16.02.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.02.2004 Om Shanti Madhuban
மூதாதையாகவும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராகவும் இருக்கும் சுயமரியாதையில் இருந்து, உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவையும் பராமரியுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள அதி மேன்மையான குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மூதாதையும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவரும் ஆவார். இதனாலேயே, நீங்கள் எல்லோரும் இந்தக் கல்ப விருட்சத்தின் வேர்கள் ஆவீர்கள். நீங்கள் அடி மரமாகவும் இருக்கிறீர்கள். அடிமரம் இயல்பாகவே முழு மரத்தின் கிளைகள், கொப்புகள், இலைகளுடன் தொடர்புடையது. எனவே, நீங்கள் எல்லோரும் உங்களை முழு மரத்தின் மூதாதையர்களான மேன்மையான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? பிரம்மா முப்பாட்டனார் என்று அழைக்கப்படுவதைப் போல், நீங்கள் எல்லோரும் அவருடன் கூடவே மாஸ்ரர் முப்பாட்டனார்கள். மூதாதை ஆத்மாக்களான உங்களுக்கு அதிகளவு சுயமரியாதை உள்ளது. நீங்கள் அந்தப் போதையில் இருக்கிறீர்களா? உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்களே சகல ஆத்மாக்களுக்கும் அடிமரத்தின் ரூபத்தில் ஆதார ரூபங்களாக விளங்கும் மூதாதையர்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் மூதாதையர்களாக இருப்பதனால், பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் இயல்பாகவே தொடர்ந்து மூதாதையர்களான உங்களின் மூலம் சகாஷைப் (ஒளி, சக்தியின் மின்னோட்டம்) பெறுகிறார்கள். மரத்தின் படத்தைப் பாருங்கள்: அந்த மரத்தின் கடைசி இலையும் வேர்களில் இருந்து சகாஷைப் பெறுகிறது. மூதாதையர்களான உங்களின் கடமை என்ன? எல்லோரையும் பராமரிப்பதே, மூதாதையர்களான உங்களின் கடமையாகும். வெளியுலகின் உணவின் மூலம் பெறப்படுகின்ற பௌதீக சக்தியின் பராமரிப்போ அல்லது மூதாதையர்களின் மூலமான இந்தக் கல்வியின் பராமரிப்போ, எதுவாக இருந்தாலும் நீங்கள் சக்தியால் உங்களை நிரப்பிக் கொள்வதற்கான பராமரிப்பைப் பெறுகிறீர்கள். எனவே, மூதாதை ஆத்மாக்களான உங்களிடமிருந்து பெறப்படும் பராமரிப்பால், தந்தையிடமிருந்து நீங்கள் பெற்ற சக்திகளால், ஆத்மாக்கள் அனைவரும் பராமரிக்கப்படுகிறார்கள்.
தற்சமயத்திற்கேற்ப, ஆத்மாக்கள் எல்லோருக்கும் இப்போது சக்திகளின் பராமரிப்புத் தேவைப்படுகிறது. ஆத்மாக்களுக்கு இடையே துன்பத்தினதும் அமைதி இன்மையினதும் அலை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, மூதாதையர்களான, பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களான நீங்கள் உங்களின் வம்சத்தின் மீது கருணை கொள்கிறீர்களா? முழுமையான அமைதி இன்மைக்குரிய சூழல் இருக்கும்போது, குறிப்பாக இராணுவமும் பொலிஸாரும் உஷார் நிலையில் இருப்பார்கள். அதே போன்று, இன்றைய சூழலில், மூதாதையர்களான நீங்கள் உங்களை விசேடமான சேவை செய்வதற்கான கருவிகளாகக் கருதுகிறீர்களா? நீங்கள் முழு உலகிற்கும் கருவிகளாக இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கிறதா? இன்று, உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் உங்களிடமிருந்து சகாஷ் தேவைப்படுகிறது. நீங்கள் உங்களை எல்லையற்ற மூதாதை ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு உலக சேவை நினைவிருக்கிறதா அல்லது உங்களின் நிலைய சேவையை மட்டும் நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று, ஆத்மாக்கள் மூதாதை ஆத்மாக்களான உங்களை, தேவாத்மாக்களான உங்களை அழைக்கிறார்கள். அவர்கள் தமது வெவ்வேறு இஷ்ட தெய்வங்களை, தமது தேவதேவியரை அழைக்கிறார்கள்: வாருங்கள்! எங்களை மன்னித்து அருளுங்கள், எங்கள் மீது கருணை காட்டுங்கள்! எனவே, பக்தர்களின் சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா? உங்களுக்கு இது கேட்கிறதா இல்லையா? ஆத்மாக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போது, ஆத்மாக்கள் எல்லோரினதும் மூதாதையர்கள் என உங்களைக் கருதியவண்ணம் அவர்களைச் சந்திக்கிறீர்களா? மூதாதையர்களான உங்களின் கிளைகளும் கொப்புகளுமே அவர்கள் என்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? மூதாதையர்களான நீங்களே அவர்களுக்கும் சகாஷ் வழங்குகிறீர்கள். உங்களின் கல்ப விருட்சப் படத்தை உங்களின் முன்னால் கொண்டுவந்து, அதில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் வேர்களில் இருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் அடிமரத்திலும் இருக்கிறீர்கள். அத்துடன்கூடவே, பரந்தாமத்திலும் உங்களைப் பாருங்கள். மூதாதை ஆத்மாக்களான உங்களின் இடம், தந்தையுடன், அவருக்கு நெருக்கமான இடமாகும். உங்களுக்கு இது தெரியும்தானே? இந்த போதையுடன் நீங்கள் எந்தவோர் ஆத்மாவையும் சந்திக்கும்போது, ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த ஆத்மாக்களும் உங்களை இந்தப் பார்வையுடன் பார்ப்பார்கள்: ‘நீங்கள் எமக்குரியவர்கள், நீங்கள் எங்களுக்குச் சொந்தமானவர்கள்’. நீங்கள் மற்றவர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் மூதாதையர்களாக இருக்கும் போதை, விழிப்புணர்வு, பார்வை, மனோபாவத்தைக் கொண்டிருந்தால், அவர்களுக்கும் சொந்தமாக இருக்கும் உணர்வு ஏற்படும். நீங்கள் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதனால், நீங்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள். இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் சேவை செய்வதன் மூலம், ஒவ்வோர் ஆத்மாவும் தான் மீண்டும் தனது மூதாதையரையும் தனது இஷ்ட தெய்வங்களையும் கண்டுகொண்டேன் என உணர்வார். அதன்பின்னர், பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதைப் பொறுத்தவரை, உங்களின் வழிபாடு மிகவும் மகத்தானது. தேவாத்மாக்களைப் போன்று சரியான முறையில் எந்தவோர் தர்மாத்மாவோ அல்லது மகாத்மாவோ வழிபடப்படுவதில்லை. அவர்களும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களைப் போல் சரியான முறையில் ஒழுங்கு முறையாகப் பூஜிக்கப்படுவதில்லை. உங்களின் புகழையும் பாருங்கள். மக்கள் மிகுந்த சிரத்தையுடன் பக்திப் பாடல்களைப் பாடி, ஆரத்தி (ஒரு தட்டில் உள்ள தீபங்களால் செய்யப்படும் கிரியை) காட்டுகிறார்கள். மூதாதையர்களான நீங்கள் மட்டுமே இந்த முறையில் வழிபடத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் உங்களை இத்தகைய ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? உங்களிடம் இந்தப் போதை இருக்கிறதா? உங்களிடம் போதை இருக்கிறதா? தங்களை மூதாதை ஆத்மாக்கள் எனக் கருதுபவர்கள், இந்த போதையையும் விழிப்புணர்வையும் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா? அச்சா. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. எனவே, இப்போது அடுத்த கேள்வி என்ன? இந்த விழிப்புணர்வு சதா உங்களிடம் உள்ளதா? சதா உங்களுக்குள் அது இருக்கிறதா?
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு பேற்றினாலும் அழியாதவராக (அநாதியாக) இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சிலவேளைகளில் மட்டும் கொண்டிருப்பதல்ல. ஏன்? நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகப் பதில் அளிக்கிறீர்கள். எனவே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்கு இந்த விழிப்புணர்வு உள்ளது. உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு மிக நன்றாக உள்ளது. பின்னர், ‘சிலவேளைகளில் அது மிக மெதுவாகக் குறைகிறது’ எனக் கூறுகிறீர்கள். பாருங்கள், தந்தை அழியாதவர். ஆத்மாக்களான நீங்களும் அழியாதவர்கள். பேறுகளும் அழியாதவை. நீங்கள் அழியாத ஒரேயொருவரிடம் இருந்து இந்த அழியாத ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே, உங்களின் தாரணை என்னவாக இருக்க வேண்டும்? அது அழியாததாக இருக்க வேண்டுமா அல்லது சிலவேளைகளில் மட்டுமா?
காலத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப, பாப்தாதா இப்போது குழந்தைகளான நீங்கள் எல்லோரும் சதா எல்லையற்ற சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதைக் காண விரும்புகிறார். ஏனென்றால், நீங்கள் சேவை செய்வதில் மும்முரம் ஆகும்போது, நீங்கள் பல வகையான குழப்பங்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறீர்கள். நீங்கள் சேவை செய்யும் போதெல்லாம், திட்டங்களைச் செய்யும்போது அல்லது அந்தத் திட்டங்களை நடைமுறை வடிவில் போடும் போதெல்லாம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், இப்போது மூன்று வகையான சேவையும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். வார்த்தைகளால் செய்யும் சேவை மட்டுமன்றி, உங்களின் மனங்களாலும் வார்த்தைகளாலும் அத்துடன் செயல்களாலும் சேவை இடம்பெற வேண்டும். அதாவது, உங்களுடன் உறவுமுறையில் அல்லது தொடர்பில் வருபவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். சேவை செய்கின்ற நோக்கம் இருக்க வேண்டும். சேவை செய்கின்ற உணர்வுகள் இருக்க வேண்டும். இந்த வேளையில், வார்த்தைகளால் சேவை செய்வதன் சதவீதம் அதிகமாக உள்ளது. மனதின் மூலமான சேவை இடம்பெறுகிறது. ஆனால் வார்த்தைகளால் சேவை செய்வதன் சதவீதம் அதிகமாக உள்ளது. ஒரே வேளையில் மூன்று வழிமுறைகளிலும் சேவை செய்வதன் மூலம் சேவையில் மேலும் அதிக வெற்றி ஏற்படும்.
இந்தக் குழுவில், வெவ்வேறு பிரிவுகளைச் (தொழில்கள்) சேர்ந்த ஆத்மாக்கள் வந்திருப்பதையும் சேவைக்காக நல்ல திட்டங்களைச் செய்வதையும் பற்றிய செய்திகளை பாப்தாதா கேள்விப்பட்டார். நீங்கள் நன்றாகச் செய்கிறீர்கள். ஆனால், ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்வதன் மூலம் சேவை துரிதமாக இடம்பெறும். அத்துடன் அது வளர்ச்சி அடையும். குழந்தைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்துள்ளார்கள். இதைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். புதிய குழந்தைகள் இங்கே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வந்துள்ளார்கள்.
இப்போது, பாப்தாதா குழந்தைகள் எல்லோரும் சதா தடைகளில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கும் தமது ரூபத்தில் இருப்பதைக் காண விரும்புகிறார். ஏன்? கருவிகளாக இருக்கும் நீங்கள், தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதில் ஸ்திரமாக இருந்தால், உங்களால் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரையும் தடைகளில் இருந்தும் சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுபடச் செய்ய முடியும். இதற்கு, குறிப்பாக இரண்டு விடயங்களைக் கீழ்க்கோடிடுங்கள். நீங்கள் இதைச் செய்கிறீர்கள். ஆனால், இவற்றை மேலும் அதிகமாகக் கீழ்க்கோடிடுங்கள். முதலில், உங்களின் ஆத்ம உணர்வுப் பார்வையுடன் ஒவ்வோர் ஆத்மாவையும் பாருங்கள். ஆத்மாக்களை அவர்களின் ஆதி சம்ஸ்காரங்களின் ரூபங்களுடன் பாருங்கள். ஓர் ஆத்மா என்ன வகையான சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வோர் ஆத்மாவும் மாற வேண்டும் என்ற உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் மேன்மையான உணர்வுகளாலும் குறுகிய காலத்திற்கு அந்த ஆத்மாவின் சம்ஸ்காரங்களை மாற்ற முடியும். ஆத்ம உணர்வுகள் வெளிப்படச் செய்யுங்கள். ஆரம்பத்தில், ஒன்றுகூடலில் இருக்கும்போதே, அவர்களுக்குள் ஆத்ம உணர்வுப் பார்வை, ஆத்ம உணர்வு மனோபாவம், ஓர் ஆத்மா இன்னோர் ஆத்மாவைச் சந்திக்கிறார் என்ற விழிப்புணர்வு, ஓர் ஆத்மா இன்னோர் ஆத்மாவுடன் பேசுகிறார் என்ற உணர்வு இருந்ததை நீங்கள் கண்டீர்கள். அந்தப் பார்வையால் அவர்களின் அத்திவாரம் மிகவும் பலமானது ஆகியது. இப்போது, சேவையின் விரிவாக்கத்துடன், இப்போது உங்களின் தொடர்பு, பழகுதல், பேசுதல், மற்றவர்களுடன் தொடர்பில் வருதல் என்பவை சேவையின் வளர்ச்சியைப் பொறுத்தே இருப்பதனால், ஆத்ம உணர்வுகள் சிறிது அமிழ்ந்து போய்விட்டன. அவை முற்றிலும் மறையவில்லை. ஆனால், அமிழ்ந்து போயுள்ளன. ஆத்ம உணர்வின் சுயமரியாதை, இலகுவாக ஆத்மாவை வெற்றி அடையச் செய்கிறது. இங்கே ஒன்றுகூடியுள்ள நீங்கள் எல்லோரும் யார்? சென்ற கல்பத்தின் அதே தேவாத்மாக்கள், அதே பிராமண ஆத்மாக்களான நீங்களே இங்கே ஒன்றுகூடியுள்ளீர்கள். பிராமண ஆத்மாக்களின் ரூபத்தில், நீங்கள் எல்லோரும் மேன்மையான ஆத்மாக்கள். தேவாத்மாக்களாக இருக்கும்போதும் நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்த ரூபத்தைக் கொண்டிருந்த வண்ணம் மற்றவர்களுடன் உறவுமுறைகளையும் தொடர்புகளையும் ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு கணமும் சோதியுங்கள்: இந்த தேவாத்மாவான, இந்த பிராமண ஆத்மாவான எனது மேன்மையான கடமையும் மேன்மையான சேவையும் என்ன? ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் ஆகும். உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் செய்யும் சேவை என்ன? அந்த ஆத்மாக்கள் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகச் செல்கிறார்கள், ஆசீர்வாதங்களுடன் திரும்பி வருகிறார்கள். முயற்சி செய்வது சிரமமான வேலை என யாராவது நினைத்தால், அனைத்திலும் இலகுவான முயற்சி, உங்களின் திருஷ்டி, மனோபாவம், வார்த்தைகள், உணர்வுகளால் நாள் முழுவதும் ஆசீர்வாதங்களை வழங்குவதும் எல்லோரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் ஆகும். உங்களின் பட்டமும் ஆசீர்வாதமும் மகாதானிகள் என்பதேயாகும். சேவை செய்யும்போதும் மற்றவர்களுடன் உறவுமுறைகளையும் தொடர்புகளையும் ஏற்படுத்தும்போதும் இந்தப் பணியைச் செய்யுங்கள்: ஆசீர்வாதங்களை வழங்கி, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இது சிரமமா? அல்லது, இது இலகுவானதா? இது இலகுவானது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எவ்வாறாயினும், யாராவது எதிர்த்தால் என்ன செய்வீர்கள்? அப்போதும் அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பீர்களா? ஆசீர்வாதங்களைக் கொடுப்பீர்களா? உங்களிடம் அத்தனை ஆசீர்வாதங்களின் களஞ்சியம் இருக்கிறதா? நிச்சயமாக எதிர்ப்பு இருக்கும். ஏனென்றால், அந்த எதிர்ப்பே உங்களை உங்களின் பதவியை அடையச் செய்யும். பாருங்கள், தந்தை பிரம்மாவே அதிகபட்சம் எதிர்ப்பைச் சந்தித்தார். அவர் எதிர்க்கப்பட்டார்தானே? எவ்வாறாயினும், முதலாம் இலக்கப் பதவியைப் பெற்றது யார்? பிரம்மாவே அதைப் பெற்றார், அப்படித்தானே? என்னதான் நடந்தாலும், நானும் தந்தை பிரம்மாவைப் போல் ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும். பிரம்மாபாபாவின் முன்னால் வீணான விடயங்களைப் பேசியவர்களோ அல்லது வீணான விடயங்களைச் செய்தவர்களோ இருக்கவே இல்லையா? எவ்வாறாயினும், தந்தை பிரம்மா அவர்களுக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றார். அவர் தனக்குள் ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கொண்டிருந்தார். ‘அவர் ஒரு குழந்தையே. அவர் ஒரு நாள் மாறுவார்’. அதேபோல், உங்களுக்கும் இந்த மனோபாவமும் பார்வையும் உள்ளன. ‘இவர் சென்ற கல்பத்திற்கு உரியவர், எமது குடும்பத்தைச் சேர்ந்தவர், எமது பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் என்னையும் மாற்றி, மற்றவர்களையும் மாற்ற வேண்டும்’. ‘அவர் மாறினால், நான் மாறுவேன்’ என்பதல்ல. ஆனால், ‘நானும் மாறி, மற்றவர்களையும் மாற்ற வேண்டும். இதுவே எனது பொறுப்பு’. அப்போது மட்டுமே ஆசீர்வாதங்கள் வெளிப்படும். அத்துடன் நீங்களும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.
இப்போது, காலம் விரைவாக மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. அது தீவிர நிலையை அடைந்து வருகிறது. ஆனால், காலம் மாறுவதற்கு முன்னர், உலக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆத்மாக்களான நீங்கள், உங்களின் சொந்த மாற்றத்தினூடாக மற்றவர்களின் மாற்றத்திற்கு ஆதார மூர்த்திகள் ஆகவேண்டும். நீங்களும் உலகின் ஆதார மூர்த்திகள், ஈடேற்றும் ரூபங்கள் ஆவீர்கள். ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இலட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும்: நான் ஒரு கருவி ஆகவேண்டும். எண்ணங்களிலேனும் மூன்று விடயங்களின் சிறிதளவு சுவடேனும் இருக்கக்கூடாது. அவற்றை மாற்றுங்கள். 1) பரசிந்தன் (மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்தல்). 2) பரதர்ஷன் (மற்றவர்களைப் பார்த்தல்). சுய தரிசனத்திற்குப் (சுயத்தைப் பார்த்தல்) பதிலாக பரதரிசனத்தைக் கொண்டிராதீர்கள். 3) பரமத் (மற்றவர்களின் கட்டளைகள்) அல்லது பரசங் (மற்றவர்களின் சகவாசம்), தீய சகவாசம். மேன்மையான சகவாசத்தைக் கொண்டிருங்கள். ஏனென்றால், தீய சகவாசம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும். பாப்தாதாவும் உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார்: ஒரு பர் (பரோபகாரி - ஏனையோரை ஈடேற்றுபவர்) ஐக் கடைப்பிடித்து, ஏனைய மூன்று பர்களை முடித்துவிடுங்கள். பரதர்சன், பரசிந்தன், பரமத், அதாவது, தீய சகவாசம். பரோபகாரி (மற்றவர்களை ஈடேற்றுபவர்) ஆகுங்கள். அப்போது மட்டுமே உங்களால் ஆசீர்வாதங்களைப் பெற்று, ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும். மற்றவர்கள் எதை உங்களுக்குக் கொடுத்தாலும், நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். உங்களுக்கு இந்தளவு தைரியம் உள்ளதா? உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? எனவே, சகல நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதா கூறுகிறார்: குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தைரியத்தைப் பேணினால், மற்றவர்கள் எதைக் கொடுத்தாலும், நீங்கள் அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும். அதன்பின்னர், இந்த வருடம் உங்களிடம் உள்ள தைரியத்திற்கும் உற்சாகத்திற்கும் பாப்தாதா மேலதிக உதவியை வழங்குவார். அவர் மேலதிக உதவியை வழங்குவார். எவ்வாறாயினும், நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்தால் மட்டுமே. இதைக் கலக்காதீர்கள். பாப்தாதா சகல பதிவேடுகளையும் பெறுகிறார். உங்களின் எண்ணங்களிலேனும் ஆசீர்வாதங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்குத் தைரியம் இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அதன்பின்னர், நீங்கள் இதைச் செய்ய வேண்டும். உங்களின் கைகளை மட்டும் உயர்த்தாதீர்கள். நீங்கள் அதைச் செய்யவும் வேண்டும். நீங்கள் அதைச் செய்வீர்களா? மதுவனத்தில் இருப்பவர்கள், இதைச் செய்வீர்களா? ஆசிரியர்கள் இதைச் செய்வீர்களா? அச்சா, நீங்கள் மேலதிக மதிப்பெண்களைப் பெறுவீர்களா? பாராட்டுக்கள்! ஏன்? முன்னோடிக் குழுவினர் மீண்டும் மீண்டும் பாப்தாதாவிடம் வருகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களுக்கு முன்னோடிக் குழுவினரில் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் அந்தப் பாகங்களை நடிக்கிறோம். ஆனால், ஏன் எமது சகபாடிகள் தமது முன்னோடி ஸ்திதியை உருவாக்குகிறார்கள் இல்லை? பாபா அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லட்டும்? அவர்களுக்கு அவர் என்ன பதிலைச் சொல்லுவார்? முன்னோடி ஸ்திதியும் முன்னோடிக் குழுவினரின் பாகங்களும் ஒன்றாக வரும்போதுதான் நிறைவு இடம்பெற முடியும். அவர்கள் கேட்கிறார்கள், எனவே, என்ன பதிலை அவர்களுக்குக் கொடுப்பது? எத்தனை வருடங்களில் இந்த ஸ்திதி உருவாக்கப்படும்? நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாடினீர்கள்: வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா. நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாடினீர்கள். இப்போது முன்னோடி ஸ்திதியின் விழாவைக் கொண்டாடுங்கள். இதற்காக ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள். பாண்டவர்களே, பேசுங்கள்! இதற்காக ஒரு திகதி நிச்சயம் செய்யப்படுமா? முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, பேசுங்கள்! இதற்காக ஒரு திகதி நிச்சயம் செய்யப்படுமா அல்லது அது சடுதியாக நடக்குமா? என்ன நடக்கும்? அது சடுதியாக நடக்குமா? அல்லது இறுதியில்தான் நடக்குமா? கூறுங்கள்! ஏதாவது சொல்லுங்கள்! நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களா? பாபா நிர்வேர் பாயிடம் கேட்கிறார். விழா நடக்குமா அல்லது அது சடுதியாக நடக்குமா? நீங்கள் தாதிஜியிடம் கேட்கிறீர்களா? அவர் தாதிஜியைப் பார்க்கிறார், எனவே ஏதாவது கூறுங்கள். நீங்கள் ஏதாவது கூறுங்கள். பாபா ரமேஷ்பாயிடம் எதையாவது சொல்லும்படி கேட்கிறார். (அது இறுதியில் நடக்கவே வேண்டும்) இறுதியில்தான், ஆனால் எப்போது? (பாபா, நீங்கள் ஒரு திகதியைக் கொடுங்கள், நாங்கள் அந்தத் திகதியில் அதைச் செய்வோம்). அச்சா. பாப்தாதா உங்களுக்கு ஒரு மேலதிக வருடத்திற்காகத் திகதியை வழங்கியுள்ளார். உங்களின் தைரியத்தால், நீங்கள் மேலதிக உதவியைப் பெறுவீர்கள். உங்களால் இதைச் செய்ய முடியும்தானே? இதை நடைமுறையில் செய்யுங்கள். பின்னர் தந்தை ஒரு திகதியை நிச்சயம் செய்வார். (எங்களுக்கு உங்களின் வழிகாட்டல் தேவை. பின்னர் எங்களால் 2004 ஆம் ஆண்டை இதற்கான வருடமாகக் கொண்டாட முடியும்). இதன் அர்த்தம், நீங்கள் இன்னமும் அதற்காகவென்று பல ஆயத்தங்களைச் செய்யவில்லை. ஆகவே, முன்னோடிக் குழுவினர் இன்னமும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், அப்படித்தானே? அச்சா. நீங்கள் இப்பொழுதில் இருந்தே இந்த இலட்சியத்தை வைத்திருந்தால் - அதாவது, நான் இதைச் செய்ய வேண்டும் - அந்தளவு சேர்க்கப்படும். ஏனென்றால், ‘நீண்ட காலம்’ என்றொரு கணக்கு உள்ளது. நீங்கள் இதை இறுதியில் செய்தால், ‘நீண்ட காலம்’ என்ற கணக்கு சரியாக இருக்காது. ஆகவே, இப்பொழுதில் இருந்தே தயவு செய்து கவனம் செலுத்துங்கள். அச்சா.
உங்களுக்கு ஆன்மீக அப்பியாசம் நினைவிருக்கிறதா? உங்களால் ஒரு விநாடியில் மூதாதையராக இருக்கும், வெளிச்சவீடாக ஆகுகின்ற, தந்தையுடன் பரந்தாம வாசியாக இருந்து உலகிற்கே ஒளியைக் கொடுக்கும் உங்களின் ஸ்திதிக்கு உங்களால் செல்ல முடியுமா? எனவே, ஒரு விநாடியில், இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் எங்கும் இருந்து எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருக்கும் எல்லோருமே, வெளிச்சவீடாகி உலகெங்கும் உள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒளி, சகாஷ் மற்றும் சக்திகளை வழங்குங்கள். அச்சா.
உலகெங்கும் உள்ள மூதாதை மற்றும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்கள் எல்லோருக்கும் சதா அருள்பவர்களாக எல்லோருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கும் மகாதானிகள் எல்லோருக்கும் தமது திடசங்கற்பத்தால் தமது சொந்த மாற்றத்தின் மூலம் எல்லோரிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் சதா வெளிச்சவீடுகளாகி ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒளியை வழங்கும் நெருக்கமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமான ஆசீர்வாதங்கள் நிறைந்த அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
தாதிஜிக்கும் தாதி ஜான்கிஜிக்கும்: இது நல்லது. தாதிகள் இருவரும் மிக நல்ல பராமரிப்பைக் கொடுக்கிறார்கள். மிக நல்ல பராமரிப்பு இடம்பெறுகிறது. மிகவும் நல்லது. நீங்கள் சேவை செய்வதற்கான கருவிகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தாதிகளைப் பார்க்கும்போது சந்தோஷப்படுகிறீர்கள்தானே? அப்படியென்றால், உங்களுக்குச் சந்தோஷம்தானே? நீங்களும் பொறுப்பைக் கொண்டிருப்பதில் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எல்லோரிடம் இருந்தும் பல ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். (இரு தாதிகளும் பாப்தாதாவை அணைத்துக் கொண்டார்கள்). இதைப் பார்க்கும்போது அவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுவதைப் போல், நீங்கள் அவர்களைப் போல் ஆகும்போது அதிகளவு சந்தோஷம் ஏற்படும். பாப்தாதா அவர்களைக் கருவிகள் ஆக்கியுள்ளார். எனவே, அவர்களிடம் ஏதோ சிறப்பியல்பு இருக்க வேண்டும். இதனாலேயே, அவர்கள் கருவிகள் ஆக்கப்பட்டுள்ளர்கள். எவ்வாறாயினும், அந்தச் சிறப்பியல்புகள் உங்கள் ஒவ்வொருவரிடமும் வந்தால் என்ன நடக்கும்? உங்களின் இராச்சியம் வந்துவிடும். பாப்தாதா பேசுகின்ற அந்தத் தினமும் வந்துவிடும். நீங்கள் இப்போது ஒரு திகதியை நிச்சயம் செய்ய வேண்டும் என்பது உங்களின் ஞாபகத்தில் உள்ளதுதானே? நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்: நான் அதை நிச்சயம் செய்ய வேண்டும். எல்லோரும் கருவி ஆகும்போதும், உலகம் புதுப்பிக்கப்படுதல் நிச்சயமாக நடக்கும். கருவியாக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருத்தல் என்றால் நற்குணங்களின் சுரங்கம் ஆகுவதாகும். ஒவ்வொரு கணமும் கருவியாக இருக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். அப்போது ஏனைய நற்குணங்கள் அனைத்தும் இலகுவாக வந்துவிடும். ஏனென்றால், கருவியாக இருக்கும் விழிப்புணர்வில் ‘நான்’ என்ற உணர்வு இருக்காது. ‘நான்’ என்ற இந்த உணர்வே, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கருவியாக இருப்பதன் மூலம், ‘எனது’ என்ற உணர்வானது முடிந்துவிடும். அது ‘உங்களுடையது! உங்களுடையது!’ என்று ஆகிவிடும். நீங்கள் இலகு யோகிகள் ஆகுவீர்கள். எனவே, உங்கள் எல்லோருக்கும் தாதிகளிடம் அன்பு உள்ளது. உங்களுக்கு பாப்தாதாவிடம் அன்பு உள்ளது. எனவே, அன்பின் பிரதிபலன், உங்களின் சிறப்பியல்புகளில் சமமானவர் ஆகுவதாகும். ஆகவே, இந்த இலட்சியத்தை வைத்திருங்கள். நீங்கள் சிறப்பியல்புகளைச் சமமானவை ஆக்க வேண்டும். நீங்கள் எவரிலாவது எந்தவொரு சிறப்பியல்புகளைப் பார்க்கும்போதும், அவர்களை அந்தச் சிறப்பியல்புகளில் உங்களால் பின்பற்ற முடியும். ஆத்மாவைப் பின்பற்றும்போது, இரண்டும் புலப்படும். சிறப்பியல்புகளைப் பார்த்து, அவற்றில் சமமானவர் ஆகுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் உடையாத நம்பிக்கை ரேகையால் உங்களின் முதலாம் இலக்கப் பாக்கியத்தை உருவாக்குவதன் மூலம் வெற்றித் திலகத்தால் அலங்கரிக்கப்பட்டவர் ஆகுவீர்களாக.புத்தியில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகள், ஒருபோதும் ‘எப்படி?’ (கெய்ஸே) அல்லது ‘இப்படி’ (எய்ஸே) என்ற விரிவாக்கத்திற்குள் செல்ல மாட்டார்கள். அவர்களின் உடையாத நம்பிக்கை ரேகைகளை ஆத்மாக்கள் எல்லோராலும் தெளிவாகப் பார்க்க முடியும். அவர்களின் நம்பிக்கை ரேகைகள் இடையில் ஒருபோதும் துண்டிக்கப்பட மாட்டாது. இத்தகைய ரேகைகளைக் கொண்டவர்களின் நெற்றியில் சதா வெற்றித் திலகத்தை நீங்கள் காண்பீர்கள். அதாவது, அது அவர்களின் விழிப்புணர்வில் இருக்கும். அவர்கள் பிறந்ததுமே, சேவை செய்கின்ற பொறுப்புக் கிரீடத்தை அவர்கள் அணிய வேண்டியுள்ளது. அவர்கள் சதா ஞான இரத்தினங்களுடன் விளையாடுவார்கள். அவர்கள் தமது வாழ்க்கைகளை சதா நினைவு மற்றும் சந்தோஷ ஊஞ்சல்களில் ஆடுவதிலேயே கழிப்பார்கள். இந்த ரேகைகளே முதலாம் இலக்கப் பாக்கியம் ஆகும்.
சுலோகம்:
உங்களின் புத்தியெனும் கணணியில் முற்றுப்புள்ளி என்ற குறியை இடுவதெனில், சந்தோஷமாக இருத்தல் என்று அர்த்தம்.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
புத்தியின் யோகத்தை பல திசைகளில் இருந்தும் துண்டித்து, ஒரேயொருவரிடம் அன்பு வைத்திருப்பவர்கள் ஏகாந்தத்தின் மீது விருப்பம் கொண்டிருப்பார்கள். ஒரேயொருவரின் மீது அன்பு வைத்திருப்பதனால், நீங்கள் ஒரேயொருவரை மட்டுமே நினைவு செய்வீர்கள். நீங்கள் பலரின் மீது அன்பு வைக்கும்போது, உங்களால் அந்த ஒரேயொருவரின் நினைவில் இருக்க முடியாது. புத்தியின் யோகம் ஏனைய பலரிடமிருந்தும் துண்டிக்கப்பட்டு, ஒரேயொருவரிடம் இணைக்கப்பட வேண்டும். அதாவது, நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொருவருக்கே சொந்தம் ஆகவேண்டும். இத்தகைய ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள், ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்திருப்பார்கள்.
அறிவித்தல்: இன்று, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தியான வேளை மாலை 6.30 இலிருந்து 7.30 வரை. இதில் சகல சகோதர, சகோதரிகளும் ஒன்றுகூடி, ஒரு தூய எண்ணத்துடன் பயிற்சி செய்து யோகத்தில் அமர்ந்திருங்கள்: தூய்மையின் கதிர்கள் இந்த ஆத்மாவான என்னிடமிருந்து வெளிப்பட்டு, உலகம் முழுவதையும் தூய்மை ஆக்குகின்றன. நான் மாஸ்ரர் தூய்மையாக்குகின்ற ஆத்மா.