15.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எதிர்கால புதிய உலகிற்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். உங்களுடைய இந்த இராஜயோகம் புதிய உலகிற்கானதாகும்.
கேள்வி:
பாக்கியசாலி குழந்தைகளின் பிரதான சமிக்ஞைகள் என்ன?பதில்:
1) பாக்கியசாலிக் குழந்தைகள் நியதிக்கேற்ப ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் நியதிக்கு மாறாக எந்தச்செயலையும் செய்து, அதனால் தங்களையோ, அல்லது தந்தையையோ ஏமாற்ற மாட்டார்கள். 2) அவர்கள் தங்களது கல்வியிலும், ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதிலும் முழுமையான ஆர்வம் காட்டுவார்கள். 3) அவர்கள் திறமைச் சித்தியெய்தி, புலமைப்பரிசிலைப் பெற முயற்சி செய்வார்கள். 4) அவர்கள் எவருக்கும் ஒருபோதும் துன்பம் விளைவிக்க மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறு வந்துள்ளேன்…ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். புதியவர்களும், பழையவர்களும் அத்துடன் குமாரிகளும் இதைக் கேட்டார்கள். இது கற்பதற்கான இடமாகும். மக்கள் ஏதோவொரு பாக்கியத்தை உருவாக்குவதற்காக கற்கும் இடங்களுக்குச் செல்கின்றார்கள். அங்கே பலவிதமான பாக்கியங்கள் உள்ளன. சிலர் சத்திரசிகிச்சை நிபுணராக ஆகுகின்ற பாக்கியத்தையும், ஏனையோர் சட்டத்தரணி ஆகுகின்ற பாக்கியத்தையும் உருவாக்குகிறார்கள். பாக்கியமானது இலக்கும் குறிக்கோளும் என்றும் அழைக்கப்படுகின்றது. உங்களுடைய பாக்கியத்தை உருவாக்காதுவிடின் நீங்கள் ஏன் பாடசாலையில் கற்கின்றீர்கள்? உங்களுடைய பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறு, புதிய உலகில் உங்களுடைய இராச்சிய பாக்கியத்தை கோருவதற்காகவே, இங்கே வந்துள்ளீர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது புதிய உலகிற்கான இராஜயோகம் ஆகும். மக்கள் பழைய உலகிலேயே சட்டத்தரணியாகவோ பொறியியலாளராகவோ அல்லது சத்திரசிகிச்சை நிபுணராகவோ ஆகுகின்றார்கள். இவ்வாறு ஆகுவதற்கு இந்தப்பழைய உலகில் இன்னமும் மிகச்சிறிதளவு நேரமே உள்ளது. அது விரைவில் முடிந்துவிடும். இப்பிறப்பிலே அந்தப் பாக்கியம் மரண பூமிக்கானதாகும். உங்கள் கல்வி புதிய உலகிற்கானது. புதிய உலகிற்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்கவே நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் புதிய உலகிலேயே உங்கள் இராச்சிய பாக்கியத்தை பெறுவீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? நீங்கள் ஆஸ்தியைக் கோருகின்ற எல்லையற்ற தந்தை ஆவார். மருத்துவர்கள் ஒரு மருத்துவரிடம் இருக்க வேண்டிய அறிவைத் தங்களது கல்வி மூலமே ஆஸ்தியாகப் பெறுகின்றார்கள். பின்னர் அவர்கள் வயதானவர்கள் ஆகின்றபோது தங்கள் குருவிடம் செல்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தேவை? எவ்வாறு அமைதி உலகத்திற்குச் செல்வது என வழிகாட்டுங்கள் என அவர்கள் கேட்கின்றார்கள். எங்களுக்கு சற்கதி அருளுங்கள்! எங்களை இங்கிருந்து அப்பால் அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! நீங்கள் இந்தப் பிறவிக்கான ஆஸ்தியை உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள், ஆனால் குருவிடமிருந்து நீங்கள் எதையுமே பெறுவதில்லை. நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் இருந்து ஏதோ ஒரு ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஏனெனில் உங்களுக்கு ஜீவனோபாயம் தேவை. உங்களுடைய லௌகீகத் தந்தையிடம் இருந்து ஒரு ஆஸ்தியை நீங்கள் பெறுகின்ற போதிலும் உங்கள் சொந்த வருமானத்தை சம்பாதிப்பதற்காக நீங்கள் கற்கின்றீர்கள். ஒரு குருவிடம் இருந்து ஒரு வருமானம் சம்பாதிக்கப்படுவதில்லை. ஆம், சிலர் கீதையை நன்றாகக் கற்று பின்னர் கீதையிலே சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள். அவை அனைத்தும் தற்காலிகமான சந்தோஷத்திற்கானது. இப்பொழுது இது மரண பூமியின் முடிவாகும். நீங்கள் புதிய உலகிற்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். இப்பழைய உலகம் முடியவேண்டும். உங்களுடைய சொந்த சொத்துக்கள், உங்கள் லௌகீகத் தந்தையிடம் இருந்து பெற்ற சொத்துக்கள் அனைத்துமே எரிந்துவிடும். நீங்கள் பின்னர் வெறுங்கையுடனேயே திரும்பிச் செல்வீர்கள். உங்களுக்கு இப்பொழுது புதிய உலகிற்கு ஒரு வருமானம் தேவை. பழைய உலக மக்களால் இதைச் செய்ய முடியாது. சிவபாபாவே உங்களைப் புதிய உலகிற்கான வருமானத்தை சம்பாதிக்கத் தூண்டுகின்றார். நீங்கள் இங்கு புதிய உலகிற்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்கவே வந்துள்ளீர்கள். இந்தத் தந்தை உங்களுடைய தந்தையும், ஆசிரியரும் குருவும் ஆவார். அவர் நீங்கள் எதிர்காலத்திற்காக ஒரு வருமானத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு கற்பிக்க சங்கமயுகத்தில் வருகின்றார். இப்பொழுது இந்தப் பழைய உலகில் வெகுசில நாட்களே எஞ்சியுள்ளன. உலகிலுள்ள மக்கள் இதை அறியமாட்டார்கள். அவர் புதிய உலகிற்கான எங்களின் தந்தையும் ஆசிரியரும் குருவுமென குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்ல வந்துள்ளார். சிலர் தங்களது பாக்கியத்தை உருவாக்குவதில்லை. அதாவது, அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஒரே குடும்பத்தில் மனைவி இதைக் கற்கின்றார், கணவன் கற்பதில்லை. அல்லது குழந்தைகள் இதைக் கற்கின்றார்கள், பெற்றோர் கற்பதில்லை. இது தொடர்ந்தும் எப்பொழுதும் இடம்பெறுகின்றது. ஆரம்பத்தில் முழுக்குடும்பமுமே வந்தார்கள். ஆனால் மாயையின் புயல்கள் வந்தபோது, இந்த ஞானத்தினால் கவரப்பட்டு மற்றவர்களுக்கும் கூறியவர்கள், தந்தையை விட்டுச் சென்று விட்டார்கள். இந்த ஞானத்தைக் கேட்டு, வியப்படைந்து ஏனையோருக்கும் கூறி தந்தைக்கு உரியவர்களாகிய பின்னர் இவ்வாறு நிகழ்ந்தால் இதுவே நாடகத்தின் அற்புதமான நியதி என நினைவு கூரப்படுகின்றது. எனவே இது நாடகம் பற்றிய கேள்வியாகும். தந்தை தானே கூறுகின்றார்: ஓ நாடகமே! ஓ மாயா! யாரை நீங்கள் விவாகரத்து செய்தீர்கள்? கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விவாகரத்து செய்கின்றனர். குழந்தைகள் தங்களது தந்தையை விவாகரத்து செய்கின்றனர். இங்கே அவ்வாறில்லை. இங்கே, நீங்கள் விவாகரத்துப் பெறமுடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களை உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்வதற்காக வந்துள்ளார். தந்தை எவரையும் குழியினுள் விழச் செய்வதில்லை. தந்தை தூய்மையாக்குபவரும் கருணை நிறைந்தவரும் ஆவார். தந்தை வந்து உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிக்கின்றார். அவரே உங்களது வழிகாட்டியாகி, உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். உலகிலுள்ள குரு உங்களைத் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவதில்லை. சமயநூல்களிலேயே கூறப்பட்டுள்ளது: கடவுள் பேசுகின்றார்: நான் உங்கள் அனைவரையும் என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். அனைவரும் நுளம்புக்கூட்டம் போன்று திரும்பிச் செல்வார்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும், உங்கள் சரீரங்களைத் துறக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். நீங்கள் மரணிக்கின்றபோது உங்களுக்கு இந்த உலகமே மரணிக்கின்றது. இலகுவாக உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இது அழுக்கான பழைய ஆடையாகும். இந்த உலகமும் பழையதே. அவர்கள் பழைய வீட்டில் இருக்கும்போது, ஒரு புதிய வீடு கட்டப்பட்டால், அது அவர்களுக்கே எனப் பௌதீகத் தந்தையும், குழந்தைகள் அனைவரும் புரிந்து கொள்கின்றார்கள். அவர்களின் புத்தியானது புதிய வீட்டின்பால் ஈர்க்கப்படும்: இங்கே இதைச் செய்யுங்கள், அங்கே அதைச் செய்யுங்கள். அவர்களின் புத்திகள் புதிய வீட்டுடன் இணைக்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் பழையதை அழித்து விடுவார்கள். பழைய வீட்டுடனான பற்று அனைத்தும் முடிந்து புதிய வீட்டுடன் இணைக்கப்படுகின்றது. இது எல்லையற்ற உலகம் பற்றிய விடயமாகும். பழைய உலகின் மீதுள்ள உங்களின் பற்றை முடித்து உங்களின் புத்தியைப் புதிய உலகுடன் இணையுங்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய உலகம் சுவர்க்கமாகும். நாங்கள் அதற்கான எங்களது இராஜ அந்தஸ்தைக் கோருகின்றோம். நாங்கள் எவ்வளவு அதிகமாக யோகம் செய்து, இந்த ஞானத்தைக் கிரகித்து, ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகின்றோமோ, அந்தளவிற்கு எமது சந்தோஷ பாதரசம் உயரும். நாங்கள் 21 பிறவிகளுக்கு எங்களது ஆஸ்தியைக் கோருவதால் பரீட்சை மிக முக்கியமானது. செல்வந்தர் ஆகுவது நல்லதுதானே? நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது நல்லதுதானே? எந்தளவிற்கு அதிகமாக சுயதரிசன சக்கரத்தை சுழற்றுவதுடன் ஏனையோரையும் உங்களுக்குச் சமமாக ஆக்குகின்றீர்களோ அந்தளவிற்கு நன்மை அடைவீர்கள். நீங்கள் அரசராக விரும்பினால், நீங்கள் பிரஜைகளை உருவாக்க வேண்டும். பலர் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள், அதன்மூலம் பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். ஏனெனில் இந்த அழியாத ஞானம் ஒருபோதும் அழிக்கப்பட மாட்டாது. தாங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகளாக வேண்டும் என்பது அவர்களது புத்திகளில் பிரவேசிக்கும். இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது, இராவண இராச்சியம் அழிக்கப்படும். சத்தியயுகத்தில் தேவர்கள் மாத்திரமே இருப்பார்கள். நீங்கள் உருவாக்குகின்ற இலக்ஷ்மி நாராயணனின் படத்தில், “முன்னைய பிறவியில் அவர்கள் தமோபிரதான் உலகில் இருந்தார்கள். அவர்கள் தமோபிரதான் உலகிலிருந்து இந்த முயற்சியைச் செய்ததால், சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகினார்கள்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அரசர்களும் பிரஜைகள் அனைவரும் அதிபதிகள் ஆவார்கள். பிரஜைகளும்கூட தங்களுடைய பாரதமே அனைத்திலும் அதிமேன்மையானது என்று கூறுகின்றார்கள். உண்மையில் பாரதமே அனைத்திலும் அதிமேன்மையானதாக இருந்தது. அது இப்பொழுது அவ்வாறில்லை. ஆனால் முன்னர் அது நிச்சயமாக அவ்வாறிருந்தது. அது இப்பொழுது ஏழ்மை அடைந்து விட்டது. புராதன பாரதமே அனைத்திலும் செல்வந்தமாக இருந்தது. பாரதமக்களாகிய நாங்கள் அதிமேன்மையான தேவகுலத்திற்குச் சொந்தமானவர்கள், ஏனையோரை தேவர்கள் என்று அழைக்க முடியாது. புத்திரிகளாகிய நீங்கள் கற்கின்றீர்கள். அத்துடன் ஏனையோருக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறு கண்காட்சிகளை நடாத்துவதற்கு தந்தி எழுதியனுப்புவது என்பது பற்றி பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுத்துள்ளார். நீங்கள் படங்களை வைத்திருக்கின்றீர்கள். அவற்றின் மூலம் எவ்வாறு அவர்களுடைய அந்தஸ்தை அவர்கள் அடைந்தார்கள் என நீங்கள் நிரூபித்துக் காட்டமுடியும். அவர்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சிவபாபாவிடம் இருந்து அந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். அவர்களுடைய விக்கிரகங்களும் இருக்கின்றன. சிவனே பரமதந்தை, பரமாத்மா ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் விக்கிரகங்களும் இருக்கின்றன. பரமதந்தை பரமாத்மா, பிரம்மாவின் மூலமாக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். விஷ்ணுதாமம் முன்னால் உள்ளது. புதிய உலகம் விஷ்ணுவினால் பராமரிக்கப்படுகின்றது. ராதே, கிருஷ்ணரின் இணைந்த ரூபமே விஷ்ணுவாகும். கீதையின் கடவுள் யார்? முதலில் கீதையின் கடவுள் அசரீரியான சிவன் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் அல்லர் என்றும் எழுதுங்கள். எவ்வாறு பிரம்மா, விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகின்றார்? ஒரு படத்தை விளங்கப்படுத்துவதற்கே அதிகளவு நேரம் எடுக்கின்றது, ஏனெனில் அது அவர்களது புத்திகளில் பதிய வேண்டும். நீங்கள் முதலில் இதை விளங்கப்படுத்திவிட்டு, பின்னர் எழுதுங்கள்: தந்தை கூறுகின்றார்: நீங்கள் யோக சக்தியால் பிரம்மாவினூடாக 21 பிறவிகளுக்கு உங்களது உரிமைகள் அனைத்தையும் கோருகின்றீர்கள். சிவபாபாவே உங்களின் ஆஸ்தியை பிரம்மாவினூடாகக் கொடுக்கின்றார். இவரின் ஆத்மாவே அனைத்தையும் முதலில் செவிமடுக்கின்றார். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கின்றார். இதுவே பிரதான விடயமாகும். அவர்கள் சிவனின் விக்கிரகங்களைக் காட்டுகின்றார்கள். இவர் பரமதந்தை, பரமாத்மா சிவன் ஆவார், பின்னர் பிரஜாபிதாவும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். இங்கே பிரஜாபிதா பிரம்மாவின் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் அதிகளவு உள்ளனர். நீங்கள் பிரம்மாவின் குழந்தையான ஒரு பிராமணர் ஆகாது, எவ்வாறு சிவபாபாவிடம் இருந்து உங்களின் ஆஸ்தியைக் பெறமுடியும்? அவர்கள் பௌதீகமான படைப்புகள் அல்லர். “வாய்வழித் தோன்றல்கள்” நினைவு கூரப்பட்டுள்ளனர். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் எனக் கூறுகின்றீர்கள். அம்மக்கள் குருமார்களின் சீடர்கள் அல்லது பின்பற்றுபவர்கள் ஆவர். இங்கே நீங்கள் அவரை மட்டுமே தந்தை ஆசிரியர், சற்குரு என்று அழைக்கின்றீர்கள். அவரே அசரீரியான ஞானக்கடலும், ஞானம் நிறைந்தவருமான சிவபாபா ஆவார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். அத்துடன் அவர் ஆசிரியரும் ஆவார். அசரீரியானவர் வந்து சரீரதாரி மூலம் உங்களுடன் பேசுகின்றார். ஆத்மாவே பேசுகின்றார். ஆத்மா கூறுகின்றார்: எனது சரீரத்திற்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். ஆத்மாவே சந்தோஷம் அற்றவர் ஆகின்றார். இந்நேரத்தில் ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள். பரமதந்தை பரமாத்மாவே தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகின்றார். ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே! ஓ தந்தையாகிய கடவுளே!’ அவர்களின் லௌகீகத் தந்தை அங்கே இருக்கின்றார், எனவே யாரை அவர்கள் நினைவு செய்கின்றார்கள்? ஆத்மா கூறுகின்றார்: இவர் ஆத்மாவாகிய என்னுடைய தந்தை, ஆனால் அவரோ எனது சரீரத்தின் தந்தை ஆவார். ஆத்மாக்களின் அசரீரியான தந்தை மகத்தானவரா, அல்லது சரீரத்தைப் படைப்பவரான லௌகீகத் தந்தை மகத்தானவரா என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சரீரதாரியும், அசரீரியானவரையே நினைவு செய்கின்றார். விநாசம் உங்களின் முன்னால் இருப்பதனால், அனைவருக்கும் விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். பரலோகத்தந்தை இறுதியில் அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளர். அனைத்துமே அழியப்போகின்றது. இது மரணபூமி என்று அழைக்கப்படுகின்றது. ஒருவர் மரணிக்கின்ற போது, அவர் அப்பாலுள்ள உலகான அமைதிதாமத்திற்குச் சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அப்பாலுள்ள உலகம் சத்தியயுகமா அல்லது அமைதிதாமமா என மக்கள் அறிய மாட்டார்கள். சத்தியயுகம் இங்கேயே உள்ளது. அப்பாலுள்ள உலகம் அமைதி தாமமாகும். இதை விளங்கப்படுத்துவதற்கு, சரியான வழிமுறை தேவையாகும். நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஆலயம், எங்களுக்குக் கற்பிக்கின்ற சிவபாபாவின் ஞாபகார்த்தம் ஆகும். உண்மையில் சிவன் ஒரு புள்ளியாவார். ஆனால் ஒரு புள்ளியை எவ்வாறு பூஜிக்க முடியும்? எவ்வாறு மலர்களும் பழங்களும் அவருக்குப் படைக்க முடியும்? இதனாலேயே அவர்கள் அவருக்கும் பெரிய ரூபத்தைக் கொடுத்துள்ளனர். அவருக்கு அவ்வாறான பெரிய ரூபமில்லை. நெற்றியின் மத்தியில் அற்புதமான நட்சத்திரம் பிரகாசிப்பது நினைவு கூரப்படுகின்றது. ஆத்மா பெரிய ரூபமாக இருந்திருந்தால், விஞ்ஞானிகளால் அதை உடனடியாகப் பிடிக்கக்கூடியதாக இருந்திருக்கும். பாபா கூறுகின்றார்: அவர்கள் பரமதந்தை, பரமாத்மாவின் முழுமையான அறிமுகத்தைப் பெறவில்லை. அவர்களின் பாக்கியம் திறந்து கொள்ளும்வரை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதுவரைக்கும் அவர்களுடைய பாக்கியம் திறக்கவில்லை. அவர்கள் தந்தையை அறிந்துகொள்ளும்வரை, அவர்களுடைய ஆத்மாவும் புள்ளி போன்றதே எனப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சிவபாபா ஒரு புள்ளியாவார். நாங்களும் ஒரு புள்ளியையே நினைவு செய்கின்றோம். இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் அவரை நினைவு செய்கின்றபோதே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும், காட்சிகளில் என்னால் இதைப் பார்க்கமுடியும், அல்லது அதைப்பார்க்க முடியும்! என்று நீங்கள் கூறும்போது அவையெல்லாம் மாயையின் தடைகள் ஆகும். நீங்கள் இப்பொழுது கடவுளைக் கண்டு கொண்டீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் இந்த ஞானமும் தேவை. ஒருவர் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியைக் காண்கின்றபோது, சந்தோஷம் அடைகின்றார். பாபா கூறுகின்றார்: அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியைக் கண்டு பெருமளவு சந்தோஷத்தில் நடனம் ஆடுகின்றார்கள். ஆனால் அதன் மூலம் அவர்கள் சற்கதி அடைவதில்லை. அந்த காட்சிகள் தற்செயலாகவே அருளப்படுகின்றன. நீங்கள் நன்றாகக் கற்கவில்லை என்றால் பிரஜைகள் ஆகுவீர்கள். ஒருவர் சிறிதளவு இந்த ஞானத்தைக் கேட்டாலும், அவர் கிருஷ்ணதாமத்தில் சாதாரண பிரஜைகளில் ஒருவராக ஆகுகின்றார். சிவபாபா இப்பொழுது உங்களுக்காக இந்த ஞானத்தைப் பேசுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஞானம் நிறைந்தவர் ஆவார். பாபாவின் கட்டளைகளாவன: நிச்சயமாக தூய்மையாக இருங்கள்! எவ்வாறாயினும் சிலரால் தூய்மையாக இருக்க முடிவதில்லை. சிலநேரங்களில் தூய்மை அற்றவர்களும்கூட இங்கே இரகசியமாக வந்து அமர்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கே இழப்பை ஏற்படுத்துகின்றார்கள். தந்தையை ஏமாற்றுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தையை ஏமாற்றி நீங்கள் செல்வத்தைப் பெறப்போகின்றீர்களா? நீங்கள் சிவபாபாவின் ஸ்ரீமத்தை மிகச் சரியாக பின்பற்றாது விட்டால் உங்களுடைய நிலைமை என்னவாகும்? அதிகளவு தண்டனை கிடைப்பதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். நியதிக்கு எதிரான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்! உங்களுடைய நடத்தை சரியானதல்ல எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தை ஒரு வருமானத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறையைக் காட்டுகின்றார். பின்னர் நீங்கள் அதைச் செய்கின்றீர்களோ இல்லையோ அது உங்கள் பாக்கியமாகும். அனைவரும் தண்டனை அனுபவம் செய்தபின்னர் அமைதி தாமத்திற்கு திரும்ப வேண்டும். உங்கள் அந்தஸ்து அழிக்கப்பட்டால், நீங்கள் எதையுமே பெறமாட்டீர்கள். பலர் இங்கு வருகின்றார்கள். ஆனால் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோருவதே கேள்வியாகும். குழந்தைகள் கூறுகின்றனர்: நான் தந்தையிடம் இருந்து சுவர்க்கத்தின் சூரியவம்சத்து இராஜ அந்தஸ்தைக் கோருவேன். இது இராஜயோகம். மாணவர்கள் புலமைப்பரிசை வெல்கின்றார்கள். சித்தி அடைந்தவர்கள் புலமைப் பரிசிலைப் பெறுவார்கள். புலமைப்பரிசிலைப் பெற்றவர்களைக் குறிப்பதற்கே அம்மாலை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் சித்தியடையும் அளவிற்கு புலமைப்பரிசைப் பெறுவீர்கள். உங்களுடைய எண்ணிக்கை வளரும், பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள். இராஜ அந்தஸ்தே புலமைப்பரிசில் ஆகும். நன்றாகக் கற்பவர்கள் மறைமுகமாக இருக்க முடியாது. புதிதாக வந்த பலர், பழையவர்களையும் விட முன்னேறிச் செல்ல முடியும். அவர்கள் தமது வாழ்க்கையை வைரத்தைப் பேன்று ஆக்குவார்கள். அவர்கள் தமது உண்மையான வருமானத்தைப் பெற்று, 21 பிறவிகளுக்கான தமது ஆஸ்தியை கோரிக் கொள்வார்கள். அவர்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது இந்த ஆஸ்தியைக் கோராது விடின், அதை மீண்டும் ஒருபோதும் கோரமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வியிலே ஆர்வம் இருக்கவேண்டும். சிலருக்கு ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்கு சிறிதளவு ஆர்வமேனும் இருப்பதில்லை. நாடகத்துக்கேற்ப அவர்களது பாகத்தில் அது இல்லையெனில், கடவுளால் என்னதான் செய்யமுடியும்? அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்துக்கு எதிராக எந்தச் செயலையும் செய்யாதீர்கள். நன்றாகக் கற்று, மேன்மையான பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.2. பழைய உலகின் மீதுள்ள உங்களின் பற்றை முடித்து விடுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை புதிய உலகுடன் இணையுங்கள். சந்தோஷமாக இருப்பதற்கு, இந்த ஞானத்தைக் கிரகித்து, ஏனையோரையும் அதனைக் கிரகிக்கத் தூண்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சிந்திப்பது, பேசுவது மற்றும் செய்வதைச் சமமாக ஆக்குவதன் மூலம் அதி மேன்மையான முயற்சியாளர் ஆகுவீர்களாக.கற்பித்தல்கள் அனைத்தினதும் சாராம்சம், நீங்கள் எதைச் செய்தாலும் எதைப் பார்த்தாலும், விழித்தெழுதல், அமர்ந்திருத்தல், அசைதல் அல்லது தூங்குதல் அவை அனைத்தும் தேவதையைப் போல் தென்பட வேண்டும். ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் இருக்க வேண்டும். உங்களின் செயல்களிலோ அல்லது சம்ஸ்காரங்களிலோ உலகரீதியாக எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் சிந்திப்பது, பேசுவது, செய்வது அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். நீங்கள் எதையாவது செய்யக்கூடாது என்று நினைத்தபோதும் அதை நீங்கள் செய்வதாக இருக்கக்கூடாது. மூன்றும் சமமாக இருக்கும்போது, தந்தைக்குச் சமமாக இருக்கும்போது, நீங்கள் அதிமேன்மையான முயற்சியாளர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதெனில், மேலதிக ஆசீர்வாதங்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்வதாகும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
தற்சமயம், ஆத்மாக்கள் அனைவருக்கும் அமைதியும் சக்தியும் மட்டுமே தேவைப்படுகின்றன. உங்களின் சக்திவாய்ந்த மற்றும் அமைதிநிறைந்த மனதால், ஆத்மாக்கள் மன அமைதியை அனுபவம் அடையச் செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளாலும் உங்களின் மனதாலும் ஒரே வேளையில் சேவை செய்யுங்கள். உலகச் சக்கரவர்த்தி ஒருவர் உலகிற்கே அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வேளையில் நீங்கள் அனைவருக்கும் அமைதி மற்றும் சக்தியைத் தானமாகக் கொடுக்கும்போது, அனைவரும் உங்களை சந்தோஷத்தை அருள்பவராக ஏற்றுக்; கொள்வார்கள்.