15.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு மேன்மையான தேவ தர்மத்தையும் மேன்மையான செயல்களையும் (கர்மா) கற்பிக்கின்றார். இதனாலேயே நீங்கள் அசுர செயல்கள் எதனையும் செய்யக்கூடாது. மிகவும் சுத்தமான புத்தி தேவையாகும்.

கேள்வி:
நீங்கள் சரீர உணர்வு உடையவராகும்போது, நீங்கள் செய்யும் முதலாவது பாவம் என்ன?

பதில்:
சரீர உணர்வு இருந்தால் தந்தையின் நினைவிற்குப் பதிலாக சரீரதாரிகளின் நினைவே இருக்கும். தொடர்ந்தும் தூய்மையற்ற பார்வை இருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். இது மிகப் பெரிய பாவமாகும். மாயை உங்களைத் தாக்குகின்றாள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு உடனடியாகவே உங்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தை எங்கிருந்து வந்திருக்கிறார்? நிர்வாண தாமம் அல்லது அமைதி தாமம் என அழைக்கப்படுகின்ற, ஆன்மீக உலகத்திலிருந்தே வருகிறார். இது கீதையின் ஒரு விடயம். உங்களிடம் கேட்கப்படுகிறது: இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? நிச்சயமாக கீதையின் அதே ஞானமே இது என நீங்கள் கூறுகிறீர்கள். கீதையின் பாகம் இப்பொழுது நடிக்கப்படுகிறது, தந்தை கற்பிக்கின்றார். கடவுளின் வாசகங்கள் உள்ளன. கடவுள் நிச்சயமாக ஒரே ஒருவரே ஆவார். அவர் அமைதிக் கடல் ஆவார். அவரும் நாங்கள் வசிக்கும் அமைதி தாமத்திலேயே வசிக்கிறார். இது பாவ ஆத்மாக்களின், தமோபிரதான் உலகமாகிய, தூய்மையற்ற உலகம் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நிச்சயமாக ஆத்மாக்களாகிய நாங்களும் இந்த நேரத்தில் தமோபிரதானாகவே உள்ளோம் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாங்கள் 84 பிறவிச்சக்கரத்தை கடந்து, சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகியுள்ளோம். இது பழைய கலியுக உலகம். அந்தப் பெயர்கள் அனைத்தும் இக்காலத்;திற்கு உரியவை. பழைய உலகத்திற்குப் பின்னர் புதிய உலகம் இருக்கும். உலகம் மாற்றமடைய வேண்டிய போதே மகாபாரத யுத்தம் இடம்பெற்றது என்பது பாரத மக்களுக்குத் தெரியும். அப்பொழுதே தந்தை வந்து இராஜ யோகம் கற்பிக்கின்றார். அவர்கள் செய்த ஒரு தவறு என்ன? அனைத்திற்கும் முதலில், அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை மறந்ததுடன், கீதையின் கடவுளையும் மறந்து விட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணரைத் தந்தையாகிய கடவுள் என அழைக்க முடியாது. தந்தையாகிய கடவுள் என ஆத்மாக்கள் கூறுகின்றனர். ஆகவே அது அவரை அசரீரியானவர் ஆக்குகின்றது. அசரீரியான தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் மாத்திரமே தூய்மை ஆக்குபவர்! ஓ தூய்மையாக்குபவரே என நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரி ஆவார். எனக்கு சரீரம் இல்லை. நான் அசரீரியானவர். நான் மனிதர்களின் தந்தை அல்ல, நான் ஆத்மாக்களின் தந்தையாவேன். இது உறுதியாக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் ஆத்மாக்களாகிய நாங்கள் அந்தத் தந்தையிடமிருந்தே எங்களுடைய ஆஸ்தியைக் கோரிக் கொள்கிறோம். 84 பிறவிகள் இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்ததும் தந்தை வந்துள்ளார். பாபா, பாபா என நீங்கள் தொடர்ந்தும் கூறவேண்டும். பாபாவை அதிகளவு நினைவு செய்யுங்கள். சக்கரம் முழுவதிலும் நீங்கள் பௌதீகத் தந்தையரையே நினைவு செய்தீர்கள். தந்தை இப்பொழுது வந்திருப்பதுடன் அவர் ஆத்மாக்கள் அனைவரையும் இந்த மனித உலகிலிருந்து மீண்டும் அழைத்துச் செல்லவேண்டும். ஏனெனில் இராவண இராச்சியத்தில் மனிதர்கள் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டனர். இதனாலேயே நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்ய வேண்டும். இப்பொழுது இராவண இராச்சியமே உள்ளது என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் இராவணன் என்பதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தசேராவைக் கொண்டாடும் சம்பிரதாயத்தைக் கொண்டுள்ளனர் (பத்துத் தலை கொண்ட இராவணனின் கொடும்பாவியை எரித்தல்). உங்களில் எவருமே அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மற்றவர்களுக்குக் கூறுவதற்காக அதன் புரிந்துணர்வை இப்பொழுது பெற்றுள்ளீர்கள். உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியவில்லை ஆயின், நீங்களும் அதனை விளங்கிக் கொள்ளவில்லை என்றே அர்த்தம். தந்தையிடம் உலகச் சக்கரத்தின் ஞானம் உள்ளது. நாங்கள் அவரது குழந்தைகள். ஆகவே குழந்தைகளாகிய உங்களிடமும் இந்த ஞானம் இருக்கவேண்டும். இது உங்களுடைய கீதைப் பாடசாலை ஆகும். அதன் இலக்கு என்ன? இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதே. இது இராஜ யோகம். ஓர் ஆணிலிருந்து நாராயணனாகவும் ஒரு பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுவதற்கான ஞானம் இதுவாகும். அந்த மக்கள் அமர்ந்திருந்து கதைகளைக் கூறுகின்றனர். இங்கு நாங்கள் கற்கின்றோம், தந்தை எங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார். அவர் இதனைச் சக்கரத்தின் சங்கம யுகத்தில் மட்டுமே கற்பிக்கின்றார். தந்தை கூறுகிறார்: நான் பழைய உலகைப் புதிய உலகமாக மாற்றுவதற்கே வந்துள்ளேன். புதிய உலகில் அவர்களது இராச்சியமே இருந்தது. பழைய உலகில் அவ்வாறில்லை. அது மீண்டும் இடம்பெற வேண்டும். நீங்கள் சக்கரத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். முக்கியமான நான்கு சமயங்கள் உள்ளன. தேவதர்மம் இப்பொழுது இல்லை. தேவ தர்மமும் தெய்வீகமான செயல்களும் சீரழிந்தவை ஆகிவிட்டன. உங்களுக்கு இப்பொழுது மீண்டும் ஒருமுறை மேன்மையான தேவ தர்மமும், மேன்மையான செயல்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே நீங்கள் உங்களில் கவனம் செலுத்த வேண்டும்: நான் எந்தவொரு அசுரச் செயலையும் செய்யவில்லை, அல்லவா? மாயையின் காரணமாக எந்தவொரு தீய எண்ணங்களும் எனது புத்தியில் பிரவேசிக்கவில்லை, அல்லவா? நான் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லைத்தானே? ஒருவர் தூய்மையற்ற பார்வையை அல்லது எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், நீங்கள் அவரை நேரடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும். நீங்கள் அவருக்கு வலுச் சேர்க்கக்கூடாது. நீங்கள் அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும்: மாயையின் தலையீடு காரணமாக இந்தத் தீய எண்ணங்கள் உங்களிடம் இருக்கின்றன. யோகத்தில் அமர்ந்திருந்து தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக, எண்ணங்கள் ஒருவரின் சரீரத்தை நோக்கிச் செல்கின்றனவாயின், அது மாயையின் தாக்குதல் என்றும் அதனால் நீங்கள் பாவத்தைச் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகவும் சுத்தமான புத்தி தேவை. நகைச்சுவையாகப் பேசுவதனாலும் சத்தமிட்டுச் சிரிப்பதனாலும்கூட பெரும் சேதம் ஏற்படுகிறது. ஆகவே சதா உங்கள் வாயிலிருந்து எப்பொழுதும் தூய வார்த்தைகளே வெளிவர வேண்டுமேயன்றி, தூய்மையற்ற வார்த்தைகள் ஒருபோதும் வெளிவரக்கூடாது. நகைச்சுவைகள் (பகிடிகள்) அல்லது சத்தமிட்டுச் சிரித்தல் போன்றனகூட இருக்கக்கூடாது. நான் விளையாட்டாகக் (பகிடி) கூறினேன் என்று நீங்கள் கூறுவதாகக்கூட இருக்கக்கூடாது. அதுவும்கூட தீங்கு விளைவிக்கும். விகார வாசனை வீசும் நகைச்சுவைப் பேச்சுக்கள்கூட இருக்கக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நிர்வாண சாதுக்களின் எண்ணங்கள் விகாரங்களை நோக்கிச் செல்வதில்லை என்பதைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்களும் பிரிந்தே வாழ்கின்றனர். ஆனால் யோகத்தினால் அன்றி புலனங்கங்களின் விஷமத்தை ஒருபோதும் அகற்ற முடியாது. நீங்கள் முழுமையாக யோகத்தில் இல்லாவிட்டால், உங்கள் பார்வை எவர்மீதாவது விழும்போது, அங்கே நிச்சயமாக விஷமம் இருக்கும் அளவிற்கு காமம் அத்தகையதொரு எதிரி ஆகும். ஒருவர் தன்னையே சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் தந்தையின் நினைவில் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். அப்போது நோயின் எந்தவொரு வடிவமும் இருக்க மாட்டாது. நீங்கள் யோகத்தில் இருக்கும்போது அது நடைபெற மாட்டாது. சத்திய யுகத்தில் எவ்வகையான குப்பையும் இருப்பதில்லை. அங்கு எவ்வித தீய நடத்தையும் இருப்பதற்கு, இராவணனின் விஷமம் அங்கு இல்லை. அங்கு நீங்கள் யோகி வாழ்க்கையே வாழ்கின்றீர்கள். இங்கும்கூட இந்த ஸ்திதி மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். யோக சக்தியினால் இந்த நோய்கள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றன. இதற்கு அதிக முயற்சி வேண்டும். இராச்சியத்தைக் கோரிக் கொள்வதென்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல. முயற்சி செய்யப்பட வேண்டும். எனது பாக்கியத்தில் இருப்பதையே நான் பெறுவேன், அவ்வளவுதான்! என நீங்கள் எண்ணுவதாக இருக்கக்கூடாது. நீங்கள் அதனைக் கிரகிக்காதிருந்தால், நீங்கள் சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தைக் கோருவதற்கே தகுதியானவர்கள் என்றே அர்த்தம். பல பிரஜைகள் உள்ளனர். சிலர் ஓவியத்திலும், சிலர் விளையாட்டுக்களிலும் சிறந்த புள்ளிகளைப் பெறுகின்றனர். அவை பொதுவான பாடங்களாகும். அதேபோல் இங்கும் பாடங்கள் உள்ளன. நீங்கள் எதையாவது பெறுவீர்கள். எவ்வாறாயினும், இராச்சியம் வழங்கப்பட முடியாது. நீங்கள் சேவை செய்தாலே இராச்சியத்தைப் பெறுவீர்கள். அதற்கு நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். அது பலரது புத்தியில் பதிவதில்லை. அது உணவு சமிபாடு அடையாததைப் போன்றதாகும். உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கான தைரியம் இல்லாதுள்ளது. இதுவும் நோய் என்றே அழைக்கப்படுகின்றது. நீங்கள் பார்த்தும் பார்க்காதிருக்க வேண்டும். நீங்கள் ஆன்மீகத் தந்தையின் நினைவிலிருந்து ஏனையோருக்குப் பாதையைக் காட்ட வேண்டும். நீங்கள் குருடர்களுக்கு ஊன்றுகோலாக வேண்டும். நீங்கள் பாதையை அறிந்தவர்கள். மகாராத்திகளாகிய உங்களின் புத்தியில், படைப்பவரதும் படைப்பினது ஞானமும், முக்தி, ஜீவன்முக்தியின் ஞானமும் தொடர்ந்தும் சுழன்று கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் ஸ்திதிகளிலும் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. சிலர் மிகவும் செல்வந்தர்களாகவும் சிலர் முற்றிலும் ஏழைகளாகவும் ஆகின்றனர். வெவ்வேறு தரங்களில் இராஜ அந்தஸ்துகள் உள்ளன. இல்லாவிடின், ஆம், அங்கு இராவணன் இல்லாததால் துன்பம் இருப்பதில்லை. இருப்பினும், அங்கு செல்வத்தில் வித்தியாசம் இருக்கும். செல்வத்தினூடாகச் சந்தோஷம் இருக்கும். நீங்கள் யோகத்திலிருக்கும் அளவிற்கு உங்கள் ஆரோக்கியம் மிகச் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யவேண்டும். பலரது நடத்தைகள் அறியாமையில் உள்ள மனிதர்களுடையதைப் போன்றே உள்ளன. அவர்களால் எவருக்கும் நன்மையை ஏற்படுத்த முடியாது. பரீட்சை இடம்பெறும்போது, யார் எத்தனை புள்ளிகளுடன் சித்தி அடைவார்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். பின்னர் அந்த நேரத்தில் நீங்கள் நம்பிக்கை இழந்து அழவேண்டி இருக்கும். பாபா, தாதா ஆகிய இருவரும் தொடர்ந்தும் அதிகளவு விளங்கப்படுத்துகின்றனர். தந்தை நன்மையளிக்கவே வந்துள்ளார். நீங்கள் உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மை செய்யவேண்டும். தூய்மையற்ற எங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான பாதையை வந்து காட்டுங்கள் எனத் தந்தை அழைக்கப்பட்டார். ஆகவே தந்தை ஸ்ரீமத் கொடுக்கிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீர உணர்வை விடுத்து என்னை நினைவு செய்யுங்கள். இது அத்தகைய இலகுவான மருந்தாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் ஒரேயொரு தந்தையாகிய கடவுளையே நம்புகின்றோம். அவர் கூறுகின்றார்: தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க வருமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள். ஆகவே நான் வரவேண்டியுள்ளது. நீங்கள் பிரம்மாவிடமிருந்து எதனையும் பெறமாட்டீர்கள். அவர் தாதா (மூத்த சகோதரர்), அவர் பாபா அல்ல. நீங்கள் உங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்தே பெறுகின்றீர்கள். நீங்கள் ஆஸ்தியை பிரம்மாவிடமிருந்து பெறுவதில்லை. அசரீரியான தந்தை ஆத்மாக்களாகிய எங்களை இவரின் மூலம் தத்தெடுத்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் இவருக்கும் கற்பிக்கின்றார். நீங்கள் பிரம்மாவிடம் இருந்து எதனையும் பெறப் போவதில்லை. ஆஸ்தி இவரினூடாகத் தந்தையிடம் இருந்து மட்டுமே பெறப்படுகிறது. கொடுப்பவர் ஒரேயொருவரே ஆவார். அவரைப் பற்றிய புகழ் மட்டுமே உள்ளது. அவர் ஒருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். இவர் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவரிலிருந்து மீண்டும் பூஜிப்பவர் ஆகுகின்றார். அவர் சத்திய யுகத்தில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுத்து தூய்மையற்றவர் ஆகினார். இப்பொழுது அவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக, தூய்மையானவராக ஆகுகின்றார். நாங்கள் தந்தை கூறுவதைக் கேட்கிறோம், நாங்கள் மனிதர்கள் கூறுவதைக் கேட்பதில்லை. பக்தி மார்க்கம் நிச்சயமாக மனிதர்களினுடையது. இது ஆன்மீகமான ஞானப் பாதை. ஒரேயொரு ஞானக் கடலிடமே ஞானம் உள்ளது. இந்தச் சமய நூல்கள் போன்றவை பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. சமய நூல்கள் போன்றவற்றைக் கற்றல் அனைத்தும், பக்தி மார்க்கத்திற்கு உரிவை. ஞானக்கடல் ஒரேயொரு தந்தை மட்டுமே ஆவார். ஞான கங்கைகளாகிய நாங்கள் ஞானக் கடலிலிருந்தே தோன்றியுள்ளோம். இருப்பினும், அவை தண்ணீர் கங்கைகளும், கடலும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அகநோக்கில் இருந்து, புத்தியைக் கடையச் செய்யுங்கள். உங்களைச் சீர்திருத்துவதற்கு அகநோக்கிலிருந்து உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் வாயிலிருந்து தீய வார்த்தைகள் வெளிவருவதற்கு, அல்லது உங்கள் பார்வை தூய்மையற்றதை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு உங்களை அனுமதித்திருந்தால், உங்களை நீங்களே அறைந்து கொள்ள வேண்டும்: ஏன் எனது வாயிலிருந்து தீய வார்த்தைகள் வெளிவந்தன? ஏன் எனது பார்வை தூய்மையற்றதை நோக்கி ஈர்க்கப்பட்டது? நீங்கள் உங்களையே அறைந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதே உங்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். உங்கள் வாயிலிருந்து தீய வார்த்தைகள் வராதிருக்க வேண்டும். தந்தை அனைத்து வகையான கற்பித்தல்களையும் கொடுக்க வேண்டியுள்ளது. ஒருவரைப் பைத்தியம்; என அழைப்பதுகூடத் தீய வார்த்தையே ஆகும். மனிதர்கள் தமது மனதில் தோன்றுவதை எல்லாம்; கூறுகின்றனர். யாருடைய புகழை அவர்கள் பாடுகிறார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தூய்மையாக்குபவரான ஒரேயொரு தந்தையின் புகழ் மட்டுமே பாடப்பட வேண்டும். எவ்வாறாயினும், வேறு எவருமே இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் தூய்மை ஆக்குபவர்களென அழைக்க முடியாது. அவர்கள் எவரையும் தூய்மை ஆக்குவதில்லை. தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர், தந்தை ஒருவரே ஆவார். புதிய உலகமே நிச்சயமாகத் தூய உலகமாகும். இருப்பினும் அது இப்பொழுது இல்லை. சுவர்க்கத்தில் மட்டுமே தூய்மை நிலவுகிறது. அவர் தூய்மைக்கடலும் ஆவார். இது நிச்சயமாக இராவணனின் இராச்சியமே. குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு அதிக முயற்சி செய்யவேண்டும். உங்கள் வாயிலிருந்து கற்களோ அல்லது தீய வார்த்தைகளோ வெளிவரக்கூடாது. அதிகளவு அன்புடன் நடந்துகொள்ளுங்கள். தூய்மையற்ற பார்வை அதிகளவு தீங்கை விளைவிக்கிறது. அதிக முயற்சி தேவைப்படுகிறது. ஆத்ம உணர்வு என்பது அழிவற்றதன் விழிப்புணர்வாகும். சரீரங்கள் அழியக்கூடியவை. எவருக்கும் ஆத்மாவைத் தெரியாது. நிச்சயமாக ஆத்மாக்களின் தந்தை இருக்க வேண்டும். அனைவரும் சகோதரர்கள் என அவர்களும் கூறுகின்றனர். அவ்வாறாயின், பரமாத்மா எவ்வாறு அனைவரிலும் இருக்க முடியும்? எவ்வாறு அனைவரும் தந்தையாக இருக்க முடியும்? இந்தளவு விவேகமேனும் அவர்களிடம் இல்லை! ஒரேயொரு தந்தை மாத்திரமே நிச்சயமாக அனைவரதும் தந்தை ஆவார். அவரிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. அவரது பெயர் சிவன். அவர்கள் சிவஜெயந்தியையும் (சிவராத்திரி) கொண்டாடுகின்றனர். உருத்திரனின் இரவு அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் இரவு என்று கூறப்படுவதில்லை. மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவை அனைத்தும் அவரது ரூபங்களே என அவர்கள் கூறுவார்கள். அது அவரது அற்புதமான விளையாட்டு ஆகும். நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே நீங்கள் அத்தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! தொழிலாளர்களுக்கும் கற்பித்தல்கள் கொடுக்கப்பட வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கும் சில நன்மைகள் இருக்கும். எவ்வாறாயினும், உங்களாலேயே நினைவில் நிலைத்திருக்க முடியாமலிருப்பின், உங்களால் மற்றவர்களை எவ்வாறு நினைவில் நிலைத்திருக்கச் செய்ய முடியும்? இராவணன் உங்களை முற்றாகத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறான், பின்னர் தந்தை வந்து உங்களைத் தேவதைகளின் உலகவாசிகள் ஆக்குகின்றார். இது ஓர் அற்புதமே! இந்த விடயங்கள் எவரது புத்தியிலும் இல்லை. அதி மேன்மையானவர்களாவும், தெய்வீகமானவர்களாகவும் இருந்த இலக்ஷ்மியும் நாராயணனும் அதி தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். இதனாலேயே பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் நினைவு கூரப்பட்டுள்ளது. சிவாலயங்களில் உங்களால் அதிக சேவை செய்யமுடியும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! வாயில் தோறும் அலைந்து திரிவதை விட்டுவிடுங்கள். இந்த ஞானம் மாத்திரமே அமைதிக்கானது. தந்தையை நினைவு செய்வதனால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். அவ்வளவே! தொடர்ந்தும் இந்த மந்திரத்தைக் கொடுங்கள். எவராவது ஞானத்தில் உறுதியாகும்வரை, அவரிடமிருந்து நீங்கள் பணத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. ‘நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் எனச் சத்தியம் செய்யுங்கள், அதன் பின்னர் நீங்கள் உங்கள் கைகளால் சமைத்ததை நாங்கள் உண்போம்; என்றும் அப்பொழுதே உங்களிடமிருந்து நாங்கள் எதனையும் ஏற்றுக்கொள்வோம்’ என்றும் அவர்களிடம் கூறுங்கள். பாரதத்தில் பல ஆலயங்கள் உள்ளன. நீங்கள் வருகின்ற வெளிநாட்டவர்களுக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விகார வாசனை வீசும் எந்தவொரு விடயங்களைப் பற்றியும் நகைச்சுவையாகப் பேசுவதோ, அல்லது சத்தமாகச் சிரிப்பதோ என்றுமே இருக்கக்கூடாது. மிக எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய வாயிலிருந்து தீய வார்த்தைகள் எதுவும் வெளிவரக்கூடாது.

2. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, அதனை அதிகமாகப் பயிற்சி செய்யுங்கள். அனைவருடனும் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய பார்வை, தூய்மையற்றதை நோக்கி ஈர்க்கப்பட்டால் உங்களை நீங்களே தண்டியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓய்வெடுக்கும் ஸ்திதியில் இருந்தவண்ணம் சதா நினைவிற்கும் சேவைக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் குழந்தைப் பருவத்தின் விஷமத்தனமான விளையாட்டுக்களை எல்லாம் முடிப்பீர்களாக.

சங்கமயுகத்தின் விலைமதிப்பில்லாத நேரத்தை அற்ப விடயங்களில் வீணாக்குவது என்றால், குழந்தைப் பருவத்தின் விஷமத்தனமான விளையாட்டுக்களை விளையாடுவதைப் போன்றதாகும். அந்த விஷமத்தனமான விளையாட்டுக்கள் இனியும் உங்களுக்குப் பொருந்தாது. ஓய்வெடுக்கும் ஸ்திதியில், தந்தையின் நினைவும் சேவையுமே எஞ்சியுள்ளன. இவற்றைத் தவிர வேறு எதையும் நினைக்கக்கூடாது. நீங்கள் விழித்தெழும்போது நினைவும் சேவையும் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் தூங்கும்போதும் நினைவும் சேவையும் மட்டுமே இருக்க வேண்டும். சதா இந்தச் சமநிலையைப் பேணுங்கள். திரிகாலதரிசியாகி, சிறுபிள்ளைத்தனமான விடயங்கள் மற்றும் குழந்தைப் பருவ சம்ஸ்காரங்களின் மூடுவிழாவைக் கொண்டாடுங்கள். அப்போது நீங்கள் ஓய்வெடுக்கும் ஸ்திதியில் இருப்பவர் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
சகல பேறுகளாலும் நிறைந்திருக்கும் ஆத்மாவின் அடையாளம், திருப்தி ஆகும். திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

ஏகாந்தம் பௌதீகமானது, அத்துடன் சூட்சுமமானது. ஏகாந்தத்தின் ஆனந்தத்தை அனுபவம் செய்யுங்கள். அப்போது நீங்கள் புறநோக்கை விரும்ப மாட்டீர்கள். உங்களின் அவ்யக்த ஸ்திதியை அதிகரிப்பதற்கு, ஏகாந்தத்தைப் பேணும் ஆர்வத்தைக் கொண்டிருங்கள். ஒற்றுமையுடன் கூடவே, ஏகாந்தத்தை விரும்புவராகவும் ஆகுங்கள்.