15.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் ஆன்மீகத் தந்தையிடம் இருந்து ஆன்மீக அப்பியாசத்தைக் கற்கிறீர்கள். இந்த அப்பியாசத்தின் மூலம் நீங்கள் மௌன தாமமாகிய, முக்தி தாமத்துக்குச் செல்வீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களை முயற்சி செய்யுமாறு தந்தை தூண்டுகிறார், ஆனால் எவ்விடயத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்?

பதில்:
பழைய உலகம் தீயிடப்படும் முன்னராக, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, உங்கள் முழு ஆஸ்தியையும் கோருவதற்கு ஆயத்தமாக ஆகுவதில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் தோல்வி அடையக்கூடாது. மாணவர்கள் சித்தியடையாத பொழுது, தாம் முழு வருடத்தையும் வீணாக்கி விட்டதாக உணர்வதால், பெருமளவு வருத்தப்படுகின்றார்கள். சிலர் கூறுகின்றார்கள்: நான் கற்காது விட்டால் என்ன? எவ்வாறாயினும் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். ஆசிரியர் உங்களிடம் கூறுவதாக இருக்கக்கூடாது: காலம் கடந்து விட்டது!

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இந்த ஆன்மீகப் பாடசாலையில் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அல்லது ஆசிரியர்கள் வழிகாட்டல்களைக் கொடுத்து அப்பியாசத்தைக் கற்பிப்பதைப் போன்றே, அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார் எனவும் கூற முடியும். இந்த ஆன்மீகத் தந்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாகக் கூறுகிறார். அவர் உங்களுக்கு என்ன கூறுகிறார்? மன்மனாபவ! அவர்கள் “கவனம் செலுத்துங்கள்!” என்று கூறுவதைப் போன்றே, தந்தையும் கூறுகிறார்: மன்மனாபவ! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களில் கருணையுள்ளவரா இருப்பதைப் போன்றே இது உள்ளது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! சரீரமற்றவர் ஆகுங்கள்! ஆன்மீகத் தந்தை மாத்திரமே ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பிக்கிறார். அவர் பரம ஆசிரியர், நீங்கள் உதவி ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களும் அனைவருக்கும் கூறுகிறீர்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்களாக! இதுவும் “மன்மனாபவ” என்பதன் அர்த்தமாகும். அவர் குழந்தைகளின் நன்மைக்காக வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அவர் எவருடனும் கற்றதில்லை. ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் எவரிடமிருந்தாவது கற்றுப் பின்னர் ஏனையோருக்குக் கற்பிக்கிறார்கள். அவர் பாடசாலை போன்ற எதனிலும் கற்கவில்லை. அவர் உங்களுக்கு மட்டுமே கற்பிக்கிறார். அவர் கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பிக்கிறேன். ஏனைய அனைவரும் பௌதீகக் குழந்தைகளுக்குப் பௌதீக அப்பியாசத்தைக் கற்பிக்கிறார்கள். தங்கள் பௌதீகச் சரீரங்களின் மூலம் அந்த அப்பியாசத்தை அவர்கள் செய்ய வேண்டும். இங்கு, ஒரு சரீரம் பற்றிய கேள்வியே இல்லை. தந்தை கூறுகிறார்: எனக்கென ஒரு சரீரம் இல்லை. நான் உங்களுக்கு அப்பியாசத்தைக் கற்பித்து, வழிகாட்டல்களையும் கொடுக்கிறேன். நாடகத் திட்டத்துக்கேற்ப, இந்த அப்பியாசத்தைக் கற்பிக்கும் பாகம் அவருக்குள் பதியப்பட்டுள்ளது. இந்தச் சேவை அவரில் பதியப்பட்டுள்ளது. அவர் அப்பியாசத்தைக் கற்பிப்பதற்கே வருகிறார். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற வேண்டும். இது மிகவும் இலகுவானது. உங்கள் புத்தியில் ஏணி உள்ளது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிக் கீழே வந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். வேறு எவரும் தங்களைப் பின்பற்றுபவர்களிடம் அல்லது மாணவர்களிடம் கூற மாட்டார்கள்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது இவ்வுலகம் தமோபிரதானாக உள்ளது. நாங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகளாக இருந்தோம். இப்பொழுது, 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிச் வந்த பின்னர், தமோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகிவிட்டோம். இங்கு துன்பத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. தந்தை துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் என அழைக்கப்படுகிறார். அதாவது, ஒரேயொரு தந்தையே தமோபிரதானாக இருப்பவர்களைச் சதோபிரதான் ஆக்குகிறார். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள் என்பதை நீங்கள் நினைவு செய்வதில்லை. ஆனால் உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. அது பூந்தோட்டமாகும். நாங்கள் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக மாறுகிறோம். நம்பிக்கையை எவ்வாறு வளர்ப்பது என நீங்கள் கேட்க மாட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், நீங்கள் விநாசத்துக்கு இட்டுச் செல்லப்படுகிறீர்கள். நீங்கள் இப்பாடசாலையில் இருந்து விலகும்பொழுது, உங்கள் கல்வி முடிவடைகிறது. பின்னர் உங்கள் அந்தஸ்து அழிக்கப்பட்டு, பேரிழப்பு ஏற்படுகிறது. உங்கள் அந்தஸ்து பிரஜைகளின் மத்தியிலும் மிகவும் குறைவாக இருக்கும். சதோபிரதானான, பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவதே பிரதான விடயமாகும். நீங்கள் இப்பொழுது தேவர்கள் அல்ல. இப்பொழுது பிராமணர்களான நீங்கள் புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். பிராமணர்கள் மாத்திரமே தந்தையிடம் இந்த அப்பியாசத்தைக் கற்கிறார்கள். உள்ளார்த்தமாக, நீங்களும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். நீங்கள் இக்கல்வியை விரும்புகிறீர்கள், இவை கடவுளின் வாசகங்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியுள்ள பொழுதிலும், ஸ்ரீகிருஷ்ணர் இந்த அப்பியாசத்தைக் கற்பிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையே இதைக் கற்பிக்கிறார். வெவ்வேறு பெயர்களையும், உருவங்களையும் பெறுகின்ற வேளையில், தமோபிரதானாகி விட்ட ஸ்ரீகிருஷ்ண ஆத்மாவுக்கும் அவரே கற்பிக்கிறார். தந்தை ஒருபொழுதும் தான் இதனைக் கற்பதில்லை; ஏனைய அனைவரும் நிச்சயமாக யாரோ ஒருவரிடமிருந்து கற்கிறார்கள். அவரே உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆன்மீகத் தந்தை. அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார், பின்னர் நீங்கள் ஏனையோருக்குக் கற்பிக்கிறீர்கள். 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள், நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். இதற்காக, ஆன்மீகத் தந்தையை நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்திலும், நீங்கள் பாடி வருகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! இப்பொழுதும், நீங்கள் எங்காவது சென்று எவ்வாறு இது செய்யப்பட்டுள்ளது எனப் பாருங்கள். நீங்கள் இராஜரிஷிகள்; நீங்கள் எங்கும் பயணிக்க முடியும்; உங்களுக்கு எந்தப் பந்தனமும் கிடையாது. உங்களுக்குச் சேவை செய்வதற்கென எல்லையற்ற தந்தை வந்துவிட்டார் என்னும் நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. எவ்வாறு தந்தையால் இக்கல்விக்கெனக் குழந்தைகளிடம் இருந்து கட்டணம் எதனையும் பெற முடியும்? ஓர் ஆசிரியரின் குழந்தை, அவருடைய மாணவராக இருந்தால், அவர் அவருக்கு இலவசமாகவே கற்பிப்பார். அந்த ஒரேயொருவரும் உங்களுக்கு இலவசமாகவே கற்பிக்கிறார். நீங்கள் ஒன்றைக் கொடுக்கிறீர்கள் என நினைக்க வேண்டாம். அவை கட்டணங்கள் அல்ல. நீங்கள் எதையும் கொடுப்பதில்லை; நீங்கள் பிரதிபலனாக பெருமளவைப் பெறுகிறீர்கள். மக்கள் தானங்களைக் கொடுத்துப் புண்ணியத்தைச் செய்கிறார்கள். ஏனெனில் அதன் பிரதிபலனைத் தங்கள் மறுபிறவியில் தாம் பெறுவோம் என அவர்கள் உணர்கிறார்கள்; அவர்கள் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்களுடைய மறுபிறவியில் எதையாவது பெற்றாலும், தாங்கள் கீழிறங்குகின்ற ஒரு பிறவியிலேயே அதைப் பெறுகிறார்கள்; அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே வருகிறார்கள். நீங்கள் இப்பொழுது செய்வது அனைத்தும் மேலேறுகின்ற ஸ்திதிக்கு செல்வதற்கானது. மக்கள் கர்மத்தின் பலனைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆத்மாக்கள் கர்மத்தின் பலனைப் பெறுகிறார்கள். இலக்ஷ்மி நாராயணன் கூட தங்கள் கர்மத்தின் பலனைப் பெற்றார்கள், நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற பலனைப் பெறுகிறீர்கள். மற்றையது மறைமுகமாகப் பெறப்பட்டுள்ளது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஒரு கல்பத்தின் பின்னர் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை இங்கே அமர்ந்திருந்து எங்களுக்காக ஒரு பாடசாலையை உருவாக்குகிறார். அந்த அரசாங்கம் லௌகீகப் பாடசாலைகளைக் கொண்டுள்ளது, அரைக் கல்பமாக அங்கே நீங்கள் பல வழிகளில் கற்றீர்கள். 21 பிறவிகளுக்கு உங்கள் துன்பம் அனைத்தையும் அகற்றுவதற்காகத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கிறார். அங்கு, அது ஓர் இராச்சியம். இங்கு அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள் என்பதைப் போன்றே, அங்குள்ள அனைவரும் வரிசைக் கிரமமானவர்கள்: உங்களுக்கு அரசர்கள், அரசிகள், ஆலோசகர்கள், பிரஜைகள் போன்றோர் இருக்கிறார்கள். இது பழைய உலகம். புதிய உலகில் மிகச்சில மக்களே இருப்பார்கள். அங்கு பெருமளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். சக்கரவர்த்திகளும், அரசர்களும் வாழ்ந்து சென்று விட்டார்கள். மக்கள் அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: இருப்பினும், அவர்கள் கீழே விழ வேண்டும். அனைவரும் விழ வேண்டும். தேவர்களின் கலைகளும் படிப்படியாகக் குறைவடைகின்றன. ஆனால் அங்கு இராவண இராச்சியம் இல்லாத காரணத்தினால், அங்கு சந்தோஷத்தைத் தவிர எதுவுமேயில்லை. இங்கு, இது இராவண இராச்சியம். நீங்கள் மேலேறுவதைப் போன்றே, கீழே இறங்குகிறீர்கள். ஆத்மாக்கள் பல்வேறு பெயர்களையும், ரூபங்களையும் பெற்றுக் கீழே இறங்குகிறார்கள். நாடகத் திட்டத்துக்கேற்ப, மிகச்சரியாக ஆத்மாக்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, வீழ்ந்து, தமோபிரதான் ஆகிவிட்டார்கள். அவர்கள் காமச்சிதையில் ஏறும்பொழுதே, துன்பம் அனைத்தும் ஆரம்பிக்கிறது. இப்பொழுது அளவுகடந்த துன்பமே உள்ளது. அங்கு, அளவுகடந்த சந்தோஷம் நிலைத்திருக்கும். நீங்கள் இராஜரிஷிகள். அவர்களுடையது ஹத்தயோகம். அவர்களுக்குப் படைப்பவரின் ஞானமோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமோ உள்ளதா என எவரிடமேனும் நீங்கள் வினவினால், 'இல்லை" என்றே அவர்கள் பதில் அளிப்பார்கள். இதைப் புரிந்து கொள்பவர்களால் மாத்திரமே மற்றவர்களிடம் வினவ முடியும். தாமே இதனை அறியாத பொழுது, அவர்களால் எவ்வாறு வேறு எவரிடமும் இதனை வினவ முடியும்? ரிஷிகள் அல்லது முனிவர்கள் போன்ற எவருமே திரிகாலதரிசிகளாக இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை எங்களைத் திரிகாலதரிசிகள் ஆக்குகிறார். உலக அதிபதியாக இருந்த இந்த பாபாவிடமும் இந்த ஞானம் இருக்கவில்லை. இப்பிறவியிலும், 60 வயது வரையிலும், இவருக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. தந்தை வந்திருந்த பொழுதிலும், படிப்படியாகவே, தந்தை நேரத்துக்கு நேரம், சிறிது சிறிதாகவே ஞானத்தைத் தொடர்ந்தும் பேசினார். பலரின் புத்தி மிகவும் உறுதியான நம்பிக்கையை வளர்த்தாலும், மாயை தொடர்ந்தும் அவர்களை வீழ்த்தி விடுகிறாள். பாபாவினால் உங்களுக்கு அவர்களுடைய பெயர்களைக் கூறமுடியாது. கூறினால், அவர்கள் மனந்தளரக்கூடும். பாபா செய்திகள் அனைத்தையும் பெறுகிறார். சிலசமயங்களில் அவர்கள் தீய சகவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள். சிலசமயங்களில் அவர்களின் அண்மையில் திருமணம் செய்துள்ளவர்களின் சகவாசத்தைக் கொண்டிருப்பதனால், குழப்பம் ஏற்படுகிறது. அப்பொழுது திருமணம் செய்யாமல் தங்களால் இருக்க முடியாது என அவர்கள் கூறுகிறார்கள். தினமும் வகுப்புக்குச் செல்கின்றவரும், இங்கு மதுவனத்துக்குப் பல தடவைகள் வந்து சென்றுள்ளவருமாகிய சிறந்த மகாராத்தியாக இருந்த ஒருவர், பெரிய முதலையான மாயையினால் பிடிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பல சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அவர்கள் இன்னமும் திருமணம் செய்யவில்லை, ஆனால் மாயை அவர்களைத் தன் வாயினுள் இட்டு, மெதுவாக விழுங்கி விடுகிறாள். ஒரு பெண்ணின் ரூபத்தில் மாயை அவனை ஈர்க்கிறாள். அவன் பெரிய முதலையின் வாயில் வீழ்ந்து விட்டான். பின்னர், படிப்படியாக, அவள் அவனை முழுமையாக விழுங்கி விடுவாள். சிலர் தவறுகளைச் செய்கிறார்கள், அல்லது ஒருவரைப் பார்ப்பதில் அங்கு விஷமத்தனம் ஏற்படுகிறது. தாங்கள் படுகுழிக்குள் ஆழமாக மேலிருந்து வீழ்வார்கள் என்பதை அவர்களும் புரிந்து கொள்கிறார்கள். பின்னர் அக்குழந்தை மிகவும் சிறந்தவராக இருந்தார், ஆனால் அந்த உதவியற்ற அப்பாவி இப்பொழுது முடிவடைந்து விட்டார் என்றே கூறப்படும்! அவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதும், மரணிக்கிறார். தந்தை சதா குழந்தைகளுக்கு எழுதுகிறார்: நீங்கள் எப்பொழுதும் உயிருடன் இருப்பீர்களாக! நீங்கள் மாயையினால் மிகவும் கடுமையாகத் தாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். இவ்விடயங்களிற் சில சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்சமயத்து விடயங்கள் பின்னர் நினைவுகூரப்படுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் அவர்களை முயற்சி செய்யுமாறு தூண்ட வேண்டும். பெரிய முதலையான, மாயை, அவர்களை விழுங்குகிறாள் என்பதாக இருக்கக்கூடாது. மாயை அவர்களைப் பல்வேறு வழிகளில் பற்றிப் பிடிக்கிறாள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய, கொடிய எதிரியான, காமமே பிரதான விடயமாகும். எவ்வாறு தூய்மையற்ற உலகம் தூய்மை ஆகுகிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். இதில் குழப்பம் அடைவதற்கு எதுவுமேயில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். இதுவே யோக சக்தியாகும். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் வைகுந்தம் இருந்தது என அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, அங்கு நிச்சயமாக வேறு எந்தச் சமயங்களும் இருந்திருக்க முடியாது. இது அத்தகையதோர் இலகுவான விடயம், இருப்பினும் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை! அந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபாவும் 5000 வருடங்களுக்கு முன்னர் வந்தார். அவர் இப்பொழுது கொடுக்கின்ற அதே ஞானத்தை அவர் நிச்சயமாகக் கொடுத்திருக்க வேண்டும். தந்தையே கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்குச் சங்கமயுகத்தில் ஒரு சாதாரண சரீரத்தில் வருகிறேன். நீங்கள் இராஜரிஷிகள். முன்னர் நீங்கள் அவ்வாறு இருக்கவில்லை. பாபா வந்தது முதல், நீங்கள் பாபாவுடனேயே இருக்கிறீர்கள். நீங்கள் கற்பதுடன், சேவையும் செய்கிறீர்கள்: பௌதீகச் சேவையும், சூட்சுமச் சேவையும். பக்தி மார்க்கத்திலும், மக்கள் சேவை செய்வதுடன், தங்கள் இல்லறங்களிலும் கவனம் செலுத்துகிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது பக்தி முடிவுக்கு வருவதுடன், இந்த ஞானம் ஆரம்பித்து விட்டது. இந்த ஞானத்தின் மூலம் உங்களுக்குச் சற்கதியை அருள்வதற்கு நான் வருகிறேன். பாபா உங்களைத் தூய்மை ஆக்குகிறார் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. தந்தை கூறுகிறார்: நாடகத்துக்கேற்ப, உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கு நான் வந்துவிட்டேன். ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கிறார், உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இதுவே அதிமேன்மையான கல்வி. அவர் முன்னைய கல்பத்தில் விளங்கப்படுத்திய விடயங்களையே, உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். நாடகம் தொடர்ந்தும் நகர்கிறது. விநாடிக்கு விநாடி, இடம்பெற்ற அனைத்தும், ஒவ்வொரு 5000 வருடங்களும் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறும். நாட்கள் தொடர்ந்தும் கடந்து செல்கின்றன. வேறு எவருடைய புத்தியிலும் இந்த எண்ணங்கள் பிரவேசிப்பதில்லை. இப்பொழுது சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் கடந்து விட்டன. பின்னர் அவை மீண்டும் மீண்டும் சுழலும். முன்னைய கல்பத்தில் கடந்து சென்ற அதே விடயங்களே இப்பொழுதும் கடந்து செல்கின்றன. மேலும் சில நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. அம்மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொழுது, மேலும் சொற்ப மணித்தியாலங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன என நீங்கள் கூறுவீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தீயிடப்படும் பொழுது, மக்கள் விழித்தெழுவார்கள். அந்நேரத்தில் காலம் தாழ்ந்து விடும்! ஆகவே, தந்தை தொடர்ந்தும் முயற்சி செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறார். முழுமையாக ஆயத்தமாக இருங்கள். காலம் தாழ்ந்து விட்டதென ஆசிரியர் உங்களுக்குக் கூறக்கூடாது! சித்தி அடையாதவர்கள் அதிகளவு மனம் வருந்துகிறார்கள். தாங்கள் முழு வருடத்தையும் வீணாக்கி விட்டதை அவர்கள் உணர்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்: நான் கற்காது விட்டாலென்ன? குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்: “நான் தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் கோருவேன்”. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! இதைப் பற்றிய சிரமம் ஏதாவது இருப்பின், உங்களால் தந்தையிடம் கேட்க முடியும். இதுவே பிரதான விடயமாகும். தந்தை உங்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்னரும் கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நானே தூய்மையாக்குபவர். நானே அனைவருடைய தந்தையும் ஆவேன். ஸ்ரீகிருஷ்ணர் அனைவருடைய தந்தையும் அல்லர். சிவனையும், ஸ்ரீகிருஷ்ணரையும் வழிபடுபவர்களுக்கு நீங்கள் இந்த ஞானத்தைக் கொடுக்கலாம். ஆத்மாக்கள் ஒருபொழுதும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகாது விட்டால், அப்பொழுது, நீங்கள் பெரும்பாடு பட்டாலும், அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் இப்பொழுது நாஸ்திகர்கள். ஒருவேளை, எதிர்காலத்தில், அவர்கள் ஆஸ்திகர்களாக ஆகலாம். உதாரணமாக, சிலர் திருமணத்தின் பின்னர், வீழ்ந்து விடலாம். அவர்கள் பின்னர் வந்து இந்த ஞானத்தைப் பெறுவார்கள். எவ்வாறாயினும், அவருடைய ஆஸ்தி மிகவும் அதிகளவுக்குக் குறைக்கப்பட்டு விடும். ஏனெனில், அவருடைய புத்தியில் வேறு எவருடையதோ நினைவு உள்ளது. அதை அகற்றுவது மிகவும் சிரமமானதாகும். முதலில், அவருடைய மனைவியின் நினைவு ஏற்படுகிறது, பின்னர் அவருடைய குழந்தைகளின் நினைவும் ஏற்படுகின்றது. அவருடைய குழந்தைகளை விடவும் மனைவிக்கான ஈர்ப்பே அதிகளவாக இருக்கும். ஏனெனில் அந்நினைவு நீண்டகாலமாக இருந்துள்ளது, குழந்தைகள் பின்னரே வருகிறார்கள். பின்னர், நண்பர்களினதும், உறவினர்களினதும், புகுந்த வீட்டார்கள் போன்றவர்களினதும் நினைவுகளும் ஏற்படுகின்றன. நீண்டகாலமாக சகபாடியாக இருந்து வந்த மனைவியே முதலில் இருக்கிறார். இங்கும் அதுவே ஆகும். நீங்கள் நீண்டகாலமாகத் தேவர்களுடன் இருக்கிறீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அச்சமயத்தில், நீங்கள் நீண்டகாலமாக சிவபாபாவுக்காக பெருமளவு அன்பைக் கொண்டிருந்தீர்கள் எனவும் நீங்கள் கூற வேண்டும். 5000 வருடங்களுக்கு முன்னரும் அவர் எங்களைத் தூய்மை ஆக்கினார். ஒவ்வொரு கல்பமும் அவர் வந்து எங்களைப் பாதுகாக்கிறார். இதனாலேயே அவர் துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் என்று அழைக்கப்படுகிறார். உங்களுக்கு மிகவும் தெளிவானதொரு தொடர்பு இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள் கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்தும் இடுகாட்டில் புதைக்கப்பட உள்ளன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அமரத்துவ தாமம் வரவுள்ளது. நாங்கள் இப்பொழுது அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறோம். இதுவே அதிமேன்மையான, மங்களகரமான, உபகாரமிக்க சங்கமயுகமாகும். வெளியுலகில் என்ன நடக்கின்றதென உங்களால் பார்க்க முடியும். இப்பொழுது தந்தை வந்துவிட்டார். ஆகவே, பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, பலர் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள். உலகை மாற்றுபவர் நிச்சயம் வந்து விட்டார். இது அதே அந்த மகாபாரத யுத்தமாகும், நீங்கள் மிகவும் விவேகிகள் ஆகுகிறீர்கள்! இவ்விடயங்கள் ஆழமாகக் கடையப்பட வேண்டும். நீங்கள் உங்களுடைய மூச்சை வீணாக்கக் கூடாது. இந்த ஞானத்தின் மூலம் ஒவ்வொரு மூச்சும் தகுதிவாய்ந்ததாக ஆகுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் சகவாசத்தையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகத்தெளிவானதொரு தொடர்பைக் கொண்டிருங்கள். உங்கள் மூர்ச்சை வீணாக்காதீர்கள், ஆனால் அதை இந்த ஞானத்தினால் தகுதி வாய்ந்தது ஆக்குங்கள்.

2. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆன்மீக அப்பியாசம் செய்வதைப் பயிற்சி செய்து, யோக சக்தியைச் சேமியுங்கள். இப்பொழுது எந்தப் புதிய பந்தனங்களையும் உருவாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கின்ற அனுபவத்தின் மூலம், தடைகளை அழிப்பவர் எனப் பட்டம் சூடுபவர் ஆகுவதால் அனுபவத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.   

தந்தை உங்களுடன் இருக்கின்ற போது, எவராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது. அவருடைய சகவாசத்தின் அனுபவம் ஒரு பாதுகாப்புக் குடை ஆகுகின்றது. எவ்வாறாயினும், பாப்தாதா தனது குழந்தைகளை எப்பொழுதும் பாதுகாக்கின்றார். பரீட்சைத்தாள்கள் உங்களை அனுபவசாலி ஆக்குவதற்கே வருகின்றது. ஆகவே அப்பரீட்சை உங்களை அடுத்த வகுப்பு ஏற்றத்திற்காகவே வந்துள்ளது என எப்பொழுதும் நினையுங்கள். இவ்வாறாக, நீங்கள் எக்காலத்திற்கும் தடைகளை அழிப்பவர் என்ற பட்டத்தையும், அனுபவத்தின் சொரூபமாக இருப்பவர் என்ற ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வீர்கள். மக்கள் இப்பொழுது சிறிதளவு சப்தம் எழுப்பினாலும் அல்லது தடைகளை உருவாக்கினாலும் அவர்கள் நாளடைவில் சாந்தமாகி விடுவார்கள்.

சுலோகம்:
தேவை ஏற்படும் போது ஒத்துழைப்பவர் ஆகுபவர்கள், பலமில்லியன் மடங்கை அதற்குப் பிரதிபலனாகப் பெறுவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

பார்க்கின்ற, செவிமடுக்கின்ற, பேசுகின்ற செயல்களைச் செய்வது எவ்வளவு இலகுவாகி உள்ளதோ அவ்வாறே கர்மாதீத் ஆகுகின்ற ஸ்திதியையும் அனுபவம் செய்யுங்கள். அதாவது, ஆயத்தமாகவுள்ள சக்தியைப் பயன்படுத்தி, எந்தவொரு செயல்களின் தாக்கத்திற்கும் அப்பால் இருப்பவர் ஆகுங்கள். செயல்களில் தங்கியிருப்பவராக இருக்கின்ற ஸ்திதி ஒன்று, மற்றயது கர்மாதீத் ஸ்திதி ஆகும். அதாவது செயல்கள் மீது அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற ஸ்திதியாகும். எனவே, உங்களுடைய இராஜரீக செயற்பாடுகளையும், சுய அதிகாரி ஆத்மாவாக உங்களுடைய பௌதீகப் புலன்கள் உங்கள் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல் ஆற்றுகின்றனவா என்பதையும் சோதித்துப் பாருங்கள்.