14.12.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.02.2008 Om Shanti Madhuban
உலக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மௌன சக்தியுடன் பரிசோதனை செய்யுங்கள்.
இன்று, உலகை மாற்றுகின்ற தந்தையின் நம்பிக்கைத் தீபங்களான எங்கும் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதாவிடம் ஆழ்ந்த, அதிகபட்ச ஆழ்ந்த அன்பு இருப்பதை பாப்தாதா அறிவார். அத்துடன் ஒவ்வொரு குழந்தையின் மீதும் பாப்தாதாவிற்குப் பல மில்லியன் மடங்கை விட அதிகமான அன்பு உள்ளது. நீங்கள் இந்த அன்பை சங்கமயுகத்தில் சதா பெறப் போகின்றீர்கள். காலம் நெருங்கி வரும்போது, அதற்கேற்ப, ஒவ்வொரு குழந்தைக்கும் தான் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் உற்சாகமும் அவர்களின் இதயத்தில் உள்ளன. இன்று, மூன்று அதிகாரங்களும், அது மத அதிகாரம், அரசியல் அதிகாரம் அல்லது விஞ்ஞான அதிகாரம் எதுவாக இருந்தாலும், அவை அதிகபட்ச குழப்பத்தில் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். விஞ்ஞானத்தால்கூட இப்போது சடப்பொருளை மிகச்சரியாகச் செயல்பட வைக்க முடியவில்லை. இது நடக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், விஞ்ஞான அதிகாரம், சடப்பொருளுடன் செயல்படுவதையே அடிப்படையாகக் கொண்டது. அதனால், அவர்களிடம் விஞ்ஞானத்தின் வசதிகள் இருந்தாலும், சடப்பொருளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, சடப்பொருளின் இந்த விளையாட்டுக்கள் மேலும் அதிகரிக்கும். ஏனென்றால், சடப்பொருளிற்கு இப்போது ஆரம்ப காலத்தில் இருந்த சக்தி இல்லை. இத்தகைய வேளையில், இதைப் பற்றிச் சிந்தியுங்கள்: எந்த அதிகாரத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? இந்த மௌன சக்தி, உலக மாற்றத்தை ஏற்படுத்தும். எங்கும் உள்ள குழப்பத்தை முடிக்கப் போவது யார் என்று உங்களுக்குத் தெரியுமா? வேறு எவரும் அன்றி, இறைவனின் பராமரிப்பிற்கான உரிமையைக் கொண்டுள்ள ஆத்மாக்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். எனவே, உங்கள் எல்லோருக்கும் பாப்தாதாவுடன் இருக்கும் பிராமண ஆத்மாக்களாகவும் மாற்றத்திற்கான பணியில் அவரின் சகபாடிகளாகவும் இருக்கும் ஊக்கமும் உற்சாகமும் இருக்கின்றதா?
குறிப்பாக அமிர்த வேளையில், உங்களுடன் தொடர்ந்து முன்னேறும்போது, மூன்று அதிகாரங்களிலும் குழப்பம் நிலவும் அளவிற்கு, அமைதி தேவ, தேவர்களான நீங்கள் சக்திவாய்ந்த மௌன சக்தியுடன் பரிசோதனை செய்யும் அளவு குறைவாகவே உள்ளதை பாப்தாதா பார்க்கிறார். எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இந்த உற்சாகத்தை வழங்குகிறார்: நீங்கள் சேவைக்களத்தில் மிக நன்றாக ஒலியைப் பரப்புகிறீர்கள். அதில் சிறிதளவு குழப்பம் இருந்தாலும், மௌன சக்தியைப் பரப்புங்கள். (பாப்தாதா மீண்டும் மீண்டும் இருமுகிறார்) கருவிக்குச் சுகமில்லை. ஆனால், பாப்தாதாவால் குழந்தைகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது, குழந்தைகளாலும் பாபாவைச் சந்திக்காமல் இருக்க முடியாது. எனவே, பாப்தாதா இந்த விசேடமான சமிக்கையை வழங்குகிறார்: இப்போது, எங்கும் மௌன சக்தியின் அதிர்வலைகளைப் பரப்புங்கள்.
இப்போது, குறிப்பாக நீங்கள் பிரம்மாபாபாவையும் ஜெகதாம்பாவையும் கண்டீர்கள். அவர் ஆதிதேவராக இருந்தபோதும் மௌன சக்தியால் அவர் அதிகளவு மறைமுகமான முயற்சியைச் செய்தார். கர்மாதீத் ஆகுவதற்கு, உங்களின் தாதியும் இந்த ஒரு விடயத்தை மிகவும் உறுதியாக்கினார். பொறுப்பைக் கொண்டிருந்ததுடன் சேவைக்கான திட்டங்களைச் செய்யும் போதும் அவர் மௌன சக்தியைச் சேமித்தார். (கருவி மீண்டும் மீண்டும் இருமிக் கொண்டிருந்தார்). கருவியின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், பாப்தாதாவிற்கு அன்பு உள்ளது. எனவே, சேவையின் பொறுப்பு எத்தனை பெரியதாக இருந்தாலும், மௌன சக்தியைப் பயிற்சி செய்யாமல் உங்களால் நீங்கள் விரும்பிய அளவிற்கு அந்தச் சேவையில் உடனடியான, நடைமுறைப் பலன் என்ற வெற்றியைப் பெற முடியாது. ஏனென்றால், அப்போது மட்டுமே உங்களால் கல்பம் முழுவதற்கும் உங்களுக்காக வெகுமதியை உருவாக்க முடியும். இதற்கு, இது இப்பொது நீங்கள் ஒவ்வொருவரும் இராச்சிய வெகுமதியைச் சேமித்து, கல்பம் முழுவதும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்குமான நேரம் ஆகும். ஏனென்றால், இக்கட்டான நேரங்கள் நிச்சயமாக வரப் போகின்றன. இத்தகைய வேளைகளில், மௌன சக்தியும் தொடுகை சக்தியும் பிடித்துக் கொள்ளும் சக்தியும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த வசதிகளால் எதையும் செய்ய முடியாத அத்தகைய நேரமும் வரும். ஆன்மீக சக்தியும் பாப்தாதாவின் வழிகாட்டல்களின் தொடுகையும் மட்டுமே உங்களை ஒரு பணியைச் செய்ய வைக்கும். எனவே, நீங்களே சோதித்துப் பாருங்கள்: அத்தகைய வேளையில், உங்களால் உங்களின் மனதிலும் புத்தியிலும் பாப்தாதாவின் தொடுகையைப் பெற முடியுமா? நீங்கள் இதை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இதை எப்போதும் செய்வதற்கான வழிமுறை - சில வேளைகளில் மட்டுமல்ல, ஆனால் எப்போதும் - உங்களின் மனதையும் புத்தியையும் சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருப்பதே ஆகும். இப்போது ஒத்திகைகள் தொடர்ந்து அதிகரிக்கும். அவை ஒரு விநாடியில் நிஜமாகிவிடும். எந்தவோர் ஆத்மாவிற்கு, எந்தவொரு பணிக்கு அல்லது எந்தவோர் ஒத்துழைக்கும் சகபாடிக்கு உங்களின் மனதில் அல்லது புத்தியில் சிறிதளவு எதிர்மறையேனும் இருக்குமாயின், அதைச் சுத்தம் மற்றும் தெளிவு என்று சொல்ல முடியாது. இதனாலேயே, பாப்தாதா உங்களின் கவனத்தை இதில் ஈர்க்கிறார். சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும் எவ்வளவு மௌன சக்தியை நான் சேமித்துள்ளேன்? சேவை செய்யும்போது, எனது வார்த்தைகளில் மௌன சக்தி இல்லாவிட்டால், நான் விரும்பிய அளவிற்கு உடனடியான வெற்றி என்ற பலனை என்னால் பெற முடியாமல் இருக்கும். அதிகளவு முயற்சியும் குறைந்தளவு வெகுமதியும் காணப்படும். சேவை செய்யுங்கள். ஆனால் மௌன சக்தி நிறைந்த சேவையைச் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் விரும்பிய அளவை விட அதிக பெறுபேற்றைப் பெறுவீர்கள். உங்களை மீண்டும் மீண்டும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தினமும் என்ன சேவை செய்கிறீர்களோ, அத்துடன் நீங்கள் அதை எங்கே செய்கிறீர்களோ, அது நல்லது என்று பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், இப்போது மௌன சக்தியைச் சேமித்து, மாற்றத்தை ஏற்படுத்துவதில் உங்களில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.
முழு உலகமும் இப்போது தேடுகிறது: இறுதியில், உலகை மாற்றுவதற்கு யார் கருவியாக ஆகுவார்? ஏனென்றால், நாளுக்கு நாள், துன்பமும் அமைதியின்மையும் அதிகரிக்கிறது. அவை தொடர்ந்தும் அதிகரிக்கும். எனவே, பக்தர்கள் தமது இஷ்ட தெய்வங்களை நினைக்கிறார்கள். சிலர் உச்சக்கட்டத்திற்குச் சென்று, துயரத்துடன் வாழ்கிறார்கள். மதமும் குருமார்களையே நம்பியுள்ளது. விஞ்ஞானிகளும் நினைக்கிறார்கள்: ‘எப்படி எங்களால் இதைச் செய்ய முடியும்? இது எப்போது நடக்கும்?’ எனவே, அந்த மக்களுக்கு யார் பதில் அளிப்பார்கள்? எல்லோருடைய இதயத்திலும் இந்த அழைப்பே உள்ளது: ‘எப்போதுதான் பொன்னான விடியல் வரும்?’ எனவே, நீங்கள் எல்லோருமே இதை ஏற்படுத்துவீர்கள், அப்படித்தானே? நீங்களே அதை ஏற்படுத்துவீர்கள், அல்லவா? நீங்கள்தானே அது? இதற்குக் கருவிகளாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள்தான் கருவிகளா? அச்சா. நீங்கள் பல கருவிகள் இருக்கிறீர்கள். எனவே, அது எவ்வளவு நேரத்தில் நடக்கும்? நீங்கள் எல்லோரும் சந்தோஷப்படுகிறீர்கள், பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். பாருங்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னான நேரத்திற்கேற்ப இந்தப் பொன்னான வாய்ப்பு உள்ளது.
நீங்கள் இப்போது உங்களுக்கு இடையே சேவை மீட்டிங்குகள் வைக்கிறீர்கள். ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கே அந்த மீட்டிங்குகள் வைக்கிறீர்கள், அப்படித்தானே? அதேபோல், இதற்கும் ஒரு மீட்டிங் வையுங்கள். நினைவைக் கொண்டிருப்பதற்கும் சேவை செய்வதற்கும் ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். நினைவு என்றால் மௌன சக்தி என்று அர்த்தம். நீங்கள் உச்சமான ஸ்திதியில் இருக்கும்போது, அதை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் ஓரிடத்தின் உச்சியில் நிற்கும்போது, உங்களால் எல்லாவற்றையும் மிகத்தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். அதேபோல், உங்களின் ஸ்திதி உச்சியில் உள்ளது. எல்லாவற்றிலும் அதி உச்ச நிலை என்ன? அதுவே பரந்தாமம் ஆகும். பாப்தாதா கூறுகிறார்: சேவை செய்யுங்கள், பின்னர் வந்து உச்ச நிலையில் தந்தையுடன் வந்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குக் களைப்பு ஏற்படும்போது, நீங்கள் ஐந்து நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருக்கிறீர்கள், அது ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. அதேபோல், அவ்வப்போது, வந்து தந்தையுடன் அமர்ந்து கொள்ளுங்கள். உச்சியில் இருக்கும் மற்றைய இடம் எது? உலகச் சக்கரத்தைப் பாருங்கள், அதில் உச்சியில் உள்ள இடம் எது? சங்கமயுகத்தில், ஊசி உச்சியைக் காட்டுகிறது, அப்படித்தானே? எனவே, நீங்கள் கீழே வந்து சேவை செய்துவிட்டுப் பின்னர் உச்சியில் உள்ள இடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? காலம் உங்களை அழைக்கிறதா அல்லது நீங்கள் காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்களா? படைப்பவர் யார்? எனவே, உங்களுக்கு இடையே இத்தகைய திட்டங்களைச் செய்யுங்கள். அச்சா.
பாபா வரவேண்டும் எனக் குழந்தைகள் கூறினார்கள், தந்தையும் ‘ஹா ஜி’ எனக் கூறினார். அதேபோல், தொடர்ந்து ஒருவர் மற்றவரின் சூழ்நிலை, சுபாவம், மனோபாவத்தைப் புரிந்துகொண்டு, ‘ஹா ஜி’ எனக் கூறுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், ஒன்றுகூடலின் சக்தியானது மௌனத்தின் தீச்சுவாலையை உருவாக்கும். நீங்கள் ஓர் எரிமலையைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? எனவே, இந்த ஒன்றுகூடலின் சக்தியும் மௌனத்தின் தீச்சுவாலையை உருவாக்கும். அச்சா.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பம்பாய் இந்தத் தடவை சேவை செய்கிறார்கள்:
அதன் பெயரே மகாராஷ்டிரா என்பதாகும். நாடகத்தின்படி, மகாராஷ்டிரா பொன்னான பரிசைப் பெற்றுள்ளது. அது என்ன? மகாராஷ்டிரா, தந்தை பிரம்மாவிடம் இருந்தும் மம்மாவிடம் இருந்தும் நேரடிப் பராமரிப்பைப் பெற்றுள்ளது. டெல்லியும் உத்தரப்பிரதேசமும் கூட அதைப் பெற்றுள்ளன. ஆனால், மகாராஷ்டிரா அதை அதிகளவில் பெற்றுள்ளது. இப்போது, மகாராஷ்டிரா எப்படியும் மகத்துவமாகவே உள்ளது. நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? மகாராஷ்டிரா: நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, எல்லோருக்கும் ஒரே சுபாவம், ஒரே சம்ஸ்காரம், அத்துடன் எப்படி மௌன சக்தியைப் பரப்புகின்ற சேவை செய்யும் ஒரே இலட்சியத்தைக் கொண்டிருப்பது என்பதற்கான திட்டத்தையும் மீட்டிங்கையும் வையுங்கள். இதற்கான திட்டங்களைச் செய்யுங்கள். நீங்கள் இந்தத் திட்டங்களைச் செய்வீர்கள்தானே? நீங்கள் அவற்றைச் செய்வீர்கள்தானே? அச்சா. நீங்கள் செய்த திட்டங்களைப் பற்றிய ஓர் அறிக்கையை ஒரு மாதத்தின் பின்னர் பாப்தாதாவிற்குக் கொடுங்கள். இந்த இதயபூர்வமான உரையாடல்களில் இருந்து, மேலதிக சேர்க்கைகளைச் செய்ய முடியும். வெவ்வேறு பிராந்தியங்களும் மேலதிகச் சேர்க்கைகளைச் செய்வார்கள். உங்களால் ஓர் உருவத்தை உருவாக்க முடியும். மற்றவர்கள் அதில் வைரங்களைப் பதிப்பார்கள். உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதல்லவா? ஆசிரியர்களே, உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? முதல் வரிசையில் இருப்பவர்களே, உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? எந்தப் பிராந்தியம் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனத்தை ஆடும்? ஒரு பிராந்தியத்தால் இந்தத் தலைப்பை எடுக்க முடியும்: எப்படித் தூய மனோபாவம், தூய பார்வை, தூய செயல்களைக் கொண்டிருப்பது. இன்னொரு பிராந்தியம் இந்தத் தலைப்பை எடுக்க முடியும்: ஓர் ஆத்மாவால் தனது சொந்த சம்ஸ்காரங்களை மாற்ற முடியாவிட்டால் - அவருக்கு அந்த விருப்பம் இருக்கும், ஆனால் அவரால் அதைச் செய்ய முடியாதிருக்கும் - எப்படி உங்களால் அந்த ஆத்மாவின் மீது மன்னிப்பு, கருணை, ஒத்துழைப்பு மற்றும் அன்பைக் கொண்டிருந்து, உங்களின் பிராமணக் குடும்பத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குவது? இதற்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். இது சாத்தியமா? சாத்தியமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, இது சாத்தியமா? அது சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் எல்லோரும் மகாராத்திகள் ஆவார்கள். பாப்தாதா இப்போது பெயர்கள் எவற்றையும் குறிப்பிடவில்லை. ஆனால், ஒவ்வொரு பிராந்தியமும் தாம் விரும்பியவாறு இதயபூர்வமான கலந்துரையாடலைச் செய்து, சிவராத்திரியின் பின்னர், ஒரு மாதத்தின் பின்னர் அவர்களின் பெறுபேறுகளை வழங்க முடியும். இது மகாராஷ்டிரா, இது நல்லது. எல்லா இடங்களிலும் விரிவாக்கம் இடம்பெறுகிறது. அதற்காக பாப்தாதா பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். பாராட்டுக்கள். இதுவரை நீங்கள் செய்தவற்றுக்குப் பாராட்டுக்கள். ஆனால் இப்போது, தரம் உயர வேண்டும். தரம் என்று சொல்லும்போது, அவர்கள் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல. தரம் என்றால் அவர்களின் வாழ்க்கைகளில், ஒழுங்குமுறையாக அவர்கள் நினைவின் அத்தாட்சியைக் காட்ட வேண்டும் என்று அர்த்தம். உங்களுக்கு மைக்குகள் மற்றும் வாரிசுகளைப் பற்றித் தெரியும். உங்களின் புத்திகளில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன் கவலையற்றவர் ஆகுங்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களே, எழுந்து நில்லுங்கள்: (தம்பதிகளுக்கும் குமாரிகளுக்கும் விசேடமான ரிட்ரீட்டுகள் இடம்பெற்றன):
இந்தக் குமாரிகள் தமது சொந்தச் சின்னத்துடன் வந்துள்ளார்கள். இது நன்றாக உள்ளது. குமாரிகளே, எல்லோரும் உங்களைப் பார்க்கக் கூடிய வகையில் திரும்பி நில்லுங்கள். திரும்புங்கள். நல்லது. நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் குமாரிகள், இரட்டை அதிர்ஷ்டசாலிகள். ஏன்? உண்மையில், குமார்களும் அதிர்ஷ்டசாலிகளே. ஆனால், குமாரிகள் தமது குமாரி வாழ்க்கையில் அமரத்துவமாக இருந்தால், அவர்கள் குரு-பாய் (குருவிற்கு அடுத்தபடியாக வரிசையில் இருப்பவர்) ஆக இருக்கும் பாப்தாதாவின் சிம்மாசனத்தைப் பெறுகிறார்கள். உங்களிடம் எப்படியும் இதய சிம்மாசனம் உள்ளது. உங்கள் எல்லோரிடமும் அது உள்ளது. ஆனால், குருவின் சிம்மாசனமே, நீங்கள் அமர்ந்திருந்து முரளி வாசிக்கும் இடமாகும். நீங்கள் ஆசிரியர்களாகி, மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: குமாரிகள் இரட்டை அதிர்ஷ்டசாலிகள். அத்துடன் 21 குடும்பங்களை (சந்ததியினர்) ஈடேற்றுபவர்கள். எனவே, நீங்கள் உங்களின் 21 பிறவிகளை ஈடேற்றினீர்கள். ஆனால், நீங்கள் யாருக்குக் கருவிகள் ஆகுகிறீர்களோ, அவர்களையும் 21 பிறவிகளுக்கு நீங்கள் ஈடேற்ற வேண்டும். எனவே, நீங்கள் அத்தகைய குமாரிகள்தானே? நீங்கள் அத்தகையவர்களா? பக்கா? (உறுதியாக). சிறிது பலவீனமாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் உறுதியானவர்கள். அவர்கள் உறுதியான குமாரிகளா என்று நீங்கள் பார்த்தீர்களா? (நியூயோர்க் மோகினி பென்னிடம் கேட்கிறார்): குமாரிகளின் குழு உறுதியாக உள்ளதா எனக் கூறுங்கள். அவர்களின் ஆசிரியர் யார்? (மீராபென்). அப்படி என்றால் நீங்கள் எல்லோரும் கைதட்டலாம். பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். (இது 8 ஆவது குமாரிகள் ரிட்ரீட், அவர்களின் தலைப்பு - சொந்தமாக இருக்கும் அனுபவம். 30 நாடுகளில் இருந்து 80 குமாரிகள் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் சொந்தமாக இருக்கும் மிக நல்ல அனுபவம் ஏற்பட்டுள்ளது). பாராட்டுக்கள். இவர்கள் குமாரிகள். நீங்கள் எல்லோரும் யார்? அவர்கள் குமாரிகள், நாங்கள் பிரம்மா குமார்கள், பிரம்மா குமாரிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்களும் சளைத்தவர்கள் அல்ல. இது குமார்களின் ஒரு குழு. இது கலந்துள்ள ஒரு குழு. இது நல்லது. தம்பதிகளான உங்களுக்கு என்ன போதை உள்ளது? உங்களிடம் உள்ள மேலதிக போதை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இல்லறத்தவர்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து, பெரும்பாலான மக்கள், தங்களாலும் இதைச் செய்ய முடியும் என்ற தைரியத்தை வளர்த்துக் கொண்டார்கள். எங்களாலும் இதைச் செய்ய முடியும். முன்னர், அவர்கள் நினைப்பதுண்டு: ஒரு பிரம்மாகுமாரி ஆகுவது என்றால், அவர்கள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். ஆனால் இப்போது, ஒரு பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரி ஆகிய பின்னரும், அவர்களால் எல்லாவற்றையும் செய்யமுடியும், தமது குடும்பங்களுடன் வாழ்ந்தவண்ணம் தொடர்ந்து எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தம்பதிகளிடம் இன்னொரு சிறப்பியல்பும் உள்ளது. அவர்கள் மகாத்மாக்களிடமும் சவால் விடுத்துள்ளனர் - அதாவது ஒன்றாக வாழும் பொழுதே, எல்லோருடனும் பழகும்பொழுதே, அவர்களின் இறைவனுடனான தொடர்பு மேன்மையானது, அதனால் அவர்கள் வெற்றியாளர்கள். எனவே, வெற்றிக்கான தைரியத்தைக் கொடுப்பது தம்பதிகளின் கடமை ஆகும். இதனாலேயே, பாப்தாதா தம்பதிகளைப் பாராட்டுகிறார். இது சரிதானே? நீங்களே அவர்களுக்குச் சவால் விடுப்பவர்கள், அப்படித்தானே? நீங்கள் இதில் உறுதியாக இருக்கிறீர்களா? யாராவது வந்து, சீஐடி வேலை பார்த்தால், அவர்கள் அதைச் செய்யட்டும். அவர்களிடம் சொல்லுங்கள்: அவர்களால் அதைச் செய்ய முடியும். உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா.
பாப்தாதா எப்போதும் இரட்டை வெளிநாட்டவர்களைத் தைரியசாலிகள் என்றே கருதுகிறார். ஏன்? நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள், வகுப்புகளுக்கு வருகிறீர்கள், உங்களில் சிலர் வகுப்புக்களையும் எடுக்கிறீர்கள், அத்துடன் நிலையங்களில் சகல துறைச் சேவையிலும் உதவியாளர்கள் ஆகுகிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்குகிறார்: நீங்கள் சகல கலாவல்ல குழுவினர். இந்த முறையில் தொடர்ந்தும் முன்னேறுங்கள். அத்துடன் அதேபோல் மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். அச்சா.
ஆசிரியர்கள்: ஆசிரியர்களான நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அச்சா, பழையவர்களும் எழுந்து நிற்கிறார்கள். நல்லது. நீங்களும் தந்தைக்குச் சமமானவர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை இங்கே ஆசிரியராகவும் வந்துள்ளார். ஓர் ஆசிரியர் என்றால் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் மற்றவர்களை அனுபவசாலிகள் ஆக்குபவர் என்று அர்த்தம். அனுபவத்தின் அதிகாரமே மிகவும் மகத்தானது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை ஒரு தடவை அனுபவம் செய்தால், அவரால் தனது வாழ்நாள் பூராகவும் அதை மறக்கவே முடியாது. நீங்கள் கேட்ட அல்லது பார்த்த எதையாவது மறக்கக்கூடும். ஆனால், நீங்கள் எதை அனுபவம் செய்தீர்களோ, அதை ஒருபோதும் உங்களால் மறக்க முடியாதிருக்கும். எனவே, ஆசிரியர்கள் என்றால், அனுபவசாலிகள் ஆகுவதுடன் மற்றவர்களையும் அனுபவசாலிகள் ஆக்குபவர் என்று அர்த்தம். நீங்கள் இதையே செய்கிறீர்கள், அப்படித்தானே? நல்லது. உங்களின் அனுபவத்தில் எது குறைந்தாலும் அதை ஒரு மாதத்திற்குள் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர், பாப்தாதா பெறுபேற்றைக் கேட்பார். அச்சா.
பாப்தாதாவின் இதய சிம்மாசனத்திலும் உலக இராச்சிய சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும், உங்களின் மௌன சக்தியை சதா அதிகரிக்கும் வேளையில், மற்றவர்கள் முன்னேறுவதற்காக மற்றவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குபவர்களுக்கும் சதா சந்தோஷமாக இருப்பதுடன் எல்லோருக்கும் சந்தோஷப் பரிசைக் கொடுப்பவர்களுக்கும் எங்கும் உள்ள பாப்தாதாவின் அதிர்ஷ்டமான, அன்பான குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு நிலைமையிலும் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் நீங்கள் குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டுக்கான உரிமையைக் கோருவீர்களாக.ஒவ்வொரு நிலைமையிலும் பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகளே, குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டைப் பெறுவார்கள். எத்தகைய சூழ்நிலைகள் வந்தாலும், என்ன பிரச்சனைகள் வந்தாலும், ஒரு விநாடியில் எந்தவொரு பிரச்சனையையும் வெற்றி கொள்வதற்கான சான்றிதழை நீங்கள் பெற வேண்டும். எப்படி நீங்கள் அந்தப் பயணச்சீட்டுக்குப் பணம் கொடுக்கிறீர்களோ, அதேபோல், இங்கே சதா வெற்றியாளராக இருக்கும் பணம் உங்களுக்குத் தேவை. அதன் மூலமே உங்களால் இந்தப் பயணச்சீட்டைப் பெற முடியும். இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் எல்லா வேளையும் தந்தையுடன் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் எண்ணற்ற வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள்.
சுலோகம்:
சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும், அது கடந்து செல்ல விடுங்கள். ஆனால் ஒருபோதும் உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது சம்பூரணமாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
உங்களின் படைப்பான, ஆமையால் ஒரு விநாடியில் அதன் அவயவங்கள் எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொள்ள முடியும். படைப்பிற்கே அடக்கிக் கொள்ளும் சக்தி உள்ளது. முற்றுப்புள்ளி இடும் சக்தியின் அடிப்படையில், மாஸ்ரர் படைப்பாளர்களான உங்களால் ஒரு விநாடியில் சகல எண்ணங்களையும் நிறுத்தி, ஒரு விநாடியில் ஓர் எண்ணத்தில் ஸ்திரமாக முடியும். நீங்கள் உங்களை உங்களின் பௌதீக அங்கங்கள் எல்லாவற்றின் செயல்களின் விழிப்புணர்விற்கு அப்பால் ஆத்ம உணர்வு ரூபத்தில் ஸ்திரப்படுத்தினால், நீங்கள் கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.