16.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இதயம் ஒரேயொரு தந்தையில் மாத்திரம் பற்று வைத்து இருக்கின்றதா, அல்லது கர்ம உறவுமுறைகளில் பற்று வைத்துள்ளதா என உங்களுடைய ஸ்திதியைச் சோதித்துப் பாருங்கள்.
கேள்வி:
உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துவற்காக, நீங்கள் எந்த இரண்டு விடயங்களில், ஒரு நாளாந்த அட்டவணையை வைத்திருக்க வேண்டும்?பதில்:
உங்கள் யோகம், உங்கள் நடத்தை பற்றிய ஒரு நாளாந்த அட்டவணையை வைத்திருங்கள். நீங்கள் அவச்சேவை ஏதாவது செய்தீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். எப்பொழுதும் உங்களுடைய இதயத்தைக் கேளுங்கள்: நான் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறேன்? நான் என்னுடைய நேரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றேனா? நான் மற்றவர்களைப் பார்க்கின்றேனா? எனது இதயம் எவரது பெயரிலோ அல்லது ரூபத்திலோ பற்று வைத்துள்ளதா?பாடல்:
உங்களுடைய முகத்தை உங்கள் இதயக் கண்ணாடியில் பாருங்கள்.ஓம் சாந்தி.
இதைக் கூறியது யார்? எல்லையற்ற தந்தை கூறினார்: ஓ ஆத்மாக்களே. ஆத்மாக்கள் உயிர்வாழ்பவர்கள். ஆத்மா பிரிந்து சென்று விட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. உயிர் வாழ்ந்தவர் பிரிந்து சென்றுவிட்டார் என்பதே இதன் அர்த்தமாகும். இப்பொழுது தந்தை நேரடியாக இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் இந்தப் பிறவியை மாத்திரம் பார்க்கக்கூடாது என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் நீங்கள் தமோபிரதானாக ஆரம்பித்ததில் இருந்தே ஏணியில் கீழிறங்கி மேலும் தூய்மை அற்றவர்கள் ஆகிவருகின்றீர்கள். ஆகையினால் நீங்கள் நிச்சயமாகப் பாவங்கள் செய்திருப்பீர்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். முன்னைய பிறவிகளின் எவ்வளவு பாவங்கள் இன்னமும் உங்கள் தலையிலே இருக்கின்றன என எப்படி உங்களால் கூறமுடியும்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களால் எவ்வளவு நேரம் யோகத்தில் நிலைத்திருக்க முடிகின்றது? நீங்கள் எந்தளவிற்குத் தந்தையுடன் நல்ல யோகம் செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த இதயத்தையே சோதித்துப் பார்க்க வேண்டும். நான் தந்தையுடன் எந்தளவிற்கு யோகம் செய்கின்றேன்? எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்து தூய்மை ஆகுகின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் யோகமும் அதிகரிக்கும். நீங்கள் தூய்மை ஆகாவிடின், உங்களால் யோகம் செய்ய முடியாதிருக்கும். உங்களில் சிலர் நாள் முழுவதும் 15 நிமிடங்கள் கூட யோகம் செய்யாமல் இருக்கின்றீர்கள். உங்கள் இதயம் சிவபாபாவின் மீதா அல்லது சரீரதாரிகளின் மீதா பற்று வைத்துள்ளது என உங்களையே கேளுங்கள். அது கர்ம உறவுகளில் பற்று வைத்திருக்கின்றதா? மாயை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே புயல்களைக் கொண்டு வருகின்றாள். உங்கள் ஸ்திதி என்ன என்று நீங்களே புரிந்துகொள்ள முடியும். உங்கள் இதயம் சிவபாபாவில் பற்று வைத்திருக்கின்றதா அல்லது எந்தச் சரீரதாரியின் மீதாவது பற்று வைத்துள்ளதா? அது கர்ம உறவுமுறைகளில் பற்று வைத்துள்ளது என்றால், இன்னமும் பெருமளவு பாவங்கள் இருக்கின்றன என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாயை பின்னர் உங்களைக் குழிக்குள் தள்ளி விடுகின்றாள். தாங்கள் சித்தியடைவார்களா இல்லையா என்றும், தாங்கள் நன்றாகக் கற்கின்றார்களா இல்லையா என்றும் மாணவர்களால் உள்ளாரப் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் வரிசைக்கிரமமானவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுக்கே நன்மையை ஏற்படுத்த வேண்டும். தந்தை உங்களுக்கு இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: நீங்கள் தூய புண்ணிய ஆத்மாவாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால் தூய்மையாக இருப்பதே முதலாவது விடயமாகும். நீங்கள் தூய்மையானவராகவே கீழே வந்தீர்கள், நீங்கள் தூய்மையானவராகவே வீட்டுக்குத் திரும்ப வேண்டும். தூய்மை அற்றவர்களால் ஒருபொழுதும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. எந்தளவிற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றும் தொடர்ந்தும் உங்கள் இதயத்தை வினவுங்கள். பின்வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் மனச்சாட்சி நிச்சயமாக அவர்களை உறுத்தும். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். அத்துடன் நல்ல நடத்தையும் இருக்கவேண்டும். தந்தையை நினைவுசெய்து உங்கள் தலையில் இருக்கும் பாவச்சுமையை அகற்றுங்கள். நீங்கள் நினைவைக் கொண்டிருக்கும் வரை உங்கள் பாவச்சுமையை அகற்ற முடியாது. ஆகையினால் நீங்கள் தந்தையுடன் பெருமளவு யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதிமேலான தந்தை கூறுகின்றார்: உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அந்த நேரம் நெருங்கி வருகின்றது. உங்கள் சரீரத்தை நீங்கள் நம்பமுடியாது, எல்லா வகையான விபத்துக்களும் சடுதியாக இடம்பெறுகின்றன. இப்பொழுது அகால மரணங்கள் நிறைந்த காலமாகும். ஆகையினால், உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதற்கு, ஒவ்வொருவரும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்கள் யோகத்தையும், முழுநாளின் செயற்பாடுகளையும் சோதிப்பதற்கு, ஓர் அட்டவணையை வைத்திருங்கள். நாள் முழுவதும் எத்தனை பாவங்கள் செய்தீர்கள்? பாவங்கள் முதலில் உங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும் தோன்றி, பின்னர் செயல்கள் ஆகுகின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நல்ல செயல்கள் செய்வதற்கு நீதியான புத்தி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவரையாவது ஏமாற்றினீர்களா? நீங்கள் தேவையில்லாது பொய் கூறினீர்களா? நீங்கள் ஏதாவது அவச்சேவை செய்தீர்களா? ஒருவருடைய பெயர் ரூபத்தில் சிக்கிக் கொள்வதனால், யக்ஞத்தின் தந்தையை நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள், ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காமல் விட்டால், உங்கள் நிலை என்ன ஆகும் என்பது பற்றி நீங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் கவனயீனமாக இருந்தால், இறுதியில் நீங்கள் பெருமளவு வருந்த வேண்டியிருக்கும். குறைந்த அந்தஸ்தைப் பெற இருப்பவர்கள், குறைந்த அந்தஸ்தையே பெறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்யவேண்டும் எனப் புரிந்து கொள்வதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள். இந்த மந்திரத்தை அனைவருக்கும் கொடுங்கள்: தந்தையை நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தையை நினைவுசெய்வதே முதலாவதும், பிரதானமானதுமான விடயமாகும். நீங்கள் படைப்பவரையும், படைப்பையும் பற்றிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தினமும் நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக உங்களுக்குப் புதிய கருத்துக்கள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் பல்வகை ரூபத்தையும் விளங்கப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியும். ஏணிப் படத்திற்குப் பக்கத்தில் இந்தப் படத்தை வைத்து, நீங்கள் எவ்வாறு வேறுபட்ட குலங்களுக்குள் செல்கின்றீர்கள் என விளங்கப்படுத்துங்கள். எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம் என நீங்கள் நாள் முழுவதும் கடைய வேண்டும். சேவை செய்வதனாலும், தந்தையின் நினைவு ஏற்படுகின்றது. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டும். 63 பிறவிகளின் பாவங்கள் உங்கள் ஒவ்வொருவரின் மீதும் உள்ளன எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் பாவம் செய்ததனால், சதோபிரதானில் இருந்து தமோபிரதானாகி விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எனக்கு உரியவர்களாகி விட்டீர்கள். ஆகையால், எந்தப் பாவச்செயலும் செய்யாதீர்கள். பொய் பேசுவது, அசுர குணங்களைக் கொண்டிருப்பது, குடும்பங்களைப் பிரிப்பது, வம்பளப்பது, சண்டையிடுவது அனைத்துமே பெருமளவு இழப்பை ஏற்படுத்துகின்றன. அவை உங்களின் யோகத்தைத் தந்தையிடமிருந்து துண்டிக்கின்றன. ஆகையினால் அது மாபெரும் பாவமாகும். சிலமக்கள் அரசாங்கத்திற்கு நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள். அவர்கள் அரசாங்க இரகசியங்களை எதிரிகளிடம் கையளித்துப் பெருமளவு இழப்பை ஏற்படுத்துகின்றார்கள். ஆகையினால் அவர்கள் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்கள் வாயிலிருந்து சதா இந்த ஞான இரத்தினங்களே வெளிவரவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் பயனற்ற செய்திகளைப் பற்றிக் கேட்கவும் கூடாது. இந்த ஞான விடயங்களை மாத்திரமே பேசுங்கள். நீங்கள் எவ்வாறு தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்? எவ்வாறு நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள்? நாள் முழுவதும் இந்த விடயங்களை மாத்திரம் சிந்தியுங்கள். படங்களின் முன்னால் சென்று அமருங்கள். உங்கள் புத்தியிலே ஞானம் இருக்கின்றது. பக்தி மார்க்கத்தில் மக்கள் தொடர்ந்தும் பலவிதமான ரூபங்களை வழிபடுகின்றார்கள், ஆனால் அவற்றைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அது குருட்டு நம்பிக்கையும், சிலை வழிபாடும் ஆகும். பாரதம் இந்த விடயங்களுக்கு மிகவும் பிரபல்யமானது. நீங்கள் இப்பொழுது இந்த விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள். கண்காட்சிகளுக்குப் பலவிதமான மக்கள் வருகின்றார்கள். சிலர் தாங்கள் வந்து பார்த்துப் புரிந்து கொள்வதற்கு, அவை தகுதியானவை என நினைக்கிறார்கள். அவர்கள் அவற்றைப் பார்ப்பார்கள், ஆனால் நிலையங்களுக்கு ஒருபோதும் செல்லமாட்டார்கள். நாளுக்கு நாள், உலகின் நிலை மோசமடைகின்றது. அதிகளவு சண்டை நடக்கிறது. வெளிநாடுகளில் பல விடயங்கள் நடைபெறுகின்றன, கேட்கவே வேண்டாம். பலர் இறக்கின்றார்கள். இந்த உலகம் தமோபிரதானானது. குண்டுகள் தயாரிக்கப்படக்கூடாது என்று அவர்கள் கூறுகின்ற போதிலும், மற்றவர்கள் பெருமளவு குண்டுகளை வைத்திருப்பதால், தாங்களும் அதைத் தயாரிக்க வேண்டும், இல்லாவிடின் தாங்கள் அவர்களுக்கு அடிபணிய வேண்டிவரும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். வெளியாகும் அனைத்துக் கருத்துக்களும் விநாசத்துக்கு உரியவை. விநாசம் இடம்பெற வேண்டும். சங்கரர் இதை நடைபெறத் தூண்டியதாகக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தூண்டுதல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் நாடகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள், அவள் எனது குழந்தைகளையும் விகாரத்தில் விழச் செய்கின்றாள். உங்களுக்குச் சரீரதாரிகள் எவர்மீதும் அன்பு வைக்காதீர்கள் எனவும், எவரது பெயர், ரூபத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள் எனவும் பல தடவைகள் கூறப்பட்டுள்ளது, ஆனால் உங்களை ஒருவரின் சரீரத்தில் சிக்க வைக்குமளவுக்கு மாயை தமோபிரதான் ஆனவள். நீங்கள் உணர முடியாதளவுக்கு அவள் உங்களின் மூக்கைப் பிடித்துக் கொள்கிறாள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுமாறு பல தடவைகள் விளங்கப்படுத்துகின்றார். ஆனால் உங்களில் சிலர் அதைப் பின்பற்றுவதில்லை. இராவணனின் கட்டளைகள்; உடனடியாகவே உங்கள் மனதில் பிரவேசிக்கின்றன. இராவணன் உங்களைச் சிறையிலிருந்து விடுவிக்க மாட்டான். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். நாங்கள் இப்பொழுது வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம். நாங்கள் இப்பொழுது அரைக் கல்பத்து நோயிலிருந்து விடுவிக்கப்படுகின்றோம். நீங்கள் அங்கே இருக்கும் பொழுது, உங்களின் சரீரம் நோயிலிருந்து விடுபட்டிருக்கின்றது. இங்கே நீங்கள் பெருமளவு நோய்வாய்ப்பட்டுள்ளீர்கள். இந்த உலகம் இப்பொழுது மிகவும் ஆழ்நரகமாக உள்ளது. அம்மக்கள் கருட புராணத்தைப் (ஒரு சமயநூல்) படிக்கின்றார்கள். ஆனால் அதை வாசிப்பவரோ, அல்லது அதைச் செவிமடுப்பவரோ, அதைப் பற்றி எதையுமே புரிந்து கொள்வதில்லை. முன்னர் தான் பக்தியில் அதிகளவு போதை கொண்டிருந்ததாக பாபாவே கூறுகின்றார். பக்தியின் மூலம் கடவுளைச் சந்திக்க முடியுமெனக் கேள்விப்பட்டதால் அவர் சந்தோஷம் அடைந்து, தொடர்ந்தும் பக்தியைச் செய்தார். நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியதால் அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நீங்கள் பக்தி செய்ததும் நல்லதே. எனவே, பின்னர் ஏன் கடவுளை நினைவு செய்கின்றீர்கள்? கடவுள் வந்து பக்தியின் பலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் என்ன பலனைக் கொடுப்பார்? எவருக்குமே இது தெரியாது. தந்தை கூறுகின்றார்: கீதையைக் கற்பவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்களே எங்களது தர்மத்துக்கு உரியவர்கள். “கடவுள் பேசுகின்றார்” என்பதே, கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவதும், பிரதானமானதுமான விடயம் ஆகும். இப்பொழுது, கீதையின் கடவுள் யார்? கடவுளின் அறிமுகம் தேவைப்படுகின்றது. ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா யார் என்று உங்களுக்கு இப்பொழுது தெரியும். மக்கள் இந்த ஞான விடயங்களைப் பற்றி மிகவும் பயப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் பக்தியை மிகவும் விரும்புகின்றார்கள். அவர்கள் ஞானத்திலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால் ஓடுகின்றார்கள். தூய்மையாகுவது மிகவும் நல்லது. இப்பொழுது தூய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், அவர்கள் இதை முற்றிலும் செவிமடுப்பதில்லை. தந்தையின் வழிகாட்டல்களாவன: தீயதைக் கேட்காதீர்கள்! மாயை பின்னர் கூறுகின்றாள்: பாபாவின் விடயங்களைச் செவிமடுக்காதீர்கள்! மாயையின் வழிகாட்டல்களாவன: சிவபாபாவின் ஞானத்தைச் செவிமடுக்காதீர்கள்! இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்காதவாறு மாயை உங்களைப் பலமாக அறைகின்றாள். பின்னர், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடிவதில்லை. நீங்கள் உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும், சரீரதாரிகளையும் மாத்திரம் நினைவுசெய்து, பாபாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஆனால் அவர்கள் கீழ்ப்படிவற்றவர்களாகி, நான் இன்னார், இன்னாரை நினைவு செய்கின்றேன் எனக் கூறுகின்றார்கள். நீங்கள் மற்றவர்களை நினைவுசெய்தால் வீழ்ந்து விடுகின்றீர்கள். அவ் விடயங்களில் நீங்கள் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகம் முற்றிலும் அழுக்கானது. ஒரு புதிய சுவர்க்கம் எங்களுக்காக ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தையினதும், உலகச் சக்கரத்தினதும் அறிமுகத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆகையினால் இந்தக் கல்வியில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களினுள்ளே பாருங்கள். நாரதரின் உதாரணம் இருக்கின்றது. ஆகையால் தந்தை கூறுகின்றார்: நீங்கள் தந்தையை எந்தளவுக்கு நினைவு செய்கின்றீர்கள் என உங்களையே பாருங்கள். நினைவுசெய்வதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுடைய சந்தர்ப்பங்கள் எவ்வாறாக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். வேறு எவர்மீதும் அன்பு வைக்காதீர்கள். இறுதியில் நீங்கள் உங்கள் சரீரத்தை நீங்கிச் செல்லும் பொழுது, சிவபாபாவின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். சிவபாபாவை நினைவு செய்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் யார் என எவருக்குமே தெரியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தவர் யார்? பிராமணர்களாகிய உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குபவர் யார்? புள்ளி வடிவானவராகிய பரமாத்மாவான, பரமதந்தையே ஆவார். ஆகவே, அவரும் சுயதரிசனச் சக்கரதாரியா? ஆம். அவரே அனைவரிலும் முதன்மையானவர். இல்லாவிடின், யாரால் பிராமணர்களாகிய எங்களை இவ்வாறு ஆக்கமுடியும்? அவரிடம் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அனைத்து ஞானமும் உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்களும் அவ்வாறே ஆகுகின்றீர்கள். அவரும் ஓர் ஆத்மாவே. பக்தி மார்க்கத்திலே, விஷ்ணு இந்தச் சக்கரத்தை வைத்திருப்பதாகக் காட்டியுள்ளார்கள். பரமாத்மாவே திரிகாலதரிசியும், திரிமூர்த்தியும், திரிநேத்ரியும் என நாங்கள் கூறுகின்றோம். அவர் எங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகளாக ஆக்குகின்றார். எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக, நிச்சயமாக, அவர் ஒரு மனித சரீரத்தில் பிரவேசிப்பார். படைப்பவரால் மாத்திரமே எங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்க முடியும். எவருக்குமே படைப்பவரைத் தெரியாததால், அவர்கள் எங்கிருந்து படைப்பின் ஞானத்தைப் பெற முடியும்? சிவபாபா சுயதரிசனச் சக்கரதாரி என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவரே ஞானக்கடல். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தில் பிரவேசிக்கின்றோம் என அவருக்குத் தெரியும். அவர் மறுபிறப்புச் சக்கரத்தில் பிரவேசிப்பதில்லை, ஆனால் எங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானம் அவரிடம் உள்ளது. ஆகையினால், சிவபாபாவே முதலாவது சுயதரிசனச் சக்கரதாரி ஆவார். சிவபாபாவால் மாத்திரமே எங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகளாக்க முடியும். அவர் எங்களைத் தூய்மை ஆக்குகின்றார். ஏனெனில் அவரே படைப்பவரும், தூய்மை ஆக்குபவரும் ஆவார். ஒரு தந்தைக்கு அவரது குழந்தைகளின் வாழ்க்கை பற்றித் தெரியும். சிவபாபா பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையை நடாத்துகின்றார். அவர் கரன்கரவன்ஹார். நீங்கள் கற்பதுடன் மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். தந்தை உங்களுக்குக் கற்பித்துப் பின்னர் கூறுகின்றார்: நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். சிவபாபாவே உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குபவர். அவர் கூறுகின்றார்: என்னிடம் உலகச் சக்கரத்தின் இந்த ஞானம் உள்ளது. இதனாலேயே என்னால் உங்களுக்கு இதைக் கொடுக்க முடிகின்றது. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள்? உங்கள் 84 பிறவிகளின் கதையை நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். இந்த அளவையேனும் உங்கள் புத்தியில் வைத்திருந்தால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆக முடியும். இது ஞானமாகும். யோகத்தின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். முழு நாளினதும் அட்டவணையை வைத்திருங்கள். நீங்கள் நினைவைக் கொண்டிருக்காவிடின், எவ்வாறு ஓர் அட்டவணையை வைத்திருப்பீர்கள்? நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தளவையேனும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள், இல்லையா? சிலர் தாங்கள் எத்தனை சமயநூல்களைக் கற்றுள்ளார்கள் அல்லது எவ்வளவு புண்ணியம் செய்துள்ளார்கள் போன்றவற்றுக்கான ஓர் அட்டவணையை வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்திருந்தீர்கள் என்றும், எத்தனை பேருக்குத் தந்தையின் அறிமுகத்தைச் சந்தோஷமாகக் கொடுத்தீர்கள் என்றும் நீங்கள் கூறுவீPர்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்ற ஞானக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கடையுங்கள். நீங்கள் பெற்ற இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தினமும் ஒரு முரளியை வாசியுங்கள். அதுவும் மிகவும் நல்லது. ஒரு முரளியிலிருந்து நீங்கள் பெற்ற கருத்துக்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கடையுங்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள், இங்கே வசிப்பவர்களை விட அதிகளவில் பாபாவை நினைவு செய்கின்றார்கள். பாபாவைப் பார்த்திராத, பந்தனத்தில் உள்ள பலர் இருக்கின்றார்கள். அவர்கள் பாபாவை அதிகளவு நினைவு செய்கின்றார்கள். அவர்கள் சதா போதையில் இருக்கின்றார்கள். வீட்டில் இருக்கும் பொழுதே அவர்கள் காட்சிகளைக் காண்கின்றார்கள். அல்லது இந்த ஞானத்தைச் செவிமடுப்பதனால், அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஆகவே, தந்தை கூறுகின்றார்: எவ்வளவு மேன்மையான அந்தஸ்தை நீங்கள் கோர இருக்கின்றீர்கள் எனத் தொடர்ந்தும் உங்களையே பாருங்கள். உங்கள் நடத்தை எவ்வாறு உள்ளது? எந்த உணவினாலோ அல்லது பானத்தினாலோ நீங்கள் தூண்டப்படுகின்றீர்களா? அவ்வாறான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பிரதான விடயம் கலப்படமற்ற நினைவைக் கொண்டிருப்பதாகும். உங்கள் இதயத்தையே கேளுங்கள்: நீங்கள் யாரை நினைவு செய்கின்றீர்கள்? எவ்வளவு நேரம் நீங்கள் மற்றவர்களை நினைவு செய்கின்றீர்கள்? நீங்கள் ஞானத்தைக் கிரகித்து, உங்கள் பாவங்களை அழிக்க வேண்டும். சிலர் அவ்வாறான பாவங்களைச் செய்கின்றார்கள், கேட்கவே வேண்டாம். கடவுள் கூறுகின்றார்: இதனைச் செய்யுங்கள்! எவ்வாறாயினும், அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இன்னொருவரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றேன். அதாவது, அவர்கள் மாயையின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றார்கள். நல்லது, மாயையின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதைத் தொடருங்கள். நீங்கள் ஒன்றில் ஸ்ரீமத்தை அல்லது உங்களின் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்ற முடியும். அந்த நிலையில் எந்தளவுக்கு உங்களால் சித்தியடைய முடியும் எனச் சோதித்துப் பாருங்கள். என்ன அந்தஸ்தை நீங்கள் கோருவீர்கள்? இல்லாவிட்டால், 21 பிறவிகளுக்கு நீங்கள் இழப்பினால் வருந்துவீர்கள். நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைகின்ற பொழுது, சரீர உணர்வு என்ற வார்த்தை இருக்க மாட்டாது. இதனாலேயே உங்களுக்கு ஆத்ம உணர்வுடையவர் ஆகுமாறு கூறப்படுகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த யக்ஞத்தின் தந்தையை அவதூறு செய்யும் வகையில், அவ்வாறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள். தந்தையினால் கொடுக்கப்பட்ட நீதியான புத்தியின் மூலம் நல்ல செயல்களைச் செய்யுங்கள். ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.2. ஒருவர் மற்றவரிடம் பயனற்ற செய்திகளைப் பற்றிக் கேட்காதீர்கள். உங்கள் மத்தியில் இந்த ஞான விடயங்களை மாத்திரமே பேசுங்கள். பொய் பேசுவதையும், அசுர குணங்களைக் கொண்டிருப்பதையும், குடும்பங்களைப் பிரிப்பதையும் விட்டுவிடுங்கள். உங்கள் வாயிலிருந்து இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரம் வெளிவர வேண்டும். தீய விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது பேசவோ வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் எதிரிகளான ஐந்து விகாரங்களையும் மாற்றி, அவற்றை உங்களுடன் ஒத்துழைக்கச் செய்வதன் மூலம் மாயையை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகுவீர்களாக.வெற்றி பெறுகின்ற ஒருவர் நிச்சயமாகத் தனது எதிரியின் ரூபத்தை மாற்றுவார். எனவே, நீங்கள் உங்களின் எதிரிகளான விகாரங்களை மாற்றி அவற்றின் ஒத்துழைக்கும் ரூபமாகவும் மாற்றுகிறீர்கள். அதனால் அவை சதா உங்களுக்குத் தொடர்ந்து வணங்கும். காமம் என்ற விகாரத்தை நல்லாசிகளாக மாற்றுங்கள். கோபத்தை ஆன்மீக போதையாக மாற்றுங்கள். பேராசையை சலனத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்குங்கள். பற்றை அன்பாக மாற்றுங்கள். உங்களின் சரீரத்தின் அகங்காரத்தை சுய மரியாதையாக மாற்றுங்கள். அப்போது நீங்கள் மாயையை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகுவீர்கள்.
சுலோகம்:
‘எனது’ என்ற உணர்வானது, நிஜத்தங்கத்தில் கலக்கும்போது அதன் பெறுமதியைக் குறைக்கும் ஒரு கலப்படம் ஆகும். ஆகவே, ‘எனது’ என்ற உணர்வை முடியுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
நீங்கள் எந்தவொரு பணியிலும் அல்லது எந்தவொரு சேவையிலும் தனியாக இருப்பதாக உணர்ந்தால், களைப்படைந்து விடுவீர்கள். அதன்பின்னர் இரண்டு கைகளைக் கொண்டவர்களை உங்களின் சகபாடி ஆக்கி, ஆயிரம் கரங்களைக் கொண்ட ஒரேயொருவரை மறந்து விடுவீர்கள். ஆயிரம் கரங்களைக் கொண்ட ஒரேயொருவர் தனது வீட்டை விட்டு வந்து, உங்களுக்கு அவரின் சகவாசத்தைக் கொடுக்க வந்திருக்கும்போது, நீங்கள் ஏன் அவரை உங்களுடன் ஒன்றிணைந்து வைத்திருக்கிறீர்கள் இல்லை? சதா உங்களின் புத்தியால் ஒன்றிணைந்தவராக இருங்கள். நீங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.