15.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மாயையை வென்றவர்கள் ஆகுவதற்கு, கவனயீனமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். துன்பத்தைக் கொடுப்பது அல்லது துன்பத்தைப் பெறுவது என்னும் மிகப்பெரிய தவறைக் குழந்தைகளாகிய நீங்கள் செய்யக்கூடாது.

பாடல்:
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்காக, எந்த ஒரு விருப்பத்தைக்; கொண்டிருக்கிறார்?

பதில்:
தனது குழந்தைகள் அனைவரும் தன்னைப் போன்று என்றும் தூய்மையானவர்களாக ஆகவேண்டும் என்பதே தந்தையின் விருப்பமாகும். தந்தை என்றும் அழகானவர். அவர், குழந்தைகளாகிய உங்களை அவலட்சணமானவர்களிலிருந்து, அழகர்னவர் ஆக்குவதற்காக வந்துள்ளார். மாயை உங்களை அவலட்சணமானவர் ஆக்குகிறாள், தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குகிறார். இலக்ஷ்மியும், நாராயணனும் அழகானவர்கள், இதனாலேயே அவலட்சணமான, தூய்மையற்ற மனிதர்கள் அவர்கள் முன்னே சென்று, அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் தங்களைச் சீரழிந்தவர்கள் எனக் கருதுகிறார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள்: இனிய குழந்தைகளே, நீங்கள் அழகானவர்களாகவும், சதோபிரதானாகவும் ஆகுவதற்கு இப்பொழுதே முயற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
தந்தை என்ன செய்கிறார்? குழந்தைகளாகிய நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானாக இருக்கிறீர்கள் என்பதையும், இப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும் என்பதையும் தந்தை அறிவார், குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். இதுவே சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. தந்தை ஆத்மாக்களாகிய உங்களைப் பார்க்கின்றார். ஆத்மாவின் எண்ணம்: ஆத்மாவாகிய நான் அவலட்சணமாகிவிட்டேன். ஆத்மா அவலட்சணமாக உள்ளதால், சரீரமும் அவலட்சணம் ஆகிவிட்டது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்குச் செல்கிறீர்கள். ஆனால் முன்னர் உங்களிடம் ஞானம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் (இலக்ஷ்மி நாராயணனின் விக்கிரகங்கள்) தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பதையும், நீங்கள் அவலட்சணமானவர்களாகவும், தீய ஆவிகளாகவும்; இருப்பதையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களிடம் எந்த ஞானமும் இருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும் போது, நீங்கள் அனைத்து தெய்வீகக்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது அவலட்சணமானவர்களாகவும், தூய்மையற்;றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு முன்னால் பாடினீர்கள்: நாங்கள் அவலட்சணமான, விகாரம் நிறைந்த பாவிகள். ஒரு தம்பதி திருமணம் செய்தபின்னர், இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இருவரும் முதலில் விகாரமற்று இருந்தார்கள், பின்னர் அவர்கள் விகாரமுள்ளவர்களாக ஆகுகிறார்கள். மக்கள் விகாரமற்ற தேவர்களின் முன்னிலையில் சென்று, தங்களை விகாரம் நிறைந்த தூய்மையற்றவர்கள் என்று அழைக்கிறார்கள். தாங்கள் திருமணம் செய்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை இவ்வாறு கூறுவதில்லை. மக்கள் விகாரத்தில் ஈடுபட்ட பின்னரே ஆலயத்திற்குச் சென்று, தேவர்களின் புகழைப் பாடுகிறார்கள். இந்நாட்களில்;, மக்கள் சிவாலயத்திலும், இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திலும் கூட திருமண வைபவங்களை நடத்துகிறார்கள். அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுவதற்கு ஒரு காப்பைக் கட்டுகிறார்கள். நீங்கள் இப்பொழுது அழகானவர்கள் ஆகுவதற்கு ஒரு காப்பைக் கட்டுகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் உங்களை அழகானவர் ஆக்குகின்ற சிவபாபாவை நினைவு செய்கிறீர்கள். சிவபாபா இந்த இரதத்தின் நெற்றியின் மத்தியில் அமர்ந்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும்;. அவர் என்றென்றும் தூய்மையானவர். குழந்தைகளும் தூய்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும் ஆகவேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்து, தூய்மையானவர்கள் ஆகுங்கள். ஆத்மா தந்தையை நினைவு செய்யவேண்டும். குழந்தைகளைக் காண்பதில் தந்தையும் பூரிப்படைகிறார். தந்தையைப் பார்ப்பதனால், நீங்களும் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகுவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த இலக்கையும், குறிக்கோளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் பாபாவிடம் வந்துள்ளீர்கள், திரும்பிச் சென்றபின்னர் உங்கள் சொந்தத் தொழில்களில் ஈடுபட முடியும் என்று வெறுமனே எண்ணாதீர்கள். ஆகவே, தந்தை இங்கு குழந்தைகளாகிய உங்கள் முன்னே நேரடியாக அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மா நெற்றியின் மத்தியில் வசிக்;கிறார். இதுவே அமரத்துவமான ஆத்மாவின் சிம்மாசனமாகும். எனது குழந்தைகளாகிய ஆத்மாக்கள் நெற்றியில் அமர்ந்திருக்கிறார்கள். ஓர் ஆத்மா தமோபிரதானாக உள்ளதால், அவரது சிம்மாசனமும் தமோபிரதானாக உள்ளது. இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகுவது, உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போலல்ல! இப்பொழுது நீங்கள் அவர்களைப் போன்று ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தூய்மையானவர்கள் ஆகியதும், ஆத்மாக்களாகிய நீங்கள் திரும்பிச் செல்வீர்கள், பின்னர் நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். நாங்கள், அவ்வாறானதோர் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆகுகின்றோம். ஆனால், மாயை உங்களை மறக்கச் செய்கின்ற அத்தகையவள். சிலர் இங்கு ஞானத்தைச் செவிமடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே செல்லும்பொழுது, அதனை மறந்துவிடுகிறார்கள். இதனாலேயே பாபா இதனை நீங்கள் உறுதியாக்க வேண்டுகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை சோதித்துப் பார்க்க வேண்டும்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், இத் தேவர்கள் பெற்ற தெய்வீகக்குணங்களை நான் கிரகித்துக் கொண்டேனா? படம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் அவர்கள் போன்று ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை அவர்களைப் போன்று ஆக்குகிறார். வேறு எவராலும் உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்ற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை அவர்களைப் போன்று ஆக்குகிறார். பாடப்பட்டுள்ளது: மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. உங்களுக்கும் இது வரிசைக்கிரமமாகத் தெரியும். பக்தர்களுக்கு இவ் விடயங்கள் தெரியாது. அவர்கள் கடவுளின் ஸ்ரீமத்தைப் பெறுகின்ற வரை அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். இதனை உங்கள் புத்தியில் மிகவும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்: பாபாவின் ஸ்ரீமத்தின்படி பாபாவை நினைவுசெய்வதனால், நாங்கள் இவ்வாறு ஆகுகிறோம். நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்; வேறெந்த வழிமுறையும் இல்லை. இலக்ஷ்மியும், நாராயணனும் அழகானவர்களாக இருந்தார்கள், ஆனால் ஆலயங்களில் அவர்கள் அவலட்சணமானவர்களாகவே காட்டப்பட்டுள்ளனர். ரகுநாதர் ஆலயத்தில் அவர்கள் இராமரை அவலட்சணமானவராகக் காட்டியுள்ளார்கள். ஏன்? எவருக்கும் தெரியாது. இது மிகச் சிறிய விடயமாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆரம்பத்தில், அவர்கள் சதோபிரதானாகவும், அழகானவர்களாகவும் இருந்தார்கள். பிரஜைகள்கூட சதோபிரதானாக இருந்தார்கள், ஆனால், தண்டனையை அனுபவம் செய்தபின்னரே அவர்கள் அவ்வாறு ஆகினார்கள். தண்டனை அதிகமாக இருக்கும்பொழுது, அந்தஸ்தும் குறைவாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யாது விட்டால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அத்துடன் உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். தந்தை அனைத்தையும் மிகத்தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அழகானவர்கள் ஆகுவதற்காக இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், மாயையே உங்களை அவலட்சணமானவர்கள் ஆக்குகின்ற கொடிய எதிரியாவாள். உங்களை அழகானவர்கள் ஆக்குகின்ற தந்தை வந்திருக்கிறார் என்பதை மாயை காண்பதால், அவள் எதிர்ப்பை உண்டாக்குகிறாள். தந்தை கூறுகிறார்: நாடகத்திற்கேற்ப, அவள் தனது பாகத்தை அரைக் கல்பத்திற்கு நடிக்கவேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்கள் முகத்தைத் திருப்பி, உங்களை வேறு திசைக்கு இட்டுச் செல்கிறாள். சிலர் எழுதுகிறார்கள்: பாபா, மாயை எனக்குப் பெருமளவு தொந்தரவு கொடுக்கிறாள். பாபா கூறுகிறார்: இது ஒரு யுத்தம். நீங்கள் அழகானவர்களிலிருந்து, அவலட்சணமானவர்களாகி, அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்கள் ஆகுகிறீர்கள்: இது ஒரு நாடகமாகும். 84 பிறவிகளை முழுமையாக எடுத்தவர்களுக்கு அவர் விளங்கப்படுத்துகிறார். அவர்கள் மாத்திரமே பாரதத்தில் காலடி எடுத்து வைப்பார்கள். பாரதத்தில் உள்ள அனைவரும் 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள் என்றில்லை. குழந்தைகளாகிய உங்களின் இந்த நேரமானது மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். நீங்கள் அவர்களைக் போன்று ஆகுவதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும். தந்தை நிச்சயமாகக் கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவு செய்வதுடன், தெய்வீக குணங்களையும் கிரகித்துக் கொள்ளுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, கவனயீனம் ஆகாதீர்கள். உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் இணைக்கப்பட்டிருக்கட்டும். நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்கள்: நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். நீங்கள் பிறவிபிறவியாக இந்தச் சத்தியத்தைச் செய்திருக்கிறீர்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் உங்கள் வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுவோம். நாங்கள் தூய்மையானவர்களாகி, பின்னர் தேவர்கள் ஆகுவோம். உங்கள் கணவனோ அல்லது மனைவியோ உங்களுடன் ஒத்துழைக்காது விட்டால், நீங்கள் உங்கள் சொந்த முயற்சியைச் செய்ய முடியும். உங்களுடைய கணவனோ அல்லது மனைவியோ உங்களுடன் வராதுவிட்டால், நீங்கள் ஒரு தம்பதியாக அங்கிருக்கமாட்டீர்கள். எவ்வளவுக்கு அதிகமாக நீங்கள் நினைவு செய்தீர்களோ, எவ்வளவுக்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்தீர்களோ, அதற்கேற்ப தம்பதிகள் உருவாகுவார்கள். உதாரணத்திற்கு, பிரம்மாவும், சரஸ்வதியும் மிகவும் நன்றாக முயற்சி செய்ததால், அவர்கள் தம்பதிகள் ஆகுகிறார்கள். அவர்கள் மிக நல்ல சேவை செய்து, நினைவில் நிலைத்திருந்தார்கள். அதுவும் ஒரு நற்குணமாகும். கோபியரின் (சகோதரர்கள்) மத்தியிலும் மிகச்சிறந்த குழந்தைகள் இருக்கிறார்கள். தாங்கள் மாயையினால் கவரப்படுவதாகச் சில குழந்தைகள் தாங்களாகவே புரிந்துகொள்கிறார்கள். அந்தச் சங்கிலிகள் உடைவதில்லை. அவை உங்களை மீண்டும் மீண்டும் பெயரிலும் ரூபத்திலும் சிக்க வைக்கின்றன. தந்தை கூறுகிறார்: பெயரிலும் ரூபத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். என்னிடம் சிக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு அசரீரியானவர்களோ, நானும் அசரீரியானவரே. நான் உங்களையும் என்னைப் போன்று ஆக்குகிறேன். ஓர் ஆசிரியர் உங்களைத் தன்னைப் போன்று ஆக்குவார். ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் உங்களைச் சத்திரசிகிச்சை நிபுணராக ஆக்குவார். அவர் எல்லையற்ற தந்தையாவார், அவருடைய பெயர் போற்றப்படுகிறது. மக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆத்மாக்கள் சரீரத்தின் மூலம் கூவி அழைக்கிறார்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குங்கள்! அவர் உங்களை எவ்வாறு தூய்மையானவர்கள் ஆக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். சில வைரங்களிலும் சில குறைகள் உள்ளன. இப்பொழுது ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. அது அகற்றப்பட்டு, ஆத்மாக்கள் நிஜத் தங்கங்கள் ஆக்கப்படுகிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். உங்கள் இலக்கும், குறிக்கோளும் தெளிவாக உள்ளன. வேறெந்த ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் இது ஒருபொழுதும் கூறப்பட மாட்டாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் இலக்கு இவ்வாறு ஆகுவதாகும். நாடகத்திற்;கேற்ப, இராவணனின் சகவாசத்தில் நீங்கள் அரைக் கல்பத்திற்கு விகாரமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பட்ஜ் உள்ளது. அந்த பட்ஜைப் பயன்படுத்தி, விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும்: இதுவே திருமூர்த்தி. பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுகிறது. ஆனால் பிரம்மா அதனைச் செய்வதில்லை. அவர் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுகிறார். இத் தூய்மையற்றவர் பின்னர் தூய்மையானவர் ஆகுகிறார் என்பது மக்களுக்குத் தெரியாது. உங்கள் கல்வியின் இலக்கு உயர்வானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை வருகிறார். பாபாவிடம் ஞானம் உள்ளது, ஆனால் அவர் இதனை எவரிடமிருந்தும் கற்கவில்லை. நாடகத் திட்டத்திற்கேற்ப, அவரிடம் ஞானம் உள்ளது. நீங்கள் கேட்கமுடியாது: அவர் எங்கிருந்து ஞானத்தைப் பெற்றார்? இல்லை. அவர் ஞானம் நிறைந்தவர். அவர் மாத்திரமே உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆக்குகிறார். மக்கள், தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆகுவதற்காக, கங்கைக்கு நீராடச் செல்கிறார்கள். அவர்கள் கடலிலும் நீராடுகிறார்;கள். பின்னர் அவர்கள் கடலை ஒரு தேவராகக் கருதி, வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். உண்மையில், ஆறுகள் எப்பொழுதும் பாய்கின்றன. அவை ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முன்னர் அவை கட்டுப்பாட்டுக்குள் இருந்தன் வெள்ளப்பெருக்கு போன்ற எக்குறிப்பும் இருக்கவில்லை. மக்கள் ஒருபொழுதும் அவற்றுள் மூழ்குவதுமில்லை. அங்கு மிகச்சில மனிதர்களே இருக்கிறார்கள். பின்னர் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. கலியுகத்தின் இறுதியில் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அங்கு மக்களின் ஆயுட்காலம் மிகவும் நீண்டதாகும். அங்கும் வெகு சில மக்களே இருப்பார்கள். பின்னர், 2500 ஆண்டுகளில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. விருட்சம் அதிகளவு வளர்கிறது. எல்லாவற்றுக்கும் முதலில் பாரதத்தில் எங்கள் இராச்சியமே இருந்தது. உங்களிற் சிலரும், நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதை நினைவுகூருவதாகக் கூறுவீ;ர்கள். நாங்கள் யோக சக்தியுடைய, ஆன்மீகப் போர்வீர்கள். அவர்கள் இதனையும் மறந்துவிடுகிறார்கள். நாங்களே மாயையுடன் யுத்தம் புரிபவர்கள். இந்த இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள், எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவு அதிகமாக நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள். அவர்களைப் போன்று ஆகுவதே, உங்கள் இலக்கும், குறிக்கோளுமாகும். பாபா இவர் மூலம் உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். ஆகவே, நீங்கள் என்ன செய்யவேண்டும்? நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இவரே இடையிலுள்ள முகவராவார். நீங்கள் சற்குருவை ஒரு முகவரின் வடிவத்திலேயே இனங்கண்டீர்கள் என நினைவுகூரப்படுகிறது. பாபா இச் சரீரத்தைப் பெறும் பொழுது, இவரே இடையிலுள்ள முகவராவார். அதன்பின்னர் நீங்கள் சிவபாபாவுடன் யோகம் செய்யவதற்கு அவர் உதவுகிறார். எவ்வாறாயினும், நிச்சயார்த்தம் போன்றவை பற்றி எதுவும் குறிப்பிடாதீர்கள். சிவபாபா இவர் மூலம் ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் கூற மாட்டீர்கள்: உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையின் ஞானத்தைக் கூறுவீர்கள்: ~~இதனையே பாபா கூறுகிறார்|| தந்தையும் இதனை உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, உங்களிற் பலர் காட்சிகளைக் காண்பதுடன், உங்கள் மனச்சாட்சியும் தொடர்ந்தும் உங்களை உறுத்தும். தந்தை கூறுகிறார்: மிகச்சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. அக் கண்களால் நீங்கள் விநாசத்தைக் காண்பீர்கள். ஒத்திகைகள் இடம்பெறும் பொழுது, அவ்வாறே விநாசம் இடம்பெறும் என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அந்தக் கண்களால்; ஏராளமானவற்றைப் பார்ப்பீர்கள். பலருக்கு வைகுந்தத்தின் காட்சிகள் கிடைக்கும். இவை அனைத்தும் மிக விரைவில் தொடர்ந்து இடம்பெறும். ஞான மார்க்கத்தில், அனைத்தும் உண்மையே. பக்தி மார்க்கத்தில், அனைத்தும் போலியானவை. அவர்கள் காட்சிகளைக் காண்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு ஆகமாட்டார்கள், ஆனால் நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் என்ன காட்சிகளைக் கண்டீர்களோ, அவற்றை நீங்கள் அந்தக் கண்களால் காண்பீர்கள். விநாசத்தைக் காண்பது உங்கள் மாமியார் வீட்டிற்குப் போவது போலல்ல, கேட்கவே வேண்டாம்! மக்கள் ஒருவருக்கு முன் ஒருவர், மற்றவர்களைக் கொல்கிறார்கள். இரண்டு கரங்களும் சேர்ந்தால் மாத்திரமே ஓசை எழுப்ப முடியும் (இரு பக்கங்களும்). அவர்கள் இரு சகோதார்களைப் பிரித்து, பின்னர் அவர்கள் இருவரையும் சண்டையிடச் செய்கிறார்கள். இதுவும் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த இரகசியங்களைப் புரிந்துகொள்வதில்லை. இருவரையும் பிரிப்பதனால், அவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தங்களுக்குள்ளே சண்டையிடச் செய்கிறார்கள், இவ்வாறே அவர்கள் தொடர்ந்தும் ஆயுதங்களை அவர்களுக்கு விற்று, ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். எவ்வாறாயினும், இறுதியில், அதன் மூலம் எதுவும் இடம்பெறாது. வீட்டில் இருந்தவாறே, அவர்கள் குண்டுகளை வீசுவார்கள், அனைத்தும் அழிக்கப்படும். பின்னர் மனிதர்களோ அல்லது ஆயுதங்களோ தேவைப்படாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, ஸ்தாபனை நிச்சயம் இடம்பெறும். நீங்கள் அதிகளவு முயற்சி செய்தால், உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் கூறுகிறார்: குழந்தைகளே, இக் காமம் என்ற வாளைப் பயன்படுத்தாதீர்கள். காமத்தை வெல்வதனால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். இறுதியில், அம்பு நிச்சயமாக எவரையாவது தைக்கும் அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நேரம் அதிபெறுமதிவாய்ந்ததாகும். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்வதுடன் உங்களை முழுமையாகத் தந்தைக்கு அர்ப்பணம் செய்யவும் வேண்டும். தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்விதமான தவறுகளையும் செய்யக்கூடாது. ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்

2. உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் உங்கள் முன்னே வைத்திருந்து, மிகவும் எச்சரிக்கையுடன் தொடர்ந்தும் முன்னேறுங்கள். ஆத்மாவைத் தூய்iமாயானவராகவும், சதோபிரதானாகவும் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்குள்ளே என்ன குறைகள் உள்ளன என்று சோதித்துப் பார்த்து, அவற்றை அகற்றிவிடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் முற்றிலும் தூய ஆத்மாவாகுவதனால், பிராமண வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் சந்தோஷ ஸ்திதியாக அனுபவம் செய்வீர்களாக.

தூய்மை சந்தோஷத்தினதும் அமைதியினதும் தாய் எனப்படுகி;ன்றது. எந்தவொரு தூய்மையின்மையும் உங்களுக்கு துன்பத்தையும் அமைதியின்மையையும் கொடுக்கின்றது. பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வொரு விநாடியும் சந்தோஷ ஸ்திதியில் நிலைத்திருப்பதாகும். துன்பகரமான காட்சி இருப்பினும், உங்களிடம் தூய்மையின் சக்தி இருக்கும் போது, எந்தவொரு துன்ப அனுபவங்களும் இருக்க மாட்டாது. தூய ஆத்மாக்கள் மாஸ்டர் சந்தோஷத்தை அருள்பவர்களாகி, துன்பகரமான சூழலையும் ஆன்மிக சந்தோஷமானதாக மாற்றுகின்றார்கள்.

சுலோகம்:
வசதிகளினால் பரிசோதனை செய்வதன் மூலம் உங்களுடைய ஆன்மிக முயற்சியை அதிகரிப்பதே எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தை கொண்டிருப்பதாகும்.