15.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்கள் புத்தியைச் சுத்தம் செய்வதற்காகவே வந்துள்ளார். நீங்கள் சுத்தமாகினால் மாத்திரமே தேவர்களாக முடியும்.
கேள்வி:
இந்நாடகத்தில் தந்தையும்கூட விடுதலையடைய முடியாதவாறு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள திட்டம் என்ன?பதில்:
தந்தை தனது குழந்தைகளிடம் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்தாக வேண்டும். அவர் தூய்மையற்று, சந்தோஷமற்று இருக்கும் தனது குழந்தைகளை மீண்டும் தூய்மையாகவும், சந்தோஷமாகவும் ஆக்கவேண்டும். இது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த பந்தனத்தில் இருந்து தந்தையாலும்கூட விடுதலை அடைய முடியாது.கேள்வி:
உங்களுக்குக் கற்பிக்கும் தந்தையின் பிரதான சிறப்பியல்பு என்ன?பதில்:
முற்றிலும் அகங்காரமற்ற அவர், இந்தத் தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வருகின்றார். இந்நேரத்தில், தந்தை உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். பின்னர் துவாபர யுகம் முதல் நீங்கள் அவருக்குப் பொற்கோயில்களைக் கட்டுகிறீர்கள்.பாடல்:
எங்களை இந்தப் பாவ உலகிலிருந்து, தொலை தூரத்திலுள்ள ஓய்வும், சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இரண்டு உலகங்களைப் பற்றிக் கூறும் பாடலைக் கேட்டீர்கள். ஒன்று பாவ உலகம். மற்றையது புண்ணிய உலகம். அதாவது சந்தோஷ உலகமும், துன்ப உலகமும் ஆகும். புதிய உலகில் ஒரு புதிய கட்டடத்தில் நிச்சயமாகச் சந்தோஷம் இருக்கும். பழைய வீட்டில் துன்பம் மாத்திரமே இருக்கும். இதனாலேயே அது அழிக்கப்பட வேண்டும். பின்னர் உங்கள் புதிய வீட்டில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். இப்போது மனிதர்கள் எவருமே கடவுளை அறிந்திருக்கவில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது இராவண இராச்சியம் என்பதால் அனைவரின் புத்தியும் முற்றிலும் கல்லைப் போன்றும், தமோபிரதானாகவும் ஆகிவிட்டது. கடவுள் வந்து விளங்கப்படுத்துகிறார்: அனைவரும் என்னைக் கடவுள் என அழைக்கின்றார்கள். ஆனால் எவருமே என்னை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் கடவுளை அறிந்து கொள்ளவில்லை என்பதால், அவர்களால் பயனில்லை. துன்பத்திலுள்ள மக்களே அழைக்கின்றார்கள்: ஓ பிரபுவே, ஓ ஈஸ்வரா. எவ்வாறாயினும் மனிதர்கள் எவருமே படைப்பவரான எல்;லையற்ற தந்தையை யார் என அறியாதிருப்பதும் ஓர் அதிசயமே. கடவுள் சர்வவியாபகர் என்றும், அவர் முதலை போன்றவற்றில் இருக்கின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கடவுளை அவதூறு செய்கின்றார்கள். அவர்கள் தந்தையைப் பெருமளவில் அவதூறு செய்கின்றார்கள். இதனாலேயே இந்தக் கடவுளின் வாசகங்கள் உள்ளன: பாரத மக்கள் ஏணியில் இறங்கித் தமோபிரதானாகி, என்னையும் தேவர்களையும் அவதூறு செய்யும்போதே நான் வருகின்றேன். குழந்தைகள் கூறுகிறார்கள்: நாங்கள் நாடகத்திற்கேற்ப இந்தப் பாகத்தை மீண்டும் நடிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நானும் இந்த நாடக பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன். நானுமே இந்த நாடகத்தில் இருந்து விடுதலை அடைய முடியாது. நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கு வரவேண்டும். இல்லாவிட்டால் புதிய உலகை வேறு யார் ஸ்தாபிப்பார்? இராவண இராச்சியத்தின் துன்பத்தில் இருந்து குழந்தைகளை விடுதலை செய்து புதிய உலகிற்கு யார் அழைத்துச் செல்வார்? இந்த உலகில் பல செல்வந்தர்கள் தாம் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களிடம் செல்வம், மாளிகைகள், ஆகாய விமானங்கள் போன்றவை இருப்பதால், அவர்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் சிலர் திடீரென சுகவீனமுற்று அமர்ந்திருக்கும்போதே மரணிக்கின்றார்கள். அதில் பெருமளவு துன்பம் உள்ளது. சத்திய யுகத்தில் அகால மரணம் நிகழ்வதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே மக்கள் நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் இங்கோ அவர்கள் திடீரென இறக்கிறார்கள். இவ்வாறான விடயங்கள் சத்திய யுகத்தில் இடம்பெறுவதில்லை. அங்கு என்ன நிகழ்கிறது என்பதனை எவரும் அறிவதில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவர்கள் மிகவும் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளனர். நான் வந்து அவர்களின் புத்தியைச் சுத்தம் செய்கின்றேன். இராவணன் அவர்களின் புத்தியைச் சீரழிந்ததாகவும், கல்லைப் போன்றும் ஆக்குகின்றான். ஆனால் கடவுளோ உங்கள் புத்தியைச் சுத்தம் செய்கின்றார். தந்தை உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். சூரிய வம்சத்து சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினிகளாக ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள். சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாகும் உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னால் உள்ளது. இது சத்திய நாராயணன் ஆகின்ற கதையாகும். பின்னர் பக்தி மார்க்கத்தில் பிராமண குரு ஒருவர் இக்கதையைக் கூறுவார். எவ்வாறாயினும், அங்கு எவருமே உண்மையாக சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதில்லை. சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு நீங்கள் நிச்சயமாக இங்கே வரவேண்டும். உங்கள் ஸ்தாபனத்தின் குறிக்கோள் என்ன என்று சிலர் உங்களைக் கேட்கிறார்கள். அவர்களிடம் கூறுங்கள்: எங்கள் குறிக்கோள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதே. எவ்வாறாயினும் இது ஒரு ஸ்தாபனமல்ல. இது ஒரு குடும்பம். தாய், தந்தை, அத்துடன் குழந்தைகளும் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடினீர்கள்: நீங்களே தாயும் தந்தையும். ஓ தாயே, தந்தையே, நீங்கள் வரும்போது, உங்களிடமிருந்து எங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் கிடைக்கின்றது. நாங்கள் உலக அதிபதிகள் ஆகுவோம். நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுவதுடன் சுவர்க்கத்தின் அதிபதிகளும் ஆகுகின்றீர்கள். இப்போது அத்தகைய தந்தையைக் காணும்போது உங்கள் சந்தோஷத்தின் அளவு மிகவும் உயர வேண்டும். அரைக்கல்பமாக நீங்கள் நினைவு செய்து வந்தது அவர் ஒருவரையே: ஓ கடவுளே வாருங்கள்! நீங்கள் வரும்போது உங்களிடமிருந்து பெருமளவு சந்தோஷத்தை நாங்கள் பெறுகின்றோம். இந்த எல்லையற்ற தந்தையே உங்களுக்கு 21 பிறவிகளுக்கு நீடித்திருக்கும் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை தெய்வீக சமூகத்திற்கு உரியவர்கள் ஆக்குகின்றேன். ஆனால் இராவணனோ உங்களை அசுர சமூகத்திற்கு உரியவர்கள் ஆக்குகின்றான். நான் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். அங்குள்ள அனைவரும் தூய்மையாக இருப்பதால், அவர்களின் ஆயுட்காலம் நீண்டதாக உள்ளது. இங்கே மக்கள் போகிகளாக (இந்திரிய சுகத்தில் ஈடுபடுபவர்கள்) இருப்பதால், அவர்கள் அகாலமரணம் அடைகின்றார்கள். அங்கு உங்கள் யோகத்தின் பெறுபேறாகவே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்கள் ஆயுட் காலம் 150 வருடங்கள். நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் சரீரத்தை நீக்கி வேறு ஒன்றை எடுப்பீர்கள். தந்தை மாத்திரமே இங்கு அமர்ந்திருந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். பக்தர்கள் கடவுளைத் தேடுகின்றார்கள். சமய நூல்களைக் கற்பது, யாத்திரைகள் போன்றவற்றிக்குச் செல்வது அனைத்தும் கடவுளைச் சந்திக்கும் பாதை என அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவை சரியான பாதையல்ல. நான் மாத்திரமே உங்களுக்குப் பாதையைக் காட்டமுடியும். நீங்கள் கூறினீர்கள்: ஓ கடவுளே, குருடர்களின் ஊன்றுகோலாக இருப்பவரே, வாருங்கள்! எங்களை அமைதியும் சந்தோஷமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆகவே தந்தை மாத்திரமே உங்களுக்கு சந்தோஷ தாமத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். தந்தை ஒருபோதும் துன்பத்தைக் கொடுப்பதில்லை. மக்கள் தந்தையைப் பொய்க் குற்றம் சாட்டுகின்றார்கள். எவராவது இறந்தால் அவர்கள் கடவுளை அவமதிக்க ஆரம்பிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் எவரையும் கொல்வதோ, அல்லது எவருக்கும் துன்பம் கொடுப்பதோ இல்லை. அவை அனைத்தும் ஒவ்வொருவருடைய சொந்தப் பாகத்தில் உள்ளன. நான் ஸ்தாபிக்கும் இராச்சியத்தில் அகால மரணமோ, துன்பமோ இருப்பதில்லை. நான் உங்களை சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். பாபா உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குவதால் குழந்தைகளாகிய உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். சங்கமயுகமே அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுகின்றது என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் அதி மேன்மையான மாதம் போன்றவற்றை உருவாக்கி உள்ளார்கள். உண்மையில் தந்தை வந்து உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்கும்போதே அது அதி மேன்மையான யுகமாகிறது. இப்பொழுது நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகின்றீர்கள். அனைத்து மனிதர்களிலும் அதி மேன்மையானவர்கள் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவார்கள். மனிதர்கள் எதனையுமே புரிந்து கொள்வதில்லை. தந்தை ஒருவர் மாத்திரமே உங்களை ஏறும் ஸ்திதிக்கு அழைத்துச் செல்கின்றார். ஏணிப் படத்தை எவருக்கேனும் விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது நீங்கள் பழைய அழுக்கான ஆடையைக் களைய வேண்டும். முதலில் புதிய உலகில் சதோபிரதானாக இருந்த நீங்களே, பின்னர் 84 பிறவிகள் எடுத்த பின் தமோபிரதான் சூத்திரர்கள் ஆகிவிட்டீர்கள். இப்போது நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை இப்போது உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக வந்துள்ளார். தந்தை உங்கள் பலனை, சத்திய யுகத்தில் கொடுத்துள்ளார். தந்தை சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். தூய்மையாக்குபவரான தந்தை, வரும்போது முழு உலக மக்களையும் தூய்மையாக்குவது மாத்திரமன்றி, இயற்கையையும் சதோபிரதான் ஆக்குகின்றார். இப்போது இயற்கையும்கூட தமோபிரதானாக உள்ளது. மக்களுக்குத் தானியங்கள் போன்றவையும் கிடைப்பதில்லை. அவர்கள் அதை இதைச் செய்வதன் மூலம் தொடரும் வருடங்களில் நல்ல விளைச்சல்களைப் பெறமுடியும் என நினைக்கின்றார்கள். ஆனால் எதுவுமே நடைபெறுவதில்லை. எவராலுமே இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது. பஞ்சமும், பூமியதிர்ச்சியும், நோய்களும் இருக்கும். இரத்த ஆறும் ஓடும். இது அதே மகாபாரத யுத்தம் ஆகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். இராவணனாகிய மாயை உங்களைச் சபிக்கின்றாள். அவள் உங்களுக்கு நரகம் என்ற ஆஸ்தியைத் தருகின்றாள். இந்த நாடகமும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. தந்தை கூறுகின்றார்: நாடகத்திற்கேற்ப நான் சிவாலயத்தை ஸ்தாபிக்கின்றேன். இந்த பாரதம் சிவாலயமாக இருந்தது. இப்பொழுது அது விலைமாதர் இல்லமாகி விட்டது. மக்கள் தொடர்ந்தும் நச்சுக்கடலில் மூழ்கின்றார்கள். பாபா இப்பொழுது உங்களை சிவாலயத்துக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். எல்லையற்றவராகிய கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறேன். பாரத மக்கள் தங்கள் சொந்த தர்மத்தையோ, தங்கள் வம்சாவழி விருட்சம் மிகவும் பெரியதென்பதையோ மற்றைய அனைத்து வம்சாவழி விருட்சங்களும் அதில் இருந்தே தோன்றுகின்றன என்பதையோ அறிந்திருக்கவில்லை. அவர்கள் எந்த வம்சாவழி விருட்சம் இருந்தது என்பதையோ, ஆதிசனாதன தர்மம் என்றால் என்ன என்பதையோ அறிந்திருக்கவில்லை. வம்சாவழி விருட்சம், ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்துக்கு உரியவர்களுக்கும், பின்னர் இரண்டாம் இலக்க சந்திர வம்சத்தினருக்கும் உரியது. பின்னர் வம்சாவழி விருட்சம் இஸ்லாம் இனத்தவருக்கு உரியது. வேறு எவராலும் முழு விருட்சத்தின் இரகசியங்களையும் விளங்கப்படுத்த முடியாது. இப்போது எத்தனை வம்சாவழி விருட்சங்கள் உள்ளன எனப் பாருங்கள். அதில் அதிக கிளைகள் உள்ளன. இது பல்வகை சமயங்களின் விருட்சம். தந்தை மாத்திரமே வந்து இந்த விடயங்களை உங்கள் புத்தியில் பதிய வைக்கின்றார். இது ஒரு கல்வி. நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்க வேண்டும். கடவுள் கூறுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். மக்கள் அழியும் செல்வத்தைத் தானம் செய்து தூய்மையற்ற அரசர்கள் ஆகிவிட்டனர். 21 பிறவிகளுக்கு உலக அதிபதிகள் ஆகுவதற்காக நான் உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். அங்கு அகால மரணம் இல்லை. நீங்கள் உங்கள் சொந்த நேரத்திற்கு ஏற்ப உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவீர்கள். தந்தை நாடகத்தின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். வெளிவந்த ஏனைய சினிமா, நாடகங்கள் ஆகியவற்றை விளங்கப்படுத்துவதைப் போன்று இந்த நாடகமும் விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானது. இந்நாட்களில் அவர்கள் பல நாடகங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றார்கள். மக்கள் பெருமளவு ஆர்வத்தை அதில் வளர்த்துள்ளனர். அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட நாடகங்கள். இதுவோ எல்லையற்ற நாடகம் ஆகும். இந்நேரத்தில் மாயையின் பகட்டு அதிகமாக உள்ளது. மக்கள் சுவர்க்கம் அமைக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றார்கள். முன்னர் இத்தகைய பெரிய கட்டடங்கள் போன்றவை இருக்கவில்லை. இப்போது பெருமளவு எதிர்ப்புகள் உள்ளன. கடவுள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார், மாயையும் தனது சுவர்க்கத்தைக் காட்டுகின்றாள். அவை அனைத்தும் மாயையின் பகட்டே. அவள் விழப்போகின்றாள். மாயை மிகவும் சக்திசாலி. நீங்கள் அவளிடமிருந்து உங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டும். தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். செல்வந்தர்களுக்கு இது சுவர்க்கம் ஆகும், ஆனால் ஏழைகளுக்கோ இது நரகம் ஆகும். ஆகவே நரகத்தில் வாழ்பவர்கள் சுவர்க்கவாசிகள் ஆகவேண்டும். ஏழைகள் மாத்திரமே இந்த ஆஸ்தியைக் கோருவார்கள். செல்வந்தர்கள் தாம் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைப்பார்கள். சுவர்க்கமும் நரகமும் இங்கேயே உள்ளது. நீங்கள் மாத்திரமே அனைத்து விடயங்களையும் புரிந்து கொள்கின்றீர்கள். பாரதம் அந்தளவிற்கு ஏழையாகி விட்டது. பாரதம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. அங்கு ஒரேயொரு ஆதி சனாதன தர்மமே இருந்தது. இன்றும் அவர்கள் மிகவும் பழைய பொருட்களை தோண்டி எடுக்கின்றார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: இந்தப் பொருட்கள் பல வருடங்கள் பழமையானவை. அவர்கள் எலும்புகளைத் தோண்டி எடுத்து, அதனை நூறாயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்ததெனக் கூறுகின்றார்கள். நூறாயிரக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்த எலும்புகள் இப்போது எங்கிருந்து தோன்றின? அவர்கள் அப்பொருட்களுக்கு அதி உயர்ந்த விலையைக் குறிக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் அனைவருக்கும் முக்தியை அருள்வதற்காக வருகின்றேன். நான் இவரில் பிரவேசிக்கின்றேன். இந்த பிரம்மா பௌதீகமானவர். பின்னர் இந்த பிரம்மா சூட்சுமலோக வாசியான தேவதை ஆகின்றார். அவர் சூட்சுமமானவர், இவர் பௌதீகமானவர். தந்தை கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் வருகின்றேன். முதலில் தூய்மை ஆகியவரே முதலாவதாக தூய்மையற்றவர் ஆகுகின்றார். இவரே மீண்டும் முதலாம் இலக்கத் தூய்மையானவர் ஆகுவதால் நான் இவரில் பிரவேசிக்கின்றேன். அவர் தானே கடவுள் என்றோ அல்லது நான் இன்னார் இன்னார் என்றோ கூறுவதில்லை. தான் இவரின் இந்த சரீரத்தில் பிரவேசித்து அனைவரையும் இவரின் மூலம் சதோபிரதான் ஆக்குகின்றார் என்பதைத் தந்தையும் புரிந்துகொள்வார். நீங்கள் சரீரமின்றி வந்து 84 பிறவிகள் எடுத்து, உங்கள் பாகத்தை நடித்த பின்னர் வீடு திரும்ப வேண்டும் என்பதை இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீரத்தின் அகங்காரத்தை துண்டித்து விடுங்கள். நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். அதில் எந்தவித கஷ்டமும் இல்லை. ஞானத்தைக் கேட்டுத் தூய்மை ஆகியவர்கள் உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். இது அத்தகையதொரு பெரிய கல்லூரி. எங்களுக்குக் கற்பிப்பவரான தந்தை அகங்காரம் அற்றவராதலால் இந்தத் தூய்மையற்ற உலகிற்கு இந்தத் தூய்மையற்ற சரீரத்தில் வருகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவருக்குப் பல அழகிய பொற்கோயில்களை உருவாக்கினீர்கள். இந்த நேரத்தில் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதற்காக நான் வந்து இந்தத் தூய்மையற்ற சரீரத்தில் அமர்ந்திருக்கின்றேன். பின்னர் பக்தி மார்க்கத்தில், நீங்கள் எனது உருவங்களை சோமநாதர் ஆலயத்தில் வைக்கின்றீர்கள். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதால், நீங்கள் அவருக்குத் தங்கத்தாலும், வைரங்களாலும் ஆலயங்களைக் கட்டுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் அவருக்கு ஆதரவு காட்டி உபசரிப்பு வழங்குகிறீர்கள். அனைத்து நன்மைகளின் விளைவுகளும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பக்தி முதலில் கலப்படம் அற்றதாகவும் பின்னர் அது கலப்படம் உள்ளதாகவும் ஆகுகின்றது. இக்காலத்தில் எவ்வாறு மனிதர்களையும் வழிபாடு செய்கின்றார்கள், அவர்கள் கங்கைக் கரைகளில் அமர்ந்திருந்து எவ்வாறு தங்களைச் சிவா என அழைக்கின்றார்கள் என்று பாருங்கள். தாய்மார் சென்று அவர்களுக்குப் பால் படைத்து அவர்களை வழிபாடும் செய்வதைப் பாருங்கள். இந்த தாதாவும் அதனைச் செய்தார். அவர் முதலாம் இலக்க பூஜிப்பவராக இருந்தார். இது ஓர் அதிசயமே. தந்தை கூறுகின்றார்: இது ஓர் அதிசயமான உலகம். சுவர்க்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டது, நரகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற அனைத்து இரகசியங்களையும் பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த ஞானம் சமய நூல்களில் இல்லை. அவை தத்துவங்களின் சமய நூல்களாகும். ஆன்மீகத் தந்தையும் பிராமணக் குழந்தைகளாகிய நீங்களும் மாத்திரமே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கமுடியும். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஆன்மீக ஞானத்தைப் பெறமுடியாது. நீங்கள் பிராமணர்கள் ஆகும்வரை உங்களால் தேவர்களாக முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் அல்லாது கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதால் நீங்கள் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் பெரும் பகட்டில் இருந்து நீங்கள் உங்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும். நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும், கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் அறிந்திருப்பதால், சதா சந்தோஷத்தினால் உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும்.2. உங்களுடைய முழு உலக இராச்சிய பாக்கியத்தையும் கோருவதற்கு, தூய்மை ஆகுங்கள். தந்தை முற்றிலும் அகங்காரம் அற்றவராக, இந்தத் தூய்மையற்ற உலகில், தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிப்பது போன்று, நீங்களும் தந்தையைப் போன்று அகங்காரம் அற்றவராகி, சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கும் ஓர் சம்பூரண தேவதையாகி, ஆதாரங்கள் எல்லாவற்றில் இருந்தும் விடுபடுவீர்களாக.நீங்கள் சமைக்கின்ற எதுவும் தயார் நிலைக்கு வரும்போது, அது சட்டியில் இருந்து விடுபட ஆரம்பிக்கும். அதேபோல், உங்களின் முழுமை நிலைக்கு நீங்கள் தொடர்ந்து நெருங்கி வரும்போது, நீங்கள் எல்லோரிடம் இருந்தும் அதிகம் பற்றற்றவர் ஆகுவீர்கள். உங்களின் மனோபாவத்தால் சகல பந்தனங்களில் இருந்தும் நீங்கள் பற்றற்றவர் ஆகும்போது, அதாவது, எவரிடமும் எந்தவிதமான பற்றும் உங்களுக்கு இல்லாதபோது, நீங்கள் ஒரு முழுமை தேவதை ஆகுவீர்கள். ஒரேயொருவருடன் உங்களுடைய சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதே, உங்களின் பயண இலக்காகும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் தேவதை வாழ்க்கை என்ற இறுதி இலக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவம் செய்வீர்கள். உங்களின் புத்தி அலைபாய்வது நின்றுவிடும்.
சுலோகம்:
உங்களை அவமதிப்பவர்களையும் உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் காந்தமே அன்பு என்பதாகும்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்களின் மனதால் சேவை செய்வதற்கு, உங்களின் மனமும் புத்தியும் எந்தவிதமான வீணான சிந்தனையில் இருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். அவை மன்மனாபவ என்ற மந்திரத்தின் இலகுவான வடிவில் இருக்க வேண்டும். மேன்மையான மனங்களைக் கொண்டுள்ள, அதாவது, சக்திவாய்ந்த எண்ணங்களையும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களால் தமது மனங்களினூடாக சக்திகளைத் தானம் செய்ய முடியும்.