16.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகளவு நேரம் கடந்துவிட்டது, சிறிதளவு நேரம் மாத்திரமே எஞ்சியுள்ளது என எப்போதும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது இந்த அவலட்சணமான சரீரத்தையும், உலகையும் மறந்து வீட்டுக்குத் திரும்பவேண்டும்.
கேள்வி:
உங்களுடைய ஸ்திதி முதற்தரமாக இருப்பதற்கு, நீங்கள் சதா கொண்டிருக்க வேண்டிய போதை என்ன?பதில்:
வேடனுக்குக் கொண்டாட்டமும், இரைக்குத் திண்டாட்டமும் என்ற போதையை சதா கொண்டிருங்கள். வேட்டைக்காரர்களாகிய நாங்கள் எமது அன்பிற்கினியவருடன் வீட்டுக்குச் செல்வோம், ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். நாங்கள் இப்பொழுது இந்தப்பழைய சரீரத்தை விட்டுப் புதியதை எடுப்போம். இந்த ஞானம் அனைத்தும் துளித்துளியாக நாள் முழுவதும் உங்களுடைய புத்திகளில் பிரவேசிக்க வேண்டும், அப்பொழுது எல்லையற்ற சந்தோஷம் இருப்பதுடன், உங்கள் ஸ்திதியும் முதல் தரமானதாக ஆகும்.பாடல்:
இன்று அதிகாலை வேளையில் இங்கே வந்தது யார்?ஓம் சாந்தி.
யார் இதைக் கூறினார்? குழந்தைகளாகிய நீங்கள். நீங்கள் அதீந்திரிய சந்தோஷம் எனும் வாழ்க்கைக்கு வந்து கூறுகின்றீர்கள்: எல்லையற்ற தந்தை வந்துள்ளார். எதற்காக? தூய்மையற்ற உலகைத் தூய்மையாக மாற்றுவதற்காக வந்துள்ளார். தூய்மையான உலகம் எவ்வளவு பெரியது என்றும், தூய்மையற்ற உலகம் எவ்வளவு பெரியது என்றும் குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் பிரவேசிக்க வேண்டும். இங்கே பல மில்லியன் மனிதர்கள் இருக்கின்றார்கள். இது தூய்மையற்ற, சீரழிந்த உலகம் என அழைக்கப்படுகின்றது. எனவே உங்களுடைய புதிய உலகம் எவ்வளவு சிறியது என்றும், எவ்வாறு நீங்கள் அரசாள்வீர்கள் எனவும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களது இதயத்தில் பிரவேசிக்க வேண்டும். எங்களுடைய பாரதம் போன்று வேறு எந்த தேசமும் இருக்க முடியாது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. அதைப் போன்று வேறு எந்த தேசமும் இருக்க முடியாது. இப்பொழுது இந்த பாரதம் பயனற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, ஆனால் அது இப்போது அவ்வாறில்லை. தங்களுடைய பாரதமே அதிமேன்மையான, புராதன தேசமாக இருந்தது என எவருமே நினைவு செய்வதுமில்லை. இது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் பிரவேசிக்கின்றது. ஆனால் அதுவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கரமமாகவே ஆகும். உங்களுக்கு இந்தளவு சந்தோஷமும் மதிப்பும் இருக்கின்றதா? எல்லையற்ற தந்தை வந்துள்ளார். அவர் ஆத்மாக்களாகிய எங்களுக்கு மாயை இராவணன் எங்களிடமிருந்து பறித்தெடுத்த இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். அது யுத்தத்தின் மூலம் எங்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுவதில்லை. இல்லை. இராவண இராச்சியத்தில் நாங்கள் பெற்ற வழிகாட்டல்கள் சீரழிந்தவையாகும். மேன்மையானவர்களில் இருந்து நாங்கள் சீரழிந்தவர்களாகி விட்டோம். உலகம் எவ்வளவு பெரிதாகி விட்டது எனப்பாருங்கள்! எங்களது பாரததேசம் மிகவும் சிறியதாக இருந்தது. நாங்கள் சுவர்க்கத்தில் சந்தோஷமாக இருப்போம். அங்கே வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருக்கும். இராவணன் அங்கே இருக்க மாட்டான். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்திகளில் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதீந்திரிய சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! சரீர உணர்வை முடிப்பதற்கு நீங்கள் 108 ஒட்டுப் போடப்பட்ட ஆடையை அணியவேண்டும் என பாபா கூறியுள்ளார். பிரபல்யமான மக்களுடனும், வைர வியாபாரிகளுடனும் தொடர்பு கொண்டிருந்த போதிலும், எவ்வாறு அந்த போதை துண்டிக்கப்பட்டது? ஒருவர் ஆத்ம உணர்வுடையாக வேண்டும்: நான் ஓர் ஆத்மா, இது ஒரு பழைய சரீரம். நான் இந்த சரீரத்தை விட்டு ஒரு புதிய முதல்தரமான சரீரத்தை எடுக்கவேண்டும். ஒரு பாம்பு அதன் செட்டையை நீக்கிவிட்டு இன்னொன்றை எடுக்கின்றது. நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை விட்டு, விட்டு வேறு சரீரங்களை எடுப்பீர்கள் என்ற இந்த ஞானம் உங்களது புத்திகளில் உள்ளது. இந்த ஞானம் அனைத்தும் துளித்துளியாக குழந்தைகளாகிய உங்களது புத்தியில் பிரவேசிக்க வேண்டும். இது அழுக்கான உலகம். நீங்கள் அதைப் பார்க்கின்ற போதும், உங்களது புத்தியிலிருந்து அதை அகற்ற வேண்டும். நாங்கள் நினைவு யாத்திரை செல்கின்றோம். எங்களது புத்தியின் யோகம் வீட்டை நோக்கியுள்ளது. நீங்கள் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். இந்தச் சரீரம் பழையது, இந்த உலகமும் பழையது. நீங்கள் இப்பொழுது உங்களது சரீரத்தையும், சரீர உறவினர்களையும் விட்டு நீங்கி வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற காட்சிகளைக் கண்டீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப இருக்கின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளார இருக்கின்றது. உங்கள் புத்தியின் யோகம் அங்கே இணைக்கப்பட வேண்டும். இதை ஒருவருக்கொருவர் கூறுங்கள்: மன்மனாபவ! இது ஒரு சக்திவாய்ந்த மந்திரமாகும். பல மக்கள் கீதையைக் கற்கின்ற போதிலும் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வேறு சமயநூல்களைக் கற்பதைப் போன்றே கீதையையும் கற்கின்றார்கள். நீங்கள் எதிர்காலத்துக்காக இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள் என்பது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. அதிகளவு நேரம் கடந்து விட்டது, இப்பொழுது சிறிதளவு நேரமேயுள்ளது. இவ்வாறு உங்களைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்திச் சந்தோஷமாக இருங்கள். இவை அனைத்தும் முடிவுக்கு வர உள்ளது. இரைக்கு மரணமும் வேடனுக்குக் கொண்டாட்டமும் உள்ளது. நாங்கள் தேவதைகள் ஆகி, எங்கள் அனிபிற்கினியவருடன் வீடு திரும்புவோம். ஆத்மாக்களின் தந்தை இங்கிருந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அவர் சாதாரணமாகத் தெரிகின்றார். ஆனால் அவரே அதிமேலானவர் ஆவார். தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ளார். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். இது அழுக்கான உலகமாகும். நீங்கள் உங்களுடன் இவ்வாறு பேசவேண்டும். இதுவே இந்த ஞானக்கடலைக் கடைவது என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் பிறவி, பிறவியாகச் சமயநூல்களைக் கற்றீர்கள். பாரதமக்கள் போன்று வேறு எவருமே பல யாகங்களையோ அல்லது நோன்பு, தபஸ்யா போன்றவற்றையோ செய்யவில்லை என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆரம்பத்தில் வந்தவர்களே, அதிகளவு பக்தி செய்கின்றார்கள். அவர்களே இந்த ஞானத்திலும், யோகத்திலும் முன்னால் செல்பவர்கள். ஏனெனில் அவர்கள் மீண்டும் ஒருமுறை முதல் எண்ணிக்கையில் வரவேண்டும். சிலர் நன்றாக முயற்சி செய்வதை உங்களால் பார்க்கமுடியும். இந்த ஆன்மீக சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கும், இங்கே உண்மையில் சூளையில் அமர்ந்திருக்கின்ற குழந்தைகளாகிய உங்களுக்கும் இது மிகவும் நல்லது. இந்த உறவுமுறை இப்பொழுது துண்டிக்க முடியாததாகி விட்டது. வீட்டில் வசித்துக் கொண்டே இதைக்கேட்டு, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள், பழையவர்களிலும் பார்க்க வேகமாக முன்னேறிச் செல்கின்றனர். புதியவர்கள் வருகின்ற போது, அவர்கள் மிக விரைவாக முன்னேறிச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் ஒரு பட்டியல் போட்டிருந்தால், அது பற்றி அறிந்திருப்பீர்கள். முதலில் உங்களின் மணிமாலை உருவாக்கப்பட்டது. ஆயினும், பின்னர் மூன்றாவது அல்லது நான்காவது இலக்கத்திலிருந்த மிக நல்ல குழந்தைகள் மணிமாலையை விட்டுச் சென்று பிரஜைகளின் பகுதியாகியதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்பொழுது இது உங்களுடைய மாணவ வாழ்க்கையாகும். வீட்டில் குடும்பத்துடன் வாழும்போதும் நீங்கள் இந்தப் பாடநெறியையும் கற்கின்றீர்கள். பல குழந்தைகள் இரட்டைப் பாடநெறியைக் கற்கின்றார்கள். அவர்கள் ஓர் உயர்த்தியைப் பெறுகின்றனர். குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது இந்தக் கல்வியைக் கற்பது தான் உங்கள் பாடமாகும். இதிலும் குமாரிகள் மிக வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும். குமாரிகளாலேயே கண்ணையா (கிருஷ்ணர்), கோபால் என்ற பெயர்கள் நினைவு கூரப்படுகின்றன. கோபிகளும் அங்கே இருக்கின்றார்கள். ஏனெனில் இது குடும்பப்பாதை ஆகும். நீங்கள் சத்தியயுகத்தில் தேவதர்மத்துக்குச் சொந்தமாக இருந்தீர்கள். அது குடும்பப்பாதையாக இருந்தபோது இலக்ஷ்மி, நாராயணன் ஆட்சி செய்தார்கள். நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் துளித்துளியாகப் பிரவேசிக்க வேண்டும். தேவர்கள் முதற்தரமானவர்கள்! மக்கள் அவர்களின் விக்கிரகங்களின் முன்னே சென்று, நீங்கள் சகல தெய்வீககுணங்களும் நிறைந்தவர்கள், 16 கலைகள் நிறைந்தவர்கள் எனப்புகழ் பாடுகின்றனர். நாங்கள் பாவிகளும், ஏமாற்றுக்காரர்களும் ஆவோம். நாங்கள் முற்றிலும் தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள். கடவுள் இதில் கருணை கொள்வதோ அல்லது ஆசீர்வாதங்கள் வழங்குவதோ இல்லை. உண்மையில் நீங்கள் உங்கள் மீது கருணை கொண்டு உங்களுக்கே ஆசீர்வாதங்களை வழங்கவேண்டும். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது என்னவாக ஆகியுள்ளீர்கள் எனப்பாருங்கள்! உங்களையே பார்த்துப் பின்னர் தேவர்களாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவலட்சணமானவர்களில் இருந்து அழகானவர்கள் ஆகவேண்டும். ஒருவர் இறந்து கொண்டிருந்தார், ஆனால் யாரோ ஒருவரது ஆசீர்வாதத்தினால், அவர் பிழைத்துக் கொண்டார் என பக்திமார்க்கத்தில் அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய மகாத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் எனக் கூறுகின்றனர். இங்கே நீங்கள் கற்கவேண்டும். இங்கே கருணை அல்லது ஆசீர்வாதம் என்ற கேள்வியில்லை. “மன்மனாபவ” என்பதற்கு அர்த்தம் உள்ளது. பல மக்கள் மந்திரங்களைக் கொடுக்கின்றார்கள். அவர்கள் பலவிதமான ஹத்த யோகத்தைக் கற்பிக்கின்றனர். ஒவ்வொருவரின் கற்பித்தல்களும் வேறுபட்டவை. ஹத்த யோகிகளின் மாதிரியைப் பார்க்க விரும்பினால், ஜெய்பூரில் உள்ள நூதனசாலைக்குச் செல்லுங்கள். இங்கே நீங்கள் சௌகரியமாக அமர்ந்திருக்கின்றீர்கள்! பாபா மீண்டும் ஒரு முறை உங்களுடைய இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்பதை உங்களின் புத்தி தெரிந்து கொள்கின்றது. அங்கே பிரிவினையற்ற தேவதர்மம் இருந்தது. அங்கே வேறு எந்த மதங்களும் இருக்கவில்லை. கைதட்டுவதற்கு இரண்டு கைகள் தேவையாகும். ஒரு தர்மம் மாத்திரமே இருக்கின்ற போது, வன்முறை எதுவும் இருப்பதில்லை. இப்பொழுது இது கலியுகமாகும். கலியுகம் முடிகின்றபோது பக்தியும் கூட முடிவடையும். இப்பொழுது சனத்தொகை மிக வேகமாக வளர்ச்சி அடைகின்றது. பாரததேசம் வளர்ச்சி அடையவில்லை. அது அதே தேசமாகவே உள்ளது. மனிதர்களின் எண்ணிக்கையே பெரியதாகவும், சிறியதாகவும் இருக்கின்றது. இது அதே உலகமாக இருந்போதிலும் அங்கே வெகு சில மனிதர்களே இருப்பார்கள். உலகம் சிறிதாக ஆகுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் யோகசக்தியுடன் எங்களுடைய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிந்துவிடும். ஆத்மாவிலேயே கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெறுமனே சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகள் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் ஆத்மாவில் கலப்படம் கலக்கப்பட்டதை காட்டுவதில்லை. முதலில் நீங்கள் சத்தியயுகத்தவராக இருந்தீர்கள். நீங்கள் தூய தங்கமாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் வெள்ளியாக ஆகினீர்கள், அதுவே வெள்ளியுகம் அல்லது சந்திரவம்சம் என்று அழைக்கப்படுகின்றது. தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்ற ஆங்கில வார்த்தைகள் மிகநல்லவை. ஆத்மாவில் கலந்துள்ள கலப்படத்தை எவ்வாறு அகற்ற முடியும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா சதோவிலிருந்து தமோ ஆகிவிட்டார். எனவே எவ்வாறு அது மீண்டும் ஒருமுறை தமோவிலிருந்து, சதோவாக முடியும்? கங்கையில் நீராடுவதன் மூலம் அவர்கள் சதோபிரதான் ஆகுவதாக நம்புகின்றார்கள். ஆயினும் அது சாத்தியமில்லை. மக்கள் கங்கையில் ஒவ்வொருநாளும் தொடர்ந்தும் நீராடுகின்றார்கள். சிலர் அந்தப்பழக்கத்தில் மிகவும் உறுதியாக உள்ளார்கள். அவர்கள் கால்வாய்க்குச் சென்றும் நீராடுகின்றார்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: தந்தையை நினைவு செய்வதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த ஞானத்தில் நீராடி, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் இந்த ஞானத்தால் நீராட்டப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு நினைவு யாத்திரையும் கற்பிக்கப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இதில் யோகத்தின் ஞானமும், உலகச்சக்கரத்தின் ஞானமும் அடங்குகின்றது. வேறு பலர் சமயநூல்களின் ஞானத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் யோகம் பற்றிய எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் ஹத்த யோகம் பற்றியே புரிந்து கொண்டுள்ளார்கள். பல யோக ஆச்சிரமங்கள் உள்ளன. அவர்கள் மன்மனாபவ என்ற மந்திரத்தைக் கொடுக்கலாம். ஆனால் தந்தையைத்தவிர வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்துள்ளீர்கள். பின்னர் புதிய உலகம் இருக்கும். எவ்வாறு விருட்சம் வளர்கின்றது என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அனைவரும் அங்கே ஒன்றாகச் செல்வார்கள் என்றில்லை. பிராமணர்களின் விருட்சம் மிகப்பெரியதாக ஆகும், அப்பொழுது அவர்கள் ஒரு நேரத்தில் சிலரே திரும்பிச் செல்வார்கள். பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுவார்கள். சிறிதளவில் இந்த ஞானத்தைக் கேட்பவர்களும் பிரஜைகளில் ஒருவார் ஆகுவார்கள். நிலையங்களின் எண்ணிக்கையும் வளரும். பல கண்காட்சிகள் சகல இடங்களிலும் தொடர்ந்தும் நடக்கும். எவ்வாறு சகல இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளதோ, அதேபோன்று நீங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் கண்காட்சிகளை நடத்துவீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் வளர்ச்சி இடம்பெறும். இதனாலேயே கடைசியில் இந்தப்படங்களும் அச்சிடப்பட வேண்டும். தந்தையின் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிக முக்கியமான சேவை செய்யவேண்டும். புரெஜெக்டரின் நாகரீகமும், கண்காட்சிகளும் இப்பொழுது உருவாகியுள்ளது. எனவே அவை ஒவ்வொரு கிராமத்திலும் காண்பிக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த ஞானத்தை மிக நன்றாக எடுப்பார்கள். சிவனின் பிறந்த தினம் நினைவு கூரப்படுகின்றது. ஆனால் அவர் எப்படி வருகின்றார் என எவரும் அறியமாட்டார்கள். இந்த விடயங்கள் சிவபுராணத்தில் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் இந்த விடயங்களை; கேட்கும்போது அதை அனுபவிக்கின்றீர்கள். ஆனால் பின்னர் அவற்றை மறந்துவிடுகின்றீர்கள். நீங்கள் கருத்துக்களை நன்றாகக் கிரகித்து இருந்தால் உங்களால் நன்றாக சேவை செய்யமுடியும். ஆயினும் எவராலும் கருத்துக்கள் அனைத்தையும் கிரகிக்க முடியாது. அவர்கள் சொற்பொழிவுகள் ஆற்றுகின்றார்கள். ஆனால் பின்னர் இன்ன, இன்ன கருத்துக்களை விளங்கப்படுத்தி இருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமென நினைக்கின்றார்கள். சரீர உணர்வு இல்லாதவர்களால் இந்த விடயங்களை விரைவாகக் கூறமுடியும். அவர்கள் சொற்பொழிவு ஆற்றிவிட்டுப் பின்னர் நினைக்கின்றார்கள்: நான் சகல கருத்துக்களையும் மிக நன்றாக விளங்கப்படுத்தினேனா? நான் இந்தக் கருத்துக்களை மறந்துவிட்டேன். இந்தக் கருத்துக்கள் உங்களுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப்போதில்லை. அவை இந்த நேரத்திற்கானதாகும். பின்னர் அவை மறைந்துவிடும். இந்தக்கண்களால் பார்ப்பவை எதுவுமே சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. நீங்கள் இப்பொழுது மூன்றாம் கண்ணான ஞானக்கண்ணைப் பெறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது மூன்றாவது கண் உள்ளவர்களாக (திரிநேத்ரி) ஆகின்றீர்கள். பாபா வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கிரகிப்பதற்காக இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மா மூன்றாவது கண்ணாகிய இந்த ஞானத்தைப் பெறுகின்றார். தான் ஓர் ஆத்மா, தனது சரீரத்தின் மூலமாக வேலை செய்கின்றேன் என்ற ஞானம் எவரிடமும் இல்லை. பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதைப் புத்தியில் கொண்டிருப்பதற்கு முயற்சி தேவை. குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்வதுடன் சந்தோஷமாகவும் இருக்கவேண்டும். எங்களுடைய இராச்சியம் இப்பொழுது வரவுள்ளது. உங்களது இராச்சியத்தில் என்ன இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கல்வியின் மூலம் உங்களின் இராச்சியத்தைக் கோருகின்றோம் என்ற அதிகளவு சந்தோஷத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். கற்கின்றவர்கள் தங்களது அந்தஸ்தை நினைவு செய்வார்கள்: நாங்கள் எதிர் காலத்துக்காகக் கற்கின்றோம், நாங்கள் நன்றாகக் கற்றால் இராச்சிய சிம்மாசனத்தில் அமர்வோம். அவர்கள் மிகவும் பிரபல்யம் ஆகுவார்கள். நீங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து மணிமாலை உருவாக்கினால் இன்ன, இன்ன குழந்தையை அனைவருக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக எங்களிடம் அனுப்புங்கள் என அனைவரும் கூறுவார்கள். சொற்பொழிவு ஆற்றுபவர்கள் அழைக்கப்படுகின்றனர், எனவே அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். நானும் அவர்களைப் போன்று திறமைசாலியாக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அதீந்திரிய சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்கு, சரீர உணர்வை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே உங்கள் புத்தியின் யோகத்தை வீட்டுடன் இணையுங்கள்.2. உங்கள் குடும்பத்துடன் வாழுகின்ற போதே கற்று, இரட்டைப் பாடநெறியைப் பின்பற்றுங்கள். இந்த ஞானத்தில் குளித்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து ஏனையோரையும் அவ்வாறே செய்யத் தூண்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மென்மைத் தன்மையுடன் (கோமல்தா) இருப்பதில் இருந்து, அற்புதமானவராக (கமால்) உங்களை மாற்றி, சக்தி சொரூபமாகி மாயையை வெற்றி கொள்வீர்களாக.சக்தி சொரூபம் ஆகுவதற்கு, உங்களின் மென்மைத் தன்மையை அற்புதமாக மாற்றுங்கள். உங்களின் சொந்த சம்ஸ்காரங்களை மாற்றுவதில் மென்மைத் தன்மையுடன் இருங்கள். ஆனால் செயல்களைச் செய்யும்போது ஒருபோதும் மென்மையாக ஆகாதீர்கள். இதில் சக்தி சொரூபம் ஆகுங்கள். சக்தி ரூபம் என்ற கவசத்தை அணிந்து கொள்பவர்களால் மாயையின் எந்தவோர் அம்பாலும் தாக்கப்பட முடியாது. அதனால், மென்மையாக இருப்பதற்குப் பதிலாக, சக்தி ரூபம் உங்களின் முகத்திலும் உங்களின் கண்களிலும் முகச்சாயல்களிலும் புலப்பட வேண்டும். அப்போது உங்களால் மாயையை வென்றவராகி திறமைச் சித்தி அடையும் சான்றிதழைக் கோர முடியும்.
சுலோகம்:
திரிகாலதரிசி என்ற ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள், மாயை தொலைவில் இருந்தே ஓடிவிடுவாள்.அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
எப்படி சாகார் பாபா களைப்பற்றவராக இருப்பதுடன் நிலையான ஸ்திதியைக் கொண்டிருப்பதில் ஓர் உதாரணமாக இருந்தாரோ, அவ்வாறே, குழந்தைகளான நீங்களும் மற்றவர்களுக்காக உதாரணங்கள் ஆகவேண்டும். இதுவே உங்களின் சேவை ஆகும். வார்த்தைகளால் மட்டும் சேவை இடம்பெறுவதில்லை. உங்களின் ஸ்திதியாலும் சேவை இடம்பெறும். எனவே, இந்த நேரத்திற்கேற்ப, உங்களின் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆக்குங்கள்.