15.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இவ்வுலகம் ஓர் சுடுகாடு ஆகவுள்ளது. ஆகையால், உங்கள் இதயத்தில் அதன் மீது பற்று வைக்காதீர்கள். தேவதைகளின் பூமியை நினைவு செய்யுங்கள்.
கேள்வி:
ஏழைக் குழந்தைகளாகிய உங்களைப் போன்று பாக்கியசாலிகளாக உலகில் வேறு எவருமே இல்லாதிருப்பது ஏன்?பதில்:
ஏழைக் குழந்தைகளாகிய நீங்களே சற்கதி என்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்ற, நேரடிக் குழந்தைகளாகி விட்டீர்கள் என்பதாலாகும். ஏழைக் குழந்தைகளான நீங்கள் மாத்திரமே இதனைக் கற்கின்றார்கள். செல்வந்தர்கள் இதனைச் சிறிதளவு கற்றாலும் அவர்கள் தந்தையை அரிதாகவே நினைவு செய்கின்றார்கள். இறுதியில், நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்ய மாட்டீர்கள். ஆகையால், நீங்கள் அதிபாக்கியசாலிகள் ஆவீர்கள்.பாடல்:
இதயத்தின் ஆதாரம் துண்டிக்கப்படக் கூடாது.ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், இவ்வுலகம் உண்மையிலேயே சுடுகாடு ஆகவுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர், இந்த உலகம், தேவதைகளின் பூமியாக இருந்தது. அது இப்பொழுது பழையதாகி விட்டதால், சுடுகாடு என்று அழைக்கப்படுகின்றது. அனைவருமே இந்தச் சுடுகாட்டில் புதைக்கப்பட வேண்டும். பழையவை அனைத்தும் புதைக்கப்பட உள்ளன, அதாவது, அனைத்தும் தூசாக மாறவுள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும்; உலகம் இதனை அறியாது. இப்பொழுது இது அனைத்துமே புதைக்கப்பட வேண்டிய நேரம் என வெளிநாட்டிலுள்ள சிலர் அறிந்துள்ளார்கள். தேவதைகளின் பூமியை ஸ்தாபிக்கின்ற எங்கள் பாபா, மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தச் சுடுகாட்டின் மீது உங்கள் இதயத்தில் பற்றைக் கொண்டிருந்தால், இழப்பையே அனுபவம் செய்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் பெற்றுக் கொண்டதைப் போன்றே, இப்பொழுதும் எல்லையற்ற சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். ஒவ்வோர் அடியிலும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் இது நிலைத்திருக்க வேண்டும், ஏனெனில் இதுவே “மன்மனாபவ” ஆகும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதனால் மாத்திரமே உங்களால் தேவதைகளின் பூமியில் வசிப்பவர்களாக முடியும். பாரதமே தேவதைகளின் பூமியாக இருந்தது. வேறு எந்தத் தேசமும் தேவதைகளின் பூமி ஆகுவதில்லை. இதுவே இராவணனான, மாயையின் ஆடம்பரம் ஆகும். இவை அனைத்தும் இன்னமும் சிறிது காலத்திற்கே தொடரும். இது போலியான பகட்டாகும். மாயையும் பொய், சரீரங்களும் பொய்யானவை. இவை அனைத்தும் இறுதி நேரத்தின் பகட்டாகும். இவை அனைத்தையும் காணும்பொழுது, இப்பொழுது இதுவே சுவர்க்கம் என்றும், முன்னர் இது நரகமாக இருந்தது என்றும் மக்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பெரிய கட்டடங்களைக் கட்டுகின்றார்கள். இக்காட்சிகள் அனைத்தும் கடந்த 100 வருடங்களிலேயே இடம்பெற்றுள்ளன. தொலைபேசிகள், மின்சாரம், ஆகாய விமானங்கள் போன்ற அனைத்தும் கடந்த 100 வருடங்களிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதிகளவு பகட்டு காணப்படுகிறது! ஆகையாலேயே இது இப்பொழுது சுவர்க்கம் என அவர்கள் நினைக்கின்றார்கள். பழைய டெல்கி எவ்வாறு இருந்தது? அவர்கள் இப்பொழுது புதுடெல்கியை எவ்வாறு நன்றாகக் கட்டியுள்ளார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் அதற்கு ‘புதுடெல்கி’ என்றும் பெயரிட்டுள்ளார்கள். பாபு காந்திஜி தேவதைகளின் பூமியான, இராம இராச்சியமான, புதிய உலகை விரும்பினார். இது தற்காலிகமான பகட்டாகும். அவர்கள் மிகப் பெரிய கட்டடங்களையும், நீருற்றுக்கள் போன்றவற்றையும் கட்டுகின்றார்கள்! இது தற்காலிகமான போலியான சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இவ்விடம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இது நரகம் என்றே அழைக்கப்படுகின்றது. நரகத்தைப் பற்றிய ஒரு திரைப்படமும் உள்ளது. இது தற்காலிகமான பகட்டாகும். இது இப்பொழுது முடிவடைய உள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கூறுகின்றார்: முதலில், அமைதி தாமத்தை நினைவு செய்யுங்கள். மனிதர்கள் அனைவரும் அமைதியைத் தேடித் திரிகின்றார்கள். அவர்களால் எங்கு அமைதியைக் கண்டடைய முடியும்? முழு உலகத்தினரும் வினவுகின்றார்கள்: உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும்? நாங்கள் அனைவரும் உண்மையில் அமைதி தாமவாசிகளே என்பதை மனிதர்கள் அறியார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதி தாமத்தில் அமைதியாக இருக்கின்றோம். அதன்பின்னர் எங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கே வருகின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அமைதி தாமத்தின் வழியே சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அமைதி தாமமான, உங்கள் வீட்டிற்கு செல்வீர்கள் என்பது இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் உள்ளது. இங்கே அமைதி என்ற கேள்விக்கு இடமில்லை; இது துன்ப உலகமாகும். சத்தியயுகம் தூய உலகமாகும், கலியுகம் தூய்மையற்ற உலகமாகும். இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றிய புரிந்துணர்வைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றிருக்கின்றீர்கள். உலக மக்களுக்கு எதுவுமே தெரியாது. உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கூறுகின்றார் என்பது உங்கள் புத்தியில் பிரவேசித்துள்ளது. எவ்வாறு மதஸ்தாபகர்கள் வந்து சமயங்களை ஸ்தாபிக்கின்றார்கள் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது உலகில் பலர் வாழ்கின்றார்கள். பாரதத்தில் மாத்திரமே பல எண்ணிக்கையினர் உள்ளனர். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அது மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்ததுடன், அங்கு வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி ஊட்டப்படுகின்றீர்கள். தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! இது பக்தி மார்க்கத்திலும் தொடர்கின்றது; அவர்கள் கடவுளை நினைவு செய்வதற்கு, எப்பொழுதும் மேல் நோக்கி விரலைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். கடவுள் அல்லது அல்லா மேலேயே இருக்கின்றார் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவ்விதமாக அவரை நினைவு செய்வதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. நினைவு செய்வதனால் எவ்வாறு அவர்கள் நன்மை அடைவார்கள் என்பதையும் அவர்கள் அறியார்கள். அவருடன் தமக்குள்ள உறவுமுறையை அவர்கள் அறியாமல் உள்ளார்கள். துன்ப நேரத்தில், அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ இராமா! ஆத்மாக்களே நினைவு செய்கின்றனர். எவ்வாறாயினும் அமைதி அல்லது சந்தோஷம் என்றால் என்னவென்பதை அவர்கள் அறியாமல் உள்ளார்கள். நீங்கள் அனைவருமே ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பது உங்கள் புத்திகளில் இப்பொழுது பிரவேசித்துள்ளது. ஆகையால், ஏன் துன்பம் இருக்க வேண்டும்? எல்லையற்ற தந்தையிடம் இருந்து நிலையான சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற இருக்கின்றீர்கள். இது படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கடவுளே, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற, தந்தையான சுவர்க்கக் கடவுள் ஆவார். அவர் பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார், ஆனால் இதனை வேறு எவரும் புரிந்து கொள்வதில்லை. தேவ தர்மம் நிச்சயமாகச் சங்கம யுகத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அது எவ்வாறு சத்தியயுகத்தில் ஸ்தாபிக்கப்பட முடியும்? எவ்வாறாயினும், ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. ஆதிசனாதன தேவதேவிதா தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை ஞானம் நிறைந்த தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். சத்திய யுகத்தின் ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் கூறுவதனால், அவர்கள் அதனை மிகத் தொலைவிற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். படங்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அவர்கள் எவ்வாறு அல்லது எப்பொழுது தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. அவர்களே சத்திய யுகத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் என அவர்கள் வெறுமனே கூறுகின்றார்கள். மக்கள் அவர்களின் விக்கிரகங்களின் முன்னால் நின்று வேண்டுவதால், தற்காலிகமாகச் சிலவற்றைப் பெறுகின்றார்கள். தானதர்மம் செய்பவர்களும் புண்ணியங்கள் செய்பவர்களும் தற்காலிகமாக எதனையாவது பெறுகின்றார்கள். ஓர் ஏழைக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும் ஒரு செல்வந்தக் கிராமத்தின் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவரின் அளவிற்குச் சந்தோஷமாக இருப்பார். ஏழைகளும் தாங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவே கருதுகிறார்கள். பம்பாயில் ஏழை மக்கள் வாழும் இடங்களைப் பாருங்கள்! ஒருவர் எந்தளவிற்குப் பல மில்லியன்களை உடையவராக இருந்தாலும், அவர் சந்தோஷம் அற்றவராகவே உள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களைப் போன்று பாக்கியசாலிகள் வேறு எவரும் இல்லை என்றே நீங்கள் கூறுகின்றீர்கள். சற்கதி என்ற ஆஸ்தியை எங்களுக்குக் கொடுப்பவரின் நேரடிக் குழந்தைகளாக நாங்கள் ஆகியுள்ளோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். முக்கியஸ்தர்களால் ஒருபொழுதுமே உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. ஏழைகளே செல்வந்தர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள், ஆனால் அம்மக்கள் இந்த ஞானம் அற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிறிதளவு கற்பார்கள் ஆயினும், அவர்களால் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முடியாதுள்ளது. இறுதியில், நீங்கள் ஒரேயொரு தந்தையை அன்றி, வேறு எதனையுமே நினைவுசெய்ய மாட்டீர்கள். அனைத்தும் சுடுகாட்டில் புதைக்கப்பட உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது செய்கின்ற வியாபாரம் போன்றவை குறுகிய காலத்திற்கே நிலைத்திருக்கும் என்பது உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். செல்வந்தர்கள் தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். அவர்கள் அவற்றை வியாபார நோக்குடன் கட்டுவதில்லை. யாத்திரைத் தலங்களில் தர்மசாலைகள் இல்லாது விட்டால், மக்கள் எங்கே தங்குவார்கள்? ஆகையாலேயே செல்வந்தர்கள் தர்மசாலைகளைக் கட்டுகின்றார்கள். அவை வியாபாரிகள் சென்று வியாபாரம் செய்வதற்குரிய இடமல்ல. தர்மசாலைகள் யாத்திரைத் தலங்களில் கட்டப்படுகின்றன. உங்கள் நிலையமே மிகப்பெரிய யாத்திரைத் தலம் ஆகும். நீங்கள் எங்கெல்லாம் நிலையங்கள் வைத்திருக்கின்றீர்களோ, அவையே மக்கள் சென்று அமைதியையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய அனைத்திலும் மிகச்சிறந்த யாத்திரைத் தலங்கள் ஆகும். உங்களது இந்தக் கீதைப் பாடசாலை மிகப் பெரியது. இதுவே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம்; நீங்கள் இதனூடாகப் பெருமளவைச் சம்பாதிக்கலாம். இதுவும் குழந்தைகளாகிய உங்கள் யாத்திரைக்குரிய தர்மசாலை ஆகும். இதுவே மிகப் பெரிய யாத்திரைத் தலமாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இதனை விட மகத்தான யாத்திரைத் தலம் வேறு எதுவுமே இருக்க முடியாது. அந்த யாத்திரைகளில் செல்வதால் நீங்கள் எதனையுமே பெற முடியாது என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். பக்தர்கள் ஆலயங்களில் தீர்த்தத்தைப் பெருமளவு அன்புடன் பருகுகின்றார்கள். ஏனெனில் அதனை அருந்துவதால், தங்கள் இதயங்கள் சுத்தமாகும் என அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், அது வெறும் தண்ணீரே. இங்கே, தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து இந்த அழிவற்ற ஞான இரத்தினங்கள் எனும் பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். அமரத்துவ பிரபு பார்வதிக்கு ஒரு கதையைக் கூறினார் என்று எண்ணியே பொதுவாக மக்கள் சங்கரரிடம் செல்கின்றார்கள். ஆகையாலேயே அவர்கள் தமது புத்திகளை நிரப்புமாறு அவரைக் கேட்கின்றார்கள். நீங்கள் உங்கள் புத்திகளை இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றீர்கள். அமர்நாத் ஒரேயொருவருக்கு அமர்ந்திருந்து கதை சொல்வார் என்றில்லை. நிச்சயமாக அங்கே மேலும் அதிகளவினர் இருந்திருக்க வேண்டும், அத்துடன் அவர்கள் மரண பூமியிலேயே இருப்பார்கள். சூட்சும உலகில் ஒரு கதையைக் கூற வேண்டிய அவசியமில்லை. சாதுக்கள், புனிதர்கள் மற்றும் சந்நியாசிகள் போன்றோர் செல்வதற்குப் பல யாத்திரைத் தலங்களை அவர்கள் அமைத்துள்ளார்கள். அமர்நாத்திற்கு (அமரத்துவ பிரபுவிற்கான ஆலயம்) நூறாயிரக் கணக்கான மக்கள் செல்கின்றார்கள். கும்ப மேலாவே அதிகபட்ச மக்கள் செல்கின்ற இடமாகும். அங்கே தாங்கள் தூய்மை ஆகுவோம் என அவர்கள் நம்புவதால், அங்கு சென்று நீராடுகின்றார்கள். உண்மையில், இங்கேயே கும்பமேலா இடம்பெறுகின்றது. மக்கள் அந்த மேலாக்களுக்குப் பிறவிபிறவியாகச் செல்கின்றார்கள். ஆனால் பாபா கூறுகின்றார்: அதனைச் செய்வதன் மூலம் எவராலும் வீடு திரும்ப முடியாது, ஏனெனில் ஆத்மாக்கள் தூய்மையாகினால் மாத்திரமே அவர்களால் வீடு திரும்ப முடியும். தூய்மை அற்றவர்களாக இருப்பதனால், அனைவரது இறக்கைகளும் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஆத்மா இறக்கைகளைப் பெற்றுள்ளார். யோகத்தில் இருப்பதனால், ஆத்மாக்களினால் மிகவும் விரைவாகப் பறக்க முடியும். ஓர் ஆத்மாவிற்கு அமெரிக்காவில் அல்லது இலண்டனில் கர்மக் கணக்குகள் இருந்தால், அவர் மிக விரைவாக அங்கு பறந்து செல்வார். ஆத்மா ஒரு விநாடியில் அங்கு சென்றடைகின்றார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் கர்மாதீத் அடையும் பொழுதே, அவர்களினால் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியும். அதுவரையில், ஆத்மாக்கள் இங்கு பிறப்பு மறுபிறப்புச் சக்கரத்திற்குள் வர வேண்டும். நாடகம் தொடர்ந்தும் நகர்ந்து செல்வதைப் போன்று ஆத்மாக்களும் அவ்வாறே உள்ளார்கள்: அவர்கள் ஒரு விநாடியில் பறக்கின்றார்கள். ஓர் ஆத்மாவைப் போன்று விரைவானது வேறொன்றும் இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகிற்குச் செல்வார்கள். ஓர் ஆத்மாவிற்கு ஓரிடத்தில் இருந்து இன்னுமோர் இடத்திற்குச் செல்வதற்கு அதிகளவு நேரம் எடுக்க மாட்டாது. மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. நிச்சயமாக, புதிய உலகில் வெகு சில ஆத்மாக்களே இருப்பார்கள் என்பதும், அங்கே அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதும் குழந்தைகளான உங்கள் புத்திகளில் பிரவேசிக்கின்றன. 84 பிறவிகளை எடுத்த பின்னர் அந்த ஆத்மாக்கள் இப்பொழுது மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டார்கள். முழுச் சக்கரத்தைப் பற்றியும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். உங்கள் புத்திகள் இவ்விடயங்களையிட்டு வேலை செய்கின்றன. ஏனையோரின் புத்திகள் இவ்வாறு வேலை செய்வதில்லை. பிரஜாபிதா பிரம்மா நினைவு கூரப்பட்டுள்ளார். முன்னைய கல்பத்திலும் நீங்கள் பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் ஆகினீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். பாபா எங்கள் மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகத் தகுதியானவர்கள் ஆகும்பொழுது, பழைய உலகம் அழிக்கப்படும். இங்கேயே திரிமூர்த்தி நினைவு கூரப்படுகின்றார். அவர்களும் திரிமூர்த்தியின் படத்தை வைத்திருக்கின்றார்கள். அதில் சிவனின் உருவம் காட்டப்படவில்லை. ‘பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை’ எனக் கூறப்படுகின்றது. அதனை மேற்கொள்பவர் யார்? சிவபாபாவே! விஷ்ணுவினூடாகப் பராமரிப்பு நடைபெறுகின்றது. பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அப்பாகங்களை நடிக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் அவற்றை ஒரு சக்கரத்தின் பின்னர் மீண்டும்; நடிப்பீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபாவின் கட்டளைகள்: ‘காமம் என்ற எதிரியை வெற்றி கொள்ளுங்கள்! என்னை மாத்திரமே சதா நினைவு செய்யுங்கள்!’ இது மிகவும் இலகுவானது. பக்தி மார்க்கத்தில் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு துன்பத்தைப் பார்த்து விட்டீர்கள். சிறிதளவு சந்தோஷம் இருந்தாலும், அது தற்காலிகமானதாகவே இருந்தது. பக்தி மார்க்கத்தில் மக்கள் காட்சிகளைக் காண்கின்றார்கள். அவர்களின் ஆசைகள் தற்காலிகமாக நிறைவேற்றப்படுகின்றன. நீங்கள் கண்ட காட்சிகளை நானே அருள்கின்றேன். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும், அது விநாடிக்கு விநாடி நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது இப்பொழுதே பதிவு செய்யப்பட்டது என உங்களால் கூற முடியாது, இல்லை. இந்த நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டது. எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ, அவர்கள் ஒவ்வொருக்கும் அழியாததொரு பாகம் உள்ளது. எவராலும் அநாதியான முக்தியை அடைய முடியாது. சந்நியாசிகள் தாம் ஒளியுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள் எனக் கூறுகின்றார்கள். நீங்கள் அழியாத ஆத்மாக்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா ஒரு புள்ளியாவார். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா தனக்குள் 84 பிறவிகளின் பாகத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. முதன்முதலில் தமது பாகங்களை நடிப்பதற்கு வருபவர்களே, 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். அனைவராலும் அந்தளவு பிறவிகளை எடுக்க முடியாது. இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்களின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் எங்களுக்கு அமைதியும், சந்தோஷமும் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் துன்பம் என்பதன் பெயரோ அல்லது சுவடோ இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் நீடுழி வாழ்வீர்களாக! நீங்கள் செல்வந்தராக இருப்பீர்களாக! துறவறப் பாதையைச் சேர்ந்தவர்களால் அத்தகைய ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியாது. குழந்தைகளான நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சத்திய, திரேதா யுகங்கள் சந்தோஷ உலகமாகும். எவ்வாறு பின்னர் துன்பம் நிலவுகின்றது என்பது எவருக்கும் தெரியாது. தேவர்கள் எவ்வாறு பாவப் பாதைக்குச் செல்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. அவர்கள் ஜெகநாத்புரியில் கிரீடம் போன்றவற்றை உடைய தேவர்களின் விக்கிரகங்களைக் காட்டி உள்ளார்கள். ஆனால், அவலட்சணமான விக்கிரகங்களையும் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். ஆகையாலேயே அவர்கள் கருங்கற்களினால் அந்த விக்கிரகங்களை உருவாக்கினார்கள். அவை தேவர்கள் பாவப் பாதையில் சென்றதை நிரூபிக்கின்றன. இறுதியில் அவர்கள் அவ்வாறே முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆகினார்கள். எவ்வாறு நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, பாரதம் மிகவும் அழகாக இருந்தது எனவும், பின்னர் அது எவ்வாறு தமோபிரதானாக வேண்டியிருந்தது எனவும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையே ஞானம் நிறைந்தவர். அவரே உங்களுக்கு மூவராகவும் உள்ளார்: உங்கள் தந்தையும், ஆசிரியரும் குருவும் ஆவார். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் எப்பொழுதும் இருக்க வேண்டும். இது ஓர் எல்லையற்ற கல்வி, இதன் மூலம் நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாகி விட்டீர்கள்; உங்களுக்கு அனைத்துமே தெரியும். அவர் சர்வவியாபி என அம்மக்கள் கூறுகின்றார்கள். அவர் தூய்மையாக்குபவர் என நீங்கள் கூறுகின்றீர்கள். இதில் இரவிற்கும் பகலிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. நீங்கள் இப்பொழுது வரிசைக்கிரமமாக மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை தனக்குத் தெரிந்த அனைத்தையும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்களும் அனைவரிடமும் கூறுகின்றீர்கள்: தந்தையை நினைவு செய்தால், நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்களும் புத்துணர்ச்சி பெற்று, பிறரையும் புத்துணர்ச்சி அடையச் செய்வதற்கு, தந்தையினதும், ஆஸ்தியினதும் நினைவில் நிலைத்திருந்து, பிறருக்கும் நினைவூட்டுங்கள்.2. இந்தச் சுடுகாடான, இப்பழைய உலகின் மீது உங்கள் இதயத்தில் பற்றை வைக்காதீர்கள். அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். உங்களை ஒரு தேவர் ஆகுவதற்குத் தகுதியானவர் ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக, உங்களின் எண்ணங்களையும் புத்தியையும் உங்களின் கட்டளைகளின்படி நடக்கச் செய்து, அவற்றை உங்களின் ஆன்மீக அதிகாரத்துடன் பயன்படுத்துவீர்களாக.எப்படி நீங்கள் உங்களின் பௌதீகக் கைகளையும் பாதங்களையும் நீங்கள் விரும்பியபடி இலகுவாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வாறே, உங்களின் எண்ணங்களையும் உங்களின் புத்தியையும் நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களால் ஒருமுகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதுவே ஆன்மீக அதிகாரம் எனப்படுகிறது. எப்படி சத்தத்திற்குள் வருவது இலகுவாக இருக்கிறதோ, அவ்வாறே சத்தத்திற்கு அப்பால் செல்வதும் இலகுவாக இருக்க வேண்டும். இதைப் பயிற்சி செய்வதன் மூலம், உங்களால் காட்சிகளை அருளும் ரூபம் ஆகமுடியும். எனவே, இந்தப் பயிற்சியை இலகுவானதாகவும் நிலையாகவும் ஆக்குங்கள், நீங்கள் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் ஆதி ஸ்திதியானது சக்திவாய்ந்ததாக இருக்கும்போது, அதன் முன்னால் இக்கட்டான சூழ்நிலைகள் எதுவுமே இல்லை.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இந்த அச்சல்கார் (ஸ்திரமான இல்லம்) உங்களின் அசைக்க முடியாத ஸ்திதியின் ஞாபகார்த்தம் ஆகும். எப்படி பாப்தாதா நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறாரோ, அவ்வாறே, குழந்தைகளான நீங்களும் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் ஒரேயொருவரின் இனிமையில் மூழ்கி இருக்கும்போது, உங்களால் நிலையான, ஸ்திரமான ஸ்திதியை அடைய முடியும். ஒரு கேள்விக்குறி வளைந்து இருக்கும். உங்களிடம் இருந்து இந்தக் கேள்விக்குறியை நீக்கும்போது, உங்களால் நாடகத்தின் விதியில் சதா ஸ்திரமாக இருக்க முடியும்.