15.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, யோக சக்தியின் மூலமாகவே ஆத்மாக்களாகிய உங்களிலுள்ள துரு அகற்றப்படும். எனவே, யோகத்தையிட்டு என்றுமே கவனயீனமாக இருக்காதீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் பெறுவதற்குத் தந்தை காட்டியுள்ள வழிமுறை எது? அதிலேயே எங்கும் மாயை தடைகளை விளைவிக்கின்றாள்.

பதில்:
தந்தை உங்களுக்குக் காட்டியுள்ள வழிமுறை: குழந்தைகளே, பிரம்மாகுமார்கள், குமாரிகளாகிய நீங்கள் ஒரே தந்தையின் குழந்தைகளான, சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். ஆகவே நீங்கள் ஒருவரையொருவர் குற்றமான (சரீர) துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. சகோதர, சகோதரிகள் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுங்கள். எவ்வாறாயினும், மாயை சளைத்தவள் அல்ல் இதில் அவள் தொடர்ந்தும் தடைகளை எங்கும் ஏற்படுத்துகின்றாள். நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதையும், ஒரேயொரு தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்.

பாடல்:
உங்களைக் கண்டதால், நாங்கள் முழு உலகையும் கண்டு விட்டோம், பூமி, வானம் அனைத்தும் எங்களுடையதாகும்.

ஓம் சாந்தி.
பாடலின் ஒரு வரி போதுமானது. எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதையும், அதனை நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பெறுகின்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உண்மையில், பாரதம் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றது, ஆனால் அது இப்பொழுது அதனிடம் இல்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அது அதனை மீண்டும் ஒருமுறை பெறுகின்றது. இப்பொழுது சுவர்க்கம் என்ற ஆஸ்தி அதனிடம் இல்லை என்பதை உங்களால் காண முடிகின்றது. அது இராவணனிடம் இருந்து நரகம் என்ற சாபத்தையே பெறுகின்றது. சாபம் மனிதர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றது. ஆசீர்வாதத்தின் மூலம், அதாவது, ஆஸ்தியின் மூலம், சந்தோஷம் உள்ளது. அவர் (சிவபாபா) எல்லையற்ற அசரீரித் தந்தை என்பதையும், பிரஜாபிதா பிரம்மா எல்லையற்ற சரீரத் தந்தை என்பதையும் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரஜாபிதா பிரம்மாவைத் தவிர வேறு எவராலும் எல்லையற்ற சரீரத் தந்தையாக இருக்க முடியாது. காந்திஜியும் பாபுஜி (தந்தை) என்று அழைக்கப்பட்டார், ஆனால், நியதிப்படி அவர் மனித உலகிற்குத் தந்தையாக இருக்க முடியாது. சிவனே முழு அசரீரி உலகிற்கும் தந்தை ஆவார். நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக சிவபாபா வந்து, உங்களைத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார். நீங்கள் ஏன் மதுவனத்திற்கு வருகின்றீர்கள்? நீங்கள் சிவபாபாவைச் சந்திப்பதற்காக வருகின்றீர்கள். எவ்வாறாயினும், அவர் அசரீரியானவர். ‘சிவபாபா’ என்று நீங்கள் வெறுமனே கூறினால், மக்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆகையாலேயே அவர் பாப்தாதா என அழைக்கப்படுகின்றார்: சிவபாபாவும், பிரம்மா தாதாவும். தாதாவின் பெயர் தந்தையின் பெயரிலிருந்து வேறுபட்டது. அசரீரியானவரே அனைவரினதும் தந்தை ஆவார். அவரும் அனைவரினதும் தாதா (பாட்டனார்) ஆவார். பாப்தாதாவிடம் இருந்து குழந்தைகளான நீங்கள் அனைவரும் நிச்சயமாக ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் அனைவருமே எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அந்தத் தந்தையே துன்பத்தை அகற்றி, அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவர். சத்தியயுகத்தில் எவருமே சந்தோஷம் அற்றிருக்க முடியாது; அதன் பெயரே சுவர்க்கம் ஆகும்! அவர் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையான கடவுள் ஆவார். பாரதமே அனைத்திலும் அதிபுராதனமான தேசமாகும். அதுவே அனைத்திலும் மிகவும் புதியதாக இருந்திருக்க வேண்டும் என்பதாலேயே இப்பொழுது அனைத்திலும் அதி பழையதாக உள்ளது. பாரதம் மாத்திரமே சத்தியயுகம் என்றும், கலியுகம் என்றும் அழைக்கப்படுகின்றது. உண்மையில் பாரதம் சுவர்க்கமாக இருந்ததுடன், இலக்ஷ்மியும், நாராயணனும் அங்கு ஆட்சிசெய்தார்கள். இது உங்கள் புத்திகளில் உள்ளது. இப்பொழுது, நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும்பொழுது, அவர்கள் எவ்வாறு தங்கள் ஆஸ்தியைப் பெற்றார்கள் என்பதும், அவர்கள் எவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகினார்கள் என்பதும், அவர்கள் எப்பொழுது இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள் என்பதும், அவர்கள் யாரிடமிருந்து அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதும் உங்கள் புத்திகளில் உடனடியாகவே பிரவேசிக்கின்றன. இவை அனைத்தும் உங்கள் புத்திகளில் பிரவேசிக்கின்றன. முன்னர், நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும்பொழுது, மாலையின் மணிகளை உருட்டுவீர்கள், ஆனால் நீங்கள் அவர்களின் தொழில் பற்றி எதனையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது மட்டுமே இது உங்கள் புத்தியில் உள்ளது. ஆனால் அதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது! இப்பொழுது நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் சென்று அதனைப் பார்க்கும்பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகின்றீர்கள். அவர்கள் தமது வெகுமதியை எவ்வாறு பெற்றார்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. அவர்கள் அதனைச் சங்கமயுகத்திலேயே பெற்றார்கள், ஏனெனில் சங்கமயுகத்திலேயே பழைய உலகம் மாற வேண்டும். தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் உண்மையில் இவர் பிரம்மாவாக இருந்தார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரம்மா மூலம் விஷ்ணு தாமம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இலக்ஷ்மியும், நாராயணனும் தமது முன்னைய பிறவியில் சரஸ்வதியும், பிரம்மாவுமாக இருந்தார்கள். பிரம்மாவுடன், பிராமணர்களும் இருந்திருக்க வேண்டும். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே நிலவியது. மக்களின் தந்தையும் (பிரஜாபிதா) இருந்திருக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்தவர்கள் அனைவரையும் நாங்கள் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்க்கின்றோம். ஒன்று இராஜ குடும்பமும், மற்றையது பிரஜைகளின் குடும்பமும் ஆகும். அவர்களின் மத்தியிலும்; சிலர் மிகவும் செல்வந்தர்களாகவும், ஏனையோர் குறைந்த செல்வந்தர்களாகவும் உள்ளார்கள். அரசர்களின் மத்தியிலும் சிலர் மிகவும் செல்வந்தர்களாக இருக்கின்றனர், ஏனையோர் அந்தளவு செல்வந்தர்களாக இருப்பதில்லை. இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்தில் அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை நீங்கள் எவரிடமும் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றார்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அது மிகவும் இலகுவானது! அம்பாள் யாரென்றே மக்களுக்குத் தெரியாது. இவர் ஜெகதாம்பாள் (உலகத் தாய்) என நீங்கள் கூறுவீர்கள். உலகத் தாயும், உலகத் தந்தையும் முன்னைய கல்பத்திலும் வாழ்ந்தனர். நீங்கள் அவர்களின் குழந்தைகளாக இருந்தீர்கள். பாபா சங்கமயுகத்தில் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஜெகதாம்பாளின் பல குழந்தைகள் உள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரையும் இங்கே தங்கியிருக்க அனுமதிக்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். தந்தையே ஞானக்கடல் என்பதால், அவர் நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பார். அவர் மனிதர் என்றோ அல்லது தேவர் என்றோ அழைக்கப்படுவதில்லை. அவர் கடவுள் என்று மாத்திரமே அழைக்கப்படுகின்றார். நீங்கள் எந்தத் தேவரினதும் ஆலயத்திற்குச் சென்றாலும், அங்கேயுள்ள மக்களுக்கு உங்களால் அவர்களின் சுயசரிதையைக் கூற முடியும். உங்களால் இராமரைப் பற்றியும் விளங்கப்படுத்த முடியும். சந்திர வம்சம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரம்மாவினூடாக, இந்த பிராமண தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரம்மா என்ற பெயர் மிகவும் பிரபல்யமானது. தந்தை பிரம்மாவினூடாகவே பிராமணர்களைப் படைக்கின்றார். ஏனெனில் பிரம்மாகுமார்களும், குமாரிகளுமான நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பதால், நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகையால், நீங்கள் ஒருவரையொருவர் சரீரத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது. சகோதர, சகோதரிகள் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. தந்தை நாடகத்திற்கு ஏற்ப, இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளார். நீங்கள் ஒரு பிரம்மாகுமார், நான் ஒரு பிரம்மாகுமாரி. உண்மையில், முழு உலகமுமே பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் ஆவார்கள், ஆனால் அவர்கள் அதனை அறியார்கள். நாங்கள் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். மாயையும் குறைந்தவளல்ல. அவள் நாலாபுறத்திலும் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்துகின்றாள். நாங்கள் சகோதர, சகோதரிகள் என்பதையும், ஒரேயொரு தந்தையிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்பதையும் நாங்கள் மறக்கின்றோம். சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே உள்ளது என்பதை நீங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்கின்றீர்கள். ஏனைய அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படவுள்ளன. இது புதியதல்ல என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். இச்சக்கரம் 5000 வருடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்தும் சுழல்கின்றது. நேரமும், திகதியும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளன. இவ் வழிமுறையினாலேயே சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதுவும் உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். உங்கள் இலக்கு உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது: தந்தையை நினைவுசெய்து, தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுங்கள்! நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதனால், அதாவது, யோகசக்தியின் மூலம் துரு அகற்றப்படும். கவனயீனமானவர்களாகி, இதனையிட்டு எந்தத்தவறையும் செய்யாதீர்கள்! இதனாலேயே நீங்கள் முரளியைப் பெறுகின்றீர்கள். தமது புத்தியில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் எங்கும் செல்லலாம். உதாரணமாக, உங்களுக்கு முரளி கிடைக்காதிருந்தாலும், நீங்கள் பாபாவிற்கு உரியவர் என்பது உங்கள் புத்திக்குத் தெரியும். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். ஒரேயொரு தந்தையிடம் இருந்து மாத்திரமே நீங்கள் இந்த மகா மந்திரத்தைப் பெறுகின்றீர்கள். இதனை வேறு எவராலும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. தந்தை மாத்திரமே கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நினைவுச் சக்தியின் மூலமே உங்களால் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகமுடியும். இக்கூற்றுக்கள் உள்ளன, ஆனால், அது எவரது புத்திக்கும் எட்டுவதில்லை. முன்னைய கல்பத்திலும் பாபா இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள்: சகல சரீர சமயங்களையும் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அந்தச் சமயங்கள் அனைத்தும் சரீரங்களுக்கு உரியவை. ஒரேயொருவரே அனைவரதும் தந்தை. சகல ஆத்மாக்களும் அந்த ஒரேயொரு தந்தையை அழைக்கிறார்கள். போப்பாண்டவரும் கடவுளையே நினைவு செய்கின்றார். அவர் கூறுகின்றார்: ஓ தந்தையான கடவுளே, கருணை கொண்டிருங்கள்! மனிதர்கள் தமக்குள் சண்டையிடாத வகையில், மனிதர்களின் கோப புத்தியை மாற்றுங்கள்! ஒரேயொரு தந்தையையே அவர்கள் நினைவு செய்கின்றார்கள். அவர்கள் வேறு எவரையும் நினைவு செய்வதில்லை. மக்கள் சிவபாபாவையே அழைக்கின்றார்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நீங்கள் தூய்மையாகும் பொழுது, இந்த இராவணனின் தீய உலகில் உங்களால் இருக்க இயலாதிருக்கும். அப்பொழுது நிச்சயமாகப் புதியதொரு உலகம் தேவைப்படுகின்றது. கலியுகம் மாறி, சத்தியயுகமாக ஆகுகின்றது. எவ்வாறாயினும், இந்தளவையேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை! இங்கு வந்த ஒரு வைத்தியர், கலியுகம் அநாதியாகத் தொடர்ந்திருக்கும் எனக் கூறினார். அவ்வளவு காலம் வரைக்கும் எவ்வாறு கலியுகம் நீடிக்க முடியும்? கலியுகம் அந்தளவிற்குச் சிறப்பானதா? அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை, ஆனால் அவர்கள் அந்த அன்பைக் கொண்டிருப்பதால், பிறரையும் அழைத்து வருகின்றார்கள். அம்பு அவர்களைத் தாக்காதிருந்த பொழுதிலும், அவர்களால் அழைத்து வரப்படுபவர்களைத் தாக்கினால், அவர்களுக்கு அதில் கமிஷன் (பங்கு) கிடைக்கும்; அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அவர்கள் வந்து தந்தையிடம் இருந்து சிறிதளவு இந்த ஞானத்தைச் செவிமடுத்தாலும், அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அவர்கள் குறைந்தபட்சம் தந்தையான சுவர்க்கக் கடவுளின் முன்னிலையிலேனும் வந்து அமர்ந்திருப்பார்கள்! தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் அனைவரதும் தந்தை ஆவேன். சிவபாபாவால் வர முடியும் என்பதைச் சிலர் நம்புவதில்லை. ஓர் ஆத்மாவினால் வர முடியுமானால், என்னால் ஏன் வர முடியாது? ஓர் ஆத்மாவினால் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்க முடியுமாயின், என்னால் அதனைச் செய்ய முடியாதா? வேறு எவ்வாறு என்னால் வர முடியும்? மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரான பாபாவே, வந்து, எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் ஒருமுறை மாத்திரமே சங்கமயுகத்தில் வருகின்றேன். உங்கள் 84 பிறவிகளை நீங்கள் நிறைவுசெய்யும் பொழுதே, நான் வருகின்றேன். உங்கள் ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை உங்களுக்குக் கொடுப்பதற்கு பாபா வந்துள்ளார் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளான நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: பழைய உலகை மாற்றிப் புதிய உலகை ஸ்தாபிப்பதே எனது தொழிலாகும். ஆகையாலேயே நினைவு கூரப்படுகின்றது: புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் இடம்பெறும். பின்னர் நீங்கள் அங்கே அதனைப் பராமரிப்பீர்கள். நீங்கள் ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் காளி கோயிலைப் பார்க்கும் பொழுது, இது பொய்யானதோர் உருவம் என்றே எண்ணுகின்றீர்கள். காளி உண்மையில் ஜெகதாம்பாள் ஆவார். ஆனால், அவருக்கு அவ்வாறானதொரு பயங்கரமான தோற்றம் இருப்பதில்லை. வங்காளத்தில், அவர்கள் காளிக்குப் பலியிடுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஜெகதாம்பாளின் ஆலயத்திற்கு நூறாயிரக் கணக்கான மக்கள் செல்கின்றார்கள். அங்கே சதா ஓர் ஒன்றுகூடல் இடம்பெறுவதைப் போன்றுள்ளது. அவர்கள் அங்கே சிறியதொரு விக்கிரகத்தை வைத்து, அதற்கு ஜெகதாம்பாள் எனப் பெயரிட்டுள்ளார்கள். ஒரேயொரு ஜெகதாம்பாள் மாத்திரமே இருக்க முடியும். சிந்தியில் காளி கோயில் எவ்வாறு கட்டப்பட்டது எனப் பாருங்கள். ஒருமுறை, கோட்டை ஒன்றில் குண்டொன்று வெடித்தது, அப்பொழுது பக்கிரி (புனிதர்) ஒருவர் காளிதேவி கோபம் அடைந்துள்ளார் என்று கூறியதால், அவர்கள் அங்கே காளிக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். எவ்வாறாயினும், காளி யார்? அவர்களுக்கு எதுவும் தெரியாது! நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ஆகையால் நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். குமார்களும், குமாரிகளும் திருமணம் செய்யும்பொழுதே, முதல் வகையான துன்பம் ஆரம்பம் ஆகுகின்றது. திருமணம் செய்தைப் பற்றி என்றுமே நினைத்தும் பார்க்காதீர்கள்! தந்தை கூறுகின்றார்: இந்த இராவண இராச்சியம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. இது இப்பொழுது விகாரமான இல்லறப்பாதை ஆகும். விகாரமற்ற இல்லறப் பாதையைச் சேர்ந்த தேவர்களை மக்கள் நினைவு கூருகின்றார்கள். முற்றிலும் விகாரமற்ற அந்தத் தேவர்களை உருவாக்கியவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. சத்தியயுகம் முற்றிலும் விகாரமற்ற உலகமாகும். அங்கும் விகாரம் இருந்தததாகச் சமயநூல்களில் அவர்கள் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும், அதுவே விகாரமற்ற உலகம்! அந்;த விகாரமற்ற உலகிற்கும், இந்த விகாரம் நிறைந்த உலகிற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது! இவ்விடயங்கள் வேறு எவரினதும் புத்தியிலும் இல்லை. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் நிலவியபொழுது, வெகுசில மனிதர்களே இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. அதன்பின்னர் வளர்ச்சி இடம்பெற ஆரம்பித்தது. நீங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி வரவேண்டும். அப்பொழுதே நீங்கள் முழுப் பூமியையும்; சுற்றி வந்துள்ளீர்கள் என உங்களால் கூற முடியும். உங்களால் முழுச் சமுத்திரத்தையும் சுற்றி வர முடியாது. சத்தியயுகத்தில் வெகுசிலர் மாத்திரமே வாழ்கின்றார்கள், ஆகையால் அவர்கள் சிறிய நிலப்பரப்பிலேயே வாழ்கின்றார்கள். இப்பொழுது இறுதியில் மனித உலகில் எல்லைகள் உள்ளன. இன்னமும் மேலேயே இருக்கின்ற சில ஆத்மாக்களும் தொடர்ந்தும் கீழே வருகின்றார்கள். மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதன்பின்னர், மேலே இருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் கீழே வந்த பின்னர், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து, உங்கள் சரீரங்களை நீக்கி, வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். அவர்கள் இங்கே கீழே வரும்பொழுது, நீங்கள் மேலே திரும்பிச் செல்வீர்கள். கீழே வெகு சிலரே தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பார்கள். இது புரிந்து கொள்வதற்கான விடயம். நாங்களே அங்கு முதலில் சென்று வாழப் போகின்றவர்கள். நாங்கள் அங்கே செல்லும்பொழுது, வேறு எவரும் இருக்க மாட்டார்கள். இவை விபரமான விடயங்களாகும். இருப்பினும், தந்தை குழந்தைகளான உங்களுக்குக் கூறுகின்றார்: அச்சா, உங்கள் அன்பிற்கினிய தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் நன்மை அடைவீர்கள். மக்கள் வரலாற்றையும், புவியியலையும் பெருமளவில் கற்கின்றார்கள். அவர்கள் மிகவும் தொலைவிற்கு, சந்திரனிற்கும் செல்கின்றார்கள். அது விஞ்ஞானத்தின் அகங்காரமாகும். அவர்கள் உச்சத்திற்குச் செல்கின்றார்கள். மேலே சந்திரனில் எதுவும் இல்லை. நீங்களோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாற் செல்கின்றீர்கள். இப்பொழுது இந்த ஞானம் உங்கள் புத்திகளில் உள்ளது. பாபா இவை அனைத்தையும் நாடகத் திட்டப்படி உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை மாத்திரமே கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றேன். இது எனது பாகத்தில் உள்ளது. நான் பக்தி மார்க்கத்திலும் எனது பாகத்தை நடிக்கிறேன், ஏனென்றால் அது நாடகத்தில் உள்ளது. நீங்கள் நடிகர்கள் என்பதைப் போன்றே, நானும் ஒரு நடிகனே. உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குவதே எனது கடமையாகும். எதனையாவது செய்பவர்கள் புகழப்படுகின்றனர். இலக்ஷ்மி நாராயணனுக்கு அதிகளவு புகழ் உள்ளது, ஆனால் அவர்களை அவ்வாறு தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கியவர் யார்? அவர்கள் சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது பல வகையான துன்பங்கள் உள்ளன. சிலர் இன்று மரணிக்கலாம், சண்டை ஒன்று இடம்பெறலாம்; சிலரிடம் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் இருக்கலாம், ஆனால் அவர் சுகயீனம் அடைந்தாலோ அல்லது ஏதாவது ஒன்று நேர்ந்தாலோ, யாரால் என்ன செய்ய முடியும்? பிர்லாவிடம் அதிகளவு செல்வம் உள்ளது! அவர்களிடம் ஒரு பிறவிக்குப் பணம் இருக்கலாம். ஏதோவொரு துன்பத்தையேனும் அனுபவம் செய்யாத எவருமே இருக்க முடியாது. அனைவருமே ஏதோ ஒரு வகையான துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். பணம் போன்ற அனைத்தும் இப்பொழுது தூசாகப் போகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து வீடு திரும்புங்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் கீழே வருவது நிற்கும் பொழுதே, நீங்கள் மேலே செல்ல முடியும். உங்கள் புத்தியில் இந்த விபரங்களை வைத்திருந்து, பெருமளவு அன்புடன் ஒரேயொரு அன்பிற்கினிய தந்தையை நினைவு செய்யுங்கள்.

2. இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். ஆகையால், உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெற வேண்டும். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், நினைவுச் சக்தியினால் ஆத்மாவாகிய உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சரீர உணர்வில் இருந்து விடுபட்டவராகி, உங்களின் சுய மரியாதையில் நிலைத்திருப்பதன் மூலம் முழு உலகின் மரியாதையையும் பெறுவீர்களாக.

இந்தக் கல்வியின் பிரதானமான இலட்சியம், சரீர உணர்வில் இருந்து விடுபட்டு, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதாகும். பற்றற்றவராகவும் சரீர உணர்வில் இருந்து விடுபட்டவராகவும் ஆகுவதற்கான வழிமுறை, சதா உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருப்பதே ஆகும். சங்கமயுகத்தினதும் எதிர்காலத்தினதும் பல வகையான சுய மரியாதைகளில் ஏதாவதொன்றில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் உங்களின் சரீர உணர்வானது தொடர்ந்து முடிந்துவிடும். தமது சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பவர்கள், இயல்பாகவே அனைவரிடம் இருந்தும் மரியாதையைப் பெற்றுக் கொள்வார்கள். தமது சுயமரியாதையில் சதா ஸ்திரமாக இருப்பவர்கள், உலகச் சக்கரவர்த்திகள் ஆகுவார்கள். அத்துடன் அவர்கள் முழு உலகத்திடம் இருந்தும் மரியாதையைப் பெற்றுக் கொள்வார்கள்.

சுலோகம்:
காலத்திற்கேற்ப, உங்களை வளைத்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதெனில் நிஜத்தங்கம் ஆகுவதாகும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

இப்போது, பயமற்றவராகவும் எரிமலையாகவும் ஆகி, சடப்பொருளினதும் ஆத்மாக்களிதும் தமோகுணி குணத்தை எரிப்பீர்களாக. தபஸ்யா என்றால் எரிமலை நினைவு என்று அர்த்தம். நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதால் மட்டுமே மாயையினதும் பஞ்சபூதங்களினதும் பயங்கர ரூபம் குளிர்மை அடையும். உங்களின் மூன்றாம் கண், உங்களின் எரிமலைக் கண், மாயையைச் சக்தியற்றதாக ஆக்கும்.