தொகை மிகவும் அதிகமாக உள்ளது. சகல ஆத்மாக்களும் சிவபாபாவின் குழந்தைகளேயாயினும், அனைவரும் அவரது உதவியாளர்களல்ல. இந்நேரத்தில் நீங்கள் எந்தளவிற்கு அவரை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் மேன்மையானவர் ஆகுவீர்கள்; நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. இதனாலேயே கடவுள் பற்றிய ஆழமான விடயங்களை எவரும் அறியமாட்டார்கள் என அவர்கள் கூறுகின்றனர். தந்தையே வந்து, தான் ஞானக் கடல் என அழைக்கப்படுகிறேன் என விளங்கப்படுத்துகின்றார். எனவே, அவரே நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. கடவுள் தூண்டுதல் மூலம் விளங்கப்படுத்துகின்றாரா? அவரிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு இதைக் கூறுகின்றார். உங்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நம்பிக்கை இருந்தும் நீங்கள் தந்தையை மறந்து விடுகின்றீர்கள். தந்தையின் நினைவே இக்கல்வியின் சாராம்சம் ஆகும். தந்தையின் நினைவின் மூலம் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு முயற்சி தேவை. இந்த நினைவிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். கல்வியில் அந்தளவு தடைகள் இருப்பதில்லை. சங்கரர் தனது கண்ணைத் திறந்தபோது, விநாசம் இடம்பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது சரியல்ல. தந்தை கூறுகின்றார்: நான் விநாசத்தைத் தூண்டுவதோ அல்லது சங்கரர் விநாசத்தை மேற்கொள்வதோ இல்லை. அது பிழையாகும். தேவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். சிவபாபா இப்போது இங்கமர்ந்திருந்து, இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். இச்சரீரம் இந்த ஆத்மாவின் இரதம். ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்த இரதத்தை ஓட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவரின் இரதத்தைக் கடனாக எடுக்கின்றேன். இதனாலேயே எனது பிறப்பு தெய்வீகமானதும், தனித்துவமானதும் எனக் கூறப்படுகின்றது. 84 பிறவிகளின் சக்கரம் இப்போது உங்களின் புத்தியில் உள்ளது. நீங்கள் வீட்டிற்குச் சென்று, பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்வதை அறிவீர்கள். பாபா அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு இதயவழுவல் ஏற்படக்கூடாது. சிலர் கூறுகின்றனர்: பாபா, நான் கல்வியறிவற்றவன். எனது வாயிலிருந்து எதுவும் வெளிவருவதில்லை. எவ்வாறாயினும், அது அவ்வாறில்லை. வாய் நிச்சயமாகத் தொழிற்படுகின்றது. நீங்கள் உண்ணும்போதும், உங்கள் வாய் தொழிற்படுகின்றது. எவ்வித ஓசையும் வெளிவராமலிருப்பது அசாத்தியமாகும். பாபா அனைத்தையும் மிக எளிமையாக விளங்கப்படுத்தியுள்ளார். ஒருவர் மௌனத்தைக் கடைப்பிடித்தாலும், அந்த ஒரேயொருவரை நினைவு செய்யுங்கள் என மேல்நோக்கிச் சுட்டிக்காட்ட அவரால் முடியும். ஒரேயொரு அருள்பவர் மாத்திரமே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர். இப்போதும், அவர் பக்தி மார்க்கத்திலும் அருள்பவராக இருக்கின்றார். பின்னர், ஓய்வு ஸ்திதியில், அமைதி மாத்திரமே இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்களும் அமைதி தாமத்தில் வசிக்கின்றீர்கள். உங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் பாகங்களை நீங்கள் தொடர்ந்தும் நடிக்கிறீர்கள். உலகைப் புதியதாக்குவதே இப்போது எங்களின் பாகங்களாக இருக்கின்றன. தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்ற அவரது பெயர் மிகவும் சிறந்தது. தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர்; அவர் நரகத்தைப் படைப்பதில்லை. எவராவது பழைய உலகைப் படைப்பார்களா? ஒரு கட்டடம் எப்போதும் புதிதாகவே கட்டப்படுகின்றது. சிவபாபா பிரம்மா மூலம் புதிய உலகைப் படைக்கின்றார். அவர் அப்பாகத்தைப் பெற்றிருக்கினறார். இப்பழைய உலகில், மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தையே விளைவிக்கின்றனர். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். பின்னர் சரீரதாரிகள் என்பதால், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். படைப்பவரான சிவபாபாவே தனது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். இவ்வாறு ஆகுவதே உங்களின் இலக்கும், இலட்சியமும் ஆகும். மக்கள் பளிங்குச் சிலைகளை உருவாக்குவதில் அதிகளவு செலவை ஏற்படுத்துகின்றார்கள். இது இறை உலகப் பல்கலைக்கழகம். முழப் பிரபஞ்சமும் மாற்றப்படுகின்றது. அனைவரதும் குணாதிசயமும் அசுரத்தனமாக இருக்கின்றது:: அவர்கள் ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதி வரைக்கும் தொடர்ந்தும் துன்பத்தையே விளைவிக்கின்றனர். இது இறை பல்கலைக்கழகம் ஆகும். இறை உலகப் பல்கலைக்கழகம் ஒன்று மாத்திரமே உள்ளது. கடவுளே அதைத் ஆரம்பித்து வைக்கின்றா, அதன் மூலம் முழு உலகமும் நன்மை பெறுகின்றது. சரி, பிழைக்;கு இடையிலான வித்தியாசத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். வேறெந்த மனிதர்களும் இதைப் புரிந்து கொள்வதில்லை. தர்மம் நிறைந்த ஒரேயொருவரே இருக்கின்றார். அவரே சத்தியம் என்று அழைக்கப்படுகின்ற ஒரேயொருவர்., அவர் சரியானதையும் பிழையானதையும் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை மாத்திரமே வந்து, அனைவரையும் தர்மம் நிறைந்தவர் ஆக்குகின்றார். நீங்கள் தர்மம் நிறைந்தவர் ஆகும்போது, முக்திக்குச் சென்று, பின்னர் ஜீவன்முக்திக்குச் செல்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தையும் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதி வரைக்கும் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றீர்கள். இந்நாடகம் சதாகாலமும் தொடர்வதுடன், தொடர்ந்தும் படமாக்கப்படுகின்றது. இது என்றென்றும் புதிதாகவே உள்ளது. இந்நாடகம் ஒருபோதும் பழையதாகுவதில்லை; ஏனைய நாடகங்கள் போன்றவை அழியக்கூடியவை. இந்நாடகம் எல்லையற்றதும், அழிவற்றதும் ஆகும். இதில் ஒவ்வொருவரும் ஓர் அழிவற்ற நடிகர்.. இந்த அநாதியான நாடகமும், மேடையும் எவ்வளவு பெரியவை எனப் பாருங்கள்! தந்தை வந்து, இப்பழைய உலகைப் புதியதாக்குகின்றார். நீங்கள் இவை அனைத்தினதும் காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நெருக்கமாக வருகின்றீர்களோ, அந்தளவிற்குச் சந்தோஷத்தை உணர்வதுடன், காட்சிகளையும் பெறுவீர்கள். உங்கள் பாகங்கள்; முடிவுக்கு வந்துவிட்டதாக நீங்கள் கூறுவீர்கள். நாடகம் பின்னர் மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டும். அதன் பின்னர், நீங்கள் முன்னைய கல்பத்தில் நடித்த பாகங்களை புதிதாக நடிப்பீர்கள். அதில் சற்றேனும் மாற்றம் இருக்க முடியாது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இயன்றவரை உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவேண்டும். முயற்சி செய்யுங்கள், குழப்பமடையாதீர்கள். நாடகம் உங்களைத் தூண்டி, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வைக்கும் எனக் கூறுவது பிழையாகும் நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக்கல்வியின் சாராம்சத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதனால், உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையுங்கள். மேன்மையானவராகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராகவும் ஆகுவதற்கு, தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.

2. நீங்கள் உண்மையான தந்தையிடமிருந்து எது சரி, எது பிழை என்ற புரிந்துணர்வைப் பெற்று விட்டீர்கள். எனவே, அதன் மூலம் தர்மம் நிறைந்தவர் ஆகுங்கள். பந்தன வாழ்க்கையில் இருந்து உங்களை விடுவித்து, முக்தி, ஜீவன்முக்தி என்ற உங்களின் ஆஸ்தியைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பிறருடன் அன்பைக் கொடுத்து, பெற்று, அனைவரையும் ஒத்துழைப்பாக்குவதால், ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற, பெறுகின்ற ஸ்திதியை இப்போது கடந்து விட்டீர்கள். இப்போது, அன்பைக் கொடுத்து, பெறுங்கள். உங்கள் முன்னால் யார் வந்தாலும், உங்களுடன் யார் ஓர் உறவுமுறையைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அன்பைக் கொடுத்து, அன்பைப் பெறுங்கள். இதுவே அனைவரிடமும் அன்பாக இருத்தலும், அனைவரிலும் அன்பானவரும் என அறியப்பட்டுள்ளது. இந்த ஞானம் இல்லாதவர்களுக்கு அதனை நீங்கள் தானம் செய்ய வேண்டும், ஆனால் பிராமணக் குடும்பத்தினருக்கு, இந்த அன்புத் தானத்தின் பெருந் தானியாக இருங்கள். உங்கள் எண்ணங்களில் கூட, அன்பைத் தவிர எதுவும் இல்லாதிருக்கட்டும். அனைவருக்குமான அனபு இருக்கும்போது, இன்பின் பலன் ஒத்துழைப்பும், ஒத்துழைப்பின் பலன் வெற்றியும் ஆகும்.

சுலோகம்:
ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுவதெனில், தீவிர முயற்சி செய்வதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

உங்கள் மனம் மூலமான சேவை என்றால், எல்லையற்ற சேவை என்பதாகும். உங்கள் மனம் மூலமும், வார்த்தைகள் மூலமும் சேவை செய்வதற்கான மாதரியாக உங்களை மக்கள் பார்க்கின்ற அளவிற்கேற்ப, அவர்கள் கவரப்படுவார்கள். இந்தத் திடசங்கற்பம் இருந்தால், சேவை தொடர்ந்தும் இலகுவில் நடைபெறும். வார்த்தைகள் மூலம் சேவை செய்வதற்கு உங்களுக்கு நேரம் இல்லாதுவிடின், அப்போது குறைந்தபட்சம் உங்கள் மனோபாவம் மூலமும், உங்கள் மனம் மூலமும் சேவை செய்வதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நேரம் உங்களுக்கு நேரம் இருக்கின்றது. இப்போது நீங்கள் எதனிலும் நேரத்தை வீணாக்காமல், சேவையை மட்டும் செய்யங்கள். ஒரு சதாயோகியாகவும், சதா சேவையாளராகவும் இருங்கள். எவ்வாறு உங்கள் மனம் மூலம் சேவை செய்வது என்று நீங்கள் அறிந்திராது விடின், உங்கள் தொடர்பு மற்றும் உங்கள் நடத்தை மூலம் சேவை செய்ய முடியும்.

மாதேஸ்வரிஜியின் பெறுதிமிக்க மேன்மையான வாசகங்கள்

முக்தியும் அநாதியான முக்தியும்.

இக்காலத்தில், மக்கள் முக்தியை அநாதியான முக்தி என அழைக்கின்றார்கள். முக்தியடைந்தவர்கள் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுதலையடைகின்றார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். இறப்பு பிறப்பு சக்கரத்திற்குள் வராது விடுவதை மேன்மையான அந்தஸ்து என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அதுவே வெகுமதி என்றே நம்புகிறார்கள். ஜீவன்முக்தி வாழ்க்கை நீங்கள் நல்ல செயல்களைச் செய்கின்ற வாழ்வு என்று அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, தர்மாத்மாக்கள் ஜீவன்முக்தியைப் பெற்றவர்கள் அவர்கள் என்று நம்புகிறார்கள். கர்ம பந்தனங்களில் இருந்து விடுபடுதல் பற்றிய புரிந்துணர்வை ஒரு கைப்பிடி அளவினர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களின் சொந்த அபிப்பிராயமாகும். எவ்வாறாயினும், விகாரத்தின் அடிப்படையிலான கர்ம பந்தனங்களிலிருந்து ஒரு மனிதன் விடுதலையடையும் வரையில் அவனால் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரையான துன்பத்திலிருந்து விடுபட முடியாது என நாம் கடவுளிடமிருந்து புரிந்து கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து விடுபடுவதும் ஒரு ஸ்திதியே ஆகும். எனவே, முதலில் நீங்கள் இறை ஞானத்தைக் கிரகித்தால் மாத்திரமே உங்களால் அந்த ஸ்திதியை அடைய முடியும், நாம் அந்த ஸ்திதியை அடைவதற்கு கடவுளால் மட்டுமே எமக்கு உதவ முடியும், ஏனெனில், அவரே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர். அவர் இந்த நேரத்தில் அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்வதற்காக வருகின்றார். கடவுள் பல தடவைகள் வருவதில்லை. அத்துடன் அவர் ஒரு அவதாரமாக வருகின்றார் என்றும் நீங்கள் நினைக்கக்கூடாது.