16.03.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 05.03.2004 Om Shanti Madhuban
உங்களின் பலவீனமான சம்ஸ்காரங்களைத் தகனம் செய்து உண்மையான ஹோலியைக் கொண்டாடுங்கள். அப்போதுதான் உலகம் மாற்றப்படும்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது ராஜ் துலாரே (அதியன்பிற்குரிய இளவரசர்) குழந்தைகளைப் பார்த்தார். பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரான மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே இறைவனின் அன்பையும் கனிவையும் பெறுகிறீர்கள். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் மூன்று இராஜ சிம்மாசனங்களையும் பாபா பார்க்கிறார். சங்கமயுகத்தில் மட்டுமே குழந்தைகளான நீங்கள் இந்த மூன்று சிம்மாசனங்களையும் பெறுகிறீர்கள். உங்களால் மூன்று சிம்மாசனங்களைப் பார்க்க முடிகிறதா? ஒன்று நெற்றியில் உள்ள சிம்மாசனம். இதில் ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது சிம்மாசனம், இறைவனின் இதய சிம்மாசனம். நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்தானே? மூன்றாவது சிம்மாசனம், எதிர்கால உலக சிம்மாசனம். நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் அதி பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். பாக்கியசாலிக் குழந்தைகளான நீங்கள் மட்டுமே இறைவனின் இதயம் என்ற இந்த சிம்மாசனத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக எதிர்கால உலக இராச்சிய சிம்மாசனத்தைப் பெறுவீர்கள். ஆனால், அதற்கான உரிமை உள்ளவர் யார்? இந்த வேளையில் சுய இராச்சிய அதிகாரத்தைக் கொண்டவர்கள், தங்களுக்கே அதிபதிகளாக இருப்பவர்களே. உங்களிடம் சுய இராச்சிய அதிகாரம் இல்லாவிட்டால், உங்களால் உலக இராச்சியத்தையும் பெற முடியாது. ஏனென்றால், இந்த வேளையில் உள்ள சுய இராச்சிய அதிகாரத்தின் மூலமே நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள்.உலக இராச்சியத்தின் சம்ஸ்காரங்கள் அனைத்தும் இந்த வேளையிலேயே உருவாக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் சதா உங்களை சுய இராச்சிய அதிகாரியாக அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்கு எதிர்கால இராச்சியத்தின் புகழ் என்னவென்று தெரியும்தானே? ஒரு தர்மம், ஓர் இராச்சியம், ஒரே சட்டமும் ஒழுங்குமுறைகளும், அமைதி, சந்தோஷம், செழிப்பு நிறைந்த ஒரே இராச்சியம் என்பதே அதுவாகும். நீங்கள் எத்தனை தடவைகள் சுய இராச்சிய அதிகாரத்தையும் உலக இராச்சியத்தையும் பெற்றுள்ளீர்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் எத்தனை தடவைகள் ஆட்சி செய்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இதை நீங்கள் தெளிவாக நினைவு செய்கிறீர்களா? அல்லது, அதை நினைப்பதற்கு முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் அதை நினைவு செய்கிறீர்களா? நீங்கள் நேற்று ஆட்சி செய்தீர்கள். நீங்கள் நாளையும் ஆட்சி செய்வீர்கள். இத்தகைய தெளிவான விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கிறதா? இந்த வேளையில் சதா சுய இராச்சிய அதிகாரிகளாக இருக்கும் ஆத்மாக்கள் இந்த விழிப்புணர்வைத் தெளிவாகக் கொண்டிருப்பார்கள். எனவே, நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகளா? நீங்கள் எல்லா வேளையும் இப்படி இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் சதா சுய இராச்சிய அதிகாரிகளா? இது இரட்டை வெளிநாட்டவர்களின் முறை ஆகும். நீங்கள் சதா சுய இராச்சிய அதிகாரிகளா? பாண்டவர்களே, நீங்கள் எல்லா வேளையும் இப்படி இருக்கிறீர்களா? நீங்கள் எல்லா வேளையும் இப்படி இருக்கிறீர்களா என பாபா கேட்கிறார். ஏன்? இந்த ஒரு பிறவியில் நீங்கள் சதா சுய இராச்சிய அதிகாரிகளாக இல்லாவிட்டால், இது குறுகியதொரு பிறப்பாகவும் இருப்பதனால், எப்படி நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சுய இராச்சிய அதிகாரத்தைப் பெறுவீர்கள்? நீங்கள் 21 பிறவிகளுக்கு இராச்சிய அதிகாரத்தைப் பெற விரும்புகிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எல்லா வேளையும் இப்படி ஆக விரும்புகிறீர்களா? எப்போதும்? குறைந்தபட்சம் தலையை அசையுங்கள்! அச்சா. நீங்கள் 21 பிறவிகளுக்கு இராச்சிய அதிகாரிகள் ஆக விரும்புகிறீர்கள். இராச்சிய உரிமை உடையவர் என்றால் இராஜ குடும்பத்திலும் இராச்சிய அதிகாரியாக இருத்தல் என்று அர்த்தம். வெகு சிலரே சிம்மாசனத்தில் அமர்வார்கள். ஆனால் அங்கே, அரச குடும்பத்தினரும் சிம்மாசனத்தில் உரிமை உடையவர்களைப் போன்றே மரியாதையைப் பெறுவார்கள். அவர்களும் இராச்சிய உரிமை உடையவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள். எவ்வாறாயினும், அந்தக் கணக்கு இந்த நேரத்துடன் தொடர்புடையது. இப்போது சிலவேளைகளில் மட்டும் என்று இருந்தால், அந்த வேளையிலும் அது சிலவேளைகளில் என்றே இருக்கும். இப்போது எல்லா வேளைகளிலும் என்றிருந்தால், அப்போதும் எல்லா வேளைகளும் என்றிருக்கும். எனவே, பாப்தாதாவிடம் இருந்து முழுமையான உரிமையைக் கோருதல் என்றால், நிகழ்காலத்திற்கான உரிமையையும் அத்துடன் எதிர்காலத்தில் முழுமையாக 21 பிறவிகளுக்கான உரிமைகளையும் கோருதல் என்று அர்த்தம். எனவே, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் முழுமையான உரிமையையா, அரைவாசி உரிமையையா அல்லது சிறிதளவை மட்டுமா பெற்றுள்ளீர்கள்? நீங்கள் எதை எடுத்துச் செல்வீர்கள்? நீங்கள் உங்களின் முழுமையான உரிமைகளைப் பெற விரும்புகிறீர்கள்தானே? முழுமையாக. ஒரு பிறவியேனும் குறைவாக இருக்கக்கூடாது. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் முழு உரிமைகளையும் கொண்டவராக ஆக்குகிறார். நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களா? உறுதியாகவா? அல்லது, நீங்கள் இப்படி ஆகுவீர்களா இல்லையா என்றொரு கேள்வி இருக்கிறதா? உங்களுக்கு இந்தக் கேள்வி இருக்கிறதா? உங்களுக்குள் சிலவேளைகளில் இந்தக் கேள்வி இருக்கிறதா: ‘நான் இப்படி ஆகுவேனா இல்லையா எனத் தெரியவில்லை?’ நீங்கள் இப்படி ஆகவேண்டும். உறுதியாகவா? இவ்வாறு ஆக விரும்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் நிச்சயமாக இப்படி ஆகவேண்டும். அச்சா. நீங்கள் எல்லோரும் எந்த மாலையின் மணிகள் ஆவீர்கள்? 108 இன் மணிகளா? இங்கே எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? நீங்கள் எல்லோரும் 108 இல் ஒருவர் ஆகப் போகிறீர்களா? எவ்வாறாயினும் இங்கே 1800 பேர் இருக்கிறீர்கள். எனவே, 108 மணி மாலையை அதிகரிப்பீர்களா? அச்சா, ஆனால் நீங்கள் 16000 இல் ஒருவர் ஆக விரும்பவில்லை. நீங்கள் 16000 இல் ஒருவர் ஆகுவீர்களா? நீங்கள் அப்படி ஆகமாட்டீர்கள்தானே? உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த அனுபவம் இருக்க வேண்டும். நான் வராவிட்டால் வேறு யார்தான் வருவார்? உங்களுக்கு இந்தப் போதை இருக்கிறதா? நீங்கள் இப்படி ஆகாவிட்டால், வேறு எவரும் இப்படி ஆகமாட்டார்கள், அப்படித்தானே? நீங்களே இப்படி ஆகப் போகின்றவர்கள். நாங்களே அவர்கள் எனச் சொல்லுங்கள். பாண்டவர்களே, நீங்கள் இப்படி ஆகப் போகின்றீர்களா? அச்சா. பின்னால் அமர்ந்திருப்பவர்களே, நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்களா? நீங்கள் உங்களைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள நம்பிக்கையைப் பார்க்கும்போது பாப்தாதா தன்னையே அர்ப்பணிக்கிறார். ஆஹா! ஆஹா! ஒவ்வொரு குழந்தையும் ஆஹா! நீங்களே அற்புதங்களைச் செய்பவர்கள், அப்படித்தானே? ஆஹா, ஆஹா! ‘ஏன்? ஏன்?’ என்பது இல்லைத்தானே? சிலவேளைகளில் அது ஏன்? என்று ஆகிவிடுகிறதா? இல்லையா? ‘ஏன்?’ என்று ஆகுகிறது, அல்லது ‘ஐயோ’ என்று ஆகுகிறது. மூன்றாவதாக அழுதல். எவ்வாறாயினும், நீங்கள் ஆஹா, ஆஹா என்று சொல்பவர்கள்தானே?
பாப்தாதாவிற்கு இரட்டை வெளிநாட்டவர்களை இட்டு விசேடமான பெருமை உள்ளது. ஏன்? பாரத மக்கள் தந்தையைப் பாரதத்தில் அழைத்தார்கள். எவ்வாறாயினும், தந்தைக்கு இரட்டை வெளிநாட்டவர்களான உங்களின் மீது விசேடமான பெருமை உள்ளது. ஏனென்றால், நீங்கள் உங்களின் நேர்மையால் அன்பெனும் பந்தனத்தால் பாப்தாதாவைக் கட்டிப் போட்டுள்ளீர்கள். பெரும்பாலானோர் நேர்மையானவர்கள். சிலர் விடயங்களை மறைக்கிறார்கள். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் உங்களின் பலவீனங்களை நேர்மையுடன் தந்தையின் முன்னால் சொல்கிறீர்கள். வேறு எதையும் விட நேர்மையைத் தந்தை விரும்புகிறார். இதனாலேயே, பக்தி மார்க்கத்திலும் கடவுள் சத்தியமானவர் எனக் கூறுகிறார்கள். நேர்மை என்பது மிகவும் விரும்பப்படுகிறது. நேர்மையானவர்கள் சுத்தமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே, இரட்டை வெளிநாட்டவர்களின் நேர்மையின் அன்பெனும் இழையானது பாப்தாதாவை இழுக்கிறது. சிலவேளைகளில் சிலர் சிறிது கலப்படமாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் ஒருபோதும் உங்களின் நேர்மை என்ற இந்தச் சிறப்பியல்பைக் கைவிடக் கூடாது. நேர்மையின் சக்தியானது ஓர் உயர்த்தி போல் தொழிற்படும். எல்லோரும் நேர்மையை விரும்புகிறார்கள். பாண்டவர்களே, உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களும் நேர்மையை விரும்புகிறார்கள். மதுவனத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் எல்லோருமே கரங்கள் என தாதி கூறுகிறார். எனவே, மதுவனம், சாந்திவான் எல்லா இடங்களில் இருந்து வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் கைகளை உயரே தூக்குங்கள். மதுவனத்தில் இருந்து வந்திருப்பவர்களுக்கு நேர்மை பிடிக்குமா? நேர்மை உடையவர்கள் தந்தையை நினைவு செய்வது மிக இலகுவாக இருப்பதை உணர்வார்கள். ஏன்? தந்தையும் சத்தியம் ஆவார். அதனால் நேர்மையானவர்களால் உண்மையான தந்தையை விரைவாக நினைக்கக் கூடியதாக இருக்கும். அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. இப்போதும் நினைவு செய்வது உங்களுக்குச் சிரமமாக இருக்குமாயின், உங்களின் சூட்சுமமான எண்ணங்களில் அல்லது உங்களின் கனவுகளில் ஏதாவது நேர்மை குறைகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்கு நேர்மை இருக்கிறதோ, ‘பாபா’ என்ற எண்ணம் ஏற்பட்ட உடனேயே, பிரபு அங்கே பிரசன்னமாகி விடுவார். இதனாலேயே, பாப்தாதா அதிகளவில் நேர்மையை விரும்புகிறார்.
எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இந்த சமிக்கையை வழங்கியுள்ளார்: நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களின் முழுமையான ஆஸ்தியைப் பெற விரும்பினால், இப்போது உங்களின் சொந்த இராச்சியத்தைச் சோதியுங்கள். இப்போது ஒரு சுய இராச்சிய அதிகாரி ஆகுங்கள். எந்தளவிற்கு நீங்கள் இப்படி ஆகுகிறீர்களோ, அதற்கேற்ப நீங்கள் ஓர் உரிமையைப் பெறுவீர்கள். ஓர் இராச்சியத்தின் புகழ் உள்ளது. ஓர் இராச்சியமே இருக்கும். இரண்டு அல்ல, எனவே, உங்களின் சுய இராச்சியத்தின் தற்போதைய ஸ்திதியில் சதா ஒரே இராச்சியமே இருக்கிறதா? சுய இராச்சிய அதிகாரம் உள்ளதா அல்லது சிலவேளைகளில் யாராவது ஒருவரின் இராச்சியம் (ஆட்சி) நடக்கிறதா? சிலவேளைகளில் மாயையின் இராச்சியம் இருக்குமாயின், அதை நீங்கள் யாராவது ஒருவரின் இராச்சியம் என்று அழைப்பீர்களா அல்லது உங்களின் சுய இராச்சியம் என்று அழைப்பீர்களா? எனவே, உங்களிடம் சதா ஓர் இராச்சியம் இருப்பதையும் நீங்கள் மற்றவர்களில் தங்கி இருக்கவில்லை என்பதையும் சோதித்துப் பாருங்கள். சிலவேளைகளில் மாயையின் இராச்சியமும் சிலவேளைகளில் உங்களின் சொந்த இராச்சியமும் உள்ளனவா? இதில் இருந்து, நீங்கள் இன்னமும் உங்களின் முழுமையான ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதன் அர்த்தம், நீங்கள் அதைப் பெறவில்லை, ஆனால் இனிமேல்தான் அதைப் பெறப் போகிறீர்கள் என்பதாகும். எனவே, சோதித்துப் பாருங்கள்: உங்களிடம் சதா ஒரே இராச்சியம் இருக்கிறதா? ஒரே தர்மம்: தர்மம் என்றால் தாரணை என்று அர்த்தம். எனவே, விசேடமான தாரணை என்ன? அது தூய்மைக்கானது. எனவே, உங்களின் எண்ணங்களிலும் கனவுகளிலும் ஒரே தர்மம், அதாவது, தூய்மை இருக்கிறதா? உங்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் தூய்மை இன்மையின் நிழலேனும் இருக்குமாயின் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அது ஒரே தர்மமா? அங்கே சம்பூரணமான தூய்மை இருக்குமா? எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். ஏன்? காலம் இப்போது வேகமாகச் செல்கிறது. எனவே, காலம் வேகமாகச் செல்லும்போது, நீங்கள் மெதுவாகச் செல்வீர்களாயின், உங்களால் நேரத்திற்கு உங்களின் இலக்கை அடைய முடியாமல் இருக்கும். ஆகவே, சதா சோதித்துப் பாருங்கள்: ஒரே இராச்சியம் இருக்கிறதா? ஒரே தர்மம் இருக்கிறதா? சட்டமும் ஒழுங்குமுறையும் இருக்கிறதா? அல்லது, மாயை தனது கட்டளைகளைக் கொடுக்கிறாளா? கடவுளின் குழந்தைகள் ஸ்ரீமத் என்ற சட்டத்தையும் ஒழுங்கு முறையையும் பின்பற்றுகிறார்கள். மாயையின் சட்டத்தையும் ஒழுங்கு முறைகளையும் அல்ல. ஆகவே, சோதித்துப் பாருங்கள்: எதிர்காலத்தின் சம்ஸ்காரங்கள் இப்போது புலப்பட வேண்டும். ஏனென்றால், இப்போதே நீங்கள் அந்த சம்ஸ்காரங்களால் நிறைந்திருக்க வேண்டும். நீங்கள் அங்கே உங்களை அவற்றால் நிறைக்க மாட்டீர்கள். நீங்கள் இங்கேயே உங்களை அவற்றால் நிறைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் சந்தோஷம் இருக்கிறதா? உங்களிடம் அமைதி இருக்கிறதா? உங்களிடம் செல்வச் செழிப்பு இருக்கிறதா? உங்களின் சந்தோஷம் இப்போது வசதிகளில் தங்கியிருக்க இல்லைத்தானே? உங்களுக்குள் அதீந்திரிய சுகம் இருக்கிறதா? வசதிகள் உங்களின் பௌதீக அங்கங்களுக்கே ஆதாரமாக இருக்கின்றன. அதீந்திரிய சுகம் வசதிகளில் தங்கி இருப்பதில்லை. உங்களிடம் நிலையான, துண்டிக்க முடியாத அமைதி உள்ளதா? அது ஒருபோதும் துண்டிக்கப்படுவது இல்லை, அல்லவா? சத்தியயுக இராச்சியத்தின் புகழ் என்ன? துண்டிக்க முடியாத அமைதி. அசைக்க முடியாத அமைதி. அந்த முழுமை உங்களுக்குள் இருக்கிறதா? செல்வத்தைப் பொறுத்தவரை என்ன நடக்கும்? நீங்கள் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவீர்கள். உங்களிடம் எல்லாவற்றின் செல்வமும் இருக்கிறதா? நற்குணங்கள், சக்திகள், ஞானம் என்பவை உங்களின் செல்வங்களே. அதன் அடையாளம் என்ன? நீங்கள் சகல செல்வங்களாலும் நிறைந்திருந்தால், அதன் அடையாளம் என்ன? திருப்தி. சகல பேறுகளின் அடிப்படை, திருப்தி ஆகும். பேறுகள் இல்லாதிருப்பதன் அடையாளம் அதிருப்தியே ஆகும். எனவே சோதித்துப் பாருங்கள்: ஒரு சிறப்பியல்பேனும் தவற விடப்படக்கூடாது. தற்சமயம் உள்ள சம்ஸ்காரங்களின் அடிப்படையில் நீங்கள் முழு உலகையும் உருவாக்கப் போகின்றீர்கள். தற்சமயத்தின் சம்ஸ்காரங்கள் எதிர்கால உலகை உருவாக்கும். எனவே, நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் யார்? நீங்கள் உலகை மாற்றுபவர்கள்தானே? நீங்கள் அத்தகையவர்களா? நீங்கள் உலகை மாற்றுபவர்களா? எனவே, உலகை மாற்றுபவர்கள் ஆக முன்னர், சுயத்தை மாற்றுபவர்கள் ஆகுங்கள். அதனால், நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் இந்த சம்ஸ்காரங்களைச் சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு, நீங்கள் 108 மணிமாலையில் இருக்கிறீர்களா அல்லது எங்கேயாவது முன்னால் அல்லது பின்னால் இருக்கிறீர்களா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு சோதிப்பதே உங்களின் கண்ணாடி ஆகும். இந்தக் கண்ணாடியில் உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாருங்கள். உங்களால் அதைப் பார்க்க முடிகிறதா?
நீங்கள் இப்போது ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். நீங்கள் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். அது நல்லதே. நீங்கள் ஹோலியின் அர்த்தத்தைப் பற்றிப் பேசி உள்ளீர்கள்தானே? நீங்கள் பேசி உள்ளீர்கள்தானே? எனவே, இன்று, பாப்தாதா குறிப்பாக இரட்டை வெளிநாட்டவர்களான உங்களைப் பற்றியே பேசுகிறார். மதுவனத்தைச் சேர்ந்தவர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். இது மிகவும் நல்லது. பாப்தாதாவும் மதுவனத்தில் இருப்பவர்களுக்கும் அத்துடன் உங்களுக்கும் கூறுகிறார். இங்கு வந்திருக்கும் எல்லோரும், நீங்கள் பம்பாய், டெல்லி அல்லது வேறு எங்கே இருந்து வந்திருந்தாலும் இந்த வேளையில், நீங்கள் எல்லோருமே மதுவனவாசிகள். இரட்டை வெளிநாட்டவர்கள் இந்த வேளையில் எந்த இடத்தில் வசிக்கிறார்கள்? நீங்கள் மதுவன வாசிகள்தானே? மதுவனவாசியாக இருப்பது நல்லதுதானே? எனவே, குழந்தைகள் எல்லோருக்கும் நீங்கள் இங்கே பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது உங்களின் சொந்த இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். உங்களிடம் தைரியம் இருந்தால், பாப்தாதா அதைப் பற்றி உங்களுக்குக் கூறுவார். உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? உங்களிடம் இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். எனவே, வெறுமனே உங்களின் கைகளை உயர்த்தி, அது நடந்துவிட்டது என நினைக்காதீர்கள். அப்படி அல்ல. உங்களின் கைகளை உயர்த்துவது மிகவும் நல்லதே. ஆனால், உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள். இன்று, அந்தக் கையை மட்டும் உயர்த்தாதீர்கள். ஆனால், உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள்.
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் நெருக்கமாக அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, நெருக்கமாக இருப்பவர்களிடம் இதயத்தின் விடயங்கள் சொல்லப்படுகின்றன. உங்களில் பெரும்பாலானோர் பாப்தாதாவிடமும் சேவையிலும் மிக நல்ல அன்பைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. உங்களால் தந்தையின் அன்பு இல்லாமல் இருக்க முடியாது. அத்துடன் உங்களால் சேவை செய்யாமலும் இருக்க முடியாது. உங்களின் பெரும்பாலானோரின் இந்தச் சான்றிதழ் நன்றாக உள்ளது. பாப்தாதா எங்கும் பார்க்கிறார், ஆனால்..... ஓர் ‘ஆனால்’ உள்ளது. பெரும்பாலானோரிடம் இருந்து வருகின்ற சத்தம் என்னவென்றால்: ‘ஏதாவதொரு பழைய சம்ஸ்காரம் உள்ளது. இது எனது விருப்பத்திற்கு மாறாக என்னை இழுக்கிறது’. எனவே, நீங்கள் இப்போது ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். எனவே ஹோலி என்றால், கடந்ததைக் கடந்ததாக ஆக்குங்கள் என்பதாகும். அது நடந்தது, அது இப்போது முடிந்து விட்டது. எனவே, உங்களுக்குள் சிறிதளவேனும் ஏதாவது சம்ஸ்காரம் இருக்குமாயின், 5 வீதம், 10 வீதம் அல்லது 50 வீதம் இருந்தாலும் அது எவ்வளவாக இருந்தாலும் ஐந்து சதவீதமாக இருந்தாலும் அந்த சம்ஸ்காரங்களின் ஹோலியை எரியுங்கள். இந்த சம்ஸ்காரம் உங்களையும் மற்றவர்களையும் அவ்வப்போது குழப்புகிறது என நினைப்பவர்கள்: இது என்னவென்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்தானே? நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்களா? எனவே, ஒரு ஹோலி எரிப்பதற்கும் மற்றைய ஹோலி நிறமூட்டுவதற்கும் ஆகும். இரண்டு வகையான ஹோலிகள் உள்ளன. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும் என்பதே ஹோலி என்பதன் அர்த்தம். எனவே, உலக மாற்றம் நடக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கும் உங்களிடம் உள்ள சம்ஸ்காரங்கள் எவையாக இருந்தாலும் இன்றே அந்தப் பலவீனமான சம்ஸ்காரத்தை எரித்து விட வேண்டும், அதாவது, அந்தப் பலவீனமான சம்ஸ்காரத்தைத் தகனம் செய்து விட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். எரிப்பதும் தகனம் செய்வது என்றே அழைக்கப்படுகிறது, அப்படித்தானே? ஒருவர் இறக்கும்போது, தகனம் இடம்பெறும், அதாவது, அது எல்லா வேளைக்கும் முடிக்கப்பட வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். எனவே, இன்று, உங்களால் அந்த சம்ஸ்காரங்களின் தகனத்தைச் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? ‘அந்த சம்ஸ்காரங்கள் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் அவை வருகின்றன, எனவே நான் என்ன செய்வது?’ என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் இப்படி நினைக்கிறீர்களா? அச்சா. ‘அது தவறுதலாக வருகிறது’. நீங்கள் யாராவது ஒருவருக்குக் கொடுத்த ஏதாவது தவறுதலாக உங்களிடம் திரும்பி வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதைக் கவனமாக அலுமாரியில் வைப்பீர்களா? எனவே, அது திரும்பி வந்தாலும் உங்களின் இதயங்களில் அதை வைத்திருக்காதீர்கள். ஏனென்றால் தந்தையே உங்களின் இதயங்களில் அமர்ந்திருக்கிறார், அப்படித்தானே? அந்த சம்ஸ்காரங்களைத் தந்தையுடன் கூடவே வைத்திருப்பதை நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள்தானே? எனவே, தவறுதலாகவேனும் அது திரும்பி வருமாக இருந்தால், உங்களின் இதயபூர்வமாக ‘பாபா, பாபா, பாபா’ எனக் கூறுங்கள். அவ்வளவுதான்! அதை முடித்து விடுங்கள்! ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பாபா எத்தகையவர்? புள்ளியாக இருப்பவர். எனவே, நீங்கள் உங்களின் இதயபூர்வமாக அதைச் சொன்னால் மட்டுமே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் சொந்த சுயநலத்தோடு நீங்கள் பாபாவை நினைத்துக் கொண்டு, ‘பாபா, இதை எடுத்துவிடுங்கள். அதை எடுத்து விடுங்கள்’ எனக் கூறினால், நீங்கள் அதை உங்களுடனேயே வைத்துக் கொள்வீர்கள். நீங்கள் பாபாவிடம் அதை எடுக்கும்படி சொன்னாலும், அவரால் அதை எப்படி எடுக்க முடியும்? எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஹோலியைக் கொண்டாடுவீர்களா? நீங்கள் அதைக் கொண்டாடுவீர்களா? ஹோலி - ஹோ லி (அது நடந்துவிட்டது). அச்சா. இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்போம் என நினைப்பவர்கள் - ஓகே, நீங்கள் மீண்டும் மீண்டும் அதை அகற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள்தானே? அப்போது அது போய்விடும். அதை உங்களுக்குள் உள்ளேயே வைத்திருக்காதீர்கள்: ‘நான் என்ன செய்வது? எப்படி நான் இதைச் செய்வது? என்னால் அதை அகற்ற முடியவில்லையே’. இப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் அதை அகற்றவே வேண்டும். எனவே, உங்களிடம் இந்தத் திடசங்கற்பமான எண்ணம் இருக்கிறதா? இதைச் செய்ய இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள், புறத்தே அல்ல. உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள். (சிலர் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை) இவர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. மிகவும் நல்லது. பாராட்டுக்கள். பாராட்டுக்கள். ஒருபுறம், முன்னோடிக் குழுவினர் பாப்தாதாவிடம் மீண்டும் மீண்டும் கேட்;கிறார்கள்: எவ்வளவு காலத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? இரண்டாவதாக, பஞ்சபூதங்களும் தந்தையிடம் சொல்கின்றன: ‘இப்போது மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்’. தந்தை பிரம்மாவும் கூறுகிறார்: ‘எப்போது பரந்தாமத்தின் வாசல் திறக்கும்?’ நீங்கள் அவருடனேயே செல்ல விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் பின்னால் விடப்படுவதை விரும்பவில்லைத்தானே? நீங்கள் அவருடன் செல்வீர்கள்தானே? நீங்கள் அவருடன் சேர்ந்து வாசலைத் திறப்பீர்கள். பிரம்மாபாபா சாவியைப் போட்டுத் திறந்தாலும் நீங்கள் அவருடன் இருப்பீர்கள்தானே? எனவே, இப்போது இந்த மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அவ்வளவுதான். நீங்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அது உங்களுக்குச் சொந்தமான ஒன்றல்ல. யாராவது ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை, இராவணனுக்குச் சொந்தமான ஒன்றை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்? யாராவது ஒருவருக்குச் சொந்தமான எதையும் நீங்கள் வைத்திருப்பீர்களா? எனவே, இது யாருக்குச் சொந்தமானது? அது இராவணனுக்குச் சொந்தமானது, அப்படித்தானே? அவனுக்குச் சொந்தமான எதையும் நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் அதை வைத்திருக்க வேண்டுமா? நீங்கள் அதை வைத்திருக்க மாட்டீர்கள்தானே? உறுதியாகவா? நிச்சயமாகவா? நல்லது. நீங்கள் ஹோலியை நிறங்களுடன் கொண்டாடலாம், ஆனால் முதலில் இந்த ஹோலியைக் கொண்டாடுங்கள். கருணை நிறைந்தவர் என்பதை உங்களின் புகழ் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. நீங்கள் அத்தகையவர்களா? நீங்கள் கருணைநிறைந்த இறைவன், இறைவிகள், அப்படித்தானே? நீங்கள் அத்தகையவர்களா? எனவே, உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா? உங்களின் சகோதர, சகோதரிகள் மிகவும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் துன்பத்தைப் பார்க்கும்போது உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா? உங்களுக்குக் கருணை பிறக்கிறதா? எனவே, உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுங்கள், அப்போது உலகம் மாறும். உங்களின் சம்ஸ்காரங்களை நீங்கள் மாற்றும் வரைக்கும் உலகத்தாலும் மாற முடியாது. எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்?
இன்று, எல்லோரும் திருஷ்டி பெற விரும்புகிறார்கள் என்ற நல்ல செய்தியை பாப்தாதா கேட்டார். அது நல்லது. பாப்தாதா குழந்தைகளுக்குக் கீழ்ப்படிகிறார், ஆனால்..... ‘ஆனால்’ என்பதைக் கேட்டதும் நீங்கள் சிரிக்கிறீர்கள். நீங்கள் சிரிக்கலாம்.... ‘ஒருவரின் பார்வையால் உலகமே மாறுகிறது’ எனக் கூறப்படுகிறது. எனவே, நீங்கள் இன்று பெறுகின்ற திருஷ்டியால் உலகையே மாற்ற வேண்டும். முழுமையானவர் ஆகி சகல பேறுகளையும் பெறுதல் - இந்தப் பயிற்சி நீண்ட காலம் தேவைப்படுகிறது என்பதை பாப்தாதா பார்க்கிறார். அந்த வேளையில் அது நடக்கும் என நினைக்காதீர்கள், இல்லை. நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெற வேண்டும். அதனால் முழுமையும் நீண்ட காலத்திற்குத் தேவை. இது ஓகேயா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? அச்சா.
மூன்று சிம்மாசனங்களிலும் அமர்ந்திருக்கும் விசேடமான ஆத்மாக்களான உங்கள் எல்லோருக்கும் சுய இராச்சிய அதிகாரிகளாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும் கருணை நிறைந்தவர்களாகி ஆத்மாக்களுக்கு ஒரு துளி சந்தோஷத்தையும் வெற்றியையும் கொடுக்கும் மகாதானி ஆத்மாக்களுக்கும் தந்தைக்குச் சமமாக இருப்பதுடன் சதா திடசங்கற்பத்தையும் வெற்றியையும் அனுபவம் செய்யும் ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சுய பரிசோதனை செய்பவராகி, எண்ணங்களினதும் வார்த்தைகளினதும் விரிவாக்கத்தை அவற்றின் சாரத்திற்குக் கொண்டு வருவீர்களாக.வீணான எண்ணங்களின் விரிவாக்கத்தை நிறுத்தி, சாராம்சத்தின் ஸ்திதியில் ஸ்திரம் அடையுங்கள். அதாவது, வீணான வார்த்தைகளின் சத்தத்தை அமிழ்த்தி, அதைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். அதாவது, அதை அதன் சாராம்சத்திற்குக் கொண்டு வாருங்கள். இதுவே சுய பரிசோதனை ஆகும். தமது மௌன சக்தியால் சுய பரிசோதனை செய்யும் குழந்தைகளால் அலைந்து திரிகின்ற ஆத்மாக்களுக்கு அவர்களின் சரியான இலக்கைக் காட்ட முடியும். இந்த மௌன சக்தியால் பல அழகான, ஆன்மீக, நிறங்களைக் கொண்ட விளையாட்டுக்களைக் காட்ட முடியும். மௌன சக்தியால் உங்களால் ஒவ்வோர் ஆத்மாவின் மனதின் சத்தங்களையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் உங்களின் முன்னால் இருந்து பேசுவதைப் போல் மிகவும் அண்மையில் கேட்க முடியும்.
சுலோகம்:
உங்களின் சுபாவம், சம்ஸ்காரங்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் இலேசாக இருத்தல் என்றால் ஒரு தேவதை ஆகுதல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
நேர்மையான இதயங்களைக் கொண்டுள்ள நேர்மையான குழந்தைகளால், அவர்களின் நேர்மையின் மகத்துவத்தால் ஒரு விநாடியில் ஒரு புள்ளியாகி, புள்ளியான தந்தையை நினைக்க முடியும். நேர்மையான இதயங்களைக் கொண்டிருப்பவர்கள், பிரபுவை மகிழ்விக்கிறார்கள். தந்தையிடம் இருந்து விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுவதனால் அவர்களால் தமது தலைகளையும் யுக்தியுக்தாக (சரியான வழிமுறைகளைப் பயன்படுத்துதல்) வைத்திருக்க முடிவதுடன் காலத்திற்கேற்ப மிகச்சரியாக எந்தவொரு பணியையும் செய்ய முடிகிறது. இது ஏனென்றால், அவர்கள் விவேகிகளின் புத்தியான தந்தையை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்கள். இறைவனை மகிழ்ச்சி அடையச் செய்பவர்கள், இயல்பாகவே ராசியுக்தாகவும் (சகல இரகசியங்களையும் அறிந்தவர்கள்) யுக்தியுக்தாகவும் இருப்பார்கள்.
அறிவித்தல்: இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை. உலக தியான வேளை மாலை 6.30 இலிருந்து 7.30 வரை இடம்பெறும். அதில் சகல சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றுகூடி யோகா தபஸ்யாவில் ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் இந்தத் தூய உணர்வுகளுடன் அமர்ந்திருக்க வேண்டும்: ஆத்மாக்கள் எல்லோரும் நன்மை பெற வேண்டும், ஆத்மாக்கள் எல்லோரும் சத்தியப் பாதையில் நடந்து தமது ஆஸ்தியின் உரிமையைப் பெற வேண்டும். ஆத்மாவான நான், தந்தையைப் போல், ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான ஆசீர்வாதத்தை வழங்குகிறேன்.