16.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு அட்டவணை ஒன்றை வைத்திருங்கள். நினைவிலிருக்கும் பழக்கத்தை நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு கிரகிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், உங்கள் கர்மாதீத நிலையையும் நீங்கள் நெருங்கி வருவீர்கள்.

கேள்வி:
உங்கள் அட்டவணையை நீங்கள் மிகச்சரியாக எழுதியுள்ளீர்களா, இல்லையா என்பதை எடுத்துக்காட்டும் நான்கு விடயங்கள் எவை?

பதில்:
1) உங்கள் ஆளுமை 2) உங்கள் நடத்தை 3) உங்கள் சேவை 4) உங்கள் சந்தோஷம். இந்த நான்கு விடயங்களையும் அவதானிப்பதன் மூலம் உங்கள் அட்டவணையை நீங்கள் மிகச்சரியாக எழுதுகின்றீர்களா, இல்லையா என்பதை பாப்தாதாவினால் கூறமுடியும். அருங்காட்சி அகங்களிலும் கண்காட்சிகளிலும் சேவை செய்கின்ற ராஜரீகமான நடத்தையுடைய எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்கின்ற குழந்தைகளுடைய அட்டவணை நிச்சயமாக நன்றாக இருக்கும்.

பாடல்:
ஓ மனிதா! உனது இதயக்கண்ணாடியில் உன் முகத்தை பார்.

ஓம் சாந்தி.
குழந்தைகளே! நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் எத்தனை பாவச் செயல்கள் இன்னமும் எஞ்சியுள்ளன என்பதையும், எத்தனை புண்ணியச் செயல்களை நீங்கள் சேகரித்துள்ளீர்கள், அதாவது, ஆத்மா சதோபிரதான் ஆகுவதற்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு தூய்மை அடைந்திருக்கின்றீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். சிலர் தாம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலம் நினைவில் இருந்ததாகவும், சிலர் தாம் ஒரு மணித்தியாலம் நினைவில் இருந்ததாகவும் தமது அட்டவணையில் எழுதுகிறார்கள். இது மிகக்குறைந்தளவே ஆகும். நீங்கள் குறைந்தளவு நினைவு செய்யும் போது, குறைந்தளவு பாவங்களே அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படாத மகாபாவங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆத்மாக்கள் உயிர் வாழ்பவர்களென அழைக்கப்படுகின்றனர். ஆகவே தந்தை கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே, உங்களையே கேளுங்கள்: இதில் கவனம் செலுத்தும் போது, உங்கள் பாவங்களில் எத்தனை அழிக்கப்பட்டுள்ளன? உங்கள் அட்டவணையின் மூலம், நீங்கள் எந்தளவிற்கு புண்ணியாத்மா ஆகியுள்ளீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இறுதியிலே நீங்கள் கர்மாதீத நிலையை அடைவீர்களெனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நினைவு செய்வதன் மூலம், அதனை உங்கள் பழக்கம் ஆக்கிக் கொள்ளும் போது, தொடர்ந்தும் உங்கள் பாவங்கள் மென்மேலும் அழிக்கப்படுகின்றன. நீங்கள் தந்தையின் நினைவில் எவ்வளவு நேரம் நிலைத்திருக்கின்றீர்கள் எனச் சோதித்துப் பார்க்க வேண்டும். இதில் பொய் பேசுவது என்ற கேள்விக்கு இடமில்லை, ஆனால் நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அட்டவணையை எழுதி பாபாவிற்குக் கொடுத்தால், உங்கள் அட்டவணை மிகச்சரியாக உள்ளதா இல்லையா என்பதை பாபாவினால் விரைவில் கூறமுடியும். உங்களுடைய ஆளுமை, நடத்தை, நீங்கள் செய்யும் சேவை, உங்கள் சந்தோஷம் ஆகியவற்றைப் பார்த்து, உங்களுடைய அட்டவணை எவ்வாறு இருக்குமென்பதை பாபாவினால் விரைவில் புரிந்து கொள்ள முடியும். சதா நினைவில் இருப்பவர்கள் யார்? நூதனசாலைகளிலும், கண்காட்சிகளிலும் சுறுசுறுப்பாக சேவை செய்பவர்கள் ஆவார்கள். நூதனசாலைகளில் சதா வருவதும் போவதும் இடம்பெறும். டெல்லியில் பலர் தொடர்ந்தும் வருகிறார்கள். எனவே நீங்கள் தந்தையின் அறிமுகத்தை மீண்டும், மீண்டும் கொடுக்கவேண்டும். உதாரணமாக, விநாசத்திற்கு இன்னும் சில வருடங்களே உள்ளன என்று நீங்கள் யாருக்கேனும் கூறினால், அவர்கள் கூறுகின்றார்கள்: அது எப்படிச் சாத்தியாகும்? இதை நாங்கள் கூறவில்லையென்றும், கடவுளே இவ்வாறு கூறுகிறாரென்றும் நீங்கள் உடனே அவர்களிடம் கூறவேண்டும். கடவுளின் வார்த்தைகள் நிச்சயமாக உண்மையாகவே இருக்கும். ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்களுக்கு மீண்டும், மீண்டும் கூறுங்கள்: இது சிவபாபாவின் ஸ்ரீமத் நாங்கள் இதனைக் கூறவில்லை. இது அவருடைய ஸ்ரீமத்தாகும். அவர் சத்தியமாவார். முதலாவதாக, நீங்கள் அவர்களுக்கு நிச்சயமாகத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். இதனாலேயே ஒவ்வொரு படத்திலும் ‘இவை கடவுள் சிவனின் வார்த்தைகள்’ என எழுதுங்கள் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். அவர் எங்களுக்கு அனைத்தையும் மிகச்சரியாகக் கூறுகிறார், எங்களுக்கு இது தெரியாது. தந்தை எங்களுக்கு இதைக் கூறியிருப்பதாலேயே நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். சிலவேளைகளில், விரைவில் விநாசம் நிகழுமென்று இன்ன இன்னார் எதிர்வு கூறியுள்ளாரென்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுகிறது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவின் எல்லையற்ற பிரம்மாகுமாரர்களும், பிரம்மாகுமாரிகளும் உள்ளனர். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்கள் அவர்களுக்குக் கூறலாம். அவர் ஞானக்கடலான தூய்மையாக்குபவர் ஆவார். முதலில் இவ்விடயத்தை நீங்கள் அவர்களுக்குப் புரியவைத்த பின்னரே, மேலும் விவரிக்க வேண்டும். விநாச காலத்தில் யாதவர்களினதும் கௌரவர்களினதும் புத்தி கடவுளின் மீது அன்பைக் கொண்டிருக்க மாட்டாது என்று சிவபாபா கூறியிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவின் பெயரைத் தொடர்ந்து கூறிக்கொண்டு அவரை நினைவு செய்வீர்களாயின், நீங்கள் நன்மை அடைவீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளதை ஏனையோருக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். சேவை செய்பவர்களின் அட்டவணை மிக நன்றாக இருக்கும். அவர்கள் நாள் முழுவதிலும் 8 மணித்தியாலம் சேவை செய்வதில் மும்முரமாக உள்ளார்கள். அவர்கள் ஒரு மணித்தியாலம் ஓய்வெடுக்கக்கூடும். குறைந்தபட்சம் 7 மணித்தியாலம் அவர்கள் சேவையில் மும்முரமாக உள்ளார்கள். அவர்களின் பல பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். பலருக்கும் மீண்டும் மீண்டும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும் சேவை செய்கின்ற குழந்தைகள் மீது தந்தை நிச்சயமாக அன்பு கொண்டிருப்பார். பலருக்கும் நன்மையளிக்கும் குழந்தைகளைத் தந்தை பார்க்கின்றார். பலருக்கும் நன்மை செய்வதிலேயே அவர்கள் இரவு பகலாக அக்கறை செலுத்துகின்றார்கள். பலருக்கும் நன்மை செய்வது என்றால் தனக்குத் தானே நன்மை செய்வதாகும். பலருக்கு நன்மை அளிப்பவர்களே, புலமைப்பரிசிலை வெல்லுவார்கள். இதுவே குழந்தைகளாகிய உங்கள் தொழிலாகும். நீங்கள் ஓர் ஆசியராகிப் பலருக்கும் வழிகாட்ட வேண்டும். முதலில் நீங்கள் இந்த ஞானத்தை முற்றாகக் கிரகிக்க வேண்டும். நீங்கள் யாருக்கேனும் நன்மை ஏற்படுத்தாவிட்டால், அது உங்கள் பாக்கியத்தில் இல்லையென்பது புரிந்துகொள்ளப்படும். குழந்தைகள் சிலர் கூறுகிறார்கள்: பாபா, வேலை செய்வதிலிருந்து எங்களை விடுவித்து விட்டால், எங்களால் சேவையில் ஈடுபட முடியும். அப்போது, நீங்கள் உண்மையில் சேவை செய்வதற்குத் தகுதியானவர்களா என்றும், நீங்கள் பந்தனமற்றவராக இருக்கின்றீர்களா என்றும் பாபா பார்க்கிறார். அதன் பின்னரே 500 முதல் 1000 ரூபா சம்பாதிப்பதைவிட நீங்கள் சேவையில் ஈடுபட்டுப் பலருக்கும் நன்மை செய்வது மேலானதென பாபா கூறுவார். ஆனால் நீங்கள் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் சேவை செய்யக்கூடியவர் என பாபா கண்டால் மாத்திரமே இந்த ஆலோசனையை வழங்குவார். சேவை செய்யக்கூடிய குழந்தைகள் இங்கும், அங்கும், எங்கும் அழைக்கப்படுகின்றார்கள். மாணவர்கள் பாடசாலையில் கற்கின்றனர். இதுவும் ஒரு கல்வியே. இந்த வழிகாட்டல்கள் பொதுவானவை அல்ல. சத்தியமானவர் என்றால் சத்தியத்தைப் பேசுபவர் என்று அர்த்தம். ஸ்ரீமத்திற்கேற்பவே நாங்கள் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறோம். இப்பொழுது மட்டுமே கடவுளின் வழிகாட்டல்களை உங்களால் பெற முடியும். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்போது வீடு திரும்பவேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கோருங்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுவதால் நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் ஆஸ்தியைக் கோரியிருக்கிறீர்கள். இந்த உலகச்சக்கரம் 5000 ஆண்டுகள் நீடிக்கிறதென வேறு எவருக்கும் தெரியாது. மனிதர்கள் காரிருளில் மூழ்கியுள்ளனர். ஆனால் நீங்களோ முழுமையான ஒளியில் இருக்கிறீர்கள். தந்தை ஒருவரே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். வைக்கோற்போர் எரியூட்டப்பட்ட போதும் அறியாமை என்ற உறக்கத்தில் மக்கள் தொடர்ந்தும் உறங்கிக் கொண்டிருந்தனர் என நினைவு கூரப்படுகிறது. எல்லையற்ற தந்தையே ஞானக்கடல் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதிமேலான தந்தையின் பணியும் அதிமேலானது. கடவுள் சர்வசக்திவான் என்பதால் அவர் விரும்பியதை எல்லாம் செய்யலாம் என்றல்ல. இல்லை. இந்த நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே நாடகத்திற்கேற்பவே நிகழ்கின்றது. பலர் யுத்தத்தில் மரணிக்கின்றனர். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதையிட்டுக் கடவுளால் என்ன செய்ய முடியும்? பூமியதிர்ச்சிகள் ஏற்படும்போது மக்கள் “ஓ கடவுளே!” என்று ஓலமிடுகின்றனர். ஆனால் கடவுளால் என்ன செய்ய முடியும்? நீங்கள் உலகை அழிப்பதற்குக் கடவுளை வருமாறு அவரை அழைத்தீர்கள். இந்தத் தூய்மையற்ற உலகிற்கு வருமாறு அவரை அழைத்தீர்கள். புதிய உலகை ஸ்தாபித்து, பழைய உலகை அழிக்க வருமாறு அவரை அழைத்தீர்கள். நான் இதைச் செய்வதில்லை. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. காரணமின்றி இரத்தக்களரி ஏற்படுகின்றது. இதிலிருந்து எவரையும் காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கே இடமில்லை. புதிய உலகை ஸ்தாபிக்குமாறு அவரிடம் கூறினீர்கள். எனவே தூய்மையற்ற ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயமாக போய்விட வேண்டும். சிலருக்கு எதுவுமே புரிவதில்லை. அவர்களுக்கு ஸ்ரீமத் என்பதன் அர்த்தம் கூட புரிவதில்லை. கடவுள் யாரென்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. சில குழந்தைகள் நன்றாகப் படிக்காதபோது, பெற்றோர்கள் அவர்களைக் கல்லுப்புத்தி கொண்டவர்கள் எனக் கூறுகின்றனர். சத்திய யுகத்தில் அவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள். கலியுகத்தில் கல்லுப்புத்தி உடையவர்களே இருக்கிறார்கள். தெய்வீகப்புத்தி உடைய எவரும் இங்கிருக்க முடியாது. இந்தக் காலத்தில் மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களெனப் பாருங்கள்! ஒருவருடைய இதயத்தை அகற்றிவிட்டு இன்னொன்றைப் பொருத்துகிறார்கள். அதனைச் சாதிக்க அவர்கள் அதிகளவு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் அதனால் ஏற்படும் நன்மை என்ன? ஒருவேளை அந்த நபரை இன்னும் சில நாட்கள் உயிருடன் வாழவைக்கலாம். பலர் தந்திர வித்தைகளைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதில் எதுவிதப் பயனுமில்லை. கடவுள் வந்து, தங்களைத் தூய உலகின் அதிபதிகளாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: இந்தத் தூய்மையற்ற உலகில் நாங்கள் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்கிறோம். சத்தியயுகத்தில் நோய், துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இப்போது தந்தையினூடாக மிக உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். இங்குள்ள மனிதர்களும் கற்பதன் மூலம் உயர்ந்த பட்டத்தைப் பெறுகின்றனர். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சில நாட்களுக்கே உயிர்வாழ்வார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரின் தலையிலும் பெரும் பாவச்சுமை உள்ளது. அவர்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வார்கள். அவர்கள் தங்களைத் தூய்மை அற்றவர்களெனக் கருதினாலும், விகாரத்தில் ஈடுபடுவதை அவர்கள் பாவமெனக் கருதுவதில்லை. அதனால் அவர்கள் பாவாத்மாக்கள் ஆகுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே இல்லற ஆச்சிரம தர்மம் தொடர்ந்து வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சத்தியயுகத்தில் தூய இல்லறதர்மம் நிலவியதென்றும், அக்காலத்தில் பாவாத்மாக்கள் எவருமே இருக்கவில்லை என்றும் அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. இங்கு அனைவருமே பாவாத்மாக்கள், இதனாலேயே அவர்கள் அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கின்றனர். இங்கு தற்காலிக சந்தோஷமே உள்ளது. மக்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். மரணம் வாய் திறந்து காத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்குத் திடீரென இதயம் நின்று விடுகிறது. இங்குள்ள சந்தோஷம் காகத்தின் எச்சம் போன்றது. அங்கே நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். எந்தவிதமான துன்பமும் இருக்காது. காலநிலை, அதிக உஷ்ணமாகவோ, அதிக குளிராகவோ இருக்காது. சதா வசந்த காலமாகவே இருக்கும். பஞ்சதத்துவங்கள் கூட ஒழுங்கைப்பேணும். சுவர்க்கம், சுவர்க்கமே! இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. சுவர்க்கத்தை உருவாக்கி, புதிய உலகை ஸ்தாபிக்க, உங்களைத் தூய்மையாக்க வருமாறு நீங்கள் தந்தையை அழைக்கின்றீர்கள். ஆகவே “கடவுள் சிவன் பேசுகிறார்” என்று ஒவ்வொரு படத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஏனையோருக்கு ஞானம் கொடுக்கும்போது, சிவபாபாவை மீண்டும், மீண்டும் நினைவு செய்வீர்கள். அருங்காட்சியகங்களிலும் கண்காட்சிகளிலும் சேவை செய்யும்போது ஞானமும், யோகமும் இணைந்தே உள்ளன. நினைவில் நிலைத்திருந்தால் உங்களுக்குப் போதை ஏற்படும். நீங்களும் தூய்மையாகி, முழு உலகையும் தூய்மை ஆக்குகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகும் போது, உங்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய உலகம் தேவையாகும். இறுதியில், இது கணக்குத் தீர்க்கும் காலம் ஆகையால், அனைவரது கணக்குகளும் தீர்க்கப்படும். நான் உங்களுக்காகப் புதிய உலகை ஆரம்பித்து வைக்கவேண்டும். அதைத் தொடர்ந்து நீங்கள் கிளைகளைத் திறப்பீர்கள். தந்தையைத் தவிர வேறெவரும் சுவர்க்கமாகிய புதிய உலகத்திற்கு அத்திவராமிட முடியாது. ஆகவே அத்தகைய தந்தையை நீங்கள் நினைவு செய்வேண்டும். நீங்கள் ஒரு பிரமுகரைக் கொண்டு அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைக்கும்போது அச்செய்தி எங்கும் பரவும். அந்தப்பிரமுகரும் அங்கிருப்பாரென மக்கள் நினைப்பார்கள். சிலர் கூறுவார்கள்: நீங்கள் எழுதித்தாருங்கள், நான் அதைக் கூறுகிறேன். அது தவறாகும். அவர்கள் முதலிலேயே அனைத்தையும் புரிந்து கொண்டு, பின்னர் பேசுவார்களாயின், அதுவே நல்லது. சிலர் தாம் நிகழ்த்தும் உரையை முன்கூட்டியே எழுதிவைத்து, அதை மிகச்சரியாகப் பேசுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள், வாய்மூலம் பேசி விளங்கப்படுத்த வேண்டும். ஞானம் முழுவதும் ஆத்மாக்களாகிய உங்களுக்குள் இருக்கின்றது. பின்னர் நீங்கள் அதனை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள். மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. சனத்தொகையும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. முழுவிருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. உங்கள் தர்மத்திற்கு உரியவர்கள் வெளிப்படுவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். அனைவராலும் ஓரே அளவிற்குக் கற்கமுடியாது. சிலர் நூற்றுக்கு ஒரு புள்ளியையே பெறுவார்கள். நீங்கள் சிறிதளவையே செவிமடுத்து ஒரு புள்ளியைப் பெற்றாலும், நீங்களும் சுவர்க்கத்திற்கு வருவீர்கள். இது எல்லையற்ற தந்தை கற்பிக்கும் எல்லையற்ற கல்வியாகும். இத்தர்மத்திற்கு உரியவர்கள் வெளிப்படுவார்கள். முதலில் நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கு, முக்திதாமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னர் நீங்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவீர்கள். திரேதாயுக முடிவு வரையிலும், சிலர் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பார்கள். பலர் பிராமணர்கள் ஆகினாலும், அனைவரும் சத்தியயுகத்திற்கு வரமாட்டார்கள். அவர்கள் திரேதாயுக இறுதியிலேயே வருவார்கள். இந்த விடயங்கள் யாவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதை பாபா அறிவார். எனவே அனைவரும் நிலையாக இருப்பதில்லை. ஓர் இராச்சியத்திற்கு பல்வகையினர் தேவை. பிரஜைகள், வெளிப்புறத்தார் என்று அழைக்கப்படுவார்கள். அங்கே ஆலோசகர்களுக்கான அவசியம் இல்லை என பாபா விளங்கப்படுத்தி ௨ள்ளார். ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொண்டதால், அவர்கள் (இலக்ஷமியும் நாராயணனும்) அவ்வாறு ஆகினார்கள். எனவே அவர்கள் எவரிடமிருந்தும் ஆலோசனை பெற வேண்டியதில்லை. அங்கு ஆலோசகர்கள் போன்ற எவருமில்லை. பின்னர் அவர்கள் தூய்மையற்றுப் போகும்போது ஓர் அரசனுக்கும் அரசிக்கும் ஓர் ஆலோசகர் இருப்பார். இப்போது பல ஆலோசகர்கள் உள்ளனர். இங்கு மக்களால் மக்கள் ஆட்சி நடத்தப்படுகின்றது. இருவரின் அபிப்பிராயங்கள் ஒரே விதமாக இருப்பதில்லை. நீங்கள் நட்புடன் ஒருவரை எதையேனும் செய்யுமாறு கேட்டால், அவர் அதனைச் செய்வார். அடுத்து வருபவர் அதனைப் புரிந்து கொள்ளாதுவிடின், அனைத்தையுமே வீணாக்கிவிடுவார். இருவரின் புத்தியும் ஒரேவிதமாக இருப்பதில்லை. அங்கே உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. இங்கு நீங்கள் எவ்வளவோ துன்பத்தை அடைந்துள்ளீர்கள். இது துன்பபூமி என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பக்திமார்க்கத்தில் அதிகளவு தடுமாறித் திரிந்தீர்கள். அதுவும் நாடகமே. நீங்கள் சந்தோஷம் அற்றிருக்கும் போது, தந்தை வந்து உங்களுக்கு சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். உங்களுடைய புத்தியைத் தந்தை அதிகளவு திறந்திருக்கின்றார்! செல்வந்தர்களுக்கு இது சுவர்க்கம் என்றும் ஏழைகளுக்கு இது நரகமெனவும் மக்கள் கூறுகிறார்கள். சுவர்க்கம் என்பதன் அர்த்தமென்ன என்பதை நீங்கள் மிகச் சரியாக அறிந்திருக்கின்றீர்கள். சத்தியயுகத்தில் அந்தக் கருணையானவரை வருமாறு எவரும் அழைக்க மாட்டார்கள். இங்கேயே நீங்கள் அவரை அழைக்கின்றீர்கள். கருணை காட்டுங்கள்! எங்களை விடுதலை செய்யுங்கள்! தந்தை அனைவரையும் வீடாகிய சாந்திதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றார். அறியாமைப் பாதையில் உங்களுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. தமோபிரதானமாக முதலிடம் வகிப்பவர்கள், பின்னர் சதோபிரதானமாகவும் முதலிடம் வகிப்பார்கள். இவர் தன்னைப் புகழ்ந்து கொள்ளவில்லை. அந்த ஒருவரே பாராட்டப்பட வேண்டியவர். அவர் ஒருவரே இலக்ஷ்மி, நாராயணனை அவ்வாறு ஆக்குகிறார். அதிமேலானவரான கடவுள் உங்களையும் மேன்மையானவர் ஆக்குகிறார். அனைவரும் மேன்மையானவர் ஆகமுடியாது என்பதை பாபா அறிவார். எவ்வாறாயினும் நீங்கள் முயற்சி செய்யவேண்டும். சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கே நீங்கள் இங்கு வருகின்றீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நாங்கள் சுவர்க்கத்தின் இராச்சிய உரிமையைப் பெற்றுக்கொள்வோம். சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். பாபா கூறுகிறார்: நல்லது. உங்கள் உதடுகளில் ரோஜாமலர்கள் இருக்கட்டும். இப்போது முயற்சி செய்யுங்கள். எல்லோருமே இலக்ஷ்மி நாராயணனாக முடியாது. ஓர் இராச்சியம் உருவாக்கப்படுகிறது. அரச குடும்பத்திற்கும், பிரஜைகளின் குடும்பங்களிற்கும் பலர் தேவைப்படுகின்றனர். பலர் இங்கு வந்து இந்த ஞானத்தைக் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். தாங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து அதைப்பற்றிப் பிறருடனும் பேசுகிறார்கள். பின்னர் தந்தையுடன் உள்ள உறவைத் துண்டித்து விடுகிறார்கள். சிலர் இப்போதும் இங்கு திரும்பி வருகிறார்கள். நல்ல முன்னேற்றம் காண்பிப்பவர்கள், உயரச் செல்வார்கள். ஏழைகளே தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். உங்கள் சரீரத்தையோ வேறெவரையோ நீங்கள் நினைவு செய்யக்கூடாது. இலக்கு மிக உயர்ந்தது. நீங்கள் எவருடனும் ஒரு உறவைப் பேணினால் நிச்சயமாக நீங்கள் அவரை நினைவு செய்வீர்கள். அந்த நிலையில், நீங்கள் எவ்வாறு தந்தையை நினைவு செய்வீர்கள்? நாள் முழுவதும் உங்கள் புத்தி எல்லையற்றதில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் அந்தளவிற்கு முயற்சி செய்யவேண்டும். தந்தை கூறுகிறார்: என்னுடைய குழந்தைகள் மத்தியிலும் அதி உச்சத்தில் இருப்பவர்களும் இடைத் தரத்திலுள்ளவர்களும், தாழ்ந்த நிலையிலுள்ளவர்களும் இருக்கின்றனர். ஏனையோர் இங்கு வரும்போது இவையெல்லாம் தூய்மையற்ற, பழைய உலகத்திற்கானவை என்று நினைக்கிறார்கள். எனினும், அவர்கள் இந்த யக்யாவிற்குச் சேவை புரிவதால், அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தந்தை பல வழிமுறைகளைக் கொண்டவர். மற்றும்படி, இது மௌனகோபுரம், புனித கோபுரங்களில் அதிபுனிதமானது. புனித தந்தைமார்களுள் அதிபுனிதமான தந்தை இங்கமர்ந்திருந்து முழு உலகையும் புனிதம் ஆக்குகின்றார். தூய்மையற்ற எவரும் இங்கு வரமுடியாது. எவ்வாறாயினும் தந்தை கூறுகிறார்: நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க வந்துள்ளேன். இந்த நாடகத்தில் எனக்குமொரு பங்குண்டு. அச்சா.

இனிமையிலும், இனிமையான, அதியன்பிற்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையான பாப்தாதாவின் அன்பும், நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய அட்டவணையை ஆராய்ந்து உங்களைச் சோதியுங்கள். நான் எவ்வளவு புண்ணியத்தைச் சேமித்திருக்கின்றேன்? ஆத்மாவாகிய நான், எந்தளவிற்கு சதோபிரதான் ஆகியுள்ளேன்? நினைவில் நிலைத்திருப்பதன் மூலம் உங்கள் கணக்குகள் அனைத்தையும் தீர்த்து விடுங்கள்.

2. ஒரு புலமைப்பரிசைப் பெறுவதற்கு, சேவையாளராகி பலருக்கும் நன்மையளித்து, தந்தையின் அன்பிற்குரியவர் ஆகுங்கள். ஓர் ஆசிரியராகிப் பலருக்கும் வழியைக் காட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தேவதை ரூபத்தால் ஆத்மாக்களைக் கவரும் ரூபமாகி, அவர்கள் அனைவருக்கும் ஆஸ்தியின் உரிமையைக் கொடுப்பீர்களாக.

தொலைவில் இருந்தே ஆத்மாக்களை உங்களை நோக்கிக் கவரத்தக்க முறையில் உங்களின் தேவதை ரூபத்தின் ஜொலிக்கின்ற ஆடையை அணிந்து கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் அனைவரையும் பிச்சைக்காரர்களாக இருப்பதில் இருந்து விடுவித்து, ஆஸ்தியின் உரிமையைக் கொடுங்கள். இதற்கு, இந்த ஞானத்தின் சொரூபமாகவும் நினைவின் சொரூபமாகவும் சகல தெய்வீகக் குணங்களின் சொரூபமாகவும் ஆகுங்கள். பறக்கின்ற ஸ்திதியில் ஸ்திரமாகும் உங்களின் பயிற்சியை நீங்கள் அதிகரிக்க வேண்டும். உங்களின் பறக்கின்ற ஸ்திதியானது, உங்களின் நடக்கின்ற, அசைகின்ற தேவதை ரூபத்தை எல்லோருக்கும் காட்டும். இதுவே உங்களின் தேவ ரூபம் ஆகப் போகிறது. இதுவே அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருக்கும் ஸ்திதி ஆகும்.

சுலோகம்:
மற்றவர்களின் மனங்களின் நோக்கங்களை அறிந்து கொள்வதற்கு, சதா மன்மனாபவ என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

உங்களின் மனமே, உங்களின் வார்த்தைகளும் செயல்களும் ஆகும். இந்த ஞானத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களோ, அல்லது இந்த ஞானம் இல்லாத ஆத்மாக்களோ, அவர்கள் இருவரின் உறவுமுறையிலும் தொடர்பிலும் வரும்போது, உங்களின் வார்த்தைகளும் செயல்களும் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருக்க வேண்டும். சக்திவாய்ந்த, தூய மனம் இயல்பாகவே சக்திவாய்ந்த, தூய வார்த்தைகளையும் செயல்களையும் கொண்டிருக்கும். அவை நல்லாசிகளால் நிறைந்திருக்கும். சக்திவாய்ந்த மனம் என்றால் நினைவின் சக்தியானது மேன்மையாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருத்தல் என்று அர்த்தம். இத்தகைய ஆத்மாக்கள், இலகு யோகிகளாக இருப்பார்கள்.