15.12.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 28.02.2003 Om Shanti Madhuban
சேவை செய்வதுடன்கூடவே, சம்பூரணம் ஆகுவதற்கும் திட்டங்களைச் செய்யுங்கள். கர்மாதீத் ஆகுவதற்கான ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
இன்று, தந்தை சிவன், தனது அவதாரத்தினதும் அத்துடன் குழந்தைகளான உங்களுடையதும் ஜயந்தியை (பிறந்தநாள்) தனது சாலிகிராம் குழந்தைகளுடன் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். அவதாரத்தின் ஜயந்தி மிகவும் அற்புதமானது. எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரும் தந்தையின் ஜயந்தியையும் தமது சொந்த ஜயந்தியையும் கொண்டாடுவதற்காக ஓடோடி வந்துள்ளார்கள். ஜயந்தி, அதாவது, தந்தையின் அவதார நாளும் குழந்தைகளின் அவதார நாளும் ஒன்றே. தந்தையின் பிறந்தநாளும் குழந்தைகளின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவது அற்புதமே. எனவே, இன்று, சாலிகிராம் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்தீர்களா அல்லது அவற்றைப் பெற வந்தீர்களா? நீங்கள் அவற்றை வழங்க வந்துள்ளீர்கள். அத்துடன் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் வந்துள்ளீர்கள். இவை இரண்டும் ஒன்றாக இருப்பதென்பது, உங்களுக்கும் தந்தைக்கும் இடையே அதிக, அதிக, அதிகளவு அன்பு உள்ளது என்பதன் அடையாளமாகும். இதனாலேயே, உங்களின் பிறந்தநாட்கள் ஒன்றாக உள்ளன. அத்துடன், நீங்கள் உங்களின் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைந்தே இருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் ஒன்றாகவே இருக்கிறீர்கள். இத்தகைய அன்பை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? உங்களின் தொழிலைப் பொறுத்தவரை, தந்தையின் தொழிலும் குழந்தைகளின் தொழிலும் உலகை மாற்றுவதேயாகும். நீங்கள் என்ன சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்? நீங்கள் ஒன்றாகவே பரந்தாமத்திற்கு, உங்களின் இனிய வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள் என்பதேயாகும். அல்லது, நீங்கள் பிந்திச் செல்வீர்களா? நீங்கள் ஒன்றாகச் செல்லவே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? எனவே, உங்களுக்கும் தந்தைக்கும் இடையே அத்தகைய அன்பு உள்ளது. தந்தையாலோ அல்லது குழந்தைகளாலோ தனித்து எதையும் செய்ய முடியாது. உங்களால் எதையாவது செய்ய முடியுமா? தந்தை இன்றி, உங்களால் எதையாவது செய்ய முடியுமா? தந்தையாலும் எதையும் செய்ய முடியாது. இதனாலேயே, பிராமணக் குழந்தைகளான உங்கள் எல்லோரையும் உருவாக்குவதற்காக அவர் தந்தை பிரம்மாவின் ஆதாரத்தை எடுத்துள்ளார். பிராமணர்கள் இல்லாமல், தந்தையாலும் எதையும் செய்ய முடியாது. இதனாலேயே, இந்த அலௌகீக அவதாரப் பிறந்தநாளில், தந்தை உங்களுக்கும், குழந்தைகளான நீங்கள் தந்தைக்கும் பலமில்லியன் மடங்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்குகிறீர்கள். நீங்கள் இவற்றைத் தந்தைக்கு வழங்குகிறீர்கள். தந்தை உங்களுக்கு இவற்றை வழங்குகிறார். அமிர்தவேளையில் இருந்து, அதற்கு முன்பிருந்தே, தந்தை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வாழ்த்து மடல்களையும் கடிதங்களையும் இதயபூர்வமான இனிய பாடல்களையும் பெற்றுள்ளார். இப்போதும், இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோரும் பாப்தாதாவிற்கு சூட்சுமமான முறையில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதை பாப்தாதா பார்க்கிறார். அவை இங்கே வந்தடைகின்றன. இந்த ஒலி (ஒலிபரப்பு) குழந்தைகளைச் சென்றடைகிறது. குழந்தைகளின் இதய சத்தம் தந்தையை வந்தடைகிறது. எல்லா இடங்களிலும் குழந்தைகள் சந்தோஷ நடனம் ஆடுகிறார்கள். ‘ஆஹா பாபா! ஆஹா, சாலிகிராம் ஆத்மாக்களான நாங்கள்!’ நீங்கள் எல்லோரும் ஆஹா, ஆஹா! என்ற பாடல்களைப் பாடுகிறீர்கள். உங்களுடைய இந்தப் பிறந்தநாளின் ஞாபகார்த்தத்தைப் பக்தர்கள் துவாபர யுகத்தில் இருந்து இன்றுவரை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பக்தர்களும் அவர்களின் அன்பான பக்தியில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. எவ்வாறாயினும், அவர்கள் பக்தர்கள். அவர்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள். நீங்கள் கல்பம் முழுவதிலும் ஒரு தடவையே அவதாரத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். அவர்கள் விரதம் இருக்கிறார்கள், அத்துடன் சத்தியமும் செய்கிறார்கள். நீங்கள் ஒரு தடவையே சத்தியம் செய்கிறீர்கள். அவர்கள் உங்களைப் பிரதி செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும் அவர்களின் ஞாபகார்த்தத்தின் முக்கியத்துவத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அவர்களும் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் மட்டுமே அதைச் செய்கிறார்கள். நீங்கள் எல்லோரும் இந்தத் தூய்மைக்கான சத்தியத்தை, நீங்கள் பிறப்பெடுத்த கணத்தில் ஒரு தடவை மட்டுமே செய்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் அதைச் செய்தீர்களா அல்லது இன்னமும் அதைச் செய்ய வேண்டியுள்ளதா? நீங்கள் அதைச் செய்தீர்கள். நீங்கள் அதை ஒரு தடவை செய்தீர்கள். அவர்கள் அதை ஒவ்வொரு வருடமும் செய்கிறார்கள். நீங்கள் எல்லோரும் அதைச் செய்தீர்களா? நீங்கள் பிரம்மச்சரியத்தின் சத்தியத்தை மட்டும் செய்யவில்லை, ஆனால், சம்பூரணமான தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். பாண்டவர்களே, நீங்கள் சம்பூரணமான தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? அல்லது, பிரம்மச்சரியம் மட்டும் போதுமா? பிரம்மச்சரியமே அத்திவாரம் ஆகும். பிரம்மச்சரியம் மட்டுமல்ல, அத்துடன் ஏனைய நான்கு விகாரங்களும் உள்ளன. நீங்கள் ஏனைய நான்கிற்கும் சத்தியம் செய்தீர்களா அல்லது ஒன்றிற்கு மட்டும்தானா? இதைச் சோதியுங்கள். கோபப்படுவதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதல்லவா? உங்களுக்கு அந்தச் சுதந்திரம் இல்லையா? நீங்கள் சிறிது கோபப்பட வேண்டுமா? நீங்கள் கோபப்பட வேண்டியதில்லையா? பாண்டவர்களே பேசுங்கள்! நீங்கள் கோபப்பட வேண்டியதில்லையா? நீங்கள் கோபப்பட வேண்டியுள்ளது! ஓகே, பாப்தாதா கோபத்தையும் அதன் சகபாடிகளையும் பார்;த்திருக்கிறார். நீங்கள் மகத்தான தீய ஆவியைத் துறந்துவிட்டீர்கள். குடும்பத்திலுள்ள தாய்மார்களுக்குத் தமது வளர்ந்த வயதான குழந்தைகளின் மீது அந்தளவு அன்போ அல்லது பற்றோ இருப்பதில்லை. ஆனால், தமது பேரக்குழந்தைகளின் மீது அவர்களுக்கு அதிகளவு அன்பு இருக்கிறது. சிறுவர்கள் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள். அதேபோல், ஐந்து விகாரங்களில் மிகப்பெரும் தீய ஆவியின் மீது குழந்தைகளான நீங்கள் கொண்டிருக்கும் அன்பு குறைந்துள்ளது, ஆனால் இன்னமும் அந்த விகாரங்களின் பிள்ளைகளின் மீது, அதாவது, விகாரங்களின் சிறிய சுவடுகளின் மீதும் சந்ததியின் மீதும் உங்களுக்கு அன்பிருப்பதை பாப்தாதா பார்த்தார். உங்களுக்கு அவற்றின் மீது அன்பு இருக்கிறதா? சிலவேளைகளில், அவற்றின் மீது அன்பு இருக்கிறது. அவற்றின் மீது அன்பு இருக்கிறதா? தாய்மார்களே? இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களுக்குக் கோபம் வருவதில்லையா? சிலர் பாபாவிடம் மிகுந்த கெட்டித்தனத்துடன் பேசுகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாபா உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை இன்றே துறக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தயாரா? அவற்றைத் துறப்பதற்கு நீங்கள் தயாரா? அல்லது, நீங்கள் ஒவ்வொரு வருடமும் செய்வதைப் போல், உங்களின் பைலில் கடதாசிகளைச் சேர்த்துக் கொள்வீர்களா? தந்தையிடம் உள்ள, உங்களின் சத்தியங்களின் பைல் மிக, மிகப் பெரியதாகிவிட்டது. அதனால், இப்போதும் உங்களின் சத்தியங்களுக்கான பைலில் மேலும் ஒரு கடதாசியைச் சேர்க்க மாட்டீர்கள்தானே? நீங்கள் அதை முடிவிற்குக் கொண்டுவருவீர்களா அல்லது பைலில் சேர்த்துக் கொள்வீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? பேசுங்கள், ஆசிரியர்களே, நீங்கள் என்ன செய்வீர்கள்? முடிவிற்குக் கொண்டுவருவீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! வெறுமனே சத்தியம் செய்யாதீர்கள். அவ்வாறாயின், பாப்தாதா ஒரு கடும் ரூபத்தை எடுக்க வேண்டியிருக்கும். இது ஓகேயா? இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் அதை முடிவிற்குக் கொண்டுவருவீர்களா? அதை முடிவிற்குக் கொண்டு வருபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதைத் தொலைக்காட்சியில் பதிவு செய்யுங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள், பதிவாக அல்ல! துவாபர யுகத்து முறையில் அல்ல. அச்சா. இது சரிதானே?
ஓகே, கேளுங்கள்! தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உரையாடல்கள் எவை? பாப்தாதா தொடர்ந்து புன்னகை செய்தார். தந்தை கேட்கிறார்: ஏன் நீங்கள் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: நான் கோபப்படவில்லை, ஆனால் எனக்குக் கோபம் ஊட்டப்பட்டது. நான் அதைச் செய்யவில்லை, ஆனால், எனக்குக் கோபம் ஊட்டப்பட்டது. எனவே, தந்தை இப்போது என்ன சொல்லட்டும்? அதன்பின்னர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘நீங்களாக இருந்திருந்தால், நீங்களும் கோபப்பட்டிருப்பீர்கள்’. நீங்கள் மிகவும் இனிய விடயங்களைக் கூறுகிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் சொல்கிறீர்கள்: அசரீரியாக இருப்பதில் இருந்து, ஒரு பௌதீக சரீரத்தை எடுத்துப் பாருங்கள், உங்களுக்கே தெரியும்! எனவே, இப்போது சொல்லுங்கள், இத்தகைய இனிய குழந்தைகளுக்குத் தந்தை என்ன சொல்லட்டும்? எவ்வாறாயினும், தந்தை கருணைநிறைந்தவர் ஆகவேண்டியுள்ளது. அவர் கூறுகிறார்: ஓகே, நான் இப்போது உங்களை மன்னிக்கிறேன். ஆனால், அதை எதிர்காலத்தில் செய்யாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மிக நல்ல பதில்களைக் கொடுக்கிறீர்கள்.
எனவே, தூய்மையே பிராமணர்களான உங்களின் அலங்காரங்கள் அனைத்திலும் மகத்தானதாகும். இதனாலேயே, அவர்கள் உங்களின் ரூபங்களை அதிகளவில் அலங்கரிக்கிறார்கள். அந்த அலங்காரங்கள் உங்களின் தூய்மையின் ஞாபகார்த்தங்கள்: சம்பூரணமான தூய்மை, பெயரளவில் தூய்மை கிடையாது. சம்பூரணமான தூய்மையே உங்களின் பிராமண வாழ்க்கையில் அனைத்திலும் மகத்தான சொத்து, இராஜரீகம் மற்றும் ஆளுமையாகும். இதனாலேயே, பக்தர்களும் ஒரு நாள் தூய்மைக்கான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பிரதி செய்துள்ளார்கள். அவர்கள் தமது உணவு, பானத்திலும் விரதம் இருக்கிறார்கள். உணவை விடுக்கும் விரதமும் அவசியமானதே. ஏன்? பிராமணர்களான நீங்களும் உங்களின் உணவு, பானத்தில் உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? உங்களின் மதுவனப் படிவங்களை நிரப்பும்படி உங்கள் எல்லோரையும் கேட்கும்போது, உங்களின் உணவு முறைகள் அனைத்தும் தூயதாக இருக்கின்றனவா என்றும் கேட்கப்படுகிறீர்கள். உங்களிடம் இது கேட்கப்படுகிறதல்லவா? எனவே, உணவு, பானத்தைப் பொறுத்தவரை, உங்களின் விரதம் உறுதியானதுதானே? அது உறுதியாக உள்ளதா அல்லது சிலவேளைகளில் அது பலவீனம் அடைகிறதா? இரட்டை வெளிநாட்டவர்களுக்கு, அது இரட்டை உறுதியாக இருக்க வேண்டும். அது இரட்டை உறுதியாக உள்ளதா? அது இரட்டை வெளிநாட்டவர்களுக்கு உறுதியாக உள்ளதா? அது இரட்டை உறுதியாக உள்ளதா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் களைப்படைந்து, ‘ஓகே, பரவாயில்லை, இன்று நான் வெளியே ஏதாவது சாப்பிடுவேன்’ எனக் கூறுகிறீர்களா? நீங்கள் சிறிதளவு பின்தங்குவதில்லைத்தானே? உங்களின் உணவிலும் பானத்திலும் உறுதியாக இருக்கிறீர்களா? இதனாலேயே, பக்தர்களும் தமது உணவுமுறைகளில் விரதத்;தைக் கடைப்பிடிக்கிறார்கள். மூன்றாவது சத்தியம், இரவு முழுவதும் விழித்திருப்பதாகும். (ஜாக்ரன்). அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். பிராமணர்களான நீங்கள் அறியாமை நித்திரையில் இருந்து விழித்திருப்பதற்கான சத்தியத்தைச் செய்கிறீர்கள். இடையில் உங்களுக்கு ஏதாவது அறியாமை நித்திரை வருவதில்லைத்தானே? பக்தர்கள் உங்களைப் பிரதி செய்கிறார்கள். நீங்கள் மிகவும் உறுதியாக இருப்பதனாலேயே, அவர்கள் உங்களைப் பிரதி செய்கிறார்கள். உங்களிடம் அறியாமை நித்திரை, அதாவது, பலவீனம், கவனயீனம் அல்லது சோம்பேறித்தனத்தின் நித்திரை எதுவும் இருக்கக்கூடாது. அல்லது, நீங்கள் சிறிது தூங்கி விழுந்தால் பரவாயில்லையா? நீங்கள் சிலவேளைகளில் தூங்கி விழுகின்றீர்களா? சிலர் அமிர்த வேளையிலும் தூங்கி வழிகிறார்கள். எவ்வாறாயினும், உங்களின் ஞாபகார்த்தங்களில் உங்களிடம் இருந்து பக்தர்கள் எதைப் பிரதி செய்கிறார்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். என்னதான் நடந்தாலும், தமது சத்தியத்தை மீறக்கூடாது என அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த நாளில், பக்தர்கள் தமது உணவிலும் பானத்திலும் ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். நீங்கள் இன்று என்ன செய்வீர்கள்? நீங்கள் பிக்னிக் செல்வீர்களா? அவர்கள் விரதம் இருப்பார்கள். நீங்கள் பிக்னிக் செல்வதுடன், கேக் ஒன்றையும் வெட்டுவீர்கள். நீங்கள் பிறவியில் இருந்தே சத்தியத்தைச் செய்திருப்பதனால் பிக்னிக் செல்வீர்கள். இதனாலேயே, இன்று, நீங்கள் பிக்னிக் செல்வீர்கள்.
குழந்தைகளான உங்களிடம் இருந்து பாப்தாதாவிற்கு இப்போது என்ன வேண்டும்? உங்களுக்கு இது தெரியும். உங்களிடம் மிக நல்ல எண்ணங்கள் உள்ளன. உங்களிடம் எத்தகைய நல்ல எண்ணங்கள் ஏற்படுகின்றதென்றால், பாபா அவற்றைக் கேட்கும்போது மிகுந்த சந்தோஷம் அடைகிறார். உங்களுக்குள் எண்ணம் ஏற்படுகிறது, ஆனால் பின்னர் என்ன நடக்கிறது? ஏன் உங்களின் எண்ணங்கள் பலவீனமாகுகின்றன? தந்தையின் மீது அதிகளவு அன்பு உங்களுக்கு இருப்பதனால், நீங்கள் எதையாவது செய்ய விரும்புகிறீர்கள். குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் பாப்தாதாவின் மீது உங்களின் இதயபூர்வமாக அதிகளவு அன்பு உள்ளது என்பதைத் தந்தையும் அறிவார். நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்தி, உங்களிடம் 100 சதவீதமான அன்பு மட்டுமல்ல, ஆனால் 100 சதவீதத்தை விட அதிகமான அன்பு உள்ளது எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் அன்பிலே சித்தி எய்துள்ளீர்கள் என்பதைத் தந்தையும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால்... ஏன் இந்த ஆனால்? உங்களுக்கு அன்பு இருக்கிறதா இல்லையா? ஆனால் என்பது இருக்கிறதா இல்லையா? பாண்டவர்களே, ஆனால் என்பது இருக்கிறதா? சிலவேளைகளில் இடையில் ஒரு ஆனால் வருகிறதா? நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் இல்லை. எனவே, இதன் அர்த்தம் ஆம் என்பதேயாகும். பாப்தாதா ஒரு விடயத்தைக் கவனித்தார். பெரும்பாலானோருக்கு, இந்தச் சத்தியம் பலவீனம் ஆகுவதற்காக ஒரு காரணம் காணப்படுகிறது. அது ஒரேயொரு வார்த்தையே. அந்த ஒரு வார்த்தை என்னவென்று சிந்தியுங்கள். ஆசிரியர்களே, பேசுங்கள்! அந்த ஒரு வார்த்தை என்ன? பாண்டவர்களே, பேசுங்கள்! அந்த ஒரு வார்த்தை என்ன? உங்களுக்கு அது ஞாபகம் வருகிறதல்லவா? அந்த ஒரு வார்த்தை ‘நான்’ என்பதாகும். ‘நான்’ என்ற வார்த்தை அகம்பாவத்தின் வடிவிலும் அத்துடன் உங்களைப் பலவீனமாக்கும் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது. நான் கூறியது, நான் செய்தது, நான் புரிந்து கொண்டது, அது மட்டுமே சரி. அதுதான் நடக்க வேண்டும். இதுவே ‘நான்’ என்ற அகம்பாவம் ஆகும். அந்த ‘நான்’ நிறைவேறாதபோது, மனச்சோர்வு அடையும் ‘நான்’ என்பதும் உள்ளது: என்னால் இதைச் செய்ய முடியாது. என்னால் தொடர முடியாது. இது மிகவும் கஷ்டம். சரீர உணர்வின் ‘நான்’ என்பது மாற வேண்டும். ‘நான்’ என்பது உங்களின் சுயமரியாதையை நினைப்பூட்டக்கூடியது, ‘நான்’ என்பது உங்களைச் சரீர உணர்வுடையவராகவும் ஆக்கக்கூடியது. ‘நான்’ உங்களை மனச்சோர்வு அடையச் செய்யும். ‘நான்’ உங்களின் இதயத்தில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். அகம்பாவத்தின் அடையாளம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாராவது ஒருவருக்கு சரீர உணர்வின் சிறிதளவு சுவடேனும் இருந்தால், அதன் அடையாளம் என்ன? அவரால் அவமரியாதையைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அகம்பாவம் உங்களை இகழ்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல் செய்துவிடும். இது சரியில்லை, சிறிது பணிவானவர் ஆகவேண்டும் என யாராவது சிறிதளவு உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அவமதிக்கப்பட்டதாகவே உணர்வீர்கள். இதுவே அகம்பாவத்தின் அடையாளம் ஆகும்.
பாப்தாதா சூட்சும வதனத்தில் புன்னகை செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் எங்கும் சிவராத்திரியைப் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றுகிறார்கள். நீங்கள் எங்கும் சிவராத்திரியைப் பற்றிய அதிகளவு சொற்பொழிவுகளை வழங்குகிறீர்கள்தானே? அவற்றில் குழந்தைகளான நீங்கள் பயன்படுத்தும் ஒரு கருத்தை பாப்தாதா நினைவு செய்தார். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘சிவராத்திரி தினத்தில், ஓர் ஆடு பலி கொடுக்கப்படுகிறது. அது அதிகளவில் மே, மே எனக் கூறுகிறது. ஆடு மே, மே எனக் கூறுவதால், இதை (நான், நான்) சிவராத்திரியின் போது பலி கொடுங்கள்'. இதைக் கேட்டபோது தந்தை புன்னகை செய்தார். ஆகவே, நீங்களும் இந்த ‘நான்’ (மே) என்பதைப் பலி கொடுக்க வேண்டும். உங்களால் அதை அர்ப்பணிக்க முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? பாண்டவர்களே, உங்களால் அதைச் செய்ய முடியுமா? இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களால் இதைச் செய்ய முடியுமா? முழுமையாக அர்ப்பணிப்பதா அல்லது அர்ப்பணிப்பதா? முழுமையான அர்ப்பணிப்பு. இன்று, கொடியை ஏற்றும்போது இத்தகைய சத்தியத்தைச் செய்யும்படி பாப்தாதா செய்ய மாட்டார். இன்று, உங்களின் பைலில் இன்னொரு கடதாசியைச் சேர்ப்பதற்காக உங்களைச் சத்தியம் செய்யும்படி பாபா சொல்ல மாட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தாதிகளே, இன்று அவர்களை இத்தகைய சத்தியத்தைச் செய்யும்படி சொல்லுவோமா? நீங்கள் அதை முடிவாக ஆக்குவீர்களா? அல்லது, உங்களின் பைலில் இன்னொரு கடதாசித் துண்டைச் சேர்த்துக் கொள்வீர்களா? பேசுங்கள்! (அவற்றை முடிவிற்குக் கொண்டுவருவோம்). உங்களுக்குத் தைரியம் உள்ளதா? உங்களிடம் தைரியம் இருக்கிறதா? நீங்கள் இதைக் கேட்பதில் மிக ஆழமாக மூழ்கியிருப்பதனால், உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. நாளை எதுவும் நடக்காதுதானே? அது நடக்காதுதானே? நாளை, மாயை வருவாள். அவள் சுற்றுலாவில் வருவாள். மாயைக்கும் உங்களின் மீது அன்பு உள்ளது. ஏனென்றால், நீங்கள் எல்லோரும் அதிகளவு பகட்டாகவும் கோலாகலமாகவும் சேவை செய்வதற்குத் திட்டங்கள் செய்கிறீர்கள். நீங்கள் மிகுந்த கோலாகலமாக சேவை செய்வதனால், நீங்கள் சம்பூரணமான முழுமைநிலைக்குரிய நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினீர்கள் என நினைக்காதீர்கள், உண்மையில் நீங்கள் நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் நல்ல சேவை செய்கிறீர்கள். பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், காலம் நெருங்கி வருவதையும் பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் அதை நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் 100000 பேரை அல்லது 150000 பேரை மட்டும் ஒன்றாகக் கொண்டு வரவில்லை, ஆனால், காலத்தையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளீர்கள். குஜராத் இதை இப்போது செய்துள்ளனர். பம்பாயும் அதைச் செய்வார்கள். ஏனைய இடங்களும் அதைச் செய்கிறார்கள். ஓகே, 100000 இல்லாவிட்டால், 50000 பேர்களுக்காயினும் நீங்கள் அவர்கள் அனைவருக்கும் செய்தியை வழங்குகிறீர்கள். எனவே, அத்துடன்கூடவே, சம்பூரணத்திற்கும் நீங்கள் ஆயத்தங்களைச் செய்துவிட்டீர்களா? நீங்கள் அந்த ஆயத்தங்களைச் செய்துவிட்டீர்களா? நீங்கள் விநாசத்தை அழைக்கிறீர்கள். எனவே, நீங்கள் ஆயத்தங்களைச் செய்துவிட்டீர்களா? வெளிப்படுத்தலை விரைவில் கொண்டு வருவதற்கான திட்டங்களை இப்போது செய்ய வேண்டுமா என தாதி ஒரு கேள்வி கேட்டார். பாப்தாதா கூறுகிறார்: வெளிப்படுத்தல் என்பது ஒரு விநாடிக்குரிய விடயம். ஆனால், வெளிப்படுத்தல் நிகழ முன்னர், ஸ்தாபனையைச் செய்பவர்கள் என்றும் தயாரா என பாப்தாதா கேட்கிறார். திரைகளைத் திறக்கலாமா? அல்லது, யாராவது ஒருவர் தனது காதுகளை அலங்கரித்துக் கொண்டும் இன்னொருவர் தனது தலையை அலங்கரித்துக் கொண்டும் இருக்கிறார்களா? நீங்கள் தயாரா? நீங்கள் தயார் ஆகுவீர்கள், ஆனால் எப்போது? ஒரு திகதியைச் சொல்லுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் செய்தியை வழங்க வேண்டும் என இப்போது நீங்கள் ஒரு திகதியை நிச்சயம் செய்திருப்பதைப் போல், நீங்கள் எல்லோரும் என்றும் தயார் ஆகவேண்டும். குறைந்தபட்சம், 16000 பேர் என்றும் தயாராக இருக்க வேண்டும். 900000 ஐ ஒருபுறம் வையுங்கள். குறைந்தபட்சம், 16000 பேர் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தயாரா? பாபா கைதட்டட்டுமா? வெறுமனே ஆம் எனச் சொல்லாதீர்கள். என்றும் தயார் நிலையில் இருங்கள். பாப்தாதா அவர்களைத் தொடுவார். அவர் கைதட்டுவார், பஞ்சபூதங்களும் தமது பணியை ஆரம்பிக்கும், விஞ்ஞானிகள் தமது வேலையை ஆரம்பிப்பார்கள். என்ன தாமதம்? அவர்கள் எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். 16000 பேர் தயாரா? அவர்கள் தயாரா? அது நடக்கும். (உங்களுக்கு எல்லாம் தெரியும்). இந்தப் பதில் உங்களை விடுவிப்பதற்கே ஆகும். பாபாவிற்கு 16000 பேரிடமிருந்து, அவர்கள் என்றும் தயார் என்றும் முழுமையான தூய்மையால் சம்பூரணம் ஆகியுள்ளார்கள் என்றும் அறிக்கை வரவேண்டும். பாப்தாதாவிற்கு கைதட்டுவதற்கு அதிக நேரம் எடுக்காது. ஒரு திகதியைக் கொடுங்கள். (நீங்கள் ஒரு திகதியைக் கூறுங்கள்.) எல்லோரையும் கேளுங்கள். பாருங்கள், இது நடக்கவே வேண்டும். எவ்வாறாயினும், ‘நான்’ என்ற வார்த்தையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உங்களுக்குக் கூறப்பட்டது. அப்போது மட்டுமே உங்களால் தந்தையுடன் திரும்பிச் செல்ல முடியும். இல்லாவிட்டால், நீங்கள் அவருக்குப் பின்னாலேயே செல்ல வேண்டியிருக்கும். ஆகவே, பாப்தாதா இப்போது வாயில்களைத் திறக்கவில்லை. ஏனென்றால், நீங்கள் அவருடனேயே திரும்பிச் செல்ல வேண்டும்.
வாயில்களைத் திறப்பதற்காக ஒரு திகதியைக் கொடுக்கும்படி தந்தை பிரம்மா குழந்தைகள் எல்லோரிடமும் கேட்கிறார். நீங்கள் வாயில்களைத் திறக்க விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள்தானே? இன்று கொண்டாடுவதென்றால், அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். நாம் கேக் வெட்டுவது மட்டுமன்றி, ‘நான்’ என்பதையும் முடித்துவிடுவோம். நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களா அல்லது ஏற்கனவே அதைப் பற்றிச் சிந்தித்து விட்டீர்களா? எல்லோருடைய பல வகையான எண்ணங்களும் அமிர்த வேளையில் பாப்தாதாவை வந்தடைகின்றன. எனவே, இதை உங்களுக்கிடையே கலந்துரையாடி, பாபாவிற்கு அந்தத் திகதியைக் கொடுங்கள். நீங்கள் ஒரு திகதியை நிச்சயம் செய்யும்வரை, உங்களால் அந்தப் பணியை நிறைவேற்ற முடியாது. அனைத்திற்கும் முதலில், மகாராத்திகள் ஒரு திகதியை நிச்சயம் செய்ய வேண்டும். அதன்பின்னர், ஏனைய அனைவரும் பின்பற்றுவார்கள். உங்களைப் பின்பற்றுபவர்கள் தயாராக இருக்கிறார்கள். உங்களின் தைரியத்தால், அவர்கள் மேலதிக சக்தியைப் பெறுவார்கள். உதாரணமாக, நீங்கள் இப்போது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கினீர்கள். எனவே, அவர்கள் தயார் ஆகினார்கள். ஆகவே, இப்போது சம்பூரணம் அடைவதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். நீங்கள் கர்மாதீத் ஆகவேண்டும் என்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள். என்னதான் நடந்தாலும், நீங்கள் இப்படி ஆகவேண்டும். நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இது நடக்க வேண்டும். விஞ்ஞானிகளின் சத்தமும் விநாசத்தை ஏற்படுத்தப் போகின்றவர்களின் சத்தமும் தந்தையின் காதுகளை வந்தடைகின்றன. அவர்களும் கேட்கிறார்கள்: ‘நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்?’ முன்னோடிக் குழுவும் ஒரு திகதியை நிச்சயம் செய்யும்படி கேட்கிறார்கள். ஆகவே, ஒரு நாளை நிச்சயம் செய்யுங்கள். தந்தை பிரம்மாவும் ஒரு திகதியைக் குறிக்கும்படி கேட்கிறார். எனவே, இந்த மீட்டிங்கை வையுங்கள்.
அதிகளவு துன்பத்தைக் காண பாப்தாதாவால் தாங்க முடியவில்லை. அனைத்திற்கும் முதலில், சக்திகளும் பாண்டவர்களும் உங்களின் தேவ ரூபங்களில் கருணை கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை அதிகளவில் அழைக்கிறார்கள். அவர்கள் அப்படி அழைக்கும் ஒலி, உங்களின் காதுகளில் எதிரொலிக்க வேண்டும். ‘காலத்தின் அழைப்பு’ என்ற நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்துகிறீர்கள். இப்போது, பக்தர்களின் அழைப்பைக் கேளுங்கள். துன்பத்தை அனுபவிப்பவர்களின் அழைப்பைக் கேளுங்கள். சேவையில் உங்களுக்கு நல்லதோர் இலக்கம் உள்ளது. அதற்காக பாப்தாதா உங்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகிறது. குஜராத் முதலாம் இலக்கத்தைப் பெற்றுள்ளார்கள். ஆகவே, முதலாம் இலக்கத்தில் வந்ததற்குப் பாராட்டுக்கள். இப்போது, குறைந்தபட்சம் அவர்களின் அழைப்பில் சிறிதளவையேனும் கேளுங்கள். அந்த அப்பாவி, ஆதரவற்றவர்கள் அதிகம் அழைக்கிறார்கள். அவர்கள் தமது இதயபூர்வமாக அழைக்கிறார்கள். அவர்கள் பரிதவிக்கிறார்கள். விஞ்ஞானிகளும் அதிகளவில் சத்தமிடுகிறார்கள்: அதை எப்போது செய்வது? நாம் அதை எப்போது செய்வது? அதை எப்போது செய்ய வேண்டும்? அவர்கள் அழைக்கிறார்கள். நீங்கள் இன்று கேக் வெட்டலாம். ஆனால், நாளையில் இருந்து, அவர்களின் அழைப்பைக் கேளுங்கள். கொண்டாட்டம் என்பது சங்கமயுகத்தின் திருவிழா ஆகும். ஒருபுறம், கொண்டாடுங்கள். மறுபுறம், அந்த ஆத்மாக்களை உருவாக்குங்கள். அச்சா. எனவே, நீங்கள் எதைச் செவிமடுத்தீர்கள்?
உங்களிடம் ஒரு பாடல் உள்ளது: சந்தோஷமற்றிருப்பவர்களின் மீது சிறிது கருணை காட்டுங்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் கருணை காட்ட முடியாது. ஆகவே, இப்போது, காலத்திற்கேற்ப, மாஸ்ரர் கருணைக் கடல்கள் ஆகுங்கள். உங்களிலும் கருணை கொள்ளுங்கள். சகல ஆத்மாக்களிலும் கருணை கொள்ளுங்கள். இப்போது, உங்களின் ரூபம், எல்லோருக்கும் வெவ்வேறு ஒளிக்கதிர்களை வழங்கும் வெளிச்சவீடாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் இழந்திருக்கும், உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் பேறுகளின் துளிகளின் கதிர்களைப் பரப்புங்கள். அச்சா.
தந்தையின் ரூபமாக உள்ள மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தைக்கு நெருக்கமாக இருப்பதுடன் சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும் தந்தைக்குச் சமமாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் தமது பிராமணப் பிறவிக்கான பாராட்டுக்களுக்குத் தகுதிவாய்ந்த, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் ஒருமுகப்படுத்தும் (ஸ்திரத்தன்மை) சக்தியால் நிரம்பியிருக்கும் ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் பலமில்லியன் மடங்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும். பாராட்டுக்கள், பாராட்டுக்கள், நமஸ்தே.
அதியன்பிற்குரிய அவ்யக்த பாப்தாதா, சிவனின் கொடியைத் தனது கரங்களால் ஏற்றி வைத்து, எல்லோருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நாளில், எல்லோரும் தமது பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களை வழங்கிப் பெற்றார்கள். அத்துடன் கொடியையும் ஏற்றினார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் இந்தப் புவி உருண்டையின் மீது நிற்க, எல்லோரும் உங்களின் முகங்களில் தந்தையின் கொடியைப் பார்க்கின்ற அந்த நாள் மிக விரைவில் வரும். துணியாலான கொடி பெயரளவிலேயே உள்ளது. ஆனால், குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகமும் தந்தையின் ரூபத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் இத்தகைய கொடியை ஏற்ற வேண்டும். நீங்கள் அந்த நாளை மிக,மிக,மிக விரைவில் கொண்டு வரவேண்டும். அது வரவேண்டும். அது வரவே வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட, இராஜரீகமான ஆசையில் இருந்து விடுபட்டிருந்து சேவை செய்கின்ற பரோபகார சேவையாளர் ஆகுவீர்களாக.தந்தை பிரம்மா எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதுடன் பற்றற்றவராக இருக்கும் அத்தாட்சியைக் காட்டினார். அவரிடம் சேவை மற்றும் அன்பைத் தவிர வேறெந்த பந்தனமும் இருக்கவில்லை. சேவை செய்வதில் உள்ள எந்தவொரு எல்லைக்குட்பட்ட, இராஜரீகமான ஆசைகளும் உங்களை அந்தக் கர்ம பந்தனத்தில் கட்டிவிடும். ஆனால், உண்மையான சேவையாளர்கள் அந்தக் கர்மக் கணக்கில் இருந்து விடுபட்டிருப்பார்கள். சரீரங்கள் மற்றம் சரீர உறவுகளின் பந்தனங்கள் இருப்பதைப் போன்று, சேவை செய்வதில் ஏதாவது சுயநலமான நோக்கங்களைக் கொண்டிருப்பதும் ஒரு பந்தனமே. அந்த பந்தனத்தில் இருந்தும் எந்தவிதமான இராஜரீக, கர்ம பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு, ஒரு பரோபகார சேவையாளர் ஆகுங்கள்.
சுலோகம்:
உங்களின் சத்தியங்களை ஒரு பைலில் வைத்திருக்காதீர்கள். ஆனால், அவற்றை முடிவு செய்வதன் (நிறைவேற்றுவதன்) மூலம் வெளியே காட்டுங்கள்.அறிவித்தல்: இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிறு. சர்வதேச யோகா தினம். இதில் பிராமணக் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகா தபஸ்யாவில் இருப்பார்கள். குறிப்பாக, அசரீரி உலகில் ஆழ்ந்த மௌனத்தின் அனுபவங்களைப் பெறுங்கள். உங்களின் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தி, எரிமலை ஸ்திதியில் ஸ்திரமாகி, சம்பூரணத்தையும் முழுமையையும் அனுபவம் செய்யுங்கள்.