15.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் ஓர் இதயபூர்வமான சம்பாஷணையை நடாத்துகின்றார். 21 பிறவிகளுக்கு உங்கள் வாழ்க்கையைக் காப்புறுதி செய்வதற்காகவே நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகும் வகையில், உங்கள் வாழ்கையை நீங்கள் காப்புறுதி செய்கின்றீர்கள்.

கேள்வி:
மனிதர்கள் ஆயுட் காப்புறுதி செய்கின்றார்கள், பிராமணர்களாகிய நீங்களும் உங்கள் வாழ்க்கையை காப்புறுதி செய்கின்றீர்கள். இதில் என்ன வேறுபாடு உள்ளது?

பதில்:
மனிதர்கள் ஆயுட் காப்புறுதி செய்யும் போது, அவர்கள் மரணித்தால், அவர்களின் குடும்பத்தினர் பணத்தைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு மரணம் அடையாதிருப்பதற்காக இப்பொழுது ஆயுட் காப்புறுதியைச் செய்கின்றீர்கள். நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில், காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள் இருக்க மாட்டாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் காப்புறுதி செய்திருப்பதால், நீங்கள் என்றுமே மரணிக்க மாட்டீர்கள் எனும் சந்தோஷம் இப்பொழுது உங்களுக்கு இருக்க வேண்டும்.

பாடல்:
அதிகாலை வேளையில் எனது வாசலிற்கு வந்தவர் யாரோ?

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுடன் ஓர் இதயபூர்வ சம்பாஷணையை நிகழ்த்துகின்றார். 21 பிறவிகளுக்காக மாத்திரமல்ல, ஆனால் 40 முதல் 50 பிறவிகளுக்குத் தந்தை உங்களைக் காப்புறுதி செய்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனைய மக்கள் தாங்கள் மரணித்தால், தங்கள் குடும்பத்தினர் பணம் பெறுகின்ற வகையில் ஆயுட் காப்புறுதி செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கு மரணம் அடையாதிருப்பதற்கு உங்களைக் காப்புறுதி செய்கின்றீர்கள். பாபா உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அமரத்துவமானவர்களாக இருந்தீர்கள். அசரீரி உலகமும் அமரத்துவ உலகமாகும். அங்கே வாழ்வது அல்லது மரணிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. அது ஆத்மாக்கள் வாழும் இடமாகும். இந்த இதயபூர்வமான சம்பாஷணையை வேறு எவருடனும் அல்லாது, தந்தை தனது குழந்தைகளுடன் மாத்திரமே நடாத்துகின்றார். தங்களை ஆத்மாக்கள் என்று அறிந்தவர்களுடன் மாத்திரமே தந்தை பேசுகின்றார். வேறு எவரும் தந்தையின் பாஷையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். பலரும் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள். அவர்கள் உங்கள் பாஷையைப் புரிந்து கொள்கின்றார்களா? சிலர் அரிதாகவே எதனையாவது புரிந்து கொள்கின்றார்கள்! உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பல வருடங்கள் எடுத்துள்ளன. இருப்பினும், இப்பொழுதும், உங்களில் வெகுசிலர் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். இது ஒரு விநாடியில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமேயாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையானவர்களாக இருந்தோம், இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளோம். இப்பொழுது நாங்கள் மீண்டும் தூய்மையானவர்களாக வேண்டும். அதற்கு நாங்கள் இனிய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரை விட இனிமையானவர் எவரும் இல்லை. இந்த நினைவில் மாத்திரமே மாயையின் தடைகள் வருகின்றன. பாபா உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்கவே வந்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்து, அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆகவேண்டும். நீங்கள் அனைவரும் அமரத்துவமானவர்கள் ஆகுவீர்கள். சத்தியயுகம் அமரத்துவ தாமம் என்று அழைக்கப்படுகின்றது. இது மரண பூமியாகும். இதுவே அமரத்துவக் கதையாகும். சங்கரர் பார்வதிக்கு மாத்திரம் அமரத்துவக் கதையைக் கூறினார் என்றில்லை. அக்கதைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கான கதைகளாகும். குழந்தைகளாகிய நீங்கள் நான் கூறுவதை மாத்திரமே செவிமடுக்க வேண்டும். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நான் மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, முழு உலகமும் தமோபிரதான் ஆகியுள்ளது. அமரத்துவ தாமத்தில் ஆட்சி செய்தல் என்றால், ஓர் அமரத்துவ அந்தஸ்தை அடைதல் என்று அர்த்தம். அங்கே, காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள் போன்றவை இருக்க மாட்டாது. உங்கள் வாழ்க்கை இப்பொழுது காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் என்றுமே மரணிக்க மாட்டீர்கள். புத்தியில் இந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். நாங்கள் அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். எனவே அமரத்துவ தாமம் நினைவு செய்யப்பட வேண்டும். நாங்கள் அங்கு அசரீரி உலகினூடாகவே செல்ல வேண்டும். இதுவும் “மன்மனாபவ” ஆகும். அசரீரி உலகத்தை நினைவு செய்தலே “மன்மனாபவ” ஆக இருப்பதாகும். அமரத்துவ தாமத்தை நினைவுசெய்தல் “மத்தியாஜிபவ” (உங்கள் இலக்கும் குறிக்கோளும்) ஆக இருத்தலாகும். சகல விடயங்களும் இரு வார்த்தைகளுக்குள் அடங்குகின்றன. உங்கள் புத்தியில் நிலைத்திருக்கும் வகையில் பல்வேறு அர்த்தங்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதிலேயே அதிகபட்ச முயற்சி உள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் இந்தப் பிறவியை எடுத்திருக்கின்றோம். 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நாங்கள் பல்வேறு பெயர்கள், வடிவங்கள், தேசங்கள், நேரம் ஆகியவற்றினூடாகச் சென்றுள்ளோம். சத்தியயுகத்தில், நாங்கள் இந்தளவு பிறவிகளை எடுத்தோம், திரேதாயுகத்தில் இத்தனை பிறவிகளை எடுத்தோம். பல குழந்தைகள் இதனைக் கூட மறந்து விடுகின்றார்கள். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, இனிமையான தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். நீங்கள் நடந்தாலும், அல்லது அமர்ந்திருந்தாலும், இதனை உங்கள் புத்தியில் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அரைக்கல்பமாக நாங்கள் நினைவுசெய்து, எங்களைத் தூய்மையாக்குவதற்காக வருமாறு அழைத்த பாபா, மீண்டும் ஒருமுறை வந்திருக்கிறார். நீங்கள் அசரீரி உலகிலும், அமரத்துவ தாமமான, சத்தியயுகத்திலும் இரண்டிலும் தூய்மையாக இருக்கின்றீர்கள். மக்கள் முக்தி அடைவதற்காகவோ அல்லது கிருஷ்ணதாமத்திற்கு செல்வதற்காகவோ பக்தியில் முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் அதனை முக்தி என்று அழைத்தாலும் அல்லது சப்தத்திற்கு அப்பாற்பட்ட தாமம் என அழைத்தாலும், “ஓய்வு ஸ்திதி” என்ற வார்த்தையே சரியானதாகும். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்கள் நகரங்களில் வாழ்கின்றார்கள். ஆனால் சந்நியாசிகள் தங்கள் வீடுகளை நீங்கி, காடுகளுக்குச் செல்கின்றார்கள். இந்நாட்களில், ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களுக்குச் சக்தியில்லை. சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தைக் கடவுள் என்று அழைக்கின்றார்கள். அதனை அவர்கள் பிரம்மலோகம் (பிரம்ம தத்துவத்தின் உலகம்) என்று அழைப்பதில்லை. எவருமே மறுபிறவி எடுப்பதைத் தவிர்க்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். வருவது, போவதில் இருந்து எவருமே ஒருபொழுதும் விடுவிக்கப்பட முடியாது. இப்பொழுது பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் உள்ளனர், மேலும் பலர் தொடர்ந்தும் கீழே வந்து கொண்டிருப்பார்கள். முதலாம் தளம் வெறுமை ஆகும் வரை அவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுப்பார்கள். அசரீரி உலகமே முதற்தளமாகும், சூட்சும உலகம் இரண்டாந் தளமாகும். இந்த உலகம் மூன்றாந் தளமாகும். அல்லது இதனை நீங்கள் தரைத்தளம் என்றும் அழைக்க முடியும். வேறு தளங்கள் இல்லை. நட்சத்திரங்களின் மத்தியில் இன்னோர் உலகம் இருக்கின்றது என்று மக்கள் நினைக்கின்றார்கள். அது அவ்வாறில்லை. ஆத்மாக்கள் முதற் தளத்தில் வசிக்கின்றார்கள், ஆனால் மனிதர்கள் இந்த உலகில் வாழ்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற துறவிகள் ஆவீர்கள். இந்தப் பழைய உலகில் வாழும் போதும், இப் பழைய உலகை உங்கள் பௌதீகக் கண்களால் பார்த்தும் பார்க்காதிருங்கள். இதுவே பிரதானமான முயற்சியாகும். ஏனெனில் இவை அனைத்தும் அழிவடையப் போகின்றது. உலகம் என்றுமே படைக்கப்படவில்லை என்றில்லை. அது படைக்கப்படுகிறது, ஆனால் உங்களுக்கு இப்பொழுது அதில் ஆர்வம் இல்லை. பழைய உலகம் முழுவதையிட்டும் உங்களுக்கு விருப்பமின்மையே உள்ளது. வழிபாடு, இந்த ஞானம், விருப்பமின்மை என்பன உள்ளன. வழிபாட்டிற்குப் பின்னர், இந்த ஞானம் உள்ளது, அதன்பின்னர் பக்தியில் ஆர்வம் இருப்பதில்லை. இந்த உலகம் பழையது என்பதையும், இதுவே எங்கள் இறுதி பிறவி என்பதையும் உங்கள் புத்தி புரிந்து கொள்கின்றது. இப்போது அனைவருமே வீடு திரும்ப வேண்டும். சிறு குழந்தைகளுக்குக் கூட சிவபாபாவை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுக்குத் தூய்மையற்ற உணவையோ அல்லது பானத்தையோ உட்கொள்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில் எந்தப் பழக்கங்களை உருவாக்குகின்றீர்களோ, அவையே எக்காலத்திற்கும் உங்களுடன் இருக்கின்றன. தற்போது, சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் தீயதாக உள்ளது. நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு இட்டுச் செல்கின்றது என்றும், தீய சகவாசம் உங்களை மூழ்கச் செய்கின்றது என்றும் கூறப்படுகின்றது. இது விலைமாதர் இல்லமான, நச்சுக்கடல் ஆகும். ஒரேயொரு பரமாத்மாவான பரமதந்தையே சத்தியமானவர் ஆவார். கடவுள் ஒருவரே என்று கூறப்படுகின்றது. அவர் வந்து உண்மையை விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே, உங்கள் தந்தையான நான், உங்களுடன் இதயபூர்வமான சம்பாஷணையை நடத்துகின்றேன். என்னை வரும்படி நீங்கள் அழைத்து வருகின்றீர்கள். அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவராகிய, ஞானக்கடல் ஆவார். அவரே புதிய உலகைப் படைப்பவர். அவர் பழைய உலகின் விநாசத்தைத் தூண்டுகின்றார். திரிமூர்த்தி மிகவும் பிரபல்யமானது. சிவனே அதிமேலானவர். பின்னர், சூட்சும உலகில், பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரரும் உள்ளனர். அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால் அவர்களின் காட்சிகளைப் பலரும் பெற்றுள்ளனர். உங்கள் பௌதீகக் கண்களால் அவர்களை உயிருள்ள வடிவில் காண்பது சாத்தியமில்லை. எவ்வாறாயினும், பெருமளவு தீவிர பக்தி செய்தவர்களுக்கு அவர்களைப் பார்ப்பது சாத்தியமாகும். உதாரணமாக, ஒருவர் அனுமானின் பக்தராயின், அவரின் காட்சியை அவர் காண்பார். எவ்வாறாயினும், சிவனின் பக்தர்களுக்கு, பரமாத்மா அநாதியான, எல்லையற்ற ஜோதி வடிவமானவர் என்று பொய் கூறப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: எனது வடிவம் சின்னஞ்சிறிய புள்ளியாகும். அநாதியான எல்லையற்ற ஒளி அர்ஜுனனுக்குக் காட்டப்பட்ட போது, அவர் அதனை நிறுத்துங்கள், அதனை இனியும் என்னால் சகிக்க முடியாது என்று கூறியதாக எழுதப்பட்டுள்ளது. கீதையில் அவர் அந்தக் காட்சியைக் கண்டதாக எழுதப்பட்டுள்ளது. அவர் நிலையான, எல்லையற்ற ஒளியைக் காட்சியாகக் கண்டார் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: பக்திமார்க்கத்தின் அக்கதைகள் அனைத்தும், இதயத்திற்குக் களிப்பூட்டுபவை மாத்திரமே. எனது வடிவம் அநாதியான, எல்லையற்ற ஒளியென நான் ஒருபொழுதுமே கூறியதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளி வடிவத்தினராக இருப்பதைப் போன்று, நானும் அவ்வாறே உள்ளேன். நீங்கள் நாடகத்தினால் கட்டுப்பட்டிருப்பதைப் போன்றே, நானும் நாடகத்தினால் கட்டுப்பட்டுள்ளேன். ஒவ்வோர் ஆத்மாவும் நடிப்பதற்கென தத்தமது சொந்தப் பாகத்தை பெற்றிருக்கிறார்கள். அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். அனைவரும் வரிசைக்கிரமமாக கீழே செல்ல வேண்டும். முதல் இலக்கத்தவர் கீழே செல்கிறார். தந்தை பல்வேறு விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இரவிற்குப் பின்னர் பகல் வருவதைப் போன்றே, கலியுகத்தின் பின்னர் அதனைத் தொடர்ந்து சத்தியயுகம் வர வேண்டும். பின்னர் திரேதாயுகம் போன்றன பின்தொடர்கின்றன. அதன்பின்னர் இந்தச் சங்கமயுகம் வருகின்றது. இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தையால் உங்களை மாற்ற முடியும். சதோபிரதானாக இருந்தவர்கள், இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார்கள். அவர்கள் மீண்டும் சதோபிரதான் ஆகுவார்கள். நீங்கள் ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என்று அழைத்தீர்கள். ஆகவே தந்தை இப்பொழுது கூறுகின்றார்: மன்மனாபவ! நான் ஓர் ஆத்மா, நான் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அரிதாகவே எவரும் இதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்கின்றார்கள். ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை மிகவும் இனிமையானவர்! ஆத்மாவே இனிமையானவர். சரீரம் அழிக்கப்படுகின்றது, ஆத்மா இங்கே வரவழைக்கப்படுகின்றார். ஆத்மாவின் மீது மாத்திரமே அன்பு உள்ளது. ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாவே கற்பவரும், செவிமடுப்பவரும் ஆவார். ஆனால் சரீரமே மரணிக்கின்றது. “ஆத்மாவாகிய நான், அமரத்துவமானவர். ஆகையால் எனக்காக நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்?” அது சரீர உணர்வாகும். உங்கள் அன்பு சரீரத்திற்கானதாகும். ஆனால் உங்கள் அன்பு ஆத்மாவின் மீதே இருக்க வேண்டும். உங்கள் அன்பு அழிவற்றவையின் மீதே இருக்க வேண்டும். நீங்கள் அழியக் கூடியவற்றின் மீது அன்பு வைப்பதாலேயே சண்டை சச்சரவில் ஈடுபடுகின்றீர்கள். சத்தியயுகத்தில், அனைவரும் ஆத்ம உணர்வுடையவர்கள். ஆகையால், அவர்கள் தங்கள் சரீரங்களை நீங்கிச் செல்லும் போது, அவர்கள் சந்தோஷமாக அடுத்த பிறவியை எடுக்கின்றார்கள். அழுது புலம்புதல் என்பன இருக்க மாட்டாது. உங்கள் ஆத்ம உணர்வு ஸ்திதியை நீங்கள் உருவாக்கிக் கொள்வதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் இதனை அதிகளவு பயிற்சி செய்ய வேண்டும்: நான் ஓர் ஆத்மா, நான் எனது சகோதர ஆத்மாவிற்குத் தந்தையின் செய்தியைக் கொடுக்கின்றேன். எனது சகோதரர் அந்த அங்கங்களினால் செவிமடுக்கின்றார். அத்தகைய ஸ்திதியை உருவாக்குங்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், தொடர்ந்தும் உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, மற்ற நபரையும் ஆத்மா என்று கருதினால், அந்தப் பழக்கம் உறுதியாகும். இந்த முயற்சி மறைமுகமானது. அகநோக்கு உடையவராகி, இந்த ஸ்திதியை உறுதியாக்குங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இதற்காக அதனைப் பயன்படுத்துங்கள். எவ்வாறாயினும், உங்கள் தொழில் போன்றவற்றை எட்டு மணித்தியாலங்களுக்கு மேற்கொள்வதுடன், நீங்கள் உறங்கவும் வேண்டும். ஆனால் உங்கள் மிகுதி நேரத்தை இதற்காகப் பயன்படுத்துங்கள். எட்டு மணித்தியாலங்கள் நினைவுசெய்தல் என்ற ஸ்திதியை நீங்கள் அடைய வேண்டும். அப்பொழுது உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்கும். தூய்மையாக்குபவரான தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இப்பொழுது, சங்கமயுகத்தில், இந்த ஞானத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் நேரமான சங்கமயுகத்தையே அனைத்துப் புகழும் குறிக்கின்றன. இதில் பௌதீகமானவை என்ற கேள்விகே இடமில்லை. நீங்கள் எழுதுகின்ற அனைத்தும் அழிந்துவிடும். ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தக் கருத்துக்களை நீங்கள் குறித்துக் கொள்கின்றீர்கள். உங்களில் சிலருக்கு மிகவும் திறமையான புத்தி உள்ளது. அவர்களால் தங்கள் புத்தியில் அனைத்தையும் வைத்திருக்க முடியும். அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. தந்தையையும், முழுச் சக்கரத்தையும் நினைவுசெய்வதே பிரதான விடயமாகும். எந்தவொரு பாவச் செயலையும் செய்யாதீர்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போதும், நிச்சயமாகத் தூய்மையாக இருங்கள். சில குழந்தைகள் தீய எண்ணங்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் நினைக்கிறார்கள்: நான் இவரை அதிகளவு விரும்புகின்றேன். தாங்கள் தூய திருமணம் செய்ய விரும்புவதாக அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களது நண்பர்களும், உறவினர்களும் அதிகளவு தொந்தரவுகளை விளைவிக்கும் போது மாத்திரமே அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தூய திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். தாங்கள் தூய திருமணம் செய்ய விரும்புவதாக எல்லோரும் கூறுவார்கள் என்றில்லை. அனைவராலும் தூய்மையாக இருக்க முடியாது. அவர்கள் முதல் நாளே சென்று சாக்கடைக்குள் வீழ்கின்றார்கள். அவர்களது இதயம் ஒருவர் மற்றவரின் பெயரினாலும் வடிவத்தினாலும் கவரப்படுகின்றது. இது மிகவும் தீயதாகும். தூய திருமணம் செய்தல் என்பது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றல்ல. அவர்களின் இதயம் ஒருவர் மற்றவர் மீது கவரப்படும் பொழுது, தாங்கள் தூய திருமணம் செய்ய விரும்புவதாக அவர்கள் கூறுகின்றார்கள். இதனையிட்டு உறவினர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தகைய குழந்தைகளினால் எந்தப் பயனும் இல்லை என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். எவர் மீது இதயம் கவரப்பட்டுள்ளதோ, அவரிலிருந்து அவர் விடுபட வேண்டும். இல்லாவிடின் அவர்கள் தொடர்ந்தும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த ஒன்றுகூடலில் இருக்கும் பொழுது, பெருமளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, ஒன்றுகூடல் மிகவும் சட்டதிட்டமாக இருக்கும். அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள், இங்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்மீகச் சேவை செய்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்ற குழந்தைகளும் யோகத்தில் நிலைத்திருந்து சேவை செய்பவர்கள் மாத்திரமே சத்தியயுக இராச்சியத்தை ஸ்தாபிப்பதில் உதவியாளர்கள் ஆகுகின்றார்கள். சேவை செய்கின்ற குழந்தைகளுக்குத் தந்தையின் வழிகாட்டல்கள்: ஓய்வெடுத்தல் நல்லதல்ல! பெருமளவு சேவை செய்பவர்கள் நிச்சயமாக அரசர்களும் அரசிகளும் ஆகுவார்கள். பிறரைத் தங்களைப் போல் ஆக்குவதற்கு முயற்சி செய்பவர்களுக்குப் பெருமளவு சக்தியுள்ளது. நாடகத்திற்கு ஏற்ப, ஸ்தாபனை இடம்பெற வேண்டும். கருத்துகள் அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகித்து, சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். ஓய்வெடுத்தல் நல்லதல்ல! சேவையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றிருந்தாலே, உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். முகில்கள் வருகின்றன, புத்துணர்ச்சி பெற்ற பின்னர் சேவை செய்யச் செல்கின்றன. நீங்கள் செய்வதற்குப் பெருமளவு சேவை உள்ளது. மக்களால் விரைவாகப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் பல்வேறு படங்கள் உருவாக்கப்படும். இந்தப் படங்கள் போன்றன தொடர்ந்தும் சீர்திருத்தப்படும். இதிலும், எங்கள் பிராமணக் குலத்துக்கு உரியவர்கள், மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் நன்றாக விளங்கப்படுத்தும் போது பிறரால் சிறிதளவையேனும் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் முகங்களிலிருந்தே, அவர்கள் இதனை மிகவும் நன்றாகக் கிரகிக்கின்றார்களா, அவர்கள் தந்தையை நினைவுசெய்து ‘பாபா, நான் உங்களிடமிருந்து எனது முழு ஆஸ்தியையும் பெறுவேன்’ என்று நினைக்கின்றார்களா என்பதைக் காண முடியும். அவர்களுக்குள் சந்தோஷ முரசுகள் கொட்டும். அவர்கள் சேவை செய்வதில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் புத்துணர்ச்சி பெற்று, ஓடோடிச் செல்வார்கள். ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள பலரைச் சேவை செய்வதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். உங்கள் சேவை தொலைவாகவும் பரந்தும் விரிவடையும். அவர்கள் உங்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பிப்பார்கள். சந்நியாசிகள் வருகின்ற நாளும் வரும். இது இப்பொழுது அவர்களது இராச்சியமாகும். மக்கள் அவர்களின் காலில் விழுந்து வணங்குகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தும் பஞ்சதத்துவங்களின் வழிபாடாகும். எனக்குப் பாதங்கள் இல்லை. ஆகையாலேயே அவர்கள் என்னை வழிபடுவதை நான் அனுமதிப்பதில்லை. நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். ஆகையால் இந்தச் சரீரம் ‘பாக்கிய இரதம்’ என்று அழைக்கப்படுகின்றது. தற்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். ஏனெனில் நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். ‘ஆத்மாக்கள் நீண்ட காலம் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தார்கள்’ என்று கூறப்படுகின்றது. ஆகவே, நீண்டகாலம் பிரிந்திருந்தவர்களே இப்பொழுது வருபவர்கள். நான் வரும் போது, அவர்களுக்கே நான் கற்பிக்கின்றேன். ஸ்ரீகிருஷ்ணர் இப்பொழுது தனது இறுதி பிறவியில் இருக்கிறார். எனவே, அவர் மாத்திரமே சியாம்சுந்தர் என அழைக்கப்படுகின்றார். எவருக்கும் சிவனைப் பற்றி எதுவும் தெரியாது. தந்தை வரும்போது மாத்திரமே அவர் இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். நான் பரந்தாமவாசியான, பரமாத்மா ஆவேன். நீங்களும் அவ்விடத்து வாசிகளே. நானே தூய்மையாக்குபவரான பரமன் ஆவேன். நீங்களே இப்பொழுது இறைபுத்தியை உடையவர்கள். நான் இப்பொழுது உங்களுக்கு கடவுளின் புத்தியிலுள்ள ஞானத்தைக் கொடுக்கின்றேன். சத்தியயுகத்தில் பக்திக்குரிய எதுவும் இருக்க மாட்டாது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அகநோக்கு உடையவராகி, உங்கள் ஸ்திதியை உறுதி ஆக்குங்கள். ‘நான் ஓர் ஆத்மா, நான் தந்தையின் செய்தியை எனது சகோதர ஆத்மாவிற்குக் கொடுக்கின்றேன்’ என்பதைப் பயிற்சி செய்யுங்கள். இவ்வாறாக ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு மறைமுகமாக முயற்சி செய்யுங்கள்.

2. ஆன்மீக சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்கள் ஆகுங்கள். பிறரை உங்களுக்குச் சமமாக ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். சில சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் தீயதாகும். ஆகையால் அதலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தவறான உணவையும் பானத்தையும் உட்கொள்கின்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உலகிற்கு ஆதார ரூபமாகி, சதா உலக நன்மை என்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பீர்களாக.

உலக உபகாரிக் குழந்தைகளால் அவர்களின் கனவுகளிலேனும் ஓய்வாக இருக்க முடியாது. இரவு பகலாகச் சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்களால் மட்டுமே தமது கனவுகளிலும் புதிய விடயங்களைக் காண முடியும். அவர்கள் சேவை செய்வதற்காக திட்டங்களையும் வழிமுறைகளையும் பார்க்கிறார்கள். சேவை செய்வதில் அவர்கள் மும்முரமாக இருப்பதனால் தமது சொந்த முயற்சிகளின் வீணானவற்றில் இருந்தும் அல்லது வேறு எவரின் வீணானவற்றில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். உலகிலுள்ள எல்லையற்ற ஆத்மாக்கள் சதா அவர்கள் முன்னால் வருவார்கள். அவர்களிடம் சிறிதளவேனும் கவனயீனம் இருக்க முடியாது. இத்தகைய சேவையாளர் குழந்தைகள் ஆதார ரூபங்களாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.

சுலோகம்:
சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் பல வருடங்களுக்குச் சமமானவை. அதனால் கவனயீனத்தால் நேரத்தை வீணாக்காதீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள். சர்வசக்திவான் தந்தையைத் தங்களுடன் ஒன்றிணைந்து வைத்திருப்பவர்கள், இயல்பாகவே தங்களுடன் சகல சக்திகளையும் கொண்டிருப்பார்கள். சகல சக்திகளும் இருக்கும் இடத்தில் வெற்றி ஏற்படாமல் விடுவது என்பது அசாத்தியமானது. லௌகீக வாழ்க்கையில் நீங்கள் நல்லதொரு சகபாடியைக் கண்டடைந்தால், நீங்கள் அவனை அல்லது அவளைக் கைவிட மாட்டீர்கள். இந்த ஒருவர் உங்களின் அநாதியான சகபாடி. அவர் உங்களை ஏமாற்றுகின்ற சகபாடி அல்ல. அவர் எப்போதும் தனது சகவாசத்தை நிறைவேற்றுகின்ற ஒரேயொருவர் ஆவார். அதனால் அவருடன் சதா இருங்கள்.