15.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது இங்கே உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காகக் கற்று முட்களிலிருந்து நறுமணம்மிக்க மலர்களாக மாறவேண்டும். தெய்வீகக் குணங்களைக் கிரகித்து ஏனையோரையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள்.
கேள்வி:
எக் குழந்தைகளின் புத்திகளின் பூட்டுக்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகத் திறக்கப்படுகின்றன?பதில்:
தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி தூய்மையாக்குபவரான தந்தையின் நினைவில் நிலைத்திருப்பவர்கள். எவருடைய யோகம் தங்களுக்குக் கற்பிப்பவருடன் இணைக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களின் புத்திகளின் பூட்டுக்கள் தொடர்ந்தும் திறக்கப்படுகின்றன. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களான சகோதரர்கள் எனக் கருதும் பயிற்சியை செய்து தந்தை கூறுவதைச் செவிமடுங்கள். ஆத்ம உணர்வு நிலையிலிருந்து கேட்டு மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள், உங்களின் பூட்டுக்கள் தொடர்ந்தும் திறக்கப்படும்.ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது நீங்கள் வெறுமனே சிவபாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும் என்றில்லை. அதில் அமைதி மாத்திரமே இருக்கும், ஆனால் உங்களுக்குச் சந்தோஷமும் தேவை. நீங்கள் அமைதியாகவும் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி உங்கள் இராச்சியத்தையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு அதாவது, மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இங்கு ஒருவர் எத்தனை தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தாலும் அவரைத் தேவர் என அழைக்க முடியாது. சுவர்க்கத்தில் மாத்திரமே தேவர்கள் இருக்கின்றார்கள். உலக மக்கள் சுவர்க்கத்தைப் பற்றி அறியார்கள். புதிய உலகம் சுவர்க்கம் எனவும் பழைய உலகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரத மக்களாகிய உங்களால் மாத்திரமே இதனை அறிய முடியும். சத்தியயுகத்தில் ஆட்சிசெய்த தேவர்களின் விக்கிரகங்கள் பாரதத்தில் மாத்திரமே இருக்கின்றன. அவை ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவை. அந்த விக்கிரகங்கள் பூஜிப்பதற்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற இடங்களில் எல்லாம் அவர்களுடைய ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். ஏனைய சமயத்தவர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் தங்களது சொந்தச் சமயத்தின் விக்கிரகங்களையே பூஜிக்கிறார்கள். அவர்கள் வென்றெடுக்கும் நகரங்களில் தேவாலயங்களைக் கட்டுகின்றார்கள். ஒவ்வொரு சமயமும் அவர்கள் பூஜிப்பதற்குப் பயன்படுத்துகின்ற சொந்த விக்கிரகங்களைக் கொண்டிருக்கின்றது. முன்னர் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் உங்களை அவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என நினைத்து அவர்களைப் பூஜித்தீர்கள். ஏனைய சமயத்தவர்கள் தங்கள் சமய ஸ்தாபகர்களைத் தாங்கள் பூஜிப்பதை அறிவார்கள்: அது கிறிஸ்துவாக இருந்தால் “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று அவர்கள் கூறுகின்றார்கள் அல்லது “நாங்கள் பௌத்தர்கள்” என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் இந்துக்கள் தங்களது சொந்தச் சமயத்தை அறியாததால் தங்களை இந்துக்கள் என அழைத்து தேவர்களைப் பூஜிக்கின்றார்கள். தாங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள் என்பதையும் தாங்கள் தங்களுடைய சொந்த மூதாதையரையே பூஜிக்கிறோம் என்பதையும் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மாத்திரம் வழிபடுகின்றார்கள். பாரதமக்கள் அவர்களுடைய தர்மம் என்ன, யார் அதை எப்பொழுது ஸ்தாபித்தார் என்பதை அறியாமல் உள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: பாரதத்தின் ஆதிசனாதன தேவிதேவதமா தர்மம் மறைகின்ற பொழுது நான் மீண்டும் ஒரு தடவை வந்து அதை ஸ்தாபிக்கின்றேன். குழந்தைகளாகிய உங்களின் புத்திகளிலே இப்பொழுது இந்த ஞானம் உள்ளது. முன்னர் நீங்களும் எதையும் அறிந்திருக்கவில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அந்த விக்கிரகங்களை அவற்றைப் பற்றி எதையும் அறியாமலே தொடர்ந்தும் பூஜித்தீர்கள். நீங்கள் இப்பொழுது பக்திமார்க்கத்தில் இல்லை என்பதை அறிவீர்கள். இப்பொழுது பிராமண குலத்தின் அலங்காரங்களான உங்களுக்கும் சூத்திர குலத்தவருக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையேயுள்ள வேறுபாடு இருக்கின்றது. இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதைப் பற்றிப் புரிந்து கொள்கிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இதை அறிய மாட்டீர்கள். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதைப் பற்றிப் புரிந்துணர்வைப் பெறுகிறீர்கள். தந்தை ஆத்மாக்களுக்கே புரிந்துணர்வைக் கொடுக்கின்றார். பழைய உலகம், புதிய உலகம் பற்றி பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். பழைய உலகில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள். இங்கே மனிதர்கள் அதிகளவு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள்; இது முட்காடாகும். நீங்களும் முட்களாகவே இருந்தீர்கள் என்பதை அறிவீர்கள். பாபா இப்பொழுது உங்களை மலர்கள் ஆக்குகின்றார். முட்கள் இந்த நறுமணம்மிக்க மலர்களுக்குத் தலை வணங்குகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது நறுமணம்மிக்க மலர்களாக (பிராமணர்கள்) ஆகியுள்ள அந்தத் தேவர்கள் நாங்களே ஆவோம். இது ஒரு நாடகம் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். முன்னர் நாடகங்களோ அல்லது திரைப்படங்களோ இருக்கவில்லை. அவை சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஏன் கண்டு பிடிக்கப்பட்டன? ஏனெனில் தந்தை இலகுவாக உதாரணங்களைக் கொடுப்பதற்காகவே. குழந்தைகளாகிய உங்களாலும் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். சில குழந்தைகளும் விஞ்ஞானத்தைக் கற்கவேண்டி உள்ளது. அவர்களின் புத்திகள் விஞ்ஞானத்தின் சம்ஸ்காரங்கள் அனைத்தையும் தங்களுடன் அங்கு எடுத்துச் செல்லும். அவை அங்கு பயன்படும். உலகம் முழுமையாக அழிக்கப்பட மாட்டாது. அவர்கள் அந்தச் சம்ஸ்காரங்களை தங்களுடன் எடுத்துச் சென்று அங்கே பிறவி எடுப்பார்கள். ஆகாய விமானங்கள் போன்றவையும் அங்கே உருவாக்கப்படும். அந்த இடத்திற்குத் தகுதியான பயனுள்ள பொருட்கள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது கப்பல்களை உருவாக்குபவர்கள் உள்ளார்கள். ஆனால் அத்தகைய கப்பல்களால் அங்கே எந்தப் பயனும் இல்லை. அவர்கள் இந்த ஞானத்தை எடுக்கின்றார்களோ இல்லையோ அவர்களுடைய அந்தச் சம்ஸ்காரத்தினால் அங்கே எந்தப் பலனும் இருக்கமாட்டாது. அங்கே கப்பல்களுக்குத் தேவை இருக்கமாட்டாது. அது நாடகத்தில் இல்லை. ஆம், ஆகாயவிமானங்களும் மின்சாரம் போன்றவையும் தேவைப்படும். அவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் கண்டுபிடிக்கப்படும். அங்கே (வெளிநாடுகளில்) இருந்து அந்த விடயங்களைக் கற்றுவிட்டு குழந்தைகள் இங்கே வருகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்திகளில் வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். பாபா இப்பொழுது எங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக எங்களுக்குக் கற்பிக்கின்றார். நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்காகத் தூய்மை ஆகுகின்றோம். முன்னர் நாங்கள் நரகவாசிகளாக இருந்தோம். மக்கள் இன்ன இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் தங்களை நரகவாசிகளாகக் கருதுவதில்லை. அவர்களுடைய புத்திகளில் உள்ள பூட்டுக்கள் திறப்பதில்லை. குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ள பூட்டுக்கள் இப்பொழுது சிறிதுசிறிதாக வரிசைக்கிரமமாகத் திறக்கின்றன. தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்பவர்களின் பூட்டுக்கள் படிப்படியாக திறக்கின்றன. தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதுடன் நினைவு செய்வதற்கும் கற்பிக்கின்றார். அவரே ஆசிரியர். எனவே ஆசிரியர் நிச்சயமாக உங்களுக்குக் கற்பிப்பார். நீங்கள் ஆசிரியருடன் அதிகளவு யோகம் செய்து நன்றாகக் கற்றால் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். ஏனைய கல்விகளில் எது எப்படியிருப்பினும் நீங்கள் கற்கின்ற கல்வியுடன் யோகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு சட்டநிபுணர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கே தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது புதிய விடயம் ஆகையால் நீங்கள் இன்னமும் இதை மறந்து விடுகின்றீர்கள். உங்கள் சரீரங்களை நினைவுசெய்வது மிக இலகுவானது. நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் சரீரங்களை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை மறந்து விடுகின்றீர்கள். தந்தை இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். தான் பரமாத்மா எனத் தந்தை அறிவார். உங்களை ஆத்மாக்களாகக் கருதும்படியும் பிறரையும் ஆத்மாக்களாகக் கருதியவாறு அவர்களுக்குக் கற்பிக்கும்படியும் அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் அவர்களுடைய செவிகளின் மூலம் செவிமடுக்கின்றார்கள். பரமதந்தை, பரமாத்மாவே இந்த ஞானத்தைப் பேசுகின்றார். அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் பொழுது ஆத்மாவாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதுடன் அதை ஆத்மாக்களுக்கே விளங்கப்படுத்துகிறீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்து கொள்ளவும் வேண்டும்: நான் பாபாவிடம் இருந்து கேட்டவற்றை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றேன். இது முற்றிலும் புதியதொன்றாகும். நீங்கள் பிறருக்குக் கற்பிக்கும் பொழுது அவர்களுக்கு ஆத்ம உணர்விலிருந்து கற்பிப்பதில்லை, நீங்கள் இதை மறந்து விடுகின்றீர்கள். இதுவே உங்கள் இலக்காகும். உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும்: ஆத்மாவாகிய நான், அழிவற்றவர். ஆத்மாவாகிய நான் எனது பௌதீக அங்கங்கள் மூலம் எனது பாகத்தை நடிக்கின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் சூத்திர குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பிராமண குலத்தில் இருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் தேவ குலத்திற்குள் செல்வீர்கள். அங்கே நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் சகோதரர்கள் என்றும் நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்குக் கற்பிக்கின்றீர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். ஆத்மாக்களுக்கே அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகின்றது. ஆத்மாக்கள் சரீரங்களின் மூலம் செவிமடுக்கின்றார்கள். இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். அந்த உணர்வு நிலைத்திருப்பதில்லை. நீங்கள் அரைக் கல்பமாகச் சரீர உணர்வில் இருந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையுடன் இங்கே அமர்ந்திருங்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையுடன் செவிமடுங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை இந்த ஞானத்தை உங்களுடன் பேசுகின்றார். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள். அங்கே நான் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. நான் உங்களுக்குக் கற்பிப்பதற்கு இங்கே வரவேண்டும். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் தங்களது சொந்த சரீரங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தந்தையே பரமாத்மா. அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. அந்த ஆத்மா சிவன் என அழைக்கப்படுகின்றார். இந்த சரீரம் எனக்கு உரியதல்ல என நீங்கள் அறிவீர்கள். நான் பரமாத்மா. எனது புகழ் வேறுபட்டது. ஒவ்வொருவரின் புகழும் தனிப்பட்டது. “பரமாத்மாவாகிய பரமதந்தை, பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார்” என்ற புகழ் உள்ளது. அவர் ஞானக்கடலும் மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். அவரே சத்தியமானவரும் உயிருள்ளவரும் பேரானந்தக்கடலும் அமைதிக்கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். இது தந்தையின் புகழாகும். குழந்தைகள் அவர்களுடைய (லௌகீகத்) தந்தையின் சொத்தை அறிந்துள்ளனர். அவர்களுடைய தந்தை இன்ன இன்ன தொழிற்சாலைக்கோ அல்லது ஆலை போன்றவற்றிற்கோ உரிமையாளர் என்ற போதை அவர்களுக்கு இருக்கின்றது. குழந்தைகளே அந்தச் சொத்துகளுக்கு அதிபதி ஆகுபவர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே இந்தச் சொத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையிடம் உள்ள சொத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆத்மாக்களாகிய நீங்கள் அமரத்துவமானவர்கள். நீங்கள் ஒருபொழுதும் மரணத்தை அனுபவம் செய்வதில்லை. நீங்களும் அன்புக்கடல்கள் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணனும் அன்புக்கடல்கள் ஆவார்கள். அவர்கள் ஒருபொழுதும் சண்டை சச்சரவு செய்வதில்லை. இங்கே மக்கள் அதிகளவு சண்டை சச்சரவு செய்கிறார்கள். அன்பு காரணமாக அதிகச் சிக்கல்களும் உள்ளன. தந்தை விகாரங்களுக்கு முடிவுகட்ட வந்துள்ளார். இதனாலேயே அதிகளவு வன்முறை இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மை ஆகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். காமமே கொடிய எதிரி. இதனாலேயே நீங்கள் பாபாவிடம் வரும்பொழுது உங்களுக்கு கூறப்படுகிறது: இந்தப் பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்களைப் பற்றி பாபாவிடம் கூறுங்கள், உங்கள் பாவச்சுமை இலேசாக்கப்படும். இதிலும் பிரதான விடயம் காமம் பற்றியதாகும். தந்தை உங்களின் சொந்த நன்மைக்காகவே அவரிடம் இதைக் கூறுமாறு குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கின்றார். விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மையற்றவர்கள் எனக் கூறப்படுவதனால் அவர்கள் தூய்மை ஆக்குபவரை அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! இந்த உலகம் தூய்மை அற்றது. மனிதர்களும் தூய்மை அற்றவர்கள். பஞ்ச தத்துவங்களும் தூய்மை அற்றவையே. அங்கே உள்ள பஞ்சதத்துவங்களும் உங்களுக்காகத் தூய்மை ஆக்கப்பட வேண்டும். தேவர்களின் நிழல் கூட இந்த அசுர பூமியில் விழ முடியாது. மக்கள் இலக்ஷ்மியை அழைக்கின்றார்கள். இருப்பினும் அவர் இங்கு வருவது சாத்தியமில்லை. இந்தப் பஞ்ச தத்துவங்களும் முதலில் மாற்றப்பட வேண்டும். சத்தியயுகம் புதிய உலகம், ஆனால் இதுவோ பழைய உலகமாகும். இப்பொழுது இந்தப் பழைய உலக முடிவிற்கான நேரமாகும். மனிதர்கள் இன்னமும் 40000 வருடங்கள் இருப்பதாக நம்புகின்றார்கள். முழுக்கல்பமும் 5000 வருடங்களாக இருப்பதால் எவ்வாறு ஒரு கலியுகம் மாத்திரமே 40000 வருடங்களாக இருக்கமுடியும்? அதிகளவு அறியாமை இருள் காணப்படுகின்றது. இந்த ஞானம் எதுவும் இல்லை. பக்தி பிராமணர்களின் இரவும் இந்த ஞானம் பிரம்மாவினதும் பிராமணர்களினதும் பகலும் ஆகும். அது இப்பொழுது நடைமுறையில் இருக்கின்றது. அது ஏணிப்படத்தில் மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. புதிய உலகும் பழைய உலகும் அரைக்கு அரைவாசி எனக் கூறப்பட்டுள்ளது. புதிய உலகம், பழைய உலகிலும் பார்க்க நீண்டது என்றில்லை. இல்லை. அவை மிகச்சரியாக அரைக்கு அரைவாசியாகும். ஆகையினால் அதைக் கால்வாசிகளாகப் பிரிக்க முடியும். அது அரைக்கு அரைவாசியாக இல்லாதுவிட்டால் அதை மிகச்சரியான கால்வாசியாகப் பிரிக்க முடியாது. சுவஸ்திகாவும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் மங்கள சகுனத்தின் சின்னத்தை (கணேசர்) வரைவதாக நம்புகின்றார்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் புதிய உலகத்திற்காகக் கற்கின்றோம். நாங்கள் புதிய உலகிற்காகச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுகின்றோம். ஸ்ரீகிருஷ்ணரும் புதிய உலகிற்கு உரியவரே. ஸ்ரீகிருஷ்ணரின் புகழ் உள்ளது. அவர் சிறிய குழந்தையாக இருப்பதால் ஒரு மகாத்மா என அழைக்கப்படுகின்றார். சிறிய குழந்தைகள் அழகானவர்கள். சிறு குழந்தைகளிடம் இருப்பதைப் போன்ற அன்பு வளர்ந்தவர்களிடம் இருப்பதில்லை. ஏனெனில் சிறு குழந்தைகள் தங்களின் சதோபிரதான் ஸ்திதியில் இருக்கின்றார்கள். அவர்களிடம் விகாரங்களின் துர்நாற்றம் இருப்பதில்லை. அவர்கள் வளரும் பொழுது விகாரங்களின் துர்நாற்றம் இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. அந்தக் கண்களே உங்களை ஏமாற்றுகின்றன. இதனாலேயே உங்களுக்குத் தனது கண்களைப் பிடுங்கியவரின் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது அவ்வாறில்லை. அவ்வாறாக எவரும் கண்களைப் பிடுங்குவதில்லை. பாபா இப்பொழுது உங்களுக்கு இந்த ஞான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆன்மீக ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களிலேயே ஞானம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: என்னிடம் ஞானம் உள்ளது. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதிருக்க முடியாது. ஓர் ஆத்மா அவரது சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஓர் ஆத்மா மிகச் சின்னஞ்சிறியவர், இருந்தும் அவர் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றார். வேறு எவராலும் இவ்விடயங்களை உங்களுக்குக் கூறமுடியாது. அம்மக்கள் (சந்நியாசிகள்) ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறுகின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: முதலில் ஆத்மா என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சிலர் வினவுகின்றார்கள்: மிருகங்கள் எங்கே செல்லும்? ஓ! மிருகங்களின் விடயங்கள் ஒருபுறம் இருக்கட்டும், குறைந்தபட்சம் முதலில் ஆத்மாவை உணர்ந்து கொள்ளுங்கள். ஆத்மாவாகிய நான் எவ்வாறானவர்? நான் எத்தகையவர்? தந்தை கூறுகின்றார்: உங்களை நீங்கள் ஓர் ஆத்மா என உணராத வரைக்கும் எவ்வாறு என்னை அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்? இந்தச் சூட்சுமமான விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளன. ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவரிலும் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது, அது தொடர்ந்தும் நடிக்கப்படுகின்றது. சிலர் கூறுகின்றார்கள்: நாடகத்தில் அனைத்தும் நிச்சயிக்கப்பட்டிருந்தால் நாங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? எவ்வாறாயினும் நீங்கள் தண்ணீரை எடுப்பதாயினும் அதற்கான முயற்சி செய்யாமல் எடுக்க முடியாது. நீங்கள் நாடகத்துக்கேற்ப அனைத்தையும் தானாகவே பெறுவீர்கள் என நினைக்க வேண்டாம். செயல்கள் நிச்சயமாகச் செய்யப்பட வேண்டும். நல்ல, தீய செயல்கள் இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் உங்களின் புத்திகளைப் பயன்படுத்த முடியும். தந்தை கூறுகின்றார்: இது இராவண இராச்சியம். உங்களுடைய செயல்கள் இங்கே பாவகரமானவை ஆகுகின்றன. அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. எனவே அங்கே பாவச் செயல்கள் இருக்க மாட்டாது. நான் மாத்திரமே செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அங்கே உங்களின் செயல்கள் நடுநிலையானவை. இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவம் நிறைந்தவை. கீதையை உரைப்பவர்கள் இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துவதில்லை. அவர்கள் வெறுமனே இதனை வாசிக்கின்றார்கள். அவர்கள் சுலோகங்களை சமஸ்கிருதத்தில் வாசித்துப் பின்னர் அவற்றில் தாம் புரிந்து கொண்டதை ஹிந்தியில் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சில வார்த்தைகள் மிகச்சரியானவை. கடவுள் பேசுகின்றார், ஆனால் கடவுள் யார் என எவரும் அறிய மாட்டார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாவாகிய நான் எல்லையற்ற தந்தையின் சொத்துக்கு ஓர் அதிபதி ஆவேன். தந்தை எவ்வாறு அமைதி, தூய்மை, பேரானந்தத்தின் கடலாக இருக்கின்றாரோ அவ்வாறே ஆத்மாவாகிய நான் மாஸ்டர் கடலாவேன். இந்தப் போதையைப் பேணுங்கள்.2. “நாடகம்” எனக் கூறுவதால் முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். நீங்கள் நிச்சயமாகச் செயல்களைச் செய்ய வேண்டும். செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தைப் புரிந்துகொண்டு சதா மேன்மையான செயல்களைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதன் மூலம் உங்களைச் சம்பூரணமானவராக்கி அதனால் உலகிற்கு ஆதார மூர்த்தி ஆகுவீர்களாக.இதுவே கல்பம் முழுவதற்குமாக ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கும் நேரம், மேன்மையான செயல்களுக்கான விதைகளை விதைக்கும் நேரம், 5000 வருடங்களுக்கான உங்களின் சம்ஸ்காரங்களைப் பதிவு செய்யும் நேரம், உலக நன்மைக்காகவும் உலக மாற்றத்திற்காகவும் செயல்படும் நேரம். இந்த நேரத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பவர்கள் இப்போது தமது நேரத்தை வீணாக்கினால் அல்லது எல்லாவற்றையும் எதிர்காலத்திற்காக விட்டுவிட்டால் அவர்கள் காலத்தின் அடிப்படையில் முயற்சி செய்கிறார்கள் என்பதே அதன் அர்த்தம். எவ்வாறாயினும் உலகிற்கு ஆதார மூர்த்திகளாக இருக்கும் ஆத்மாக்கள் வேறெந்த புற ஆதாரத்துடனும் செயல்பட மாட்டார்கள். அவர்கள் தமது அழியாத ஆதாரத்தின் அடிப்படையில் இந்தத் தூய்மையற்ற கலியுக உலகில் இருந்து அப்பால் விலகி தங்களைச் சம்பூரணம் ஆக்குவதற்காக முயற்சி செய்வார்கள்.
சுலோகம்:
உங்களைச் சம்பூரணமானவர்கள் ஆக்குங்கள், நீங்கள் இயல்பாகவே இந்த எல்லையற்ற பணியில் ஒத்துழைப்பவர் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.
தற்காலத்திற்குரிய முயற்சிகள் ஒவ்வோர் எண்ணத்தையும் சக்தி வாய்ந்ததாக ஆக்குவதே ஆகும். எண்ணங்கள் வாழ்க்கையின் மேன்மையான பொக்கிஷங்கள். எப்படி உங்களால் நீங்கள் விரும்பிய பொக்கிஷங்களை நீங்கள் விரும்பிய அளவு பொக்கிஷங்களை அடைய முடிகிறதோ, அவ்வாறே, மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களால் எல்லா வேளைக்கும் மேன்மையான வெகுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு உங்களின் விழிப்புணர்வில் ஒரு சிறிய சுலோகனை வைத்திருங்கள்: எதையாவது செய்வதற்கு அல்லது சொல்வதற்கு முன்னர் எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்களால் உங்களின் வாழ்க்கையை எல்லா வேளைக்கும் மேன்மையானது ஆக்க முடியும்.