15.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் அனைவரும், ஒரு வழிகாட்டலின் கீழ், ஒன்றுபட்டுள்ளீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, ஒரேயொரு தந்தையை நீங்கள் நினைவுசெய்வதால், தீய ஆவிகள் அனைத்தும் ஓடிவிடுகின்றன.

பாடல்:
பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவதற்கான பிரதான அடிப்படை என்ன?

பதில்:
பாபா கூறும் ஒவ்வொரு கருத்தையும் கிரகிப்பவர்களே, பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறார்கள். பாபா என்ன கூறுகிறார், இராவண சமுதாயத்தின் என்ன கூறுகின்றனர் எனத் தீர்மானியுங்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாக இருப்பதே, பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுதல் ஆகும். இந்த ஞானத்தைக் கிரகிப்பதனால் மட்டுமே நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
ஆங்கிலத்தில், அவரை நீங்கள் 'ஸ்பிரிச்சுவல் ஃபாதர்” என அழைப்பீர்கள். நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்லும்பொழுது, அங்கே ஆங்கிலமோ, ஏனைய மொழிகளோ இருக்காது. சத்திய யுகத்திலே உங்களுடைய இராச்சியமே இருக்கும், அங்கே எமது மொழி எதுவோ, அம்மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர், அந்த மொழி தொடர்ந்தும் மாறும். இப்பொழுது எண்ணற்ற மொழிகள் இருக்கின்றன. அரசர்கள் எவ்வாறோ, அவ்வாறே மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. நிலையங்களிலே இருக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வழிகாட்டலின் கீழ், ஒன்றுபட்டுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். நீங்கள் தீய ஆவிகள் அனைத்தும் அகன்றுவிடும் வகையில், உங்களை ஆத்மாக்களாகக் கருதி, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தையே தூய்மையாக்குபவர். ஐந்து தீய ஆவிகளும் அனைவரிலும் உள்ளன. ஆத்மாவிலேயே தீய ஆவிகள் இருக்கின்றன. இத்தீய ஆவிகளுக்கு, அதாவது, விகாரங்களுக்குச் சரீர உணர்வு, காமம், கோபம் போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடவுள் சர்வவியாபி என்றல்ல. கடவுள் சர்வவியாபி என எவராவது எப்பொழுதாவது கூறினால், அவருக்குக் கூறுங்கள்: ஆத்மாக்களும், அந்த ஆத்மாக்களில் இருக்கும் ஐந்து விகாரங்களுமே சர்வவியாபியாக உள்ளன. கடவுள், அனைவரிலும் பிரசன்னமாகியுள்ளார் என்றில்லை. கடவுளிலே எவ்வாறு ஐந்து தீய ஆவிகளும் இருக்க முடியும்? ஒவ்வொரு கருத்தையும் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்வதனால், நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறீர்கள். இராவண சமுதாயத்தைச் சேர்ந்த உலக மக்கள் கூறுவதையும், தந்தை கூறுவதையும் பற்றித் தீர்மானியுங்கள். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா உள்ளார். அந்த ஆத்மாக்களிலே ஐந்து விகாரங்கள் இருக்கின்றன. தீய ஆவிகளாகிய, ஐந்து விகாரங்களும் ஆத்மாவிலேயே உள்ளன, சரீரத்தில் அல்ல. இந்த ஐந்து விகாரங்களும் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அதன் பெயரே தேவ உலகம் ஆகும். இது அசுர உலகம். பேய்களே அசுரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். (இரண்டிற்கும் இடையிலே) இரவிற்கும் பகலிற்கும் இடையிலுள்ள வேறுபாடு உள்ளது. இப்பொழுது நீங்கள் மாற்றமடைகிறீர்கள். அங்கே உங்களிலே எந்த விதமான விகாரங்களோ, குறைபாடுகளோ இருக்காது; நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள்; நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். ஆரம்பத்திலே நீங்கள் அவ்வாறு இருந்தீர்கள். பின்னர், நீங்கள் கீழிறங்கி வந்தீர்கள். எவ்வாறு இந்த 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது எங்களைப் (சுயம்) பற்றிய காட்சியைக் காண்கிறோம். அதாவது, நாங்கள் இப்பொழுது இந்தச் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைக் கொண்டுள்ளோம். நடக்கும்பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித்திரியும்பொழுதும், இந்த ஞானத்தை நீங்கள் உங்கள் புத்தியிலே வைத்திருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கிறார். தந்தை பாரதத்தில் மட்டுமே வந்து, இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். மக்கள் தமது பாரதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். உண்மையில், அதனை இந்துஸ்தான் என அழைப்பது தவறாகும். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அது எங்கள் இராச்சியமாக மட்டுமே இருந்தது, அங்கே வேறெந்தச் சமயங்களும் அந்நேரத்தில் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுவே புதிய உலகம் ஆகும். மக்கள் புது டெல்கியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆதியில் டெல்கி, “டெல்கி” என அழைக்கப்படவில்லை. அது பரிஸ்தான் என அழைக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் அதைப் புதுடெல்கி, பழைய டெல்கி என அழைக்கிறார்கள். பின்னர், பழைய டெல்கியோ, புதுடெல்கியோ இருக்காது; அது பரிஸ்தான் என்றே அழைக்கப்படும். டெல்கியே தலைநகரம் என அழைக்கப்படுகிறது. அதுவே இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருக்கும். அங்கே எங்கள் இராச்சியத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. இப்பொழுது இராச்சியம் எதுவுமே இல்லை. இதனாலேயே “பாரதம் எங்கள் நாடு” என நீங்கள் கூறுகிறீர்கள். இங்கே அரசர்கள் எவரும் இல்லை. ஞானம் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியிலே சுழன்றவாறு இருக்கிறது. உண்மையில், இந்த உலகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது; அது வேறெவருடைய இராச்சியமாகவும் இருக்கவில்லை. அவர்கள் ஜமுனா நதிக்கரையிலே வாழ்ந்தார்கள். அது பரிஸ்தான் என அழைக்கப்பட்டது. தேவர்களின் தலைநகரம் எப்பொழுதும் டெல்கியே ஆகும். ஆகவே, இப்பொழுது அனைவரும் அதனால் கவரப்படுகிறார்கள். அது மிகப்பெரிய நகரமும், அத்துடன் மத்திய பகுதியும் ஆகும். நீங்கள் நிச்சயமாகப் பாவங்கள் செய்தீர்கள் என்பதையும், நீங்கள் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்திய யுகத்திலே ஆத்மாக்கள் தூய்மையாகவும், புண்ணியம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள். தந்தை மட்டுமே வந்து, உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் அவருடைய பிறந்த நாளையும் (சிவஜெயந்தி) கொண்டாடுகிறீர்கள். “ஜெயந்தி” என்ற வார்த்தை அனைவருக்கும் பொருந்துகிறது. இதனாலேயே, அவர்கள் அதைச் சிவராத்திரி (சிவனது இரவு) என அழைக்கிறார்கள். உங்களைத் தவிர வேறெவராலும் ‘இரவு” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. நல்ல பண்டிதர்களுக்குக் கூட சிவராத்திரி என்றால் என்ன என்பது தெரியாது, எனவே அவர்கள் எதைக் கொண்டாடுவார்கள்? “இரவு” என்பதன் அர்த்தத்தைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். 5000 ஆண்டுகளைக் கொண்ட சக்கரத்திலே சந்தோஷமும், துன்பமும் நிறைந்த நாடகம் இருக்கிறது. சந்தோஷம் பகல் என அழைக்கப்படுகின்றது, துன்பம் இரவு என அழைக்கப்படுகின்றது. எனவே, இரவிற்கும், பகலிற்கும் இடையிலே ஒரு சங்கமம் இருக்கிறது. அரைச்சக்கரம் ஒளி நிறைந்ததாகவும், மற்றைய அரைச்சக்கரம் இருள் நிறைந்ததாகவும் இருக்கிறது. பக்தி மார்க்கத்திலே, அனைத்திற்கும் நீண்ட காலம் எடுக்கிறது. இங்கே, அனைத்தும் ஒரு விநாடிக்குரிய விடயம். இது முற்றிலும் இலகுவான யோகம். முதலில், நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஜீவன்முக்தி அடைந்த வாழ்விலும், பந்தன வாழ்விலும் எவ்வளவு காலம் இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்கின்றபொழுதிலும். அதை மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ‘யோகம்’ என்ற வார்த்தை சரியானது. எவ்வாறாயினும், அவர்களுடையது பௌதீக யோகம். இது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் யோகம். சந்நியாசிகள் பலவிதமான ஹத்தயோகங்கள் போன்றவற்றைக் கற்பிக்கிறார்கள். எனவே மக்கள் குழப்பமடைகிறார்கள். அவரே குழந்தைகளாகிய உங்களுடைய தந்தையும், ஆசிரியரும் ஆவார், எனவே நீங்கள் அவருடனேயே யோகம் செய்ய வேண்டும். நீங்கள் ஆசிரியருடன் கற்க வேண்டும். ஒரு குழந்தை பிறப்பெடுத்ததும், முதலில் அது தனது தந்தையுடன் யோகம் செய்கிறது, பின்னர் அதற்கு ஐந்து வயதாகும்பொழுது, அவர் தனது ஆசிரியருடன் யோகம் செய்கிறார். அதன் பின்னர், அவர் ஓய்வு பெறும் வயதிலே அவருடைய குருவுடன் அவர் யோகம் செய்ய வேண்டும். மூன்று முக்கியமானவர்கள் நினைவுசெய்யப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறானவர்கள். இங்கே தந்தை ஒருமுறையே வந்து, தந்தையும், ஆசிரியரும் ஆகுகிறார். அவர் அற்புதமானவர். அத்தகைய தந்தையை நிச்சயமாக நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். பிறவிபிறவியாக மூவரையும் நீங்கள் வெவ்வேறாக நினைவுசெய்தீர்கள். சத்தியயுகத்திலும், நீங்கள் உங்கள் தந்தையுடனும், பின்னர் ஆசிரியருடனும் யோகம் செய்வீர்கள். அங்கேயும் அவர்கள் கற்கிறார்கள். எவ்வாறாயினும், அங்கே ஒரு குரு தேவையில்லை. ஏனெனில், அனைவரும் அங்கே சற்கதி அடைந்தவர்களாக உள்ளனர். இவ் விடயங்கள் அனைத்தையும் நினைவுசெய்வதிலே உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? இது முற்றிலும் இலகுவானது. இதுவே இலகு யோகம் என அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது பொதுவான ஒன்றல்ல. தந்தை கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தைத் தற்காலிகமாகக் கடனாக எடுக்கிறேன். அதுவும் அத்தகையதொரு குறுகிய காலத்திற்கே ஆகும். மக்கள் அறுபது வயதை அடையும்பொழுது, ஓய்வு ஸ்திதிக்குச் செல்கிறார்கள். ‘அறுபது வயதை நீங்கள் அடையும்பொழுது, உங்களுக்கு ஒரு கைத்தடி தேவை” எனக் கூறப்படுகிறது. இந்நேரத்தில் அனைவரிடமும் ஒரு கைத்தடி உள்ளது. அனைவரும் ஓய்வு ஸ்திதியை அடைந்து, நிர்வாண உலகிற்குச் செல்வார்கள். அதுவே இனிமையிலும் இனிமையான வீடாகிய, இனிய வீடாகும். அதற்காகவே நீங்கள் அதிகளவு பக்தியைச் செய்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்துவிட்டீர்கள். மக்களுக்கு எதுவுமே தெரியாதாயினும் சக்கரம் நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைக் கொண்டது எனக் கூறுவதில் பொய்களையே கூறியுள்ளனர். இது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளிற்கான கேள்வியாயின், உங்களால் ஓய்வு பெறவே முடியாது. ஓய்வு பெறுவது மிகக் கடினமாக இருந்திருக்கும். நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள். அதுவே அசரீரி உலகமாகிய, மௌன இல்லமாகும். இதுவே பௌதீக இனிமையான வீடாகும். அது அசரீரியான இனிமையான வீடாகும். ஓர் ஆத்மா மிகச்சிறிய ரொக்கட் ஆவார். ஆத்மாவை விட அதி வேகமாகச் செல்லக்கூடியது வேறெதுவும் இல்லை; அதுவே அனைத்திலும் அதி வேகமானது. ஆத்மா ஒரு விநாடியுள் தனது சரீரத்தை விட்டுப் பிரிந்து, பறந்து சென்றுவிடுகிறார். அடுத்த சரீரம் அவருக்குத் தயாராகவுள்ளது. நாடகத்திற்கு ஏற்ப, அவர் நிச்சயமாகச் சரியான நேரத்திலே செல்ல வேண்டும். நாடகம் மிகச் சரியானது. அதில் தவறுகள் இருக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, தந்தையும் மிகச்சரியாக தனக்குரிய சொந்த நேரத்திலே வருகிறார். ஒரு விநாடி வேறுபாடு கூட இருக்க முடியாது. கடவுளான தந்தை எப்பொழுது இவரிலே இருக்கிறார் என்பதை உங்களால் எவ்வாறு கூறமுடியும்? அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, அதை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்தும் பொழுதாகும். மக்கள் சிவனது இரவைக் கொண்டாடுகிறார்கள். சிவனாகிய, நான் எப்பொழுது, எவ்வாறு இங்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர்கள் சிவனது இரவையும், கிருஷ்ணரது இரவையும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இராமரின் இரவைக் கொண்டாடுவதில்லை. ஏனெனில் அதில் வேறுபாடு உள்ளது. சிவனது இரவுடன், அவர்கள் கிருஷ்ணருடைய இரவையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இங்கிருப்பது இராவணனின் அசுர இராச்சியமாகும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவர் பாபா. ஒரு வயோதிபரே ‘பாபா’ என அழைக்கப்படுவார். ஒரு சிறிய குழந்தையை ‘பாபா’ என அழைக்க முடியாது. சில குழந்தைகள் அன்புடன் ‘பாபா’ என அழைக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் கிருஷ்ணரையும் அன்புடன் ‘பாபா’ என அழைத்தார்கள். அவர் பெரியவராகி, அவருக்குக் குழந்தைகள் பிறக்கும்பொழுது அவர் ‘பாபா’ என அழைக்கப்படுவார். கிருஷ்ணர் ஓர் இளவரசராக இருந்தார். எனவே அவரது குழந்தைகள் எங்கிருந்து வந்தார்கள்? தந்தை கூறுகிறார்: நான் ஒரு வயோதிபரின் சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். இது சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமயநூல்களிலே இருக்கின்ற அனைத்து விடயங்களும் சரியானவையல்ல. சில விடயங்கள் சரியானவை. பிரம்மாவின் ஆயுட்காலம், பிரஜாபிதா பிரம்மாவின் ஆயுட்காலம் என அழைக்கப்படும். அது இந்நேரத்திலேயே நிச்சயமாக இருக்கும். பிரம்மாவின் ஆயுட்காலம் மரண பூமியிலே முடிவடைந்துவிடும். இது அமரத்துவ உலகம் அல்ல. இது அதி மங்களகரமான சங்கம யுகம் என அழைக்கப்படுகிறது. இது, குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவருடைய புத்தியிலும் இருக்க முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களுக்கு உங்கள் பிறவிகளைப் பற்றித் தெரியாது. நான் உங்களுக்கு நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதைக் கூறுகிறேன். எனவே, இப்பொழுது உங்களுக்கு அதைப் பற்றித் தெரியும். ஒவ்வொரு யுகமும் 1250 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும் நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையான பிறவிகளை எடுக்கிறீர்கள். 84 பிறவிகளின் கணக்கு உள்ளது. 8.4 மில்லியன் பிறவிகளின் கணக்கு இருக்க முடியாது. இது 84 பிறவிகளின் சக்கரம் என அழைக்கப்படுகிறது. 8.4 மில்லியன் பிறவிகளுக்கான எதையும் எவராலும் நினைவில் வைத்திருக்க முடியாது. இங்கே அத்தகைய எல்லையற்ற துன்பம் இருக்கிறது. எனவே எவ்வாறு குழந்தைகள் தொடர்ந்தும் பிறவியெடுத்து, அதிகளவு துன்பத்தைக் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இது ஆழ் நரகம் என அழைக்கப்படுகின்றது. இது முற்றிலும் அசுத்தமான உலகமாகும். நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எமது பாவங்கள் அழிக்கப்பட்டால், நாங்கள் தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுவோம். இப்பொழுது நீங்கள் எந்தப் பாவத்தையும் செய்யக்கூடாது. காம வாளை ஒருவர் மீது ஒருவர் பிரயோகித்தலே ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக, இறுதிவரை துன்பத்தை விளைவிப்பதாகும். இராவண இராச்சியம் இப்பொழுது முடிவடையப் போகிறது. இது இப்பொழுது கலியுக இறுதியாகும். இறுதி யுத்தமாகிய, மாபெரும் மகாபாரதப் போர் உள்ளது. அதன்பின்னர், எந்தவிதமான யுத்தம் போன்றவையும் இருக்காது. அங்கே அவர்கள் யாகங்கள் முதலியவற்றை வளர்க்க மாட்டார்கள். மக்கள் யாகம் வளர்க்கும்பொழுது, தங்கள் அர்ப்பணங்களை இடுகின்ற, தீயை வளர்க்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பழைய பொருட்கள் அனைத்தையும் அர்ப்பணம் செய்கிறீர்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார்: இது உருத்திரரின் ஞான யாகம். சிவனே உருத்திரர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் உருத்திரரின் மாலையைப் பற்றிப் பேசுகிறார்கள். துறவறப் பாதையிலே இருப்பவர்களிற்கு, இல்லறப் பாதையின் சம்பிரதாயங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர்கள் வெறுமனே வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து, காடுகளுக்குச் செல்கிறார்கள். அதன் பெயரே துறவறமாகும். எதன் துறவறம்? வீடு, குடும்பம் ஆகியவற்றின் துறவறம். அவர்கள் வெறும் கையுடன் செல்கிறார்கள். முதலில் குருமார் அவர்களைப் பெருமளவு சோதித்து, அனைத்து வேலைகளையும் செய்ய வைத்தார்கள். முன்னர், அவர்கள் மாவையே தானமாக ஏற்றுக் கொள்வார்கள்; அவர்கள் சமைத்த உணவை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் காட்டிலே வாழ வேண்டும். எனவே அங்கே அவர்களுக்கு நிலக்கீழ் மரக்கறிகளும், பழங்களுமே கிடைக்கும். சதோபிரதானாக இருந்தபொழுது, சந்நியாசிகள் அதை உட்கொண்டார்கள் என நினைவுகூரப்படுகிறது. இந்தக் காலத்திலே அவர்கள் தொடர்ந்தும் என்ன செய்கிறார்கள் என்பதைக் கேட்கவே வேண்டாம்! இது விகார உலகம் என அழைக்கப்படுகின்றது. அதுவோ விகாரமற்ற உலகம். எனவே, நீங்கள் விகாரம் நிறைந்தவர்கள் (விகாரத்திலே ஈடுபடுபவர்கள்) என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: சத்திய யுகமே, விகாரமற்ற உலகான, சிவாலயம் என அழைக்கப்படுகின்றது. இங்கே அனைவரும் தூய்மையற்ற மனிதர்கள். இதனாலேயே, அவர்கள் தம்மைத் தேவர்கள் என அழைப்பதற்குப் பதிலாக, தம்மை இந்துக்கள் என அழைக்கிறார்கள். தந்தை தொடர்ந்தும் இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆதியில் நீங்களே எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியை உங்களுக்குத் தருகிறார். எனவே, தந்தை இனிமையிலும், இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்கள் தலையிலே பிறவிபிறவிகளாகச் செய்த பாவங்கள் இருக்கின்றன. நீங்கள் அப்பாவங்களிலிருந்து விடுதலையடைவதற்கு என்னைக் கூவியழைக்கின்றீர்கள். “ஓ தூய்மையாக்குபவரே” எனச் சாதுக்கள், சந்நியாசிகள் அனைவரும் கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் எதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்வதில்லை. தொடர்ந்தும் அதனைப் பாடி, தமது கரங்களைத் தட்டுகிறார்கள். கடவுளுடன் யோகம் செய்வது எவ்வாறு? அல்லது அவரை எவ்வாறு சந்திக்கலாம் என எவராவது அவர்களிடம் வினவினால், அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனைவருக்கும் காட்டும் பாதை இதுதானா? வேதங்களையும், சமயநூல்களையும் கற்பதன் மூலம் கடவுளை அடையலாம் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: நான் நாடகத் திட்டப்படி ஒவ்வொரு 5000 வருடங்களிற்கும் ஒருமுறை வருகிறேன். தந்தையைத் தவிர வேறெவருக்கும் இந்த நாடகத்தின் இரகசியங்கள் தெரியாது. இது நூறாயிரக் கணக்கான ஆண்டுகளிற்கான நாடகமாக இருக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இது 5000 ஆண்டுகளைப் பற்றிய விடயமாகும். பாபாவும் முன்னைய சக்கரத்திலே உங்களுக்கு ‘மன்மனாபவ!’ எனக் கூறினார். இதுவே மகா மந்திரமாகும். இந்த மந்திரத்தாலேயே நீங்கள் மாயையை வெல்ல முடியும். அதன் அர்த்தத்தைத் தந்தை மட்டுமே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதன் அர்த்தத்தை வேறெவராலும் விளங்கப்படுத்த முடியாது. ‘அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒருவரே’ எனவும் நினைவு கூரப்படுகிறது. அது ஒரு மனிதனுக்கோ, அல்லது தேவருக்;கோ பொருந்தாது. அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. அங்கே எவரும் வழிபாடு செய்வதில்லை. கடவுளை சந்திப்பதற்காகவே வழிபாடு செய்யப்படுகிறது. சத்திய யுகத்திலே பக்தி எதுவுமே இல்லை. ஏனெனில், அவர்கள் தமது 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெற்றிருப்பார்கள். ‘துன்ப வேளையிலே அனைவரும் கடவுளை நினைவுசெய்கிறார்கள்’ என இதனாலேயே நினைவுகூரப்படுகிறது. இங்கே எல்லையற்ற துன்பம் இருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள்: கடவுளே, கருணை காட்டுங்கள்! துன்பம் நிறைந்த, இக் கலியுக பூமி சதா காலமும் இருக்காது. சத்திய, திரேதா யுகங்கள் கடந்த காலம் ஆகிவிட்டன. அவை மீண்டும் தோன்றும். எவராலும் நூறாயிரக் கணக்கான ஆண்டுகளிற்கான எதனையும் நினைவில் வைத்திருக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்களுக்கு அனைத்து ஞானத்தையும் தருகிறார். அவர் உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதுடன், உங்களுக்குப் படைப்பின் ஆரம்ப, மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறார். அது 5000 ஆண்டுகளைப் பற்றிய விடயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அந்நிய இராச்சியத்தில் இருக்கிறீர்கள். முன்னர் உங்களுக்கு உங்களுடைய சொந்த இராச்சியம் இருந்தது. இங்கே, மக்கள் ஆயுதத்தால் போராடுவதனாலும், வன்முறையாலும் தங்கள் இராச்சியத்தைப் பெறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியால், உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சதோபிரதான் உலகம் தேவை. பழைய உலகம் முடிவடைந்து, புதிய உலகமாகும். இது கலியுகத்துப் பழைய உலகம் என அழைக்கப்படுகிறது. சத்திய யுகமே புதிய உலகம் ஆகும். எவருக்கும் இது தெரியாது. இவை அனைத்தும் உங்கள் கற்பனை எனச் சந்நியாசிகள் கூறுகிறார்கள். இங்கேயே சத்திய யுகம் இருக்கிறது எனவும், இங்கேயே கலியுகம் இருக்கிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: தந்தையை அறிந்த ஒரு மனிதரேனும் இல்லை. அவர்கள் எவராவது அவரை அறிந்திருந்தால், அவரது அறிமுகத்தைக் கொடுப்பார்கள். சத்திய, திரேதா யுகங்கள் என்றால் என்ன என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. தந்தை தொடர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். தந்தைக்கு அனைத்தும் தெரியும். அவரே ஜனிஜனன்ஹார், அதாவது, அவர் ஞானம் நிறைந்தவர். அவரே மனித உலக விருட்சத்தின் விதை. அவரே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவார். அவரிடமிருந்தே நாம் ஓர் ஆஸ்தியைப் பெறப் போகிறோம். தந்தை ஞானத்திலே உங்களைத் தனக்குச் சமமானவர் ஆக்குகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான காலம் ஆகும். எனவே, நீங்கள் இப்பொழுது எந்தப் பாவங்களையும் செய்யக்கூடாது, இந்த உருத்திரரின் யாகத் தீயிலே பழைய பொருட்கள்; அனைத்தையும் அர்ப்பணியுங்கள்.

2. இது இப்பொழுது நீங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியாகும். எனவே, தந்தையையும் ஆசிரியரையும் நினைவுசெய்வதுடன், சற்குருவையும் நினைவுசெய்யுங்கள். இனிய வீட்டிற்குச் செல்வதற்கு, ஆத்மாவைச் சதோபிரதான் (தூய்மையாக) ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களைப் பற்றிய தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் சூட்சுமமான பலவீனங்களைப் பற்றிச் சிந்தித்து, அவற்றை மாற்றுவீர்களாக.

இந்த ஞானக் கருத்துக்களை மீண்டும் ஒப்புவித்தல், அவற்றைக் கூறுதல் அல்லது கேட்டல் என்பது உங்களைப் பற்றிய தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதல்ல. உங்களைப் பற்றிய தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதென்றால், உங்களின் சூட்சுமமான பலவீனங்களையும் உங்களின் மிகச் சிறிய தவறுகளையும் பற்றிச் சிந்தித்து, அவற்றை முடித்து விடுதல் அல்லது மாற்றுதல் என்று அர்த்தம். இதுவே உங்களைப் பற்றிய தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்பதன் அர்த்தம். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கடைகிறீர்கள். ஆனால், இந்த ஞானத்தை உங்களுக்காகப் பயன்படுத்தி, உங்களை மாற்றி, தாரணையின் சொரூபம் ஆகும்போதே, நீங்கள் இறுதிப் பெறுபேறுகளில் மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
ஒவ்வொரு கணமும் கரன்கரவன்ஹாரை நினைவு செய்யுங்கள். உங்களுக்குள் 'நான்' என்ற எந்தவிதமான அகங்கார உணர்வும் ஏற்படாது.