15.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே நீ;ங்கள் உங்கள் சரீரங்களையும், உங்கள் சரீர உறவினர் அனைவரையும் மறந்து, தந்தை ஒருவரையே நினைவு செய்யுங்கள். இதுவே உண்மையான கீதையின் சாராம்சமாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு இலகுவான முயற்சி எது?

பதில்:
தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும் மௌனமாக இருக்கவேண்டும். மௌனமாக இருப்பதனாலேயே தந்தையிடம் இருந்து ஆஸ்தியை நீங்கள் பெற முடியும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், சுயதரிசன சக்கரத்தையும் சுழற்ற வேண்டும். தந்தையை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்கள் ஆயுட்காலமும் நீடிக்கப்படும், அத்துடன் சக்கரத்தை அறிந்து கொள்வதனால் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். இந்த முயற்சி இலகுவானதாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை மீண்டும் ஒருமுறை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் தினமும் இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முன்னைய சக்கரத்தில் செய்ததைப் போன்று உண்மையான கீதையின் ஞானத்தைக் கற்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். எனினும் உங்களுக்குக் கற்பிப்பவர் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல, பரமாத்மாவான பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் இப்போது மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இப்போது நீங்கள் கடவுள் கூறுவதை நேரடியாகச் செவிமடுக்கின்றீர்கள். பாரத மக்களைப் பொறுத்தவரை அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. உருத்திர ஞான யாகம் உருவாக்கப்பட்டதாக அந்தக் கீதையில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு யாகமும், பாடசாலையும் (கற்கும் இடம்) ஆகும். தந்தை வந்து, உண்மையான கீதையைக் கூறும் போது நாங்கள் சற்கதி அடைகின்றோம். மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. அனைவருக்கும் சற்கதி அளிக்கும் தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் கீதையை கற்றுக் கொண்டிருந்த போதிலும், படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியாததால், நீங்கள் ‘நேற்றி, நேற்றி’ (அவர் இதுவும் அல்ல, அதுவும் அல்ல) எனக் கூறி வருகின்றீர்கள். உண்மையான தந்தையே வந்து உண்மையான கீதையைக் கூறுகின்றார். இந்த விடயங்கள் கடையப்பட வேண்டியவை. சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனம் இதன் மீது மிக நன்றாக ஈர்க்கப்படும். “ஞானக்கடல், தூய்மையாக்குபவர், கீதையின் ஞானத்தை அருள்பவர், பரம அன்பிற்கினியவர், பரமதந்தை, பரமஆசிரியர், பரமசற்குரு, கடவுள் சிவன் பேசுகின்றார்” என்ற இந்த வார்த்தைகள் நிச்சயமாக ஒவ்வொரு படத்திலும் எழுதப்பட வேண்டும் என பாபா கூறியுள்ளார். நீங்கள் நிச்சயமாக இந்த வார்த்தைகளை எழுத வேண்டும். அப்பொழுதே மக்கள், பரமாத்மாவாகிய திரிமூர்த்தி சிவனே கீதையின் கடவுள் என்பதையும், ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதையும் புரிந்து கொள்வார்கள். இந்த விடயத்தில் நீங்கள் மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்களுக்குக் கீதையே பிரதான விடயமாகும். தந்தை தொடர்ந்தும் புதிய கருத்துக்களை ஒவ்வொரு நாளும் கொடுக்கின்றார். பாபா இதனை ஏன் முன்பே எங்களுக்குக் கூறவில்லை என நீங்கள் நினைக்கக்கூடாது. அது நாடகத்தில் இல்லை. நீங்கள் பாபாவின் முரளியில் இருந்து புதிய கருத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் “எழுச்சியையும் வீழ்ச்சியையும்” பற்றி எழுதுகின்றார்கள். “பாரதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என நீங்கள் இந்தியில் கூறுகின்றீர்கள். எழுச்சி என்றால் தேவ வம்சத்தின் ஸ்தாபனையாகும். அதாவது, நூறு சதவீதமான தூய்மையும் அமைதியும், செழிப்பும் ஸ்தாபிக்கப்படுகின்றன. அரைக்கல்பத்தின் பின்னர் அங்கே வீழ்ச்சியுள்ளது. அதாவது, அசுர வம்சத்தினுள் வீழ்கின்ற வீழ்ச்சியாகும். தேவ வம்சத்தின் எழுச்சியும், ஸ்தாபனையும் இருக்கும். நீங்கள் வீழ்ச்சியுடன் “விநாசம்” என்ற வார்த்தையையும் எழுத வேண்டும். உங்களுக்கு, அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு உண்மையான கீதையைக் கூறுகின்றார். இதனை பாபா ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்களே. தந்தை கூறுகின்றார்: அச் சரீரங்களின் விரிவாக்கத்தை மறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஓர் ஆத்மா அவரது சரீரத்தில் இருந்து பிரிந்திருக்கும் போது, அவர் தனது உறவுகள் அனைத்தையும் மறந்து விடுகின்றார். ஆகவே தந்தையும் கூறுகின்றார்: உங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்போது உங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அரைக்கல்பமாக, நீங்கள் வீடு திரும்புவதற்காகப் பக்தி போன்றவற்றைச் செய்தீர்கள். சத்தியயுகத்தில் வீடு திரும்புவதற்கு எவரும் முயற்சி செய்வதில்லை. அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. ‘துன்பம் வரும்போதே அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றார்கள் என்றும், சந்தோஷத்தின் போது அவரை எவரும் நினைவு செய்வதில்லை’ என்றும் மக்கள் கூறுகின்றார்கள். எனினும் எப்போது சந்தோஷம் இருந்தது, எப்போது துன்பம் இருந்தது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். எங்களுடைய விடயங்கள் அனைத்தும் மறைமுகமானவை. நாங்களும் ஆன்மீக இராணுவத்தைச் சேர்ந்தவர்களே (மிலிட்டரி). நாங்கள் சிவபாபாவின் சக்திசேனைகள் ஆவோம். இதன் கருத்தை எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் தேவர்களை அதிகளவில் வணங்கினாலும் அவர்களில் எவரும் எவருடைய சுயசரிதத்தையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் தாங்கள் வழிபட்டவரின் சுயசரிதத்தையாவது அறிந்திருக்க வேண்டும். அனைவரையும் விட அதி உயர்ந்த வழிபாட்டிற்கு உரியவர் சிவன் ஆவார். பிரம்மா விஷ்ணு, சங்கரருக்கும் பின்னர் இலக்ஷ்மி, நாராயணனுக்கும், அதன்பின்னர் இராதை, கிருஷ்ணருக்கும் ஆலயங்கள் உள்ளன. வேறு எவருமில்லை. அவர்கள் ஒரேயொரு சிவபாபாவுக்குப் பல வித்தியாசமான பெயர்களைக் கொடுத்ததுடன் பல ஆலயங்களையும் கட்டியுள்ளார்கள். இப்பொழுது முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தில் பிரதான நடிகர்கள் இருக்கின்றார்கள். அவை எல்லைக்குட்பட்ட நாடகங்கள். ஆனால் இதுவே எல்லையற்ற நாடகமாகும். இந்த நாடகத்தில் பிரதானமானவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ இராமா, உலகம் என்றுமே உருவாக்கப்படவில்லை. இதைப் பற்றிய ஒரு சமயநூலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வாறு மிகவும் இலகுவாக முயற்சி செய்வது எனக் கற்பிக்கின்றார். மிகவும் இலகுவான முயற்சி முற்றிலும் மௌனமாக இருப்பதாகும். நீங்கள் மௌனமாக இருப்பதாலேயே உங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்து கோர முடியும். நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். நீ;ங்கள் உலகச் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதாலேயே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள் நோயிலிருந்தும் விடுபடுகிறீர்கள், உங்கள் ஆயுட்காலமும் அதிகரிக்கும். நீங்கள் சக்கரத்தை அறிந்து கொள்வதனால் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். தற்போது நீங்கள் நரகத்தின் அதிபதிகள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஆனாலும் அதற்குள்ளும் அந்தஸ்துக்கள் உள்ளன. பிறரையும் உங்களைப் போன்று ஆக்குவதற்கு ஏற்பவே, நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் ஞான இரத்தினங்களைத் தானம் செய்யாது விட்டால் நீங்கள் எதனைப் பிரதிபலனாகப் பெற முடியும்? ஒருவர் செல்வந்தரானால், அவர் முற்பிறவியில் தானமும் செய்து புண்ணியமும் செய்துள்ளார் எனக் கூறுவார்கள். இராவண இராச்சியத்தில் அனைவரும் பாவம் செய்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். அதிமேலான புண்ணிய ஆத்மாக்கள் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவார்கள். ஆம், பிராமணர்களும் பிறரை மேன்மையானவர் ஆக்குவதால், உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகின்றார்கள். இதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலனாகும். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, பிராமண குல அலங்காரங்களான நீங்களே ஸ்ரீமத்தின் அடிப்படையில் இந்த மேன்மையான பணியைச் செய்கின்றீர்கள். பிரம்மாவின் பெயரே பிரதானமானது. மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றார்கள். இப்போது நீங்கள் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் “திரிமூர்த்தி சிவன்” எனக் கூறவேண்டும். பிரம்மா மூலம் ஸ்தாபனையும், சங்கர் மூலம் விநாசமும் என மக்கள் பேசுகின்றார்கள். அவர்கள் பல்வகை ரூபத்தை உருவாக்கினாலும் அதில் அவர்கள் சிவனையோ அல்லது பிராமணர்களையோ காட்டுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இதையும் விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளாகிய உங்களிலும், சிலரின் புத்தியில் மாத்திரமே இது மிகவும் சிரமத்துடன் மிகச்சரியாக உள்ளது. நீங்கள் தலைப்புக்களாக எடுத்துக் கொள்ளும் பல கருத்துக்கள் உள்ளன. நீங்கள் பல தலைப்புக்களைப் பெறுகின்றீர்கள். கடவுளிடமிருந்து உண்மையான கீதையைச் செவிமடுப்பதால், நீங்கள் மனிதர்களில் இருந்து உலகின் அதிபதிகளான தேவர்கள் ஆகுகின்றீர்கள். தலைப்புக்கள் மிகவும் நல்லது. ஆனால் அவற்றை விளங்கப்படுத்தக்கூடிய விவேகமும் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் இந்த விடயங்களைத் தெளிவாக எழுத வேண்டும். அப்பொழுதே மக்கள் அவற்றைப் புரிந்துகொண்டு, அவற்றைப் பற்றிக் கேட்பார்கள். இது மிகவும் இலகுவானது. ஒவ்வொரு ஞானக் கருத்தும் நூறாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியானது, அவற்றின் மூலம் நீங்கள் மிகவும் மகத்தானவர்கள் ஆகுவீர்கள். உங்கள் ஒவ்வொரு அடியிலும் பலமில்லியன்கள் (பதம்) உள்ளன. இதனாலேயே அவர்கள் தேவர்களைத் தாமரை (பதம்) மலருடன் காட்டுகின்றார்கள். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, பிராமணர்களாகிய உங்களின் பெயரை அவர்கள் மறந்து விட்டார்கள். அந்தப் பிராமணக் குருமார் தங்கள் கரங்களில் கீதையை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் சமயநூல்களைத் தங்கள் கரங்களில் வைத்திருக்கும் போது, உண்மையான பிராமணர்களாகிய நீங்கள், உண்மையை உங்கள் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் சுவர்க்கத்தை உருவாக்குகின்றீர்கள் என்பதுடன், தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்ற போதையும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களிடம் எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் இந்தச் சாதாரணமான பட்ஜே உங்களது உண்மையான கீதையாகும். அதில் திரிமூர்த்தியின் படமும் உள்ளது. எனவே முழுக் கீதையும் அதில் அடங்கியுள்ளது. அதாவது முழுக் கீதையும் ஒரு விநாடியில் விளங்கப்படுத்தப்படுகின்றது. இந்த பட்ஜைப் பயன்படுத்தி உங்களால் ஒரு விநாடியில் எவருக்குமே விளங்கப்படுத்த முடியும். இவரே உங்கள் தந்தை, இவரை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் புகையிரதத்தில் பயணம் செய்யும் போதும், நடந்து செல்லும் போதும் எவரைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் இதனை மிக நன்றாக விளங்கப்படுத்துங்கள்: அனைவருக்கும் கிருஷ்ண தாமத்திற்குச் செல்லும் விருப்பம் உள்ளது. இக்கல்வியினாலேயே நீங்கள் அவ்வாறாக முடியும். இக்கல்வியினால் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனைய சமய ஸ்தாபகர் எவரும் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. இப்பொழுது உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக இராஜயோகம் கற்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது அத்தகைய ஒரு நல்ல கல்வியாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம் கற்க வேண்டும். அவ்வளவுதான். ஏனைய கல்விகளை நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்களுக்குக் கற்கின்றார்கள். ஆனால் இந்தக் கல்விக்கு, அனைவரும் ஓய்வாக இருக்கும் காலை நேரத்தில் ஒரு மணித்தியாலம் போதுமானது. எனினும் பந்தனத்தில் இருப்பதால் காலையில் வர முடியாதவர்கள் வேறு நேரங்களில் வரலாம். நீங்கள் எப்போதும் பட்ஜை அணிந்திருக்க வேண்டும். எங்கு நீங்கள் சென்றாலும் தொடர்ந்தும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். நீங்கள் செய்தித்தாள்களில் ஒரு பட்ஜை இட முடியாது. அதன் (பட்ஜின்) ஒரு பக்கத்தை உங்களால் செய்தித்தாள்களில் பிரசுரிக்க முடியும். அதனை நீங்கள் விளங்கப்படுத்தும் வரை மக்கள் அதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். அது மிகவும் இலகுவானது. எவரும் இந்த வியாபாரத்தைச் செய்ய முடியும். அச்சா. நீங்கள் பாபாவை நினைவு செய்யாது விட்டாலும்கூட, அவரைப் பிறருக்கு ஞாபகப்படுத்துங்கள். இதுவும் நல்லது. சிலர் தாம் சரீர உணர்வில் இருந்து கொண்டு பிறரை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள் எனக் கூறுகின்றனர். எனவே, ஏதோ ஒரு பாவச்செயல் செய்யப்படுகின்றது. முதலில் புயல் மனதில் உருவாகுகின்றது, பின்னர் அவை செயலில் இடப்படுகின்றன. பல புயல்கள் மனதிலே உருவாகும் என்பதால், நீங்கள் அதற்குப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் தீய செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது. நீங்கள் நல்ல செயல்களையே செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் உள்ளன, எனவே நீங்கள் தீய எண்ணங்களை நிறுத்த வேண்டும். தந்தை உங்களுக்கு அத்தகைய புத்தியைக் கொடுத்துள்ளார். இதனை வேறு எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் தொடர்ந்தும் பிழையான செயல்களைச் செய்கின்றார்கள். நல்ல முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் நல்ல செயல்களைச் செய்வீர்கள். தந்தை அனைத்தையும் தொடர்ந்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழிவற்ற ஞான இரத்தினம் ஒவ்வொன்றும், இலட்சக்;கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியானது. அவற்றைத் தானம் செய்வதனால் ஒவ்வோர் அடியிலும் நீங்கள் பல கோடி வருமானத்தைச் சேமித்துக் கொள்வீர்கள். உங்களைப் போன்று ஏனையோரையும் ஆக்குவதனால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள்.

2. பாவச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதில் ஏதாவது தீய எண்ணங்கள் தோன்றினால் நீங்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும். நல்ல எண்ணங்களையே கொண்டிருங்கள். புலன் அங்கங்களின் மூலமாக, பிழையான செயல்கள் எதனையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீகத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும் எல்லோருடனும் அன்பாக இருப்பதற்கும் தேவதை முக ஒப்பனையை இடுவீர்களாக.

சதா பாப்தாதாவுடன் இருக்கும் குழந்தைகள், அவரின் சகவாசத்தால் நிறமூட்டப்படுகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொருவரின் முகத்திலும் அந்த ஆன்மீகத்தின் ஆதிக்கம் தென்படுகிறது. அவர்கள் இந்த ஆன்மீகத்தில் இருப்பதன் மூலம் இயல்பாகவே தேவதை முக ஒப்பனை போடப்படுகிறது. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் முக ஒப்பனையைப் போட்ட பின்னர், முற்று முழுதாக மாறிவிடுகிறார். மேக்கப் போடுவதன் மூலம் அவர்கள் அழகானவர்கள் ஆகுகிறார்கள். இங்கும் தேவதை மேக்கப் போடுவதன் மூலம் நீங்கள் பிரகாசிக்க ஆரம்பிப்பீர்கள். இந்த ஆன்மீக மேக்கப் உங்களை அன்பானவர்கள் ஆக்கும்.

சுலோகம்:
பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதும் யோகம் செய்வதும் தெய்வீகக் குணங்களைத் தாரணை செய்வதுமே உண்மையான முயற்சி ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

உங்களின் வார்த்தைகளைப் போன்றே உங்களின் ரூபமும் இருக்க வேண்டும். உங்களின் வார்த்தைகள் தெளிவாகவும் அன்பால் நிறைந்தும் பணிவாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும். அவை சத்தியத்தால் நிரம்பியும் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், உங்களின் ரூபத்தில் பணிவும் இருக்க வேண்டும். இந்த ரூபத்தால் உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். பயமற்றவராக இருங்கள். ஆனால் உங்களின் வார்த்தைகள் மரியாதைக் கோட்பாடுகளுக்குள் இருக்க வேண்டும். அப்போது மக்கள் உங்களின் வார்த்தைகளைக் கடினமானதாக உணர மாட்டார்கள். ஆனால் இனிமையாக இருப்பதாக உணர்வார்கள்.

மாதேஷ்வரியின் மேன்மையான வாசகங்கள்

கர்ம பந்தனங்களை உடைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி.

தமது கர்ம பந்தனங்களை உடைப்பதற்கு தாம் என்ன செய்ய வேண்டும் எனப் பலர் கேட்கிறார்கள். தந்தைக்கு ஒவ்வொருவரின் ஜாதகமும் தெரியும். ஒரு தடவை குழந்தைகளான நீங்கள் உங்களை இதயபூர்வமாகத் தந்தையிடம் அர்ப்பணித்ததும், உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் அவரின் கைகளில் ஒப்படைப்பது உங்கள் கடமை ஆகும். அதன்பின்னர் அவர் ஒவ்வொருவரையும் பார்த்து, உங்களுக்கு என்ன தேவையோ அதற்கேற்ற அறிவுரையை வழங்குவார். நீங்கள் அவரின் ஆதாரத்தை நடைமுறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் தொடர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதும் அத்துடன் தொடர்ந்து உங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதுமாக இருக்கக்கூடாது. தந்தை பௌதீக ரூபத்தில் இருக்கிறார். எனவே, குழந்தைகளான நீங்களும் பௌதீகமான முறையில் தந்தை, ஆசிரியர், குருவின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பெறுகின்ற அறிவுரையை உங்களால் பின்பற்ற முடியாமல் இருப்பதாக இருக்கக்கூடாது. அப்போது அதிகமான தீங்கு ஏற்படும். கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு உங்களுக்குத் தைரியம் தேவை. உங்களை அசைய வைப்பவர், களிப்பூட்டுபவர் ஆவார். உங்களுக்கு எது நன்மை கொடுக்கும் என்பதை அவர் அறிவார். எனவே, அதற்கேற்பவே எப்படி உங்களின் கர்ம பந்தனங்களை உடைப்பது என அவர் உங்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவார். அதன்பின்னர் உங்களில் எவரும் உங்களின் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ என்ற எண்ணங்கள் எதையும் கொண்டிருக்கக்கூடாது. இங்கே, உங்களின் வீட்டை விட்டுச் செல்லுதல் என்ற கேள்வியே இல்லை. இங்கே, வெகு சில குழந்தைகளுக்கே அவர்களின் பந்தனங்களை உடைப்பதற்காக நாடகத்தில் அந்தப் பாகம் இருந்தது. அது நாடகத்தின் ஒரு பாகமாக இல்லாவிட்டால், இப்போது உங்களுக்குச் சேவை செய்வதைப் போல் யார் உங்களுக்குச் சேவை செய்திருப்பார்? இப்போது, எதையும் விட்டுச் செல்லுதல் என்ற கேள்வி இல்லை. ஆனால் நீங்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் ஆகவேண்டும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். பயப்படுபவர்களால் சந்தோஷமாகவும் இருக்க முடியாது. தந்தையின் உதவியாளர்களாகவும் இருக்க முடியாது. இங்கே, நீங்கள் அவரின் முழுமையான உதவியாளர்கள் ஆகவேண்டும். நீங்கள் மரணித்து வாழும்போது, உங்களால் அவரின் உதவியாளர்கள் ஆகமுடியும். பின்னர் நீங்கள் எங்கேயாவது அகப்பட்டுக் கொள்வீர்களாக இருந்தால், அவரால் உங்களுக்கு உதவி செய்து உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் பாபாவின் உதவியாளர்கள் ஆகவேண்டும். சிறிதளவு பற்றின் இழையேனும் இருக்குமாயின், அது உங்களை விழச் செய்துவிடும். எனவே, தைரியத்துடன் முன்னேறிச் செல்லுங்கள். தைரியத்தைக் கொண்டிருப்பதில் நீங்கள் பலவீனமாக இருந்தால், நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாகுவீர்கள். எனவே, உங்களின் புத்திகளை முற்றிலும் தூய்மையானது ஆக்குங்கள். எந்தவொரு விகாரத்தின் சிறிதளவு சுவடேனும் இருக்கக்கூடாது. இலக்கு வெகு தொலைவில் இல்லை. ஆனால் ஏறுகின்றபோது சிறிது வளைவுகள் இருக்கும். அதனால் நீங்கள் சர்வசக்திவானின் துணையை எடுத்துக் கொள்வீர்கள் ஆயின், நீங்கள் பயப்பட மாட்டீர்கள். களைப்படையவும் மாட்டீர்கள். அச்சா.